08.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - ஞான சிந்தனை செய்து அனைத்து இடங்களிலும் ஒரே தலைப்பில் சொற்பொழிவு நடக்கும் விதமாக ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுங்கள், இது தான் உங்களுடைய ஒற்றுமையாகும்

கேள்வி:-

எந்தவொரு உழைப்பை செய்து-செய்து குழந்தைகளாகிய நீங்கள் மதிப்புடன் தேர்ச்சி பெற முடியும்?

பதில்:-

கர்ம பந்தனத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆகுங்கள். யாருடனாவது பேசுகிறீர்கள் என்றால் ஆத்மா சகோதரன் என்று புரிந்து ஆத்மாவைப் பாருங்கள். பாபாவிடமிருந்து கேட்கின்றீர்கள் என்றாலும் புருவ மத்தியைப் பாருங்கள். சகோதர-சகோதரர்கள் என்ற பார்வையின் மூலம் அந்த சினேகம் மற்றும் சம்மந்தம் உறுதியாகி விடும். இது தான் உழைக்கும் காரியமாகும், இதன்மூலம் தான் மதிப்புடன் தேர்ச்சி பெற முடியும். உயர்ந்த பதவி அடையக் கூடிய குழந்தைகள் இந்த முயற்சியை அவசியம் செய்வார்கள்.

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது இது மரணலோகமாகும், அதற்கு ஒப்பாக அமரலோகமும் இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் சங்கரர் பார்வதிக்கு அமரகதை சொன்னதாகக் காட்டுகிறார்கள். இப்போது நீங்கள் அமரலோகத்திற்குச் செல்கிறீர்கள். சங்கரர் கதை சொல்வது கிடையாது. கதை சொல்லக் கூடியவர் ஞானக்கடலான ஒரு தந்தையே ஆவார். சங்கரர் ஒன்றும் ஞானக்கடல் கிடையாது, கதை சொல்வதற்கு. இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும். காலனின் மீது வெற்றி அடைவது எப்படி? இந்த ஞானம் அமரர்களாக மாற்றி விடுகிறது, இதன்மூலம் ஆயுள் அதிகமாகிறது, அங்கே காலன் இருப்பதில்லை. இங்கே நீங்கள் 5 விகாரங்கள் அல்லது இராவணனின் மீது வெற்றி அடைவதின் மூலம் இராம இராஜ்யம் அல்லது அமரலோகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். மரணலோகத்தில் இராவண இராஜ்யமாகும், அமரலோகம் இராம இராஜ்யமாகும். தேவதைகளை ஒருபோதும் காலன் பிடிக்க முடியாது. அங்கே காலனுடைய எமதூதுவர்கள் இருப்பதில்லை. ஆக இந்த தலைப்பும் கூட நன்றாக இருக்கிறது - மனிதர்கள் காலனின் மீது எப்படி வெற்றி அடைய முடியும்? இவையனைத்தும் ஞானத்தின் விஷயங்களாகும். பாரதம் அமர்லோகமாக இருந்தது, அப்போது எவ்வளவு நீண்ட ஆயுளை உடையதாக இருந்தது. பாம்பினுடைய உதாரணம் கூட சத்யுகத்திற்கானதாகும். ஒரு தோலை விட்டுவிட்டு மற்றொன்றை எடுக்கிறது, இதற்குத் தான் எல்லையற்ற வைராக்கியம் என்று சொல்லப்படுகிறது. முழு உலகமும் வினாசம் ஆகப்போகிறது என்பதைத் தெரிந்துள்ளீர்கள். இந்த பழைய சரீரத்தை கூட விட வேண்டும். இது 84 பிறவிகளின் பழைய சரீரமாகும். அமரலோகத்தில் அப்படி நடப்பதில்லை. இப்போது சரீரம் பெரியதாகி விட்டது, உளுத்துப்போய் விட்டது, இதை விட்டு விட்டு புதியதை எடுப்போம் என்று அங்கே புரிந்து கொள்கிறார்கள். பிறகு காட்சியும் கிடைக்கிறது, புரிந்து கொள்வதைத் தான் சாட்சாத்காரம்(காட்சி) என்று சொல்லப்படுகிறது. இப்போது நம்முடைய புதிய சரீரம் தயாராகி இருக்கிறது. பழையதை இப்போது விட வேண்டும். அங்கேயும் அப்படித் தான் நடக்கிறது. அதைத் தான் அமரலோகம் என்று சொல்லப்படுகிறது, அங்கே காலன் வருவதில்லை. அவர்களாகவே சமயப்படி சரீரத்தை விட்டு விடுகிறார்கள். ஆமையின் உதாரணம் கூட இப்போதைக்கு உண்டானதாகும். காரியத்தை செய்து விட்டு பிறகு உள்நோக்கு முகமுடையதாக ஆகி விடுகிறது. இந்த சமயத்தின் உதாரணம் பிறகு பக்தி மார்க்கத்தில் காப்பியடிக்கிறார்கள், ஆனால் சொல்லில் மட்டுமே ஆகும். எதையும் புரிந்து கொள்வதில்லை. இராக்கி பண்டிகை, தசரா, தீபாவளி, ஹோலி போன்ற அனைத்தும் இந்த சமயத்தினுடையது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அது பக்தி மார்க்கத்தில் நடக்கிறது. ஆக இந்த விஷயங்கள் சத்யுகத்தில் நடப்பதில்லை. இது போன்ற தலைப்புகளை எழுதுங்கள். மனிதர்கள் எப்படி காலனின் மீது வெற்றி அடைய முடியும்? மரணலோகத்திலிருந்து அமரலோகத்திற்கு எப்படி செல்வது? இப்படிப்பட்ட விஷயங்களின் மீது புரிய வைப்பதற்கு முதலில் எழுத வேண்டும். இன்றைக்கு இந்த நாடகம் என்று எப்படி நாடகத்தின் கதையை எழுதுகிறார்கள். இன்றைக்கு இந்தத் தலைப்பில் புரிய வைக்கப்படும் என்று உங்களிடமும் பாயிண்டுகளின் அட்டவணை இருக்க வேண்டும். இராவண இராஜ்யத்திலிருந்து தெய்வீக இராஜ்யத்திற்கு எப்படிச்  செல்லலாம்? புரிய வைப்பது என்னவோ ஒரு விஷயம் தான். ஆனால் வித-விதமான தலைப்புகளில் கேட்கும்போது எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி எப்படி கிடைக்கிறது என்ற குஷி ஏற்படும். இன்றைக்கு 125 வது யக்ஞம் படைத்தார், அதில் இவையெல்லாம் சொல்லுவார் என்று எப்படி சன்னியாசிகளுடையது நாளேடுகளில் வருகிறது. இங்கே பாபா கூறுகின்றார் - நான் ஒரு முறை தான் யக்ஞத்தை படைக்கின்றேன், அதில் முழு பழைய உலகமும் சுவாஹா ஆகி விடுகிறது. அவர்கள் நிறைய யக்ஞங்களைப் படைக்கிறார்கள். ஊர்வலம் போன்றவைகள் செய்கிறார்கள். இந்த ருத்ரன் சிவபாபாவினுடையது ஒரு யக்ஞமே ஆகும், இதில் முழு பழைய உலகமும் சுவாஹா ஆகி விடுகிறது, புதிய உலகத்தின் ஸ்தாபனை நடந்து விடுகிறது மற்றும் நீங்கள் சென்று தேவதைகளாக ஆகி விடுகிறீர்கள், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இதையும் பாபா உங்களுக்குப் புரிய வைக்கின்றார். படைப்பவர் தந்தை தான் வந்து தன்னுடைய மற்றும் படைப்பினுடைய முதல்-இடை-கடைசியின் ஞானம் முழுவதையும் கொடுக்கின்றார் மற்றும் இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றார். சத்யுகத்தில் தூய்மையான தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் இராஜ்யமும் செய்கிறார்கள். அதற்கு ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் என்று சொல்லப்படுகிறது. இந்த தலைப்பையும் வைக்கலாம், ஆதி சனாதன சத்யுக தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை எப்படி நடந்து கொண்டிருக்கிறது, உலகத்தில் அமைதி எப்படி ஸ்தாபனை ஆகிறது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள். பரமபிதா பரமாத்மாவை தவிர உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்கான வழியை வேறு யாரும் கொடுக்க முடியாது. வழி சொல்பவர்களுக்கும் கூட பரிசு கிடைக்கிறது. உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்வதற்கான பரிசு எப்படி மற்றும் கொடுப்பது யார், இது கூட ஒரு தலைப்பாகும். இப்படியெல்லம் சிந்தனை செய்து தலைப்பை உருவாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் ஒரே தலைப்பு இருக்க வேண்டும், அனைவருடைய தொடர்பும் இருக்கும் படியான ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஸ்டைலை உருவாக்கி முதலில் சமிஞ்ஞை கொடுத்து விட வேண்டும். பிறகு செய்தி தில்லிக்கு வர வேண்டும். எல்லா இடங்களிலும் இப்படி சொற்பொழிவு நடந்தது என்று அனைவருக்கும் தெரிய வேண்டும், இதற்குத் தான் ஒற்றுமை என்று சொல்லப்படுகிறது. முழு உலகத்திலும் ஒற்றுமை இல்லை. சிங்கமும் பசுவும் ஒன்றாக நீர் அருந்தும் என்பது இராம இராஜ்யத்தின் புகழாகும். திரேதாவில் அப்படிப் புகழ் பாடப்பட்டுள்ளது என்றால் சத்யுகத்தில் ஏன் இருக்காது? மற்ற சாஸ்திரங்களில் அனேகக் கதைகளை எழுதி விட்டார்கள். நீங்கள் பாபாவிடமிருந்து ஒரு கதை தான் கேட்கின்றீர்கள். உலகத்தில் நிறைய கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். துவாபர யுகத்திலிருந்து கலியுகம் வரை என்னவெல்லாம் சாஸ்திரங்கள் போன்றவை நடக்கிறதோ, அவையெல்லாம் அங்கே நடப்பதில்லை. பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் அனைத்தும் முடிந்து விடுகிறது. இங்கே நீங்கள் என்னவெல்லாம் பார்க்கின்றீர்களோ அவையனைத்தும் கெட்டவைகளாகும். அவற்றை பார்த்தாலும் பார்க்காதீர்கள், கேட்டாலும் கேட்காதீர்கள். இப்போது பாபா எதைப் புரிய வைக்கின்றாரோ அதையே புத்தியில் வையுங்கள்.

 

சங்கமயுக பிராமணர்களாகிய நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள்! தேவதைகளை விடவும் உயர்ந்தவர்கள். இந்த சமயத்தில் நாம் ஈஸ்வரிய குழந்தைகளாவோம். மெது-மெதுவாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு சகஜமான விஷயம் கூட யாருடைய புத்தியிலும் வருவதில்லை. நாம் ஈஸ்வரிய குழந்தைகள் எனும்போது கண்டிப்பாக சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருக்க வேண்டும் ஏனென்றால் அந்த தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். கோடிக்கணக்கான ஆண்டுகள் என்று சொல்லிவிடுவதின் காரணத்தினால் எந்த விஷயமும் நினைவிருப்பதில்லை. பாபா வந்து நினைவூட்டுகின்றார், இது 5 ஆயிரம் ஆண்டுகளின் விஷயமாகும். நீங்கள் தேவி-தேவதைகளாக இருந்தீர்கள். இப்போது மீண்டும் உங்களை தேவதைகளாக மாற்றுகின்றார். நேரடியாக கேட்பதின் மூலம் எவ்வளவு குஷி மற்றும் புத்துணர்வு வந்து விடுகிறது. குழந்தைகள் யார் கூர்மையானவர்களோ, புத்திசாலிகளோ, அவர்களுடைய புத்தியில் நாம் பாபாவிடமிருந்து கண்டிப்பாக ஆஸ்தியை எடுக்க வேண்டும் என்பது வருகிறது. பாபா புதிய உலகத்தைப் படைக்கின்றார் என்றால் கண்டிப்பாக நாமும் புதிய உலகத்தில் இருக்க வேண்டும். அனைவரும் ஒரு பாபாவினுடைய குழந்தைகளாவோம். அனைவருடைய தர்மமும், அனைவரும் இருக்கக் கூடிய இடம், வருவது-செல்வது அனைத்தும் வித-விதமானதாக இருக்கிறது. மூலவதனத்தில் சென்று எப்படி இருக்கின்றோம், என்பதும் புத்தியில் இருக்கிறது. மூலவதனத்தில் (ஆத்மாக்களின்) மரம் இருக்கிறது. சூட்சுமவதனத்தில் மரத்தைக் காட்ட முடியாது. அங்கே எதையெல்லாம் காட்டுகிறார்களோ அவையனைத்தும் சாட்சாத்காரத்தின் விஷயங்களாகும். இவையனைத்தும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. பிறகு சூட்சுமவதனத்திற்கும் செல்கிறார்கள். அங்கே அசைவு இருக்கிறது. இடையில் பேசாத படத்தின் நாடகங்களையும் உருவாக்கினார்கள். பிறகு பேசும் படமாகியது. அமைதியான நாடகம் உருவாக முடியாது. நாம் எப்படி அமைதியில் இருக்கிறோம் என்பதைக் குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். எப்படி அங்கே ஆத்மாக்களின் மரம் இருக்கிறதோ, அதுபோல் இங்கே மனிதர்களுடையது இருக்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களை புத்தியில் வைத்து நீங்கள் சொற்பொழிவாற்றலாம். இருந்தாலும் படிப்பில் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. இருந்தாலும் இதைக் கூட புரிந்து கொள்ளலாம் ஆனால் நினைவு யாத்திரை எங்கே, அதன்மூலம் தாரணை மற்றும் குஷி ஏற்பட. இப்போது நீங்கள் யதார்த்தமான முறையில் யோகத்தை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அனைவரையும் சகோதர-சகோதரர்கள் என்று பாருங்கள் என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஆத்மாவின் சிம்மாசனம் புருவமத்தியாகும் ஆகையினால் தான் பாக்கியரதம் பாபாவின் சிம்மாசனம் கூட புகழ்பெற்றதாகும். யாருக்காவது புரிய வைத்தாலும் கூட நாம் சகோதரர்களுக்கு புரிய வைக்கிறோம் என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த பார்வையே இருக்க வேண்டும், இதில் தான் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. உழைப்பின் மூலம் தான் உயர்ந்த பதவி கிடைக்கிறது. பாபாவும் அப்படித் தான் பார்ப்பார், பாபாவின் பார்வை புருவ மத்தியில் தான் செல்லும். ஆத்மா சிறிய புள்ளியாகும். அது தான் கேட்கவும் செய்கிறது. நீங்கள் பாபாவைக் கூட புருவங்களுக்கு மத்தியில் பாருங்கள். பாபாவும் அங்கே தான் இருக்கின்றார் என்றால் சகோதரரும்(பிரம்மாவின் ஆத்மா) இங்கே இருக்கின்றார். புத்தியில் இப்படி இருப்பதின் மூலம் நீங்களும் ஞானக்கடலின் குழந்தைகள் ஞானக்கடலாக ஆகி விடுகிறீர்கள். உங்களுக்கு மிகவும் சகஜமாகும். குடும்ப விவகாரங்களில் இருப்பவர்களுக்கு இந்த நிலை கொஞ்சம் கஷ்டமாகும். கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்று விடுகிறார்கள். அங்கே இருக்கும் சூழ்நிலையே வேறு ஆகும். இங்கே சகஜமாகும். பாபா நிறைய யுக்திகளைக் கூறுகின்றார் தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், பாபாவை நினைவு செய்யுங்கள். இவரும் சகோதரரே ஆவார், இந்த பார்வையின் மூலம் கர்மபந்தனத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். சரீரம் கூட மறந்து விடுகிறது, பாபா மட்டும் தான் நினைவில் இருக்கிறது. இதில் உழைத்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் தான் மதிப்புடன் தேர்ச்சி பெற முடியும். இப்படிப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையில் ஒரு சிலரே இருக்கிறார்கள். அவர்கள் தான் உலகத்திற்கும் எஜமானர்களாக ஆகிறார்கள். 8 இரத்தினங்களின் மாலை இருக்கிறது அல்லவா! எனவே முயற்சி செய்ய வேண்டும். உயர்ந்த பதவி அடையக் கூடியவர்கள் எப்படியாவது கண்டிப்பாக முயற்சி செய்வார்கள். இதில் வேறு எந்த விஷயங்களும் வருவதில்லை. சகோதர-சகோதரப் பார்வை, அன்பு மற்றும் சம்மந்தமாகி விடுகிறது, அந்த பார்வை நின்று விடுகிறது ஆகையினால் தான் பாபா கூறுகின்றார், உங்களுக்கு மிகவும் ஆழமான விஷயங்களைக் கூறுகின்றேன். இதில் பயிற்சி செய்வது உழைக்கும் வேலையாகும். இங்கேயும் கூட அமர்ந்திருக்கின்றீர்கள் என்றால் தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். ஆத்மா தான் கேட்கிறது. கேட்கக்கூடிய ஆத்மாவை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று மனிதர்கள் சொல்லிவிட்டார்கள். பிறகு என்ன சரீரம் கேட்கிறதா? இது தவறாகும். பாபா உங்களுக்கு ஆழமான விஷயங்களைக் கூறுகின்றார். குழந்தைகள் தான் உழைக்க வேண்டும். யார் கல்பத்திற்கு முன்பு ஆகியிருந்தார்களோ அவர்கள் கண்டிப்பாக உழைப்பார்கள். நான் இப்படி கேட்கின்றேன் - சொல்கின்றேன் என்று தங்களுடைய அனுபவத்தையும் சொல்வார்கள். பழக்கமாகி விட்டது. மன்மனாபவ என்று ஆத்மாவிற்குத் தான் சொல்லப்படுகிறது. பிறகு அவர் மற்றவருக்கும், அவர் பிறருக்கும் மன்மனாபவ என்று சொல்கிறார் அதாவது தந்தையை நினைவு செய்யுங்கள். இது மறைமுகமான உழைப்பாகும். எப்படி படிப்பதற்கு தனிமையில் மரத்தடியில் சென்றமர்ந்து படிக்கிறார்கள், அது ஸ்தூல விஷயமாகும். இது பயிற்சி செய்ய வேண்டிய விஷயமாகும். நாளுக்கு நாள் உங்களுடைய இந்த பயிற்சி அதிகரித்துக் கொண்டே செல்லும். நீங்கள் புதிய-புதிய விஷயங்களைக் கேட்கிறீர்கள் அல்லவா! நீங்கள் எதை இப்போது கேட்கிறீர்களோ அதை பிறகு புதியவர்கள் வந்து கேட்பார்கள். நாங்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளோம் என்று சிலர் கூறுகிறார்கள். அட இன்னும் சொல்லப்போனால் நீங்கள் முதல் தரமான ஆழமான விஷயங்களைக் கேட்கின்றீர்கள், அந்த முயற்சியை செய்வதின் மூலம் தான் உயர்ந்த பதவி கிடைக்கிறது. இன்னும் நல்லதே ஆகும். மாயை கடைசி வரை விடுவதில்லை. நீங்கள் வெற்றியடையும் வரை, மாயையின் சண்டை நடந்து கொண்டே இருக்கும். பிறகு நீங்கள் அனாயசமாக சென்று விடுவீர்கள். யார் எந்தளவிற்கு நினைவு செய்வார்களோ, அந்தளவிற்கு நாம் பாபாவுக்கு அருகில் சென்று கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள், சரீரத்தை விட்டு விடுகிறார்கள். அப்படி பிரம்மத்தில் ஐக்கியமாவதற்கு இலட்சியம் வைக்கக் கூடியவர்கள் சரீரத்தை விடும்போது ஆழ்ந்த அமைதி பாபா பார்த்திருக்கிறார். மற்றபடி யாரும் மோட்சத்தை அடைவதும் இல்லை, திரும்பியும் செல்வதில்லை. நாடகத்தில் அனைத்து நடிகர்களும் வேண்டும் அல்லவா! கடைசியில் அனைவரும் வந்து விடுகிறார்கள். எப்போது ஒருவரும் இல்லையோ அப்போது திரும்பி செல்வோம். இருக்கின்ற மனிதர்கள் அனைவரும் சென்று விடுவார்கள், மீதி கொஞ்சம் பேர் இருப்பார்கள். அனைவரையும் வழியனுப்பி வைத்தோம் என்று சொல்வார்கள். இந்த சமயத்தில் சத்யுகத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு கோடிக் கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் நாங்கள் வழியனுப்பிவிட்டு பிறகு நம்முடைய இராஜ்யத்திற்கு சென்று விடுவோம். அந்த மக்கள் அதிகபட்சம் 40-50 பேரை வழியனுப்புவார்கள். நீங்கள் எவ்வளவு பேரை வழியனுப்புகிறீர்கள். ஆத்மாக்கள் அனைத்தும் கொசுக்கூட்டம் போல் சாந்தி தாமத்திற்கு சென்று விடும். நீங்கள் தங்களோடு அழைத்துச் சென்று பிறகு அனைவரையும் அனுப்பி வைக்க வந்துள்ளீர்கள். உங்களுடைய விஷயங்கள் அதிசயமானவை. இவ்வளவு கோடிக்கணக்கான மனிதர்கள் செல்வார்கள். அவர்களை வழியனுப்புவீர்கள். அனைவரும் திரும்பி மூலவதனம் சென்று விடுவார்கள். இதையும் உங்களுடைய புத்தி தான் வேலை செய்கிறது. மெது-மெதுவாக மரம் வளர்ந்து விடும். பிறகு மனித மாலை உருத்ர மாலையாக ஆகி விடும். உருத்ர மாலை மனித மாலையாக எப்படி ஆகிறது என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. உங்களில் கூட யார் பரந்த புத்தியுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியும். நினைவு செய்வதற்காக பாபா அனேக விதங்களில் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். நாம் உருத்ர மாலையில் சென்று பிறகு மனித மாலையில் வருவோம். பிறகு வரிசைக்கிரமமாக வந்து கொண்டே இருப்பார்கள். எவ்வளவு பெரிய உருத்ர மாலை உருவாகிறது. இந்த ஞானத்தை யாருமே தெரிந்திருக்க வில்லை. ஆரம்பத்திலிருந்து இந்த ஞானத்தை யாரும் தெரிந்திருக்கவில்லை. சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். இந்த சங்கமயுகத்தை நினைவு செய்தீர்கள் என்றால் முழு ஞானமும் புத்தியில் வந்து விடும்.

 

நீங்கள் கலங்கரை விளக்கு ஆவீர்கள். அனைவரையும் சேரவேண்டிய இடத்தில் சேர்க்கக் கூடியவர்கள். நீங்கள் எப்படிப்பட்ட நல்ல கலங்கரை விளக்காக ஆகின்றீர்கள். உங்களின் மூலம் அமல்படுத்தப்படாத விஷயம் எதுவும் இல்லை. நீங்கள் டாக்டராகவும் இருக்கின்றீர்கள், தங்க-வெள்ளி வியாபாரியாகவும் இருக்கின்றீர்கள், வண்ணானாகவும் இருக்கின்றீர்கள். அனைத்து விசேஷ தன்மைகளும் உங்களிடம் வந்து விடுகிறது. உங்களுக்கு மகிமை ஏற்படுகிறது ஆனால் வரிசைகிரமமான முயற்சியின் படி ஆகும். எப்படி-எப்படி காரியம் செய்கிறீர்களோ அப்படி-அப்படி புகழ் ஏற்படுகிறது. பாபா டைரக்ஷன் கொடுக்கின்றார் அதைப்பற்றி சிந்தனை செய்வது, மாநாடுகள் நடத்துவது உங்களுடைய காரியமாகும். பாபா ஒன்றும் தடை செய்வதில்லை. நல்லது, நிறைய சொல்வதின் மூலம் என்ன பலன்? பாபா கூறுகின்றார் மன்மனாபவ. பாபா உங்களுக்கு எவ்வளவு மனதைக் குளிர வைக்கும் பொருட்களை (விஷயங்களை) விட்டுகின்றார். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) எப்போதும் சங்கமயுகபிராமணர்களாகிய நாம் தேவதைகளை விடவும் உயர்ந்தவர்கள், ஏனென்றால் இப்போது நாம் ஈஸ்வரியக் குழந்தைகளாக இருக்கிறோம், நாம் ஞானக்கடலின் குழந்தைகளாக இருக்கிறோம் என்ற போதை இருக்க வேண்டும். அனைத்து விசேஷத் தன்மைகளும் இந்த சமயத்தில் நம்மிடம் நிரம்பிக் கொண்டிருக்கிறது.

 

2) பாபா என்ன புரிய வைக்கின்றாரோ, அதை தான் புத்தியில் வைக்க வேண்டும், மற்ற எதையும் கேட்டாலும் கேட்காதீர்கள், பார்த்தாலும் பார்க்காதீர்கள். தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்..........

 

வரதானம்:

மாயாவின் நிழலிலிருந்து விடுபட்டு நினைவின் குடைநிழலில் இருக்கக்கூடிய கவலையற்ற மகாராஜா ஆகுக

 

எவரொருவர் சதா பாபாவின் நினைவு என்ற குடைநிழலின் கீழ் இருக்கிறார்களோ, அவர்கள் தன்னை சதா பாதுகாப்பாக அனுபவம் செய்வார்கள். மாயாவின் நிழலிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான சாதனம் பாபாவின் குடைநிழலில். இருக்கக் கூடியவர்கள் சதா கவலையற்ற மகாராஜாவாக இருப்பார்கள். ஒருவேளை யாராவது கவலையில் இருக்கிறார்கள் என்றால் குஷி காணாமல் போய் விடுகிறது. குஷி மறைந்து விடுகிறது, பலஹீனம் ஏற்பட்டு விடுகிறது என்றால் மாயாவின் நிழலின் பாதிப்பு ஏற்படுகிறது. ஏனெனில் பலஹீனம் தான் மாயாவை வரவேற்பு செய்கிறது. மாயாவின் நிழல் கனவிலும் கூட வருகிறது என்றால் மிகவும் தொந்தரவு செய்து விடுகிறது, ஆகையால் சதா குடைநிழலின் கீழே இருங்கள்.

சுலோகன்:

புரிந்து கொள்ளுதல் என்ற ஸ்குரு டிரைவர் (நஸ்ரீன்ழ்ன் க்ழ்ண்ஸ்ங்ழ்) மூலம் அலட்சியம் என்ற தளர்வான ஸ்குருவை (நஸ்ரீன்ழ்ன்) டைட் செய்து சதா விழிப்புணர்வில் இருங்கள்.

 

ஓம்சாந்தி