08.05.22    காலை முரளி            ஓம் சாந்தி   31.12.90      பாப்தாதா,   மதுபன்


தபஸ்யா தான் மிகப் பெரிய விழா ஆகும், தபஸ்யா என்றால் தந்தைக்குச் சமம் மகிழ்ச்சியாக கொண்டாடுவதாகும்.

இன்று பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள புது ஞானத்தின் மூலம் ஒவ்வொரு நேரத்திலும் புதிய வாழ்க்கை, புதிய விருத்தி, புதிய திருஷ்டி, புதிய சிருஷ்டியின் அனுபவம் செய்யக் கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கு அன்பின் வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக் கின்றார். இந்த நேரத்தில் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகள் தங்களது இதயம் என்ற தூர்தர்சன் மூலம் நிகழ்கால தெய்வீக காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்திலிருந் தாலும் அருகாமையின் அனுபவம் செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு சங்கல்பம் அனைவரிடத் திலும் இருக்கிறது. பாப்தாதாவும் அனைத்துக் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அனைவரின் புதிய ஆர்வம்-உற்சாகத்தின் உள்ளப்பூர்வமான வாழ்த்துக்களின் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றார். பல வகையான அன்பு நிறைந்த அனைவரின் பாட்டு மிகவும் அழகாக இருக்கிறது. ஆகையால் அனைவருக்கும் பதிலளிக்கின்றார். புதிய ஆண்டில் ஒவ்வொரு நேரத்தில் தனக்குள் தெய்வீகத் தன்மை கொண்டு வரும் புதிய ஆர்வம்-உற்சாகத்திற்கு சதா வாழ்த்துக்களை கொடுக்கின்றார். புதிய ஆண்டின் காரணத்தினால் இன்றைய நாள் மட்டும் வாழ்த்துக்கள் அல்ல, ஆனால் அழிவற்ற தந்தையின் மீது அழிவற்ற அன்பு வைத்திருக்கும் குழந்தைகளுக்கு சங்கமயுகத்தின் ஒவ்வொரு நேரமும் வாழ்க்கையில் புதுமை கொண்டு வரக் கூடியது, ஆகையால் ஒவ்வொரு நேரத்திலும் அழிவற்ற தந்தையின் அழிவற்ற வாழ்த்துக் கள் ஆகும். பாப்தாதாவின் விசேஷ குஷி நிறைந்த வாழ்த்துக்களின் மூலம் தான் அனைத்து பிராமணர்களும் விருத்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். பிராமண வாழ்க்கையில் பாலனைக்கு ஆதாரம் வாழ்த்துக்கள் ஆகும். வாழ்த்துக்களின் குஷியின் மூலம்தான் முன்னேறிக் கொண்டி ருக்கிறீர்கள். தந்தையின் சொரூபத்தில் ஒவ்வொரு நேரத்திலும் வாழ்த்துக்கள். ஆசிரியரின் ரூபத்தில் ஒவ்வொரு நேரத்திலும் சபாஷ், சபாஷ் என்ற வார்த்தை நேர்மையுடன் தேர்ச்சி பெறுபவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. சத்குருவின் ரூபத்தில் ஒவ்வொரு சிரேஷ்ட செயலின் ஆசிர்வாதம் எளிதான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை அனுபவம் செய்வித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பத்மாபதம் பாக்கியவான்களாக இருக்கிறீர்கள். பாக்கியவிதாதா பகவானின் குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள், அதாவது சம்பூர்ண பாக்கியத்திற்கு அதிகாரிகளாக ஆகிவிட்டீர்கள். மனிதர்கள் விசேஷ நாட்களில் விசேஷமாக வாழ்த்துக்களை கொடுக்கின்றனர். ஆனால் உங்களுக்கு புதிய ஆண்டிற்கான வாழ்த்துக்கள் மட்டுமே கிடைக்கிறதா என்ன? முதல் நாளிலிருந்து இரண்டாவது நாள் ஆகிவிட்டால் வாழ்த்துக்களும் அழிந்து விடுமா என்ன? உங்களுக்கு ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு நிமிடமும் விசேஷமானதாகும். சங்கமயுகம் என்றாலே விசேஷ யுகமாகும், வாழ்த்துக்களுக்கான யுகமாகும். அமிர்தவேளையில் தினமும் தந்தையிடம் வாழ்த்துக்கள் பெறுகிறீர்கள் அல்லவா! இன்றைய நாள் நிமித்தமாக கொண்டாடு கிறீர்கள். ஆனால் ஒவ்வொரு நேரமும் மகிழ்ச்சியான நேரம் என்பதை சதா நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தானே? உங்களது வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று யாராவது கேட்டால் என்ன பதில் கொடுப்பீர்கள்? மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தானே! முழு கல்பத்தின் மகிழ்ச்சியை இந்த வாழ்க்கையில் அனுபவம் செய்கிறீர்கள். ஏனெனில் தந்தையின் சந்திப்பிற்கான மகிழ்ச்சியின் அனுபவம் முழு கல்பத்தில் இராஜ்ய அதிகாரி மற்றும் பூஜ்ய அதிகாரி இரண்டின் அனுபவம் செய்விக்கிறது. பூஜ்ய நிலையின் மகிழ்ச்சி மற்றும் இராஜ்யம் செய்வதன் மகிழ்ச்சி - இரண்டின் ஞானம் இப்பொழுது இருக்கிறது, ஆகையால் மகிழ்ச்சி இப்பொழுது இருக்கிறது.

இந்த ஆண்டு என்ன செய்வீர்கள்? புதுமை செய்வீர்கள் அல்லவா! இந்த ஆண்டு விழா ஆண்டாக கொண்டாட வேண்டும். தபஸ்யா செய்ய வேண்டுமா? அல்லது விழா கொண்டாட வேண்டுமா? என்று யோசிக்கிறீர்கள். தபஸ்யா தான் மிகப் பெரிய விழா ஆகும். ஏனெனில் ஹடயோகம் என்பது செய்யப் போவது கிடையாது. தபஸ்யா என்றால் தந்தையுடன் மகிழ்ச்சி கொண்டாடுவதாகும். சந்திப்பின் மகிழ்ச்சி, அனைத்து பிராப்திகளின் மகிழ்ச்சி, அருகாமை யின் அனுபவத்தின் மகிழ்ச்சி, சமமான ஸ்திதியின் மகிழ்ச்சி. ஆக இது விழா ஆகிவிடுகிறது அல்லவா! சேவையின் பெரிய பெரிய விழா செய்யமாட்டீர்கள், ஆனால் தபஸ்யாவின் சூழ்நிலையானது வார்த்தைகளின் விழாவை விட அதிக ஆத்மாக்களை தந்தையின் பக்கம் ஈர்த்து விடும். தபஸ்யா ஆன்மீக காந்தமாகும். அது ஆத்மாக்களுக்கு அமைதி மற்றும் சக்தியின் அனுபவத்தை தொலைவிலேயே செய்விக்கும். ஆக தனக்குள் என்ன புதுமை கொண்டு வருவீர்கள்? புதுமை தான் அனைவருக்கும் பிடிக்கும் அல்லவா! ஆக எப்பொழுதும் தனக்குள் சோதனை செய்யுங்கள் - இன்றைய நாள் மனம் அதாவது தனது சங்கல்ப சக்தியில் என்ன விசேஷதா கொண்டு வந்தேன்? மேலும் பிற ஆத்மாக்களுக்காக மன சேவை அதாவது சுப பாவனை, சுப விருப்பம் என்ற விதியின் மூலம் எவ்வளவு விருத்தி அடைந்திருக்கின்றேன்? அதாவது சிரேஷ்டதா என்ற புதுமை என்ன கொண்டு வந்திருக்கின்றேன்? கூடவே வார்த்தை களில் இனிமை, திருப்தி, சரளம் என்ற புதுமை எவ்வளவு கொண்டு வந்திருக்கின்றேன்? பிராமண ஆத்மாக்களின் வார்த்தை சாதாரண வார்த்தையாக இருக்காது. வார்த்தைகளில் இந்த மூன்று விசயங்கள் தனக்கும், பிற ஆத்மாக்களுக்கும் அனுபவம் ஏற்பட வேண்டும். இது தான் புதுமை என்று கூறப்படும். மேலும் ஒவ்வொரு காரியத்தில் புதுமை, அதாவது ஒவ்வொரு காரியம் தனக்காகவும், பிற ஆத்மாக்களுக்கும் பிராப்தியின் அனுபவத்தை ஏற்படுத்தும். காரியத்தின் உடனடிப் பலன் அல்லது எதிர்கால சேமிப்பின் பலன் அனுபவம் ஆகும். நிகழ்கால உடனடிப் பலன் சதா குஷி மற்றும் சக்தியின் அனுபவம் ஏற்பட வேண்டும் மற்றும் எதிர்கால சேமிப்பின் அனுபவம் ஏற்பட வேண்டும். ஆக சதா தன்னை நிறைந்த சம்பன்ன அனுபவம் செய்வீர்கள். காரியம் என்ற விதையினால் பிராப்தி என்ற மரம் நிறைந்திருக் கும். காலியாக இருக்காது. நிறைந்த ஆத்மாவிடம் இயற்கையாகவே அலௌகீக போதை இருக்கும். ஆக அப்படிப்பட்ட புதுமையான காரியம் செய்தேனா? கூடவே சம்பந்தம்-தொடர்பு இதில் என்ன புதுமை கொண்டு வந்திருக்கின்றேன்?

இந்த ஆண்டு வள்ளலின் குழந்தைகள் மாஸ்டர் வள்ளல் - இந்த நினைவு சொரூபத்தை அனுபவம் செய்யுங்கள். பிராமண ஆத்மாவாக இருந்தாலும் சரி, சாதாரண ஆத்மவாக இருந்தாலும் சரி, யாருடைய சம்பந்தம்-தொடர்பில் வந்தாலும் அந்த ஆத்மாக்களுக்கு மாஸ்டர் வள்ளலின் மூலம் பிராப்தியின் அனுபவம் ஏற்பட வேண்டும். தைரியம் கிடைக்கலாம், ஆர்வம்-உற்சாகம் கிடைக்கலாம், அமைதி அல்லது சக்தி கிடைக்கலாம், எளிய விதி கிடைக் கலாம், குஷி கிடைக்கலாம் - அனுபவங்கள் அதிகரிக்கும் அனுபவம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும், அடையக் கூடாது, கொடுக்க வேண்டும். கொடுப்பதில் அடைவது கலந்திருக்கிறது. ஆனால் ஆத்மாவாகிய நான் மாஸ்டர் வள்ளலாக ஆக வேண்டும். இதே போன்று தனது சுபாவ, சன்ஸ்காரத்தில் பாப்சமான் புதுமை கொண்டு வர வேண்டும். என்னுடைய சுபாவம் அல்ல, தந்தையின் சுபாவம் எதுவோ, அதுவே என்னுடைய சுபாவம். பிரம்மாவின் சன்ஸ்காரம் எதுவோ, அதுவே என்னுடைய சன்ஸ்காரம். இவ்வாறு தினமும் தனக்குள் புதுமை கொண்டு வரும் போது புது உலக ஸ்தாபனை தானாகவே ஏற்பட்டு விடும். ஆக புதிய ஆண்டில் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டீர்களா? எது கடந்து முடிந்ததோ, கடந்த ஆண்டின் முடிவு விழா கொண்டாட வேண்டும். மேலும் நிகழ்காலத்தில் சமநிலை மற்றும் நெருங்கிய நிலையின் விழா கொண்டாட வேண்டும். மேலும் எதிர்காலத்தின் சதா வெற்றிக்கான விழா கொண்டாட வேண்டும். விழா ஆண்டு கொண்டாடி பறந்து கொண்டே இருங்கள்.

இரட்டை அயல்நாட்டினர் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புகிறீர்கள் அல்லவா! மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள் - ஒன்று புள்ளி (டாட்), மற்றொன்று கூடாது (நாட்). எதற்கு கூடாது என்பதை அறிவீர்கள் தானே! மாயாவை வரவிடக் கூடாது. கூடாது என்று கூற வருகிறது தானே? அல்லது சிறிது வர விட்டு விடுவீர்களா! புள்ளி வைத்து விட்டால் வராமல் போய் விடும். இரட்டை போதை இருக்கிறது அல்லவா!

பாரதவாசிகள் என்ன செய்வீர்கள்? பாரதம் மகான் தேசமாகும் - இது இன்றைய காலத்தின் சுலோகன் ஆகும். மேலும் பாரதத்தின் மகான் ஆத்மாக்கள் தான் மகாத்மாக்கள் என்று கூறப்படுகின்றனர். ஆக பாரதம் மகான் என்றால் பாரதவாசிகள் மகான் ஆத்மாக்கள் ஆவர். ஆக ஒவ்வொரு நேரத்திலும் தனது மகான் நிலையின் மூலம் பாரதம் மகான் ஆத்மாக்களின் இருப்பிடம், தேவ ஆத்மாக்களின் இருப்பிடம் என்பதை சாகார ரூபத்தில் உருவாக்குவீர்கள். சித்திரம் சமாப்தி ஆகி சைத்தன்ய தேவ ஆத்மாக்களின் இருப்பிடம் அனைவருக்கும் காண்பிப் பீர்கள். ஆக இரட்டை அயல்நாட்டினர் மற்றும் பாரதவாசிகள் அல்ல, இருவருமே இப்பொழுது மதுவன நிவாசிகளாக இருக்கிறீர்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து மாஸ்டர் வள்ளல் ஆத்மாக்களுக்கு, சதா தந்தையின் மூலம் வாழ்த்துக்களை பிராப்தியாக அடையக் கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா மகிழ்ச்சி யாக இருக்கக் கூடிய பாக்கியவான் ஆத்மாக்களுக்கு, சதா தனக்குள் புதுமை கொண்டு வரக் கூடிய மகான் ஆத்மாக்களுக்கு, பரிஸ்தாவிலிருந்து தேவ ஆத்மாவாக ஆகக் கூடிய சர்வ சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள். ஒவ்வொரு நிமிடமும் வாழ்த்துக்கள் மற்றும் நமஸ்தே.

குழுக்களுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு

1) ஆடாத-அசையாத ஆத்மாவாக இருக்கின்றேன் என்ற அனுபவம் செய்கிறீர்களா? ஒருபுறம் குழப்பம் இருக்கிறது. மற்றொருபுறம் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் சதா ஆடாத நிலையில் இருக்கிறீர்கள். எந்த அளவிற்கு அங்கு குழப்பமோ, அந்த அளவிற்கு உங்களுக்குள் ஆடாத-அசையாத ஸ்திதியின் அனுபவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்ன நடந் தாலும் மிக எளிய யுக்தி - எதுவும் புதிதல்ல. எதுவும் புதிய விசயமல்ல. இங்கு என்ன நடந்து கொண்டிருக் கிறது? என்ன நடக்கும்? என்று சில நேரம் ஆச்சரியம் ஏற்படுகிறதா? புதிய விசயமாக இருக்கும் போது தான் ஆச்சரியம் ஏற்படும். எந்த ஒரு விசயத்தை யோசிக்கவில்லையோ, கேள்விப்பட வில்லையோ, புரிந்து கொள்ளவில்லையோ, அது திடீரென்று நடந்து விட்டால் ஆச்சரியம் ஏற்படுகிறது. ஆக ஆச்சரியம் ஏற்படக் கூடாது, ஆனால் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். உலகத்தினர் குழப்பமடையக் கூடியவர்கள், ஆனால் நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கக் கூடியவர் கள். உலகத்தினர் சிறு சிறு விசயங்களுக்கு குழப்பமடைவர் - என்ன செய்வது, எப்படி செய்வது ஆனால் நீங்கள் சதா மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள், குழப்பமடைவது அழிந்து விட்டது. பிராமணன் என்றால் மகிழ்ச்சி, சத்ரியன் என்றால் குழப்பமடைவது. சில நேரம் மகிழ்ச்சி, சில நேரம் குழப்பம். நீங்கள் உங்களது பெயர் பிரம்மா குமார், பிரம்மா குமாரி என்று கூறுகிறீர்கள். சத்ரிய குமார் மற்றும் சத்ரிய குமாரியாக இல்லை தானே? சதா தனது பாக்கியத்தின் குஷியில் இருக்கக் கூடியவர்கள். உள்ளத்தில் சதா மற்றும் தானாகவே ஒரு பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது - ஆஹா பாபா மற்றும் ஆஹா எனது பாக்கியம். இந்த பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதை ஒலிக்கச் செய்ய வேண்டிய அவசியமில்லை. இது அழிவின்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஐயோ ஐயோ என்பது அழிந்து விட்டது. இப்பொழுது ஆஹா ஆஹா. அதிகபட்சமானவர்கள் ஐயோ ஐயோ என்று கூறுகின்றனர், ஆனால் ஆஹா ஆஹா என்று கூறுபவர்கள் மிகவும் குறைவாக இருக்கின்றனர். ஆக புதிய ஆண்டில் எதை நினைவில் வைத்துக் கொள்வீர்கள்? ஆஹா-ஆஹா. எதையெல்லாம் எதிரில் பார்ப்பீர்களோ, கேட்பீர்களோ, கூறுவீர்களோ - அனைத்தும் ஆஹா-ஆஹா, ஐயோ-ஐயோ கிடையாது. ஐயோ இது நடந்து விட்டது! கிடையாது, இது மிகவும் நன்றாக நடந்திருக்கிறது. ஒருவர் தீயது செய்தாலும் கூட நீங்கள் தனது சக்தியின் மூலம் கெட்டதையும் நல்லதாக மாற்றி விடுங்கள். இது தான் மாற்றம் அல்லவா! தனது பிராமண வாழ்க்கையில் கெட்டது நடக்கவே நடக்காது. ஒருவர் திட்டுகின்றார் எனில் திட்டுபவருக்கு நன்றி கூறுங்கள். அவர் பொறுமை சக்தியின் பாடத்தை கற்பித்திருக் கின்றார். பாடம் கற்பித்திருக்கின்றார் அல்ல, அவர் உங்களுக்கு மாஸ்டர் ஆகிவிட்டார். பொறுமை சக்தி எவ்வளவு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்து விடுகிறது. ஆக இது கெட்டது அல்லது நல்லதா? பிராமணர்களின் பார்வையில் கெட்டது இருக்கவே இருக்காது. பிராமணர்களின் காதுகளில் கெட்டது கேட்கவே கேட்காது. அதனால் தான் பிராமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாகும். அவ்வப்பொழுது கெட்டது, அவ்வப்பொழுது நல்லது எனில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. சதா மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான். முழு கல்பத்திலும் பிரம்மா குமார் மற்றும் குமாரி சிரேஷ்டமானவர்கள் ஆவர். தேவ ஆத்மாக்களும் பிராமணர்களின் முன் ஒன்றும் கிடையாது. சதா இந்த போதையுடன் இருங்கள், சதா குஷியுடன் இருங்கள், மற்றவர் களையும் சதா குஷிப்படுத்துங்கள். (குஷியுடன்) இருங்கள், மற்றவர்களையும் ஆக்குங்கள். நான் குஷியாக இருக்கின்றேன் என்று இருந்து விடக் கூடாது. நான் அனைவரை யும் குஷிப் படுத்துகின்றேன் என்றும் இருக்க வேண்டும். நான் குஷியாக இருக்கின்றேன் என்பது சுய நலம் ஆகும். பிராமணர்களின் சேவை என்ன? ஞானம் கொடுப்பதே குஷிக்காகத் தான்.

2) உலகில் எவ்வளவு தான் சிரேஷ்ட ஆத்மாக்களாக இருந்தாலும் அவர்களை விட நீங்கள் எவ்வளவு சிரேஷ்டமானவர்களாக இருக்கிறீர்கள்! தந்தை உங்களுடையவராக ஆகி விட்டார். ஆக நீங்கள் எவ்வளவு சிரேஷ்டமானவராக ஆகிவிட்டீர்கள்! சர்வ சிரேஷ்டம் ஆகி விட்டீர்கள். சதா இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை சர்வசிரேஷ்ட ஆத்மாவாக ஆக்கி விட்டார். திருஷ்டி எவ்வளவு உயர்வானதாக ஆகிவிட்டது! விருத்தி எவ்வளவு உயர்ந்ததாக ஆகிவிட்டது! அனைத்தும் மாறி விட்டது. இப்போது யாரைப் பார்த் தாலும் ஆன்மீக திருஷ்டியுடன் பார்ப்பீர்கள் மற்றும் அனைவருக்கும் நன்மைக்கான விருத்தி ஆகிவிட்டது. பிராமண வாழ்க்கை என்றால் ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் திருஷ்டி மற்றும் விருத்தி சிரேஷ்டம் ஆகிவிட்டது.

3) தன்னை வெற்றி நட்சத்திரம் என்று அனுபவம் செய்கிறீர்களா? எங்கு சர்வசக்திகள் இருக்கின்றதோ, அங்கு வெற்றி பிறப்புரிமையாக ஆகிவிடுகிறது. எந்த ஒரு காரியம் செய்தாலும் - சரீர நிர்வாகத்திற்கான காரியமானாலும் அல்லது ஈஸ்வரிய சேவையானாலும்! எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பும் இந்த நிச்சயம் வையுங்கள். நிச்சயம் வைப்பது நல்ல விசயமாகும், ஆனால் நடைமுறையில் அனுபவி ஆத்மாவாகி நிச்சயம் மற்றும் போதையில் இருங்கள். சர்வசக்திகள் இந்த பிராமண வாழ்க்கையில் வெற்றிக்கான எளிய சாதனமாகும். சர்வசக்திகளுக்கு எஜமானர்களாக இருக்கிறீர்கள். எனவே எந்த ஒரு சக்தியையும் எந்த நேரத்தில் கட்டளை யிட்டாலும் அந்த நேரத்தில் ஆஜர் ஆகிவிடும். ஒரு சேவாதாரி இருக்கின்றார், அவரை எந்த நேரத்தில் கட்டளையிட்டாலும் அவர் சேவைக்கு தயாராகி விடுகின்றார். அதே போன்று சர்வ சக்திகள் உங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எந்த அளவிற்கு மாஸ்டர் சர்வ சக்திவான் என்று இருக்கையில் செட் ஆவீர்களோ, அந்த அளவிற்கு சர்வசக்திகள் சதா கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நினைவு என்ற இருக்கையிலிருந்து சிறிது கீழே வந்தாலும் சக்திகள் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளாது. வேலைக்காரர்கள் சிலர் கீழ்படிந்த வர்களாக இருப்பர், சிலர் முரண்பாடு உடையவர்களாக இருப்பர். ஆக உங்கள் முன் சர்வ சக்திகள் என்பது என்ன? கீழ்ப்படிந்து இருக்கிறதா? அல்லது சிறிது தாமதமாக வந்து சேர்கிறதா? இந்த ஸ்தூல கர்மேந்திரியங்களை எந்த நேரத்தில் எப்படி கட்டளையிடுகிறீர்களோ அவ்வாறு அது கட்டளைப்படி நடக்கிறது. அவ்வாறு இந்த சூட்சும சக்திகளும் உங்களது கட்டளைப்படி நடக்கக் கூடியவைகளாகும். முழு நாளும் சர்வசக்திகள் கட்டளைப்படி நடக்கின்றதா? என்று சோதியுங்கள். ஏனெனில் இப்பொழுதிலிருந்தே இந்த சர்வசக்திகள் உங்களது கட்டளைப்படி நடக்கும் போது தான் கடைசியிலும் வெற்றியை பிராப்தியாக அடைய முடியும். இதற்கு நீண்ட கால பயிற்சி தேவை. ஆக இந்த புதிய ஆண்டில் கட்டளைப்படி நடத்தும் விசேஷ பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில் உலக இராஜ்யத்தை பிராப்தியாக அடைய வேண்டும் அல்லவா! உலக இராஜ்ய அதிகாரி ஆவதற்கு முன் சுய இராஜ்ய அதிகாரி ஆகுங்கள்.

நிச்சயம் மற்றும் போதை ஒவ்வொரு குழந்தையையும் பறக்கும் கலையின் அனுபவம் செய்வித்துக் கொண்டிருக்கிறது. இரட்டை அயல்நாட்டினர் அதிஷ்டசாலிகளாக இருக்கின்றனர். அவர்கள் பறக்கும் கலைக்கான நேரத்தில் வந்திருக்கின்றனர். நடப்பதற்கான முயற்சி செய்ய வேண்டியதில்லை. வெற்றித் திலகம் நெற்றியில் சதா ஜொலிதுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றித் திலகம் தான் மற்றவர்களுக்கு குஷி ஏற்படுத்தும். ஏனெனில் வெற்றி ஆத்மாவின் முகம் சதா மகிழ்ச்சியாக இருக்கும். ஆக உங்களது மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்து அனை வரும் குஷியில் ஈர்க்கப்படுகின்றனர். ஏனெனில் உலக ஆத்மாக்கள் குஷி தேடிக் கொண்டிருக் கின்றனர். மேலும் உங்களது முகத்தில் குஷியின் ஜொலிபைப் பார்க்கின்ற பொழுது தானும் குஷியடைந்து விடுகின்றனர். இவர்களுக்கு ஏதோ பிராப்தியாக கிடைத்திருக்கின்றது என்று அவர்கள் நினைக்கின்றனர். நாட்கள் செல்லச் செல்ல உங்களது முகம் மகிழ்ச்சி என்ற ஈர்ப்பின் மூலம் இன்னும் நெருக்கத்தில் கொண்டு வரும். மற்றவர்களுக்கு கேட்பதற்கு நேரம் கூட இருக்காது, ஆனால் உங்களது முகம் அந்த ஆத்மாக்களுக்கு சேவை செய்யும். நீங்கள் அனைவரும் கூட அன்பு மற்றும் குஷியைப் பார்த்து பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள் அல்லவா! ஆக தபஸ்யா ஆண்டில் இப்படிப்பட்ட சேவை செய்ய வேண்டும்.

4) ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை - இந்த ஸ்திதியில் சதா நிலைத்திருக்கக் கூடிய சகயோகி ஆத்மாவாக இருக்கிறீர்களா? ஒருவரை நினைவு செய்வது எளிதாகும், பலரை நினைவு செய்வது கடினமாகும். பல விஸ்தாரங்களை விட்டு விட்டு சார சொரூபமானவர் ஒரு தந்தை என்ற இந்த அனுபவம் எவ்வளவு குஷி ஏற்படுத்துகின்றது! குஷி பிறப்புரிமையாகும், தந்தையிடம் பொக்கிஷங்கள் இருக்கிறது எனில் தந்தையின் பொக்கிஷம் குழந்தைகளுக்கு பிறப்புரிமையாக ஆகிவிடுகிறது. தன்னுடைய பொக்கிஷம் எனில் அதன் மீது கர்வம் இருக்கும். மேலும் அடைந்ததும் யாரிடமிருந்து? அழிவற்ற தந்தையிடமிருந்து. அழிவற்ற தந்தை என்ன கொடுத்தாலும் அழிவற்றதாகத் தான் கொடுப்பார். அழிவற்ற பொக்கிஷங்களின் போதையும் அழிவற்றதாகும். இந்த போதையை யாரும் விடமாட்டார்கள். ஏனெனில் இது நஷ்டம் ஏற்படுத்தும் போதை அல்ல. இது பிராப்தி ஏற்படுத்தும் போதையாகும். அது பிராப்திகளை இழக்கச் செய்யும் போதையாகும். ஆக சதா எது நினைவில் இருக்கிறது? ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை. இரண்டாவது-மூன்றாவதாக யாராவது வந்தால் சண்டை ஏற்படும். ஒரு தந்தை இருக்கின்றார் எனில் ஏக்ரஸ் ஸ்திதி இருக்கும். ஒருவரின் ரசனையில் மூழ்கி இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. ஏனெனில் ஆத்மாவின் ஒரிஜினல் சொரூபமே ஏக்ரஸ் ஆகும்.

விடைபெறும் நேரத்தில் புதிய ஆண்டின் சுப ஆரம்பத்தின் வாழ்த்துக்கள்: நாலாப் புறங்களிலும் உள்ள அன்பான மற்றும் அதிஷ்டசாலி குழந்தைகள் அனைவருக்கும் விசேஷ மாக புதிய ஊக்கம், புதிய உற்சாகத்திற்கான ஒவ்வொரு நிமிடத்திற்கான வாழ்த்துக்கள். தானும் வைரமாக இருக்கிறீர்கள், வாழ்க்கையும் வைரமாக இருக்கிறது மற்றும் டைமண்ட் காலைப் பொழுது, மாலைப் பொழுது, இரவுப் பொழுது சதா இருக்க வேண்டும். இந்த விதியின் மூலம் மிக விரைவில் தனது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வீர்கள் மற்றும் இராஜ்யம் செய்வீர்கள். தனது இராஜ்யம் பிடித்திருக்கின்றது அல்லவா! எனவே இப்பொழுது விரைவில் கொண்டு வாருங்கள் மற்றும் இராஜ்யம் செய்யுங்கள். தனது இராஜ்யம் எதிரில் தென்பட்டுக் கொண்டிருக்கிறது தானே! ஆக இப்பொழுது பரிஸ்தா ஆகுங்கள் மற்றும் தேவதையாக ஆகுங்கள். நாலாபுறங் களிலும் உள்ள குழந்தைகளுக்கு விசேஷமாக பலமடங்கு அன்பு நினைவுகள் உரித்தாகுக. அயல்நாட்டினரும், உள்நாட்டினரும் தபஸ்யாவின் ஆர்வம்- உற்சாகத்தில் நன்றாக இருக் கின்றனர். எங்கு தபஸ்யா இருக்கிறதோ, அங்கு சேவை இருக்கவே இருக்கிறது. சதா வெற்றிக் கான வாழ்த்துக்கள். முழு உலகமும் உங்களைப் பார்க்கும் படியான புதுமையை காண்பிக்க வேண்டும். புதுமையில் கலங்கரை விளக்காக ஆக வேண்டும். நல்லது. ஒவ்வொருவரும் தனக்கான அன்பு நினைவுகள் மற்றும் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

வரதானம்:
சுத்த சங்கல்பம் மற்றும் சிரேஷ்ட சகவாசத்தின் மூலம் இலேசானவர்களாகி குஷியில் நடனமாடக் கூடிய அலௌகீக பரிஸ்தா ஆகுக.

பிராமணக் குழந்தைகளாகிய உங்களுக்கு தினசரி முரளி தான் சுத்த சங்கல்பம் ஆகும். எவ்வளவு சுத்த சங்கல்பங்கள் தந்தையின் மூலம் தினமும் அதிகாலையில் கிடைக்கிறது! இந்த சுத்த சங்கல்பங்களில் புத்தியை பிசியாக வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் சதா தந்தை யின் சகவாசத்தில் இருந்தீர்கள் எனில் இலேசானவர்களாகி குஷியில் நடனமாடிக் கொண்டே இருப்பீர்கள். குஷியுடன் இருப்பதற்கான எளிய சாதனம் - சதா இலேசாக இருங்கள். சுத்த சங்கல்பங்கள் இலேசானவைகளாகும், வீண் சங்கல்பங்கள் சுமையானவைகளாகும். ஆகையால் சதா சுத்த சங்கல்பங்களில் பிசியாக இருந்து இலேசானவர்களாக ஆகுங்கள் மற்றும் குஷியில் நடனம் ஆடிக் கொண்டே இருங்கள். அப்பொழுது தான் அலௌகீக பரிஸ்தா என்று கூற முடியும்.

சுலோகன்:
பரமாத்மாவின் அன்பான பாலனையின் சொரூபம் - சகஜயோகி வாழ்க்கை ஆகும்.