08-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! விகர்மங்களிலிருந்து தப்பித்து இருப்பதற்காக அடிக்கடி அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்யுங்கள். இந்தப் பயிற்சி தான் மாயையை வென்றவராக ஆக்கும். நிலையான யோகம் இணைந்து இருக்கும்.

கேள்வி:
எந்த ஒரு நிச்சயம் உறுதியாக இருந்தது என்றால் யோகம் அறுபட்டு இருக்க முடியாது?

பதில்:
சத்யுக திரேதாவில் நாம் பாவனமாக இருந்தோம். துவாபர கலியுகத்தில் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆனோம். இப்பொழுது மீண்டும் நாம் பாவனம் ஆக வேண்டும். இந்த நிச்சயம் உறுதியாக இருந்தது என்றால் யோகம் துண்டிக்கப்பட முடியாது. மாயை தோற்கடிக்க முடியாது.

பாடல்:
யார் தலைவனுடன் கூட இருக்கிறார்களோ....

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இந்தப் பாடலினுடைய பொருளைப் புரிந்து கொண்டு விட்டீர்கள். அந்த ஸ்துல மழையினுடைய விசயமே கிடையாது. அந்தக் கடல் அல்லது நதிகளின் விஷயம் கிடையாது. இவர் ஞானக் கடல் ஆவார். அவர் வந்து ஞான மழை பொழிகிறார். அப்பொழுது அறியாமை என்ற இருள் நீங்கிப் போய் விடுகிறது. இதை யார் புரிந்து கொள்வார்கள்? யார் தங்களைப் பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரி என்று புரிந்திருப்பார் களோ அவர்கள். நமது தந்தை சிவன் ஆவார் என்று குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவர் பி.கேக்களாகிய நம் அனைவருக்கும் பாட்டனாரும் ஆகிறார். அதுவும் நிராகாரமானவர் ஆவார். நாம் பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் ஆவோம் என்று நீங்கள் நிச்சயம் செய்கிறீர்கள் என்றால் அது பின் மறக்க வேண்டிய விஷயமே கிடையாது. எல்லாக் குழந்தைகளும் தலைவனுடன் கூட இருக்கிறார்கள். அப்படியின்றி நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள் என்பதல்ல. முரளியோ எல்லோரும் கேட்பார்கள். குழந்தைகளுக்காகத் தான் ஞான மழை ஆகும். அந்த ஞானத்தினால் கோரமான இருளின் விநாசம் ஆகி விடுகிறது. நாம் கோரமான இருளில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது வெளிச்சம் (தெளிவு) கிடைத் துள்ளது. எனவே எல்லாவற்றையும் அறிந்து கொண்டே போகிறீர்கள். பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் அறிந்துள்ளீர்கள். யாருக்கு சிவபாபாவின் வாழ்க்கைச் சரித்திரம் தெரியவில்லையோ அவர்கள் கை உயர்த்துங்கள். எல்லோருமே பரமாத்மாவின் வாழ்க்கைச் சரித்திரத்தை அறிந்துள்ளீர்கள். அது கூட ஒரு பிறவியினுடையது அல்ல. சிவபாபாவிற்கு எத்தனை பிறவிகளின் வாழ்க்கை சரித்திரம் உள்ளது, உங்களுக்குத் தெரியுமா? சிவபாபாவிற்கு இந்த நாடகத்தில் என்ன பாகம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர் கள். ஆரம்ப முதல், கடைசி வரை அவரையும் அவரது வாழ்க்கைச் சரித்திரத்தையும் அறிந்துள்ளீர் கள். உண்மையில் பக்தி மார்க்கத்தில் யார் எந்தப் பாவனையுடன் பக்தி செய்கிறார்களோ அதனுடைய பலனை நான் கொடுக்க வேண்டி உள்ளது. அது உயிரூட்டமானதோ கிடையாது. சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) நான் தான் செய்விக்கிறேன். அரைக் கல்பம் பக்தி மார்க்கம் நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தியின் மனோ விருப்பங்கள் முடிந்து விட்டது. இப்பொழுது பின் குழந்தைகளாகி இருக்கிறீர்கள். அவர்களுக்கோ அவசியம் ஆஸ்தி கிடைக்கும். தந்தை குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கிறார். இது நியமம் ஆகும். உங்களுடைய முகம் இப்பொழுது சத்கதியை நோக்கி உள்ளது. நீங்கள் மூலவதனம், சூட்சும வதனம், ஸ்தூல வதனம் பற்றி அறிந்துள்ளீர்கள். யார் இந்த எல்லை யில்லாத நாடகத்தில் முக்கிய நடிகர்கள் ஆவார்கள்? கிரியேட்டர் மற்றும் பிறகு டைரக்டர் (இயக்குநர்) படைப்பவர் ஆவார். மேலும் செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். (டைரக்ஷன்) வழி காட்டுகிறார். படிப்பிக்கவும் செய்கிறார். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்துள்ளேன் என்று கூறுகிறார். இது கூடக் கர்மம் ஆகிறது அல்லவா? மேலும் செய்விக்கவும் செய்கிறார். அரைக் கல்பம் நீங்கள் மாயைக்கு வசப்பட்டு அசத்தியமான காரியங்களைச் செய்த படியே வந்துள்ளீர்கள். இது வெற்றி தோல்வியின் விளையாட்டு ஆகும். மாயை உங்கள் மூலமாக அசத்தியமான காரியங்கள் செய்வித்தபடியே வந்துள்ளது. அசத்தியமான காரியங்களைச் செய்விப்பவர்களைப் பகவான் என்று எப்படிக் கூற முடியும்? அனைவருக்கும் சத்தியமான கர்மத்தை செய்யக் கற்பிப்பவன் நான் ஒருவன் மட்டுமே ஆவேன் என்று பகவான் கூறுகிறார். இப்பொழுது அனைவருக்கும் தீர்ப்பிற்கான நேரம் ஆகும். எல்லோரையும் கல்லறையிலிருந்து எழுப்ப வேண்டும். இவர்கள் எல்லோருமே கல்லறையைச் சேர்ந்துள்ளார்கள். தந்தை வந்து எழுப்புகிறார். மரணம் எதிரிலேயே உள்ளது. சிவபாபா பிரம்மா உடல் மூலமாக நமக்கு அனைத் தையும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அனைவரின் வாழ்க்கைச் சரித்திரம் மற்றும் சிவபாபாவின் வாழ்க்கைச் சரித்திரத்தை அறிந்தவர் களாக ஆகி விட்டுள்ளீர்கள். எனவே உயர்ந்தவராக ஆனீர்கள் அல்லவா? யார் சாஸ்திரங்களை நிறையப் பயின்றவர்களாக இருப்பார்களோ அவர்களுக்கு முன்னால் சாஸ்திரங்களை அறியாதவர்கள் தலை வணங்குகிறார்கள். நீங்கள் தலை வணங்க வேண்டியது இல்லை. இருப்பது மிகவுமே சுலபமான விஷயமாகும். நாம் மூல வதனம், சாந்தி தாமத்தில் வசிப்பவர் ஆகிடுவோம். பிறகு சுகதாமத்தில் வருவோம் என்பதைக் குழந்தைகள் புரிந்துள்ளார்கள். இப்பொழுது நாம் பிரஜாபிதா பிரம்மாகுமார் குமாரி ஆவோம். சிவபாபாவிற்கு நாம் பேரன்கள் ஆவோம். சிவபாபாவை நினைவு செய்வதால் நமக்குச் சுகத்தின் ஆஸ்தி கிடைக்கும். நாம் தூய்மையாக இருந்தோம். மீண்டும் (பதீதமாக) தூய்மையற்றவராக ஆனோம். இப்பொழுது மீண்டும் நாம் பாவனமாக ஆக வேண்டும் என்ற நிச்சயம் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. நிச்சயம் இல்லை என்றால் யோகம் கூட வராது. பதவியும் அடைய முடியாமல் போய் விடுவீர்கள். தூய்மையான வாழ்க்கையோ நல்லது ஆகும் அல்லவா? குமாரிகளுக்கு நிறைய மதிப்பு உள்ளது. ஏனெனில் இச்சமயம் குமாரிகளாகிய நீங்கள் மிகவுமே சேவை செய்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள். தற்போதைய (உங்களது) தூய்மை, பக்தி மார்க்கத்தில் பூஜிக்கப்படுகிறது. இந்த உலகமோ மிகவும் அசுத்த மானதாகும். கீசகர்களின் கதை இருக்கிறது அல்லவா? மனிதர்கள் மிகவுமே அசுத்தமான எண்ணங்களைக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்குக் கீசகர்கள் என்று கூறப்படுகிறது. எனவே மிகவுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார். மிகவுமே அசுத்தமான முட்களின் உலகம் ஆகும். உங்களுக்கோ மிகுந்த குஷி இருக்க வேண்டும். நாம் சாந்தி தாமத்திற்குச் சென்று பிறகு சுக தாமத்தில் வருவோம். நாம் சுகதாமத்திற்கு அதிபதியாக இருந்தோம். பிறகு சக்கரம் சுற்றி வந்தோம். இதுவோ நிச்சயம் இருக்க வேண்டும் அல்லவா? அசரீரியாக ஆவதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாயை சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். யோகம் துண்டிக்கப்பட்டதாக இருக்கும். விகர்மங்கள் விநாசம் ஆகாது. நினைவில் இருப்பதற்கான எவ்வளவு உழைப்புச் செய்ய வேண்டும்! நினைவினால் தான் எவர் ஹெல்தி - என்றும் ஆராக்கியமானவராக ஆவீர்கள். கூடுமானவரை அசரீரி ஆகி தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நமக்குத் தந்தையான பரமபிதா பரமாத்மா கற்பித்துக் கொண்டிருக்கிறார். கல்ப கல்பமாகக் கற்பிக்கிறார். இராஜ்ய பாக்கியத்தைக் கொடுக்கிறார். நீங்கள் யோக பலத்தினால் உங்களது இராஜதானியை ஸ்தாபனை செய்கிறீர்கள். இராஜாக்கள் ஆட்சி புரிவார்கள். சேனை இராஜ்யத்திற்காகச் சண்டை யிடுகிறார்கள். இங்கு நீங்கள் உங்களுக்காக உழைப்பு செய்கிறீர்கள். தந்தைக்காக அல்ல. நானோ ஆட்சியே புரிவதில்லை. நான் உங்களுக்கு இராஜ்யத்தை அளிப்பதற்காக வழிமுறைகளைக் கூறுகிறேன். நீங்கள் எல்லோரும் வானப்பிரஸ்தியினர் ஆவீர்கள். அனைவருக்கும் மரணம் உள்ளது. சிறியவர்கள் பெரியவர்கள் என்ற எந்தக் கணக்கும் கிடையாது. சிறிய பையனாக இருந்தால் அவனுக்குத் தந்தையின் ஆஸ்தி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். ஆஸ்தி பெறும் வகையில் இந்த உலகமே இருக்காது. மனிதர்களோ கோரமான இருளில் இருக்கிறார்கள். நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான இச்சை கொள்கிறார் கள். எங்களுடைய பேரன் பேத்திகள் சாப்பிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் யாருடைய இந்த விருப்பமும் பூர்த்தி ஆகாது. இவை எல்லாமே மண்ணோடு சேர்ந்து விடப் போகிறது. இந்த உலகமே முடியப் போகிறது. ஒரே ஒரு குண்டு வீசினால் போதும் எல்லாமே முடிந்து போய் விடும். காப்பாற்றுபவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இப்பொழுதோ தங்கச் சுரங்கங்கள் ஆகியவை முற்றிலுமே காலியாகி விட்டுள்ளன. புது உலகத்தில் அவை மீண்டும் எல்லாமே நிரம்பியதாக ஆகி விடும். அங்குப் புது உலகத்தில் எல்லாமே புதியதாகக் கிடைத்து விடும். இப்பொழுது நாடகத்தின் சக்கரம் முடிவடைகிறது. மீண்டும் ஆரம்பமாகும். வெளிச்சம் (தெளிவு) வந்துள்ளது. ஞானச் சூரியன் வெளிப்பட்டதும் அறியாமை என்ற இருள் அழிந்து விட்டது என்று பாடுகிறார்கள். அந்தச் சூரியனின் விஷயமல்ல. மனிதர்கள் சூரியனுக்குத் தண்ணீர் (அபிஷேகம்) கொடுக்கிறார்கள். இப்பொழுது சூரியனோ முழு உலகிற்குத் தண்ணீர் சேர்ப்பிக்கிறது. அதற்குப் போய்ப் பிறகு தண்ணீர் கொடுக்கிறார்கள். பக்தியினுடைய அதிசயம் இது. பிறகு கூறுகிறார்கள் - சூரிய தேவதாய நமஹ .. சந்திர தேவதாய நமஹ அவைகள் பின் எப்படித் தேவதைகளாக இருக்க முடியும்? இங்கோ மனிதர்கள் அசுரனிலிருந்து தேவதை ஆகிறார்கள். அவைகளைத் தேவதை என்று கூற முடியாது. அவைகளோ சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆகும். சூரியனினுடையதும் கொடி வைக்கிறார்கள். ஜப்பானில் சூரிய வம்சத்தினர் என்று கூறுகிறார்கள். உண்மையில் ஞானச் சூரிய வம்சத்தினரோ எல்லோரும் ஆவார்கள். ஆனால் ஞானம் இல்லை. இப்பொழுது அந்தச் சூரியன் எங்கே? அந்த ஞானச் சூரியன் எங்கே? இங்குக் கூட இந்த விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களை வெளிக் கொணரு கிறார்கள். பிறகும் விளைவு என்ன ஆகிறது? ஒன்றுமே இல்லை. விநாசம் வந்து விட்டதே போலாகும். அறிவாளிகளாக இருப்பவர்கள். இந்த விஞ்ஞானத்தினால் தனக்குத் தானே விநாசம் செய்கிறோம் என்பதைப் புரிந்துள்ளார்கள். அவர்களுடையது சையன்ஸ் (விஞ்ஞானம்). உங்களுடையது சைலன்ஸ் (அமைதி). அவர்கள் சையன்ஸ் மூலமாக விநாசம் செய்கிறார்கள். நீங்கள் சைலன்ஸ் மூலமாகச் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறீர்கள். இப்பொழுதோ நரகத்தில் எல்லோருடைய படகும் மூழ்கி உள்ளது. அந்தப் பக்கம் அந்தச் சேனைகள். இந்தப் பக்கம் நீங்கள் யோக பலத்தின் சேனை ஆவீர்கள். நீங்கள் மீட்கக் கூடியவர்கள் ஆவீர்கள். எவ்வளவு உங்கள் மீது பொறுப்பு உள்ளது! எனவே முழுமையாக உதவி செய்பவர்களாக ஆக வேண்டும். இந்தப் பழைய உலகம் முடிந்து விடப்போகிறது. இப்பொழுது நீங்கள் நாடகத்தைப் புரிந்து விட்டுள்ளீர்கள். இப்பொழுது சங்கமத் தின் நேரமாகும். தந்தை படகை கரையேற்ற வந்துள்ளார். இராஜதானி முழுமையாக ஸ்தாபனை ஆகி விட்டால் பிறகு விநாசம் ஆகும் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நடு நடுவே ஒத்திகை ஆகிக் கொண்டே இருக்கும். யுத்தங்களோ ஏராளமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது சீ-சீ உலகம் ஆகும். பாபா நம்மை அழகான உலகிற்கு அழைத்துச் செல்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்தப் பழைய சட்டையை நீக்க வேண்டும். பிறகு புதிய சட்டையை அணிய வேண்டும். நான் கல்ப கல்பமாக அனைவரையும் கூட்டிச் செல்கிறேன் என்றோ தந்தை உத்திரவாதம் கொடுக்கிறார். எனவே என் பெயர் காலன்களுக்கெல்லாம் காலன் மகா காலன் என்று வைக்கப்பட்டுள்ளது. பதீத பாவனர், கருணை உள்ளம் உடையவர் என்றும் கூறுகிறார்கள்.

நாம் ஸ்ரீமத்படி சொர்க்கத்திற்குச் செல்வதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால், நான் உங்களைச் சொர்க்கத் திற்கு அனுப்பி விடுவேன் என்று பாபா கூறுகிறார். கூடவே சரீர நிர்வாகமும் செய்ய வேண்டும். கர்மம் இன்றி யாரும் இருக்க முடியாது. கர்ம சந்நியாசமோ ஆவது இல்லை. ஸ்நானம் ஆகியவை செய்வது, இதுவும் கர்மம் ஆகும் அல்லவா? கடைசியில் எல்லோருமே ஞானம் எடுப்பார்கள். சிவபாபா கற்பிக்கிறார் என்று இவர்கள் கூறுவது சரி என்பதை மட்டும் புரிந்து விடுவார்கள். நிராகார பகவான் கூறுகிறார் - அவர் ஒரே ஒருவர் ஆவார். எனவே நிராகார சிவனுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று எல்லோரையும் கேளுங்கள் என்று பாபா கூறிக் கொண்டே இருக்கிறார். எல்லோரும் சகோதரர்கள் ஆவார்கள். எனவே சகோதரர்களின் தந்தையோ இருப்பார் அல்லவா? இல்லை யென்றால் எங்கிருந்து வருவார்? தந்தையும் நீயே! தாயும் நீயே !என்றும் பாடுகிறார்கள். இது தந்தையின் மகிமை ஆகும். நான் தான் உங்களுக்குக் கற்பிப்பிறேன் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் பிறகு உலகத்தின் அதிபதி ஆகிறீர்கள். இங்கு அமர்ந்திருந்தாலும் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். இந்தக் கண்களாலோ சரீரத்தைப் பார்க்கிறோம். நமக்குக் கற்பிப்பவர் சிவபாபா ஆவார் என்பதைப் புத்தியால் அறிந்துள்ளீர்கள். யார் தந்தையுடன் கூட இருக்கிறார் களோ அவர்களுக்காகத் தான் இந்த இராஜ யோகம் மற்றும் ஞானத்தின் மழையாகும். பதீதர் களை (தூய்மையற்றவர்களை) பாவனமாக ஆக்குவது - இது தந்தையின் காரியம் ஆகும். அவரே தான் ஞானக் கடல் ஆவார். நாம் சிவபாபாவின் பேரன்கள். பிரம்மாவின் குழந்தைகள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரம்மாவின் தந்தை சிவன் ஆவார். ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைக் கிறது. நினைவு கூட அவரையே செய்ய வேண்டும். இப்பொழுது நாம் விஷ்ணுபுரிக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து உங்களது நங்கூரம் தூக்கப்பட்டு உள்ளது. சூத்திரர்களுடைய படகு நின்றுவிட்டது. உங்களது படகு செல்ல ஆரம்பித்துள்ளது. இப்பொழுது நேராக நீங்கள் வீடு சென்று விடுவீர்கள். பழைய ஆடை அனைத்தையும் விட்டு விட்டுச் செல்ல வேண்டும். இப்பொழுது இந்த நாடகம் முடிவடைகிறது. இப்பொழுது ஆடையைக் களைந்து வீட்டிற்குச் சென்றிடுவோம். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எந்தவொரு அசத்தியமான செயலும் செய்யக் கூடாது. மரணம் முன்னால் நின்றுள்ளது. தீர்ப்பிற்கான நேரமாகும். எனவே கல்லறையிலிருந்து எழுப்ப வேண்டும். பாவனமாக ஆகும் மற்றும் ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.

2. இந்த சீ-சீ உலகத்தில் எந்த ஒரு இச்சைகளும் கொண்டிருக்கக் கூடாது. அனைவருடைய மூழ்கி இருக்கும் படகை மீட்பதில் தந்தைக்கு முழுமையாக உதவி செய்பவர் ஆக வேண்டும்.

வரதானம்:
யோகத்தின் பிரயோகம் மூலமாக ஒவ்வொரு கஜானாவையும் அதிகரிக்கக்கூடிய வெற்றிகரமான தபஸ்வி ஆகுக.

பாபா மூலமாகக் கிடைத்துள்ள அனைத்துக் கஜானாக்கள் மீதும் யோகத்தைப் பிரயோகம் செய்யுங்கள். கஜானாக்களுக்கான செலவு குறைவாக இருக்க வேண்டும் மற்றும் பிராப்தி அதிகம் இருக்க வேண்டும் - இது தான் பிரயோகம். எப்படிச் சமயமும், சங்கல்பமும் சிரேஷ்ட கஜானாக்களாக உள்ளனவோ, அது போல் சங்கல்பங்களின் செலவு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் பிராப்தி அதிகமாக இருக்க வேண்டும். சாதாரண மனிதர் 2-4 நிமிடங்கள் யோசித்த பிறகு வெற்றி அடைகிறார். அதை நீங்கள் ஓரிரு விநடிகளில் செய்து விடுங்கள். குறைந்த சமயம், குறைந்த சங்கல்பத்தில் முடிவு (ரிசல்ட்) அதிகம் இருக்க வேண்டும் - அப்போது யோகத்தின் பிரயோகம் செய்யக்கூடிய வெற்றிகரமான தபஸ்வி என்று சொல்வார்கள்.

சுலோகன்:
தனது அநாதி ஆதி சம்ஸ்காரங்களை ஸ்மிருதியில் வைத்து சதா அசையாதவராக இருங்கள்.

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிக்க முடியாத மகாவாக்கியம்

முட்களின் உலகிலிருந்து மலர்களின் உலகத்திற்குக் கொண்டு செல்லுங்கள் - இதிலிருந்து தெளிவாகிறது - அதுவும் கூட ஏதோ உலகம் என்பது. இப்போது இதுவோ மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். இப்போதைய உலகம் என்பது முட்களால் நிரம்பியது. இக்காரணத் தால் மனிதர்கள் துக்கம் மற்றும் அசாந்தியை அடைந்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் மலர்களின் உலகத்தைத் தான் நினைவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நிச்சயமாக அதுவும் ஓர் உலகமாகத் தான் இருக்கும் - அவ்வுலகின் சம்ஸ்காரங்கள் ஆத்மாவுக்குள் நிரம்பி யுள்ளன. இப்போது இதையோ நாம் அறிவோம் --அதாவது துக்கம், அசாந்தி என்ற அனைத்தும் கர்ம பந்தனங்களின் கணக்கு-வழக்காகும். இராஜாவிலிருந்து தொடங்கி ஏழை வரை ஒவ்வொரு மனிதரும் இந்தக் கணக்கில் பிணைக்கப் பட்டுள்ளனர். அதனால் பரமாத்மாவோ தானே சொல்கிறார் - இப்போதைய உலகம் கலியுகம். ஆகவே அந்த அனைத்தும் கர்ம பந்தனங்களால் உருவாக்கப்பட்டுள்ளன மற்றும் வரக்கூடிய உலகம் சத்யுக மாக இருந்தது. அதை மலர்களின் உலகம் எனச் சொல்கின்றனர். இப்போது அது கர்மபந்தனம் இல்லாத ஜீவன் முக் தேவி-தேவதைகளின் இராஜ்யம். அது இப்போது இல்லை. இப்போது நாம் ஜீவன் முக்த் எனச் சொல்கிறோம் என்றால் இதன் அர்த்தம் இதுவல்ல - நாம் ஏதோ தேகத்திலிருந்து விடுபட்டுத் தனியாக இருந்தோம் என்பதல்ல. அவர்களுக்குத் தேக உணர்வு இருக்கவில்லை. ஆனால் அவர்கள் தேகத்தில் இருந்தாலும் துக்கத்தை அடையவில்லை. அதாவது அங்கே எந்த ஒரு கர்ம பந்தனத்தின் விஷயமும் இல்லை. அவர்கள் உயிர்வாழ்க்கை பெற்றாலும், உயிர் விட்டாலும் முதலிலிருந்து கடைசி வரை சுகத்தையே அடைந்தார்கள். ஆக, ஜீவன் முக்தி என்பதன் அர்த்தம், ஜீவன் இருந்தாலும் கர்மாதீத் (கர்ம பந்தனங்களுக்கு அப்பாற்பட்ட நிலை). இப்போது இந்த முழு உலகமும் 5 விகாரங்களால் முழுமையாகப் பீடிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 விகாரங்கள் முழுக்க-முழுக்கப் பிரவேசமாகியுள்ளன. ஆனால் மனிதர்களிடம் அந்த அளவு சக்தி இல்லை - இந்த 5 பூதங்களை வெல்ல முடியவில்லை. அப்போது தான் பரமாத்மா தானே வந்து நம்மை 5 பூதங்களிடமிருந்து விடுவிக்கிறார் மற்றும் வருங்காலப் பிராலப்தமாகிய தேவி-தேவதா பதவி அடையச் செய்கிறார். ஓம் சாந்தி.