08-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களை ஞானம், யோகத்தினால் உண்மையான அலங்காரம் செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார், இந்த அலங்காரத்தை கெடுக்கக் கூடியது தேக அபிமானமாகும், ஆகையால் தேகத்தின் மீதிருக்கும் பற்றுதலை நீக்கி விட வேண்டும்.

கேள்வி:
ஞான மார்க்கத்தில் உயர்ந்த நிலையை யார் அடைய முடியும்?

பதில்:
யாருக்கு தனது தேகம் மற்றும் மற்றவருடைய தேகத்தின் மீதும் பற்றுதல் இல்லையோ, ஒரு தந்தையின் மீது உண்மையான அன்பு இருக்கிறதோ, யாருடைய பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்ளவில்லையோ, அவர்கள் தான் ஞான மார்க்கத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். ஒரு தந்தையின் மீது உள்ளப்பூர்வமான அன்பு வைக்கும் குழந்தைகளின் அனைத்து ஆசைகளும் நிறைவேறி விடும். பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்ளும் நோயானது மிகவும் கடுமையானது, ஆகையால் பாப்தாதா எச்சரிக்கை செய்கின்றார் லி குழந்தைகளே! நீங்கள் ஒருவருக்கொருவரின் பெயர், உருவத்தில் மாட்டிக் கொண்டு தனது பதவியை குறைத்துக் கொள்ளாதீர்கள்.

பாடல்:
உன்னை அடைந்ததால் உலகை அடைந்து விட்டேன் ....

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய குழந்தைகள் இந்த பாட்டின் அர்த்தத்தை நன்றாக அறிந்திருப்பீர்கள். இருப்பினும் பாபா ஒவ்வொரு வரியின் அர்த்தத்தை கூறுகின்றார். இதன் மூலமாகவும் குழந்தைகளின் வாய் திறக்கக் கூடும். அர்த்தம் மிகவும் எளிதானது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே தந்தையை அறிவீர்கள். நீங்கள் யார்? பிராமண, பிராமணிகள். முழு உலகத்தினரும் சிவ வம்சிகள். இப்போது புது படைப்புகளை படைத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து பிரம்மாவின் மூலம் பிராமண பிராமணிகளாகிய நாம் முழு உலகிற்கான இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகாயம் மட்டுமின்றி முழு பூமி மற்றும் கடல், நதியும் இதில் வந்து விடுகிறது. பாபா, நாங்கள் உங்களிடமிருந்து முழு உலகிற்கான இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நாம் கல்ப கல்பத்திற்கும் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகின்றோம். நாம் இராஜ்யம் செய்கின்ற பொழுது முழு உலகிலும் பாரதவாசிகளாகிய நமது இராஜ்யம் தான் இருக்கும், வேறு யாரும் இருக்க மாட்டார்கள். சந்திரவம்சத்தினர்களும் இருக்கமாட்டார்கள். சூரியவம்ச லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் மட்டுமே இருக்கும். மற்ற அனைவரும் பின் நாட்களில் வருவர். இதையும் இப்போது நீங்கள் அறிவீர்கள். அங்கு இது போன்ற விசயங்கள் எதுவும் தெரியாது. இந்த ஆஸ்தியை நாம் யாரிடமிருந்து அடைந்தோம்? என்பதையும் அறிந்திருக்கமாட்டார்கள். ஒருவேளை யாரிடமிருந்து அடைந்தோம்? என்பதை அறிந்திருந்தால் பிறகு எப்படி அடைந்தோம்? என்ற கேள்வியும் எழும். இந்த நேரத்தில் மட்டுமே முழு சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் இருக்கிறது, பிறகு இது மறைந்து விடும். எல்லையற்ற தந்தை வந்திருக்கின்றார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அவர் தான் கீதையின் பகவான் என்று கூறப்படுகின்றார். பக்தி மார்க்கத்தில் அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக விளங்கக் கூடிய கீதையை தான் முதலில் கேட்கின்றனர். கீதையின் கூடவே பாகவதம், மகாபாரதமும் இருக்கிறது. இந்த பக்தியும் அதிக காலத்திற்குப் பிறகு ஆரம்ப மாகிறது. மெது மெதுவாக கோயில்கள் உருவாகும், சாஸ்திரங்கள் உருவாகும். 3லி4 நூறு ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இப்போது நீங்கள் தந்தையிடமிருந்து நேரடியாகக் கேட்கிறீர்கள். பரம்பிதா பரமாத்மா சிவபாபா பிரம்மாவின் உடலில் வந்திருக்கின்றார் என்பதை அறிவீர்கள். நாம் மீண்டும் வந்து அவரது குழந்தைகளாக ஆகியிருக்கிறோம். சத்யுகத்தில் நாம் மீண்டும் சந்திரவம்சத்தினர்களாக ஆவோம் என்பதை அறிந்திருக்கமாட்டார்கள். இப்போது தந்தை உங்களுக்கு முழு சிருஷ்டியின் சக்கரத்தைப் பற்றி புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். தந்தை சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிவார். அவர் அனைத்தும் அறிந்தவர், ஞானம் நிறைந்தவர் என்று கூறப்படுகின்றார். எந்த ஞானம்? என்பது யாருக்கும் தெரியாது. இறை தந்தை ஞானம் நிறைந்தவர் என்ற பெயர் மட்டும் வைத்து விட்டனர். இறைவன் அனைவரது உள்ளத்தையும் அறிந்தவர் என்ற அவர்கள் புரிந்திருக்கின்றனர். நாம் ஸ்ரீமத் படி நடக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார், அவரைத் தான் நீங்கள் அரைக் கல்பமாக நினைவு செய்து வந்தீர்கள். இப்போது உங்களுக்கு ஞானம் கிடைத்திருப்பதால் பக்தி நின்று விடுகிறது. பகல் சத்யுகமாகும், இரவு கலியுகமாகும். கால் நரகத்தின் பக்கம், வாய் சொர்க்கத்தின் பக்கம் இருக்கிறது. தாய் வீட்டிற்குச் சென்று பிறகு மாமியார் வீட்டிற்கு வருவீர்கள். இங்கு தந்தையாகிய சிவபாபா அலங்கரிப்பதற்காக வந்திருக்கின்றார், ஏனெனில் அலங்காரம் கெட்டு போய் இருக்கிறது. தூய்மையை இழந்து விடுவதால் அலங்காரம் கெட்டு விடுகிறது. இப்போது தூய்மையின்றி, பாவிகளாக, கீழானவர்களாக ஆகியிருக் கிறீர்கள். இப்போது தந்தையின் மூலம் நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். குணங்களற்ற நிலையிலிருந்து குணவான்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையை நினைவு செய்வதனால் மற்றும் புரிந்து கொள்வதால் நாம் எந்த பாவமும் செய்யமாட்டோம் என்பதை அறிவீர்கள். எந்த தமோபிரதான உணவுகளையும் சாப்பிட மாட்டோம். மனிதர்கள் தீர்த்த யாத்திரை களுக்குச் செல்கின்றனர் எனில் எதையாவது விட்டு விட்டு வருவர், சிலர் மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டு வருவர். இங்கு 5 விகாரங்களை தானம் செய்ய வேண்டும், ஏனெனில் தேக அபிமானம் அனைத்தையும் விட மிகவும் கெட்டது, அடிக்கடி தேகத்தில் பற்றுதல் ஏற்பட்டு விடுகிறது.

தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! இந்த தேகத்தின் மீதிருக்கும் பற்றுதலை விட்டு விடுங்கள். தேகத்தின் மீதிருக்கும் பற்றுதல் நீங்காததால் மற்ற தேகதாரிகளின் மீதும் பற்றுதல் ஏற்பட்டு விடுகிறது. தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! ஒருவர் மீது அன்பு வையுங்கள். மற்றவர்களின் பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பாபா பாட்டின் அர்த்தத்தை புரிய வைத்திருக்கின்றார். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொர்க்கத்தின் இராஜ்யத்தை மீண்டும் அடைந்து கொண்டிருக்கிறோம். இந்த இராஜ்யத்தை நம்மிடமிருந்து யாரும் அபகரிக்க முடியாது. அங்கு வேறு யாரும் கிடையவே கிடையாது எனும் போது எப்படி அபகரிக்க முடியும்? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். நடக்கவில்லையெனில் உயர்ந்த பதவி ஒருபோதும் அடைய முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஸ்ரீமத்தும் அவசியம் சாகாரத்தின் (சரீர முடையவர்) மூலம் தான் பெற வேண்டும். பிரேரனையின் மூலம் அடைய முடியாது. சிலருக்கு நாம் சிவபாபாவின் பிரேரனையின் மூலம் நடக்கிறோம் என்ற கர்வம் வந்து விடுகிறது. ஒருவேளை பிரேரனைக்கான விசயம் ஏற்படும் போது பக்தி மார்க்கத்திலும் மன்மனாபவ என்ற பிரேரனை ஏன் கொடுக்கவில்லை? இங்கு சாகாரத்தில் (சரீரத்தில்) வந்து புரிய வைக்க வேண்டியிருக்கிறது. சரீரமின்றி எப்படி கட்டளை (வழி முறை) கொடுக்க முடியும்? பல குழந்தைகள் தந்தையிடம் கோபித்துக் கொண்டு நாம் சிவபாபாவினுடையவர்கள் என்று கூறுகின்றனர். சிவபாபா பிரம்மாவின் மூலம் நம்மை பிராமணர்களாக ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில் குழந்தை பிறக்கும், பிறகு தான் நமக்கு தாத்தாவின் ஆஸ்தி இவர் மூலமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது என்ற அறிவு கிடைக்கிறது. தாத்தா தான் (சிவபாபா) பிரம்மாவின் மூலம் நம்மை தன்னுடையவராக ஆக்குகின்றார். கல்வி கொடுக்கின்றார்.

(பாட்டு) பாபாவின் மீது அன்பு வைப்பதால் நமது அனைத்து ஆசைகளும் நிறைவேறி விடுகிறது. அன்பு வைப்பது மிகவும் நல்லது. அனைத்து ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையின் நாயகிகளாக ஆகியிருக் கிறீர்கள். சிறு வயது குழந்தையும் தந்தைக்கு பிரியமானவர்களாக ஆகின்றனர். பாபாவை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்கும். குழந்தை வளர்ந்து விடும் போது அறிவு வந்து விடுகிறது. நீங்களும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள், ஆத்மாக்கள். தந்தையிடமிருந்து அஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு பரம்பிதா பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும். தந்தைக்கு பிரியமானவர்களாக ஆகின்ற போது உங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறி விடும். நாயகிகள் உள்ளத்தில் ஏதாவது ஆசையுடன் நாயகனை நினைவு செய்வர். ஆஸ்தி அடைவதற்காக குழந்தைகள் தந்தைக்கு பிரியமானவர்களாக ஆகின்றனர். தந்தை மற்றும் சொத்தின் நினைவு இருக்கும் அல்லவா! அது எல்லைக்குட்பட்ட விசயமாகும். இங்கு ஆத்மா வானது அனைவருக்கும் பரலௌகீக நாயகனாக இருப்பவருக்கு நாயகியாக ஆக வேண்டும். நாம் தந்தையிட மிருந்து உலக இராஜ்யத்தை அடைகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதில் அனைத்தும் வந்து விடுகிறது. பிரிவினைக்கான எந்த விசயமும் கிடையாது. சத்யுகம், திரேதாவில் எந்த உபத்திரவமும் ஏற்படாது. துக்கத்திற்கான பெயரே இருக்காது. இதுவோ துக்கதாமம், அதனால் தான் மனிதர்கள் நாம் இராஜா, ராணி ஆக வேண்டும், ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக முயற்சி செய் கின்றனர். வரிசைக்கிரமமான பிரிவு இருக்கிறது அல்லவா! ஒவ்வொருவரும் உயர்ந்த பதவிக்காக முயற்சி செய்கின்றனர். சொர்க்கத்திலும் உயர்ந்த பதவியடை வதற்காக மம்மா, பாபாவை பின்பற்ற வேண்டும். ஏன் நாம் வாரிசாக ஆகக் கூடாது! பாரதம் தான் தாய் திருநாடு என்று கூறப்படுகிறது. இதையே பாரத மாதா என்று கூறுகின்றனர். ஆக அவசியம் தந்தையும் தேவை அல்லவா! இருவரும் தேவை. இன்றைய நாட்களில் வந்தே மாதரம், பாரத மாதா என்று கூறுகின்றனர். ஏனெனில் பாரதம் அழிவற்ற கண்டமாகும். இங்கு தான் பரம்பிதா பரமாத்மா வருகின்றார். ஆக பாரதம் மகான் தீர்த்த ஸ்தானம் ஆகிவிடுகிறது அல்லவா! ஆக முழு பாரதத்திற்கும் வந்தனம் (வணங்க) செய்ய வேண்டும். ஆனால் இந்த ஞானம் யாரிடத்திலும் கிடையாது. தூய்மைக்குத் தான் வந்தனம் செய்யப்படுகிறது. வந்தே மாதரம் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் சிவசக்திகளாக இருக்கிறீர்கள், நீங்கள் தான் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கியிருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்களது பிறப்பிடம் பிரியமானதாக இருக்கும் அல்லவா! ஆக அனைத்தையும் விட உயர்ந்த பூமி இந்த பாரதம் ஆகும். இங்கு தந்தை வந்து அனைவரையும் தூய்மையாக ஆக்குகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மை யாக ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே. மற்றபடி பூமி எதுவும் செய்வது கிடையாது. அனைவரையும் தூய்மை ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை தான், அவர் இங்கு வருகின்றார். பாரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்தது. பாரதம் அழிவற்ற கண்டமாகும். இது ஒருபோதும் விநாசம் ஆவது கிடையாது. ஈஸ்வரன் பாரதத்திற்கு வந்து தான் சரீரத்தில் பிரவேசிக்கின்றார், அவரையே பகீரதன், நந்தி என்று கூறுகிறோம். நந்தி என்ற பெயரை கேட்டு அவர்கள் மிருகத்தை வைத்து விட்டனர். தந்தை கல்ப கல்பம் பிரம்மாவின் உடலில் வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில் நீங்கள் தான் சடைமுடியுடன் இருக்கிறீர்கள். இராஜரிஷி நீங்கள் தான். ரிஷிகள் எப்போதும் தூய்மையாக இருப்பர். இராஜரிஷிகளாக இருக்கிறீர்கள், வீட்டையும் கவனிக்கின்றீர்கள். சிறிது சிறிதாக தூய்மையாக ஆகிக் கொண்டே செல்வீர்கள். அவர்கள் உடனேயே ஆகின்றனர், ஏனெனில் அவர்கள் வீட்டை விட்டு செல்கின்றனர். நீங்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே தூய்மையாக ஆக வேண்டும். வித்தியாசம் இருக்கிறது அல்லவா! நாம் இந்த பழைய உலகில் அமர்ந்து புது உலகிற்கான ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இனிமையிலும் இனிய குழந்தைகளே! இந்த படிப்பு எதிர்காலத்திற்கானது என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் புது உலகிற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆக தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும்! பலர் ஒருவருக்கொருவரின் பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஒருபோதும் சிவபாபாவின் நினைவு வரவே வராது. யார் மீது அன்பு செலுத்துகிறீர்களோ அவர்களது நினைவு வந்து கொண்டே இருக்கும். அவர்கள் இந்த ஏணியில் ஏற முடியாது. பெயர், உருவத்தில் மாட்டிக் கொள்வதும் ஒரு வியாதியாகும், அது வந்து விடுகிறது. ஒருவருக்கொருவரின் பெயர், உருவத்தில் மாட்டிக் கொண்டு தனது பதவியை குறைத்துக் கொள்கிறீர்கள் என்று பாபா எச்சரிக்கை செய்கின்றார். மற்றவர்களுக்கு நன்மை ஏற்பட்டு விடலாம், ஆனால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. தனக்கே தீங்கு விளைவித்து அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள் (பண்டிதர்களைப் போன்று). பெயர், உருவத்தில் மாட்டிக் கொண்டு இறப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.

(பாட்டு) அரைக் கல்பம் நாம் துக்கத்தை சகித்துக் கொண்டோம் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டீர்கள். கவலையை பொறுத்துக் கொண்டீர்கள். இப்போது அது நீங்கி குஷி அதிகரிக்கிறது. நீங்கள் கவலையை பார்த்து பார்த்து ஒரேயடியாக தமோ பிரதானமாக ஆகிவிட்டீர்கள். நமது சுகமான நாட்கள் வருகிறது என்ற குஷி இப்போது உங்களிடம் இருக்கிறது. சுகதாமத்திற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். துக்கமான நாட்கள் முடிவடைந்து விட்டது. சுகதாமத்தில் உயர்ந்த பதவி அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். மனிதர்கள் சுகத்திற்கான படிக்கின்றனர். நாம் எதிர்கால உலகிற்கு எஜமானர்களாக ஆகிக் கொண்டி ருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா நான் உங்களிடமிருந்து முழு ஆஸ்தி அடைந்து கொண்டே இருப்பேன் அதாவது சூரியவம்ச இராஜ்யத்தில் உயர்ந்த பதவி அடைவேன் என்று நீங்கள் கடிதத்தில் எழுதுகிறீர்கள். முயற்சிக்கான முழு பாவனை வைக்க வேண்டும்.

(பாட்டு) இப்போது சத்யுகத்தின் உங்களது சுகத்திற்கான நம்பிக்கை தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. தீபம் அணைந்து விடும் போது துக்கமோ துக்கம் ஏற்பட்டு விடுகிறது. பகவானின் மகாவாக்கியம் லி உங்களது அனைத்து துக்கங்களும் இப்போது முடியப் போகிறது. உங்களது சுகத்திற்கான நாட்கள் வந்து கொண்டிருக்கிறது. முயற்சி செய்து தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியடைய வேண்டும். எவ்வளவு இப்போது எடுத்துக் கொள்வீர்களோ, இதன் மூலம் நாம் கல்ப கல்பத்திற்கும் இந்த ஆஸ்தி அடைவதற்கு அதிகாரிகளாக ஆவோம் என்பதை புரிந்து கொள்வீர்கள். யாருக்கு இந்த வழி கூறப்படுகிறது. என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். புண்ணிய ஆத்மா நம்பர் ஒன் சூரியவம்சிகளாக ஆக வேண்டும் என்று பாபா கூறுகின்றார். கண் இல்லாதவர்களுக்கு ஊன்றுகோலாக ஆக வேண்டும். கேள்விகள் எழுதப்பட்ட கரும்பலகைகள் (போர்ட்) ஆங்காங்கே வைக்க வேண்டும். ஒரு தந்தையை நிரூபணம் செய்ய வேண்டும். அவரே அனைவருக்கும் தந்தை ஆவார். அந்த தந்தை பிரம்மாவின் மூலம் பிராமணர்களைப் படைக்கின்றார். பிராமணனிலிருந்து நீங்கள் தேவதைகளாக ஆவீர்கள். சூத்திரர்களாக இருந்தீர்கள், இப்போது பிராமணர்களாக இருக்கிறீர்கள். பிராமணர்கள் குடுமி போன்றவர்கள், பிறகு தேவதைகள். பிராமணர்களாகிய உங்களுக்கு முன்னேறும் கலையாகும். பிராமண, பிராமணிகளாகிய நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். பாதம் மற்றும் உச்சி குடுமி, குட்டிகர்ண விளையாட்டு விளையாடுவதன் மூலம் இரண்டும் சங்கமம் ஏற்பட்டு விடுகிறது. எவ்வளவு நல்ல முறையில் புரிய வைக்கின்றார்! விநாசம் ஆகிறது எனில் நமது இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் அனைவரும் சரீரத்தை விடுத்து அமரலோகத்திற்கு செல்வீர்கள். இது மரண உலகமாகும்.

(பாட்டு) எப்போதிலிருந்து அன்பு ஏற்பட்டதோ! அன்பு செலுத்திய பழையவர்கள் (மூத்தவர்கள்) உயர்ந்த பதவி அடைவார்கள், புதிதாக அன்பு செலுத்துபவர்கள் குறைந்த பதவி அடைவார்கள் என்பது இதன் பொருள் அல்ல. அனைத்திற்கும் ஆதாரம் முயற்சியில் இருக்கிறது. பல பழைய ஆத்மாக்களை விட புதியவர்கள் வேகமாக செல்வதை பார்க்க முடிகிறது. ஏனெனில் நேரம் குறைவாக இருக்கிறது என்பதை பார்க்கின்ற போது முயற்சி செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். கருத்துகளும் எளிதாக கிடைத்துக் கொண்டே இருக்கிறது. தந்தையின் அறிமுகம் கொடுத்து கீதையின் பகவான் சிவனா? அல்லது கிருஷ்ணரா? என்பதை புரிய வைக்க வேண்டும். அவர் படைக்கக் கூடியவர், இவர் படைப்பு ஆவார். ஆக அவசியம் படைப்பவரைத் தான் பகவான் என்று கூறுவோம் அல்லவா! யாகம், தவம், ஜபம், சாஸ்திரம் போன்றவைகள் படித்து கீழே இறங்கி வந்தோம் என்பதை நீங்கள் நிரூபணம் செய்து கூற வேண்டும். பகவானின் மகாவாக்கியம் என்று கூறி புரிய வைக்கும் போது யாருக்கும் கோபம் வராது. அரைக் கல்பம் பக்தி நடைபெறுகிறது. பக்தி என்றால் இரவு. கீழிறங்கும் கலை, முன்னேறும் கலை. அனைவரும் கதியின் மூலம் சத்கதிக்கு வரவேண்டும். இதை புரிய வைக்க வேண்டும். முற்றிலும் எளிதாக புரிய வைக்கின்ற போது மிகுந்த குஷி ஏற்படும். பாபா நம்மை இவ்வாறு ஆக்குகின்றார். இப்போது ஆத்மாவிற்கு சிறகு கிடைத்திருக்கிறது. சுமையாக இருக்கும் ஆத்மா இலேசாக ஆகிவிடுகிறது. தேக உணர்வு நீங்குவதால் நீங்கள் இலேசாக ஆகிவிடுவீர்கள். தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் எவ்வளவு நடந்தாலும் களைப்பு ஏற்படாது. இந்த யுக்தியும் கூறுகின்றார். சரீர உணர்வு நீங்குவதனால் காற்று போல் பறந்து கொண்டே இருப்பீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தேக அபிமானத்திற்கு வசமாகி ஒருபோதும் கோபித்துக் கொள்ளக் கூடாது. சாகாரத்தின் (பிரம்மா பாபா) மூலம் தந்தையின் கட்டளைகளைப் பெற வேண்டும். ஒரு பரமாத்மா நாயகனுக்கு உண்மையான நாயகியாக ஆக வேண்டும்.

2) இல்லறத்தை கவனித்தாலும் இராஜரிஷியாக இருக்க வேண்டும். சுகதாமம் செல்வதற்கான முழு நம்பிக்கை வைத்து முயற்சியில் முழு பாவனை வைக்க வேண்டும்.

வரதானம்:
மாயாவின் பெரிய விஷயத்தையும் கூட சிறியதாக மாற்றி கடந்துச் செல்லக்கூடிய நம்பிக்கை புத்தியுடைய வெற்றியாளர் ஆகுக.

எந்தவொரு பெரிய விஷயத்தையும் சிறியதாக மாற்றுவது அல்லது சிறிய விஷயத்தை பெரியதாக்குவது நம்முடைய கையில் தான் இருக்கிறது. ஒரு சிலரின் சுபாவம் சிறியதை பெரியதாக மாற்றுவது, மேலும் சிலர் பெரியதை சிறியதாக மாற்றுவதாகும். எனவே மாயாவின் எத்தனை பெரிய விஷயம் முன்னால் வந்தாலும் கூட நீங்கள் அதைவிட பெரியதாக ஆகிவிடுங்கள். அப்பொழுது பிரச்சனை சிறியதாகிவிடும். சுய நிலையில் இருப்பதினால் பெரிய பிரச்சனைகள் கூட சிறியதாகிவிடும். மேலும் அதன் மீது வெற்றி அடைவதும் எளிதாகி விடும். நான் கல்ப லி கல்பத்திற்கும் வெற்றியடையக்கூடியவன் என்பது தக்க சமயத்தில் நினைவு வந்து விட்டது என்றால் இந்த நம்பிக்கையின் மூலம் வெற்றியடைந்தவர் ஆகலாம்.

சுலோகன்:
வரத்தை அளிக்கும் வள்ளலை தனது உண்மையான நண்பனாக மாற்றி கொண்டால் வரதானங்கள் என்ற பை நிரம்பிவிடும்.