08.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! பாபா அழிவற்ற வைத்தியர் ஆவார், அவர் ஒரு மகாமந்திரத்தின் மூலம் உங்களுடைய அனைத்து துக்கங்களையும் தூரம் போக்கி விடுகிறார்.

 

கேள்வி:

மாயை உங்களுக்கிடையில் ஏன் தடையை ஏற்படுத்துகிறது? ஏதாவது காரணத்தை சொல்லுங்கள்?

 

பதில்:-

1. ஏனென்றால் நீங்கள் மாயையின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களாவீர்கள். அதனுடைய வாடிக்கை முடிகிறது ஆகையினால் தடையை ஏற்படுத்துகிறது. 2. அழிவற்ற வைத்தியர் உங்களுக்கு மருந்து கொடுக்கும் போது மாயையின் வியாதி வெளியேறுகிறது ஆகையினால் தடைகளைப் பார்த்து பயப்படக் கூடாது. மன்மனாபவ என்ற மந்திரத்தின் மூலம் மாயை ஓடி விடும்.

 

ஓம் சாந்தி.

பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், மனிதர்கள் மனதிற்கு அமைதி வேண்டும், மனதிற்கு அமைதி வேண்டும் என்று சொல்லி துன்பமடைகிறார்கள். தினமும் ஓம் சாந்தி என்று சொல்கிறார்கள். ஆனால் அதனுடைய அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால் அமைதியை வேண்டிக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஒரு ஆத்மா அதாவது நான் அமைதியானவன் என்று சொல்லவும் செய்கிறார்கள். நம்முடைய சுயதர்மம் அமைதியாகும். சுயதர்மமே அமைதி என்றால் பிறகு ஏன் கேட்க வேண்டும்? அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தினால் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது இராவண இராஜ்யம் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் இராவணன் பொதுவாக முழு உலகத்திற்கும் குறிப்பாக பாரதத்திற்கும் எதிரி ஆகையினால் தான் இராவணனை எரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. இப்படி வருடா-வருடம் எரிக்கக் கூடிய மனிதர்கள் யாரும் இருக்கிறார்களா? இவனை பிறவி-பிறவிகளாக, கல்பம்-கல்பமாக எரித்துக் கொண்டு வருகிறார்கள் ஏனென்றால் உங்களுடைய இந்த எதிரி மிகப்பெரியவனாவான் (பலமிக்கவன்). அனைவரும் 5 விகாரங்களில் மாட்டுகிறார்கள். பிறவியே கீழான காரியத்தால் எடுக்கிறோம் என்றால் இராவண இராஜ்யமாகிறது அல்லவா! இந்த சமயத்தில் அளவற்ற துக்கம் இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? இராவணன். இது யாருக்கும் தெரிவதில்லை - துக்கம் எந்த காரணத்தினால் ஏற்படுகிறது. இந்த இராஜ்யமே இராவணனுடையதாகும். அனைத்திலும் பெரிய எதிரி இவன் ஆவான். ஒவ்வொரு ஆண்டும் இவனுடைய கொடும்பாவியை செய்து எரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் இன்னும் பெரியதாக உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். துக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வளவு பெரிய-பெரிய சாதுக்கள், சன்னியாசிகள், மகாத்மாக்கள், இராஜாக்கள் போன்றோர் இருக்கிறார்கள் ஆனால் ஒருவருக்குக் கூட இராவணன் நம்முடைய எதிரி, அவனை நாம் வருடா-வருடம் எரிக்கின்றோம் என்பது தெரியவில்லை. மேலும் பிறகு இராவணன் இறந்து விட்டான், நாம் இலங்கைக்கு எஜமானர்களாகி விட்டோம் என்று குμயில் கொண்டாடுகிறார்கள். ஆனால் எஜமானர்களாக ஆவதில்லை. எவ்வளவு பணத்தை செலவு செய்கிறார்கள்! உங்களுக்கு அவ்வளவு அளவற்ற பணத்தை கொடுத்தேன், அனைத்தையும் எங்கே இழந்தீர்கள்? என்று பாபா கேட்கின்றார். தசராவில் இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கிறார்கள். இராவணனை அழித்து இலங்கையை கொள்ளையடிக்கிறார்கள். இராவணனை ஏன் எரிக்கிறார்கள் என்று எதையும் புரிந்து கொள்வதில்லை. இந்த சமயத்தில் அனைவரும் இந்த விகாரங்களின் சிறையில் இருக்கிறார்கள். அரைக்கல்பமாக இராவணனை எரிக்கிறார் கள் ஏனென்றால் துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இராவணனுடைய இராஜ்யத்தில் நாம் மிகவும் துக்கமுடையவர்களாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். சத்யுகத்தில் இந்த 5 விகாரங்கள் இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்வதில்லை. இந்த இராவணனை எரிப்பது போன்றவையெல்லாம் நடப்பதில்லை. இதை எப்போதிலிருந்து கொண்டாடி வருகின்றீர்கள் என்று கேளுங்கள். இது அனாதியாக நடந்து வருகிறது என்று சொல்வார்கள். இரக்‌ஷாபந்தனம் எப்போது ஆரம்பமானது? அனாதியாக நடந்து வருகிறது என்று சொல்வார்கள். எனவே இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்லவா! மனிதர் களுடைய புத்தி என்னவாக ஆகி விட்டது! மிருகங்களாகவும் இல்லை, மனிதர்களாகவும் இல்லை. ஒரு வேலைக்கும் உதவாதவர்கள். சொர்க்கத்தை முற்றிலும் தெரிந்திருக்கவில்லை. இந்த உலகத்தை தான் பகவான் படைத்தார் என்று புரிந்துகொள்கிறார்கள். இருந்தாலும் துக்கத்தில் பகவானைத் தான் நினைவு செய்கிறார்கள் - ஹே பகவானே! இந்த துக்கத்திலிருந்து விடுவியுங்கள். ஆனால் கலியுகத்தில் சுகமுடையவர்களாக இருக்க முடியாது. கண்டிப்பாக துக்கத்தை அனுபவிக்கத் தான் வேண்டும். ஏணிப்படியில் இறங்கத்தான் வேண்டும். புதிய உலகத்திலிருந்து பழைய உலகத்தின் இறுதிவரை உள்ள அனைத்து இரகசியங்களையும் பாபா புரிய வைக்கின்றார். குழந்தைகள் அருகில் வரும்போது, அனைத்து துக்கங்களின் மருந்து ஒன்று தான் என்று சொல்கின்றார். அழிவற்ற வைத்தியர் அல்லவா! 21 பிறவிகளுக்கு அனைவரையும் துக்கங்களிலிருந்து  விடுவித்து விடுகிறார். அந்த வைத்தியர்கள் அவர்களே கூட நோயுற்று விடுகிறார்கள். இவர் அழிவற்ற வைத்தியர் ஆவார். துக்கமும் அளவற்றதாக இருக்கிறது, சுகமும் அளவற்றதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். பாபா அளவற்ற சுகத்தைக் கொடுக்கின்றார். அங்கே துக்கத்தின் பெயர் அடையாளம் கூட இருப்பதில்லை. சுகமுடையவர்களாக ஆவதற்குத் தான் மருந்தாகும். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையாக சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள், அனைத்து துக்கங்களும் தூரம் போய் விடும். பிறகு சுகமோ சுகம் தான் இருக்கும். பாபா துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர் என்று பாடப்பட்டுள்ளது. அரைக்கல்பத்திற்கு உங்களுடைய அனைத்து துக்கங்களும் தூரம் போய்விடுகிறது. நீங்கள் தங்களை ஆத்மா என்று மட்டும் புரிந்து கொண்டு பாபாவை நினைவு செய்யுங்கள்.

 

ஆத்மா மற்றும் ஜீவன் இரண்டினுடைய விளையாட்டாகும். நிராகார ஆத்மா அழிவற்றது மற்றும் சாகார சரீரம் அழியக்கூடியதாகும், இவற்றினுடைய விளையாட்டாகும். இப்போது பாபா கூறுகின்றார், தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து விடுங்கள். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே தங்களை இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள். தூய்மையற்றவர்கள் செல்ல முடியாது ஆகையினால் என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள். பாபாவிடம் மருந்து இருக்கிறது அல்லவா! மாயை கண்டிப்பாக தடையை ஏற்படுத்தும் என்பதையும் கூறுகின்றேன். நீங்கள் இராவணனுடைய வாடிக்கையாளர்களாவீர்கள். அவனுடைய வாடிக்கையாளர் சென்று விட்டால் கண்டிப்பாக கொதிப்பான் (கோபம் கொள்வான்). எனவே இது படிப்பு என்று பாபா புரிய வைக்கின்றார். எந்த மருந்தும் இல்லை. நினைவு யாத்திரை தான் மருந்தாகும். என்னை நிரந்தரமாக நினைவு செய்வதற்கான முயற்சி செய்தீர்கள் என்றால், ஒரே மருந்தின் மூலம் உங்களுடைய அனைத்து துக்கங்களும் தூரம் போய்விடும். பக்திமார்க்கத்தில் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களுடைய வாய் எதையாவது முணு-முணுத்துக் கொண்டே இருக்கும். ஏதாவதொரு மந்திரம் அல்லது இராம நாமத்தை ஜபித்துக் கொண்டே இருக்கிறார்கள், இத்தனை முறை நீங்கள் தினமும் ஜபிக்க வேண்டும் என்று அவர்களுக்கு குருவின் மந்திரம் கிடைத்திருக்கிறது. இராம நாம மாலையை ஜபிக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்கிறார்கள். இதைத் தான் இராம நாம தானம் என்று சொல்லப்படுகிறது. இப்படி நிறைய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இராமா-இராமா என்று ஜபித்துக் கொண்டே இருந்தார்கள் என்றால் சண்டை எதுவும் போடமாட்டார்கள், அதிலேயே ஈடுபட்டிருப்பார்கள். யாராவது எதுவும் சொன்னாலும் கூட பதில் சொல்ல மாட்டார்கள். மிகவும் குறைவானவர்களே இப்படி செய்கிறார்கள். இங்கே இராமா-இராமா என்று வாயின் மூலம் எதையும் சொல்ல வேண்டியதில்லை என்று பாபா புரிய வைக்கின்றார். பாபாவை மட்டும் நினைவு செய்து கொண்டே இருங்கள் என்பது தான் இங்கே ஜபிப்பது ஆகும். நான் ஒன்றும் இராமன் இல்லை என்று பாபா கூறுகின்றார். இராமர் திரேதா யுகத்தவராக இருந்தார், அவருடைய இராஜ்யம் இருந்தது, அவரை ஜபிக்க வேண்டியதில்லை. இப்போது பாபா புரிய வைக்கின்றார், பக்தி மார்க்கத்தில் இவையனைத்தையும் சிந்தனை செய்து, பூஜை செய்து நீங்கள் ஏணிப்படியில் இறங்கி தான் வந்துள்ளீர்கள், ஏனென்றால் அவை அனைத்தும் தவறானதாகும். ஒரு பாபா மட்டுமே சரியானவர் ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். இது எப்படிப்பட்ட மறதி விளையாட்டாக இருக்கிறது. எந்த தந்தையிடமிருந்து இவ்வளவு எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கிறதோ அவரை நினைவு செய்தால் அவர்களுடைய முகமே பிரகாசித்துக் கொண்டிருக்கும். முகம் குஷியில் மலர்ந்து விடுகிறது. முகத்தில் புன்சிரிப்பு வந்து விடுகிறது. பாபாவை நினைவு செய்வதின் மூலம் நாம் இலஷ்மி- நாராயணனாக ஆவோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அரைகல்பத்திற்கு நம்முடைய துக்கங்கள் அனைத்தும் தூரம்போய் விடும். பாபா எதுவும் கருணை காட்டுவார் என்பது கிடையாது. இல்லை, நாம் எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்வோமோ அந்தளவிற்கு சதோபிரதானமாக ஆகி விடுவோம். உலகத்திற்கு எஜமானர்களாக இருக்கும் இலஷ்மி - நாராயணன் எவ்வளவு புன்சிரிப்போடு இருக்கிறார்கள்! அப்படி ஆக வேண்டும். எல்லையற்ற தந்தையை நினைவு செய்து மீண்டும் நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆவோம் என்று உள்ளுக்குள் குஷி ஏற்படுகிறது. ஆத்மாவின் இந்த குஷியின் சம்ஸ்காரம் தான் ஆத்மாவோடு செல்லும். பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக குறைந்து கொண்டே செல்லும். இந்த சமயத்தில் மாயை உங்களை அதிகம் கொதிப்படையச் செய்யும். உங்களுடைய நினைவை மறக்கச் செய்ய மாயை அதிகம் முயற்சி செய்யும். எப்போதும் இப்படி புன்சிரிப்புடன் இருக்க முடியாது. ஏதாவதொரு நேரத்தில் கண்டிப்பாக ஏமாறுவீர்கள். மனிதர்கள் நோயுறும்போது சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று அவர்களுக்கு சொன்னாலும் கூட சிவபாபா யார், என்பது யாருக்கும் தெரியவில்லை எனும்போது என்னவென்று புரிந்து நினைவு செய்வார்கள்? ஏன் நினைவு செய்வார்கள்? பாபாவை நினைவு செய்வதின் மூலம் நாம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆவோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தேவி-தேவதைகள் சதோபிரதானமானவர்களாக இருக்கிறார்கள் அல்லவா! அதனை தெய்வீக உலகம் என்றே சொல்லப்படுகிறது. மனிதர்களின் உலகம் என்று சொல்லப்படுவதில்லை. மனிதன் என்ற பெயரே இருப்பதில்லை. இந்த தேவதை என்று தான் சொல்லப்படுகிறது. அது தேவ உலகமாகும், இது மனித உலகமாகும். இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். பாபா தான் புரிய வைக்கின்றார், அவரை ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. பாபா அனேக விதமான ஞானத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். இருந்தாலும் கடைசியில் மகாமந்திரத்தை கொடுக்கின்றார் - பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள் மேலும் உங்களுடைய அனைத்து துக்கங்களும் தூரம் போய்விடும். கலபத்திற்கு முன்பு கூட நீங்கள் தேவி-தேவதைகளாக ஆகியிருந்தீர்கள். உங்களுடைய நடத்தை தேவி-தேவதைகளைப் போல் இருந்தது. அங்கே யாரும் தலைகீழாக பேசவில்லை. அப்படிப்பட்ட காரியங்கள் எதுவும் நடப்பதே இல்லை. அந்த உலகமே தேவதைகளின் உலகமாகும். இது மனித உலகமாகும். வித்தியாசம் இருக்கிறது அல்லவா! இதை பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். தேவ உலகம் கடந்து இலட்சக் கணக்கான ஆண்டுகளாகி விட்டது என்று மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். இங்கே யாரையும் தேவதை என்று சொல்ல முடியாது. தேவதைகள் தூய்மையானவர்களாக இருந்தார்கள். தேவி-தேவதைகளை மகான் ஆத்மாக்கள் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களை ஒருபோதும் அப்படிச் சொல்ல முடியாது. இது இராவணனுடைய உலகமாகும். இராவணன் மிகப்பெரிய எதிரியாவான். இவனைப்போன்ற எதிரி வேறு யாரும் இல்லை. நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் இராவணனை எரிக்கின்றீர்கள். இவன் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இவன் எந்த ஒரு மனிதனும் இல்லை, இவை 5 விகாரங்களாகும் ஆகையினால் இதற்கு இராவண இராஜ்யம் என்று சொல்லப் படுகிறது. 5 விகாரங்களின் இராஜ்யம் அல்லவா! அனைவரிடத்திலும் 5 விகாரங்கள் இருக்கின்றன. துர்கதி மற்றும் சத்கதியின் இந்த விளையாட்டு உருவாக்கப் பட்டுள்ளது. இப்போது உங்களுக்கு சத்கதியின் நேரத்தைப் பற்றியும் பாபா புரிய வைத்துள்ளார். துர்கதியைப் பற்றியும் புரிய வைத்துள்ளார். நீங்கள் தான் மேலே உயருகிறீர்கள் பிறகு நீங்கள் தான் கீழே விழுகிறீர்கள். பாரதத்தில் தான் சிவஜெயந்தியும் நடக்கிறது. இராவண ஜெயந்தியும் பாரதத்தில் தான் நடக்கிறது. அரைக்கல்பம் தெய்வீக உலகம், இலஷ்மி - நாராயணன், இராமன் - சீதையின் இராஜ்யம் நடக்கிறது.இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அனைவருடைய வாழ்க்கை கதையையும் தெரிந்துள்ளீர்கள். அனைத்து மகிமைகளும் உங்களுடையதாகும். நவராத்திரியில் பூஜை போன்றவைகள் அனைத்தும் உங்களுக்கு நடக்கிறது. நீங்கள் தான் ஸ்தாபனை செய்கிறீர்கள். ஸ்ரீமத்படி நடந்து நீங்கள் உலகத்தை மாற்றுகிறீர்கள் எனவே ஸ்ரீமத்படி முழுமையாக நடக்க வேண்டும் அல்லவா! வரிசைக்கிரமமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சண்டை போன்றவற்றின் விஷயமே எதுவும் இல்லை. இந்த புருஷோத்தம சங்கமயுகமே தனிப்பட்டது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பழைய உலகத்தின் கடைசி மற்றும் புதிய உலகத்தின் ஆரம்பமாகும். பழைய உலகத்தை மாற்றுவதற்காகவே பாபா வருகின்றார். உங்களுக்கு நிறைய புரிய வைக்கின்றார், ஆனால் நிறைய பேர் மறந்து விடுகிறார்கள். இந்த- இந்த பாயிண்டுகளை புரிய வைத்திருக்க வேண்டும் என்று சொற்பொழிவிற்குப் பிறகு நினைவிற்கு வருகிறது. அப்படியே கலபம்- கல்பமாக எப்படி ஸ்தாபனை நடந்ததோ அப்படி நடந்து கொண்டே இருக்கும், யாரெல்லாம் என்ன பதவி அடைந்தார்களோ, அதையே அடைவார்கள். அனைவரும் ஒரேமாதிரி பதவி அடைய முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைபவர்களும் இருக்கிறார்கள் என்றால் குறைந்ததிலும் குறைந்த பதவி அடைபவர்களும் இருக்கிறார்கள். யார் ஒன்றில் மட்டுமே ஈடுபட்டுள்ள (மாறாத) குழந்தைகளாக இருக்கிறார்களோ இன்னும் போகப்போக வருந்துவார்கள் - இவர்கள் செல்வந்தர்களுக்கு வேலைக் காரர்களாக ஆவார்கள், இவர்கள் இராஜ்ய வம்சத்திற்கு வேலைக்காரர்களாக ஆவார்கள். இவர்கள் பெரிய செல்வந்தர்களாக ஆவார்கள், அவர்களை அவ்வப்போது வரவேற்றுக் கொண்டே இருப்பார்கள். அனைவரையுமா வரவேற்பார்கள்? அனைவரையுடைய முகத்தையும் பார்ப்பார்கள்?

 

பாபா கூட பிரம்மாவின் வாயின் மூலம் புரிய வைக்கின்றார், அனைவரும் நேரடியாக பார்க்க  முடியுமா என்ன! நீங்கள் இப்போது நேரடியாக வந்துள்ளீர்கள், தூய்மையாக ஆகியுள்ளீர்கள். இங்கே சில அபவித்திரமானவர்களும் வந்து அமர்ந்து விடுகிறார்கள், கொஞ்சமாவது கேட்டார்கள் என்றால் பிறகு தேவதையாக ஆகி விடுவார்கள் இருந்தாலும் கொஞ்சமாவது கேட்டார்கள் என்றால் தாக்கம் ஏற்படும். கேட்க வில்லை என்றால் வரவே மாட்டார்கள். எனவே முக்கியமான விஷயம், பாபா கூறுகின்றார் மன்மனாபவ. இந்த ஒரு மந்திரத்தின் மூலம் தான் உங்களுடைய அனைத்து துக்கங்களும் தூரம் போய்விடுகிறது. தந்தை கூறுகின்றார், மன்மனாபவ பிறகு டீச்சராக ஆகி மத்தியாஜீ பவ என்று கூறுகின்றார். இவர் தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார். மூவருமே நினைவிருந்தாலும் கூட புன்சிரிப்பான நிலை இருக்கும். தந்தை படிப்பிக்கின்றார் பிறகு பாபா தான் கூடவே அழைத்துச் செல்கின்றார். இப்படிப்பட்ட தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் பாபாவை யாருமே தெரிந்திருக்கவில்லை. பகவான் இருக்கின்றார் என்று மட்டும் தெரிந்திருக்கிறார்கள், நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதையும் தெரிந்துள்ளார்கள். தந்தையிடமிருந்து என்ன கிடைக்க வேண்டும், போன்ற எதையும் தெரிந்திருக்கவில்லை. ஒரு தந்தை இருக்கின்றார், நாம் அவருடைய குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது எல்லையற்ற விஷயம் அல்லவா! குழந்தைகள் அனைவருக்கும் டீச்சராக ஆகி படிப்பிக்கின்றார். பிறகு அனைவருடைய கணக்கு-வழக்குகளையும் முடித்து திரும்பி அழைத்துச் செல்வார். இந்த மோசமான உலகத்திலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும், புதிய உலகத்தில் வருவதற்காக உங்களை தகுதியானவர் களாக்குகின்றார். யார்-யாரெல்லாம் தகுதியானவர்களாக ஆகிறார்களோ, அவர்கள் சத்யுகத்தில் வருகிறார்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல்போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தங்களுடைய நிலையை எப்போதும் ஒரு நிலை மற்றும் புன்சிரிப்புடன் வைத்துக் கொள்வதற்காக தந்தை, டீச்சர் மற்றும் சத்குரு மூவரையும் நினைவு செய்ய வேண்டும். இங்கிருந்து தான் குஷியின் சம்ஸ்காரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். ஆஸ்தியின் நினைவின் மூலம் முகம் எப்போது பிரகாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

2) ஸ்ரீமத்படி நடந்து முழு உலகத்தையும் மாற்றுவதற்கான சேவை செய்ய வேண்டும். 5 விகாரங்களில் யார் மாட்டியுள்ளார்களோ, அவர்களை விடுவிக்க வேண்டும். தங்களுடைய சுயதர்மத்தின் அறிமுகத்தை அளிக்க வேண்டும்.

 

வரதானம்:

சுய இராஜ்யத்தின் மூலம் தன்னுடன் இருப்பவர்களை அன்பாவனர்களாக, உதவியாளர்களாக ஆக்கக் கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.

 

இராஜா என்றால் வள்ளல். வள்ள-டம் கேட்க வேண்டிய அல்லது கூற வேண்டிய அவசியமில்லை. தானாகவே ஒவ்வொரு இராஜாவும் தனது அன்பான பரிசுகளைக் கொடுப்பார்கள். நீங்களும் தன் மீது இராஜ்யம் செய்யக் கூடிய இராஜாவாக ஆகின்ற பொழுது ஒவ்வொருவரும் உங்களுக்கு உதவி என்ற பரிசு கொடுப்பார்கள். யார் சுயத்தின் மீது இராஜ்யம் செய்கிறார்களோ அவர்களுக்கு லௌகீகம் மற்றும் அலௌகீகத்தில் கூடவே இருப்பார்கள் சரி என்று கூறி அன்பு, உதவியாளர்களாக ஆவார்கள். குடும்பத்தில் ஒருபோதும் கட்டளை பிறப்பிக்கக் கூடாது, தனது கர்மேந்திரியங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பிறகு உங்கள் கூடவே இருக்கும் அனைவரும் உதவியாளர்களும் உங்களுக்கு அன்பு, உதவியாளர்களாக ஆகிவிடுவார்கள்.

 

சுலோகன்:

அனைத்து சாதனங்கள் பிராப்தியாக கிடைத்திருந்தும் விடுபட்ட விருத்தியுடன் இருக்கும் போது தான் வைராக்கிய விருக்தியுடையவர்கள் என்று கூற முடியும்.

 

ஓம்சாந்தி