08.11.2020    காலை முரளி      ஓம் சாந்தி      அவ்யக்த பாப்தாதா,     

 ரிவைஸ் 01.10.1987 மதுபன்


 

ஈஸ்வரிய அன்பு - வாழ்க்கை மாற்றத்திற்கான அஸ்திவாரம்

 

இன்று அன்புக்கடலானவர் தம்முடைய அன்பான குழந்தைகளுடன் சந்திப்பதற்காக வந்துள்ளார். தந்தை மற்றும் குழந்தைகளின் அன்பு உலகத்தை அன்பு என்ற கயிற்றில் கட்டிப் போட்டுக் கொண்டுள்ளது. எப்போது அன்புக்கடல் மற்றும் அன்பு நிறைந்த நதிகளின் சந்திப்பு நடைபெறுகிறதோ, அப்போது அன்பு நிறைந்த நதியும் கூட தந்தைக்கு சமமான மாஸ்டர் அன்புக்கடலாக ஆகி விடுகிறது. அதனால் உலக ஆத்மாக்கள் அன்பின் அனுபவத் தினால் தாமாகவே அருகில் வந்து கொண்டே இருக்கின்றனர். பவித்திரமான அன்பு அல்லது ஈஸ்வரிய அன்பை எவ்வளவு தான் அறியாத ஆத்மாக்களாக இருந்தாலும், நீண்ட காலமாக பரிவாரத்தின் அன்பிலிருந்து வஞ்சிக்கப்பட்ட, கல்லுக்கு சமமான ஆத்மாக்களாக இருந்தாலும் அத்தகைய கல்லுக்குச் சமமான ஆத்மாக்களும் கூட ஈஸ்வரிய பரிவாரத்தின் அன்பினால் உருகும் நீராக மாறி விடுகின்றனர். இது தான் ஈஸ்வரிய பரிவாரத்தின் அன்பினுடைய அற்புதம். எவ்வளவு தான் விலகியிருந்த போதிலும் ஈஸ்வரிய அன்பு காந்தத்தைப் போல் தானாக அருகில் கொண்டு வந்து விடும். இதைத் தான் ஈஸ்வரிய அன்பின் பிரத்தியட்ச பலன் என்று சொல்கின்றனர். எவ்வளவு தான் ஒருவர் தன்னை தனி வழியில் செல்பவராக நினைத்தாலும் ஈஸ்வரிய அன்பானது சகயோகி ஆக்கி தங்களுக்குள் ஒருவர் என்ற முன்னேறுவதற்கான கயிற்றில் கட்டிப் போட்டு விடுகிறது. அந்த மாதிரி அனுபவம் செய்திருக்கிறீர்கள் இல்லையா?

 

அன்பு முதலில் சகயோகி ஆக்குகிறது. சகயோகியாக மாற்றி மாற்றி தானாகவே சமயத்தில் அனைவரையும் சகஜயோகியாகவும் மாற்றி விடுகிறது. சகயோகி ஆவதற்கான அடையாளம் - இன்று சகயோகியாக இருப்பவர் நாளை சகஜயோகி ஆகி விடுவார். ஈஸ்வரிய அன்பு மாற்றத்திற்கான அஸ்திவாரம் அல்லது வாழ்க்கை மாற்றத்திற்கான விதை சொரூபமாகும். எந்த ஆத்மாக்களுக்குள் ஈஸ்வரிய அன்பின் அனுபவம் என்ற விதை விழுகிறதோ, அப்போது இந்த விதை, சகயோகி ஆவதற்கான மரத்தைத் தானாகவே உருவாக்கிக் கொண்டே இருக்கும். மேலும் சமயத்தில் சகஜயோகி ஆவதற்கான பலன் (பழம்) காணப்படும். ஏனென்றால் மாற்றத் திற்கான விதை அவசியம் பலனைக் காண்பிக்கும். சில பலன்கள் விரைவாக வெளிப்படும். சில பலன்கள் சமயத்தில் வெளிப்படும். நாலாபுறமும் பாருங்கள், நீங்கள் அனைவரும் மாஸ்டர் அன்புக்கடல், உலக சேவாதாரிக் குழந்தைகள் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உலகத்தில் ஈஸ்வரிய பரிவாரத்தின் அன்பு என்ற விதையை விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எங்கே சென்றாலும், நாஸ்திகராயிருந்தாலும் சரி, ஆஸ்திகராயிருந்தாலும் சரி, தந்தையை அறியாதவராக இருந்தாலும் சரி, ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும் சரி, ஆனால் அவசியம் இதை அனுபவம் செய்வார்கள், அதாவது இந்த மாதிரி ஈஸ்வரிய பரிவாரத்தின் அன்பு -- சிவ வம்சி பிரம்மாகுமார்-பிரம்மாகுமாரிகளிடம் கிடைக்கிறது. இது வேறு எங்கும் கிடைப்பதில்லை. மேலும் இதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், அதாவது இந்த சிநேகம் அல்லது அன்பு சாதாரணமானதன்று. இது அலௌகிக அன்பு அல்லது ஈஸ்வரிய சிநேகமாகும். ஆக, மறை முகமாக நாஸ்திகரிலிருந்து ஆஸ்திகர் ஆகி விட்டனர் இல்லையா? ஈஸ்வரிய அன்பு உள்ளது என்றால் அது எங்கிருந்து வந்தது? கிரணங்கள் சூரியன் இருப்பதைத் தாமாகவே நிரூபிக்கின்றன. ஈஸ்வரிய அன்பு, அலௌகிக அன்பு, சுயநலமற்ற அன்பு தானாகவே வள்ளல் தந்தை இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. மறைமுகமாக ஈஸ்வரிய சிநேகத்தின் அன்பு மூலமாக அன்புக்கடல் தந்தையுடன் சம்மந்தம் இணைக்கப் படுகிறது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் விதை முதலில் மறைமுகமாக உள்ளது. மரம் தெளிவாகக் காணப்படுகிறது. ஆக, ஈஸ்வரிய அன்பு என்ற விதை அனைவரையும் சகயோகி யிலிருந்து சகஜயோகியாக, பிரத்தியட்ச ரூபத்தில் சமயத்தின் பிரமாணம் பிரத்தியட்சம் செய்து கொண்டிருக்கிறது மற்றும் செய்து கொண்டு இருக்கும். ஆக, அனைவரும் ஈஸ்வரிய அன்பின் விதையை விதைப்பதற்கான சேவை செய்தனர். சகயோகி ஆக்குவதற்கான சுப பாவனை மற்றும் சுப விருப்பம் என்ற விசேசமான இரண்டு இலைகளையும் பிரத்தியட்சமாகப் பார்த்தீர்கள். இப்போது இந்தத் தண்டு (அடிமரம்) விருத்தியடைந்து பிரத்தியட்ச பலனை அளிக்கும்.

 

பாப்தாதா அனைத்துக் குழந்தைகளின் பலவிதமான சேவையைப் பார்த்து மகிழ்ச்சி யடைகிறார். சொற்பொழிவு செய்யக்கூடிய குழந்தைகளாயினும் ஸ்தூல சேவை செய்யக்கூடிய குழந்தைகளாயினும் அனைவரின் சகயோகத்தின் சேவையினால் வெற்றியின் பலன் கிடைக் கிறது. காவல் பணி செய்பவராயினும் சமையல் தொடர்பான சேவை செய்பவராயினும் எப்படி ஐந்து விரல்களின் சகயோகத்தினால் இப்படி நடக்கும் என எவ்வளவு யோசித்திருந்தீர்களோ, அந்த யோசனை மூலம் ஆயிரம் மடங்கு அதிக சுலபமாகக் காரியம் நடைபெற்று விட்டது. இது யார் செய்த அற்புதம்? அனைவருடையதாகும். எந்தக் காரியத்தில் சகயோகி ஆனீர்களோ, சுத்தமாகவும் வைத்துக் கொண்டீர்கள், மேஜையை சுத்தம் செய்தீர்கள், ஆனால் அனைவரின் சகயோகத்தின் முடிவு (ரிசல்ட்) என்பது வெற்றி தான். இந்தக் குழுவின் சக்தி மிக உயர்ந்ததாகும். பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் - மதுபன் வரக்கூடிய குழந்தைகள் மட்டுமில்லை, ஆனால் யார் சாகாரத்தில் கூட இருந்ததில்லையோ, நாலாபுறம் உள்ள பிராமணக் குழந்தை களின், தேசத்தின் அல்லது வெளிநாடுகளின் - அனைவரின் மனதின் சுப பாவனை மற்றும் சுப விருப்பத்தின் சகயோகம் இருந்தது. இந்த சர்வ ஆத்மாக்களின் சுப பாவனை, சுப விருப்பத்தின் கோட்டை ஆத்மாக்களை மாற்றி விடுகிறது. நிமித்தமாக சக்திகள் இருந்தாலும் சரி, பாண்டவர்கள் இருந்தாலும் சரி. விசேசமாக ஒவ்வொரு காரியத்திலும் நிமித்த சேவாதாரியாக ஆகவே செய்கிறார்கள். ஆனால் வாயுமண்டலத்தின் கோட்டையானது அனைவரின் சகயோகத்தினால் தான் உருவாகிறது. நிமித்தமாகக் கூடிய குழந்தைகளுக்கும் கூட பாப்தாதா வாழ்த்து சொல்கிறார். ஆனால் அனைவரையும் விட அதிக வாழ்த்து ஒவ்வொரு குழந்தைக்கும் சொல்கிறார். தந்தைக்குக் குழந்தைகள் என்ன வாழ்த்து சொல்வார்கள்? ஏனென்றால் தந்தையோ அவ்யக்தமாகி விட்டார். வ்யக்தத்திலோ குழந்தைகளை நிமித்தமாக்கியுள்ளார். அதனால் பாப்தாதா சதா குழந்தைகளின் மகிமையைத் தான் பாடுகிறார். நீங்கள் தந்தையின் பாடலைப் பாடுங்கள். தந்தை உங்கள் பாடலைப் பாடுவார்.

 

என்னென்ன செய்தீர்களோ, மிக நன்றாகவே செய்தீர்கள். சொற்பொழிவு செய்பவர்கள் நன்றாகச் செய்தார்கள். மேடையை அலங்கரிப்பவர்கள் நன்றாக அலங்கரித்தார்கள் மற்றும் விசேசமாக யோக யுக்த் உணவு சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள், காய்கறி நறுக்குகிறவர்கள் இருந்தனர். முதல் அஸ்திவாரமாகவோ காய்கறி நறுக்கப் படுகிறது. காய்கறி நறுக்கவில்லை என்றால் உணவு எப்படித் தயாராகும்? அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் அனைத்து விதமான சேவைகளுக்கும் நிமித்தமாக இருந்தனர். கேட்டீர்கள் இல்லையா -- சுத்தம் செய்பவர் கள் சுத்தம் செய்யவில்லை என்றாலும் கூட பிரபாவம் ஏற்படாது. ஒவ்வொருவரின் முகமும் ஈஸ்வரிய அன்பு நிறைந்ததாக இல்லை என்றால் சேவையின் வெற்றி எப்படி ஏற்படும்? அனைவரும் என்னென்ன காரியம் செய்தார்களோ, நிறைந்த அன்புடன் செய்தார்கள். அதனால் அவர்களிடமும் கூட அன்பின் விதை விதைக்கப் பட்டது. ஊக்கம்-உற்சாகத்துடன் செய்தனர். அதனால் அவர்களிடமும் கூட ஊக்கம்-உற்சாகம் இருந்தது. வேற்றுமை இருந்த போதிலும் அன்பின் கயிற்றின் காரணத்தால் ஒற்றுமையின் விசயங்களையே பேசிக் கொண்டிருந்தார்கள். இது வாயுமண்டலத்தின் குடை நிழலினுடைய விசேசமாக இருந்தது. வாயுமண்டலம் குடை நிழலாக ஆகி விடுகிறது. ஆகவே குடை நிழலின் கீழே இருக்கிற காரணத்தால் எத்தகைய சம்ஸ்காரம் உள்ளவர்களும் அன்பின் பிரபாவத்தில் மூழ்கியவராக இருந்தனர். புரிந்ததா? அனைவருக்கும் பெரியதிலும் பெரிய பொறுப்பு இருந்தது. அனைவரும் சேவை செய்தனர். அவர்கள் எவ்வளவு தான் வேறு ஏதாவது பேச விரும்பினாலும் வாயுமண்டலத்தின் காரணத்தால் பேச முடிவதில்லை. மனதில் ஏதாவது யோசித்தாலும் கூட வாயிலிருந்து வெளிப்படாது. ஏனென்றால் உங்கள் அனைவரின் பிரத்தியட்ச வாழ்க்கை மாற்றத்தைப் பார்த்து அவர்களிடமும் கூட மாற்றத்திற்கான தூண்டுதல் தானாக வந்து கொண்டிருக்கும். பிரத்தியட்ச பிரமாணத்தைப் பார்த்தீர்கள் இல்லையா? சாஸ்திர பிரமாணத்தையும் விட, அனைத்திலும் பெரியது பிரத்தியட்ச பிரமாணமாகும். பிரத்தியட்ச பிரமாணத்திற்கு முன்னால் மற்ற அனைத்துப் பிரமாணங்களும் உள்ளடங்கிப் போய்விடும். சேவையின் ரிசல்ட் இவ்வாறு இருந்தது. இப்போதும் கூட அதே அன்பின் சகயோகத்தின் விசேஷத்தினால் இன்னும் சமீபத்தில் கொண்டு வந்து கொண்டிருப்பீர்களானால் இன்னும் கூட சகயோகத்தில் முன்னேறிக் கொண்டே செல்வீர்கள். பிறகும் கூட எப்போது அனைத்து அதிகாரங்களின் சகயோகம் கிடைக்கிறதோ, அப்போது பிரத்தியட்சதாவின் (பாபாவை வெளிப்படுத்துதல்) முழக்கம் ஓங்கி ஒலிக்கும்.

 

விசேசமாக அனைத்து அதிகாரத்தினரும் ஒன்றாகக் கூடி ஒரே சப்தத்தை ஓங்கி ஒலிக்கச் செய்யும் போது தான் பிரத்தியட்சதாவின் திரை உலகத்தின் முன்னால் திறக்கப்படும். தற்சமயம் உருவாக்கியுள்ள பிளான் அதற்காகத் தான் உருவாக்கப்பட்டது இல்லையா? அனைத்து வர்க்கத்தவர்களும் அதாவது அனைத்து அதிகாரத்தவர்களும் தொடர்பில், சகயோகத்தில் வர வேண்டும், சிநேகத்தில் வருகின்றனர் என்றால் பிறகு சம்மந்தத்தில் வந்து சகஜயோகி ஆகி விடுவார்கள். எந்த ஓர் அதிகாரத்தினராவது சகயோகத்தில் வரவில்லை என்றால் அனைவரின் சகயோகத்திற்கான காரியம் என்ன வைக்கப்பட்டுள்ளதோ, அது எப்படி வெற்றி பெறும்? இப்போது விசேச அதிகாரத்தினரின் அஸ்திவாரம் இடப்பட்டுள்ளது. தர்மத்தின் அதிகாரம் அனைத்திலும் பெரியதிலும் பெரிய அதிகாரம் இல்லையா? அந்த விசேச அதிகாரத்தின் மூலம் அஸ்திவாரம் ஆரம்பமாயிற்று. சிநேகத்தின் பிரபாவத்தைப் பார்த்தீர்கள் இல்லையா? இல்லையென்றால் மக்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்? அவ்வளவு பேரையும் ஒரே நேரத்தில் உங்களால் எப்படி அழைக்க முடிகிறது? (இந்தியாவின் அனைத்து மகா மண்டலேஸ்வரர்களின் முதல் மகாநாடு). அவர்களும் கூட ஆச்சரியப் பட்டார்கள் இல்லையா? ஆனால் ஈஸ்வரிய அன்பின் கயிறு ஒன்றாக இருந்தது. அதனால் வேற்றுமையின் சிந்தனை இருந்த போதிலும் கூட சகயோகி ஆவதற்கான சிந்தனை ஒன்றாகவே இருந்தது. அது போல் இப்போது அனைத்து அதிகாரத்தினரையும் சகயோகி ஆக்குங்கள். அவர்கள் அதுபோல் ஆகிறார்கள் என்றாலும் கூட இன்னும் சமீபமாக, சகயோகிகளாக, ஆக்கிக் கொண்டே செல்லுங்கள். ஏனென்றால் இப்போது பொன்விழா முடிந்தது என்றால் இப்போதிலிருந்து இன்னும் பிரத்தியட்சதாவின் சமீபமாக வந்து விட்டீர்கள். வைரவிழா என்றால் பிரத்தியட் சதாவின் முரசை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். ஆக, இந்த வருடத்திலிருந்து பிரத்தியட் சதாவின் திரை இப்போது திறக்கத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் வெளிநாடுகள் மூலமாக பாரதத்தில் பிரத்தியட்சதா ஏற்பட்டது. இன்னொரு பக்கம் நிமித்த மகாமண்டலேஸ்வரர்கள் மூலம் காரியத்தின் உயர்வினுடைய வெற்றி. வெளிநாட்டில் ஐ.நா.வைச் சேர்ந்தவர்கள் நிமித்த மானார்கள். அவர்களும் விசேசமான புகழ் பெற்றவர்கள் மற்றும் பாரதத்திலும் புகழ் பெற்ற தர்மத் தலைவர்கள் உள்ளனர். ஆக, தர்மத்தின் அதிகாரத்தினர் மூலம் தர்ம ஆத்மாக்களின் பிரத்தியட்சதா நடைபெற வேண்டும் - இது தான் பிரத்தியட்சதாவின் திரை விலகுவதின் ஆரம்பமாகும். இன்னும் திறப்பது என்பது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இப்போது திறக்கப்போகிறது. இன்னும் முழுமையாகத் திறக்கவில்லை. ஆரம்பமாகியிருக்கிறது. வெளிநாட்டுக் குழந்தைகள் காரியத்திற்கு நிமித்தமாகியுள்ளனர் என்றால் இதுவும் கூட விசேச காரியமாக இருந்தது. பிரத்தியட்சதாவின் விசேஷ காரியத்தில் இந்தக் காரியத்தின் காரணத்தால் நிமித்தமாகி விட்டனர். ஆகவே பாப்தாதா வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு, இந்தக் கடைசிப் பிரத்தியட்சதாவின் ஹீரோ பார்ட்டில் நிமித்தமாவதற்கான சேவைக்காகவும் விசேச வாழ்த்துகள் தந்து கொண்டிருக்கிறார். பாரதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினீர்கள் இல்லையா? அனைவரின் காதுகள் வரை சப்தம் சென்று சேர்ந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த இந்த சப்தம் பாரதத்தின் கும்பகர்ணர்களை எழுப்புவதற்கு நிமித்தமாகவோ ஆகி விட்டது. ஆனால் இப்போது சப்தம் மட்டுமே சென்றுள்ளது. இப்போது இன்னும் கூட எழுப்ப வேண்டியுள்ளது, விழிப்படையச் செய்ய வேண்டி உள்ளது. இப்போது காதுகள் வரை மட்டும் சப்தம் சென்று சேர்ந்துள்ளது. தூங்கி விட்டவர்களுக்கு காதில் சப்தம் சென்றால் கொஞ்சம் அசைந்து கொடுக்கின்றனர் இல்லையா? குழப்பத்தையோ ஏற்படுத்துகிறீர்கள் இல்லையா? ஆக, குழப்பம் உருவானது. குழப்பத்தில் கொஞ்சம் விழித்துக் கொண்டுள்ளனர். இதுவும் கொஞ்சம் தான் எனப் புரிந்து கொண்டுள்ளனர். எப்போது வேகமாக சப்தமிடுகிறீர்களோ, அப்போது உடனே விழித்துக் கொள்வார்கள். இப்போது முதலிலேயே கூட கொஞ்சம் வேகமான சப்தமாக இருந்தது. எப்போது அனைத்து அதிகாரத்தினரும் ஒன்றாக ஸ்டேஜ் மீது சிநேக சந்திப்பை நடத்து கின்றனரோ, அப்போது அற்புதம் அநாயாசமாக நிகழ்ந்து விடும். அனைத்து அதிகாரங்களைச் சேர்ந்த ஆத்மாக்கள் மூலமாக ஈஸ்வரிய காரியத்தின் பிரத்தியட்சதா ஆரம்பமாகும் போது பிரத்தியட்சதாவின் திரை முழுமையாக விலகும். அதனால் இப்போது என்ன புரோகிராம் செய்து கொண்டிருக்கிறீர்களோ, அதில் இந்த லட்சியம் வைக்க வேண்டும் -- அதாவது அனைத்து அதிகாரங்களைச் சேர்ந்தவர்களின் இணைந்த சந்திப்பு நடைபெற வேண்டும். அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்தவர்களின் சிநேக சந்திப்போ நடைபெற முடியும். எப்படி சாதாரண சாதுக்களை அழைப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் இந்த மகாமண்டலேஸ்வரர்களை அழைத்திருக்கிறீர்கள் இல்லையா? இந்தக் கூட்டத்தில் சங்கராச்சாரியாரும் வந்தால் இன்னும் அழகாக இருக்கும். ஆனால் இப்போது அவருடைய பாக்கியமும் கூட திறந்து கொண்டு விடும். பிறகும் கூட உள்ளுக்குள் அவர் சகயோகியாகவே உள்ளார். குழந்தைகள் முயற்சியை நன்றாகச் செய்திருக்கிறீர்கள். ஆனால் உலக மக்களின் அபிப்பிராயத்தையும் பார்க்க வேண்டி உள்ளது. அந்த நாளும் கூட வரும், அனைத்து அதிகாரங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடி சொல்வார்கள், சிரேஷ்ட அதிகாரம் என்பது ஈஸ்வரிய அதிகாரம், ஆன்மிக அதிகாரம் தான் என்றால் ஒரு பரமாத்ம-அதிகாரம் தான் . எனவே நீண்ட காலத்தின் பிளானை உருவாக்கியிருக்கிறீர்கள் இல்லையா? அனைவரையும் அன்பின் கயிற்றில் இணைத்து அருகில் கொண்டு வாருங்கள் - அதற்காகத் தான் இவ்வளவு சமயம் கிடைத்துள்ளது. இந்த அன்பு காந்தமாக ஆகிவிடும். அதன் மூலம் அனைவரும் ஒரே குழு ரூபத்தில் பாபாவின் ஸ்டேஜில் வந்து சேர வேண்டும். அந்த மாதிரி பிளான் உருவாக்கியிருக்கிறீர்கள் இல்லையா? நல்லது.

 

சேவாதாரிகளுக்கு சேவையின் பிரத்தியட்ச பலனும் கிடைத்து விட்டது. இல்லை யென்றால் இப்போது நம்பர் புதிய குழந்தைகளுடையது இல்லையா? நீங்களோ சந்திப்பைக் கொண்டாடிக் கொண்டாடி இப்போது வானப்ரஸ்த அவஸ்தா வரை வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இப்போது உங்களுடைய சிறிய சகோதர-சகோதரிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறீர்கள். சுயம் வானப்ரஸ்த் ஆகி விட்டீர்கள். அதனால் மற்றவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். ஆசையோ அனைவருக்கும் அதிகரித்துக் கொண்டு தான் போகும். அனைவரும் சொல்வார்கள் -- இப்போதும் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். எவ்வளவு சந்திக்கிறீர்களோ, அவ்வளவு ஆசை அதிகரித்துக் கொண்டே போகும். பிறகு என்ன செய்வீர்கள்? மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் கூட சுயம் திருப்தியின் அனுபவம் செய்வதாகும். ஏனென்றால் பழையவர்களோ அனுபவஸ்தர்கள், பிராப்தி சொரூபமாக இருப்பவர் கள். ஆக, பிராப்தி சொரூப ஆத்மாக்கள் அனைவர் மீதும் சுப பாவனை வைப்பவர்கள், மற்றவர்களை முன்னால் வைப்பவர்கள். அல்லது நாமே சந்திக்கலாம் என நினைக்கிறீர்களா? இதிலும் சுயநலமற்றவராக ஆக வேண்டும். புத்திசாலிகள் நீங்கள். முதல்-இடை-கடை பற்றிப் புரிந்திருப்பவர்கள். சமயத்தைப் பற்றியும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இயற்கையின் பிரபாவத்தைப் பற்றியும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பார்ட்டையும் கூடப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதாவும் சதா குழந்தைகளோடு சந்திக்க விரும்புகிறார். குழந்தைகள் சந்திக்க விரும்புகின்றனர் என்றால் முதலில் பாபா விரும்புகிறார். அப்போது குழந்தைகளும் விரும்புகின்றனர். ஆனால் பாபாவுக்கோ சமயத்தையும் இயற்கையையும் பார்க்க வேண்டி உள்ளது இல்லையா? இந்த உலகத்திற்கு வருகிறார் என்றால் உலகத்தின் அனைத்து விசயங் களையும் பார்க்க வேண்டி உள்ளது. இதிலிருந்து தூரமாக அவ்யக்த வதனத்தில் இருக்கிறார் என்றால் அங்கோ தண்ணீரின், சமயத்தின், இருப்பது-வசிப்பது முதலானவற்றின் பிரச்சினை எதுவும் கிடையாது. குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அருகில் இருக்கிறார்கள். ஆகவே இதனுடைய பலனும் கிடைத்துள்ளது இல்லையா? இதுவும் கூட குஜராத் காரர்களின் சிறப்பாகும். சதா எவர்-ரெடியாக இருக்கின்றனர். சதா ஹாஞ்ஜி என்ற பாடம் பக்காவாக உள்ளது மற்றும் எங்கெல்லாம் தங்குவதற்கான இருப்பிடம் கிடைக்கிறதோ, அங்கே தங்கி விடவும் செய்கிறார்கள். ஒவ்வொரு பரஸ்திதியிலும் குஷியாக இருப்பதற்கான சிறப்பும் உள்ளது. குஜராத்தில் விருத்தியும் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேவையின் ஊக்கம்-உற்சாகம் தன்னையும் நிர்விக்ன மாக ஆக்குகிறது, மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறது. சேவை பாவனைக்கும் வெற்றி உள்ளது. சேவை பாவனையில் அகம்பாவம் வந்து விட்டால் அதனை சேவை பாவனை எனச் சொல்ல மாட்டார்கள். சேவை பாவனை இருந்தால் அது வெற்றியைத் தரும். அகம்பாவம் கலந்து விடுமானால் கடின உழைப்பும் அதிகம், சமயமும் அதிகம். பிறகும் கூட தனக்குத் திருப்தி ஏற்படாது. சேவை பாவனை உள்ள குழந்தைகள் சதா தானும் முன்னேறிக் கொண்டு மற்றவர்களையும் முன்னேறச் செய்வார்கள். சதா பறக்கும் கலையின் அனுபவம் செய்வார்கள். நல்ல தைரியம் உள்ளவர்கள். எங்கே தைரியம் உள்ளதோ, பாப்தாதாவும் ஒவ்வொரு சமயமும் காரியத்தில் உதவியாளராக இருப்பார்.

 

மகாரதியோ மகாதானியாகவே இருக்கிறார். சேவைக்காக வந்துள்ள மகாரதிகள் அனைவரும் மகாதானிகளாக, வரதானிகளாக இருக்கிறீர்கள் இல்லையா? மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் கூட மகாதானம், வரதானமாகும். எப்படி சமயமோ. அது போல் பார்ட் நடிப்பதிலும் தேடிக் கண்டெடுக்கப் பட்ட அனைத்துக் குழந்தைகளும் சதா சகயோகியாக இருந்து கொண்டுள்ளனர், இனிமேலும் இருப்பார்கள். ஆசையோ இருக்கும். ஏனென்றால் இது சுப ஆசையாகும். ஆனால் இதை உள்ளடக்கவும் அறிந்துள்ளனர். அதனால் அனைவரும் சதா திருப்தியாக உள்ளனர்.

 

பாப்தாதாவும் விரும்புகிறார் - ஒவ்வொரு குழந்தையுடனும் சந்திக்க வேண்டும் மற்றும் சமயத்தின் எல்லையும் இருக்கக் கூடாது. ஆனால் உங்களுடைய உலகத்தில் இந்த அனைத்து எல்லைகளையும் பார்க்க வேண்டி உள்ளது. இல்லையென்றால் ஒவ்வொரு விசேச ரத்தினத் தின் மகிமையைப் பாடினால் எவ்வளவு பெரியது! குறைந்தது ஒவ்வொரு குழந்தையின் விசேசதாவைப் பற்றி ஒவ்வொரு பாடலையோ உருவாக்க முடியும். ஆனால்அதனால் சொல்கிறார், வதனத்திற்கு வாருங்கள். அங்கே எந்த ஓர் எல்லையும் கிடையாது. நல்லது.

 

சதா ஈஸ்வரிய அன்பில் மூழ்கி, சதா ஒவ்வொரு விநாடியும் அனைவரின் சகயோகி ஆகக்கூடிய, சதா பிரத்தியட்சதாவின் திரையை விலக்கி, பாபாவை உலகத்திற்கு முன்பாகப் பிரத்தியட்சம் செய்யக்கூடிய, சதா சர்வ ஆத்மாக்களுக்கும் பிரத்தியட்ச பிரமாண (நடைமுறை உதாரண) சொரூபமாகி, கவரக்கூடிய, சதா தந்தை மற்றும் அனைவரின் காரியங்களில் சகயோகி ஆகி, ஒருவரின் பெயரைப் புகழ் பெறச் செய்யக்கூடிய - அத்தகைய உலகின் இஷ்ட (விருப்பமான, பூஜைக்குரிய) குழந்தைகளுக்கு உலகத்தின் விசேசமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அதி சிநேக சம்பன்ன அன்பு நினைவுகள். அதனுடன் கூடவே அனைத்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளின், அன்பினால் தந்தைக்கு முன்னால் வந்து சேர்ந்திருக்கக் கூடிய அனைத்து சமீபமான குழந்தைகளுக்கு சேவையின் வாழ்த்துகளோடு கூடவே பாப்தாதாவின் விசேச அன்பு நினைவுகளை ஏற்றுக் கொள்ளவும்.

 

வரதானம்:

ஞானம் நிறைந்தவர் என்ற விசேசதா மூலம் சம்ஸ்காரங்களின் மோதலில் இருந்துதப்பிக்கக் கூடிய தாமரை மலருக்கு சமமாக அன்பானவர் மற்றும் சாட்சி ஆகுக.

 

சம்ஸ்காரங்களோ கடைசி வரை சிலருக்கு தாசியினுடையவையாக, சிலருக்கு இராஜா வுடையவையாக இருக்கும். சம்ஸ்காரங்கள் மாறட்டும் என்று காத்திருக்காதீர்கள். ஆனால் என் மீது யாருடைய பிரபாவமும் இருக்கக் கூடாது. ஏனென்றால் ஒன்று, ஒவ்வொருவரின் சம்ஸ்காரங்களும் வெவ்வேறு. இரண்டாவது, மாயாவின் ரூபத்தை எடுத்துக் கொண்டும் வருகின்றன. அதனால் எந்த ஒரு தீர்வையும் மரியாதாவின் கோட்டுக்கு உள்ளே இருந்தவாறு செய்யுங்கள். பலவித சம்ஸ்காரங்கள் இருந்த போதும் மோதல் இருக்கக் கூடாது. இதற்காக ஞானம் நிறைந்தவர் ஆகி தாமரை மலருக்கு சமமாக விலகியவராகவும் சாட்சியாகவும் இருங்கள்.

 

சுலோகன் :

விடா முயற்சி அல்லது கடின முயற்சி செய்வதற்கு பதிலாக மனமகிழ்ச்சியுடன் புருசார்த்தம் செய்யுங்கள்.

 

ஓம்சாந்தி