08-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தேகத்துடன் சேர்த்து அனைத்தும் அழியப் போகின்றன, ஆகையால் நீங்கள் பழைய உலகத்தின் செய்தியை கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
ஸ்ரீமத் மீதான புகழ் பாடல் எது? ஸ்ரீமத்படி நடப்பவர்களின் அடையாளங்களைக் கூறுங்கள்?

பதில்:
ஸ்ரீமத் மீதான புகழ் பாடல் - எதை கற்றுத் தருகிறீர்களோ, எதை அணிவிக்கின்றீர்களோ, எங்கே அமர்த்துவீர்களோ...... அதையே செய்வோம். ஸ்ரீமத்படி நடக்கக்கூடிய குழந்தைகள் தந்தையின் அனைத்து கட்டளைகளையும் பின்பற்றுவார்கள். அவர்களால் எப்போதும் உயர்வான கர்மங்களே நடக்கும். அவர்கள் ஒருபோதும் ஸ்ரீமத்தில் மனதின் வழியை கலக்க மாட்டார்கள். அவர்களுக்குள் சரி மற்றும் தவறு பற்றிய உணர்வு (அறிவு) இருக்கும்.

பாடல்:
மலர் மாலை அணிந்தவனே. . . .

ஓம் சாந்தி.
இந்தப் பாடல் யாருடையது? குழந்தைகளுடையது. சில பாடல்களில் தந்தை குழந்தை களுக்கு புரிய வைக்கும்படியாக இருக்கின்றன, ஆனால் இந்தப் பாடலில் குழந்தைகள் கூறு கின்றனர் - பாபா, இப்போது நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம், இது எப்படிப்பட்ட பொய்யான உலகம், பொய்யான பந்தனங்கள் என்பது உலகத்திற்குத் தெரியாது. இங்கே அனைவரும் துக்கம் நிறைந்தவர்கள், ஆகவே ஈஸ்வரனை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் ஈஸ்வரனுடன் சந்திக்கக் கூடிய விசயமே இல்லை. இங்கே துக்கம் உள்ளது, அப்போது ஆத்மாக்களுக்கு நினைவு உண்டாகிறது. ஆனால் நாடகத்தின்படி தந்தை அவரே வரும்போது தான் சந்திக்கிறார். மற்றபடி செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வீண். ஏனென்றால் ஈஸ்வரனை சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று நினைக்கின்றனர். ஈஸ்வரனுக்கான வழியை தவறாக கூறுகின்றனர். ஈஸ்வரனையும், அவருடைய படைப்பின் முதல், இடை, கடைசி பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறினால் அவர்கள் கூறுவது சரியே. முன்னர் ரிஷி, முனிவர்கள் முதலானவர்கள் உண்மை சொல்லிக் கொண்டிருந்தனர், அந்த சமயம் ரஜோ குணமுள்ளவராக இருந்தனர். அந்த சமயத்தை பொய்யான உலகம் என்று கூறுவதில்லை. பொய்யான உலகம் நரகம், கலியுகத்தின் கடைசி சமயத்தை கூறுகிறோம். சங்கம யுகத்தில் கூறுவோம் - இது நரகம், அது சொர்க்கம். துவாபர யுகத்தை நரகம் என்று கூறுவோம் என்பதல்ல. ஆயினும் கூட அந்த சமயத்தில் புத்தி ரஜோபிர தானமாக இருக்கிறது. இப்போது (க-யுகம்) தமோபிரதானமாக இருக்கிறது. ஆக நரகம் மற்றும் சொர்க்கம் என்று சங்கம யுகத்தில் எழுதுவோம். இன்று நரகமாக இருக்கிறது, நாளை சொர்க்க மாகப் போகிறது. இதுவும் கூட தந்தை வந்து புரிய வைக்கிறார் - இந்த சமயம் கலியுகத்தின் முடிவாக இருக்கிறது என்பதை உலகம் அறிந்து கொள்ளவில்லை. அனைவரும் அவரவருடைய கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு இறுதியில் சதோபிரதானம் ஆகின்றனர். பிறகு சதோ ரஜோ தமோவில் வந்தே ஆக வேண்டும். ஒன்றிரண்டு பிறவியின் நடிப்பு இருப்பவர்கள் கூட சதோ ரஜோ தமோவில் வருகின்றனர். அவர் களுடைய நடிப்பே குறைவானதாகும். இதைப் புரிந்து கொள்ள பெரிய புத்தி தேவை. உலகில் பல வழிகளில் நடக்கக்கூடிய மனிதர்கள் இருக்கின்றனர். அனைவருடையதும் ஒரு வழியாக இருப்பதில்லை. ஒவ்வொரு வருக்கும் அவரவர் தர்மம் இருக்கிறது. வழி அவரவருடையதாக இருக்கிறது. தந்தையின் தொழில் தனிப்பட்டது. ஒவ்வொரு ஆத்மாவின் காரியம் தனிப்பட்டது, தர்மமும் தனிப்பட்டது. ஆகவே அவர்களுக்குப் புரிய வைப்பதும் கூட தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும். பெயர், உருவம், தேசம், காலம் அனைவருக்கும் தனித்தனியாக உள்ளது. இது இன்னாருடைய தர்மம் என்று பார்க்கும்போது தெரிய வருகிறது. ஹிந்து தர்மம் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அவர்களிலும் கூட விதவிதமாக இருக்கின்றனர். சிலர் ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர்கள், சிலர் சன்னியாசிகள், சிலர் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள். சன்னியாசி முதலான அனைவரையும் ஹிந்து தர்மத்தில் ஏற்றுக் கொள்கின்றனர். நாங்கள் பிராமண தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று எழுதினாலும் கூட அவர்கள் ஹிந்து தர்மத்தில் சேர்த்து விடுகின்றனர். ஏனெனில் வேறெந்த பிரிவும் அவர்களிடம் இல்லவே இல்லை. ஆக ஒவ்வொருவருடைய படிவமும் தனித் தனியாக இருப்பதன் மூலம் தெரிந்து போய்விடும். வேறு தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இந்த விசயங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிறகு அவர்களுக்கு ஒன்றாகப் புரிய வைப்பது கடினமாக இருக்கும். இவர்கள் தங்களுடைய தர்மத்தை மகிமை செய்கின்றனர், இவர்களுக்குள் பல வழிகள் உள்ளன என்று அவர்கள் புரிந்துக் கொள்வார்கள். புரிய வைக்கக்கூடிய குழந்தைகள் கூட வரிசைக்கிரமமாக உள்ளனர். அனைவரும் ஒன்று போல இருப்பதில்லை. ஆகையால் மகாரதிகளை அழைக்கின்றனர்.

பாபா புரிய வைத்துள்ளார் - என்னை நினைவு செய்யுங்கள், என் வழிப்படி நடந்து செல்லுங்கள். இதில் பிரேரணை முதலான எந்த விசயங்களும் இல்லை. பிரேரணை மூலமே காரியங்கள் நடந்துவிடும் என்றால் தந்தை வருவதற்கான அவசியமே இல்லை. சிவபாபா இங்கே இருக்கிறார் எனும்போது அவர்களுக்கு பிரேரணையின் அவசியம் என்ன இருக்கிறது? இந்த தந்தையின் வழிப்படி நடக்க வேண்டும். பிரேரணையின் விசயமே இல்லை. செய்தி கொண்டு வரும் சகோதரிகள் சில செய்திகளைக் கொண்டு வருகின்றனர். அதிலும் கூட கலப்படம் ஏற்பட்டு விடுகிறது. புரிந்து கொள்பவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதிகமாக மாயையின் குறுக்கீடு ஏற்படுகிறது. செய்தி கொண்டு வரக்கூடிய மற்றொருவர் மூலம் சரிபார்க்க வேண்டி இருக்கிறது. எனக்குள் பாபா வருகிறார், மம்மா வருகின்றார் என்று சிலர் கூறி விடு கின்றனர். பிறகு தனியாக தன்னுடைய சேவை நிலையத்தை திறந்து அமர்ந்து விடுகின்றனர். மாயையின் பிரவேசம் ஏற்பட்டு விடுகிறது. இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங் களாகும். குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக ஆக வேண்டும். புத்திசாலிக் குழந்தைகள் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். யார் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ அவர்கள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் எதை உண்ண வைப்பீர்களோ, எதை அணிவிப்பீர்களோ, எங்கே உட்கார வைப்பீர்களோ அதைச் செய்வோம் என்று ஸ்ரீமத் மீதான புகழ் பாடல் உள்ளது. இப்படியாக சிலரோ தந்தையின் வழிப்படி நடக்கின்றனர், சிலர் பிறருடைய வழியின் (பரமத்) தாக்கத்தில் வந்து விடுகின்றனர். எந்த பொருளாவது கிடைக்கவில்லை என்றாலோ, எந்த விசயமாவது பிடிக்கவில்லை என்றாலோ உடனே கோபித்துக் கொள்கின்றனர். அனைவரும் ஒரே மாதிரியாக நல்ல குழந்தைகளாக இருப்பதில்லை. உலகத்திலோ பல விதமான வழிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அஜாமில் போன்ற பாவ ஆத்மாக்கள், விலை மாதர்கள் நிறைய பேர் உள்ளனர்.

ஈஸ்வரன் சர்வ வியாபி என்று சொல்வது தவறாகும் என்பதையும் புரிய வைக்க வேண்டும். 5 விகாரங்கள் சர்வ வியாபியாக இருக்கின்றன. இது அசுத்தமான உலகமாக இருக்கிறது என்று தந்தை கூறுகிறார். சத்யுகத்தில் 5 விகாரங்கள் இருப்பதில்லை. சாஸ்திரங்களில் இந்த விசயங்கள் இப்படி இருக்கின்றன என்று கூறுகின்றனர். ஆனால் சாஸ்திரங்கள் அனைத்தையும் மனிதர்கள் உருவாக்கினார்கள். ஆக மனிதர்கள் உயர்ந்தவர்களா அல்லது சாஸ்திரங்களா? கண்டிப்பாக சொல்லக்கூடியவர் உயர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லவா! எழுதக்கூடியவர் களோ மனிதர் கள் ஆவர். வியாசர் எழுதினார், அவர் கூட மனிதர் தான் அல்லவா! இதை நிராகார தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். தர்ம ஸ்தாபகர்கள் வந்து என்ன கூறினார்களோ, பிறகு அதனுடைய சாஸ்திரங்கள் உருவாகின்றன. குருநானக் கூறினார், பிறகு கிரந்தம் உருவானது. ஆக யார் கூறினாரோ அவருடைய பெயர் ஏற்பட்டு விடுகிறது. அனைவருடைய தந்தை அவர் ஒருவர் தான் என்று குருநானக் கூட அவரது மகிமையை பாடியுள்ளார். தர்மத்தை ஸ்தாபனை செய்வாயாக என்று தந்தை கூறுகிறார். என்னை அனுப்புபவர் யாருமில்லை என்று இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கூறுகிறார். சிவபாபா அவரே வந்து புரிய வைக்கிறார் - அவர்கள் செய்தியை எடுத்து வருபவர்கள். என்னை அனுப்பக் கூடியவர் யாருமில்லை. என்னை செய்தியாளர் என்றோ தூதுவர் என்றோ கூறுவதில்லை. நான் குழந்தைகளுக்கு சுகம், அமைதியைக் கொடுப்பதற்காக வருகின்றேன். எனக்கு யாரும் கூறுவதில்லை, நானே எஜமானன் ஆவேன். எஜமானனையும் கூட ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கின்றனர். ஆனால் நீங்கள்: எஜமானுடைய அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? என்று அவர்களிடம் கேட்க வேண்டும். அவர் எஜமான், நாம் அவருடைய குழந்தைகள் எனும்போது ஆஸ்தி கிடைக்க வேண்டும். எங்களுடைய பாபா என்று குழந்தைகள் கூறுகின்றனர். ஆக தந்தையின் செல்வத்திற்கு நீங்கள் எஜமான் ஆவீர்கள். எனது பாபா என்று குழந்தைகள் தான் கூறுவார்கள். எனது பாபா என்று சொல்லும்போது பாபாவுடைய செல்வம் கூட என்னுடையது. இப்போது நாம் என்ன கூறுகிறோம்? எங்களுடைய சிவபாபா. தந்தை கூட இவர்கள் என்னுடைய குழந்தைகள் என்று கூறுவார். தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. தந்தையிடம் ஆஸ்தி இருக்கும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். பாரதவாசி களுக்கும் கூட ஆஸ்தி யாரிடமிருந்து கிடைக்கிறது? சிவபாபாவிட மிருந்து கிடைக்கிறது. சிவஜெயந்தியும் கூட கொண்டாடுகின்றனர். சிவஜெயந்திக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி வரும், பிறகு ராம ஜெயந்தி ஆகும். அவ்வளவு தான். மம்மா பாபாவின் ஜெயந்தியையோ பாபாவின் ஜெயந்தியையோ யாரும் பாடுவதில்லை. சிவ ஜெயந்தி, பிறகு ராதா கிருஷ்ண ஜெயந்தி, பிறகு ராம் சீதா ஜெயந்தி ஆகும்.

எப்போது சிவபாபா வருகிறாரோ, அப்போது சூத்ர ராஜ்யம் வினாசம் அடையும். இந்த ரகசியத்தைக் கூட யாரும் புரிந்து கொள்ளவில்லை. தந்தை வந்து புரிய வைக்கிறார். அவர் கண்டிப்பாக வருகிறார். தந்தையை ஏன் அழைக்கின்றனர்? ஸ்ரீ கிருஷ்ணபுரியை ஸ்தாபனை செய்வதற்காக அழைக்கின்றனர். சிவஜெயந்தி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபா ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. சிவஜெயந்தி பெரியதிலும் பெரிய ஜெயந்தி. பிறகு பிரம்மா விஷ்ணு சங்கரர். இப்போது பிரஜாபிதா பிரம்மா மனித சிருஷ்டியில் இருக்கிறார். பிறகு படைப்பில் முக்கிய மானவர்கள் லட்சுமி நாராயணன் ஆவர். ஆக சிவன் தாய் தந்தையாக இருக்கிறார், பிறகு தாயும் தந்தையுமாக பிரம்மாவும் ஜெகதம்பாவும் வந்துவிடுகின்றனர். இவை புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் தாரணை செய்யவேண்டிய விசயங்களாகும். முதன்முதலில் புரியவைக்க வேண்டும் - தந்தையாகிய பரமபிதா பரமாத்மா தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வருகிறார். அவர் பெயர் உருவத்திலிருந்து தனிப்பட்டவர் என்றால் அவருடைய ஜெயந்தி எப்படி இருக்க முடியும்? பகவான் தந்தை என்று கூறப்படுகிறார். தந்தையை அனைவருமே ஏற்றுக் கொள் கின்றனர். ஆத்மா மற்றும் பரமாத்மா நிராகாரமாகத் தான் இருக்கின்றனர். ஆத்மாக்களுக்கு சாகார சரீரம் கிடைக்கிறது. இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களாகும். சாஸ்திரங்கள் முதலான எதுவுமே படிக்காதவர்களாக இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும். ஆத்மாக்களின் தந்தையாகிய அந்த பரமபிதா பரமாத்மா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஆவார். சொர்க்கத்தில் இராஜ்யம் இருக்கும். ஆகையால் அவர் கண்டிப்பாக சங்கம யுகத்தில் வரவேண்டி இருக்கும். சத்யுகத்தில் வரமுடியாது. அந்த பலன் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி சங்கமயுகத்தில் தான் கிடைக்கிறது. இந்த சங்கமயுகம் பிராமணர் களுடையது. பிராமணர் கள் உச்சிக்குடுமி போன்றவர்கள், பிறகு தேவதைகளின் யுகமாகும். ஒவ்வொரு யுகமும் 1250 வருடங்கள் கொண்டது. இப்போது 3 தர்மங்களின் ஸ்தாபனை ஆகின்றது. பிராமண, தேவதா மற்றும் சத்திரிய தர்மம் ஸ்தாபனை ஆகிறது. பிறகு அரைக்கல்ப காலம் வேறு எந்த தர்மமும் இருக்காது. சூரிய வம்சத்தவர்களும் சந்திர வம்சத்தவர்களும் பூஜைக்குரியவர்களாக இருந்தனர், பிறகு பூஜாரிகளாக ஆகின்றனர். அந்த (உலகாய) பிராமணர்களோ விதவிதமாக இருக்கின்றனர்.

இப்போது நீங்கள் நல்ல கர்மங்களைச் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு சத்யுகத்தில் அதன் பலனை அடைவீர்கள். தந்தை நல்ல கர்மங்களை கற்றுக் கொடுக்கிறார். நாம் ஸ்ரீமத்படி எப்படிப்பட்ட கர்மங்களை செய்வோமோ, பிறரையும் தனக்குச் சமமாக எந்தளவு ஆக்குவோமோ, அதற்குண்டான பலன் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது முழு இராஜ்யத்தின் ஸ்தாபனை நடக்கிறது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் இராஜ்யம் ஏற்படுகிறது. இப்பொழுது பிரஜைகளின் மீது பிரஜைகள் செய்யும் இராஜ்யமாக உள்ளது. பஞ்சாயத்து இராஜ்யமாக உள்ளது. பல பஞ்சாயத்தார் இருக்கின்றனர். இல்லையானால் 5 பேர் தான் இருப்பார்கள். இங்கோ அனைவரும் பஞ்சாயத்தார்களே தான். இன்று இருப்பார்கள், நாளை இருப்ப தில்லை. இன்று அமைச்சராக இருப்பார், நாளை அவரை கீழே இறக்கிவிடுவார்கள். ஒப்பந்தம் செய்துகொண்டு பிறகு அதை ரத்து செய்து விடுகிறார்கள். இது அல்பகாலத்திற்கான நொடிப் பொழுது இராஜ்யமாகும். யாரை வேண்டுமானாலும் கீழே இறக்குவதற்கு தாமதிப்பதே இல்லை. இவ்வளவு பெரிய உலகமாக உள்ளது. செய்தித்தாள்களின் மூலம் கொஞ்சமாக தெரிய வருகிறது. இவ்வளவு அனைத்தையும் செய்தித்தாள் மூலமாக யாரும் படிக்கமுடியாது. நமக்கு இந்த உலகத்தின் செய்திகளைப் படிக்க எந்த அவசியமும் இல்லை. தேகத்துடன் சேர்த்து இந்த உலகத்தின் அனைத்துமே முடியப்போகிறது என்பதைத் தெரிந்துள்ளோம். என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் என்னிடம் வந்து விடுவீர்கள் என்று பாபா கூறுகிறார். இறந்த பிறகு அனைத்தும் காட்சிகளாகத் தெரியும். சரீரத்தை விட்டுவிட்டு ஆத்மா அலையவும் செய்கிறது. அந்த சமயத்தில் கூட கணக்குவழக்குகளை அனுபவிக்க முடியும். அனைத்தும் காட்சிகளில் தெரியும். மனதிற்குள் காட்சிகள் தெரிகின்றன - நான் தண்டனையை அனுபவிக் கிறேன், நான் இப்படிப்பட்ட காரியத்தை செய்துவிட்டேனே என்று மிகவும் பச்சாதாபப்படுவார்கள். பச்சாதாபம் ஏற்படுகிறதல்லவா! சிலர் சிறைப்பறவைகளாக ஆகின்றனர். சிறையில் உணவு கிடைத்துவிடும் அல்லவா என்று அவர்கள் கூறுகின்றனர். உணவு கிடைப்பதைப் பற்றி நினைக் கிறார்கள், மரியாதையைப் பற்றி கவலைப்படுவதில்லை. உங்களுக்கோ எந்த கஷ்டமும் கிடையாது. தந்தை என்றால் தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். பிறருக்கு துக்கம் கொடுப்பார் என்பதல்ல. அவரோ சுகத்தைக் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார். பாபா நீங்கள் கூறும் வழிப்படி நடப்பேன், உங்களோடு தான் அமர்வேன்.... என்று கட்டளைக்கு கீழ்படிந்த குழந்தைகள் கூறுவார்கள். இது சிவபாபாவுக்காக பாடப்பட்டுள்ளது. பாகீரதன் அல்லது நந்திகணம் கூட புகழ் வாய்ந்தது. மாதர்களின் தலை மீது ஞானக்கலசம் வைத்தார் என்று எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பசுவைக் காட்டிவிட்டனர். என்னென்ன விசயங்களை உருவாக்கி விட்டனர்.

இந்த உலகத்தில் யாருமே எப்போதும் ஆரோக்கியமானவராக இருக்க முடியாது. பலவிதமான நோய்கள் இருக்கின்றன. அங்கே எந்த நோய்களும் இருக்காது. அங்கே அகால மரணம் ஒருபோதும் ஏற்படாது. சமயத்தில் காட்சி தெரியும். முதியவர்களுக்கோ குஷி ஏற்படும். முதியவர்களாக ஆகும்போது குஷியுடன் சரீரத்தை விடு கின்றனர். நான் சென்று குழந்தையாக ஆவேன் என்பது காட்சியில் தெரியும். இப்போது இளைஞர்களாகிய உங்களுக்கும் கூட அந்தளவு குஷி இருக்கிறது - நாம் சரீரத்தை விட்டுச் சென்று இளவரசர்களாக ஆகப்போகிறோம். குழந்தைகளோ, இளைஞர் களோ அனைவரும் இறக்கத்தான் வேண்டும் அல்லவா! ஆக நாம் சென்று இளவரசன் ஆகப்போ கிறோம் என்ற போதை அனைவருக்கும் இருக்க வேண்டும். கண்டிப்பாக சேவை செய்யும்போது அப்படி ஆவீர்கள். குஷி இருக்க வேண்டும் - இப்போது நாம் பழைய சரீரத்தை விட்டு தந்தை யுடன் செல்லப்போகிறோம். பாபாவிடம் செல்லப்போகிறோம். பாபா பிறகு நம்மை சொர்க்கத் திற்கு அனுப்பி வைப்பார். சேவை செய்ய வேண்டும். குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணர் அல்ல. புல்லாங்குழல் பலரிடம் இருக்கிறது, மிகவும் நன்றாகவே வாசிக்கிறார்கள். இதில் புல்லாங்குழலின் விசயம் இல்லை. ஸ்ரீமத் ஒரு தந்தை தான் கொடுக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணருக்குள் இந்த ஞானம் இருக்கவே இல்லை. இந்த சகஜ ராஜயோகமும் ஞானமும் அவருக்குள் இல்லவே இல்லை. அவர் ராஜயோகத்தைக் கற்றுத்தரவில்லை. அவர் தந்தை மூலம் ராஜயோகத்தைக் கற்றுக் கொண்டார். எவ்வளவு பெரிய விசயமாகும். எதுவரை குழந்தையாக ஆகவில்லையோ அதுவரை புரிந்து கொள்ள முடியாது. மேலும் இதில் ஸ்ரீமத்படி நடக்க வேண்டிய விசயம் உள்ளது. தனது வழிப்படி நடப்பதன் மூலம் உயர்பதவி அடைய முடியாது. யார் தந்தையை அடைகின்றனரோ அவர்கள் தந்தையின் அறிமுகத்தை பிறருக்கும் கொடுப்பார்கள். தந்தை மற்றும் படைப்பின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பிறருக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வில்லை என்றால் தனக்கே தெரியவில்லை என்று அர்த்தமாகும். தனக்கு போதை ஏறியுள்ளது என்றால் பிறருக்கும் போதை ஏற்ற வேண்டும். நல்லது

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஸ்ரீமத் படி எப்போதும் உயர்ந்த கர்மங்களையே செய்ய வேண்டும். பிறர் வழியின் (பரமத்) தாக்கத்தில் வரக்கூடாது. நல்ல குழந்தைகளாகி அனைத்து கட்டளைகளையும் பின்பற்ற வேண்டும். எந்த விசயம் புரியவில்லையோ, அதை கண்டிப்பாக கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

2. நாம் இந்த பழைய சரீரத்தை விட்டுவிட்டு இளவரசன் ஆகப்போகிறோம் என்ற குஷி மற்றும் போதையிலேயே இருக்க வேண்டும். போதையில் இருந்தபடி ஈஸ்வரிய சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:
நிந்தனை செய்பவரையும் தன்னுடைய நண்பர் என உணர்ந்து மதிப்பளிக்கக் கூடிய பிரம்மா பாபாவுக்கு சமமான மாஸ்டர் படைப்பவர் ஆகுக.

எப்படி பிரம்மா பாபா தம்மை உலக சேவாதாரி எனப் புரிந்து கொண்டு, ஒவ்வொருவருக்கும் மதிப்பளித்தார். சதா மாலேகம் சலாம் சொன்னார். இவர் மதிப்பளித்தால் நான் மதிப்பளிப்பேன் என்று அது போல் ஒரு போதும் யோசித்ததில்லை. நிந்தனை செய்பவரையும் தம் நண்பராகப் புரிந்து கொண்டு மதிப்பளித்தார். அது போல் தந்தையைப் பின்பற்றுங்கள். மதிப்புக் கொடுப்பவரை மட்டும் தன்னுடையவர் எனப் புரிந்து கொள்ளாமல், நிந்தனை செய்பவரையும் தன்னுடையவர் எனப் புரிந்து மதிப்புக் கொடுங்கள். ஏனென்றால் முழு உலகமுமே உங்கள் பரிவாரம். சர்வ ஆத்மாக்களுக்கும் (மரத்தின்) தண்டாக (அடிப்படை-அஸ்திவாரம்) இருப்பவர்கள் பிராமணர்களாகிய நீங்கள். எனவே தன்னை மாஸ்டர் படைப்பவர் எனப் புரிந்து கொண்டு, அனைவருக்கும் மதிப்புக் கொடுங்கள். அப்போது தேவதை ஆவீர்கள்.

சுலோகன்:
மாயாவுக்கு சதா காலத்துக்குமாக விடை கொடுப்பவர் தாம் பாபாவின் வாழ்த்துகளுக்கு உரியவர் ஆவார்.