08.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே - ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு தான் உண்மையிலும்-உண்மையான சங்கமம் அல்லது கும்பமாகும், இந்த சந்திப்பின் மூலம் தான் நீங்கள் தூய்மையாக ஆகின்றீர்கள், நினைவு சின்னத்தில் பிறகு அந்த மேளாவை கொண்டாடுகிறார்கள்.

 

கேள்வி:-

குழந்தைகளாகிய உங்களிடத்தில் எந்த விஷயத்தின் அதிக புத்திசாலிதனம் வேண்டும்?

 

பதில்:-

ஞானத்தின் என்ன நுணுக்கமான விஷயங்கள் இருக்கிறதோ, அவற்றை புரியவைப்பதற்கு மிகுந்த புத்திசாலித்தனம் வேண்டும். யுக்தியாக ஞானமார்க்கம் மற்றும் பக்திமார்க்கத்தை நிரூபிக்க வேண்டும். எப்படி எலி ஊதி பிறகு கடித்து விடுகிறதோ அதுபோல் சேவையின் யுக்தியை உருவாக்க வேண்டும். கும்ப மேளாவில் கண்காட்சி வைத்து நிறைய ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாவதற்கான யுக்தியை சொல்ல வேண்டும்.

 

பாட்டு:-

இந்த பாவமான உலகத்திலிருந்து....................

 

ஓம் சாந்தி.

பாபா வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், பாவம் நிறைந்த உலகத்தை கலியுகம், தூய்மையற்ற, கீழான உலகம் என்று சொல்லப்படுகிறது, மேலும் புண்ணிய உலகத்தை சத்யுக, தூய்மையான, உயர்ந்த உலகம் என்று சொல்லப்படுகிறது. பரம் ஆத்மா தான் வந்து புண்ணியாத்மா, தூய்மையான ஆத்மா அல்லது புண்ணிய உலகத்தை உருவாக்குகின்றார். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபாவை மனிதர்கள் அழைக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தூய்மையாக இல்லை. ஒருவேளை தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குவது கங்கை அல்லது திரிவேணி என்றால் பிறகு ஏன் ஹே! தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரே! வாருங்கள் என்று அழைக்கிறார்கள்? கங்கையோ அல்லது திரிவேணியோ இருக்கவே இருக்கிறது, அவை இருந்தும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் புத்தி பரமாத்மாவின் பக்கம் செல்கிறது. பரமபிதா பரமாத்மா யார் ஞானக்கடலாக இருக்கின்றாரோ அவர் வர வேண்டும். வெறும் ஆத்மா கிடையாது, ஆனால் தூய்மையான ஜீவாத்மா என்று சொல்லப்படும். இப்போது தூய்மையான ஜீவாத்மாக்கள் யாரும் இல்லை. தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா வருவதே எப்போது சத்யுக தூய்மையான உலகம் ஸ்தாபனை செய்ய வேண்டுமோ மற்றும் கலியுக உலகத்தை வினாசம் செய்ய வேண்டுமோ அப்போது தான் ஆகும். கண்டிப்பாக சங்கமயுகத்தில் தான் வருவார். சங்கமத்தை கும்பம் என்றும் சொல்கிறார்கள். திரிவேணி சங்கமத்தின் பெயரை கும்பம் என்று வைத்து விட்டார்கள். மூன்று நதிகளும் ஒன்றாக கலக்கிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் இரண்டு நதிகள் தான் இருக்கின்றன. மூன்றாவது நதி மறைமுகமாக இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்கள். இந்த கும்பமேளாவின் மூலம் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக ஆவார்களா என்ன? தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் கண்டிப்பாக வர வேண்டும். அவர் தான் ஞானக்கடல் ஆவார். தூய