09-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

காட்லி ஃபேமிலியின் (ஈஸ்வரிய இறை குடும்பத்தின்) அதிசயமான திட்டம் என்ன?

பதில்:

ஈஸ்வரிய இறை குடும்பத்தின் திட்டமாவது - குடும்ப கட்டுப்பாடு செய்வது. ஒரு சத்திய தர்மத்தின் ஸ்தாபனை செய்து அநேக தர்மங்களின் விநாசம் செய்வது. மனிதர்கள் குடும்ப கட்டுப் பாட்டிற்கான திட்டங்கள் வருகிறார்கள். அவர்களுடைய திட்டங்கள் செயல்பட முடியாது என்று தந்தை கூறுகிறார். நான் தான் புது உலகத்தின் ஸ்தாபனை செய்கிறேன். அப்பொழுது மற்ற அனைத்து ஆத்மாக்களும் மேலே வீட்டிற்குச் சென்று விடுகிறார்கள். மிகவுமே குறைவான ஆத்மாக்கள் தான் இருப்பார்கள்.

ஓம் சாந்தி. இது வீடாகவும் உள்ளது மற்றும் பல்கலை கழகமும் ஆகும். மேலும் ஸ்தாபனமும் ஆகும். அவர் சிவபாபா ஆவார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள், ஆத்மாக்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மாக் கள் சாலிகிராமங்கள் ஆகும். இது அவர்களுடைய சரீரங்கள் ஆகும். என்னுடைய ஆத்மா என்று சரீரம் கூறாது. என்னுடைய சரீரம் என்று ஆத்மா கூறுகிறது. ஆத்மா அழியாததாகும். சரீரம் அழியக் கூடியதாகும். இப்பொழுது நீங்கள் தங்களை ஆத்மா என்று உணர்ந்துள்ளீர்கள். நம்முடைய பாபா சிவன் ஆவார். அவர் சுப்ரீம் ஃபாதர் ஆவார். அவர் நமது சுப்ரீம் பாபாவும் ஆவார். சுப்ரீம் ஆசிரியரும் ஆவார்.சுப்ரீம் குருவும் அவரே என்பதை ஆத்மா அறிந்துள்ளது. பக்தி மார்க்கத்தில் கூட ஓ காட் ஃபாதர் என்று அழைக்கிறார்கள். இறக்கும் தறுவாயில் கூட ஹே பகவான்! ஹே ஈசுவரா! என்று கூறுகிறார் கள். முறையிடுகிறார்கள் அல்லவா? ஆனால் யாருடைய புத்தியிலும் சரியான முறையில் பதிவது இல்லை. அனைத்து ஆத்மாக்களுக்கும் அவர் ஒருவரே தந்தை. பிறகு ஹே பதீத பாவனரே என்று கூறப்படுகிறது. எனவே குரு கூட ஆகி விட்டார். கூறுகிறார்கள் - துக்கத்திலிருந்து நம்மை விடுவித்து சாந்தி தாமத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று. எனவே தந்தையும் ஆகிறார். பிறகு பதீத பாவன சத்குருவும் ஆகிறார். பிறகு சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது, மனிதர்கள் எப்படி 84 பிறவிகள் எடுக் கிறார்கள் என்ற எல்லையில்லாத சரித்திரம் பூகோளத்தை கூறுகிறார். எனவே சுப்ரீம் ஆசிரியரும் ஆகிறார். அஞ்ஞான காலத்தில் தந்தை தனி, ஆசிரியர் தனி, குரு தனியாக இருப்பார்கள். இவர் எல்லையில்லாத தந்தை, ஆசிரியர், குரு ஒரே ஒருவர் ஆவார். எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது. எல்லையில்லாத தந்தை. குழந்தைகளுக்கு எல்லையில்லாத ஆஸ்தி அளிக்கிறார். அவர் களும் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை அளிக்கிறார்கள். கல்வி கூட எல்லைக்குட்பட்டதாகும். உலக சரித்திரம், பூகோளம் பற்றி யாருக்குமே தெரியாது. இலட்சுமி நாராயணர் இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. எவ்வளவு காலம் அந்த இராஜ்யம் நடந்தது. பிறகு திரேதாவின் இராமர் சீதை எவ்வளவு காலம் ஆட்சி புரிந்தார்கள்? ஒன்றுமே தெரியாது. இப்பொழுது எல்லையில்லாத தந்தை நமக்கு கற்பிக்க வந்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். மீண்டும் பாபா சத்கதிக்கான வழியைக் கூறுகிறார். நீங்கள் 84 பிறவிகள் எடுத்து எடுத்து தூய்மை இழந்து உள்ளீர்கள். இப்பொழுது தூய்மை ஆக வேண்டும். இது தமோபிரதான உலகம் ஆகும். சதோ, ரஜோ, தமோவில் ஒவ்வொரு பொருளும் வருகிறது. இந்த சிருஷ்டிக்குக் கூட ஆயுள் இருக்கிறது. புதியதிலிருந்து பழையதாக பிறகு பழையதே மீண்டும் புதியதாக ஆகிறது. இதை அனைவரும் அறிந்துள்ளார்கள். சத்யுகத்தில் பாரதம் தான் இருந்தது. அதில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. காட், காடெஸ்-ன் (தேவி தேவதைகள்) இராஜ்யம் இருந்தது. நல்லது, பிறகு என்ன ஆயிற்று. அவர்கள் மறுபிறவி எடுத்தார்கள். சதோபிரதான நிலையிலிருந்து சதோ, சதோவிலிருந்து ரஜோ, தமோவில் வந்தார்கள். இத்தனை இத்தனை பிறவிகள் எடுத்தார்கள். பாரதத்தில் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருக்கும்பொழுது அங்கு மனிதர்களின் ஆயுள் சராசரி 125-150 வருடங்களாக இருக்கும். அதற்கு அமரலோகம் என்று கூறப்படுகிறது. அகால மரணம் ஒரு பொழுதும் ஏற்படுவது இல்லை. இது மரண உலகம் ஆகும். அமரலோகத்தில் மனிதர்கள் அமரராக இருப்பார்கள். நீண்ட ஆயுள் இருக்கும். சத்யுகத்தில் தூய்மையான கிருஹஸ்த ஆசிரமம் இருந்தது. வைஸ்லெஸ் வர்ல்டு, நிர்விகாரி உலகம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது இருப்பது விகாரி உலகம். நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைக்கிறது. இவர் தாதா, அவர் பாட்டனார். ஆஸ்தி பாட்டனாருடையது கிடைக்கிறது. பாட்டனாரின் சொத்து மீது எல்லோருக்கும் உரிமை இருக்கும். பிரம்மாவிற்கு பிரஜாபிதா என்று கூறப்படுகிறார். ஆடம் ஈவ், ஆதாம் பீபீ - அவர் நிராகாரமான காட்ஃபாதர். இவர் (பிரஜா பிதா) சாகாரி தந்தை ஆவார். இவருக்கு தனக்கென்று உடல் உள்ளது. சிவபாபாவிற்கு தனக்கென்று உடல் கிடையாது. எனவே உங்களுக்கு சிவபாபாவிடமிருந்து பிரம்மா மூலமாக ஆஸ்தி கிடைக்கிறது. பாட்டனாரின் சொத்து தந்தை மூலமாக கிடைக்கும் அல்லவா? சிவபாபா மூலமாகக் கூட நீங்கள் பிரம்மா மூலமாக மீண்டும் மனிதனிலிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். மனிதனிலிருந்து தேவதையாக ஆக்கினார்.. யார் ஆக்கியது? பகவான். கிரந்தத்தில் மகிமை செய்கிறார்கள் அல்லவா? மகிமை நிறைய உள்ளது. எப்படி அல்ஃப் - தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பே - அரசாட்சி உங்களுடையது என்று தந்தை கூறுகிறார். குருநானக் கூட தலைவனை ஜபித்தால் சுகம் கிடைக்கும் என்று கூறுகிறார். அந்த நிராகாரமான அகால மூர்த்தி தந்தையைத் தான் மகிமை பாடுகிறார்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் சுகம் கிடைக்கும் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது தந்தையைத் தான் நினைவு செய்கிறார்கள். சண்டை முடிந்த உடன் பிறகு இலட்சுமி நாராயணரின் இராஜ்யத்தில் ஒரே ஒரு தர்மம் இருக்கும். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். பகவானுவாச- பதீத பாவனர், ஞானக் கடல் என்று பகவானுக்கு கூறப்படுகிறது. அவரே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் ஆவார். நாம் தந்தையின் குழந்தைகளாக இருக்கிறோம் என்றால் அவசியம் நாம் சுகத்தில் இருக்க வேண்டும். உண்மையில் பாரதவாசிகள் சத்யுகத்தில் இருந்தார்கள். மற்ற எல்லா ஆத்மாக்களும் சாந்திதாமத்தில் இருந்தார்கள். இப்பொழுது அனைத்து ஆத்மாக்களும் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பிறகு நாம் போய் தேவி தேவதை ஆகிவிடுவோம். சொர்க்கத்தில் அவரவர் பாகத்தில் நடிப்போம். இந்த பழைய உலகம் துக்க தாமம் ஆகும். புதிய உலகம் சுகதாமம் ஆகும். பழைய வீடாக ஆகி விட்டால் பின் அதில் எலி, பாம்பு ஆகியவை வெளிப்படுகின்றன. இந்த உலகம் கூட அவ்வாறே ஆகும் .இந்த கல்பத்தின் ஆயுள் 5 ஆயிரம் வருடங்கள் ஆகும். இப்பொழுது முடிவு ஆகும். காந்தியடிகள் கூட புது உலகம் புது டில்லி ஆக வேண்டும். இராம இராஜ்யம் வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இது தந்தை யினுடைய காரியமே ஆகும். தேவதைகளின் இராஜ்யத்திற்கு தான் இராம இராஜ்யம் என்று கூறு கிறார்கள். புது உலகத்திலோ அவசியம் இலட்சுமி நாராயணரினுடைய இராஜ்யம் இருக்கும். முதலில் இராதை கிருஷ்ணர் இருவரும் தனித்தனி ராஜ்யங்களில் இருப்பார்கள். பிறகு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பின் இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். அவசியம் இச்சமயத்தில் அப்பேர்ப்பட்ட உன்னத கர்மங்களைச் செய்திருக்கக் கூடும். தந்தை உங்களுக்கு கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத் தின் கதி பற்றி புரிய வைக்கிறார். இராவண இராஜ்யத்தில் மனிதர்கள் செய்யும் கர்மங்கள் விகர்மங் களாக ஆகி விடுகின்றன. சத்யுகத்தில் கர்மங்கள் அகர்மம் ஆகி விடுகிறது. கீதையில் கூட இருக்கிறது. ஆனால் பெயரை மாற்றி விட்டுள்ளார்கள். இது தவறு ஆகும். கிருஷ்ண ஜெயந்தி சத்யுகத்தில் இருக்கும். சிவன் நிராகார பரமபிதா ஆவார். கிருஷ்ணர் சாகார மனிதர் ஆவார்.முதலில் சிவஜெயந்தி ஆகிறது. பிறகு கிருஷ்ண ஜெயந்தி. பாரதத்தில் தான் இவைகளைக் கொண்டாடுகிறார்கள். சிவராத்திரி என்று கூறுகிறார்கள். தந்தை வந்து பாரதத்திற்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை அளிக்கிறார். சிவ ஜெயந்திக்குப் பிறகு இருப்பது கிருஷ்ண ஜெயந்தி, அதற்கு நடுவில் இருப்பது ராக்கி. ஏனெனில் தூய்மை வேண்டும். பழைய உலகத்தின் விநாசமும் வேண்டும். பிறகு சண்டை ஏற்பட்டு விடும் பொழுது எல்லாமே அழிந்து போய் விடுகிறது. பிறகு நீங்கள் வந்து புது உலகத்தில் ஆட்சி புரிவீர்கள். நீங்கள் இந்த பழைய உலகம், மரண உலகத்திற்காக படிப்பதில்லை. உங்களுடைய கல்வி இருப்பதே புது உலகம் அமரலோகத்திற்காக. அப்பேர்ப்பட்ட எந்த ஒரு கல்லூரியும் இருக்க முடியாது. இப்பொழுது தந்தை கூறுகிறார், இந்த மரண உலகத்தின் முடிவு ஆகும். எனவே சீக்கிரமாக படித்து புத்திசாலியாக வேண்டும். அவர் தந்தையும் ஆவார். பதீத பாவனரும் ஆவார். கற்பிக்கவும் செய்கிறார். எனவே இது காட்ஃபாதர்லி யுனிவர்சிட்டி ஆகும். பகவான் கூறுகிறார் அல்லவா? கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். அவரும் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறார். இச்சமயம் எல்லோரும் வருங்காலத்திற்காக ஆஸ்தி பெற்று கொண்டிருக்கிறார்கள். பிறகு எவ்வளவு படிப்பீர் களோ அந்த அளவிற்கு ஆஸ்தி கிடைக்கும். படிக்கவில்லை என்றால் பதவி குறைந்து போய் விடும். எங்கு இருந்தாலும் சரி படித்துக் கொண்டே இருங்கள். முரளி வெளிநாட்டிற்குக் கூட போக முடியும். பாபா தினமும் எச்சரிக்கையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். குழந்தைகளே தந்தையை நினைவு செய்யுங்கள். இதனால் உங்களுடைய விகர்மங்கள் விநாசம் ஆகி விடும். ஆத்மாவில் படிந்திருக்கும் துரு நீங்கிப் போய் விடும். ஆத்மா 100 சதவிகிதம் தூய்மையாக ஆக வேண்டி உள்ளது. இப்பொழுது தூய்மையற்று இருக்கிறது. பக்தியிலோ மனிதர்கள் நிறைய செய்கிறார்கள். தீர்த்தங்களுக்கு, மேளாக் களுக்கு (திருவிழா) லட்சக்கணக்கான மனிதர்கள் செல்கிறார் கள். இது ஜன்ம ஜன்மாந்திரமாக நடந்து கொண்டே வருகிறது. எத்தனை கோவில்களைக் கட்டு கிறார்கள். உழைப்பை கொடுக்கிறார்கள். பிறகும் படி இறங்கிக் கொண்டே வருகிறார்கள். இப்பொழுது நாம் முன்னேறும் கலையினால் சுகதாமத்திற்குச் செல்வோம். பிறகு நாம் இறங்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு கலைகள் குறைந்து கொண்டே போகின்றன. புதிய வீட்டினுடைய பகட்டு 10 வருடங்களுக்கு பிறகு அவசியம் குறைந்து போய் விடும். நீங்கள் புது உலகமான சத்யுகத்தில் இருந்தீர்கள். 1250 வருடங்களுக்கு பிறகு இராம இராஜ்யம் ஆரம்பமாகி விட்டது. இப்பொழுது முற்றிலுமே தமோபிரதானமாக உள்ளது. எத்தனை மனிதர்கள் ஆகி விட்டுள்ளார்கள். உலகம் பழையதாக ஆகி விட்டுள்ளது. அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு குழம்பிக் கொண்டே இருக்கிறார்கள். இது காட்ஃபாதரினுடைய காரியமாகும் என்று நாம் எழுதுகிறோம். சத்யுகத்தில் 9-10 லட்சம் மனிதர்கள் போய் இருப்பார்கள். மற்ற அனைவரும் தங்களது இனிமையான இல்லத்திற்கு சென்று விடுவார்கள். இது காட்லி பேமிலி பிளானிங் ஆகும். ஒரு தர்ம ஸ்தாபனை மற்ற அனைத்து தர்மங்களின் அழிவு. இது தந்தை தன்னுடைய வேலையை செய்து கொண்டருக்கிறார். அவர்கள் விகாரத்தில் தாரளமாக செல்லுங்கள். ஆனால் குழந்தை ஆக வேண்டாம் என்று கூறுகிறார்கள். இவ்வளவு செய்து செய்து ஆகப்போவது ஒன்றுமே கிடையாது. இந்த திட்டம் எல்லையில்லாத தந்தையின் கையில் உள்ளது. நான் தான் துக்க தாமத்தை சுகதாமமாக ஆக்க வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் நான் வருகிறேன். கலியுக முடிவு மற்றும் சத்யுக ஆரம்பத்திற்கு இடைப்பட்ட இது, சங்கமம் ஆகும். இப்பொழுது தான் பதீத உலகத்திலிருந்து பாவன உலகமாக மாறுகிறது. பழைய உலகத்தின் விநாசம் மற்றும் புது உலக ஸ்தாபனை - இது தந்தையினுடைய காரியம் ஆகும். சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருந்தது. இந்த இலட்சுமி நாராயணர் உலகத்தின் அதிபதியாக - மகாராஜா மகாராணியாக இருந்தார்கள். இதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த மாலை யாருடையதாக அமைக்கப் பட்டுள்ளது. மேலே இருப்பது மலரான சிவபாபா. பிறகு இருப்பது ஜோடி மணிகளான பிரம்மா சரஸ்வதி. யார் உலகத்தை நரகத்திலிருந்து சொர்க்கமாக பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக்கு கிறார்களோ அவர்களுடையது. இது மாலை ஆகும். யார் சேவை செய்து செல்கிறார்களோ, அவர்களுடையது தான் நினைவு இருக்கும். எனவே தந்தை புரிய வைக்கிறார் - இவர்கள் சத்யுகத்தில் தூய்மையாக இருந்தார்கள் அல்லவா? தூய்மையான இல்லற மார்க்கமாக இருந்தது. இப்பொழுது பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். பதீதபாவனரே வாருங்கள், வந்து எங்களை பாவனமாக் குங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். சத்யுகத்தில் இவ்வாறு அழைப்பார்களா என்ன? சுகத்தில் யாரும் தந்தையை நினைவு செய்வதில்லை. துக்கத்தில் எல்லோருமே நினைவு செய்கிறார்கள். தந்தை தான் லிபரேட்டர் - விடுவிப்பவர். கருணை கடல் ஆனந்த கடல், வந்து அனைவருக்கும் முக்தி, ஜீவன் முக்தி அளிக்கிறார். அவரைத் தான் அழைக்கிறார்கள். வந்து இனிமையான இல்லத்திற்குக் கூட்டிச் செல்லுங்கள். இப்பொழுது சுகம் இல்லை. இது குடியரசு இராஜ்யம் ஆகும். சத்யுகத்தில் ராஜா, ராணி, பிரஜைகள் இருப்பார்கள். நீங்கள் எப்படி உலகிற்கு அதிபதி ஆகிறீர்கள் என்பதை தந்தை கூறுகிறார். அங்கு உங்களிடம் ஏராளமான கணக்கற்ற செல்வம் இருக்கும். தங்கக் கற்களால் வீடுகள் அமைகின்றன. இயந்திரத்திலிருந்து தங்கக் கற்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். பிறகு அதில் கூட வைரங்கள் வைடூரியங்களைப் பதிக்கிறார்கள். துவாபரத்தில் கூட எவ்வளவு வைரங்கள் இருந்தன. அவற்றைக் கொள்ளை யடித்து எடுத்து சென்றார்கள். இப்பொழுது கொஞ்சம் கூட தங்கம் தெனபடுவது இல்லை. இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங் களுக்குப் பின்னரும் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். பழைய உலகத்தின் அழிவிற்காக இந்த அணு குண்டுகள் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன. இது விஞ்ஞானம் ஆகும். புத்தி மூலமாக எப்பேர்ப்பட்ட பொருட்களை எடுத்து வந்துள்ளார்கள் என்றால் அவற்றினால் தங்களுடைய குலத்தின் விநாசம் செய்வார்கள். இவைகளை சும்மா வைப்பதற்காக தயாரித்திருக்கிறார்களா என்ன? இது ஒத்திகை ஆகிக் கொண்டே இருக்கும். ராஜதானி ஸ்தாபனை ஆகாதவரை சண்டை ஏற்பட முடியாது. ஏற்பாடுகள் ஆகிக் கொண்டிருக்கின்றன. அதனுடன் கூடவே இயற்கை சேதங்களும் ஏற்படும். இத்தனை மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

இப்பொழுது குழந்தைகள் இந்த பழைய உலகத்தை மறந்து விட வேண்டும். மற்றபடி (ஸ்வீட் ஹோம்) இனிமையான இல்லம் சொர்க்க அரசாட்சியை நினைவு செய்ய வேண்டும். எப்படி புதிய வீடு அமைக்கிறார்கள் என்றால் பின்னர் புத்தியில் புதிய வீடு தான் நினைவு இருக்கும் அல்லவா? இப்பொழுது கூட புதிய உலகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தந்தை அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவார்.ஆத்மாக்கள் எல்லோருமே சென்று விடுவார்கள். மற்றபடி சரீரங்கள் இங்கேயே அழிந்து போய் விடும். ஆத்மா தந்தையின் நினைவினால் தூய்மை ஆகி விடும். அவசியம் தூய்மையாக வேண்டும். தேவதைகள் தூய்மையானவர்களாக ஆவார்கள் அல்லவா? அவர்களுக்கு சித்திரத்தின் முன்னால் புகையிலை, பீடி ஆகியவை (பூஜையின் போது) வைக்கப்படுவதில்லை. அவர்கள் வைஷ்ணவர்கள் ஆவார்கள். விஷ்ணுபுரி என்று கூறப்படுகிறது. அது இருப்பதே நிர்விகாரி உலகமாக. இது விகாரி உலகமாகும். இப்பொழுது நிர்விகாரி உலகத்திற்குச் செல்ல வேண்டும். நேரம் இன்னும் குறைவாக உள்ளது. இது சுயம் அவர்களுமே புரிந்துள்ளார்கள் - அணுகுண்டுகளினால் எல்லாமே அழிந்து போய் விடும். போர்கள் நிகழத் தான் போகிறது. நாங்கள் இந்த அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கு யாரோ எங்களைத் தூண்டுகிறார்கள் என்று கூறுகிறார்கள். தங்களுடைய குலத்தின் அழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் இருக்கிறார்கள். ஆனால் தயாரிக்காமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. சங்கர் மூலமாக அழிவு - இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. விநாசம் எதிரிலேயே உள்ளது. ஞான யக்ஞத்திலிருந்து இந்த விநாச ஜுவாலை கொழுந்து விட்டு எரிகிறது. இப்பொழுது நீங்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆவதற்காக படித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த பழைய உலகம் முடிந்து புதியதாக ஆகி விடும். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சரித்திரம் அவசியம் மீண்டும் நடைபெறும். முதலில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. பிறகு சந்திர வம்ச க்ஷத்திரிய தர்மம், அதற்கு பிறகு இஸ்லாமியர் பௌத்தியர் ஆகியோர் வந்தார்கள். பிறகு அவசியம் முதல் நம்பரிலுள்ளவர்கள் வருவார்கள். மற்ற எல்லோருமே அழிந்து போய் விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு யார் கற்பித்துக் கொண்டிருக்கிறார்? அவர் நிராகார சிவபாபா! அவரே ஆசிரியர் மற்றும் சத்குரு ஆவார். வந்த உடனேயே படிப்பை ஆரம்பிக்கிறார். எனவே சிவஜெயந்தியே கீதா ஜெயந்தி என்று எழுதப்பட்டுள்ளது. கீதா ஜெயந்தியே ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. சிவபாபா சத்யுகத்தை ஸ்தாபனை செய்கிறார். கிருஷ்ணபுரி என்று சத்யுகத்திற்குக் கூறப்படுகிறது. இப்பொழுது உங்களுக்குக் கற்பிப்பவர் எந்த ஒரு சாது சந்நியாசி அல்லது மனிதன் அல்ல. இவர் துக்கத்தை நீக்கி சுகம் அளிக்கும் எல்லையில்லாத தந்தை ஆவார். 21 பிறவிகளுக்கு உங்களுக்கு ஆஸ்தி அளிக்கிறார்.விநாசம் ஆகத் தான் போகிறது. இச்சமயத்திற்கு தான் கூறப்படுகிறது - ஒருவரது மண்ணோடு மண்ணாகிப் போய் விடலாம். மற்றொருவடையதை ராஜா எடுத்துக் கொள்ளலாம்.. .. .. திருடு கொள்ளைக் கூட ஏற்படலாம். நெருப்பு பற்றி எரித்து விடலாம். இந்த யக்ஞத்தில் எல்லாமே ஸ்வாஹா ஆகி விடும். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் நெருப்பு பிடிக்கும். பிறகு நின்று போய் விடும். இன்னும் சிறிது தாமதம் உள்ளது. எல்லோரும் தங்களுக்குள் சண்டையிடுவார்கள். விடுவிப்பவர் யாருமே இருக்க மாட்டார்கள். ரத்த ஆறுகளுக்கு பின்னால் பாலாறு பாயும். இதற்கு தான் வீணாக ரத்தம் பாயும் விளையாட்டு என்று கூறப்படுகிறது. குழந்தைகள் காட்சியும் பார்த்திருக்கிறார்கள். பிறகு இந்த கண்களாலும் பார்ப்பீர்கள். விநாசத்திற்கு முன்னதாக தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது தமோபிரதான நிலையிலிருந்து ஆத்மா சதோபிரதானமாக ஆகி விடும். தந்தை புதிய உலகத்தின் ஸ்தாபனை செய்வதற்காக உங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். முழுமையாக ராஜதானி ஸ்தாபனை ஆகி விடும் பொழுது பிறகு விநாசம் ஆகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. விஷ்ணுபுரியில் செல்வதற்கு சுயம் தங்களை தகுதியுடையவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். முழுமையாக தூய்மை ஆக வேண்டும். அசுத்தமான உணவு பழக்கங்களை தியாகம் செய்து விட வேண்டும். விநாசத்திற்கு முன்னதாக தங்களுடைய அனைத்தையும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.

2. சீக்கிரம் சீக்கிரமாக கல்வியைக் கற்று புத்திசாலி ஆக வேண்டும். எந்த ஒரு விகர்மமும் (பாவச் செயல்) ஆகாதிருக்க வேண்டும் என்ற கவனம் வைக்க வேண்டும்.

வரதானம்:

தியாகம் மற்றும் தபஸ்யை மூலமாக சேவையில் வெற்றி பெறக் கூடிய உண்மையான சேவாதாரி ஆவீர்களாக.

சேவையில் வெற்றிக்கான முக்கிய சாதனம் தியாகம் மற்றும் தபஸ்யை. தியாகம் என்றால் மனசா சங்கல்பத்தில் கூட தியாகம். எந்தவொரு சூழ்நிலையின் காரணமாக, நியமத்தின் (ஈஸ்வரிய மரியாதையின்) காரணமாக, வலுக்கட்டாயமாக தியாகம் செய்வது - இது தியாகம் அல்ல. ஆனால் ஞான சொரூபத்தால், சங்கல்பத்தின் அளவில் கூட தியாகி ஆகுங்கள் மேலும் தபஸ்வி என்றால் சதா தந்தையின் ஈடுபாட்டில் லயித்திருந்து ஞானம், அன்பு, ஆனந்தம், சுகம் மற்றும் அமைதியின் கடலில் மூழ்கி இருத்தல். அப்பேர்ப்பட்ட தியாகி தபஸ்வி தான் சேவையில் வெற்றி பெறக் கூடிய உண்மை யான சேவாதாரி ஆவார்கள்.

சுலோகன்:

தனது தபஸ்யை மூலமாக அமைதியின் (வைப்ரேஷன்) அதிர்வலைகளை பரப்புவது தான் உலக சேவாதாரி ஆவது ஆகும்.