09.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அவ்வப் பொழுது தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள், தந்தை ஆன்மீக மருத்துவர் உங்களை நோயற்றவர்களாக ஆக்குவதற்காக ஒரே ஒரு மருந்தை மட்டுமே தருகிறார் - குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்.

 

கேள்வி:

தனக்குத் தானே எவ்விதமாக பேசிக் கொண்டால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்?

 

பதில்:

தனக்குத் தானே பேசுங்கள் - இந்த கண்களால் என்னவெல்லாம் காண்கின்றோமோ அவையனைத்தும் அழியப் போகக் கூடியவை. அவ்வளவு தான் நாம் மற்றும் தந்தை மட்டுமே இருப்போம். இனிமையான தந்தை நம்மை சொர்க்கத்தின் எஜமானர்களாக உருவாக்குகிறார். இப்படியெல்லாம் பேசுங்கள். தனிமையில் சென்றீர்களென்றால் மிகுந்த குஷி ஏற்படும்.

 

ஓம் சாந்தி!

பரமபிதா சிவ பகவானுடைய வாக்கு: இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு புருஷோத்தம சங்கமயுகம் என்பது ஒவ்வொரு அடியிலும் நினைவில் இருக்க வேண்டும். இதையும் குழந்தைகள் நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள், அதுவும் வரிசைக்கிரமமாக. நாம் இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகத்தில் உத்தம புருஷர்களாக (ஆத்மாக்கள்) ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் நினைவிருக்கட்டும். இராவணனுடைய சிறை கூண்டிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக தந்தை வந்துள்ளார். எவ்வாறு ஒரு பறவையை கூண்டிலிருந்து விடுவிக்கப்படும்போது மிகுந்த குஷியுடன் பறந்து சென்று சுகத்தை அனுபவிக்கிறதோ அதுபோல. இது (கலியுகம்) இராவணனுடைய சிறை என்பது குழந்தைகள் உங்களுக்கும் தெரிந்ததே, இங்கே பலவித துக்கமே துக்கம் தான். இப்போது இந்த சிறையிலிருந்து விடுவிக்க தந்தை வந்துள்ளார். இங்கு மனிதர்கள் தான் உள்ளனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது, பிறகு தேவதைகள் வெற்றி அடைந்தனர் என்று சாஸ்திரங்களில் எழுதிவிட்டனர். இப்போது சண்டை என்ற விஷயமே கிடையாது. நீங்கள் இப்பொழுது அசுரராக இருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அசுர இராவணன் அதாவது 5 விகாரங்களின் மீது வெற்றி அடைகின்றீர்கள், இராவண சம்பிரதாயத்தின் மீதல்ல. 5 விகாரங்களைத் தான் இராவணன் என்று கூறப்படுகிறது. மற்றபடி யாரையும் கொளுத்துவது (எரிப்பது) முதலான விஷயமே கிடையாது. குழந்தைகள் நீங்கள் மிகுந்த குஷி அடைகின்றீர்கள். நாம் அதிக வெப்பமோ குளிரோ இல்லாத ஒரு உலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். அங்கே எப்போதுமே வசந்த காலமாகவே இருக்கும். சத்யுக சொர்க்கத்தின் வசந்தகாலம் இப்பொழுது வருகிறது. இங்குள்ள வசந்தகாலம் என்பது சிறிது காலத்திற்கானது. அங்குள்ள வசந்தகாலம் என்பது அரைக் கல்பத்திற்கு நீடிக்கும். அங்கு கோடை (வெப்பம் மிகுந்த) காலம் ஏற்படுவதில்லை. அதிக வெப்பத்தினாலும் கூட மனிதர்களுக்கு துன்பம் ஏற்படுகிறது. இறந்துவிடுகின்றனர். இம்மாதிரியான எல்லாவித துக்கமான விஷயங்களிலிருந்து விடுபடுவதற்கான அழிவற்ற ஆன்மீக மருத்துவர் எளிதான ஒரு மருந்தைத் தருகின்றார். அந்த (உலகாய) மருத்துவரிடம் சென்றோமானால் அநேக மருந்து மாத்திரைகள் முதலானவை நினைவிற்கு வரும். இந்த மருத்துவரிடம் வேறெந்த மருந்துமே கிடையாது. அவரை நினைவு செய்வதால் அனைத்துவித நோய்களும் வெளியேறிவிடுகின்றன, வேறெந்த மருந்து முதலானவை இல்லை.

 

குழந்தைகள் கூறி இருந்தனர், இன்று செமினார் (கருத்தரங்கு) செய்வோம் - சார்ட் எப்படி எழுத வேண்டும்? பாபாவை எவ்வாறு நினைவு செய்ய வேண்டும்? இதைப் பற்றி கலந்துரையாடல் செய்வோம். அமர்ந்து எழுதுங்கள் என்று இப்பொழுது பாபாவோ தொந்தரவு கொடுப்பதில்லை. காகிதத்தை வீணாக்க வேண்டிய அவசியமே இல்லை. பாபாவோ, புத்தியால் பாபாவை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் தான் கூறுகிறார். அஞ்ஞான காலத்தில் தந்தையை நினைவு செய்வதற்காக சார்ட் உருவாக்கியிருந்தோமா என்ன! இதில் எழுத, படிப்பதற்கான எந்த அவசியமும் இல்லை. பாபாவிடம் சொல்கின்றனர் - பாபா, நாங்கள் உங்களை மறந்து விடுகிறோம், இதை யாரேனும் கேட்டால் என்ன சொல்வார்கள்? நாங்கள் உயிருடன் இருந்து கொண்டே தந்தையினுடையவர் ஆகியிருக்கிறோம் என்றும் கூறுகின்றனர். ஏன் ஆகியிருக்கின்றனர்? பாபாவிடமிருந்து உலக இராஜ்யத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக!. பிறகு, அப்படிபட்ட தந்தையை மறப்பது ஏன்? அப்படிப்பட்ட தந்தை, அவரிடமிருந்து இவ்வளவு பெரிய ஆஸ்தி கிடைக்கிறது, அவரை உங்களால் நினைவு செய்ய முடியவில்லையா! எத்தனை முறை நீங்கள் ஆஸ்தியை அடைந்திருக்கிறீரகள்! இருந்தும் மறந்து விடுகின்றீர்களே! பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெற வேண்டுமென்றால், நினைவும் செய்ய வேண்டும், தெய்வீக குணத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். எழுத வேண்டியது என்ன? என்பதையோ ஒவ்வொருவரும் தனது உள்ளத்திடம் கேளுங்கள். நாரதரின் உதாரணமோ இருக்கிறது. அவர் சொன்னார், தான் பெரிய பக்தர் என்று. நீங்களும் தெரிந்திருக்கிறீர்கள் நாம் பிறவி பிறவிக்கான பழைய பக்தர்கள் என்று. நாங்கள் இனிமையான தந்தையை நினைவு செய்து எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! யார் எவ்வளவு நினைவு செய்கின்றனரோ, அவர்களே இலட்சுமி - நாராயணை மணமுடிக்கத் தகுதியுடையவர் ஆவார்கள். ஏழைக் குழந்தை எதுவேனும் செல்வந்தரால் தத்து எடுக்கப்பட்டால், எவ்வளவு குஷியடைகிறது! அக்குழந்தை அப்பாவையும் ஆஸ்தியையும் தான் நினைவு செய்கின்றது. ஆனால் இங்கோ, சிலருக்கு எல்லையில்லாத தந்தையின் குழந்தையாகிய பின்னும் இராஜ்யத்தைப் பெறுவதற்கான அறிவு இல்லாதவர்களாக நிறைய பேர் இருக்கின்றனர். விந்தையான விஷயம்! எந்த தந்தை சொர்க்கத்தின் அதிபதியாக்குகிறாரோ, அவரை நினைவு செய்ய முடியவில்லை! தந்தை குழந்தைகளை தத்து எடுக்கிறார். அப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்யாதிருப்பதோ, விந்தையான விஷயம்! அடிக்கடி பாபா மற்றும் ஆஸ்தி நினைவிற்கு வரவேண்டும்.

 

இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளே, உங்களை தத்தெடுத்துக் கொள்ளுமாறு என்னை அழைத்தீர்கள் அல்லவா? என தந்தை கூறுகிறார். தந்தை அழைக்கப்படுகிறார், தந்தை தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தருகின்றார். பாபா, வந்து தூய்மையிழந்த எங்களை தங்கள் மடியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைக்கவும் செய்தீர்கள். நீங்களே கூறிக் கொண்டீர்கள் நாங்கள் தூய்மையற்றவர்கள், ஏழைகள், மோசமானவர்கள், ஒரு பைசாவுக்குக் கூட மதிப்பில்லா தவர்கள் என்று. எல்லையற்ற தந்தையை பக்தி மார்க்கத்தில் அழைத்துக் கொண்டே இருந்தீர்கள். பக்தி மார்க்கத்தில் கூட இந்தளவு துக்கம் இருந்ததில்லை. இப்பொழுது மனிதர்களுக்கு எவ்வளவு துக்கம் உள்ளது. தந்தை வந்துள்ளார் என்றால் விநாசத்தின் சமயம் ஆகியுள்ளது என்று அர்த்தம். சண்டைக்குப் பிறகு எத்தனை பிறவிகள், எத்தனை வருடங்கள், சண்டை என்ற பெயரே இருக்காது உங்களுக்குத் தெரியும். ஒருபோதும் சண்டை என்பதே ஏற்படாது. துக்கம், வியாதி முதலிய பெயரே இருக்காது. இப்பொழுது எத்தனையோ வியாதிகள். தந்தை சொல்கின்றார், குழந்தைகளே உங்கள் அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிப்பேன் என்று. பகவானே! வந்து துக்கத்தைப் போக்கி சுகம், சாந்தியைத் தாருங்கள் என்று நினைவும் செய்கின்றீர்கள். இந்த இரண்டையும் ஒவ்வொருவரும் வேண்டுகின்றனர். இங்கு அமைதியே இல்லை. அமைதிக்கான வழி கூறுபவர்களுக்கு பரிசும் கிடைக்கிறது. பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை அமைதி என்று எதற்குக் கூறப்படுகின்றது. என்று. அமைதி இனிமையான தந்தையைத் தவிர வேறு யார் மூலமாகவும் கிடைக்க முடியாது. இதைப் புரிய வைப்பதற்கு எவ்வளவு கடினமாக உழைக்கின்றீர்கள். இருந்தாலும் புரிந்து கொள்வதே இல்லை. வீணாக பைசாவை ஏன் செலவு செய்கின்றீர்கள்? என் அரசாங்கத்திற்கு நீங்கள் கடிதம் எழுதலாம். அமைதிக் கடலாக இருப்பவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே. அவர் தான் உலகில் அமைதியை ஸ்தாபனை செய்கின்றார். அரசின் தலைவர்களுக்கு நல்ல காகிதங்களில் உயர்ந்த தோரணையில் கடிதங்கள் எழுத வேண்டும். அது மாதிரியான காகிதங்களால் எழுதப்பட்ட கடிதங்களை அவர்கள் இது ஒருவேளை யாரோ ஒரு பெரிய மனிதர் எழுதியதாக இருக்குமென எண்ணுவார்கள். அதில் கூறுங்கள் - உலகத்தில் அமைதி என்று சொல்கின்றீர்கள், முன்பு எப்பொழுது இருந்தது, அது மீண்டும் எந்த விதத்தில் ஏற்படும்? எப்போதாவது இருந்திருக்கக் கூடும். ஆனால் நமக்குத் தெரியும், தேதி காலம் முதலானவற்றை உங்களால் எழுத முடியும். தந்தை தான் வந்து உலகத்தில் அமைதி, சுகத்தை ஸ்தாபனை செய்திருந்தார். அப்போது சத்யுகத்தின் சமயம். இலட்சுமி-நாராயணருடைய வம்சத்தின் அடையாளம். பிரம்மா மற்றும் பிராமணர்கள் உங்களுடைய பங்கைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முக்கியமான பாகம் பிரம்மாவினுடையது அல்லவா? அவர் தான் ரதமாகிறார். இந்த இரதத்தின் மூலமாக இத்தனை காரியங்களையும் செய்கிறார். இரதத்தின் பெயரே பத்மாபதம் பாக்கியசாலி இரதம். சிந்தனை செய்யுங்கள் - எவ்வாறு யாருக்கும் புரிய வைப்பது என்று. மனிதர்களுக்கு எவ்வளவு போதை உள்ளது! இப்போது அவர்களுக்கு நீங்கள் தந்தையின் அறிமுகத்தைத் தர வேண்டும். ஞானம், ஞானக்கடலாகிய தந்தையிடம் உள்ளது. அவர் எப்பொழுது வருகின்றாரோ அப்போது ஞானத்தை அளிப்பார். அது வரையிலும் வேறு யாராலும் ஞானத்தை அளிக்க முடியாது. பக்தர்கள் அனைவருமே பக்தி செய்து கொண்டு தான் உள்ளனர். ஆனால் ஞானம் ஒரு தந்தை மட்டுமே தருகின்றார். நிலையான ஞான சம்மந்தப்பட்ட புத்தகத்தை யாரும் உருவாக்குவதில்லை. ஞானத்தை காதால் மட்டுமே கேட்கப்படுகிறது. புத்தகமாக எதை வைத்துள்ளீர்களோ அது தற்காலிகமானது. இதுவும் கூட அழியக்கூடியது. நீங்கள் எழுதிக் கொள்கின்ற குறிப்புகளும் அழியக் கூடியவையே. அது முயற்சி செய்வதற்காக தேவையானது மட்டுமே. தலைப்புகளின் பட்டியல் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள் அப்போது நினைவில் புதுப் புது கருத்துக்கள் (பாயின்ட்ஸ்) வரக்கூடும், ஆனால் இந்த புத்தகம் முதலியன எதுவுமே இருக்காது என்று தந்தை கூறுகிறார். உங்கள் புத்தியில் நினைவு மட்டுமே (தங்கி) இருக்கும். ஆத்மா தந்தையைப் போன்று நிறைவு பெறுகிறது. மற்றபடி இந்த கண்களால் பார்க்கின்ற பழைய பொருட்கள் அனைத்துமே இல்லாமல் போய்விடும். கடைசியில் எதுவுமே இருக்காது.

 

தந்தை அழிவற்ற மருத்துவர். ஆத்மாவும் அழிவற்றது. ஒரு சரீரத்திலிருந்து விடுபட்டு மற்றொன்றில் பிரவேசமாகிறது. ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற சரீரம் எதுவானாலும் மோசமானது தான் (சீ..சீ..) நாம் மிகவும் உயர்வானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பது குழந்தைகள் உங்களுக்குத் தெரியும். தந்தை தான் அவ்வாறு உருவாக்குகின்றார். சாது-சந்நியாசிகள் உருவாக்குவதில்லை. தந்தை உயர்வானவர்களாக ஆக்குகின்றார். பாபா சொல்கின்றார் - குழந்தைகளே! நான் என் கண்களில் வைத்து அழைத்துச் செல்வேன் என்று. ஆத்மாவும் இங்கு கண்களில் அமர்ந்திருக்கிறது. ! ஆத்மாக்களே! உங்களை திருப்தியடையச் செய்து திரும்ப அழைத்துச் செல்வேன் என்று தந்தை கூறுகின்றார். இன்னும் சிறிது காலமே உள்ளது. இப்போது கடினமாக உழையுங்கள் (முயற்சி). நான் இனிமையான தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கிறேன் என்று உங்கள் மனதைக் கேளுங்கள். ஹீர்-ரான்ஜாவுக்கு - (காதலர்கள்) விகாரத்திற்கான அன்பு இருக்கவில்லை. சரீர ரீதியான அன்பு இருந்தது. நினைவு செய்து கொண்டிருந்தனர். பிறகு எதிரில் வந்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்தனர். பாபா கூறுகிறார் :-நீங்களும் அப்படியே செய்யுங்கள். அது ஒரு பிறவிக்கான பிரியதர்ஷினி-பிரியதர்ஷன், நீங்கள் பல ஜன்மங்களானவர்கள். இந்த விஷயங்கள் தற்காலத்திற்காக நடைபெறுகிறது. பிரியதர்ஷினி-பிரியதர்ஷன் என்பது சொர்க்கத்தில் இல்லை. அவர்கள் தூய்மையாக உள்ளனர். மனதில் தான் நினைவு வருகிறது. நேராக பார்க்கின்றனர் மற்றும் மகிழ்ச்சி அடைகின்றனர். குழந்தைகள் உங்களுக்கு பார்ப்பதற்கு எந்த பொருளும் இல்லை. இச்சமயத்தில் உங்களை ஆத்மா எனப் புரிந்து பிரியதர்ஷனாகிய தந்தையை நினைவு செய்யுங்கள். ஆத்மா என உணர்ந்து தந்தையை மிகுந்த குஷியுடன் நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பிரியதர்ஷனியாக இருந்து பிரியதர்ஷனிடம் பலியாகி (அர்ப்பணமாகி) இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். ! பிரியதர்ஷனே! நீங்கள் வந்தீர்களானால் நாங்கள் உங்களிடம் சமர்ப்பணம் (வாரிசு) ஆகிவிடுவோம் என்று கூறி வந்தீர்கள். அப்போது அனைவரையும் வெண்மையாக்குவதற்காக (தூய்மையாக்க) பிரியதர்ஷன் வந்து விட்டார். யார் எப்படியிருந்தாலும் அவர்களை அதுபோல மாற்றுவதற்கான முயற்சி செய்கின்றார். நீங்கள் வெண்மையானீர்களானால் சரீரமும் கூட வெண்மையாகிவிடும். ஆத்மாவில் தான் கறைப்படிகிறது. இப்போது என்னை நினைவு செய்தீர்கள் என்றால் கறை (துரு) நீங்கிவிடும். குழந்தைகள் நீங்கள் இங்கு வருகின்றீர்கள், ஏகாந்தம் மிக நன்றாக இருக்கிறது. பாதிரியார்கள் கூட நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, முழு அமைதியில் இருக்கின்றனர். கையில் மாலையை வைத்துக் கொள்கிறார்கள், யாரையும் பார்ப்பது கூட இல்லை. மெதுவாக நடந்து செல்வார்கள். அவர்கள் கிறிஸ்துவை நினைவு செய்து கொண்டே இருப்பார்கள். தந்தையைப் பற்றி அறிந்து கொள்ளவே இல்லை. பெயர்-உருவத்திற்கு அப்பாற்பட்டவர் என என்னைப் பற்றி கூறிவிட்டனர். புள்ளி வடிவமானவர் என்றால் பாப்பார்களா என்ன! புள்ளியை எப்படி நினைவு செய்ய முடியும்? யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்கு இப்போது தெரிந்துள்ளதால் இங்கு வருகின்றீர்கள். மதுபன்னுக்கு மகிமை உண்டு. நீங்கள் வருகின்ற இந்த தீர்த்தம் தான் உண்மையிலும் உண்மையான மதுபன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனிமையில் அமர்ந்து நினைவில் இருக்கவும். வேறு யாரையுமே பார்க்க வேண்டாம். அதிகாலையில் பாபா நினைவில் மேற்கூரைக்குச் (மொட்டை மாடி) செல்லுங்கள், மிகுந்த குஷி உண்டாகும். இரவில் ஒன்று அல்லது இரண்டு மணி அளவில் விழித்தெழ முயற்சி செய்யுங்கள். உறக்கத்தை வெல்லக்கூடிய நீங்கள் பெயர் (புகழ்) பெற்றவர்கள். இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்லுங்கள். பிறகு ஒன்று-இரண்டு மணி அளவில் எழுந்து மேல் மாடிக்குச் சென்று நினைவு யாத்திரையில் ஈடுபடுங்கள். நிறைய சேமிக்க வேண்டும். தந்தையை நினைவு செய்து கொண்டே தந்தையின் மகிமையில் மூழ்கிவிடுங்கள். ஒருவருக்கொருவர் இடையேயும் கூட இந்த வழியைக் கடைபிடியுங்கள். பாபா எவ்வளவு இனிமையானவராக உள்ளார், அவரை நினைவு செய்வதால் தான் பாவங்கள் கழியும். இங்கே நிறைய சேமிக்க முடியும் (புண்ணிய கணக்கு). உங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. வீட்டில் இதை நீங்கள் செய்ய முடியாது. அங்கே உங்களுக்கு ஓய்வு எங்கே கிடைக்கும்? உலகத்தில் வாயுமண்டலம், சீதோஷ்ண நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கே இந்தளவு நினைவு யாத்திரையில் இருக்க முடியாது. இதைப் பற்றி எழுதுவதற்கான விஷயம் ஏதேனும் உள்ளதா என்ன! பிரியதர்ஷனி-பிரியதர்ஷன் எழுதுகின்றார்களா என்ன! மனதில் எண்ணிப் பாருங்கள், நாம் யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லை தானே? எவ்வளவு பேருக்கு நினைவூட்டினோம்? நாம் இங்கு வருவதே சேமிப்பதற்காக, எனவே இங்கேயே முயிற்சி செய்யுங்கள், மேல் மாடிக்குச் சென்று தனிமையில் அமருங்கள். கஜானாவை நிரப்புங்கள். சேமித்துக் கொள்வதற்கு இது தான் உகந்த சமயம். 7 நாட்கள், 5 நாட்கள் வருகின்றீர்கள், முரளியைக் கேட்டு பிறகு தனிமையில் அமருங்கள். இங்கு பாபா வீட்டில் அமர்ந்துள்ளீர்கள். தந்தையை நினைவு செய்தீர்களானால் உங்களுடைய வருமானம் ஓரளவு சேமிப்பாகும். நிறைய மாதர்கள் பந்தனத்தில் உள்ளனர். பந்தனத்திலிருந்து விடுவியுங்கள் என்று நினைவு செய்கின்றனர். விகாரத்திற்காக எவ்வளவு அடி வாங்குகிறார்கள். கதையில் சொல்கின்றனர் அல்லவா? திரௌபதியின் ஆடையை துகிலுரிந்தார்கள் என்று. நீங்கள் அனைவருமே திரௌபதிகள் தான். ஆகவே தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். பாபா நிறைய யுக்திகளை (வழிமுறைகளை)-க் கூறுகின்றார். இதில் (நதிகளில்) நீராடுவது போன்ற விஷயங்கள் இல்லை. ஆம்! கழிவறை (மலம்) போய் வந்தால் அவசியம் குளிக்க வேண்டும். மனிதர்கள் நீராடும் சமயங்களில் கூட ஏதோ ஒரு தேவதையையோ, பகவானையோ நினைவு செய்கின்றனர். முக்கியமான விஷயமே நினைவு தான். நிறையவே ஞானம் கிடைத்துள்ளது. 84 பிறவிகளின் சக்கரத்தினுடைய ஞானம் கிடைத்துள்ளது. உங்களுடைய ஆழ்மனதிற்குள் சென்று பாருங்கள். இப்படிப்பட்ட இனிமையிலும் இனிமையான தந்தை நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர் ஆக்குகின்றார், அவரை முழுநாளிலும் எவ்வளவு நினைவு செய்தோம் என்று தன்னைத் தானே கேளுங்கள். மனம் அலை பாய்வதில்லை தானே? எங்கே ஓட முடியும்? வேறு உலகம் என்பதே இல்லையே! இவையனைத்துமே அழியப் போகின்றது, நாம் மற்றும் தந்தை மட்டுமே இங்கு வசிப்போம். இது போன்று மனதிற்குள் பேசிக் கொண்டோமானால் மிகுந்த குஷி ஏற்படும். இங்கே யாரெல்லாம் வருகின்றார்களோ அவர்கள் மிகவும் பழமையான (நீண்டகால) பக்தர்கள் என புரிந்து கொள்ளுங்கள். வராதவர்கள் இன்றைய கால பக்தர்கள் என அறியவும். அவர்கள் காலம் கடந்து வருவார்கள். ஆரம்ப காலத்திலிருந்தே பக்தி செய்பவர்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய வருவார்கள். இதுவே மறைமுகமான முயற்சியாகும். யார் வழிமுறைகளைக் கடைபிடிப்பதில்லையோ அவர்களுக்கு முயற்சி என்பதே ஆகாது. நீங்கள் புத்துணர்வு அடையவே வருகின்றீர்கள். நீங்களாகவே முயற்சி செய்யுங்கள். இங்கே ஒரு வாரத்தில் எவ்வளவு செல்வத்தை சேமிக்கின்றீர்களோ அது வெளியில் 12 மாதங்களில் கூட ஆவதில்லை. இங்கு 7 நாட்களில் அனைத்து குறைகளையும் (பலவீனங்களை) வெறியேற்றிவிட முடியும். பாபா வழி சொல்கின்றார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தனிமையில் அமர்ந்து தந்தையை நினைவு செய்து வருமானத்தை சேமிக்க வேண்டும். தன் மனதிற்குள்ளாகவே சோதிக்க வேண்டும் - நினைவு செய்யும் சமயத்தில் மனம் வேறெங்கும் அலை பாய்வதில்லை தானே? நாம் எவ்வளவு நேரம் இனிமையான தந்தையை நினைவு செய்கிறோம்? என்று.

 

2. நம்மை பாபா இராவணனின் சிறையிலிருந்து விடுவித்துவிட்டார், இப்போது எங்கே அதிக வெப்பமோ, குளிரோ இல்லாத ஒரு புதிய உலகத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றோம் என்ற இதே குஷியில் சதா இருக்க வேண்டும். அங்கே எப்போதும் வசந்த காலமாகவே இருக்கும்.

 

வரதானம்:

ஆன்மீக குஷியின் மூலம் பழைய உலகத்தை மறக்க கூடிய சுயராஜ்யத்தின் மூலம் உலக இராஜ்ய அதிகாரி ஆகுக

 

எவரொருவர் சங்கமயுகத்தில் பாபாவின் ஆஸ்திக்கு அதிகாரியாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் சுயராஜ்யம் மற்றும் உலக இராஜ்ய அதிகாரி ஆகிறார்கள். யார் இன்று சுயராஜ்ய அதிகாரியாக இருக்கிறார்களோ, நாளை உலக இராஜ்ய அதிகாரியாக ஆகிறார்கள். இன்று மற்றும் நாளையின் விஷயமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரி ஆத்மாக்கள் ஆன்மீகக் குஷியில் இருக்கிறார்கள், மேலும் குஷி பழைய உலகத்தை எளிதாகவே மறக்க வைத்து விடுகிறது. அதிகாரியாக இருப்பவர்கள் ஒருபொழுதும் எந்தவித பொருட்களுக்கு, மனிதர்களுக்கு, சம்ஸ்காரத்திற்கு அடிமையாக முடியாது. அவர்கள் எல்லைக்குட்பட்ட விஷயங்களை விட வேண்டியிருக்காது, தானாகவே விடுபட்டுவிடும்.

 

சுலோகன்:

ஒவ்வொரு நொடி, ஒவ்வொரு சுவாசம், ஒவ்வொரு பொக்கிஷத்தையும் பயனுள்ளதாக ஆக்கக் கூடியவரே வெற்றி மூர்த்தி ஆவார்.

 

ஓம்சாந்தி