09.04.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

"இனிமையான குழந்தைகளே ! நீங்கள் சதோபிரதானம் ஆக வேண்டும் என்றால் பாபாவை அன்போடு நினைவு செய்யுங்கள், பாரஸ்நாத் (தங்கமாக மாற்றக் கூடியவர்) சிவபாபா உங்களை பாரஸ்புரிக்கு (சொர்க்கத்திற்கு) எஜமானர்களாக்குவதற்காக வந்திருக்கின்றார்"

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் எந்தவொரு தாரணையின் மூலமாக புகழுக்கு தகுதியானவர்களாக ஆகிவிடுவீர்கள்?

 

பதில்:

மிகமிக பணிவுடையவர்களாக ஆகுங்கள். எந்தவொரு விஷயத்தின் அகங்காரமும் இருக்கக் கூடாது. மிகவும் இனிமையாக ஆக வேண்டும். அகங்காரம் வந்தால் எதிரியாக ஆகி விடுகிறீர்கள். தூய்மையின் விஷயத்தின் மூலமாகத் தான் உயர்ந்தவர்களாக அல்லது கீழானவர்களாக ஆகின்றார்கள். தூய்மை இருக்கும்போது மரியாதை இருக்கிறது, தூய்மையற்ற நிலையில் இருக்கும்போது தான் அனைவருக்கும் தலை வணங்குகிறார்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். பாபாவும் நாம் இந்த குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றோம் என்று புரிந்து கொள்கிறார். பக்தி மார்க்கத்தில் அநேக பெயர்களில் பலவிதமான சித்திரங்கள் உருவாக்கி விடுகிறார்கள் என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. நேப்பாளில் பாரஸ்நாத்தை ஏற்றுக் கொள்வது போலாகும். அவருடைய மிகப்பெரிய கோவில் இருக்கிறது. ஆனால் எதுவும் இல்லை. 4 நுழைவாயில்கள் இருக்கின்றன, 4 மூர்த்திகள் இருக்கின்றன. நான்காவதில் கிருஷ்ணரை வைத்திருக்கிறார்கள். இப்போது எதையாவது மாற்றியிருக்கலாம். கண்டிப்பாக பாரஸ்நாத் என்று சிவபாபாவைத் தான் சொல்ல முடியும். மனிதர்களை பாரஸ்புத்தியுடையவர்களாகவும் அவர் தான் மாற்றுகின்றார். எனவே முதன் முதலில் அவர்களுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும் - உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், பின்னால் முழு உலகமும் இருக்கிறது. சூட்சுமவதனத்தின் உலகம் எதுவும் இல்லை. பின்னால் லஷ்மி- நாராயணன் அல்லது விஷ்ணு இருக்கின்றார். உண்மையில் விஷ்ணுவின் கோவில் கூட தவறாகும். விஷ்ணு நான்கு புஜங்களை (கைகள்) உடையவராக இருக்கின்றார், நான்கு புஜங்களையுடைய மனிதர்கள் யாரும் இருப்பதில்லை. பாபா புரிய வைக்கின்றார், இந்த லஷ்மி-நாராயணன் இருக்கிறார்கள் அல்லவா! இவர்களை ஒன்றாக்கி விஷ்ணுவின் ரூபத்தில் காட்டியிருக்கிறார்கள். லஷ்மி-நாராயணன் இருவரும் தனித்தனியானவர்களாக இருக்கிறார்கள். சூட்சுமவதனத்தில் விஷ்ணுவிற்கு 4 புஜங்களை காண்பித்து விட்டார்கள் அதாவது இருவரையும் சேர்த்து நான்கு புஜங்களாக்கி விட்டார்கள், மற்றபடி அப்படி இருப்பதில்லை. கோவிலில் நான்கு புஜங்களை காட்டுகிறார்கள் - அது சூட்சுமவதனத்தினுடையதாகும். நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்றவைகளை கொடுக்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. சக்கரம் கூட குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. நேப்பாளில் விஷ்ணுவின் பெரிய சித்திரத்தை பாற்கடல்

காட்டுகிறார்கள். பூஜை நாட்களில் கொஞ்சம் பாலை ஊற்றி விடுகிறார்கள். பாபா ஒவ்வொரு விஷயத்தையும் நல்ல விதத்தில் புரிய வைக்கின்றார். இப்படி வேறு யாரும் விஷ்ணுவின் அர்த்தத்தைப் புரிய வைக்க முடியாது. தெரியவே தெரியாது. இதை பகவான் அவரே புரிய வைக்கின்றார். சிவபாபாவைத் தான் பகவான் என்று சொல்லப்படுகிறது. இருப்பவர் ஒருவர் தான் ஆனால் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அனேக பெயர்களை வைத்து விட்டார்கள். இப்போது நீங்கள் அனேக பெயர்களைக் கூற மாட்டீர்கள். பக்தி மார்க்கத்தில் நிறைய ஏமாற்றம் அடைகிறார்கள். நீங்களும் அடைந்தீர்கள். இப்போது நீங்கள் ஒருவேளை கோவில் போன்றவற்றை பார்த்தீர்கள் என்றால் அதைப் பற்றி, உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், பரமாத்மா, நிராகார பரமபிதா பரமாத்மா, என்று புரிய வைப்பீர்கள். ஆத்மா சரீரத்தின் மூலமாக ' பரமபிதாவே" என்று கூறுகிறது. ஞானக்கடல் என்றும், சுகக்கடல் என்றும் அவருடைய மகிமை கூட இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் ஒருவருக்கு அனேக சித்திரங்கள் இருக்கின்றன. ஞான மார்க்கத்தில் ஞானக்கடல் ஒருவரே ஆவார். அவர் தான் பதீத-பாவனன், அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளலாக இருக்கின்றார். உங்களுடைய புத்தியில் முழு சக்கரமும் இருக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பரமாத்மா, நினைத்து நினைத்து சுகம் அடையுங்கள்; அதாவது ஒரு பாபாவையே நினைவு செய்யுங்கள் அல்லது சிந்தனை செய்து கொண்டே இருங்கள், அப்போது உடலின் சண்டை சச்சரவு, துன்பங்கள் நீங்கும், பிறகு ஜீவன் முக்தி பதவியை அடையுங்கள், இது ஜீவன் முக்தியல்லவா. பாபாவின் மூலம் இந்த சுகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. தனியாக இதை அடைய முடியாது. கண்டிப்பாக இராஜ்யம் இருக்கும் அல்லவா. பாபா இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார். சத்யுகத்தில் இராஜா, ராணி, பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள். நீங்கள் ஞானத்தை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் சென்று உயர்ந்த குலத்தில் பிறவி எடுப்பீர்கள். நிறைய சுகம் கிடைக்கிறது. எப்போது அது ஸ்தாபனை ஆகி விடுகிறதோ, அப்போது மோசமான ஆத்மாக்கள் தண்டனை அடைந்து திரும்பிச் சென்று விடுகின்றன. அவரவருடைய பிரிவில் சென்று நின்று விடும். இவ்வளவு அனைத்து ஆத்மாக்களும் வருவார்கள் பிறகு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலிருந்து எப்படி வருகிறார்கள், என்பது புத்தியில் இருக்க வேண்டும். ஒரு இலைக்கு பதிலாக 10 இலைகள் ஒன்றாக வர வேண்டும், என்பது கிடையாது. இல்லை, விதிப்படி இலைகள் வருகின்றன. இது மிகப்பெரிய மரமாகும். ஒரு நாளில் லட்சக்கணக்கானவர்களின் வளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது, என்று காட்டுகிறார்கள். முதலில், உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குபவர், துக்கத்தைப் போக்கி சுகத்தை அளிப்பவர் அவர் தான், என்பதை புரிய வைக்க வேண்டும். நடிகர்கள் யாரெல்லாம் துக்கம் அடைகிறார்களோ, வந்து அவர்கள் அனைவருக்கும் சுகம் கொடுக்கின்றார். துக்கத்தை கொடுப்பவன் இராவணன் ஆவான். பாபா வந்திருக்கின்றார், என்று மனிதர்களுக்குத் தெரியவில்லை, தெரிந்தால் தானே வந்து புரிந்து கொள்வார்கள். நிறைய பேர் புரிந்துக் கொள்கிறார்கள் பிறகு ஓடி விடுகிறார்கள். (வெளிய சென்று விடுகிறார்கள்) எவ்வாறு-குளித்துக் கொண்டிருக்கும் போதே கால்கள் வழுக்கி விடுகிறது, பிறகு தண்ணீருக்குள்ளே சென்று விடுவது போலாகும். பாபா அனுபவம் வாய்ந்தவர் அல்லவா. இது விஷக்கடலாகும். பாபா உங்களை பாற்கடலின் பக்கம் கொண்டு செல்கின்றார். ஆனால் மாயை எனும் முதலை நல்ல-நல்ல மகாரதிகளைக் கூட விழுங்கி விடுகிறது. வாழ்ந்து கொண்டிருக்கும் போதே பாபாவின் மடியில் இருந்து இறந்து இராவணனின் மடிக்கு சென்று விடுகிறார்கள் அதாவது இறந்து விடுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உயர்ந்ததிலும் உயர்ந்த பாபா இருக்கின்றார் பிறகு படைப்பை படைக்கின்றீர்கள். சூட்சும வதனத்தின் வரலாறு-புவியியல் ஒன்றும் இல்லை. நீங்கள் சூட்சுமச் வதனத்திற்கு செல்கின்றீர்கள், காட்சிகளைப் பார்க்கின்றீர்கள். அங்கே நான்கு புஜங்களுடையவரை பார்க்கின்றீர்கள். சித்திரங்களில் இருக்கிறது அல்லவா. எனவே அது புத்தியில் அமர்ந்திருக்கிறது, என்றால் கண்டிப்பாக காட்சி ஏற்படும். ஆனால் அப்படி எந்த பொருளும் இல்லை. இது பக்தி மார்க்கத்தின் சித்திரமாகும். இப்போது வரை பக்தி மார்க்கம் நடந்து கொண்டிருக்கிறது. பக்தி மார்க்கம் முடிந்தது என்றால் பிறகு இந்த சித்திரங்கள் இருக்காது. சொர்க்கத்தில் இந்த அனைத்து விஷயங்களையும் மறந்து விடுவீர்கள். இந்த இலஷிமி-நாராயணன் விஷ்ணுவின் இரண்டு ரூபம், என்பது இப்போது புத்தியில் இருக்கிறது. இலட்சுமி-நாராயணனின் பூஜை என்பது சதுர்புஜ விஷ்ணுவின் (நான்கு கைகள் கொண்ட) பூஜையாகும். இலட்சுமி-நாராயணனின் கோவில் என்றாலும் சதுர்புஜ விஷ்ணுவின்கோவில், என்றாலும் விஷயம் ஒன்றே ஆகும். இந்த இருவருடைய ஞானம் வேறு யாருக்கும் இல்லை. இந்த இலஷ்மி-நாராயணின் இராஜ்யம் இருக்கிறது, என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். விஷ்ணுவின் இராஜ்யம் என்று சொல்ல முடியாது. இவர்கள் பராமரிப்பும் கொடுக்கிறார்கள். முழு உலகத்தின் எஜமானர்கள் எனும்போது முழு உலகத்தின் பராமரிப்பும் செய்கிறார்கள்.

 

சிவ பகவானுடைய மகாவாக்கியம் - நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன். தன்னை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் இந்த யோக அக்னியின் மூலம் விகர்மங்கள் வினாசம் ஆகும். விரிவாக புரிய வைக்க வேண்டும். இது கீதை தான் என்று சொல்லுங்கள். கீதையில் கிருஷ்ணரின் பெயரை மட்டும் போட்டு விட்டார்கள். இது தவறாகும், அனைவரையும் நிந்தனை செய்து விட்டார்கள், ஆகையினால் பாரதம் தமோபிரதானம் ஆகி விட்டது. இப்போது கலியுக உலகத்தின் கடைசியாகும், இதனை தமோபிரதான கலியுகம், என்று சொல்லப்படுகிறது. யார் சதோபிரதானமாக இருந்தார் களோ, அவர்கள் தான் 84 பிறவிகள் எடுத்திருக்கிறார்கள். பிறப்பு-இறப்பில் கண்டிப்பாக வந்து தான் ஆக வேண்டும். எப்போது முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார்களோ, அப்போது பிரம்மாபாபா முதல் நம்பரில் வர வேண்டியுள்ளது. ஒருவருடைய விஷயம் இல்லை. இவருடைய முழு இராஜ்யமும் இருந்தது அல்லவா, மீண்டும் கண்டிப்பாக நடக்க வேண்டும். பாபா அனைவருக்கும் கூறுகின்றார், தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால், யோக அக்னியின் மூலம் பாவம் நீங்கி விடும். காம சிதையில் அமர்ந்து அனைவரும் கருப்பாகி விட்டார்கள். இப்போது கருப்பிலிருந்து வெள்ளையாக (தூய்மையாக) எப்படி ஆவது? அதை பாபா தான் கற்றுத்தருகின்றார். கிருஷ்ணரின் ஆத்மா கண்டிப்பாக வித-விதமான பெயர் ரூபங்களை எடுத்து வந்திருக்கும். யார் லட்சுமி-நாராயணனாக இருந்தார்களோ, அவர்கள் தான் 84 பிறவிகளுக்கு பிறகு இலஷ்மி-நாராயணனாக ஆக வேண்டும். எனவே அவருடைய நிறைய பிறவிகளின் கடைசியில் பாபா வந்து பிரவேசம் ஆகின்றார். பிறகு அவர் சதோபிரதானமாக உலகத்திற்கு எஜமானராக ஆகின்றார். உங்களில் பாரஸ்நாத்தையும் பூஜிக்கிறார்கள், சிவனையும் பூஜிக்கிறார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு சிவன் தான் அப்படி பாரஸ்நாத்தாக மாற்றியிருப்பார். டீச்சர் வேண்டும் அல்லவா. அவர் ஞானக்கடலாக இருக்கின்றார். இப்போது சதோபிரதான பாரஸ்நாத்தாக ஆக வேண்டும் என்றால் பாபாவை மிகவும் அன்போடு நினைவு செய்யுங்கள். அவர் தான் அனைவருடைய துக்கத்தையும் போக்கக் கூடியவர். பாபா சுகம் கொடுக்கக் கூடியவராவார். இது முட்கள் நிறைந்த காடாகும். மலர்கள் நிறைந்த தோட்டமாக மாற்றுவதற்கு பாபா வந்திருக்கின்றார். பாபா தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றார். நான் இந்த சாதாரண வயதானவரின் உடலில் பிரவேசம் ஆகின்றேன், அவர் தன்னுடைய பிறவிகளைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. பகவானுடைய மகாவாக்கியம் -- நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன். எனவே இது ஈஸ்வரிய பல்கலைக்கழமே ஆகும். குறிக்கோளே இராஜா-இராணி ஆவது தான் என்றால் பிரஜைகள் கண்டிப்பாக வருவார்கள். மனிதர்கள் யோகம்-யோகம் என்று நிறைய செய்கிறார்கள். சந்நியாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அனேக ஹடயோகங்கள் செய்கிறார்கள். அவர்கள் இராஜயோகம் கற்றுத் தர முடியாது. பாபாவின் யோகமே ஒரே முறையான யோகமாகும். தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், என்று மட்டும் கூறுகின்றார். 84 பிறவிகள் முடிந்திருக்கிறது, இப்போது திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது தூய்மையாக ஆக வேண்டும். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், மற்ற அனைத்தையும் விடுங்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் உங்கள் ஒருவரிடத்திலேயே தொடர்பை இணைப்போம், என்று பாடினீர்கள். எனவே கண்டிப்பாக அவரிட மிருந்து ஆஸ்தி கிடைத்திருந்தது அல்லவா? அரைக்கல்பம் சொர்க்கம், பிறகு நரகமாகும். இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது. இவ்வாறெல்லாம் புரிய வைக்க வேண்டும். தன்னை தேகம் என்று புரிந்து கொள்ளாதீர்கள். ஆத்மா அழிவற்றதாக இருக்கிறது. ஆத்மாவில் தான் அனைத்து நடிப்பும் அடங்கியுள்ளது, அதை நீங்கள் நடிக்கின்றீர்கள். இப்போது சிவபாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் துன்பம் விலகி விடும். சன்னியாசிகள் தூய்மையாகும் போது அவர்களுக்கு எவ்வளவு புகழ் ஏற்படுகிறது. அனைவரும் தலை வணங்குகிறார்கள். தூய்மையின் விஷயத்தில் தான் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் ஆகின்றனர். தேவதைகள் முற்றிலும் உயர்ந்தவர்களாவர். சன்னியாசிகள் ஒரு பிறவி தூய்மையாகிறார்கள், பிறகு அடுத்த பிறவியில் விகாரத்தின் மூலம் தான் பிறக்கிறார்கள். தேவதைகள் சத்யுகத்தில் தான் இருக்கிறார்கள். நீங்கள் இப்போது படிக்கின்றீர்கள் பிறகு படிப்பிக்கவும் செய்கிறீர்கள். சிலர் படிக்கிறார்கள், ஆனால் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியாது. ஏனென்றால் தாரணை ஆவதில்லை. பாபா சொல்வார், உங்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் பாபா என்ன செய்ய முடியும். ஒருவேளை பாபா அமர்ந்து கொண்டு அனைவருக்கும் ஆசீர்வாதம் செய்தால் அனைவரும் ஸ்காலர்ஷிப் (உதவி) பெற்று விடுவார்கள். அதையோ பக்தி மார்க்கத்தில் ஆசீர்வாதம் செய்கிறார்கள். சன்னியாசிகள் கூட அப்படி செய்கிறார்கள். அவர்களிடம் சென்று எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும், என்று ஆசீர்வாதம் செய்யுங்கள், என்று சொல்வார்கள். நல்லது, உங்களுக்கு ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். பெண் குழந்தை பிறந்தால் அது விதி, என்று சொல்வார்கள். ஆண் குழந்தை பிறந்தால் ஆஹா-ஆஹா என்று கால் விழுந்து கொண்டே இருப்பார்கள். நல்லது, ஒருவேளை இறந்து விட்டால் அழுது புலம்புவார்கள், குருவை திட்ட ஆரம்பித்து விடுவார்கள். குரு அப்படி விதி இருந்தது, என்று சொல்வார். முதலிலேயே ஏன் சொல்லவில்லை, என்று கேட்பார்கள். யாராவது இறந்தவர் உயிர் பெற்று விட்டால், இதுவும் விதி என்று தான் கூறுவார்கள். அது கூட நாடகத்தில் அடங்கியுள்ளது. ஆத்மா எங்காவது மறைந்து விடுகிறது. டாக்டர்களும் இவர் இறந்து விட்டார் என்று புரிந்து கொள்கிறார்கள், பிறகு உயிர் பெற்று விடுகிறார்கள். சிதையில் ஏற்றப்பட்டவர்கள் கூட எழுந்து விடுகிறார்கள். யாராவது ஒருவரை ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவருக்கு பின்னால் நிறைய பேர் சென்று விடுகிறார்கள்.

 

குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் பணிவுடையவர்களாக ஆகி நடந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட அகங்காரம் இருக்கக் கூடாது. இன்றைக்கு யாரிடமாவது கொஞ்சம் அகங்காரம் காட்டினீர்கள் என்றால் விரோதம் அதிகமாகும். மிகவும் இனிமையானவர்களாக நடந்து கொள்ள வேண்டும். நேப்பாளில் கூட குரல் எழும்பும். இப்போது குழந்தைகளாகிய உங்களுடைய மகிமைக்கான நேரம் இல்லை. இல்லையென்றால் அவர்களுடைய (சன்னியாசிகளின்) தங்குமிடம் பறந்து விடும். பெரிய-பெரிய மனிதர்கள் விழித்துக் கொண்டால், சபையில் அமர்ந்து சொன்னால், அவர்களுக்கு பின்னால் நிறைய பேர் வந்து விடுவார்கள். யாராவது எம்.பி. பாரதத்தின் இராஜயோகத்தை இந்த பிரம்மாகுமார-குமாரிகளைத் தவிர வேறு யாரும் கற்றுத் தர முடியாது என்று உங்களுடைய மகிமை செய்ய வேண்டும், அப்படி இதுவரை யாரும் வர வில்லை. குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக, அற்புதமானவர்களாக ஆக வேண்டும். இன்னார்-இன்னார் எப்படி உரையாற்றுகிறார்கள் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். சேவை செய்வதற்கான யுக்தியை பாபா கற்றுக் கொடுக்கின்றார். பாபா எப்படி முரளி நடத்தினாரோ, அப்படியே துல்லியமாக கல்பம்-கல்பமும் நடத்தியிருப்பார். நாடகத்தில் அடங்கியிருக்கிறது. அப்படி ஏன்? என்று கேள்வி எழ முடியாது. நாடகத்தின்படி என்ன புரிய வைக்க வேண்டியிருந்ததோ, அதை புரிய வைத்தார். புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றேன். மற்றபடி மக்கள் அளவற்ற கேள்விகள் கேட்பார்கள். முதலில் மன்மனாபவ (மனதால் பகவானை நினைவு செய்வது) ஆகுங்கள் என்று சொல்லுங்கள். பாபாவை தெரிந்து கொள்வதின் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சேவைக்கான யுக்தியை கற்றுக் கொண்டு அதிக புத்திசாலிகளாகவும், திறமையானவர்களாகவும் ஆக வேண்டும். தாரணை செய்து பிறகு மற்றவர்களையும் செய்ய வைக்க வேண்டும். படிப்பின் மூலம் தன்னுடைய அதிர்ஷ்டத்தை தாங்களே உருவாக்க வேண்டும்.

 

2. எந்தவொரு விஷயத்திலும் கொஞ்சம் கூட அகங்காரத்தைக் காட்டக் கூடாது, மிக மிக இனிமையாகவும், பணிவுடையவர்களாகவும் ஆக வேண்டும். மாயை எனும் முதலையிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

காலத்திற்கேற்ப ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி அடையக் கூடிய ஞானம் மற்றும் யோகம் நிறைந்த ஆத்மா ஆவீர்களாக.

 

ஞானம் என்பதன் பொருள் அறிவு, யார் காலத்திற்கேற்ப அறிவுபூர்வமாக காரியத்தை செய்தபடியே வெற்றியை அடைகிறார்களோ அவர்களுக்குத் தான் அறிவாளி என்று கூறப்படுகிறது. அளிவாளியின் அடையாளமாவது அவர்கள் ஒரு பொழுதும் ஏமாற்றம் அடைய முடியாது. மேலும் யோகியின் அடையாளமாவது (கிளீன்) தூய்மையான மற்றும் (கிளியர்) தெளிவான புத்தி. யாருடைய புத்தி (க்ளீன்) தூய்மையாகவும், (கிளியர்) தெளிவாகவும் இருக்கிறதோ அவர்கள் ஒரு பொழுதும் ஏன் இப்படி ஆகி விட்டது என்று தெரியவில்லையே என்று கூறமாட்டார்கள். இந்த வார்த்தையை ஞானி மற்றும் யோகி ஆத்மாக்கள் கூற முடியாது. அவர்கள் ஞானம் மற்றும் யோகத்தை ஒவ்வொரு செயலிலும் எடுத்துக் காட்டுவார்கள்.

 

சுலோகன்:

யார் தங்கள் ஆதி மற்றும் அனாதி சம்ஸ்கார சுபாவத்தை நினைவில் வைத்திருப்பார்களோ அவர்களே ஆடாத அசையாத நிலையில் இருப்பார்கள்.

 

ஓம்சாந்தி