09-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

நினைவில் இருப்பதற்கான குப்தமான கடின முயற்சி ஒவ்வொரு குழந்தையும் செய்ய வேண்டும். ஏன்?

பதில்:

ஏனெனில் நினைவு இன்றி ஆத்மா, பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆக முடியாது. எப்போது குப்தமாக நினைவில் இருப்பீர்களோ, ஆத்ம அபிமானியாக ஆவீர்களோ அப்பொழுது தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். தர்மராஜரின் தண்டனையிலிருந்து விடுபடுவதற் கான சாதனமும் நினைவு தான். நினைவில் தான் மாயையின் புயல்கள் தடையிடுகிறது. ஆகையால் நினைவிற்கான குப்த முயற்சி செய்யுங்கள், அப்போது தான் லெட்சுமி, நாராயணன் போன்று அன்பானவர்களாக ஆக முடியும்.

பாடல்:

ஓம் நமச் சிவாய ........

ஓம் சாந்தி. இந்த மகிமை அனைவருக்கும் தந்தையாக இருப்பவருடையது ஆகும். பகவானை அதாவது தந்தையை நினைவு செய்கின்றனர், அவரை தாய், தந்தை என்று கூட கூறுகின்றனர் அல்லவா! பரம்பிதா (இறை தந்தை) என்றும் கூறுகின்றனர். அனைத்து மனிதர்களையும் பரம்பிதா என்று கூறப்படுவது கிடையாது. ஆனால் லௌகீகத் தந்தையையும் பாபா என்று கூறுகின்றனர். யாரை லௌகீகத் தந்தை என்று கூறுவீர்களோ அவரும் பரலௌகீகத் தந்தையைத்தான் நினைவு செய் கின்றார். உண்மையில் ஆத்மா தான் நினைவு செய்கிறது. அதுவே லௌகீகத் தந்தையையும் நினைவு செய்கிறது. அந்த ஆத்மாவானது தனது ரூபத்தையும், தொழிலையும் அறிந்திருக்கவில்லை. ஆத்மா தன்னையே அறிந்திருக்கவில்லையெனும் போது பரம்பிதாவை எப்படி அறிந்திருக்க முடியும்? தனது லௌகீகத் தந்தையை அனைவரும் அறிந்திருக்கின்றனர், அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. இல்லையெனில் ஏன் நினைவு செய்ய வேண்டும்? பரலௌகீகத் தந்தையிடமிருந்தும் அவசியம் ஆஸ்தி கிடைத்திருக்க வேண்டும். ஹே பரம்பிதா என்று கூறுகின்றனர். அவரிடம் கருணை, மன்னிப்பு கேட்கின்றனர். ஏனெனில் பாவம் செய்து கொண்டே இருக்கின்றனர். இதுவும் நாடகத்தில் பதிவாகி யிருக்கிறது. ஆனால் ஆத்மாவை அறிந்து கொள்வது, பிறகு பரமாத்மாவை அறிந்து கொள்வது என்ற பாடம் மிகவும் கடினமானது ஆகும். எளிதிலும் எளிதானது, மேலும் கடினத்திலும் கடினமாதும் ஆகும். எவ்வளவு விஞ்ஞானத்தை கற்றுக் கொள்கின்றனர், அதன் மூலம் சந்திர மண்டலம் வரை செல்கின்றனர். இருப்பினும் இந்த ஞானத்திற்கு முன் அது ஒன்றுமில்லை. தன்னை மற்றும் தந்தையை அறிந்து கொள்வது மிகவும் கடினமாகும். எந்தக் குழந்தைகள் தங்களை பிரம்மா குமார், குமாரி என்று கூறிக் கொள்கிறீர்களோ, அவர்களும் தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்யது கொள்ள வேண்டும். நான் ஆத்மா, புள்ளியாக இருக்கிறேன், நமது தந்தையும் புள்ளியாக இருக்கின்றார் லி என்பதை மறந்து விடுகிறீர்கள். இது கடினமான பாடமாகும். தன்னை ஆத்மா என்பதையே மறந்து விடும் பொழுது தந்தையை நினைவு செய்வதையும் மறந்து விடுகிறீர்கள். ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி கிடையாது. ஆத்மா புள்ளியாக இருக்கிறது, அதில் தான் 84 பிறவிக்கான பாகம் பதிவாகியிருக்கிறது. அதை ஆத்மாவாகிய நான் விதவிதமான சரீரத்தின் மூலம் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். புரிந்து கொள்வதற்கு முக்கியமான விசயம் இதுவாகும். ஆத்மா மற்றும் பரமாத்மாவை புரிந்து கொள்வதை விடுத்து மற்ற ஞானம் அனைத்தும் புத்தியில் வந்து விடுகிறது. நாம் 84 பிறவிகள் எடுக்கிறோம், சூரியவம்சி, சந்திரவம்சி...... ஆகின்றோம். இந்த சக்கரம் மிகவும் எளிதாக புரிந்து விடும். ஆனால் சக்கரத்தை மட்டும் அறிந்து கொள்வதால் அந்த அளவிற்கு நன்மை கிடையாது. தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்வதில் தான் நன்மை இருக்கிறது. ஆத்மாவாகிய நான் நட்சத்திரம் போன்று இருக்கிறேன். பிறகு தந்தையும் நட்சத்திரம் போன்று மிக சூட்சுமமாக இருக்கின்றார். அவர் தான் சத்கதி கொடுக்கும் வள்ளலாக இருக்கின்றார். அவரை நினைவு செய்தால் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். இந்த முறையில் யாரும் நிரந்தரமாக நினைவு செய்வது கிடையாது. ஆத்ம அபிமானியாக ஆவது கிடையாது. நான் ஆத்மா என்பது அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்பது தந்தையின் கட்டளையாகும். நான் புள்ளியாக இருக்கிறேன். இங்கு நடிகனாக வந்து நடிக்கிறேன். என்னிடத்தில் 5 விகாரங்களின் கறைகள் படிந்திருக்கிறது. இரும்பு யுகத்தில் இருக்கிறேன். இப்பொழுது தங்க யுகத்திற்குச் செல்ல வேண்டும். ஆகையால் தந்தையை மிக அன்பாக நினைவு செய்ய வேண்டும். இந்த முறையில் தந்தையை நினைவு செய்யும் பொழுது தான் கறைகள் நீங்கும். இதில் தான் முயற்சி இருக்கிறது. சேவை சம்மந்தமாக சரியான தகவல் தருவதில்லை. இன்று இந்த சேவை செய்தேன், மிகவும் நல்ல ஏற்பட்டது என மிகைப்படுத்தி கூறிவிடு கின்றனர். ஆனால் ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ஞானத்தில் யாருக்கும்

எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை என்று சிவபாபா புரிந்துக் கொள்கிறார். பாரதம் சொர்க்க மாகவும், நரகமாகவும் எப்படி ஆகிறது? 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம்? சதோ, ரஜோ, தமோவில் எப்படி வருகிறோம்? இதைக் கேட்டு இதன் பிரபாவத்தில் வருகின்றனர், அவ்வளவு தான். பரமாத்மா நிராகாரமாக இருக்கின்றார் என்பதையும் புரிந்து கொள்கின்றனர். மற்றபடி நான் ஆத்மா, எனக்குள் 84 பிறவிகளுக்கான பாகம் பதிவாகியிருக்கிறது. தந்தையும் புள்ளியாக இருக்கின்றார், அவரிடம் முழு ஞானமும் இருக்கிறது. அவரை நினைவு செய்ய வேண்டும் என்ற இந்த விசயத்தை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. முக்கிய விசயத்தை புரிந்து கொள்வது கிடையாது. உலக சரித்திர, பூகோளத்தின் ஞானத்தை தந்தை தான் கொடுக்கின்றார். உலக சரித்திரம், பூகோளம் இருக்க வேண்டும் என்று அரசாங்கமும் விரும்புகிறது. இது அதை விட சூட்சுமமான விசயமாகும். ஆத்மா என்றால் என்ன? அதில் 84 பிறவிகளுக்கான பாகம் எப்படி பதிவாகியிருக்கிறது? அதுவும் அழிவற்றதாகும். இதையும் நினைவு செய்ய வேண்டும், தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் தந்தையை நினைவு செய்ய வேண்டும், இதன் மூலம் தான் விநாசம் ஆகும் லி இப்படி யோகா செய்வதற்கு யாரும் ஈடுபட தயாராக இல்லை. இந்த நினைவில் இருந்தால் மிகவும் அன்பானவர் களாக ஆகிவிடுவர். இந்த லெட்சுமி, நாராயணனைப் பாருங்கள் எவ்வளவு அன்பானவர்களாக இருக்கின்றனர்! இங்கிருக்கும் மனிதர்களைப் பாருங்கள் எப்படி இருக்கின்றனர்? என்னிடத்தில் எந்த குணங்களும் இல்லை என்று தாங்களே கூறுகின்றனர். நாங்கள் அசுத்தமாக இருக்கிறோம், நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள் என்று கூறுகின்றார்கள். எப்போது தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து தந்தையை நினைவு செய்வீர்களோ அப்போது தான் வெற்றி கிடைக்கும். இல்லையெனில் வெற்றி மிகக் குறைவாகத் தான் கிடைக்கும். என்னிடத்தில் மிக நன்றாக ஞானம் இருக்கிறது என்று நினைக்கின்றனர். உலக சரித்திர, பூகோளத்தை நாம் அறிவோம். ஆனால் யோகா சார்ட் பற்றி கூறுவது கிடையாது. மிகக் குறைவானவர்கள் தான் இப்படிப்பட்ட மனநிலையுடன் இருக்கின்றனர். அதாவது தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்கின்றனர். பலருக்கு பயிற்சி கிடையாது. குழந்தைகள் ஞானச் சக்கரத்தை மட்டுமே புத்தியில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதை பாபா புரிந்திருக்கின்றார். மற்றபடி நான் ஆத்மா, பாபாவை நாம் நினைவு செய்ய வேண்டும், இதன் மூலம் இரும்பு யுகத்திலிருந்து விடுபட்டு தங்கயுகத்திற்குச் செல்வோம். ஆத்மாவாகிய நான் தந்தையை அறிந்து கொள்ள வேண்டும். அவரது நினைவிலேயே இருக்க வேண்டும், இந்த பயிற்சி பலருக்கு குறைவாக இருக்கிறது. பலர் வருகின்றனர். நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். மற்றபடி உள்ளுக்குள் எவ்வளவு கறை படிந்திருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அழகான நிலையிலிருந்து அசுத்தமானவர்களாக ஆகிவிட்டனர். பிறகு மீண்டும் அழகானவர்களாக ஆவது எப்படி? என்பதை யாரும் அறியவில்லை. சரித்திர, பூகோளத்தை மட்டுமே அறிந்து கொள்ளும் விசயம் கிடையாது. தூய்மையாக ஆவது எப்படி? தண்டனை அடையாமல் இருப்பதற்கான உபாயம் நினைவில் இருப்பதாகும். யோகா சரியாக இல்லையெனில் தர்மராஜரிடம் தண்டனை அடைவீர்கள். இது மிகப் பெரிய பாடமாகும், இதை யாரும் ஏற்றுக் கொள்வது கிடையாது. ஞானத்தில் தன்னை அதிபுத்திசாலி என்று நினைத்துக் கொள்கின்றனர். இதில் எந்த பெருமையும் கிடையாது. மூல விசயம் நினைவு ஆகும். யோகாவில் பலர் பக்குவமற்று இருக்கின்றனர். அதனால் தான் எச்சரிக்கையாக இருங்கள், பண்டிதராக மட்டுமே இருந்து விடாதீர்கள் என்று தந்தை கூறுகின்றார். நான் ஆத்மா, நான் தந்தையை நினைவு செய்ய வேண்டும். மன்மனாபவ என்று தந்தை கட்டளையிட்டிருக்கின்றார். இது மகா மந்திரமாகும். தன்னை நட்சத்திரம் என்று புரிந்து கொண்டு, தந்தையையும் நட்சத்திரமாக புரிந்து கொண்டு தந்தையை மட்டுமே நினைவு செய்யுங்கள். தந்தை உருவத்தில் மிகப் பெரிய உருவத்தில் எதிரில் வருவது கிடையாது. ஆக ஆத்ம அபிமானி ஆவதில் தான் முயற்சி இருக்கிறது. உலக மகாராஜா, மகாராணியாக ஒருவர் ஆகின்றார் எனில், அவர்களுக்கு லட்சக் கணக்கான பிரஜைகள் இருப்பார்கள். பிரஜைகள் பலர் இருப்பார்கள் அல்லவா! சரித்திரம், பூகோளத்தை அறிந்து கொள்வது மிகவும் எளிதாகும், ஆனால் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யும் போது தான் பாவனம் ஆவீர்கள். இந்த பயிற்சி மிகவும் கஷ்டமான தாகும். நினைவு செய்ய அமர்கின்ற போது அதிக புயல்கள் தடைகளாக வருகின்றன. யாராவது அரை மணி நேரம் கூட ஒரே நிலையுடன் அமருவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அடிக்கடி மறந்து விடுகின்றனர். இதில் உண்மையிலும் உண்மையான குப்தமான முயற்சி இருக்கிறது. சக்கரத்தின் இரகசியம் அறிந்து கொள்வது எளிதாகும். மற்றபடி ஆத்ம அபிமானியாகி தந்தையை நினைவு செய்வதை சிலர் கடினம் என்று நினைத்து அதை நடிப்பது போல் செயலில் கொண்டு வந்து விடுகின்றனர். தந்தையின் நினைவின் மூலம் தான் நீங்கள் தூய்மையாக ஆவீர்கள். நோயற்ற உடல், நீண்ட ஆயுள் கிடைக்கும். உலகத்தின் சரித்திரம், பூகோளத்தைப் பற்றி புரிய வைப்பதால் மட்டுமே மாலையில் மணியாக வந்து விட முடியாது. நினைவின் மூலம் தான் மணியாக ஆவீர்கள். இந்த முயற்சி யாரும் செய்வது கிடையாது. நான் நினைவில் இருப்பது கிடையாது என்று தானே புரிந்து கொள்கிறீர்கள். நல்ல நல்ல மகாரதிகளும் இந்த விசயத்தில் வேகமின்றி இருக்கின்றனர். முக்கிய விசயம் புரிய வைக்க முடிவதில்லை. இந்த விசயம் கடினமானதும் ஆகும். கல்பத்தின் ஆயுளை அவர்கள் நீடித்து விட்டார்கள். நீங்கள் 5 ஆயிரம் ஆண்டுகள் என்று நிரூபணம் செய்கிறீர்கள். ஆனால் ஆத்மா, பரமாத்மாவின் ஞானத்தை சிறிதும் அறியாமல் இருக்கின்றனர். நினைவே செய்வதில்லை, ஆகையால் மனநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. தேக அபிமானம் அதிகமாக இருக்கிறது. ஆத்ம அபிமானி ஆகின்ற போது தான் மாலையில் மணியாக ஆக முடியும். உலக சரித்திர, பூகோளத்தை புரிய வைப்பதால் நான் மாலையில் நெருக்கத்தில் வந்து விடுவேன் என்பது கிடையாது. ஆத்மா மிகவும் சிறியதாக இருக்கிறது, அதில் 84 பிறவிகளின் பாகம் பதிவாகியிருக்கிறது. இந்த விசயத்தை முதன் முதலில் புத்தியில் கொண்டு வர வேண்டும், பிறகு சக்கரத்தை நினைவு செய்ய வேண்டும். மூல விசயம் யோகா. யோகி நிலை தேவை. பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக ஆக வேண்டும். ஆத்மா யோகாவின் மூலம் தான் தூய்மையாக ஆகும். யோக பலமுடையவர்கள் தான் தர்மராஜரின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும். இந்த முயற்சி மிகச் சிலர் மட்டுமே செய்கின்றனர். மாயையின் புயல்களும் அதிகமாக வரும். இது மிகவும் குப்தமான, சூட்சுமமான முயற்சி ஆகும். லெட்சுமி, நாராயணனாக ஆவது சித்தி வீட்டிற்குச் செல்வது போன்று கிடையாது. இந்த பயிற்சி ஏற்பட்டு விட்டால் நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் தந்தையின் நினைவு வந்து கொண்டே இருக்கும். இது தான் யோகா என்று கூறப்படுகிறது. மற்றபடி இந்த ஞானத்தின் விசயங்களை சிறிய குழந்தைகளும் கூட புரிந்து கொண்டு விடும். சித்திரங்களில் அனைத்து யுகங்களும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது பொதுவானதாகும். எந்த ஒரு காரியம் தொடங்கும் போதும் சுவஸ்திகா வரைகின்றனர். இது சத்யுகம், திரேதா ....... வின் அடையாளமாகும். மேலே சிறிய சங்கமயுகம் இருக்கிறது. ஆக முதலில் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்து கொண்டே இருக்கும் போது தான் அமைதியை பரப்ப முடியும். யோகாவின் மூலம் விகர்மங்கள் விநாசம் ஆகும். ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் பற்றிய விசயத்தை முழு உலகமும் மறந்து இருக்கிறது, பரமாத்மா ஆயிரம் சூரியனை விட பிரகாசமாக இருக்கின்றார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு எப்படி இருக்க முடியும்? ஆத்மா தான் பரமாத்மா என்று கூறுகின்ற பொழுது இரண்டும் ஒன்று ஆகிவிடுகிறது அல்லவா! சிறியது பெரியதிற்கு வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது. இதைப் பற்றியும் புரிய வைக்க வேண்டும். ஆத்மாவின் ரூபம் புள்ளியாகும், ஆத்மா தான் பரமாத்மா எனில் பரமாத்மாவும் புள்ளி ஆகிவிடுகின்றார் அல்லவா! இதில் வித்தியாசம் ஏற்பட முடியாது. அனைவரும் பரமாத்மாவாக ஆகிவிட்டால் அனைவரும் படைப்பவர்களாக ஆகிவிடுவர். அனைவருக்கும் சத்கதி செய்யக் கூடியவர் ஒரே ஒரு தந்தை அல்லவா! மற்றபடி ஒவ்வொருவருக்கும் நாடகத்தில் அவரவர்களுக்கான பாகம் கிடைத்திருக்கிறது. இதை புத்தியில் பதியச் செய்ய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். என்னை நினைவு செய்தால் கறை நீங்கி விடும் என்று தந்தை கூறுகின்றார். இது தான் முயற்சியாகும். அரைக் கல்பம் தேக அபிமானத்தில் இருந்திருக்கிறீர்கள். சத்யுகத்தில் ஆத்ம அபிமானியாக இருந்தும் தந்தையை அறியாமல் இருந்தீர்கள். ஞானத்தை அறியாமல் இருந்தீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அடையக் கூடிய ஞானம் மறைந்து விடுகிறது. நாம் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுப்போம், நடிப்பு நடிப்போம் என்ற ஞானம் மட்டுமே அங்கு இருக்கும். இதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்களது நடிப்பு நடிக்க வேண்டும். அழுவதனால் என்ன கிடைக்கும்? இது புரிய வைக்கப்படுகிறது, ஒருவேளை சிறிது புரிந்து கொண்டால் கூட அமைதியாகி விடுவர். சுயம் புரிந்து கொண்டால் மற்றவர்களுக்கும் புரிய வைப்பார்கள். வயதானவர்கள் புரிய வைக்கவும் செய்கின்றனர், அழுவதால் திரும்பி வந்து விட மாட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா சென்ற விட்டால் இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது? என்று அஞ்ஞான காலத்திலும் நினைக்கின்றனர். ஆனால் ஆத்மா மற்றும் பரமாத்மா என்றால் யார்? என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆத்மாவில் கறை படிந்திருக்கிறது, ஆனால் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது (நிர்லேப்) என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆக இது மிகவும் ஆழமான விசயமாகும். பல குழந்தைகள் நினைவில் இருப்பது கிடையாது என்பதை பாபா அறிவார். புரிய வைப்பதால் மட்டும் என்ன கிடைக்கும்? அதிக தாக்கம் (பிரபாவம்) ஏற்படுகிறது, ஆனால் இதன் மூலம் அவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுவது கிடையாது. ஆத்மாலிபரமாத்மாவின் அறிமுகம் கிடைக்கும் போது தான் நான் அவரது குழந்தை என்பதை புரிந்து கொள்வார். தந்தை தான் பதீத பாவனன். வந்து நம்மை துக்கத்திலிருந்து விடுவிக்கின்றார். அவரும் புள்ளியாக இருக்கின்றார். ஆக தந்தையை நிரந்தரமாக நினைவு செய்ய வேண்டும். மற்றபடி சரித்திரம், பூகோளத்தை அறிந்து கொள்வது ஒன்றும் பெரிய விசயமில்லை. புரிந்து கொள்ள முடிந்தாலும் கூட நான் ஆத்மா என்ற நினைவில் இருப்பதில் தான் முயற்சி இருக்கிறது. ஆத்மா, பரமாத்மாவைப் பற்றிய விசயங்களை உங்களுக்கும் தந்தை வந்து தான் புரிய வைக்கின்றார். சிருஷ்டிச் சக்கரம் எளிதானது ஆகும். எவ்வளவு முடியுமோ எழுந்தாலும், அமர்ந்தாலும் ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஆத்ம அபிமானியாக இருப்பவர்கள் மிகவும் அமைதியாக இருப்பார்கள். நான் அமைதியில் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். நிராகார உலகிற்குச் சென்று அமர வேண்டும். நமது பாகம் இப்போது முடிவடைந்து விட்டது. தந்தையின் ரூபம் புள்ளி என்று புரிந்து கொள்வார்கள். அவர் மிகப் பெரிய லிங்கமாக கிடையாது. பாபா மிகவும் சிறியதாக இருக்கின்றார். அவரே ஞானம் நிறைந்தவராகவும், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளலாகவும் இருக்கின்றார். ஆத்மாவாகிய நானும் ஞானம் நிறைந்தவனாக ஆகிக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும் பொழுது தான் உயர்ந்த பதவி அடைய முடியும். உலகில் யாரும் ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் பற்றி அறியவில்லை.

பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள். சந்நியாசிகளும் கூட அறிந்திருக்க வில்லை. வந்து புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் அனைவரும் அவரவர்களது தர்மத்தில் தான் வரக் கூடியவர்கள். கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். நீங்கள் தான் இந்த முயற்சி செய்வதன் மூலம் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவீர்கள். இப்போது மீண்டும் ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். ஆத்மாவில் தான் மனம் இருக்கிறது அல்லவா! ஆத்மாவில் உள்ள மனதைத் தான் தந்தையிடம் ஈடுபடுத்த வேண்டும். மனம் சரீரத்தில் கிடையாது. சரீரத்திலுள்ளது அனைத்தும் ஸ்தூல இந்திரியங்கள் ஆகும். மனதை ஈடுபடுத்த வேண்டும் லி இது ஆத்மாவின் காரியமாகும். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு பிறகு பரமாத்ம தந்தையிடம் மனதை செலுத்த வேண்டும். ஆத்மா மிகவும் சூட்சுமமானது. சிறிய சூட்சுமமாக இருக்கும் ஆத்மா எவ்வளவு நடிப்பு நடிக்கிறது! இது தான் உண்மை. இவ்வளவு சிறியதாக இருக்கும் பொருளில் (ஆத்மாவில்) எவ்வளவு அழிவற்ற பாகம் நிறைந்திருக்கிறது! அது ஒருபொழுதும் அழியக் கூடியது கிடையாது. மிகவும் சூட்சுமமானது. நீங்கள் முயற்சி செய்தாலும் பெரிய பொருட்களின் நினைவு வந்து விடுகிறது. ஆத்மாவாகிய நான் சிறிய நட்சத்திரமாக இருக்கிறேன், தந்தையும் சிறியதாக இருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முதன் முதலில் இந்த முயற்சி செய்ய வேண்டும். இவ்வளவு சிறிய ஆத்மா தான் இந்த நேரத்தில் தூய்மையற்ற நிலையில் இருக்கிறது. ஆத்மாவை தூய்மை ஆக்கும் முதன் முதல் உபாயம் இது தான். படிப்பு படிக்க வேண்டும். மற்றபடி விளையாடுவது, குதிப்பது தனிப்பட்ட விசயமாகும். விளையாடுவதும் ஒரு கலை ஆகும். படிப்பின் மூலம் பதவி கிடைக்கிறது. விளையாட்டின் மூலம் பதவி கிடைக்காது. விளையாட்டிற்கான துறை தனியாக இருக்கும். அதற்கும் ஞானம் அல்லது யோகாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. போக் வைப்பதும் விளையாட்டாகும். முக்கியமான விசயம் நினைவு. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தர்மராஜரின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு நினைவிற்கான குப்த முயற்சி செய்ய வேண்டும். தன்னை ஆத்மா பிந்து என்று புரிந்து கொண்டு பிந்துவாகிய தந்தையை நினைவு செய்வது தான் பாவனமாவதற்கான உபாயமாகும்.

2. ஞானத்தில் தன்னைத் தான் அதி புத்திசாலி என்று நினைக்கக் கூடாது. ஏக்ரஸ் நிலையை உருவாக்கும் பயிற்சி செய்ய வேண்டும். தந்தையின் கட்டளை எதுவோ அதை கடைபிடிக்க வேண்டும்.

வரதானம்:

சத்தியம் மற்றும் தூய்மையின் தாரணையின் மூலம் நெருக்கத்தின் அனுபவம் செய்யக் கூடிய சம்பூர்ன மூர்த்தி ஆகுக.

அனைத்து தாரணைகளிலும் முக்கியமான தாரணை சத்தியம் மற்றும் தூய்மை ஆகும். ஒருவருக்கொருவர் உள்ளத்தில் முற்றிலும் தூய்மையாக இருக்க வேண்டும். சுத்தமான பொருளில் அனைத்தும் தெளிவாக தென்படுவது போன்று ஒருவருக்கொருவரின் பாவனை, உணர்வுகள், சுபாவம் தெளிவாக தென்பட வேண்டும். எங்கு சத்தியம் மற்றும் தூய்மை இருக்கிறதோ, அங்கு நெருக்கும் இருக்கும். எவ்வாறு பாப்தாதாவின் நெருக்கத்தில் இருக்கிறீர்களோ, அவ்வாறு தங்களுக்குள் உள்ளப் பூர்வமான நெருக்கம் இருக்க வேண்டும். சுபாவங்களின் வேறுபாடுகள் அழிந்து விட வேண்டும். இதற்கு மன உணர்வுகள் மற்றும் சுபாவங்களை இணைக்க வேண்டும். எப்போது சுபாவத்தில் வேறுபாடு தென்படவில்லையோ, அப்போது தான் சம்பூர்ன மூர்த்தி என்ற கூற முடியும்.

சுலோகன்:

சீர்கெட்டவர்களை விழிப்படையச் செய்வது தான் மிகப் பெரிய சேவையாகும்