09.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே - ஆத்மாக்களாகிய உங்களுடைய அன்பு ஒரு பாபாவிடம் உள்ளது, பாபா உங்களுக்கு ஆத்மாவிடம் அன்பு செலுத்த கற்றுக் கொடுத்திருக்கிறார், சரீரத்தோடு அல்ல.

 

கேள்வி:

எந்த முயற்சியின் மீது மட்டுமே மாயை தடை போடுகிறது? மாயையை வென்றவர்களாக ஆவதற்கான யுக்தி என்ன?

 

பதில் :

நாம் பாபாவை நினைவு செய்து நம்முடைய பாவங்களை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறீர்கள். இந்த நினைவில் தான் மாயையின் தடை ஏற்படுகிறது. தந்தை ஆசிரியர் உங்களுக்கு மாயையை வென்றவர்களாக ஆவதற்கு யுக்தி கூறுகின்றார். நீங்கள் ஆசானை அறிந்து கொண்டு நினைவு செய்தீர்கள் என்றால் குஷியும் இருக்கும், முயற்சியும் செய்து கொண்டே இருப்பீர்கள் மற்றும் நன்றாக சேவையும் செய்வீர்கள். மாயையை வென்றவர்களாகவும் ஆகி விடுவீர்கள்.

 

பாட்டு:-

இந்தப் பாவம் நிறைந்த உலகத்திருந்து........

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகள் பாட்டை கேட்டீர்கள், அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். உலகத்தில் யாருமே அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நம்முடைய ஆத்மாவின் அன்பு பரமபிதா பரமாத்மாவோடு என்பதை குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். ஆத்மா தன்னுடைய தந்தை பரமபிதா பரமாத்மாவை அழைக்கிறது. அன்பு ஆத்மாவில் இருக்கிறதா அல்லது சரீரத்தில் இருக்கிறதா? அன்பு ஆத்மாவிடம் இருக்க வேண்டும் என்று பாபா கற்றுக் கொடுக்கின்றார். சரீரம் அழிந்து விடும். அன்பு ஆத்மாவில் இருக்கிறது. இப்போது பாபா புரிய வைக்கின்றார், உங்களுடைய அன்பு பரமாத்மா பாபாவோடு இருக்க வேண்டும், சரீரங்களோடு இருக்கக் கூடாது. ஆத்மா தான் தன்னுடைய தந்தையை புண்ணிய ஆத்மாக்களின் உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அழைக்கிறது. நாம் பாவ ஆத்மாக்களாக இருந்தோம், இப்போது மீண்டும் புண்ணிய ஆத்மாக்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபா உங்களை யுக்தியோடு புண்ணிய ஆத்மாவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். பாபா சொன்னால் தானே குழந்தைகளுக்கு அனுபவமாகும் பிறகு நாம் பாபாவின் மூலமாக பாபாவின் நினைவின் மூலம் தூய்மையான புண்ணிய ஆத்மாவாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். யோகபலத்தின் மூலம் நம்முடைய பாவங்கள் அழிந்து கொண்டிருக்கிறது. மற்றபடி கங்கையில் குளிப்பதின் மூலம் பாவங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை. மனிதர்கள் கங்கையில் குளிக்கிறார்கள், சரீரத்தை மண்ணினால் தேய்கிறார்கள் ஆனால் அதன் மூலம் ஒன்றும் பாவம் சுத்தமாவதில்லை. ஆத்மாவின் பாவம் யோகபலத்தின் மூலம் தான் போகிறது. அழுக்கு நீங்குகிறது, இது குழந்தைகளுக்குத் தான் தெரியும் மேலும் நாம் பாபாவை நினைவு செய்தால் நம்முடைய பாவங்கள் அழியும். நிச்சயம் இருக்கிறது என்றால் முயற்சி செய்ய வேண்டுமல்லவா! இந்த முயற்சியில் தான் மாயை தடை போடுகிறது. பலசாலியோடு மாயையும் நன்றாக பலசாலியாக ஆகி சண்டையிடுகிறது. அறைகுறையானவர்களிடம் என்ன சண்டை போடும்! குழந்தைகள் எப்போதும் இந்த எண்னம் வைக்க வேண்டும், நான் மாயையை வென்றவர்களாக, உலகத்தை வென்றவர்களாக ஆக வேண்டும். மாயையை வென்றவர்கள், உலகத்தை வென்றவர்கள் என்பதின் அர்த்தத்தைக் கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் எப்படி மாயையின் மீது வெற்றி அடையலாம் என்பது இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. மாயையும் பலம் வாய்ந்தது அல்லவா! குழந்தைகளாகிய உங்களுக்கு ஆசிரியர் கிடைத்திருக்கிறார். அந்த ஆசிரியரையும் கூட வரிசைகிரமமாக யாராவது சிலர் தான் தெரிந்துள்ளார்கள். யார் தெரிந்துள்ளார்களோ அவர்களுக்குக் குஷியும் இருக்கிறது. அவர்களாகவே முயற்சியும் செய்கிறார்கள். நன்றாக சேவையும் செய்கிறார்கள். அமர்நாத்திற்கு நிறைய பேர் செல்கிறார்கள்.

 

உலகத்தில் அமைதி எப்படி ஏற்படும்? என்று அனைவரும் கேட்கிறார்கள். சத்யுகத்தில் எவ்வாறு சுகம்-அமைதி இருந்தது என்பதை இப்போது நீங்கள் நிரூபித்துக் கூறுகின்றீர்கள். முழு உலகத்திலும் அமைதி இருந்தது. இந்த இலஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது, வேறு எந்த தர்மமும் இல்லை. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகியுள்ளது அப்போது சத்யுகம் இருந்தது, பிறகு சிருஷ்டிச் சக்கரம் கண்டிப்பாக சுற்ற வேண்டியுள்ளது. சித்திரங்களின் மூலம் நீங்கள் முற்றிலும் தெளிவாகக் கூறுகின்றீர்கள், கல்பத்திற்கு முன்பு கூட இப்படி சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. நாளுக்கு - நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. எங்காவது குழந்தைகள் சித்திரங்களில் நாள்-தேதியை எழுத மறந்து விடுகிறார்கள். இலஷ்மி-நாராயணன் சித்திரத்தில் கண்டிப்பாக நாள்-தேதி இருக்க வேண்டும். நாம் சொர்க்கவாசிகளாக இருந்தோம், இப்போது மீண்டும் ஆக வேண்டும் என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது அல்லவா! யார் எந்தளவிற்கு முயற்சி செய்கிறார்களோ அந்தளவிற்கு பதவியை அடைவார்கள். நீங்கள் இப்போது பாபாவின் மூலம் ஞானத்தின் அதிகாரமுடையவர்களாக ஆகியுள்ளீர்கள். இப்போது பக்தி அழிய வேண்டும். சத்யுகம்-திரேதாவில் பக்தி இருக்குமா என்ன! பிறகு அரைக்கல்பம் பக்தி நடக்கிறது. இது கூட குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வருகிறது. அரைக்கல்பத்திற்கு பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது. விளையாட்டு முழுவதும் பாரதவாசிகளாகிய உங்களைப் பற்றி தான் இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரம் பாரதத்தைப் பற்றி தான் இருக்கிறது. பாரதம் தான் அழிவற்ற கண்டமாக இருக்கிறது, இது கூட முன்னால் தெரிந்திருந்ததா என்ன.? இலஷ்மி-நாராயணனை இறைவன் - இறைவி என்று சொல்கிறார்கள் அல்லவா! எவ்வளவு உயர்ந்த பதவியாக இருக்கிறது மேலும் படிப்பு எவ்வளவு சகஜமானதாக இருக்கிறது. இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்து விட்டு பிறகு நாம் திரும்பி செல்கிறோம். 84 பிறவிகளின் சக்கரம் என்று சொல்வதின் மூலம் புத்தி மேலே சென்று விடுகிறது. இப்போது உங்களுக்கு மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனம் அனைத்தும் நினைவிருக்கிறது. முன்னால் சூட்சுமவதனம் என்றால் என்ன என்பதை தெரிந்திருந்தீர்களா என்ன? அங்கே எப்படி அசைவின் மூலம் பேசிக்கொள்கிறோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பேசாத படம் கூட வந்தது அல்லவா! உங்களுக்குப் புரிய வைக்க சகஜமாக இருக்கிறது. அமைதி, அசைவு, மற்றும் பேச்சு. இலஷ்மி-நாராயணனுடைய இராஜ்யத்திலிருந்து இப்போது வரை முழு சக்கரமும் புத்தியில் இருக்கிறது, நீங்கள் அனைத்தையும் தெரிந்துள்ளீர்கள்.

 

நீங்கள் குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே நாம் தூய்மையாக ஆக வேண்டும் என்ற கவலை மட்டுமே இருக்க வேண்டும். பாபா புரிய வைக்கின்றார், குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே கூட இந்தப் பழைய உலகத்தின் மீது பற்றை அழித்து விடுங்கள். குழந்தைகள் போன்றோரைப் பராமரியுங்கள். ஆனால் புத்தி பாபாவின் பக்கம் இருக்கட்டும். கைகளின் மூலம் காரியங்கள் செய்து கொண்டே புத்தி பாபாவின் பக்கம் இருக்கட்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா! குழந்தைகளுக்கு ஊட்டுங்கள், குடிக்கக் கொடுங்கள், குளிக்க வையுங்கள், புத்தியில் பாபாவின் நினைவு இருக்கட்டும் ஏனென்றால் சரீரத்தின் மீது பாவங்களின் சுமை அதிகம் இருக்கிறது ஆகையினால் புத்தி பாபாவின் பக்கம் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை தெரிந்துள்ளீர்கள். அந்தப் பிரியதர்ஷனை மிக அதிகமாக நினைவு செய்ய வேண்டும். பிரியதர்ஷனான தந்தை ஆத்மாக்களாகிய உங்கள் அனைவருக்கும் கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள், இந்தப் நடிப்பு கூட இப்போது நடந்து கொண்டிருக்கிறது பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும். பாபா எவ்வளவு சகஜமான யுக்தியைக் கூறுகின்றார். எந்தக் கஷ்டமும் இல்லை. எங்களால் இதைச் செய்ய முடியாது, எங்களுக்கு மிகவும் கடினமாகத் தெரிகிறது, நினைவு யாத்திரை மிகவும் கடினமானது என்று யாராவது சொல்கிறார்கள் என்றால், அட, நீங்கள் தந்தையை நினைவு செய்ய முடியாதா! தந்தையை மறப்பீர்களா என்ன என்று கேளுங்கள். பாபாவை மிகவும் நல்ல விதத்தில் நினைவு செய்ய வேண்டும் அப்போது தான் விகர்மங்கள் வினாசம் ஆகும் மேலும் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமானவர்களாக ஆவீர்கள். இல்லையென்றால் ஆக மாட்டீர்கள். உங்களுக்கு மிகவும் நல்ல சரியான வழி கிடைக்கிறது. ஒரு சரியான மருந்து இருக்கிறது அல்லவா!. நான் உத்திரவாதம் அளிக்கின்றேன், இந்த யோகபலத்தின் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கு ஒருபோதும் நோயுற்றவர்களாக ஆக மாட்டீர்கள். தந்தையை மட்டும் நினைவு செய்யுங்கள் - எவ்வளவு சகஜமான யுக்தியாக இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் யார் என்று தெரியாமல் நினைவு செய்தீர்கள். இப்போது பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார், பாபா கல்பத்திற்கு முன்பு கூட நாங்கள் தங்களிடம் வந்திருந்தோம், முயற்சி செய்திருந்தோம் என்று நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நாம் தான் இராஜ்யம் செய்திருந்தோம் பிறகு இழந்து விட்டோம் இப்போது மீண்டும் பாபா வந்துள்ளார், அவரிடமிருந்து இராஜ்ய பாக்கியத்தை அடைய வேண்டும். பாபா கூறுகின்றார், என்னை செய்யுங்கள் மற்றும் இராஜ்யத்தை நினைவு செய்யுங்கள். மன்மனாபவ. கடைசியில் புத்தியில் என்ன இருக்கிறதோ அப்படி அடுத்த பிறவியின் நிலையானது அமையும். இப்போது நாடகம் முடிகிறது, திரும்பிச் செல்வோம். பாபா அனைவரையும் அழைத்துச் செல்ல வந்துள்ளார். எப்படி மணவாளன், மணமகளை அழைத்துச் செல்ல வருகிறாரோ அதுபோலாகும். மணமகள்களுக்கு மிகுந்த குஷி ஏற்படுகிறது, நாம் நம்முடைய மாமனார் வீட்டிற்குச் செல்கிறோம். நீங்கள் அனைவரும் ஒரு இராமனுடைய சீதைகளாவீர்கள். இராமர் தான் உங்களை இராவணனுடைய சிறையிலிருந்து விடுவித்து அழைத்துச் செல்கின்றார். விடுவிப்பவர் ஒருவரே, இராவண இராஜ்யத்திலிருந்து விடுவிக்கின்றார். இது இராவண இராஜ்யம் என்று சொல்கிறார்கள், ஆனால் யதார்த்தமான விதத்தில் புரிந்துகொள்வதில்லை. இப்போது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது, மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்காக மிகவும் நல்ல - நல்ல பாயிண்டுகள் கொடுக்கப்படுகிறது. பாபா புரிய வைத்திருக்கிறார் - உலகத்தில் அமைதியை கல்பத்திற்கு முன்போலவே பாபா ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என்பதை எழுதி விடுங்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. விஷ்ணுவின் இராஜ்யம் இருந்தபோது உலகத்தில் அமைதி இருந்தது அல்லவா? விஷ்ணு தான் இலஷ்மி-நாராயணராக இருந்தனர், இதை கூட யாரும் புரிந்துள்ளார்களா என்ன?. விஷ்ணு மற்றும் இலஷ்மி- நாராயணன் மற்றும் ராதை-கிருஷ்ணரை தனித்தனியாக புரிந்து கொள்கிறார்கள். இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள், நீங்கள் தான் சுயதரிசன சக்கரதாரிகளாவீர்கள். சிவபாபா வந்து சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தைக் கொடுக்கின்றார். அதன் மூலம் இப்போது நாமும் மாஸ்டர் ஞானக்கடலாக (ஞானக்கடலின் குழந்தைகளாக) ஆகியுள்ளோம். நீங்கள் ஞான நதிகள் அல்லவா! இது குழந்தைகளுடைய பெயரே ஆகும்.

 

பக்திமார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு குளிக்கிறார்கள்! எவ்வளவு அலைகிறார்கள்! நிறைய தானம்-புண்ணியம் போன்றவைகளை செய்கிறார்கள், செல்வந்தர்கள் அதிகம் தானம் செய்கிறார்கள். தங்கத்தை கூட தானம் செய்கிறார்கள்! நாம் எவ்வளவு அலைந்தோம் என்று இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நாம் ஒன்றும் ஹடயோகிகள் அல்ல. நாம் இராஜயோகிகளாவோம். தூய்மையான குடும்ப ஆசிரமத்தவர்களாக இருந்தோம், பிறகு இராவண இராஜ்யத்தில் தூய்மையற்றவர்களாக ஆகியுள்ளோம். நாடகத்தின்படி பாபா மீண்டும் குடும்ப தர்மத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் வேறு யாரும் உருவாக்க முடியாது. நீங்கள் அனைவரும் தூய்மையாக ஆகி விட்டீர்கள் என்றால் உலகம் எவ்வாறு நடக்கும்? என்று மனிதர்கள் உங்களைக் கேட்கிறார்கள். இவ்வளவு சந்நியாசிகள் தூய்மையாக இருக்கிறார்கள் இருந்தாலும் உலகம் ஒன்றும் நின்றுவிட்டதா என்ன என்று கேளுங்கள். சாப்பிடுவதற்கே உணவு தானியங்கள் இல்லாத அளவிற்கு உலகம் வளர்ந்து விட்டது, இன்னும் உலகத்தை என்ன வளர்ப்பீர்கள்.? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள், பாபா நம் முன்னால் வந்திருக்கின்றார், ஆனால் அவரை இந்தக் கண்களினால் பார்க்க முடியாது. பாபா ஆத்மாக்களாகிய நமக்கு படிப்பிக்கின்றார், இங்கே இருக்கின்றார் என்பதை புத்தியின் மூலம் தெரிந்துள்ளோம்.

 

யார் உலக அமைதியின் விஷயங்களை பேசுகிறார்களோ, அவர்களுக்கு உலகத்தை பாபா அமைதியாக்கிக் கொண்டிருக்கின்றார் என்று சொல்லுங்கள். அதற்காகத் தான் பழைய உலகத்தின் வினாசம் முன்னால் நின்று கொண்டிருக்கிறது, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட விநாசம் நடந்திருந்தது. இப்போது கூட இந்த விநாசம் முன்னால் நிற்கிறது பிறகு உலகத்தில் அமைதி ஏற்பட்டு விடும். இப்போது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இந்த விஷயங்கள் இருக்கின்றன. உலகத்தில் யாருமே தெரிந்திருக்க வில்லை. உலகத்தில் இந்த விஷயங்கள் யாருடைய புத்தியிலும் இல்லை. சத்யுகத்தில் முழு உலகத்திலும் அமைதி இருந்தது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒரு பாரதக் கண்டத்தை தவிர வேறு எந்தக் கண்டமும் இல்லை. பின்னால் மற்ற கண்டங்கள் ஏற்பட்டன. இப்போது எத்தனை கண்டங்கள் இருக்கின்றன. இப்போது இந்த விளையாட்டின் இறுதியாகும். கண்டிப்பாக பகவான் இருப்பார் என்று சொல்கிறார்கள், ஆனால் பகவான் யார் மற்றும் எந்த ரூபத்தில் வருகின்றார் என்பதை தெரிந்திருக்கவில்லை. கிருஷ்ணராக இருக்க முடியாது. தூண்டுதன் மூலமாகவோ அல்லது சக்தியின் மூலமாகவோ காரியங்களை செய்ய வைக்க முடியாது. தந்தை மிகவும் அன்பானவர், அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. பாபா தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார் என்றால் கண்டிப்பாக பழைய உலகத்தின் வினாசத்தையும் அவர் செய்விப்பார் அல்லவா! சத்யுகத்தில் இலஷ்மி - நாராயணன் இருந்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் முயற்சியின் மூலம் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். போதை இருக்க வேண்டும். பாரதத்தில் இராஜ்யம் செய்தார்கள். சிவபாபா இராஜ்யத்தை கொடுத்துவிட்டு சென்றிருந்தார், சிவபாபா இராஜ்யம் செய்து விட்டு சென்றிருந்தார் என்று சொல்ல முடியாது. இல்லை. பாரதத்திற்கு இராஜ்யத்தை கொடுத்து விட்டு சென்றிருந்தார். இலஷ்மி நாராயணன் இராஜ்யம் செய்தார்கள் அல்லவா. பிறகு பாபா இராஜ்யத்தை கொடுக்க வந்துள்ளார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் சக்கரத்தை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். நீங்கள் தான் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். குறைவாக முயற்சி செய்கிறார்கள் என்றால் இவர்கள் குறைவாக பக்தி செய்துள்ளார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.. அதிகமாக பக்தி செய்யக்கூடியவர்கள் முயற்சியும் அதிகமாக செய்வார்கள். எவ்வளவு தெளிவாக்கி புரிய வைக்கின்றார் ஆனாலும் புத்தியில் நின்றால் தானே. உங்களுடைய வேலை முயற்சி செய்ய வைப்பதாகும். குறைவாக பக்தி செய்திருந்தார்கள் என்றால் யோகம் ஈடுபடாது. சிவபாபாவின் நினைவு புத்தியில் நிற்கவே நிற்காது. ஒருபோதும் முயற்சியில் தளர்ந்து விடக்கூடாது. மாயையை பலசாலி என்று பார்த்து இதயம் நின்று விடக்கூடாது. மாயையின் புயல் நிறைய வரும். ஆத்மா தான் அனைத்தையும் செய்கிறது என்பதும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. சரீரம் அழிந்து விடும். ஆத்மா போய் விட்டது என்றால் சரீரம் மண்ணாகி விடும். அது மீண்டும் கிடைக்கவே கிடைக்காது. பிறகு அதனை நினைவு செய்து அழுவது போன்றவற்றின் மூலம் என்ன தான் பலன் இருக்கிறது. அதே பொருள் மீண்டும் கிடைக்குமா என்ன! ஆத்மா சென்று வேறொரு சரீரத்தை எடுத்திருக்கிறது. இப்போது நீங்கள் எவ்வளவு உயர்ந்த வருமானத்தை சம்பாதிக்கிறீர்கள். உங்களுடையது தான் சேமிப்பாகிறது, மற்ற அனைவருடையதும் இல்லாமல் போய்விடும்.

 

பாபா கள்ளம் கபடமற்ற வியாபாரியாக இருக்கின்றார் ஆகையினால் தான் உங்களுக்கு ஒரு பிடி அவலுக்கு பதிலாக 21 பிறவிகளுக்கு மாளிகையைக் கொடுத்து விடுகிறார், எவ்வளவு வட்டி கொடுக்கிறார். எதிர்காலத்திற்காக எவ்வளவு வேண்டுமோ சேமித்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்படி கிடையாது, கடைசியில் வந்து சேமியுங்கள் என்று சொன்னால், அந்த சமயத்தில் பெற்றுக் கொண்டு என்ன செய்வது.? புத்தியற்ற வியாபாரியா என்ன?. வேலைக்கு உதவாது ஆனால் வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுபோன்று வாங்குவார்களா என்ன? உங்களுக்கு பிடி அவலுக்கு பதிலாக 21 பிறவிகளுக்கு மாளிகை கிடைத்து விடுகிறது. எவ்வளவு வட்டி கிடைக்கிறது. நம்பர் ஒன் கள்ளம் கபடமற்றவன் நான் தான் என்று பாபா கூறுகின்றார். பாருங்கள் உங்களுக்கு உலக இராஜ்யத்தைக் கொடுக்கின்றேன்!, நீங்கள் என்னுடையவர்களாக ஆகி மட்டும் சேவை செய்யுங்கள். கள்ளம் கபடமற்றவர் ஆகையினால் தான் அனைவரும் நினைவு செய்கிறார்கள். நீங்கள் இப்போது ஞான மார்க்கத்தில் இருக்கின்றீர்கள். இப்போது பாபாவின் ஸ்ரீமத்படி நடங்கள் மற்றும் இராஜ்யத்தை பெறுங்கள். பாபா நாங்கள் இராஜ்யத்தை அடைய வந்துள்ளோம் என்று சொல்கிறார்கள். அதுவும் சூரியவம்சத்தில். நல்லது, உங்களுடைய வாயல் இனிமையாக இருக்கட்டும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) ஸ்ரீமத்படி நடந்து இராஜ்யத்தை அடைய வேண்டும். ஒருபிடி அவலைக் கொடுத்து 21 பிறவிகளுக்கான மாளிகையைப் பெற வேண்டும். எதிர்காலத்திற்காக வருமானத்தை சேமிக்க வேண்டும்.

 

2) குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே இந்தப் பழைய உலகத்திலிருந்து பற்றை நீக்கி முழுமையாகத் தூய்மையாக வேண்டும். அனைத்தையும் செய்து கொண்டே புத்தி பாபாவின் பக்கம் ஈடுபட்டிருக்க வேண்டும்.

 

வரதானம்:

ஆயிரம் கரங்களையுடைய தந்தை பிரம்மாவினுடைய துணையை நிரந்தரமாக அனுபவம் செய்யக்கூடிய உண்மையான சிநேகி ஆகுக.

 

நிகழ்கால சமயத்தில் ஆயிரம் கரங்களையுடைய பிரம்மா தந்தையின் நடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எவ்வாறு ஆத்மா இல்லாமல் கரத்தினால் எதுவும் செய்யமுடியாதோ, அவ்வாறு பாப்தாதா இல்லாமல் கரங்களாக இருக்கும் குழந்தைகளால் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு காரியத்திலும் முதலில் தந்தையினுடைய உதவி உள்ளது. எதுவரை ஸ்தாபனையின் பாகம் உள்ளதோ, அதுவரை பாப்தாதா குழந்தைகளுடைய ஒவ்வொரு எண்ணம் மற்றும் வினாடியில் துணையாக இருக்கின்றார்கள். ஆகையினால், ஒருபொழுதும் பிரிவினுடைய திரையைப் போட்டு பிரிந்துவிடாதீர்கள். அன்புக் கடலின் அலைகளில் ஆடுங்கள், குணங்களின் மகிமையைப் பாடுங்கள், ஆனால், காயமடைந்தவர் ஆகாதீர்கள். தந்தையினுடைய அன்பின் பிரத்யட்ச சொரூபமாக சேவையில் சிநேகி ஆகுங்கள்.

 

சுலோகன்:

அசரீரி ஸ்திதியின் அனுபவம் மற்றும் பயிற்சியே நம்பர் முன்னால் வருவதற்கான ஆதாரம் ஆகும்

 

ஓம்சாந்தி