ஓம் சாந்தி.
நிராகார் பகவான் வாக்கு. அவருக்கோ ஒரே ஒரு பெயர் தான் -
சிவபகவான் வாக்கு, புரிய வைப்பதற்காக, உறுதியாக நிச்சயம்
செய்விப்பதற்காக இதைச் சொல்ல வேண்டி உள்ளது. - நான் யாராக
இருக்கிறேன், எனது பெயர் ஒரு போதும் மாறுவதில்லை. பாபா சொல்ல
வேண்டியதாகிறது சத்யுகத்தின் தேவி- தேவதைகள் புனர்ஜென்மத்தில்
வரத் தான் செய்கின்றனர். பாபா இந்தச் சரீரத்தின் மூலம்
குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக் கிறார். நீங்கள்
ஆன்மிக யாத்திரையில் இருக்கிறீர்கள். பாபாவும் குப்தமாக உள்ளார்,
தாதாவும் குப்தமாக உள்ளார். பிரம்மாவின் உடலில் பரமபிதா
வருகிறார் என்பதை யாருமே அறிந்திருக்க வில்லை. குழந்தைகளும்
குப்தமாக உள்ளனர். அனைவரும் சொல் கின்றனர், நாம் சிவபாபா வின்
குழந்தைகள். ஆகவே அவரிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். அவரது
ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். இதுவோ நிச்சயம் உள்ளது - அவர்
நம்முடைய சுப்ரீம் தந்தை, ஆசிரியர், சத்குரு. எவ்வளவு
இனிமையிலும் இனிமையான விஷயங்கள்! நாம் நிராகார் சிவபாபாவின்
மாணவர்கள். அவர் நமக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். மேயரோ (நகரத்
தந்தை), ஹே குழந்தைகளே என அழைக்க மாட்டார். சந்நியாசிகளும் கூட
இது போல் சொல்ல முடியாது. குழந்தைகளே என அழைப்பதோ தந்தையின்
உரிமையாகும். குழந்தைகளும் அறிவார்கள், நாம் நிராகார் தந்தையின்
குழந்தைகள். அவருக்கு முன்பாக அமர்ந்துள்ளோம். நாம் பிரஜாபிதா
பிரம்மாகுமார்-குமாரிகள். பிரஜாபிதா என்ற சொல்லைப் போடாத
காரணத்தால் மனிதர்கள் குழப்பமடைகின்றனர். பிரம்மாவோ சூட்சும
வதனவாசி தேவதை எனப் புரிந்து கொண்டுள்ளனர். அவர் பிறகு இங்கே
எப்படி வந்தார்? பிரம்மா தேவதாய நமஹ, சங்கர் தேவதாய நமஹ எனச்
சொல்கின்றனர். பிறகு குரு என்றும் சொல் கின்றனர் - குரு பிரம்மா,
குரு விஷ்ணு. இப்போது விஷ்ணு அல்லது சங்கரோ குரு அல்ல. சங்கர்,
பார்வதிக்குக் கதை சொல்கிறார் என்றால் அவர் குரு ஆகிறார் எனப்
புரிந்து கொண்டுள்ளனர். குரு விஷ்ணு என்பதும் கிடையாது.
சத்யுகத்தில் லட்சுமி-நாராயணர் குரு ஆவ தில்லை. கிருஷ்ணரையும்
கூடப் பெரிய குருவாக, கீதையின் பகவானாக ஆக்கி விட்டனர். ஆனால்
பகவான் ஒருவர் தான். இவ்விஷயங்களைக் குழந்தைகளாகிய நீங்கள்
உறுதிப்படுத்த வேண்டும்.
நீங்கள் குப்த சேனையாக இருக்கிறீர்கள். இராவணன் மீது வெற்றி
பெறுகிறீர்கள். அதாவது மாயாவை வென்று உலகை வென்றவராக ஆகிறீர்கள்.
செல்வத்தை மாயா எனச் சொல்வ தில்லை. செல்வத்திற்குச் சொத்து எனச்
சொல்லப் படுகின்றது. ஆக, பாபா குழந்தை களுக்குப் புரிய
வைக்கிறார் - குழந்தைகளே, இப்போது மரணம் முன்னாலேயே நின்று
கொண்டுள்ளது. இது அதே 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்தையாகும்.
நிராகார் பகவான் வாக்கு என்பதற்குப் பதில் சாகார் (சரீரமுடைய)
கிருஷ்ணரின் பெயரை எழுதி விட்டனர். பாபா சொல்கிறார் - இப்போது
உங்களுக்குக் கிடைக்கும் ஞானம் வருங்கால ஆஸ்திக்கானது. ஆஸ்தி
கிடைத்து விட்டால் பிறகு ஞானத்திற்குத் தேவை இருக்காது. இந்த
ஞானமே தூய்மை யின்மையிலிருந்து தூய்மை யாவதற்கானது. தூய்மையான
உலகத்தில் யாருக்கும் குரு வைத்துக் கொள்ளத் தேவை இருக்காது.
உண்மையில் குருவோ ஒரு பரமபிதா பரமாத்மா தான். அழைக்கவும்
செய்கின்றனர், பதீத-பாவனா வாருங்கள் என்று. அதனால் புரிய வைக்க
வேண்டும் இல்லையா? அவர் தான் சுப்ரீம் குரு ஆவார். அனைவருக்கும்
சத்கதி அளிக்கும் வள்ளல் இராமர் எனப் பாடப்படுகிறது. ஆக,
எப்போது அனைவரும் துர்கதியில் உள்ளனரோ, அப்போது அவர் வருவார்.
அங்கே இருப்பதோ பாற்கடல், சுகத்தின் கடல். விகாரங்களின் நதி
அங்கே இருப்ப தில்லை. விஷ்ணு பாற்கடலில் இருப்பாரென்றால்
அவருடைய குழந்தைகளும் அவருடன் கூடவே இருப்பார்கள். இப்போது
நீங்கள் பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர்கள். பிறகு விஷ்ணு
குலத்தவராக ஆவீர்கள். அவர்கள் முழுமையான வைஷ்ணவர்கள் இல்லையா?
தேவதைகளுக்கு முன் ஒரு போதும் விதிமுறைக்குப் புறம்பான
வெங்காயம் முதலிய பொருள்களை வைக்க மாட்டார்கள். மீண்டும் இது
போல் தேவதை ஆக வேண்டுமானால் இவை அனைத்தையும் விட்டுவிட வேண்டும்.
இது சங்கமயுகம். பிராமணர்கள் நீங்கள் தான் சங்கமயுகத்தில்
இருக்கிறீர்கள், மற்ற அனைவரும் கலியுகத்தில் உள்ளனர் என்பது
புரிய வைக்கப்பட்டுள்ளது. எது வரை பிராமணர் ஆகவில்லையோ, அது வரை
புரிந்து கொள்ள முடியாது. பாபா சொல்கிறார், நான் கல்பத்தின்
சங்கம யுகத்தில் வருகிறேன். இது சங்கமயுகம் என்று அவர்கள்
புரிந்து கொள்வதே இல்லை. உலகம் மாறுகிறது அல்லவா? பாடவும்
செய்கின்றனர். ஆனால் எப்படி மாறுகிறது என்பதை யாரும் அறிந்து
கொள்ளவில்லை. சும்மா வெறுமனே வாயினால் சொல்லி விடுகின்றனர்.
நீங்கள் நல்லபடியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஸ்ரீமத்
படி நடப்பதன் மூலம் தான் சிரேஷ்டமானவர்களாக ஆவோம். பாபாவை
நினைவு செய்ய வேண்டும். தேகத்தோடு கூடவே தேகத்தின் அனைத்து
சம்மந்தங் களையும் மறந்துவிட வேண்டும். பாபா, சரீரம் இல்லாமல்
தான் நம்மை அனுப்பி வைத்தார். மீண்டும் அது போலவே திரும்பிச்
செல்ல வேண்டும். இங்கே பாகத்தை நடிப்பதற்காக வந்துள்ளோம். இது
குப்த முயற்சி. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும்.
நீங்கள் அடிக்கடி இதை மறந்து விடுகிறீர்கள். பாபாவை மறப்பதால்
மாயாவின் அடி விழுந்து விடுகிறது. இதுவும் விளையாட்டு, அல்லா
அலாவுதீன் காட்டுகின்றனர் இல்லையா? அல்லா அதாவது சிவ பாபா (ஆதி
சநாதன தர்மத்தை ஸ்தாபனை செய்தார். ஏற்றுக் கொண்டு நினைவு
செய்தவர்களுக்குச் சொர்க்கம் கிடைத்தது. இந்தத் தர்மத்தை யார்
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார்? அல்லா முதல் நம்பர் தர்மத்தை
ஸ்தாபனை செய்தார். ஹாத்மத்தாயின் விளையாட்டையும் காட்டுகின்றனர்.
வாயில் கூழாங்கல்லைப் போட்டுக் கொள்ளவில்லை என்றால் மாயா வந்து
விடும். உங்களது நிலைமையும் இது தான். தந்தையை மறந்து விட்டு
மற்ற அனைவரையும் நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள்.
இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் சாந்திதாமம்
சென்று கொண்டிரு கிறோம். பிறகு சுகதாமத்தில் வருவோம்.
துக்கதாமத்தை மறந்து விடுவதற்கான புருஷôர்த்தம் செய்யுங் கள்.
இவை அனைத்துமோ அழிந்துவிடப் போகின்றன. நாம் லட்சாதிபதி, அது
போல் இருக் கிறோம் என்று இதையெல்லாம் புத்தியில் வைக்கக் கூடாது.
நாமோ அசரீரியாக இருக்கிறோம். இதுவோ பழைய பொருள். இந்தப் பழைய
செருப்பு (சரீரம்) மிகுந்த துக்கம் கொடுத்துள்ளது. எவ்வளவு நோய்
அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு குஷி அடைய வேண்டும். நடனமாட
வேண்டும். கர்மபோகம், கணக்கு-வழக்கு என்றால் முடித்துவிட
வேண்டும். இதற்குப் பயப்படக் கூடாது. நாம் யோக பலத்தினால்
விகர்மங்களை விநாசம் செய்ய முடியவில்லை என்றால் கர்ம வினையை
அனுபவிப்பதன் மூலம் முடிக்க வேண்டிய திருக்கும். இதில்
குழப்பமடைவதற் கான விஷயமே கிடையாது. இதுவோ பழைய சரீரம். இது
விரைவில் முடிந்து போனால் நல்லது தான். மேலும் உங்களது 7 நாள்
பட்டியும் புகழ் பெற்றது. 7 நாள் நன்றாகப் புரிந்து கொண்டு
புத்தியில் தாரணை செய்து பிறகு எங்கே வேண்டுமானாலும்
செல்லுங்கள். முரளியோ கிடைத்துக் கொண்டே இருக்கும். அதே போதும்.
பாபாவை நினைவு செய்தவாறே சுற்றி வாருங்கள். 7 நாளில் சுயதரிசன
சக்கரதாரி ஆக வேண்டும். 7 நாளுக்கான பாடமும் வைக்கின்றனர். 7
நாள் என்பது புகழ் பெற்றது. கிரந்தத்தையும் 7 நாள் வைக்கின்றனர்.
பட்டியும் 7 நாள் வைக்கப்படுகின்றது. யாரெல்லாம் வருகின்றனரோ
அவர்களுக்கு 7 நாட்கள் சொல்ல வேண்டும் என்பதில்லை. மனிதர்களின்
நாடியையும் பார்க்க வேண்டியுள்ளது. முதலிலேயே 7 நாள் கோர்ஸ்
என்று சொன்னால் சிலர் பயந்து விடுகின்றனர். நம்மால் இருக்க
முடியவில்லை என்றால் என்ன செய்வது என நினைக்கின்றனர். அவர்கள்
சென்று விடுகின்றனர். அதனால் மனிதர்களைப் பார்க்க வேண்டி உள்ளது.
ஒவ்வொருவரின் நாடியையும் பார்க்க வேண்டும். முதலிலோ சோதித்துப்
பார்க்க வேண்டும். எவ்வளவு நாளுக்காக வந்திருக்கின்றனர்?
சட்டென்று 7 நாள் எனச் சொன்னதும் பயந்து விடுகின்றனர். 7 நாள்
யாரும் கொடுக்க முடிவதில்லை. நாடி பிடித்துப் பார்த்ததுமே
உங்களுக்கு இன்ன நோய் என்று சொல்லக் கூடிய வைத்தியர்கள்
இருக்கின்றனரா என்ன? இவரோ உங்களுடைய அழிவற்ற சர்ஜன். குழந்தை
களாகிய நீங்களும் கூட மாஸ்டர் சர்ஜன்கள். இது ருத்ர ஞான யக்ஞம்.
நீங்கள் சொல்கிறீர்கள், ஒரு விநாடியில் மனிதருக்கு ஜீவன்முக்தி
கிடைக்க முடியும். ஆகவே யாராவது சொல் கின்றனர், ஒரு விநாடியில்
ஜீவன்முக்தி கிடைக்கும் என்றால் 7 நாள் என்று ஏன் சொல்
கிறீர்கள்? ஒரு விநாடியின் விஷயத்தைச் சொல்லுங்கள். பயந்து
விடுகின்றனர். நாமோ இங்கே இருக்க முடியாது என நினைக்கின்றனர்.
அதனால் முதலில் நாடியைப் பார்க்க வேண்டும். அனைவருக் காகவும்
ஒரே விஷயம் இருக்க முடியாது. அநேகக் குழந்தைகள் சேவைக்குக்
குந்தகம் (டிஸ்சர்விஸ்) செய்கின்றனர். படிவம் நிரப்பி வாங்கும்
போது நாடி பிடித்துப் பார்த்துக் கேட்க வேண்டும். எவ்வளவு நாள்
இருக்க முடியும்? அதையும் கேட்க வேண்டியுள்ளது. நல்லது, இதையோ
சொல்லுங்கள் - அனைவரின் பகவான் ஒருவர் இல்லையா? பரமபிதாவோடு
உங்களுக்கு என்ன சம்மந்தம்? முதலிலோ இந்த விஷயங்களைப் புரிய
வைக்க வேண்டி உள்ளது - அவர் தந்தை, நாம் அவருடைய குழந்தைகள்.
தந்தையோ ஆஸ்தி கொடுக்கிறார். சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்க
வேண்டும். சொர்க்கத்தைப் படைப்பவர் அவர். இப்போதோ நரகமாக உள்ளது.
பாரதம் சொர்க்கமாக இருந்தது. உலகத்தின் எஜமானர்களாக
இருந்தீர்கள். தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஆக, மாயா
இராஜ்யத்தை அபகரித்துக் கொண்டு விட்டது. இப்போது மீண்டும் மாயா
மீது வெற்றி பெற்று இராஜ்யத்தை அடைய வேண்டும். பழைய தூய்மை
இல்லாத கலியுக உலகின் விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது.
ஆகவே நிச்சயமாகத் தூய்மையான உலகை ஸ்தாபனை செய்ய
வேண்டியதிருக்கும். கொஞ்சம் ஜாடை (மறை முகமாக) காட்ட (கூற)
வேண்டும். பிறகு சில நாட்கள் போனதும் அந்த விஷயங்களைப் புரிந்து
கொண்டே செல்வார்கள். இன்று இல்லையெனில் நாளை வருவார்கள். எங்கே
செல்ல முடியும்? ஒரே புகலிடம் மட்டுமே உள்ளது - சத்கதி
கிடைப்பதற்கு. ஒரு விநாடியில் ஜீவன் முக்தி கிடைக்க வேண்டும்.
கடை பாருங்கள், எப்படி இருக்கிறது. அதற்கு நீங்கள் விற்பனை
யாளர்கள். யார் நல்ல விற்பனையாளராக உள்ளனரோ, அவர்களுக்குப்
பதவியும் நல்லதாகக் கிடைக்கும். விற்பனை செய்வதற்கும் புத்தி
வேண்டும். புத்தி இல்லை யென்றால் அவர் என்ன சேவை செய்வார்?
முதலிலோ நிச்சயத்தை ஏற்படுத்துங்கள். பிறகு 7 நாள் கோர்ஸின்
விஷயம். அட, பாபாவோ ஆஸ்தியைத் தருவதற்காக வந்துள்ளார். பாரதம்
சுகதாமமாக இருந்தது. இப்போது பாரதம் துக்கதாமமாக உள்ளது. பிறகு
சுகதாமமாக எப்படி ஆகிறது, யார் ஆக்குகிறார்? முதலில் வழி சொல்ல
வேண்டும் - நாம் ஆத்மாக்கள் சாந்திதாமத்தில் வசிப்பவர்கள்.
பிறகு நடிப்பதற்காக இங்கே வருகிறோம்.
இப்போது பாபா சொல்கிறார், குழந்தைகளே, வீட்டுக்குத்
திரும்பிச் செல்ல வேண்டும். பாபாவை நினைவு செய்வதன் மூலம்
உங்கள் விகர்மங்கள் விநாசமாகும். நீங்கள் பறப்பதற்கான
துண்டிக்கப்பட்ட இறக்கைகள் மீண்டும் கிடைத்துக் கொண்டே
இருக்கும். நீங்கள் என்னிடத்தில் வந்து விடுவீர்கள். பாபா தான்
வந்து சோழியில் இருந்து வைரம் போல் மாற்றுகிறார். இந்த வருமானம்
மிகப்பெரியது. பாபாவை நினைவு செய்வதன் மூலம் 21 பிறவிகளுக்கு
நீங்கள் நோயற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள். சக்கரத்தை நினைவு செய்
வதால் நீங்கள் சதா ஆரோக்கியமானவராக, செல்வந்தராக ஆவீர்கள்.
இப்போதோ இரண்டுமே இல்லை. உங்களிலும் கூட நம்பர்வார்
இருக்கின்றீர்கள். குழந்தைகளை மாயா சட்டென்று சாப்பிட்டு விடும்.
பிறகும் கூட இன்னும் கொஞ்சம் போனால் நினைவு வரும். கடைசியில்
இராஜாக்கள் கூட வருவார்கள். சந்நியாசிகள் முதலானோரும்
வருவார்கள். கன்யாக்கள், மாதாக்களாகிய நீங்கள் தான் அம்பை
எய்திருக்கிறீர்கள். இங்கே கோவிலும் கூட மிகச்சரியாகக்
கட்டப்பட்டுள்ளது. குமாரி கன்யாவுக் கும் கூடக் கோவில் உள்ளது.
அதர் குமாரி என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை.
யார் இல்லறத்தில் இருந்தவாறு பி.கே. ஆகின்றனரோ, அவர்கள் தான்
அதர் எனச் சொல்லப்படுகின்றனர். குமாரியோ, குமாரியே தான். உங்கள்
நினைவாக முழுமையான கோவில் உருவாகியுள்ளது. கல்பத்திற்கு முன்பு
கூட நீங்கள் சேவை செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு குஷி
இருக்க வேண்டும்! உங்களுடையது எவ்வளவு பெரிய பரீட்சை! படிப்பு
சொல்லித் தருபவர் பகவான்.
(டெல்லி பார்ட்டி பாபாவிடம் விடை பெற்றுத் தங்கள் இருப்பிடம்
சென்று கொண்டுள்ளனர்). குழந்தைகள் நன்றாகப் புத்துணர்வு
பெற்றுச் சென்று கொண்டிரு கின்றனர். நம்பர்வாரோ இருக்கவே
செய்கிறீர்கள். யார் நன்றாகப் புரிந்து கொள்கின்றனரோ, அவர்கள்
நன்றாகப் புரிய வைக்கவும் செய்வார்கள். இதையோ குழந்தைகள்
அறிவார்கள், பாபாவும் குப்தமாக உள்ளார், தாதாவும் குப்தமாக
உள்ளார். நாமும் குப்தமாக இருக்கிறோம். யாருக்கும் இது தெரியாது.
(வெளியுலக) பிராமணர்களும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் புரிய
வைக்க முடியும் - நீங்கள் விகார வழி வம்சாவளி, நாங்கள் பிரம்மா
வாய் வழி வம்சா வளி. நீங்கள் தூய்மை இல்லாதவர்கள் நாங்கள்
தூய்மையாக ஆகிக் கொண்டிருக்கிறோம். பிரஜாபிதா பிரம்மாவின்
குழந்தைகள் உள்ளனர் என்றால் நிச்சயமாகப் புது உலகத்தினர்
ஆகின்றனர் இல்லையா? சத்யுக தேவதைகள் புது உலகத்தினரா அல்லது
பிராமணர்கள் புது உலகத்தினரா? பிராமணர்களுக்குக் குடுமி உள்ளது
இல்லையா? பிராமணக் குலம் மேலானதா, அல்லது தலை (தேவதா குலம்)
மேலானதா? அதில் பிறகு சிவபாபாவையும் மறைத்து விட்டுள்ளனர்.
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா மலர்களின் தோட்டத்துக்குச்
சொந்தக் காரர். இராவணனை தோட்டத்தின் சொந்தக் காரர் எனச் சொல்ல
மாட்டார்கள். இராவணனோ முள்ளை உருவாக்குகிறான். பாபா மலர்களை
உருவாக்குகிறார். இது முழுவதும் முள் நிறைந்ந காடு. ஒருவர்
மற்றவருக்குத் துக்கம் கொடுத்துக் கொண்டிரு கின்றனர். பாபா
புரிய வைக்கிறார், யாருக்கும் துக்கம் கொடுக் காதீர்கள்.
கோபமாகப் பேசு வதால் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். பாவாத்மா
ஆகி விடுகின்றனர். அவர்களுக்குத் தண்டனையும் மிகக்
கடுமையானதாகும். பாபாவுடன் உதவியாளர் ஆவதற்கான உறுதி மொழி
கொடுத்து விட்டுப் பிறகு சேவைக்குக் குந்தகம் (டிஸ்ஸர்விஸ்)
செய்கின்றனர் என்றால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை உள்ளது.
குழந்தை ஆகிவிட்டுப் பிறகு பாவ கர்மம் செய்தால் நூறு மடங்கு
தண்டனை கிடைக்கும். அதனால் தைரியம் வைத்து ஸ்ரீமத்படி நடந்து
செல்லுங்கள். நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். பிரஜை என்றால்
பிரஜையே போதும் என்று அந்த மாதிரி இருக்கக் கூடாது. இதுவோ
மிகப்பெரிய மாலையாகும். அதில் வருவதற்கான முயற்சி செய்வதற்குப்
போதுமான நேரம் உள்ளது. இதில் ஹார்ட் ஃபெயிலாகி விடக் கூடாது.
சிவபாபாவிடம் ஒரு விநாடியில் ஜீவன் முக்தி பெறுவதற்கு இந்த ஒரு
கடை மட்டுமே உள்ளது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட
குழந்தைகளுக்குத் தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. உயர்ந்த பதவி பெறுவதற்குச் சிவபாபாவின் கடைக்கு
நல்ல விற்பனையாளராக ஆக வேண்டும் ஒவ்வொருவரின் நாடி பார்த்துப்
பிறகு அவருக்கு ஞானம் தர வேண்டும்.
2. கோபத்தின் வசமாகி வாயிலிருந்து துக்கம் தரும்
வார்த்தையைப் பேசக் கூடாது. பாபாவின் உதவியாளர் ஆவதற்கான
உறுதிமொழி கொடுத்த பின் சேவைக்கு எதிராக எந்த ஒரு காரியமும்
செய்யக் கூடாது.