09-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய உங்களை இந்த கசப்பான உலகத்திலிருந்து விடுவித்து இனிமையானவர் ஆக்குவதற்காக இனிமையான தந்தை வந்திருக்கின்றார். ஆகையால், மிக மிக இனிமையானவர் ஆகுங்கள்.

கேள்வி:
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு இந்தப் பழைய உலகத்தின் மீது ஏன் வெறுப்பு வந்திருக்கிறது?

பதில்:
ஏனெனில், இந்த உலகம் மிகக் கொடூரமான நரகமாகிவிட்டது, இதில் அனைத்துமே கசப்பானதாக உள்ளன. பதீதமானவர்களையே கசப்பானவர்கள் என்று கூறப்படுகிறது. அனைவரும் விஷ நதியில் மூழ்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆகையால், உங்களுக்கு இப்பொழுது இதன் மீது வெறுப்பு வருகிறது.

கேள்வி:
மனிதர்களுடைய ஒரே கேள்வியில் இரண்டு தவறுகள் உள்ளன, அது என்ன கேள்வி மற்றும் தவறுகள் என்னென்ன?

பதில்:
என் மனதிற்கு எவ்வாறு சாந்தி கிடைக்கும்? என்று மனிதர்கள் கூறுகின்றனர். இதில் முதல் தவறு - எதுவரை மனம் சரீரத்திலிருந்து விடுபடவில்லையோ, அதுவரை மனம் எவ்வாறு சாந்தி அடைய முடியும்? மற்றும் இரண்டாவது தவறு - அனைத்தும் ஈஸ்வரனுடைய ரூபம் என்றும், பரமாத்மா சர்வ வியாபி என்றும் கூறுகின்றனர், எனில், சாந்தி யாருக்கு வேண்டும் மற்றும் யார் கொடுப்பார்கள்?

ஓம் சாந்தி.
சாந்திதாமத்திலிருந்து தந்தை வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். மேலும், எந்த சிந்தனையில் அமர்ந்திருக்கிறீர்கள்? என்று குழந்தைகளிடம் கேட்கின்றார். தந்தை, சுகதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இனிமையான வீடு, சாந்திதாமத் திலிருந்து வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் தன்னுடைய இனிமையான வீட்டை மட்டும் நினைவு செய்து கொண்டு இருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் நினைவு வந்துகொண்டே இருக்கிறதா என்று தந்தை கேட்கின்றார். இந்த உலகம் ஒன்றும் இனிமை யானது அல்ல, மிகவும் கசப்பானது ஆகும். கசப்பான பொருள் துக்கம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. இப்பொழுது நாம் இனிமையான வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்பதைக் குழந்தை கள் அறிந்திருக்கிறீர்கள். நம்முடைய எல்லையற்ற தந்தை மிகவும் இனிமையானவர் ஆவார். மற்றபடி, தந்தை ஸ்தானத்தில் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் இந்த சமயத்தில் மிகவும் கசப்பானவர்களாக, பதீதமாக, மோசமாக இருக்கின்றனர். இவரோ அனைவருடைய எல்லையற்ற தந்தை ஆவார். இப்பொழுது யாருடைய வழிப்படி நடக்க வேண்டும்? எல்லையற்ற தந்தை கூறுகின்றார் - குழந்தைகளே! இப்பொழுது தனது சாந்தி தாமத்தை நினைவு செய்யுங்கள், கூடவே சுகதாமத்தையும் நினைவு செய்யுங்கள். இந்த துக்கதாமத்தை மறந்துவிடுங்கள். இதற்கு மிகக் கடுமையான பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது - மிகக் கொடூரமான நரகம், இதில் விஷ நதி பாய்கிறது. இந்த முழு உலகமுமே விஷ நதியாகும் என்று தந்தை புரிய வைக்கின்றார். அனைவரும் இந்த சமயத்தில் துக்கத்தை அடைந்து கொண்டு இருக்கின்றனர். ஆகையால், இதன் மீது வெறுப்பு ஏற்படுகிறது. மிகவும் அழுக்கான உலகம் இது. இதன் மீது வைராக்கியம் வர வேண்டும். எவ்வாறு சந்நியாசிகளுக்கு வீடு வாசல் மீது வைராக்கியம் வருகிறது அல்லவா. மனைவி என்பவர் பெண் நாகம் ஆவார், வீட்டில் இருப்பது என்றால் நரகத்தில் இருப்பது, நரகத்தில் மூழ்குவது என்பதாகும் என்று புரிந்திருக்கின்றனர். இவ்வாறு கூறி, வீட்டை விட்டு சென்றுவிடுகின்றனர். உண்மையில் இருவருமே நரகத்தின் வாசல் ஆவார்கள். அவர்களுக்கு வீட்டில் இருப்பதற்குப் பிடிக்கவில்லை, ஆகையால், காட்டிற்குச் சென்றுவிடுகின்றனர். நீங்கள் வீடுவாசலை விடுவதில்லை, வீட்டில் இருக்கிறீர்கள். ஞானத்தின் மூலம் புரிந்திருக் கிறீர்கள். இது விஷ நதி என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். அனைவரும் பிரஷ்டாச்சாரி (கீழானநிலை) ஆகிக்கொண்டே இருக்கின்றனர். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்வேன். அங்கிருந்து உங்களை பாற்கடலுக்கு அனுப்பி வைப்பேன். முழு உலகத்தின் மீதும் வைராக்கியத்தை ஏற்படுத்துகின்றார். ஏனெனில், இந்த உலகத்தில் சாந்தி இல்லை. அனைத்து மனிதர்களும் சாந்திக்காக எவ்வளவு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். சந்நியாசி யாராவது வந்தார்கள் என்றால், அவர்களிடம் மனதிற்கு சாந்தி வேண்டும் அதாவது முக்திதாமத்திற்குச் செல்ல விரும்புகிறோம் என்று கூறுவார்கள். கேள்வியே எவ்வாறு கேட்கின்றனர்! எதுவரை ஆத்மா சரீரத்திலிருந்து விடுபட வில்லையோ, அதுவரை மனம் சாந்தியாக இருக்க முடியாது. ஒன்று ஈஸ்வரன் சர்வவியாபி என்று கூறுகின்றனர். நாம் அனைவரும் ஈஸ்வரனுடைய ரூபம் என்றால் பிறகு இந்த கேள்வி ஏன் எழுகிறது? ஈஸ்வரனுக்கு ஏன் சாந்தி வேண்டும்? சாந்தி உங்களது கழுத்து மாலையாக உள்ளது என்று தந்தை புரியவைக்கின்றார். எங்களுக்கு சாந்தி வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். முதலில், நான் யார்? என்பதைக் கூறுங்கள். ஆத்மா தன்னுடைய சுயதர்மம் மற்றும் இருப்பிடத்தை மறந்து விட்டது. தந்தை கூறுகின்றார் - ஆத்மாவாகிய நீங்கள் சாந்த சொரூபமானவர்கள், சாந்தி தேசத்தில் இருக்கக் கூடியவர்கள். நீங்கள் தன்னுடைய இனிமையான வீடு மற்றும் இனிமையான தந்தையை மறந்து விட்டீர்கள். பகவான் என்று ஒருவரே இருக்கின்றார். பக்தர்கள் அனேகர் இருக்கின்றனர். பக்தர் பக்தர் தான், அவரை பகவான் என்று எவ்வாறு கூற முடியும்? ஹே, பகவானே! என்று பக்தர்கள் தவம், பிரார்த்தனை செய்கின்றனர். ஆனால், பகவான் யார் என்று கூட அறிந்திருக்கவில்லை. ஆகையினால், துக்கம் நிறைந்தவர்கள் ஆகிவிட்டனர். உண்மையில் நாம் சாந்திதாம நிவாசிகளாக இருந்தோம், பிறகு சுகதாமத்திற்குச் சென்றோம், பிறகு இராவண இராஜ்யத்திற்கு வந்திருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.

நீங்கள் ஆல்ரவுண்ட் நடிப்பு நடிக்கக்கூடியவர்கள் ஆவீர்கள். முதலில் நீங்கள் சத்யுகத்தில் இருந்தீர்கள். பாரதம் சுகதாமமாக இருந்தது. இப்பொழுதோ துக்கதாமமாக இருக்கிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் சாந்திதாமத்தில் இருக்கிறீர்கள், தந்தை கூட அங்கே தான் இருக்கின்றார். பதீதபாவனர், ஞானக்கடல் என்ற மகிமை தந்தைக்கு உள்ளது. ஞானத்தின் மூலம் பாவனம் (தூய்மை) ஆக்குகின்றார். அவர் ஞானத்தின் கடலாக இருக்கின்றார். ஆகையினாலேயே அவரை அழைக்கின்றனர். இங்கே ஞானம் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது. எப்பொழுது ஞானக்கடல் வருவாரோ, அவர் மூலம் ஞான நதிகள் வெளிப்படுவார்கள், அப்பொழுதே ஞான ஸ்நானம் செய்ய முடியும். ஞானக்கடல் என்று ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவிற்கு மட்டும் தான் கூறப்படுகிறது. அவர் எப்பொழுது வருவாரோ, குழந்தைகளுக்கு பிறப்பு கொடுப்பாரோ, அப்பொழுதே அவர்களுக்கு ஞானம் கிடைக்கிறது மற்றும் சத்கதி ஏற்படுகிறது. எப்பொழுதிலிருந்து இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ, அப்பொழு திலிருந்து பக்தி ஆரம்பமானது அதாவது பூஜாரி ஆகிவிட்டனர். இப்பொழுது மீண்டும் நீங்கள் பூஜைக் குரியவர் ஆகிக்கொண்டு இருக்கிறீர்கள். தூய்மையானவர்களை பூஜைக்குரியவர்கள் என்றும் தூய்மை யற்றவர்களை பூஜாரிகள் என்றும் கூறப்படுகின்றது. சந்நியாசிகளுக்கு மலர் தூவுகிறார்கள், அவர்கள் முன் தலை வணங்குகிறார்கள். அவர்கள் தூய்மையானவர்கள், நாம் தூய்மையற்றவர்கள் என்று புரிந்திருக்கின்றனர். இந்த உலகத்தில் எவருமே தூய்மையானவராக இருக்க முடியாது என்று தந்தை கூறுகின்றார். இது விஷ நதி ஆகும். பாற்கடல் என்று விஷ்ணுபுரி அழைக்கப்படுகிறது. அங்கே நீங்கள் அரசாட்சி செய்கிறீர்கள். குழந்தைகளே! தன்னை ஆத்மா என்று புரிந்துகொள்ளுங்கள் மற்றும் இனிமையான வீட்டை நினைவு செய்யுங்கள். கர்மம் செய்து தான் ஆக வேண்டும். ஆண்கள் தொழிலையும், தாய்மார்கள் வீட்டையும் பராமரிக்க வேண்டியதாக உள்ளது. நீங்கள் மறந்துவிடு கிறீர்கள், ஆகையால், அமிர்தவேளை நேரம் மிகவும் நல்ல நேரம் ஆகும். அந்த சமயம் நினைவு செய்யுங்கள். அனைத்தையும் விட நல்ல நேரம் அமிர்தவேளை நேரம் ஆகும். அப்பொழுது இருவருமே ஃப்ரீ ஆக இருக்கின்றார்கள். மாலையில் கூட நேரம் கிடைக்கிறது. ஆனால், அந்த சமயத்தில் யாராவது களைப்பாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், நல்லது, ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்து நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நம்மை அழைத்துச் செல்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். இப்பொழுது 84 பிறவிகளின் நடிப்பு முடிவடைந்துவிட்டது. இவ்வாறு சிந்தனை செய்ய வேண்டும். உங்களுடைய அதிகாலைப் பொழுதே அனைத்தையும் விட நல்ல வருமானம் செய்வதற்கான சமயம் ஆகும். இப்பொழுது செய்யும் வருமானம் தான் சத்யுகத்தில் உடன் வருகிறது. இப்பொழுது நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அங்கே பணத்திற்கான எந்த கஷ்டமும் கிடையாது, எந்தக் கவலையும் கிடையாது. தந்தை அந்தளவிற்கு உங்களுடைய பையை நிறைத்துவிடுகின்றார், அதனால் வருமானத் திற்கான கவலை இருக்காது. இங்கே மனிதர்களுக்கு வருமானத்திற்கான கவலை எவ்வளவு இருக்கிறது! பாபா 21 பிறவிகளுக்காக கவலையிலிருந்து விடுவிக்கின்றார். அதிகாலையில் எழுந்து தன்னுடன் உரையாடல் செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நாம் பரந்தாம நிவாசிகள், தந்தையின் குழந்தைகள் ஆவோம். முதன்முதலில் நாம் சொர்க்கத்திற்கு வருகிறோம். தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைகிறோம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள்! என்று தந்தை கூறுகின்றார். பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுதோ நரகமாக, துக்கதாமமாக இருக்கிறது. ஒரே ஒரு தந்தை தான் அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளலாக இருக்கின்றார். ஒருவருக்கொருவர் நினைவை ஏற்படுத்த வேண்டும். சத்யுகத்தில் பாரதம் மட்டும் இருந்தது. அதற்கு சொர்க்கம், ஜீவன் முக்தி என்று கூறப்படுகிறது. நரகத்திற்கு ஜீவன்பந்தனம் என்று கூறப்படுகிறது. முதலில் சூரியவம்சத்தினர், சந்திரவம்சத்தினரின் இராஜ்யம் நடந்தது, பிறகு, வைஷ்ய வம்சத்தினர், சூத்திர வம்சத்தினரின் இராஜ்யம் நடைபெறுகிறது. அசுர புத்தியாக இருக்கும் காரணத்தினால் மனிதர்கள் ஒருவருக் கொருவர் துக்கம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு லௌகீக தந்தை கூட குழந்தைகளுடைய சேவகர் ஆகின்றார். விகாரத்திற்கு வசமாகி குழந்தைகளுக்கு பிறப்பு அளிக் கின்றனர், அவர்களை பராமரிக்கின்றனர், பிறகு அவர்களை நரகத்தில் தள்ளிவிடுகின்றனர். எப்பொழுது அவர்கள் விஷ நதியில் தத்தளிக்கின்றனரோ, அதைப் பார்த்து தந்தை குஷி அடைகின்றார் எனில், அறியாமையில் உள்ளார் அல்லவா! இந்த பரலௌகீக தந்தை கூட கள்ளம் கபடமற்றவர் ஆவார். குழந்தைகளுடைய சேவகர் (சர்வண்ட்) ஆவார். அந்த லௌகீக தந்தை குழந்தைகளை நரகத்தில் தள்ளிவிடுகிறார், இவர் சாந்திதாமம், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அதிக முயற்சி செய்கின்றார் அல்லவா! எவ்வளவு கள்ளம் கபடமற்றவராக இருக்கின்றார்! தன்னுடைய பரந்தாமத்தை விட்டுவிட்டு வந்திருக் கின்றார். பார்க்கின்றார் - ஆத்மாக்கள் எவ்வளவு துர்கதியை அடைந்து விட்டனர்! என்னை நிந்தித்துக் கொண்டே இருக்கின்றனர். என்னை அறியவே இல்லை.என்னுடைய இரதத்தையும் கூட நிந்தனை செய்து, எவ்வளவு பொய்யான களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர். உங்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் மீதும் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால், கிருஷ்ணர் எப்பொழுது வெண்மையாக (தூய்மையாக) இருக்கின்றாரோ, அப்பொழுது எந்தக் களங்கமும் ஏற்பட முடியாது. எப்பொழுது கருப்பு (தூய்மை யற்றவர்) ஆகின்றாரோ, அப்பொழுதே களங்கம் ஏற்படுகின்றது. யார் வெண்மையாக இருந்தாரோ, அவரே கருப்பாக ஆகிவிட்டார். ஆகையால், களங்கம் ஏற்படுகிறது. தூய்மையானவர்கள் மீது களங்கம் ஏற்பட முடியாது. ஆத்மா எப்பொழுது தூய்மையிலிருந்து தூய்மையற்ற நிலையை அடைகிறதோ, அப்பொழுதே நிந்தனை அடைகிறது. இந்த நாடகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மனிதர்கள் எதையும் புரிந்துகொள்ள முடிவதில்லை. இது எந்தவிதமான ஞானம் என்பது தெரியவில்லை என்று மிகவும் குழம்புகின்றனர். சாஸ்திரங் களில் இது இல்லை. சிவசக்தி பாரத மாதாக்களின் சேனை என்ன செய்தது என்பதை மறந்துவிட்டனர். ஜெகதம்பாவை சிவசக்தி என்று கூறுகின்றனர் அல்லவா! அவர்களுடைய கோவில்களும் உள்ளன. தில்வாடா கோவிலும் உள்ளது. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளக் கூடியவர் ஒரு சிவபாபா தான் ஆவார் அல்லவா! பிரம்மாவும் இருக்கின்றார், பிறகு, ஜெகதம்பா மற்றும் குமாரிகளாகிய நீங்களும் இருக்கிறீர்கள். மகாரதிகளும் இருக்கிறார்கள். அதைப் போன்றே நீங்கள் நடை முறையில் இருக்கிறீர்கள். உங்களுடைய அந்த ஜட நினைவுச் சின்னம் நிலையானதாக உள்ளது. இந்த ஜட நினைவுச் சின்னம் அழிந்துவிட்ட பிறகு, நீங்கள் சத்யுகத்தில் இருப்பீர்கள். அங்கே இந்த நினைவுச் சின்னம் போன்றவை கிடையாது. ஐந்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் அவ்வாறு அமர்ந்திருந்தீர்கள், நினைவுச் சின்னம் உருவாகியிருந்தது. பிறகு சத்யுக, திரேதாயுகத்தில் இராஜ்யம் செய்தீர்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் இந்த நினைவுச் சின்னங்கள் உருவாகின்றன. பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கூட நீங்கள் அறிந்து கொண்டீர்கள். விஷ்ணுவிலிருந்து பிரம்மா, பிரம்மாவிலிருந்து விஷ்ணு - 84 பிறவிகள் எடுக்கின்றார்.

இப்பொழுது நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். மம்மா, பாபாவைப் பின்பற்ற வேண்டும். எந்தளவு முயற்சி செய்வீர்களோ, அந்தளவு தூய்மை ஆவீர்கள். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆகுவதற்காக எவ்வளவு எளிதான முயற்சியை தந்தை கற்பிக்கின்றார். தந்தை மற்றும் இனிமையான வீட்டை நினைவு செய்துகொண்டே இருந்தீர்கள் என்றால் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிவிடுவீர்கள். அதிகாலை எழுந்து நினைவு செய்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு, எப்பொழுது பக்கா (உறுதி) ஆவீர்களோ, அப்பொழுது நடந்தாலும், சுற்றினாலும் நினைவு இருக்கும். நாம் இனிமையான வீடு மற்றும் இனிமையான இராஜ்யத்தை மட்டும் நினைவு செய்ய வேண்டும். முதலில் நாம் சதோபிரதானமாக ஆவோம், பிறகு சதோ, ரஜோ, தமோ நிலையில் வருவோம். இதில் எந்த சந்தேகமும் எழ முடியாது. குழம்புவதற்கான விசயமே கிடையாது. தூய்மையாக இருந்து தான் ஆக வேண்டும். தேவதைகளின் உணவு கூட எவ்வளவு தூய்மையாக இருக்கிறது ! எனவே, நாம் கூட மிகுந்த பத்தியத்தில் இருக்க வேண்டும். இதில் எதையும் கேட்பதற்கான விசயமே கிடையாது. புத்தி புரிந்திருக்கிறது - ஒன்று - விகாரம் அனைத்தையும் விடக் கெட்டது ஆகும். இரண்டாவது - சாராயம், மாமிசம் உண்ணக் கூடாது. மற்றபடி, பூண்டு, வெங்காயம் மற்றும் பதீதமானவர்களால் சமைக்கப்பட்ட உணவினால் இடையூறு ஏற்படுகிறது. பிராமணர்களால் சமைக்கப்பட்ட உணவைத் தவிர தூய்மை யான உணவு வேறு எங்கும் கிடைக்காது என்று தந்தை புரியவைக்கின்றார். தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். எந்தளவு நீங்கள் நினைவில் இருப்பீர்களோ, அந்தளவு தூய்மை ஆகிவிடுவீர்கள். புத்தி மூலம் புரிந்து கொள்ளப்படுகிறது. நாம் தம்மை எந்த யுக்தி மூலம் காப்பாற்றிக் கொள்வது? புத்தியால் சிந்திக்க வேண்டும். இல்லறத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், லௌகீகத்திலும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். அவர்களுக்கும் இந்த விசயங்களைச் சொல்ல வேண்டும். தூய்மை ஆகுங்கள், இல்லையெனில், மிகுந்த தண்டைகளை அடைவீர்கள் மற்றும் பதவியும் குறைந்துவிடும் என்று தந்தை கூறுகின்றார். மரியாதை யுடன் தேர்ச்சி பெற்றவர்களின் (பாஸ் வித் ஹானர்) மாலையே உருவாகியிருக்கிறது. இப்பொழுது அனைவருடைய அழிவிற்கான சமயம் ஆகும். அனைவருடைய பாவங்களின் கணக்கு வழக்கு முடிவடைய வேண்டும்.

நினைவின் மூலம் தான் விகர்மங்கள் எரிந்து சாம்பல் ஆகும், இதில் தான் அதிக முயற்சி உள்ளது என்று பாபா புரியவைத்திருக்கின்றார். ஞானம் மிகவும் எளிமையானது ஆகும். முழு நாடகம் மற்றும் மரம் புத்தியில் வந்துவிடுகிறது. மற்றபடி இனிமையான தந்தை, இனிமையான அரசாட்சி மற்றும் இனிமையான வீட்டை நினைவு செய்ய வேண்டும். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது, வீட்டிற்குச் செல்ல வேண்டும். பழைய சரீரத்தை விடுத்து அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். இதை பக்காவாக (உறுதியாக) புத்தியில் வைக்க வேண்டும். அவ்வாறு நினைவு செய்து கொண்டிருக்கும் பொழுதே சரீரம் விடுபட்டுவிடும் மற்றும் ஆத்மாக்களாகிய நீங்கள் வீட்டிற்குச் சென்றுவிடுவீர்கள். மிகவும் எளிதாகும். இப்பொழுது எதிரில் அமர்ந்து கேட்கிறீர்கள், மற்ற குழந்தைகள் டேப் (ஒலிநாடா) மூலம் கேட்பார்கள். ஒரு நாள் தொலைக்காட்சி மூலமாகக் கூட இந்த ஞானத்தை அவசியம் கேட்பீர்கள் மற்றும் பார்ப்பீர்கள். அனைத்தும் இருக்கும். கடைசியில் வருபவர் களுக்கு இன்னும் எளிதாகிவிடும். தைரியமான குழந்தைகளுக்கு தந்தையின் உதவி கிடைக்கிறது. இதற்கான ஏற்பாடும் நடந்துவிடும். சேவை செய்யக்கூடியவர்கள் கூட நல்ல முறையில் இருப்பார்கள். எனவே, குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக இந்த அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக நடந்துவிடும். அது கூட யாருக்கு வேண்டுமோ, எடுத்துக் கொள்ள முடியும். ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். இஸ்லாமியர்கள் கூட அதிகாலையில் வீதி, வீதியாக வலம் வந்து அனைவரையும் விழித்தெழச் செய்கிறார்கள். எழுந்து அல்லாவை நினைவு செய்யுங்கள். இந்த சமயம் தூங்குவதற் கான சமயம் அல்ல. உண்மையில் இது இப்போதைய விசயம் ஆகும். அல்லாவை நினைவு செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. சொர்க்கத்தை மலர்களின் தோட்டம் என்று கூறப்படுகிறது. அவர்கள் அர்த்தம் புரியாமல் பாடுகின்றனர். நீங்களோ நடைமுறையில் தந்தையை நினைவு செய்வதன் மூலம் தேவதை ஆகிக்கொண்டு இருக்கிறீர்கள். அதிகாலையில் எழுவதற்கான இந்தப் பயிற்சியானது நன்றாக உள்ளது. அதிகாலையின் வாயுமண்டலம் மிகவும் நன்றாக உள்ளது. 12 மணிக்குப் பிறகு காலைப் பொழுது ஆரம்பமாகிறது. 2-3 மணியை அதிகாலை நேரம் என்று கூறப் படுகிறது. அதிகாலையில் எழுந்து சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும், இனிமையான வெகு காலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட, செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை, பாப்தாதாவினுடைய அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையின் நினைவில் இருந்து தூய்மையான, சுத்தமான உணவை சாப்பிட வேண்டும். அசுத்த உணவருந்துவதிலிருந்து மிக மிக பத்தியம் இருக்க வேண்டும். தாய், தந்தையைப் பின்பற்றி தூய்மை ஆகுவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

2. அதிகாலையில் எழுந்து இனிமையான தந்தை மற்றும் இனிமையான இராஜ்யத்தை நினைவு செய்ய வேண்டும். இந்த அழிவிற்கான சமயத்தில் தந்தையின் நினைவின் மூலம் தான் அனைத்து கணக்கு வழக்குகளையும் முடிக்க வேண்டும்.

வரதானம்:
தனது கவலையற்ற நிலை மூலமாக சிரேஷ்ட டச்சிங் - சிறந்த உந்துதலின் ஆதாரத்தில் காரியம் செய்யக் கூடிய வெற்றியின் மூர்த்தி ஆவீர்களாக.

எந்தவொரு காரியம் செய்யும் பொழுதும், பெரிய தந்தை அமர்ந்துள்ளார் என்ற நினைவு எப்பொழுதும் இருந்தது என்றால், மனநிலை எப்பொழுதும் கவலையற்றதாக இருக்கும். இந்த கவலையற்ற நிலையில் நிலைத்திருப்பது கூட எல்லாவற்றையும் விட பெரிய அரசாட்சி ஆகும். தற்காலத்தில் எல்லாருமே கவலை உடைய சக்கரவர்த்திகள் ஆவார்கள். மேலும் நீங்கள் கவலையில்லாத சக்கரவர்த்தி ஆவீர்கள். யார் கவலைப் படுபவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு பொழுதும் வெற்றி கிடைப்பதில்லை. ஏனெனில் அவர்கள் கவலையிலேயே காலத்தையும் சக்தியையும் வீணாக இழந்து விடுகிறார்கள். எந்த காரியத்திற்காக கவலைப் படுகிறார்களோ, அந்த காரியத்தை கெடுத்து விடுகிறார்கள். ஆனால் நீங்கள் கவலையற்று இருக்கிறீர்கள். எனவே தக்க நேரத்தில் சிரேஷ்ட டச்சிங் ஏற்படுகிறது மற்றும் சேவைகளில் வெற்றி கிடைத்து விடுகிறது.

சுலோகன்:
யாருடைய ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு விநாடியும் சக்திசாலியாக இருக்கிறதோ, அவர்களே ஞான சொரூப ஆத்மா ஆவார்கள்.