09.10.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! அதிகாலையில் எழுந்து பாபாவோடு இனிமையிலும் இனிமையான விசயங்களைப் பேசுங்கள், ஞானத்தை சிந்தனை செய்ய அதிகாலை நேரம் மிகவும் நல்லதாகும்.

 

கேள்வி:

பக்தர்களும் பகவானை சர்வசக்திமான் என்று சொல்கிறார்கள், குழந்தைகளாகிய நீங்களும் சொல்கிறீர்கள், ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 

பதில்:

பகவான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும், அனைத்தும் அவருடைய கைகளில் தான் இருக்கிறது, என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் நாடகத்தின் கட்டுகளால் கட்டுபட்டிருக்கிறேன் என்று பாபா கூறியுள்ளார், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாடகம் சர்வசச்திமான் ஆகும். பாபாவை சர்வசக்திமான் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால் அவரிடம் அனைவருக்கும் சத்கதி அளிப்பதற்கான சக்தி இருக்கிறது. ஒருபோதும் யாரும் அபகரிக்க முடியாத இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார்.

 

ஓம் சாந்தி.

இதை யார் சொன்னது? பாபா. ஒம் சாந்தி - இதை யார் சொன்னது? தாதா. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இதை அறிந்து கொண்டீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவருடைய மகிமை மிகப்பெரியதாகும். சர்வசக்திமான் என்று சொல்கிறார்கள் என்றால் என்ன தான் செய்ய முடியாது. பக்திமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் சர்வசக்திமான் என்பதற்கு மிகப்பெரிய அர்த்தத்தை கொடுத்திருப்பார்கள். பாபா கூறுகின்றார், அனைத்தும் நாடகத்தின் படி நடக்கிறது, நான் எதையும் செய்வதில்லை. நானும் கூட நாடகத்தின் பந்தனத்தில் கட்டு பட்டிருக்கின்றேன். நீங்கள் தந்தையை நினைவு செய்வதின் மூலம் சர்வசக்திமானாக ஆகி விடுகின்றீர்கள். தூய்மையாக ஆவதின் மூலம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதான மானவர்களாக ஆகி விடுகிறீர்கள். பாபா சர்வசக்திவானாக இருக்கின்றார், அவர் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளே, என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகி விடும் பிறகு சர்வசக்திமானாக ஆகி உலகத்தின் மீது இராஜ்யம் செய்வீர்கள். சக்தி இல்லை என்றால் இராஜ்யம் எப்படி செய்வீர்கள். சக்தி யோகத்தின் மூலம் கிடைக்கிறது ஆகையினால் தான் பாரதத்தின் பழமையான யோகம் அதிகம் பாடப் பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக நினைவு செய்து குஷி அடை கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் பாபாவை நினைவு செய்வதின் மூலம் உலக இராஜ்யத்தை அடைய முடியும் என்பதை தெரிந்துள்ளீர்கள். இதை அபகரிக்க யாருக்கும் சக்தி இல்லை. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் மகிமையை அனைவரும் பாடுகிறார்கள், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. இது நாடகம் என்பதை தெரிந்த மனிதர்கள் யாரும் இல்லை. ஒருவேளை இது நாடகம் என்பதை புரிந்திருந்தீர்கள் என்றால் ஆரம்பம் முதல் கடைசி வரை நினைவு வர வேண்டும். இல்லையென்றால் நாடகம் என்று சொல்வதே தவறாகி விடுகிறது. இது நாடகம், நாம் நடிக்க வந்துள்ளோம் என்றும் சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த நாடகத்தின் முதல்-இடை-கடைசியையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. நாம் மேலிருந்து வருகிறோம் ஆகையினால் தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். சத்யுகத்தில் குறைவான மனிதர்களே இருந்தார்கள். இவ்வளவு ஆத்மாக்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தது, இது ஆரம்பமும் முடிவுமற்ற அனாதியான உருவான-உருவாக்கப்பட்ட அழிவற்ற நாடகம் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இது ஆரம்பம் முதல் கடைசி வரை திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சினிமாவை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பார்த்து விட்டு பிறகு இரண்டாவது முறை திரும்பி பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக சக்கரம் அப்படியே திரும்பவும் சுற்றும். கொஞ்சம் கூட வித்தியாசம் இருக்காது.

 

பாபா அமர்ந்து இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் புரிய வைக்கின்றார். எவ்வளவு இனிமையான தந்தையாக இருக்கின்றார். பாபா தாங்கள் எவ்வளவு இனிமையானவராக இருக்கின்றீர்கள். அவ்வளவு தான் பாபா, இப்போது நாங்கள் எங்களுடைய சுகதாமத்திற்குச் செல்கின்றோம். ஆத்மா தூய்மையாகி விட்டால் பால் கூட தூய்மையானதாக கிடைக்கும் என்பது இப்போது தெரிகிறது. உயர்ந்த தாய்மார்கள் மிகவும் இனிமையானவர்களாக இருப்பார்கள், குழந்தைகளுக்கு நேரத்திற்கு அவர்களாகவே பாலூட்டுகிறார்கள். குழந்தைகள் அழுவதற்கான அவசியமே இருப்பதில்லை. இப்படி யெல்லாம் இவற்றை கூட சிந்தனை செய்ய வேண்டும். அதிகாலையில் பாபாவோடு பேசுவதினால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாபா தாங்கள் உயர்ந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்கு எவ்வளவு நல்ல யுக்தி கூறுகின்றீர்கள். பிறகு நாங்கள் உயர்ந்த தாய்மார் களின் மடியில் சென்று பிறப்போம். அனேக முறை நாங்கள் தான் அந்த புதிய உலகத்திற்குச் சென்றிருக்கிறோம். இப்போது எங்களுடைய மகிழ்ச்சியான நாட்கள் வருகின்றன. இது குஷி எனும் டானிக் ஆகும், ஆகையினால் தான் அதீந்திரிய சுகத்தை கேட்க வேண்டும் என்றால் கோப-கோபியர்களிடம் கேளுங்கள் என்று பாடப்பட்டுள்ளது. இப்போது நமக்கு எல்லையற்ற தந்தை கிடைத்துள்ளார். நம்மை மீண்டும் சொர்க்கத்தின் எஜமானர்களாக உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். கல்பம்-கல்பமாக நாம் நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை அடைகின்றோம். தோல்வி அடைகிறோம் பிறகு வெற்றி அடைகிறோம். இப்போது தந்தையை நினைவு செய்வதின் மூலம் தான்இராவணன் மீது வெற்றி அடைய வேண்டும், பிறகு நாம் தூய்மையாகி விடுவோம். அங்கே சண்டை, துக்கம் போன்ற வார்த்தைகளே இல்லை, எந்த செலவும் இல்லை. பக்தி மார்க்கத்தில் பிறவி- பிறவிகளாக எவ்வளவு செலவு செய்தீர்கள், எவ்வளவு ஏமாற்றம் அடைந்தீர்கள், எத்தனை குருமார்களிடம் சென்றீர்கள். இப்போது அரைக்கல்பத்திற்கு எந்த குருவிடமும் செல்ல மாட்டோம். சாந்திதாமம் சுகதாமத்திற்குச் செல்வோம். நீங்கள் சுகதாமத்திற்கு செல்லும் வழிபோக்கர்களாவீர்கள். இப்போது துக்கதாமத்திலிருந்து சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும். ஆஹா நம்முடைய தந்தை, நமக்கு எப்படி கற்பித்துக் கொண்டிருக்கின்றார். நம்முடைய நினைவுச் சின்னம் கூட இங்கே இருக்கிறது. இது மிகவும் அதிசயமானதாகும். இந்த தில்வார கோயிலுக்கு அளவற்ற மகிமைகள் இருக்கின்றன. இப்போது நாம் இராஜயோகத்தை கற்றுக் கொள் கின்றோம். அதனுடைய நினைவுச் சின்னம் கண்டிப்பாக உருவாகும் அல்லவா. இது அப்படியே நம்முடைய நினைவுச் சின்னமாகும். பாபா, மம்மா மற்றும் குழந்தைகள் அமர்ந்துள்ளார்கள். கீழே யோகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள், மேலே சொர்க்கத்தின் இராஜ்யமாகும். மரத்தில் கூட எவ்வளவு தெளிவாக இருக்கிறது. பாபா காட்சிகள் காட்டி பிறகு சித்திரங்களை உருவாக்கியுள்ளார். பாபா தான் காட்சிகள் காட்டி பிறகு சரி செய்தார். எவ்வளவு அதிசயமாக இருக்கிறது. அனைத்தும் புதிய ஞானமாகும். யாருக்கும் இந்த ஞானத்தைப் பற்றி தெரிய வில்லை. பாபாவே தான் வந்து புரிய வைக்கின்றார், மனிதர்கள் எவ்வளவு கீழானவர்களாகிக் கொண்டே செல்கிறார்கள். மனித உலகம் வளர்ந்து கொண்டே செல்கிறது. பக்தியும் வளர்ந்து - வளர்ந்து தமோபிரதானமாகிக் கொண்டே செல்கிறது. இங்கே நீங்கள் இப்போது சதோபிர தானமானவர்களாக ஆவதற்கான முயற்சி செய்கிறீர்கள். கீதையில் கூட மன்மனாபவ என்ற வார்த்தை இருக்கிறது. பகவான் யார் என்று மட்டும் தெரிந்திருக்கவில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் பகவானுடைய அறிமுகத்தை மனிதர்களுக்கு எப்படி கொடுப்பது என்று அதிகாலையில் எழுந்து ஞான சிந்தனை செய்ய வேண்டும். பக்தியில் கூட மனிதர்கள் அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டு பக்தி செய்கிறார்கள். அது கூட ஞான சிந்தனை என்றாகிறது அல்லவா. இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கிறது. பாபா மூன்றாவது கண் கொடுப்ப தற்கான கதையை கூறுகின்றார். இதைத் தான் தீஸ்ரி கதை என்று சொல்லி விட்டார்கள். தீரி (மூன்றாவது) கதை, அமர கதை, சத்திய நாராயணனின் கதை என்பன கூட புகழ் பெற்றவைகளாகும். சொல்லக் கூடியவர் ஒரு தந்தையாவார், பிறகு பக்தி மார்க்கத்தில் நடக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தின் மூலம் தன்னிறைவு பெற்றவர்களாக ஆகின்றீர்கள், ஆகையினால் தான் தேவதைகளை மிகுந்த செல்வந்தர்கள் என்று சொல்கிறார்கள். தேவதைகள் மிகவும் செல்வந்தர்களாக, பெரிய பணக்காரர்களாக ஆகிறார்கள். கலியுகத்தையும் பாருங்கள் சத்யுகத்தையும் பாருங்கள் - இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. முழு உலகமும் சுத்தமாவதற்கு அதிக காலம் பிடிக்கிறது அல்லவா. இது எல்லையற்ற உலகமாகும். பாரதமே அழிவற்ற கண்டமாகும். இது ஒருபோதும் மறைவதில்லை. அரைக்கல்பம் ஒரு கண்டம் தான் இருக்கிறது. பிறகு வரிசைகிரமமாக மற்ற கண்டங்கள் வெளி வருகின்றன. குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைக்கிறது. உலகத்தின் வரலாறு-புவியியல் எப்படி சுற்றுகிறது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள். பழங்கால ரிஷி முனிவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது, ஆனால் அவர்களும் கூட உலகத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்திருக்க வில்லை. அவர்கள் ஹட யோகிகளாவர். மற்றபடி அவர்களிடத்தில் தூய்மையின் சக்தி இருக்கிறது அதன்மூலம் பாரதத்தை நிற்க வைக்கிறார்கள். இல்லையென்றால் பாரதம் என்ன வாகியிருக்கும் என்று தெரியாது. வீட்டை துடைத்து மெழுகும் போது அழகாக இருக்கிறது. பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது, இப்போது அதே பாரதம் தூய்மையற்றதாகி இருக்கிறது. அங்கே உங்களுடைய சுகம் கூட நீண்ட காலம் இருக்கிறது. உங்களிடம் அதிக செல்வம் இருக்கிறது. நீங்கள் பாரதத்தில் தான் இருந்தீர்கள். உங்களுடைய இராஜ்யம் இருந்தது, நேற்றைய விசயமாகும். பிறகு மற்ற தர்மங்கள் வருகின்றன. அவர்கள் வந்து கொஞ்சம் மாற்றி தங்களுடைய பெயரை புகழ் பெறச் செய்கிறார்கள். இப்போது அவர்கள் அனைவரும் கூட தமோபிரதானமாகி விட்டார்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். இந்த விசயங்கள் அனைத்தையும் புதியவர்களுக்குச் சொல்லக் கூடாது. முதல்-முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தையினுடைய பெயர், ரூபம், தேசம், காலம் முதலியவற்றை தெரியுமா? உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் நடிப்பு புகழ்பெற்றதாக இருக்கிறது அல்லவா. இப்போது அந்த தந்தை தான் நமக்கு டைரக்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நீங்கள் மீண்டும் உங்களுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் என்னுடைய உதவியாளர்களாவீர்கள். நீங்கள் தூய்மையாகின்றீர்கள். உங்களுக்காக கண்டிப்பாக தூய்மையான உலகம் ஸ்தாபனை ஆக வேண்டும். பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் எழுதலாம். பிறகு இந்த சூரியவம்சத்தவர்- சந்திரவம்சத்தவர்களின் இராஜ்யம் நடக்கும். பிறகு இராவண இராஜ்யம் இருக்கும். படங்களை வைத்து புரிய வைப்பது மிகவும் இனிமையாக இருக்கிறது, இதில் நாள்- தேதி அனைத்தும் எழுதப்பட்டுள்ளது. பாரதத்தின் பழமையான இராஜயோகம் என்றால் நினைவு ஆகும். நினைவின் மூலம் விகர்மங்கள் வினாசம் ஆகிறது மற்றும் படிப்பின் மூலம் பதவி கிடைக்கிறது. தெய்வீககுணங்களை தாரணை செய்ய வேண்டும். கண்டிப்பாக மாயையின் புயல் வரும். அதிகாலையில் எழுந்து பாபாவுடன் பேசுவது மிகவும் நல்லதாகும். பக்தி மற்றும் ஞானம் இரண்டிற்குமே இந்த நேரம் மிகவும் நல்லதாகும். இனிமையிலும் இனிமையான விசயங்களைப் பேச வேண்டும். இப்போது நாம் உயர்ந்த உலகத்திற்குச் செல்வோம். வயதானவர்களின் மனதில் நாம் சரீரத்தை விட்டுவிட்டு கர்பத்தில் செல்வோம் என்பது இருக்கிறது அல்லவா. பாபா எவ்வளவு போதை ஏற்றுகின்றார். இப்படிப்பட்ட விசயங்களை அமர்ந்து பேசினீர்கள் என்றால் கூட உங்களுடைய கணக்கு சேமிப்பாகும். சிவபாபா நம்மை நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக்கிக் கொண்டிருக் கின்றார். முதல்-முதலில் நாம் வருகின்றோம், முழு சக்கரத்திலும் நாம் நடிப்பை நடிக்கின்றோம். இப்போது பாபா கூறுகின்றார், இந்த மோசமான சரீரத்தை விட்டு விடுங்கள். தேகம் உட்பட முழு உலகத்தையும் மறந்து விடுங்கள். இது தான் எல்லையற்ற சன்னியாசமாகும். அங்கேயும் நீங்கள் வயதானவர்களாகி விட்டால் நாம் குழந்தைகளாக ஆகப்போகிறோம் என்ற காட்சி தெரியும். அப்போது குஷி ஏற்படுகிறது. குழந்தைப் பருவம் அனைத்திலும் நல்லதாகும். இப்படியெல்லாம் அதிகாலையில் அமர்ந்து ஞான சிந்தனை செய்ய வேண்டும். கருத்துகள் வெளி வந்தால் உங்களுக்கு குஷி ஏற்படும். மகிழ்ச்சியில் ஒரு மணி நேரம் ஒன்றரை மணி நேரம் கடந்து விடும். எந்தளவிற்கு இந்த பயிற்சி அதிகரித்துக் கொண்டே செல்லுமோ அந்தளவிற்கு குஷி அதிகரித்துக் கொண்டே செல்லும். மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் மேலும் நீங்கள் நடந்து கொண்டு சுற்றிக் கொண்டே நினைவு செய்ய வேண்டும். நேரம் அதிகம் இருக்கிறது, தடைகள் உண்டாகும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் செய்கிறார்கள் என்றால் மனிதர்களுக்கு உறக்கம் வருவதில்லை. சோம்பேறிகள் உறங்குகிறார்கள். நீங்கள் எவ்வளவு முடியுமோ சிவபாபாவையே நினைவு செய்து கொண்டிருங்கள். நான் சிவபாபாவிற்காக உணவு சமைக்கின்றேன் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நாம் சிவபாபாவிற்காக இதை செய்கிறோம். உணவை கூட சுத்தமாக செய்ய வேண்டும். பிரச்சனை ஆகிவிடும்படியான பொருட்கள் இருக்கக் கூடாது. பாபா (பிரம்மா) கூட நினைவு செய்கின்றார். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) அதிகாலையில் எழுந்து பாபாவோடு இனிமையிலும் இனிமையான விசயங்களைப் பேச வேண்டும். தினமும் குஷி எனும் டானிக்கை அருந்தி கொண்டே அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய வேண்டும்.

 

2) சத்யுக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில் பாபாவிற்கு முழுமையான உதவியாளர்களாக ஆவதற்காக தூய்மையாக ஆக வேண்டும், நினைவின் மூலம் விகர்மங்களை அழிக்க வேண்டும், உணவை கூட மிகவும் சுத்தமான உணர்வோடு செய்ய வேண்டும்.

 

வரதானம்:

சுய ஸ்திதியின் (தன்னுடைய உண்மையான நிலை) மூலம் பிரச்சனைகளின் மீது வெற்றியடையக் கூடிய சங்கமயுக வெற்றியாளர் ஆகுக.

 

பிரச்சனைகளின் மீது வெற்றியடைவதற்கான சாதனம் சுய ஸ்திதியாகும். இந்த தேகமும் பிறருடையது, என்னுடையது அல்ல. சுய ஸ்திதி அல்லது சுய தர்மம் சதா சுகத்தின் அனுபவம் செய்விக்கும். மேலும் இயற்கையின் தர்மம் அதாவது பிற தர்மம் அல்லது தேகத்தின் நினைவு ஏதாவது ஒரு வகையில் துக்கத்தின் அனுபவம் செய்விக்கும். ஆக யார் சதா சுய ஸ்திதியில் இருக்கிறார்களோ அவர்கள் சதா சுகத்தின் அனுபவம் செய்வார்கள். அவர்களிடத்தில் துக்க அலைகள் வரவே முடியாது. அவர்கள் சங்கமயுக வெற்றி இரத்தினங்களாக ஆகிவிடுகின்றனர்.

 

சுலோகன்:

பரிவர்தன் (மாற்றம் செய்யக்கூடிய) சக்தியின் மூலம் வீண் எண்ணங்கள் என்ற நீரோட்த்தின் வேகத்தை அழித்து விடுங்கள்.

 

மாதேஸ்வரியின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம்

இந்த அழிவற்ற ஈஸ்வரிய ஞானத்தை பிராப்தியாக அடைவதற்கு எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை:

 

நமது ஈஸ்வரிய ஞானம் மிகவும் எளிதானது மற்றும் இனிமையானது இதன் மூலம் ஜென்ம ஜென்மத்திற்கான வருமானம் ஏற்படுகிறது. இந்த ஞானம் மிகவும் எளிதானது, இதை எந்த மகான் ஆத்மா, கல் புத்தியுடைய அகலிகைகள், எந்த தர்மத்தைச் சார்ந்தவர்கள், குழந்தையிலிருந்து வயோதிகர்கள் வரை யார் வேண்டுமென்றாலும் பிராப்தியாக அடைந்திட முடியும். பாருங்கள், இவ்வளவு எளிதாக இருந்தாலும் கூட உலகத்தினர் இந்த ஞானத்தை மிகவும் சுமையாக நினைக்கின்றனர். சிலர் அதிக வேத சாஸ்திரம், உபநிசம் படித்து பெரிய பெரிய வித்வான்களாக ஆக வேண்டுமென்றால் அதற்காக நாம் மொழி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைக்கின்றனர். அதிக ஹடயோகம் செய்தால் தான் பிராப்தியாக அடைய முடியும், ஆனால் இந்த ஞானம் மிகவும் எளிதானது மற்றும் சரளமானது என்பதை நாம் நமது அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம். ஏனெனில் சுயம் பரமாத்மா கற்பித்துக் கொண்டிருக்கின்றார். ஆக இதில் எந்த ஹடயோகம், எந்த ஜபம், தபம், எந்த சாஸ்திரவாதி, பண்டிதர், இதற்காக எந்த மொழியும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு இயற்கையாக ஆத்மா தனது பரம்பிதா பரமாத்மாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். சிலரால் இந்த ஞானத்தை தாரணை செய்ய முடியா விட்டாலும் யோகாவின் மூலமும் அதிக இலாபம் அடைய முடியும். இதன் மூலம் ஒன்று தூய்மையாக ஆகின்றனர், இரண்டாவது கர்மபந்தனங்கள் அழிந்து விடுகிறது, மேலும் கர்மாதீத் நிலை அடைகிறீர்கள். அந்த அளவிற்கு சர்வசக்திவான் பரமாத்மாவின் நினைவில் சக்தியிருக்கிறது. அவர் தனது சாகார பிரம்மாவின் உடலின் மூலம் நமக்கு யோகா கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், ஆனாலும் நேரடியாக அந்த ஜோதி சொரூபமான பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும். அந்த நினைவின் மூலம் தான் கர்மபந்தனங்களின் கறைகள் நீங்கும். நல்லது, ஓம்சாந்தி.

 

ஓம்சாந்தி