09-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தேக-அபிமானத்தில் வருவதின் மூலம் தான் மாயையின் அறை (அடி) விழுகிறது, ஆத்ம-அபிமானியாக இருந்தீர்கள் என்றால் பாபாவின் ஒவ்வொரு ஸ்ரீமத்தையும் கடைபிடிக்க முடியும்

கேள்வி:
பாபாவிடம் இரண்டு விதமான முயற்சி செய்யும் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்கள் யார்?

பதில்:
ஒரு விதமான குழந்தைகள் பாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுப்பதற்கு முழுமையாக முயற்சி செய்கிறார்கள், ஒவ்வொரு அடியிலும் பாபாவிடம் வழியை கேட்கிறார்கள். மற்றொன்று பாபாவை கைவிடு வதற்கு முயற்சி செய்யும் குழந்தைகளும் இருக்கிறார்கள். சிலர் துக்கத் திலிருந்து விடுபடுவதற்கு பாபாவை அதிகமாக நினைவு செய்கிறார்கள். சிலர் துக்கத்தில் மாட்டிக் கொள்ள விரும்புகிறார்கள், இது அதிசயமாக இருக்கிறது அல்லவா!

பாடல்:
கூட்டத்தில் வந்த விளக்கு...............

ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டை நிறைய முறை கேட்டிருக்கிறீர்கள். புதிய குழந்தைகள் புதியதாக கேட்டிருப்பார்கள், பாபா வரும்போது தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கின்றார். குழந்தை களுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. நாம் எல்லையற்ற தாய்-தந்தையரின் குழந்தைகளாக ஆகியுள்ளோம் என்பதைத் தெரிந்திருக்கின்றார். கண்டிப்பாக மனித சிருஷ்டியை படைப்பவர் தாய்-தந்தையராகத் தான் இருப்பர், ஆனால் மாயை மனிதர்களுடைய புத்தியை முற்றிலும் கல்புத்தி யாக்கி (டெட் புத்தி) விட்டது. இவ்வளவு சாதாரண விசயம் கூட புத்தியில் நிற்பதில்லை. எங்களை பகவான் தான் பிறப்பித்தார் என்று அனைவருமே கூறுகிறார்கள். எனவே கண்டிப்பாக தாய்-தந்தையராக இருப்பார்! பக்தி மார்க்கத்தில் நினைவு கூட செய்கிறார்கள். ஒவ்வொரு தர்மத்தை சேர்ந்தவர்களும் இறை தந்தையை கண்டிப்பாக நினைவு செய்கிறார்கள். பக்தர்கள் அவர்களே பகவானாக இருக்க முடியாது. பக்தர்கள் பகவானை வழிபடுகிறார்கள். இறை தந்தை அனை வருக்கும் ஒருவராகத் தான் இருப்பார் அதாவது அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒருவரே ஆவார். அனைத்து சரீரங்களுக்கும் தந்தை ஒருவராக இருக்க முடியாது. அனேக தந்தைகள் இருக்கிறார்கள். அந்த சரீர தந்தை இருந்தாலும் கூட ஹே ஈஸ்வரா! என்று சொல்லி நினைவு செய்கிறார்கள். மனிதர்கள் முட்டாள்களாக ஆகி விட்டார்கள் அவர்கள் பாபாவின் அறிமுகத்தையே மறந்து விட்டார்கள், என்று பாபா புரிய வைக்கின்றார். சொர்க்கத்தை படைப்பவர் ஒரு பாபா என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இப்போது கலியுகமாகும். கண்டிப்பாக கலியுகம் வினாசம் ஆகும். மறைந்து விட்டது என்ற வார்த்தை ஒவ்வொரு விசயத்திலும் வருகிறது. சத்யுகம் இப்போது மறைந்து விட்டது என்பதைக் குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள். இந்த சத்யுகம் பிறகு மறைந்து விடும், பிறகு திரேதாயுகம் வரும் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. இல்லை, அங்கே இந்த ஞானத்தின் அவசியமே கிடையாது. சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது, நம்முடைய பரலௌகீக தந்தை யார்? போன்ற இந்த விசயங்கள் யாருடைய புத்தியிலுமே இல்லை. இதைக் குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். நீங்கள் தான் தாயும் தந்தையும் நாங்கள் தங்களுடைய குழந்தைகள்....... என்று மனிதர்கள் பாடுகிறார்கள், ஆனால் தெரிந்திருக்க வில்லை. எனவே சொல்வதும் சொல்லாமல் இருப்பதற்கு சமமாகும். பாபாவை மறந்து விட்டார்கள் ஆகையினால் அனாதைகளாக ஆகி விட்டார்கள். பாபா ஒவ்வொரு விசயத்தையும் புரிய வைக்கின்றார். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி செல்லுங்கள். இல்லையென்றால் ஏதாவதொரு சமயத்தில் மாயை பெருத்த ஏமாற்றத்தைக் கொடுக்கும். மாயை ஏமாற்றக் கூடியதாகும். மாயையிடமிருந்து விடுவிப்பது பாபாவினுடைய காரியமே ஆகும். இராவணன் துக்கம் கொடுக்கக் கூடியவனாவான். பாபா சுகம் கொடுக்கக் கூடியவர் ஆவார். மனிதர்கள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. சுகத்தையும் துக்கத்தையும் பகவான் தான் கொடுக்கின்றார் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார் கள். மனிதர்கள் துக்கமுடையவர்களாக ஆவதற்கு திருமணம் போன்றவற்றிற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். யார் தூய்மையான நாற்றாக இருக்கிறார்களோ அவர்களை தூய்மையற்றவர்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்யப் படுகிறது. இதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும், ஆனால் உலகம் புரிந்து கொள்வதில்லை. இந்த விஷக்கடலில் மூழ்குவதற்கு எவ்வளவு விழாக்கள் கொண்டாடுகிறார்கள்! சத்யுகத்தில் இந்த விகாரங்கள் இருக்காது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அது பாற்கடலாகும். இதற்கு விஷக்கடல் என்று சொல்லப்படுகிறது. அது சம்பூரண நிர்விகார உலகமாகும். திரேதாயுகத்தில் இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது, இருந்தாலும் கூட அதனை நிர்விகார உலகம் என்று சொல்லப் படுகிறது. அங்கே விகாரங்கள் இருக்க முடியாது ஏனென்றால் இராவண இராஜ்யம் துவாபர யுகத்திலிருந்து தான் ஆரம்பமாகிறது. பாதி பாதி அல்லவா! ஞானக்கடல் மற்றும் அஞ்ஞானக்கடல் ஆகும். அஞ்ஞானம் கூட கடல் அல்லவா!

மனிதர்கள் எவ்வளவு அஞ்ஞானிகளாக இருக்கிறார்கள்! பாபாவைக் கூட தெரிந்திருக்கவில்லை. வெறுமனே இதைச் செய்வதின் மூலம் பகவான் கிடைப்பார் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எதுவும் கிடைப்பதில்லை. மண்டையை உடைத்து-உடைத்து துக்க முடையவர்களாக, யாருமற்றவர்களாக ஆகி விடுகிறார்கள் அப்போது தான் தந்தையாகிய நான் வருகின்றேன். தலைவன் இல்லாமல் மாயை என்ற மலைப் பாம்பு அனைவரையும் சாப்பிட்டு விட்டது. மாயை மிகவும் பலம்வாய்ந்தது என்று பாபா புரிய வைக்கின்றார். நிறைய பேருக்கு ஏமாற்றம் கிடைக்கிறது. சிலருக்கு காமத்தின் அறை, சிலருக்கு மோகத்தின் அறை விழுந்து விடுகிறது. தேக-அபிமானத்தில் வருவதின் மூலம் தான் அறை விழுகிறது. ஆத்ம-அபிமானியாக ஆவதில் தான் உழைப்பு இருக்கிறது ஆகையினால் நிரந்தரமாக நினைவு செய்வதற்கான பயிற்சி செய்யுங்கள். இல்லையென்றால் மாயை தலைகீழான காரியங்களைச் செய்ய வைத்து விடும். சரி எது? தவறு எது? என்ற புத்தி கிடைத்துள்ளது. எங்கேயாவது குழம்பி விட்டீர்கள் என்றால் பாபாவிடம் கேளுங்கள். தந்தியின் மூலம் கடிதம் அல்லது தொலைபேசியின் மூலம் கேட்கலாம். அதிகாலையில் தொலைபேசி இணைப்பு கிடைக்கும் ஏனென்றால் அந்த சமயத்தில் உங்களைத் தவிர மற்ற அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள். எனவே தொலைபேசியின் வாயிலாக கேட்கலாம். நாளுக்கு நாள் தொலைபேசி போன்றவற்றின் சப்தம் மாறிக் கொண்டே வருகிறது. ஆனால் அரசாங்கம் ஏழ்மையில் இருக்கிறது, எனவே செலவும் அப்படித் தான் செய்கிறது. இந்த சமயத்தில் அனைவரும் உளுத்துப்போன நிலையில் தமோபிரதானத்தில் இருக்கிறார்கள் இருந்தாலும் கூட, குறிப்பாக பாரதவாசிகளை ரஜோ-தமோகுணிகள் என்று ஏன் சொல்லப்படுகிறது? ஏனென்றால் இவர்கள் தான் அனைத்திலும் அதிகமாக சதோபிரதானமாக இருந்தார்கள். மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இந்தளவிற்கு சுகத்தைப் பார்க்கவில்லை, துக்கத்தையும் பார்க்க வேண்டாம். அவர்கள் இப்போது சுகமுடையவர்களாக இருக்கிறார்கள் ஆகையினால் தான் இந்தளவிற்கு தானியம் போன்றவற்றை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தி ரஜோபிரதானமாகும். வினாசத்திற்காக எவ்வளவு கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறார்கள்! ஆனால் அவர்களுக்கு இது தெரிவதில்லை ஆகையினால் அவர்களுக்கு நிறைய சித்திரங்கள் போன்ற வற்றை அனுப்ப வேண்டும், அப்போது அவர்களுக்குத் தெரிய வரும். இந்த சித்திரங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது என்று கடைசியாகப் புரிந்து கொள்வார்கள். இறை தந்தையின் பரிசு என்று இதில் எழுதப்பட்டுள்ளது. எப்போது ஆபத்துக் காலம் வருமோ அப்போது குரல் ஒ-க்கும், பிறகு புரிந்து கொள்வார்கள், இது நமக்கு கிடைத்திருந்தது என்று புரிந்து கொள்வார்கள். இந்த சித்திரங் களின் மூலம் நிறைய காரியங்கள் நடக்கும். பாவம் பாபாவைத் தெரிந்திருக்கவில்லை. சுகத்தை வழங்கும் வள்ளல் அந்த தந்தை ஒருவரே ஆவார். அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். சித்திரங்களின் மூலம் நல்ல விதத்தில் புரிய வைக்கலாம். இப்போது பாருங்கள் 3 அடி நிலம் கூட கிடைப்பதில்லை பிறகு நீங்கள் உலகத்திற்கே எஜமானர்களாக ஆகி விடுகிறீர்கள். இந்தச் சித்திரங்கள் வெளி நாடுகளில் கூட அதிக சேவை செய்யும். குழந்தைகளுக்கு இந்த சித்திரங்களின் மீது அந்தளவிற்கு மதிப்பு இல்லை. செலவு ஆகத்தான் செய்யும். இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில் அந்த அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவாகும் மற்றும் இலட்சக் கணக்கில் இறப்பார்கள். இங்கே இறப்பதற்கான விசயமே இல்லை. ஸ்ரீமத்படி முழுமையாக முயற்சி செய்ய வேண்டும், அப்போது தான் உயர்ந்த பதவி அடைய முடியும். இல்லையென்றால் கடைசியில் தண்டனை அனுபவிக்கும் நேரத்தில் நிறைய பச்சாதாபப்படுவீர்கள். இவர் தந்தை யாகவும் இருக்கின்றார் தர்மராஜாவாகவும் இருக்கின்றார். தூய்மை யற்ற உலகத்தில் வந்து குழந்தைகளுக்கு 21 பிறவிகளுக்கு சுயராஜ்யத்தை கொடுக்கின்றேன். இருந்தாலும் ஏதாவது வினாசகார காரியத்தைச் செய்தால் முழுமையான தண்டனையை அனுபவிப்பார்கள். எது நடக்குமோ அதை பார்த்துக் கொள்ளலாம், அடுத்த பிறவியைப் பற்றி யார் உட்கார்ந்து கொண்டு சிந்திப்பது என்பது கிடையாது. மனிதர்கள் தானம் புண்ணியத்தைக் கூட அடுத்த பிறவிக்காக செய்கிறார்கள். நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்களோ அது 21 பிறவிகளுக்கானதாகும். அவர்கள் எதையெல்லாம் செய்கிறார்களோ, அது அல்பகாலத்திற்கானதாகும். அதற்குப் பலனும் கூட நரகத்தில் தான் கிடைக்கும். உங்களுக்குப் பலன் சொர்க்கத்தில் கிடைக்கும். இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் சொர்க்கத்தில் 21 பிறவி களுக்குப் பலனை அடைகிறீர்கள். ஒவ்வொரு விசயத்திலும் ஸ்ரீமத்படி நடப்பதின் மூலம் துக்கம் தூரம் போய் விடுகிறது. குழந்தை களாகிய உங்களை கண்களில் அமர்த்தி மிகவும் ஓய்வாக அழைத்துச் செல்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் அதிக துக்கத்தை அடைந்துள்ளீர்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்று இப்போது கூறுகின்றேன். நீங்கள் எதுவும் இல்லாதவர்களாக வந்தீர்கள், இந்த நடிப்பை நடித்தீர்கள், இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். இது உங்களுடைய அழிவற்ற நடிப்பாகும். இந்த வியங்கள் எந்த அறிவியலார்களும் புரிந்து கொள்ள முடியாது. ஆத்மா அந்தளவிற்கு சிறிய நட்சத்திரமாக இருக்கிறது, அதில் அழிவற்ற நடிப்பு சதாகாலத்திற்குமானது நிரம்பியுள்ளது, இது ஒருபோதும் அழிவதில்லை. நானும் கூட படைப்பவனாக மற்றும் நடிகனாக இருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். நான் கல்பம் கல்பமாக நடிப்பை நடிக்க வருகின்றேன். பரமாத்மா மனம்-புத்தி உட்பட உயிரோட்டமுடையவராக, ஞானக்கடலாக இருக்கின்றார் என்று சொல்கிறார்கள், ஆனால் என்ன பொருளாக இருக்கின்றார் என்பதை யாரும் தெரிந்திருக்க வில்லை. எப்படி ஆத்மாக்களாகிய நீங்கள் நட்சத்திரம் போன்று இருக்கிறீர்களோ அதுபோல் நானும் நட்சத்திரமாக இருக்கின்றேன். பக்தி மார்க்கத்தில் கூட என்னை நினைவு செய்கிறார்கள். ஏனென்றால் துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள், நான் வந்து குழந்தைகளாகிய உங்களை என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். நான் வழிகாட்டியாக இருக்கின்றேன். பரமாத்மாவாகிய நான் ஆத்மாக்களாகிய உங்களை அழைத்துச் செல்கின்றேன். ஆத்மா கொசுவை விடவும் சிறியதாக இருக்கிறது. இந்த ஞானம் கூட குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது கிடைக்கிறது. எவ்வளவு நல்ல விதத்தில் புரிய வைக்கின்றார். உங்களை உலகத்திற்கு எஜமானர்களாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறு கின்றார், மற்றபடி திவ்ய திருஷ்டியின் திறவுகோலை நான் என்னிடம் வைத்துள்ளேன். இதை யாருக்கும் கொடுப்பதில்லை. இது பக்தி மார்க்கத்தில் என்னுடைய காரித்திற்குப் பயன்படுகிறது. நான் உங்களை தூய்மையாக, பூஜிக்கத்தக் கவர்களாக மாற்றுகின்றேன், மாயை தூய்மையற்ற, பூஜாரிகளாக மாற்றுகின்றது என்று பாபா கூறுகின்றார். நிறைய புரிய வைக்கின்றார், ஆனால் யாராவது புத்தியுடையவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்த டேப் ரிகார்டர் நல்ல பொருளாகும். குழந்தைகள் கண்டிப்பாக முரளியைக் கேட்க வேண்டும். நிறைய செல்லக் குழந்தைகள் இருக்கிறார்கள். பாபாவிற்கு பாந்தேலி (அடிமை போன்ற) கோபிகைகள் மீது மிகுந்த இரக்கம் ஏற்படுகிறது. பாபாவின் முரளியைக் கேட்டு மிகவும் குஷியடைவார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக என்னதான் செய்யக்கூடாது! பாபாவிற்கு இரவும்-பகலும் கிராமத்து கோபிகைகளின் கவலை இருக்கிறது. உறக்கமே போய்விடுகிறது, என்ன யுக்தியை உருவாக்குவது? எப்படி குழந்தைகளை துக்கத் திலிருந்து விடுவிப்பது? சிலர் துக்கத்தில் மாட்டுவதற்கு கூட ஏற்பாடு செய்கிறார்கள், சிலர் ஆஸ்தி எடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள், சிலர் கையை விட்டுச் செல்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். இன்றைக்கு உலகம் மிகவும் மோசமான தாக இருக்கிறது. சில குழந்தைகள் தந்தையை அடிப்பதற்கு கூடத் தயங்குவதில்லை. எல்லை யற்ற தந்தை எவ்வளவு நல்ல விதத்தில் புரிய வைக்கின்றார்! குழந்தைகள் ஒருபோதும் துக்க முடையவர்களாக ஆகாத அளவிற்கு குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பேன். எனவே குழந்தை களும் கூட அந்தளவிற்கு இரக்க மனமுடையவர்களாக ஆக வேண்டும், அனைவருக்கும் சுகத்திற் கான வழியை சொல்ல வேண்டும். இன்றைக்கு அனைவரும் துக்கத்தை கொடுக்கிறார்கள், மற்றபடி டீச்சர் ஒருபோதும் துக்கத்திற்கான வழியை சொல்ல மாட்டார்கள். அவர் படிப்பிக்கின்றார். படிப்பு வருமானத்திற்கான ஆதாரமாகும். படிப்பின் மூலம் சரீர நிர்வாகத்தை செய்வதற்கு தகுதி யானவர்களாக ஆகிறார்கள், தாய்-தந்தையரிடமிருந்து ஆஸ்தி என்னவோ கிடைக்கிறது ஆனால் அது எந்த காரியத்திற்கு உதவும்? எந்தளவிற்கு அதிக செல்வம் இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிக பாவம் செய்கிறார்கள். இல்லையென்றால் மிகவும் பணிவாக தீர்த்த யாத்திரை செல்கிறார்கள். ஆனால் சிலர் தீர்த்த யாத்திரையில் கூட மது எடுத்துக் கொண்டு செல்கிறார்கள், பிறகு மறைத்து வைத்துக் குடிக்கிறார்கள். பாபா (பிரம்மா) பார்த்திருக்கிறார், மது இல்லாமல் அவர்களால் இருக்கவே முடியாது. கேட்கவே கேட்காதீர்கள். சண்டைக்கு செல்பவர்கள் கூட நன்றாக மது அருந்துகிறார்கள். சண்டைக்கு செல்பவர்களுக்கு தங்களுடைய உயிரைப் பற்றி கவலை இருப்பதில்லை. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு சென்று மற்றொரு சரீரத்தை எடுக்கிறது என்று புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கும் கூட இப்போது ஞானம் கிடைக்கிறது. இந்த மோசமான சரீரத்தை விட வேண்டும். அவர்களுக்கு எந்த ஞானமும் இல்லை. ஆனால் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது - இறக்க வேண்டும் மற்றும் கொலை செய்ய வேண்டும். இங்கே நாம் நாமாகவே முயற்சி செய்து பாபாவிடம் செல்ல விரும்புகிறோம். இது பழைய சரீரம். எப்படி பாம்பும் கூட பழைய தோலை விட்டு விடுகிறது. குளிரில் வற்றி விடுகிறது என்றால் தோலுறித்து விடுகிறது. உங்களுடையது மிகவும் மோசமான பழைய சரீரமாகும், நடிப்பை நடித்து நடித்து இப்போது இதை விட வேண்டும், பாபாவிடம் செல்ல வேண்டும். பாபா யுக்தி சொல்லி யிருக்கின்றார் - மன்மனாபவ. என்னை நினைவு செய்யுங்கள் அவ்வளவு தான், இப்படி அமர்ந்து அமர்ந்து சரீரத்தை விட்டு விடுவீர்கள். சன்னியாசிகளுக்கும் அப்படி நடக்கிறது - அமர்ந்து-அமர்ந்து சரீரத்தை விட்டு விடுகிறார்கள் ஏனென்றால் அவர்கள் ஆத்மா பிரம்மத்தில் ஐக்கியமாகி விட வேண்டுமென்று புரிந்து கொள்கிறார்கள், எனவே யோகத்தில் அமர்ந்து விடுகிறார்கள். ஆனால் செல்ல முடியாது. காசி கல்வெட்டில் விழுகிறார்கள் அல்லவா! அது தற்கொலையாகி விடுகிறது. இந்த சன்னியாசிகள் கூட அமர்ந்து- அமர்ந்து அப்படி செல்கிறார்கள், பாபா பார்த்திருக்கிறார், அது ஹடயோக சன்னியாசமாகும்.

உங்களுக்கு 84 பிறவிகள் எப்படி கிடைக்கிறது என்று பாபா புரிய வைக்கின்றார். உங்களுக்கு எவ்வளவு ஞானம் கொடுக்கின்றார், யாராவது குறைவானவர்களே ஸ்ரீமத்படி நடக்கிறார்கள். தேக-அபிமானம் வருவதின் மூலம் பாபாவிற்குக் கூட தங்களுடைய வழியைக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆத்ம-அபிமானியாக ஆகுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். நான் ஆத்மாவாக இருக்கின்றேன், பாபா தாங்கள் ஞானக்கடலாக இருக்கின்றீர்கள். பாபா தங்களுடைய வழிப்படி தான் நடப்பேன். ஒவ்வொரு அடியிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது பிறகு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. எங்கு வேண்டு மானாலும் செல்லுங்கள், பாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். விகர்மங்களின் சுமை தலையில் நிறைய இருக்கிறது. கர்மசுமையையும் கூட முடிக்க வேண்டியிருக்கிறது அல்லவா! கடைசி வரை இந்த கர்ம சுமை விடாது. ஸ்ரீமத்படி நடப்பதின் மூலம் தான் பாரஸ்புத்தியாக (தங்கபுத்தி) ஆக வேண்டும். கூடவே தர்மராஜாவும் இருக்கின்றார். எனவே அவர் பொறுப்பாகி விட்டார். பாபா அமர்ந்திருக்கின்றார், நீங்கள் ஏன் தங்கள் மீது சுமையை வைத்துக் கொள்கிறீர்கள்? தூய்மையற்றவர்களை தூய்மையாக்கும் பாபா தூய்மையற்றவர்களின் கூட்டத்தில் வர வேண்டும். இது ஒன்றும் புதிய விசயம் இல்லை, அனேக முறை நடிப்பை நடித்திருக்கிறீர்கள், மீண்டும் நடித்துக் கொண்டே இருப்பீர்கள். இதைத் தான் அதிசயம் என்று சொல்லப்படுகிறது. நல்லது!

பரலௌகீக பாப்தாதாவின் செல்லக் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நம்ஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபாவிற்கு சமமாக அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு இரக்கம் காட்ட வேண்டு சுகத்திற்கான வழியை சொல்ல வேண்டும்.

2) எந்தவொரு தலைகீழான காரியத்தையும் செய்யக்கூடாது. ஸ்ரீமத்படி 21 பிறவிகளுக்கு தங்களுடைய பலனை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையோடு நடக்க வேண்டும்.

வரதானம்:
பாபாவிடம் கொடுத்துள்ள உறுதி மொழிகளின் நினைவின் மூலமாக இலாபத்தை அடைந்து சதா பாபாவின் ஆசிர்வாதம் அடைவதற்கு உரிய ஆத்மா ஆகுங்கள்.

பாபாவிடம் மனதின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் மற்றும் எழுதியும் கொடுத்துள்ள உறுதிமொழி களை நினைவில் வைத்துக் கொள்வதனால் முழு இலாபத்தை அடைய முடியும். எவ்வளவு முறை உறுதி மொழி கொடுத்துள்ளோம், அதில் எத்தனை கடைப்பிடித்துள்ளோம் என்பதை சோதனை செய்யுங்கள். உறுதிமொழி மற்றும் இலாபம் இரண்டும் சமநிலையில் இருக்கும் போது வரதாதா பாபாவின் மூலமாக ஆசிர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.எவ்வாறு சிரேஷ்ட சங்கல்பம் செய்கின்றோமோ அதேபோல் கர்மமும் சிரேஷ்டமாக இருந்தால் வெற்றி மூர்த்தியாக ஆவீர்கள்.

சுலோகன்:
தன்னைத்தானே அப்படிப்பட்ட திவ்யமான கண்ணாடியாக மாற்றிக் கொள்ளுங்கள். அதில் பாபா மட்டுமே தென்பட வேண்டும். இதனயே உண்மையான சேவை என்று கூறப்படுகிறது.