10.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! அரைகல்பமாக பீடிக்கப்பட்டு இருந்த 5 விகாரங்களின் வியாதி இப்பொழுது விடுபட்டது போலவே தான் எனவே அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எந்தவொரு ஆர்வம் (பொழுது போக்கு) கொண்டிருக்க வேண்டும். எந்த விஷயங்களுடன் உங்களுக்கு சம்பந்தம் இல்லை?

 

பதில்:

ஒரு தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி பெறுவதற்கான பொழுதுபோக்கு, ஆர்வம் கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு அநேகவிதமான பொழுதுபோக்குகள் இருக்கின்றன. நீங்கள் அவை அனைத்தையும் விட்டு விட வேண்டும். நீங்கள் இறைவனின் குழந்தைகளாகி உள்ளீர்கள். தந்தையுடன் திரும்பிச் செல்ல வேண்டும். எனவே இந்த சரீரத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் மறந்து விட வேண்டும். வயிற்றுக்கு சிறிது உணவு ஊட்ட வேண்டும் மற்றும் புத்தியை புது உலகத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

 

பாடல்:

யாருடைய துணைவன் பகவானோ.. .. ..

 

ஓம் சாந்தி.

யாரெல்லாம் நெருங்கிய மகாவீர் ஆடாத அசையாத குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்கள் மனதில் அநேகவிதமான புயல்கள் கூட வரும். மேலும் விபத்துக்கள், நோய்கள் ஆகியவை கூட வரும் என்பதைப் புரிந்திருப்பார்கள். ஏனெனில் இப்பொழுது கடைசி நேரத்தின் பகட்டு ஆகும். மாயை நன்றாக உலுக்கி விடும். யார் பக்குவமான நிச்சயபுத்தி உடையவர்களோ அவர்களுக்கு சரீரத்தின் கணக்கு வழக்கு கூட முடிந்து போகும் என்பது தெரிந்திருக்கும். எப்பொழுதாவது வியாதியிலிருந்து விடுபடுவதற்கான நேரம் வரும் பொழுது குஷி ஏற்படுகிறது. இப்பொழுது நாம் இந்த நோயிலிருந்து விடுபட போகிறோம். இனி மீதம் ஒரு சில நாட்களே உள்ளன என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த 5 விகாரங்களின் நோய் அரை கல்பமாக பீடித்துள்ளது. இவற்றினால் மனிதர்கள் அஜாமில் போன்ற பாவ ஆத்மாக்கள் ஆகி விடுகிறார்கள். அப்போர்ப்பட்ட உலகத்தில் இப்பொழுது சிறிது நாட்களே மீதம் உள்ளன. இந்த வியாதிகள் விடுபட்டு விட்டது போலவே தான். உலகம் இந்த விஷயங்களை அறியாமல் இருக்கிறது. ஏனெனில் அசுர புத்தி உடையவர்கள் போல இருக்கிறார்கள். அவர்கள் ஐயோ ! ஐயோ ! என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். இந்த விஷயங்களுடன் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இவை ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. இவை ஏற்படத் தான் போகிறது. இதில் பயப்படுவதற்கான எந்த விஷயமும் கிடையாது. இனி மீதம் சிறிது நேரம் தான் உள்ளது. வயிற்றுக்கு சிறிது உணவு (இரண்டு ரொட்டி) ஊட்ட வேண்டும். இப்பொழுது நமக்கு பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான பொழுதுபோக்கு இருக்கிறது. மனிதர்களிடம் அநேகவிதமான பொழுதுபோக்குக்கள் இருக்கும். இங்கு எந்த ஒரு பொழுதுபோக்கு கிடையாது. சரீரத்துடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை மறந்து விட வேண்டும். நாம் இறைவனினுடையவர்கள் ஆகி விட்டோம். இப்பொழுது திரும்ப பாபாவிடம் அல்லது மணமகனிடம் செல்ல வேண்டும். இந்த மணமகன் கூட மிகவும் விசித்திரமானவர். சித்திரம் (உடல்) இல்லாதவர். உடலில்லாத காரணத்தால் அவரை முழுமையாக நினைவு செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இது புதிய பழக்கமாகும் அல்லவா? ஆத்மா பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும். இது போல அரைகல்பமாக ஒரு பொழுதும் நினைவு செய்யவில்லை. சத்யுகத்தில் நாம் ஆத்மா ஆவோம் என்பது மட்டும் புரிந்திருப்பார்கள். வேறு எந்த ஞானமும் இருக்காது. ஆத்மாவாகிய நாம் ஒரு சரீரத்தை விட்டு அடுத்ததை எடுப்போம். இங்கு ஆத்மாவை பரமாத்மா ஆக்கி விட்டுள்ளார்கள். பரமாத்மா எங்கும் நிறைந்தவர் என்று கூறி விடுகிறார்கள். இப்பொழுது உங்களைப் பொருத்தவரை இந்த பழைய உலகம் இல்லவே இல்லை. புத்தி புது உலகத்தின் மீது ஈடுபட்டுள்ளது. எப்படி ஏதாவது புதிய வீடு அமைகிறது என்றால், புத்தி பழைய வீட்டிலிருந்து நீங்கி புதிய வீட்டின் மீது ஈடுபட்டு விடுகிறது. இப்பொழுது இத்தனை தர்மத்தினர் மாநாடுகள் ஆகியவை நடத்துகிறார்கள். ஆனால் ஒருவருடைய புத்தியோகம் கூட பரமபிதா பரமாத்மா உடன் இல்லை. இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கும் தந்தை கிடைத்துள்ளார். அவரே ஞானேஷ்வரன் மற்றும் யோகேஷ்வரன் ஆவார். இறைவன் தன்னுடன் யோகம் கொள்வதைக் கற்பிக்கிறார். ஞானேஷ்வரன் என்றால் இறைவனிடம் தான் ஞானம் உள்ளது. அவரால் தான் ஞானம் மற்றும் யோகத்தைக் கற்பிக்க முடியும். யாருக்கு பக்குவமான நிச்சயம் உள்ளதோ அவர்கள் நாம் இந்த உலகத்தில் சிறிது காலத்திற்காக இருக்கிறோம் என்பதைப் புரிந்திருப்பார்கள். நாம் இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும். எப்படி நாடகத்தில் இன்னும் சிறிது நேரம் உள்ளது, பிறகு நாம் வீடு செல்வோம் என்பது நடிகர்களுக்கு தெரிய வந்து விடுகிறது. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உங்களுடையது எல்லையில்லாத கடிகாரமாகும். இது கடைசி பிறவியாகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே நாங்கள் இந்த பழைய சரீரத்தை விடுத்து உலகத்தின் இளவரசர் மற்றும் இளவரசி ஆகப் போகிறோம் என்று உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். நம்முடைய மம்மா பாபா கூட போய் இளவரசர் இளவரசி ஆவார்கள். குழந்தைகள் கூட நல்ல முறையில் ஓடிப் போய் வெற்றிமாலையில் நெருங்கிய நம்பரில் வர வேண்டும். பாபாவிடம் யாராவது கேட்டார்கள் என்றால் பாபாவினால் கூற முடியும் - உங்களுடைய நடத்தை எப்படி இருக்கிறது என்றால் நீங்கள் வெற்றி மாலையில் நெருக்கத்தில் வந்து விடுவீர்கள். சுயம் தங்களுக்கும் தெரிய வருகிறது. நாம் எந்த அளவிற்கு தேர்ச்சி பெறுவோம். ஒரு சிலர் நாங்கள் ஒரு பொழுதும் தேர்ச்சி அடைய மாட்டோம் என்று நினைக்கிறார்கள். பாபாவின் குழந்தையாக இருக்கிறேன், எல்லாமே சமர்ப்பணம் செய்துள்ளேன், பாபாவின் மடியில்  அமர்ந்துள்ளேன் என்றாலும் கூட தாரணை இல்லையென்றால், உயர்ந்த பதவி கிடைக்க முடியும். யார் இல்லற விவகாரங்களில் இருந்தபடியே சேவை செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களால் இங்கு இருப்பவர்களை விட நல்ல பதவி அடைய முடியாது. அவர்கள் மிகவுமே வேகமாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கூட இருப்பதால் சிறிது நன்மை ஏற்படுகிறது. அவ்வளவே ! மேகங்கள் கடலிடம் வந்தன. நிரம்பியது. பின் மழை பொழிய சென்று விட்டன.

 

முரளி எல்லாப் பக்கங்களிலும் சென்றுக் கொண்டே இருக்கிறது. முரளி கேட்டு பின் மற்றவர்களுக்குக் கூறவும் செய்கிறார்கள். நிறைய சேவை செய்கிறார்கள். அவர்கள் நல்ல உயர்ந்த பதவியை அடைந்து விடுகிறார்கள். உழைப்பு இருக்கிறது. இங்கு உழைப்பு ஆவதில்லை என்றால், விழுந்து விடுகிறார்கள். எல்லாமே முயற்சியை பொருத்ததாகும். தங்களது நாடியைத் தாங்களே கூட பார்க்க முடியும். இது போல முயற்சி செய்தால் நான் என்ன பதவியை அடைவேன் என்று புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது முயற்சி செய்து உயர்ந்த பதவியை அடையவில்லை என்றால், கல்ப கல்பாந்திரத்திற்கு அப்பேர்ப்பட்ட பதவி ஆகி விடும். இது எல்லையில்லாத நாடகமாகும். தங்களுக்கு இப்பொழுது எல்லையில்லாத புத்தி கிடைத்துள்ளது. நாடகத்தின் முதல் இடை கடையை அறிந்து கொள்வது மிகவும் ஆனந்தமானதாகும். ஆனால் மாயையின் புயல் எப்பேர்ப்பட்டது என்றால், ஏதாவது தலைகீழாக தவறுகளைச் செய்வித்து விடுகிறது. நல்ல நல்ல குழந்தைகளைக் கூட மாயை வென்று விடுகிறது. இன்னும் போகப் போக விருத்தியும் அதிகமாகும். உங்களுடைய பெயர் புகழடையும். இப்பொழுது டில்லியில் மத மாநாடு நடக்கிறது. மாநாட்டில் புரிய வைப்பதற்கான மிகவும் நல்ல புத்தி வேண்டும். மிகவும் நல்ல முறையில் கடிதப் போக்குவரத்து நடக்க வேண்டும். முதலில் தலைவர்களாக இருப்பவர்களினுடைய ஒரு சிறு குழு (கமிட்டி) இருக்கும். பிறகு பெரிய மாநாட்டில் அழைக்கிறார்கள். போப் ஆகியோருக்கு முன் கூட்டியே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. இதுவும் மாநாடுகளில் நிறைய அக்கறை எடுக்கிறார்கள். எனவே இப்பேர்ப்பட்ட மாநாட்டில் மிகவுமே புத்திசாலி குழந்தைகள் வேண்டும். அவர்கள் மிகப் பெரிய  அறிவாளிகளாக இருப்பவர்களுக்குப் போய் புரிய வைக்க வேண்டும். முதலில் தலைவர் யார் என்ற அந்த விஷயத்தைத் தெரிந்து வாருங்கள். இப்பொழுது பாபா கூட வந்துள்ளார். இதற்கு முன்பு யாருக்குமே தேவி தேவதா தர்மத்தைப் பற்றி தெரியவே தெரியாது. தேவி தேவதா தர்மத்திற்கும் தலைவர் இருக்கிறார் என்று இப்பொழுது குஷி ஆகிறது. யார் ஞானத்தில் பரிபக்குவ நிலை அடைந்துள்ளார்களோ அவர்கள், எல்லா தர்மங்களிலும் உயர்ந்த தர்மம் எது என்று கூறுங்கள் என்று இவர்களிடம் கேட்கலாம் என்பதை புரிந்திருப்பார்கள். அந்த பக்குவமானோரையே தலைவனாக ஆக்க வேண்டும். நீங்கள் பி.கே. எல்லோரையும் விட தலைவர் ஆவீர்கள். நீங்கள் ஜகத் மாதாக்கள் ! பதவி கூட தாய்மார்களினுடையது ஆகும். பீஷ்ம பிதாமகர் ஆகியோருக்கு குமாரிகள் (சிகண்டி) அம்பை எய்தினார்கள் என்றும் காண்பிக்கிறார்கள். இந்த குமாரிகளுக்கு முன்னால் எல்லோரும் வர வேண்டி உள்ளது. எனவே உயர்ந்ததிலும் உயர்ந்தவர் யார் என்பதைப் புரிய வைக்க வேண்டி உள்ளது. பிறகு சர்வவியாவி (எங்கும் நிறைந்தவர்) என்ற ஞானம் பொய்யானது என்பதைப் புரிந்து கொண்டு விடுவார்கள்.

 

இப்பொழுது நீங்கள் போர்க்களத்தில் உள்ளீர்கள். தந்தையின் அறிமுகம் கொடுப்பது உங்களைப் பொருத்தவரை ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. யாரெல்லாம் நல்ல நல்ல குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த பாகத்தை நாங்கள் அநேக முறை நடித்துள்ளோம் என்ற போதை ஏறி இருக்கும். இப்பொழுது இந்த பழைய உலகம் முடியப் போகிறது. இந்த பழைய சட்டையை விட வேண்டும். பிறகு புதியதாக வேறு பாகத்தை ஏற்று நடிப்போம். இப்பொழுது உங்களுடைய புத்தி விசாலமானதாக ஆகி உள்ளது. இப்பொழுது இந்த பழைய சட்டையை (உடலை) விட வேண்டும். பிறகு 84 பிறவிகள் புதுப் புது உடலை எடுக்கிறோம். இது புத்தியில் எப்பொழுதும் இருக்க வேண்டும். பாகம் ஏற்று நடிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பாகம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? 84 பிறவிகள் எடுத்து பாகத்தை நடித்தீர்கள். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது. இந்த உடல் கூட முடிகிறது. சிருஷ்டி கூட தமோபிரதானமாக உள்ளது. இப்பொழுது நமது ராஜாங்கம் ஸ்தாபனை ஆகி விடும். பிறகு விநாசம் ஆரம்பமாகி விடும். நாம் சென்று அடுத்த பிறவில் உலகிற்கு அதிபதி ஆகி விடுவோம். இங்கு என்ன படிக்கிறார்களோ அதற்கு இந்த பிறவியிலேயே கிடைக்கிறது. உங்களுக்கு அது மீண்டும் நினைவிற்கு வந்தது. நாம் போய் தெய்வீகப் பிறவி எடுப்போம். பிறகு க்ஷத்திரிய பிறவி எடுப்போம்.. இது புத்தியில் சொட்டி, கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது குஷியின் அளவு அதிகரித்தபடி இருக்கும். யார் நல்ல முயற்சியாளர்களாக இருப்பார்களோ அவர்களுடைய புத்தியில் இது போன்ற விஷயங்கள் இருந்துக் கொண்டே இருக்கும்.

 

கர்மம் செய்யவே வேண்டும் என்று பாபா புரிய வைத்துள்ளார். பிறகு தங்களுடைய நினைவினுடைய சார்ட்டை அதிகரிக்க வேண்டும். இரவினுடைய நேரம் (அதிகாலை) நன்றாக இருக்கும். இதில் ஒன்றும் களைப்பு ஏற்படுவதில்லை. நாள் முழுவதும் அந்த நிலையில் இருக்க முடிவதில்லை. பிறகு புயல்கள் வந்து விடும் பொழுது களைப்படையவும் செய்து விடுகிறது. விரும்பாவிடினும் புயல்கள் வந்து விடுகின்றன. அவை களைப்படையச் செய்யும். மற்றபடி தந்தையை நினைவு செய்துக் கொண்டே இருந்தீர்கள், தலைப்புகள் (விஷயங்கள்) ஆகியவை எடுத்து தொகுத்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால், அதில் மூளை இன்னுமே நிரம்பியதாக ஆகி விடும். இது பாபாவின் அனுபவம் ஆகும். புயல்கள் நிறைய வரும். எந்த அளவிற்கு ருஸ்தம் - சிறந்த வீரன் ஆவீர்களோ, அந்த அளவு மாயை இன்னும் அதிகமாக தொல்லைப்படுத்தும். இது ஒரு சட்டமாகும். மாயை மிகவும் பலசாயாகும் என்று தந்தை கூறுகிறார். ஏனெனில், அதனுடைய இராஜ்யம் இப்பொழுது போகப் போகிறது. எனவே நிறைய புயல்களைக் கிளப்பும். அவற்றிற்குப் பயப்படக் கூடாது. சரீரத்திற்கு ஏதாவது ஆகிறது என்றால் அது கூட வினைப்பயன் ஆகும். இதில் மூச்சு திணறிப் போகக் கூடாது. கடைசி சரீரம் ஆகும். மீதம் சிறிது நேரம் தான் உள்ளது. இவ்வாறு நினைத்து குஷியில் இருக்கிறோம். நாடகத்தில் இச்சமயம் நீங்கள் எல்லோரையும் விட அதிகமான பதவி உயைவர்கள் ஆவீர்கள். ஏனெனில், பரமபிதா பரமாத்மாவின் மடியை எடுத்துள்ளீர்கள். உங்களிலும் கூட யார் நல்ல முயற்சியாளர்களாக இருக்கிறார்களோ, அவர்களைப் போன்ற சௌபாக்கியசாலி வேறு யாரும் இல்லை. இந்த ஈசுவரிய சுகம் மிகவும் உயர்ந்ததாகும். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. அவினாஷி கண்டம் ஆகும். வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். அவர்கள் பின்னால் வந்துள்ளார்கள். சூரியவம்ச ராஜதானி கடந்து சென்றது. பிறகு சந்திர வம்சத்தினர் ஆனார்கள். அவர்களுடைய சரித்திரம் பூகோளம் பற்றி யாருக்கும் தெரியவே தெரியாது. இப்பொழுது உங்களுக்குத் தெரிய வந்துள்ளது. அங்கு சத்யுகத்திற்குப் பிறகு திரேதா ஆகிறது என்பது யாருக்காவது தெரிந்திருக்குமா என்ன? 2 கலை குறைந்து விடுவதால் அந்த சுகம் குறைந்து போய் விடுகிறது. இந்த ஞானம் சத்யுகத்தில் இருந்தது என்றால், உள்ளுக்குள்ளேயே மூச்சு திணறிக் கொண்டே இருப்பார்கள். என்ன நாம் இறங்கப் போகிறோமா என்று மனம் உறுத்தும். ஆட்சி புரிவதே நல்லதாகத் தோன்றாது. இங்கு கூட ஒரு சிலர் நாங்கள் சொர்க்கத்தின் அதிபதி ஆவோம். பிறகு கீழே இறங்கி வர வேண்டி வருமா என்பார்கள், ஆனால் பிறகும் அங்கு இராஜ்யம் கிடைப்பதற்கான குஷி இருக்கும். இப்பொழுது உங்களை பாபா திரிகாலதரிசி ஆக்கிக் கொண்டிருக்கிறார். சொர்க்கத்தின் அதிபதியான இலட்சுமி நாராயணர் கூட திரிகாலதரிசி கிடையாது. சங்கமத்தில் தான் தந்தை வந்து ஞானத்தின் மூன்றாவது கண் கொடுத்து திரிகாலதரிசி ஆக்குகிறார். தேவதைகளுக்கு இந்த எல்லா அலங்காரங்களும் ஏன் கொடுக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் (ஃபைனல்) சம்பூர்ண நிலையில் இருக்கிறார்கள். பிராமணர்கள் விழுந்துக் கொண்டும், ஏறிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அலங்காரம் எப்படி கொடுக்க முடியும்? அழகாகவே இல்லை. நாடகத்தில் எவ்வளவு அதிசயமான இரகசியங்கள் உள்ளன. சுயதரிசன சக்கரதாரி பிராமணர்கள் தான் ஆவார்கள். இந்த ஞானத்தினால் தான் நீங்கள் தேவதை ஆகிறீர்கள். இச்சமயத்தில் நீங்கள் சுயதரிசன சக்கரதாரி, திரிநேத்ரி, திரிகாலதரிசி ஆவீர்கள். இது உங்களுடைய பட்டங்கள் ஆகும். இந்த எல்லா விஷயங்களும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் புரிய வைக்க வேண்டியவை ஆகும். முதன் முதலில் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பரமபிதா பரமாத்மா உடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது? அவரது பெயரே காட்ஃபாதர் என்பதாகும். காட்ஃபாதர் (சர்வவியாபி) எங்கும் நிறைந்தவர் என்று கூறுவார்களா என்ன? அவர் தந்தை ஆவார் அல்லவா? பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் உள்ளது என்றே நாங்கள் எழுதுகிறோம். பரமபிதா என்று கூறுகிறோம் என்றால், அவசியம் தந்தை ஆகிறார் அல்லவா? தந்தை சர்வவியாபியாக எப்படி இருக்க முடியும்? தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்க வேண்டி உள்ளது. புதிய உலகத்தின் படைப்புக்கர்த்தா தந்தை ஆவார். இந்த இலட்சுமி நாராயணருக்கு புதிய உலகத்தின் ஆஸ்தி கிடைத்துள்ளது. அங்கு தேவதைகளுக்கு மூன்றாவது கண்ணின் அவசியம் இருப்பதில்லை. மூன்றாவது கண் அவசியம் பிரம்மா தான் கொடுப்பார். திரிமூர்த்தியின் பொருள் எவ்வளவு நன்றாக இருக்கிறது. மிகவும் அழகாக புரிய வைக்க வேண்டும். எனவே யார் நல்ல ஆசிரியராக இருப்பாரோ அவருக்கு புரிய வைப்பதற்கான அனுபவம்-பயிற்சி இருக்கும். நாளுக்கு நாள் எவரொருவருக்கும் புரிய வைப்பது மிகவும் சுலபமாக ஆகிக் கொண்டே போகும். பரமபிதா பரமாத்மா உங்களுக்கு என்னவாக இருக்கிறார்? தந்தையாக இருக்கிறார் என்பார்கள். தந்தை இருப்பதே புது உலகத்தின் படைப்புக்கர்த்தாவாக. சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அவசியம் அவர்களுக்கு பரமபிதா பரமாத்மாவிடமிருந்து சொத்து கிடைத்திருக்கக் கூடும். இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு இராஜ்யத்தைப் பெறுகிறார்கள். நாங்கள் அனைவரும் பி.கே. ஆவோம். நல்லது, நீங்கள் பிரஜாபிதா பிரம்மா என்று கூறுகிறீர்கள். எனவே அவர் உங்கள் தந்தை ஆகிறார் அல்லவா என்று அனைவருக்கும் புரிய வையுங்கள். அவர் (சிவன்) கூட தந்தை ஆவார். நீங்கள் கூட பிரம்மா குமார் குமாரி ஆவீர்கள். நாங்கள் பாட்டனாரிடமிருந்து ஆஸ்தி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எடுக்காமல் இருக்கிறீர்கள். வந்து புரிந்து கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கும் கிடைத்து விடும். பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகதம்பா இவருவருமே முக்கியமானவர்கள். இலட்சுமி நாராயணரின் பதவியின் ஆஸ்தி கிடைக்கிறது. குழந்தைகளுக்கு நிறைய வகைகளில் புரிய வைக்கிறார். பெரியப் பெரிய மாநாடுகளில் குழந்தைகளாகிய நீங்கள் சென்றீர்கள் என்றால் அப்பொழுது பெயர் புகழடையும். நம்முடைய விஷயமே ஞானத்தினுடையதாகும். மற்ற எல்லோருடைய விஷயங்களும் பக்தியினுடையதாகும். ஞானத்தினால் யாரிடமும் கேள்வி கேட்பதற்கான அதிகாரம் நமக்கு இருக்கிறது. ஆனால் புரிந்து கொள்பவர்கள் கூட யாரும் சட்டென்று புரிந்து கொள்வதில்லை. நிறைய தர்க்கம் செய்கிறார்கள். புரிந்து கொண்டு விட்டார்கள் என்றால், அவர்களுடைய முழு மரியாதையே இல்லாமல் போய் விடும். குமாரிகள் பீஷ்ம பிதாமகரை வென்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இது நடக்கப் போகிறது. நாடகத்தில் அவசியம் இந்த பாகம் உள்ளது. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. வெற்றி மாலையில் வர வேண்டும் என்றால் மம்மா பாபாவிற்குச் சமானமாக சேவை செய்ய வேண்டும். முரளியை தாரணை செய்து பிறகு கூற வேண்டும். நடத்தை மிகவும் ராயலாக இருக்க வேண்டும்.

 

2. தங்களது விசால புத்தி மூலம் இந்த எல்லையில்லாத நாடகத்தை அறிந்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும். புயல்களுக்குப் பயப்படக் கூடாது. ஞான சிந்தனை செய்து புத்தியை நிரம்பியதாக வைக்க வேண்டும்.

 

வரதானம்:

தேக அபிமானத்தின் அணு அளவைக் கூட பலி கொடுத்து விடும் மகா பலசாலி ஆகுக!

எல்லாவற்றையும் விட பெரிய பலவீனம் தேக அபிமானமாகும். தேக அபிமானத்தின் சூட்சுமமான அம்சம் மிகப் பெரியதாகும். தேக அபிமானத்தை பலி ஏற்றுவது என்றால் அம்சம் மற்றும் வம்சம் சகிதம் சமர்ப்பணம் ஆதல். இது போல பலி ஏற்றுபவர்கள் தான் மகாபலவான் ஆகிறார்கள். ஒரு வேளை தேக அபிமானத்தின் எந்த ஒரு அணு அளைவையும் மறைத்து வைத்து விட்டீர்கள், அபிமானத்தையே சுயமானம் என்று (தவறாக) நினைத்துக் கொண்டு விட்டீர்கள் என்றால், அதில் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் வெற்றி தென்படலாம், ஆனால் வெகு காலத்திற்கான தோல்வி அடங்கி உள்ளது.

 

சுலோகன்:

இச்சை இருக்கவில்லை, ஆனால் நன்றாகத் தோன்றியது என்பது கூட ஜீவன் பந்தன ஸ்திதியாகும்.

 

தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள் :

எப்படி முதன் முதல் நாங்கள் இந்த விருட்சத்தின் மேலே அமர்ந்து முழு விருட்சத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற போதை இருந்தது. அதே போல பரந்தாமத்தின் உயர்ந்த ஸ்திதியில் அமர்ந்து கீழே முழு உலக உருண்டைக்கும் சகாஷ் சக்தி அளிக்கக் கூடிய சேவை செய்யுங்கள். இதனால் தபஸ்யா மற்றும் சேவை இரண்டுமே இணைந்ததாகவும் ஒன்று சேர்ந்தாற் போலவும் அமையும்

 

ஒம்சாந்தி