10-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! இது உங்களுடைய மறுவாழ்வினுடைய ஜென்மமாகும். நீங்கள் இறைவனான தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகப் பெரிய லாட்டரி கிடைத்துள்ளது. எனவே அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்.

கேள்வி:
உங்களுக்கு நீங்களே எந்தவொரு விஷயத்தை புரிய வைத்துக் கொண்டீர்கள் என்றால் கவலை முடிந்து போய்விடும், மேலும் கோபம் போய் விடும்?

பதில்:
நாம் இறைவனின் குழந்தைகள் ஆவோம். நாமோ தந்தைக்கு சமானமாக இனிமை யானவர் ஆக வேண்டும். எப்படி பாபா இனிமையான ரூபத்தில் புரிய வைக்கிறார், கோபப்படு வதில்லை. அதே போல நாம் கூட நமக்குள் இனிமையாக இருக்க வேண்டும். உப்புத் தண்ணீர் போல ஆகக் கூடாது. ஏனெனில் எந்த விநாடி கடந்து விட்டதோ, அது நாடகத்தில் பாகம் இருந்தது என்பதை அறிந்துள்ளோம். பின் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? இது போல தங்களுக்குத் தாங்களே புரிய வைத்தீர்கள் என்றால் கவலை முடிந்து போய் விடும். கோபம் ஓடிப் போய் விடும்.

பாடல்:
இதுவே வசந்தமாகும்.. .. .. ..

ஓம் சாந்தி.
இது ஈசுவரிய குழந்தைகளின் மகிழ்ச்சிகளின் மகிமையாகும். நீங்கள் இந்த அளவிற்கு குஷிகளின் மகிமையை சத்யுகத்தில் பாட மாட்டீர்கள். இப்பொழுது உங்களுக்கு பொக்கிஷங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது பெரியதிலும் பெரிய லாட்டரி ஆகும். லாட்டரி கிடைக்கும் பொழுது குஷி ஏற்படுகிறது. நீங்கள் மீண்டும் இந்த லாட்டரியினால் பிறவிதோறும் சொர்க்கத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இது உங்களுடைய மறு வாழ்விற்கான ஜென்மம் ஆகும். யார் உயிருடனிருந்தே இறப்ப தில்லையோ, அவர்களுக்கு மறு வாழ்விற்கான ஜென்மம் என்று கூற மாட்டார்கள். அவர் களுக்கோ அளவு கடந்த குஷி கூட இருக்க முடியாது. மறு வாழ்வு உடையவராக ஆகாத வரை முழுமையான ஆஸ்தி கிடைக்க முடியாது. யார் தந்தையினுடையவராக ஆகிறார்களோ, தந்தையை நினைவு செய்கிறார்களோ அவர்களை தந்தையும் நினைவு செய்கிறார். நீங்கள் ஈசுவரிய குழந்தைகள் ஆவீர்கள். நாம் இறைவனான தந்தையிடமிருந்து ஆஸ்தி அல்லது வரங்கள் பெற்று கொண்டி ருக்கிறோம் என்று உங்களுக்கு போதை உள்ளது. அந்த வரங்களுக்காகத் தான் பக்தர்கள் பக்தி மார்க்கத்தில் அடி வாங்கி கொண்டே இருக்கிறார்கள். தந்தையை அடைவதற்காக அநேக அநேக உபாயங்கள் செய்கிறார்கள். எவ்வளவு வேதங்கள், சாஸ்திரங்கள், சஞ்சிகைகள் (பத்திரிக்கை) ஆகியவைகளை ஏராளமாக படித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உலகமோ நாளுக்கு நாள் துக்கமுடையதாகத் தான் ஆகிக் கொண்டே போகிறது. இது தமோபிரதானமாக ஆகவே வேண்டி உள்ளது. இது முள்ளினுடைய (பபுல்) செடியாகும் அல்லவா? பபுல் நாத் பிறகு வந்து முட்களை மலராக ஆக்குகிறார். முட்கள் மிகவும் பெரிய பெரியவையாக ஆகி உள்ளன. மிகவும் பலமாக குத்துகிறது. அதற்கு அநேகவிதமான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சத்யுகத் திலோ இருப்பதில்லை. இது முட்களின் உலகம் என்று தந்தை புரிய வைக்கிறார். ஒருவருக்கொருவர் துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டில் குழந்தைகள் கூட எவ்வளவு மோசமானவர்களாக வெளிப்படுகிறார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தாய் தந்தையை மிகவும் துக்கப்படுத்துகிறார்கள். எல்லோரும் ஒரே மாதிரி கூட இருப்ப தில்லை. எல்லாவற்றையும் விட அதிகமாக துக்கம் கொடுப்பவர் யார்? மனிதர்கள் இதை அறியாமல் இருகிறார்கள். இந்த குருக்கள் பரமாத்மாவின் மகிமையை இல்லாமல் செய்து விட்டுள்ளார்கள் என்று தந்தை கூறுகிறார். நாமோ அவருக்கு நிறைய மகிமை செய்கிறோம், அவர் பரம பூஜைக்குரிய பரமபிதா பரமாத்மா ஆவார். சிவனின் படம் கூட மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் சிவன் இது போல புள்ளி வடிவ ஒளியாக இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ளாத வர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களோ ஆத்மாவே பரமாத்மா என்று கூறி விடுகிறார்கள். ஆத்மா மிகவுமே சூட்சுமமானது ஆகும். அது புருவமத்தியில் அமர்ந்துள்ளது. பிறகு பரமாத்மா இவ்வளவு பெரிய உருவம் உடையவராக எப்படி இருக்க முடியும்? பரமாத்மா விற்கு இப்பேர்ப்பட்ட ரூபமோ இருக்க முடியாது என்று நிறைய வித்வான்கள், ஆசாரியர்கள், பி.கேக்களை கேலி செய்கிறார்கள். அவரோ அகண்ட ஜோதி மய தத்துவம். ஆயிரம் சூரியன் களை விடவும் தேஜோமயமானவர் ஆவார். உண்மையில் இது தவறு ஆகும். இவருடைய சரியான மகிமைப் பற்றியோ சுயம் தந்தையே கூறுகிறார். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருக்கிறார். இந்த சிருஷ்டி ஒரு தலைகீழான விருட்சமாகும். சத்யுகம், திரேதாவில் அவரை யாரும் நினைவு செய்வதில்லை. மனிதர்களுக்கு துக்கம் ஏற்படும் பொழுது ஹே! பகவான், ஹே! பரமபிதா பரமாத்மா கருணை புரியுங்கள் என்று அவரை நினைவு செய்கிறார் கள். சத்யுக திரேதாவிலோ யாரும் கருணை வேண்டுபவர்கள் இருப்பதில்லை. (அது படைப்பவர் தந்தையின் புதிய படைப்பாகும்) இந்த தந்தையின் மகிமையே அளவற்றது ஆகும். ஞானக் கடல், பதீத பாவனர் ஆவார். ஞானக் கடல் ஆவார் என்றால் அவசியம் ஞானம் அளித்திருக்கக் கூடும். அவர் சத், சித், ஆனந்த சொரூபம் ஆவார். (சைதன்யமானவர்) உயிரூட்ட முடையவர் ஆவார். ஞானமோ, சைதன்ய ஆத்மா தான் தாரணை செய்கிறது. நாம் சரீரம் விட்டு செல் கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பின் ஆத்மாவில் ஞானத்தின் சம்ஸ்காரமோ இருக்கவே இருக்கிறது. குழந்தையாக ஆனீர்கள் என்றாலும் கூட அந்த சம்ஸ்காரம் இருக்கும். ஆனால் உறுப்புக்கள் சிறியதாக இருப்பதால் பேச முடியாது. உறுப்புக்கள் வளர்ந்து விடும் பொழுது நினைவு செய்விக்கப்படுகிறது. அப்பொழுது நினைவில் வந்து விடுகிறது. சிறிய குழந்தைகள் கூட சாஸ்திரங்கள் ஆகியவற்றை மனப்பாடம் செய்து கொண்டு விடுகிறார்கள். இது கூட முந்தைய பிறவியின் சம்ஸ்காரம் ஆகும். இப்பொழுது தந்தை நமக்கு தனது ஞானத்தின் ஆஸ்தியை வழங்குகிறார். முழு சிருஷ்டி பற்றிய ஞானம் இவரிடம் உள்ளது. ஏனெனில் விதை ரூபம் ஆவார். நாம் நம்மை விதை ரூபம் என்று கூற மாட்டோம். விதையில் அவசியம் விருட்சத்தின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் இருக்கும் அல்லவா? எனவே நான் சிருஷ்டியின் விதைரூபம் ஆவேன் என்று சுயம் தந்தை கூறுகிறார். இந்த விருட்சத்தின் விதை மேலே உள்ளது. அந்த தந்தை சத், சித் ஆனந்த சொரூபம், ஞானக் கடல் ஆவார். சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் தான் அவரிடம் இருக்கும். இல்லை யென்றால் என்ன இருக்கும்? சாஸ்திரங்களின் ஞானம் இருக்குமா என்ன? அதுவோ நிறைய பேரிடம் இருக்கிறது. பரமாத்மா வினுடையதோ அவசியம் ஏதாவது புதிய விஷயமாக இருக்கும் அல்லவா? அது எந்தவொரு வித்வான் ஆகியோருக்கும் தெரியாது. இந்த சிருஷ்டி என்ற விருட்சத்தின் உற்பத்தி பாலனை மற்றும் அழிவு எப்படி ஆகிறது? இதன் ஆயுள் எவ்வளவு? இது எப்படி விருத்தியை அடைகிறது என்று யாரை வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள். முற்றிலுமே யாராலும் புரிய வைக்க முடியாது. ஒரே ஒரு கீதை தான் அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாய் ஆகும். தலையாயது ஆகும். மற்ற அனைத்தும் அதனுடைய குழந்தை குட்டிகள் ஆகும். கீதையைப் படித்தாலும் கூட ஒன்றும் புரியாதவர்களாக இருக்கும் பொழுது மற்ற சாஸ்திரங்கள் படிப்பதால் நன்மை தான் என்ன? ஆஸ்தியோ பிறகும் கீதையினால் கிடைக்க வேண்டி உள்ளது. இப்பொழுது தந்தை முழு நாடகத்தின் இரகசியத்தைப் புரிய வைக்கிறார். தந்தை கல்புத்தியிலிருந்து தங்கபுத்தியாக (பாரஸ் புத்தி) ஆக்கி பாரஸ் நாதன் ஆக ஆக்குகிறார். இப்பொழுதோ எல்லாரும் கல்புத்தி, கல்லுக்கு நாதனாக இருக்கிறார் கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு பெரிய பெரிய பட்டங்களை கொடுத்து கொண்டு தாங்கள் தங்கபுத்தி உடையவர்கள் என்று நினைத்து கொண்டு அமர்ந்துள்ளார்கள். எனது மகிமை எல்லாவற்றையும் விட தனிப்பட்டது ஆகும் என்று தந்தை புரிய வைக்கிறார். நான் ஞான கடல், ஆனந்தக்கடல் ஆவேன். இப்பேர்ப்பட்ட மகிமை தேவதைகளாகிய உங்களுக்கு பாட முடியாது. பக்தர்கள் தேவதைகளுக்கு முன்னால் சென்று நீங்கள் சர்வ குணங்களில் நிறைந்த வர்கள்.. .. .. என்று கூறுவார்கள். தந்தைக்கோ ஒரே ஒரு மகிமை ஆகும். அதையும் நாம் அறிந்துள்ளோம். இப்பொழுது நாம் கோவிலுக்கு சென்றோம் என்றால் இவர்களோ முழுமை யாக 84 பிறவிகள் எடுத்திருக்க கூடும் என்ற முழுமையான ஞானம் புத்தியில் இருக்கிறது. இப்பொழுது நமக்கு எவ்வளவு குஷி இருக்கிறது. இதற்கு முன்பு இப்பேர்ப்பட்ட சிந்தனை வந்து கொண்டிருந்ததா என்ன? நாம் இது போல ஆக வேண்டும் என்பதை இப்பொழுது புரிந்துள்ளோம். புத்தியில் மிகுந்த மாற்றம் வந்து விடுகிறது.

தங்களுக்குள் மிகவும் இனிமையானவர் ஆகுங்கள் என்று தந்தை குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார். உப்பு தண்ணீர் போல ஆகாதீர்கள். பாபா எப்பொழுதாவது யாரிடமாவது கோபப் படுகிறாரா என்ன? மிகவுமே இனிமையான ரூபத்தில் புரிய வைக்கிறார். ஒரு விநாடி கடந்து விட்டது என்றால் இதுவும் நாடகத்தில் பாகம் இருந்தது என்று கூறுவார்கள். இதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? இதுபோல தங்களுக்குத் தாங்களே புரிய வைக்க வேண்டும். நீங்கள் ஈசுவரிய குழந்தைகள் குறைந்தவர்களா என்ன? இறைவனுடைய குழந்தைகள் அவசியம் இறைவன் அருகில் இருக்க கூடும் என்பதையோ புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறீர் கள். இறைவன் நிராகாரமானவர் ஆவார். எனவே அவருடைய குழந்தைகள் கூட நிராகார மானவர்கள் ஆவார்கள். அதே குழந்தைகள் இங்கு சரீரம் தரித்து பாகம் நடித்து கொண்டிருக் கிறார்கள். சொர்க்கத்தில் இருப்பது தேவி தேவதா தர்மத்தின் மனிதர்கள் ஆவார்கள். ஒரு வேளை எல்லாருடைய கணக்கையும் அமர்ந்து எடுத்தோம் என்றால் எவ்வளவு தலையிலடித்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் வரிசைக் கிரமமாக காலத்திற்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் ஜென்மங்கள் கிடைத்துக் கொண்டிருக்கக் கூடும் என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு முன்போ மனிதர்கள் நாய், பூனையாக ஆகிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்தோம். இப்பொழுதோ புத்தியில் இரவு பகலுக்கான வித்தியாசம் வந்து விட்டுள்ளது. இவை எல்லாமே தாரணை செய்யக் கூடிய விஷயங்கள் ஆகும். இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரம் முடிவடைந்தது என்று சுருக்கமாக புரிய வைக்கிறார். இப்பொழுது இந்த சீ - சீ சரீரத்தை விட வேண்டும். இது அனைவருக்கும் பழைய இற்றுப் போன தமோபிரதான சரீரமாகும். இதன் மீதுள்ள பற்றினை நீக்கி விட வேண்டும். பழைய உடலை என்ன நினைவு செய்வது? இப்பொழுதோ சத்யுகத்தில் கிடைக்கக்கூடிய நமது புதிய உடலை நினைவு செய்வோம். முக்தி தாமம் வழியாக சத்யுகத்தில் வருவோம். நாம் ஜீவன் முக்தியில் செல்கிறோம். மற்ற அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். இதற்கு வெற்றி முழக்கம் என்று கூறப்படுகிறது. ஐயோ! ஐயோ! என்ற கதறலுக்குப் பிறகு வெற்றி முழக்கம் ஆகப் போகிறது. இத்தனை பேர் எல்லாரும் இறப்பார்கள் என்றால் ஏதாவது ஒரு காரணம் கருவியாக அமையும். இயற்கை சேதங்கள் ஏற்படும். சமுத்திரம் மட்டுமே அனைத்து கண்டங்களை அழித்து விடுமா என்ன? எல்லாமே அழியத் தான் போகிறது. மற்றபடி பாரதம் அழியாத கண்டமாக இருந்து விடுகிறது. ஏனெனில் இது சிவபாபாவின் ஜென்ம பூமி ஆகும். எனவே இது எல்லாவற்றையும் விட பெரிய தீர்த்த ஸ்தானம் ஆகும். தந்தை அனைவருக்கும் சத்கதி செய்கிறார். இதை எந்த மனிதர்களும் அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் அறியாமல் இருப்பதும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. அப்பொழுது தான் ஹே! குழந்தைகளே நீங்கள் ஒன்றுமே அறியாமல் இருந்தீர்கள், நான் தான் உங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பு அல்லது மனித சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய முழு இரகசியங்களைப் புரிய வைக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். அதற்கு ரிஷி முனிவர்கள் கூட முடிவற்றது என்று கூறி சென்றுள்ளார்கள். முழு உலகத்தில் இருக்கும் 5 விகாரங்கள் மிகவுமே பெரிய எதிரிகள் ஆகும் என்பதை புரிந்திருக்கிறார்களா என்ன? எந்த இராவணனை பாரதவாசிகள் வருடா வருடம் எரித்தபடியே வந்துள்ளார்களோ, அவனை யாருமே அறியாமல் உள்ளார்கள். ஏனெனில் அது உடலும் அல்ல, ஆன்மாவும் அல்ல! விகாரங்களுக்கான எந்தவொரு ரூபமுமே கிடையாது. மனிதர்கள் செயல்படும் பொழுது இவர்களிடம் காமத்தின் கோபத்தின் பூதம் வந்துள்ளது என்று தெரிய வருகிறது. இந்த விகாரத்தின் நிலைகளில் கூட உயர்ந்த நிலை, நடுத்தர நிலை, தாழ்ந்த நிலை என்று இருக்கிறது. ஒரு சிலரிடம் காமத்தின் பூதம் ஒரேயடியாக தமோபிரதானமாக ஆகி விடுகிறது. ஒரு சிலருக்கு ரஜோ நிலையின் போதை, ஒரு சிலருக்கு சதோ நிலையின் போதை இருக்கிறது. ஒரு சிலரோ பால பிரம்மசாரியாக கூட இருக்கிறார்கள். இதை பராமரிப்பது கூட ஒரு தொல்லை தான் என்று நினைக்கிறார்கள். அவர்களை எல்லாரையும் விட நல்லவர்கள் என்று கூறுவார்கள். சந்நியாசிகளில் கூட பால பிரம்மசாரிகள் நல்லவர்களாக கணக்கிடப்படுகிறார்கள். அரசாங்கத்திற்கு கூட நல்லது. குழந்தைகளின் விருத்தி ஆகாது. தூய்மையின் பலம் கிடைக் கிறது. இது மறைமுகமானது ஆகும். சந்நியாசிகள் கூட தூய்மையாக இருக்கிறார்கள். சிறிய குழந்தைகள் கூட தூய்மை யாக இருக்கிறார்கள். வானப்பிரஸ்தியினரும் கூட தூய்மையாக இருக்கிறார்கள். எனவே தூய்மையின் பலம் கிடைத்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் இவ்வளவு வயது வரை தூய்மையாக இருக்க வேண்டும் என்று அவர்களுடையது கூட நியமம் இருந்து வருகிறது. எனவே அது கூட பலம் கிடைக்கிறது. நீங்கள் சதோபிரதான தூய்மையாக இருப்பவர்கள் ஆவீர்கள். இந்த கடைசி ஜென்மத்தில் நீங்கள் தந்தையிடம் உறுதி கொடுக் கிறீர்கள். நீங்கள் சத்யுகத்தின் ஸ்தாபனை செய்பவர்கள் ஆவீர்கள். யார் செய்வார்களோ அவர்கள் வரிசைக் கிரமமாக முயற்சிக்கேற்ப தூய்மையான உலகிற்கு அதிபதி ஆவார்கள்.

இது ஈசுவரிய குடும்பம் ஆகும். கல்பத்தில் ஒரு முறை இறைவனுடன் கூட நாம் இருக் கிறோம். அவ்வளவே. பிறகு தெய்வீக குடும்பத்திலோ நிறைய பிறவிகள் இருப்போம். இந்த ஒரு ஜென்மம் தான் அரிதானது ஆகும். இந்த ஈசுவரிய குலம் உத்தமத்திலும் உத்தமமானது ஆகும். பிராமண குலம் எல்லாவற்றையும் விட உயர்ந்த உச்சி ஆகும். தாழ்ந்ததிலும் தாழ்ந்த குலத்திலிருந்து நாம் உயர்ந்த பிராமண குலத்தினுடையவர்களாக ஆகி விட்டோம். சிவபாபா பிரம்மாவை படைக்கும் பொழுது தான் பிராமணர்கள் படைக்கப் படுகிறார்கள். பாபாவின் சேவையில் இருப்பவர்களுக்கு எவ்வளவு குஷி இருக்கிறது! நாம் இறைவனின் குழந்தைகளாக ஆகி உள்ளோம். மேலும் இறைவனின் ஸ்ரீமத்படி நடக்கிறோம். தங்களுடைய நடத்தையினால் அவருடைய பெயரை புகழடைய செய்கிறார்கள். அவர்களோ அசுரகுணம் உடையவர்கள், நீங்கள் தெய்வீக குணங்கள் உடையவர்களாக ஆகி கொண்டிருக்கிறீர்கள் என்று பாபா கூறுகிறார். நீங்கள் சம்பூர்ணமாக ஆகி விடும் பொழுது உங்களது நடத்தை மிகவும் நல்லதாக ஆகி விடும். இவர்கள் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப தெய்வீக குணங்கள் உடையவர்கள் ஆவார்கள் என்று பாபா கூறுவார். அசுர குணம் உடையவர்கள் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். பால பிரம்மசாரி கூட இருக்கிறார்கள். சந்நியாசிகள் தூய்மையாக இருக்கிறார் கள். அதுவோ மிகவும் நல்லது ஆகும். மற்றபடி அவர்கள் யாருக்குமே சத்கதி வழங்க முடியாது. ஒரு வேளை யாராவது குருமார்கள் சத்கதி வழங்குபவர்களாக இருந்திருந்தார்கள் என்றால் கூடவே அழைத்து சென்றிருப்பார்கள். ஆனால் சுயம் அவர்களே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இங்கு இந்த தந்தை நான் உங்களை கூட அழைத்து செல்வேன் என்று கூறுகிறார். நான் உங்களை கூட அழைத்து செல்வதற்காகத் தான் வந்துள்ளேன். அவர்களோ அழைத்துச் செல்வதில்லை. சுயம் அவர்களே இல்லறத்தாரிடம் ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சம்ஸ்காரங்கள் காரணமாக பிறகு சந்நியாசிகளின் கூட்டத்தில் சென்று விடுகிறார்கள். பெயர், ரூபமோ ஒவ்வொரு பிறவியிலும் மாறிக் கொண்டே இருக்கும். சத்யுகத் தில் இங்கு செய்திருக்கும் முயற்சிக்கேற்ப பதவி இருக்கும் என்பதை இப்பொழுது குழந்தை களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாம் இந்த பதவியை எப்படி அடைந்தோம் என்பது அங்கு தெரிந்திருக்காது. யார் முந்தைய கல்பத்தில் எப்படி முயற்சி செய்திருந்தார்களோ அவ்வாறே இப்பொழுது செய்வார்கள் என்பதோ இப்பொழுது தான் தெரியும். அங்கு திருமணம் ஆகியவை எப்படிநடக்கிறது என்பது குழந்தைகளுக்கு சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) கூட செய்விக்கப் பட்டுள்ளது. பெரிய பெரிய மைதானங்கள், தோட்டங்கள் ஆகியவை இருக்கும். இப்பொழுதோ பாரதத்திலேயே கோடிக்கணக்கான ஜனத்தொகை இருக்கிறது. அங்கோ சில இலட்சங்கள் மட்டும் தான் இருப்பார்கள். அங்கு இவ்வளவு அடுக்கு மாடிகள் இருக்குமா என்ன? இவை இப்பொழுது இருக்கின்றன. ஏனெனில் இடம் இல்லை. அங்கு இவ்வளவு குளிர் இருக்காது. அங்கு துக்கத்தின் அடையாளம் கூட இல்லை. மலைகளில் இருக்க வேண்டிய வகையில் அவ்வளவு மிகுந்த வெப்பம் இருக்காது. பெயரே சொர்க்கம் என்பதாகும். இச்சமயம் மனிதர்கள் முட்களின் காடுகளில் இருக்கிறார்கள். எவ்வளவு சுகத்தின் விருப்பம் கொள்கிறார்களோ அவ்வளவு துக்கம் அதிகரித்து கொண்டு தான் போகிறது. இப்பொழுது மிகுந்த துக்கம் ஏற்படப் போகிறது. சண்டை ஏற்பட்டால் இரத்த ஆறுகள் பாயப் போகிறது. நல்லது. இந்த முரளி எல்லா குழந்தைகளுக்கு முன்னால் கூறினார். நேரிடையாக கேட்பது முதல் நம்பர். ஒலிப்பதிவு நாடா மூலமாக கேட்பது இரண்டாம் நம்பர். முரளி மூலம் படிப்பது மூன்றாவது நம்பர். சதோபிர தானம், சதோ மற்றும் ரஜோ. தமோ என்றோ கூற மாட்டார். டேப் (ஒ-ப்பதிவு நாடாவில் ) மிகச்சரியாக வருகிறது. நல்லது.

பாப்தாதா மற்றும் இனிமையான தாயின் அருமையான குழந்தைகளுக்கு அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தங்களது நடத்தை மற்றும் தெய்வீக குணங்களால் தந்தையின் பெயரை புகழடையச் செய்ய வேண்டும். அசுர அவ குணங்களை நீக்கி விட வேண்டும்.

2. இந்த பழைய இற்றுப் போன உடல் மீது பற்று கொள்ளக் கூடாது. புதிய சத்யுக உடலை நினைவு செய்ய வேண்டும். தூய்மையின் மறைமுகமான உதவி செய்ய வேண்டும்.

வரதானம்:
ஆத்மீகத்தின் சக்தி மூலமாக தூரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு அருகாமையின் அனுபவம் செய்விக்கக் கூடிய மாஸ்டர் சர்வ சக்திவான் ஆவீர்களாக.

எப்படி அறிவியலின் சாதனங்கள் மூலமாக தூரத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் சமீபத்தில் இருப்பதாக அனுபவம் ஏற்படுகிறதோ, அதே போல தெய்வீக புத்தி மூலமாக தூரத் திலிருக்கும் பொருளை உங்களால் சமீபத்தில் இருப்பதாக அனுபவம் செய்ய முடியும். எப்படி அருகே இருக்கும் ஆத்மாக்களை தெளிவாக பார்த்தும் பேசியும் அவர்களுக்கு சகயோகம் (ஒத்துழைப்பு) கொடுக்கிறீர்கள் மற்றும் பெற்றுக் கொள்கிறீர்கள், அதே போல ஆத்மீகத்தின் சக்தி மூலமாக தூரத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு அருகாமையின் அனுபவத்தை உங்களால் செய்விக்க முடியும். இதற்காக மாஸ்டர் சர்வசக்திவான், சம்பன்னம் மற்றும் சம்பூர்ண ஸ்திதியில் நிலைத்திருங்கள் மற்றும் சங்கல்ப சக்தியை தூய்மையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

சுலோகன்:
தங்களது ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயல் மூலமாக மற்றவர்களுக்கு பிரேரணை அளிப்பவர்களே, பிரேரணையின் மூர்த்தி ஆவார்கள்.