10.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே ! இப்போது பாரதம் மீண்டும் சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது, சொர்க்கத்தின் இறை தந்தை வந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் கூறுங்கள்.

 

கேள்வி:

சொர்க்கத்திற்கு அதிபதியாக மாறக் கூடிய மகிழ்ச்சி எந்த குழந்தைகளுக்கு இருக்கிறதோ அவர்களின் அடையாளம் என்ன?

 

பதில்:

அவர்களுக்கு எந்த விதமான துன்பமும் வர முடியாது. நாம் மிகப் பெரிய ஆட்கள், (பிராமண ஆத்மாக்கள்) நம்மை எல்லையற்ற தந்தை இவ்வாறாக (லஷ்மி நாராயணன்) மாற்றுகின்றார் என்ற போதை அவர்களுக்கு இருக்கும். அவர்களின் நடத்தை மிகவும் மேன்மையானதாக இருக்கும். அவர்களால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறாமல் இருக்க முடியாது.

 

ஓம் சாந்தி.

முக்கியமாக பாரதம் மற்றும் முழு உலகத்திற்கும் இந்த செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என பாபா புரிய வைக்கிறார் மேலும் குழந்தைகளும் அறிகிறீர்கள். நீங்கள் அனைவரும் தூதுவர்கள். இப்போது பாரதம் மீண்டும் சொர்க்கமாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை அனைவருக்கும் மிக மகிழ்ச்சியோடு தெரிவிக்க வேண்டும். சொர்க்கத்தின் இறை தந்தை என்று யாரை அழைத்தோமோ அவரே ஸ்தாபனை செய்வதற்காக பாரதத்தில் வந்திருக்கிறார். இந்த நற்செய்தியை அனைவருக்கும் கூறுங்கள், என்பது குழந்தைகளாகிய உங்களுக்கான கட்டளை ஆகும். ஒவ்வொருவருக்கும் தன்னுடைய தர்மத்தைப் பற்றிய ஆர்வம் இருக்கிறது. உங்களுக்கும் ஆர்வம் இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறீர்கள். பாரதத்தின் தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதாவது பாரதம் மீண்டும், சொர்க்கமாக மாறிக்  கொண்டிருக்கிறது. இப்போது நாம் சொர்க்கத்திற்கு அதிபதியாகிக் கொண்டிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி உள்ளுக்குள் இருக்க வேண்டும். யாருக்குள் இந்த மகிழ்ச்சி இருக்கிறதோ அவர்களுக்கு எந்த விதமான துக்கமும் இருக்காது. புதிய உலகம் உருவாவதில் துன்பங்கள் இருக்கிறது என குழந்தைகள் அறிகிறார்கள். ஒன்றும் அறியாத பெண்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தப்படுகின்றனர். நாம் பாரதத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகின்றோம் என்ற நினைவு எப்போதும் குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். சகோதரிகளே ! சகோதரர்களே! வந்து இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேளுங்கள் என பாபா அச்சடித்தது போன்று முழு நாளும் எப்படி அனைவருக்கும் இந்த செய்தியைக் கூறுவது என்ற சிந்தனை இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சொத்தைக் கொடுக்க வந்திருக்கின்றார். இந்த லஷ்மி நாராயணனின் படத்தைப் பார்த்து முழு நாளும் மகிழ்ச்சி அடைய வேண்டும். நீங்கள் மிகப் பெரிய மனிதர்கள். ஆகவே, உங்களுக்குள் எந்த ஒரு காட்டுவாசிகளின் நடத்தையும் இருக்கக் கூடாது. நாம் குரங்கை விட மோசமாக இருந்தோம் என அறிகிறீர்கள். இப்போது பாபா நம்மை இவ்வாறாக(தேவி, தேவதை) மாற்றுகின்றார். எனவே எவ்வளவு குஷி இருக்க வேண்டும். ஆனால், அதிசயம் என்னவென்றால், குழந்தைகளுக்கு இந்த மகிழ்ச்சி இல்லை. அந்த உற்சாகத்தோடு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுவதில்லை. பாபா உங்களை தூதுவராக மாற்றியிருக்கிறார். அனைவரின் காதுகளிலும் இந்த செய்தியைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். நம்முடைய ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் எப்போது படைக்கப்பட்டது, பிறகு எங்கே சென்றனர் என பாரதவாசிகளுக்குத் தெரியவில்லை. இப்போதோ சித்திரங்கள் மட்டும் இருக்கின்றது. மற்ற தர்மங்கள் அனைத்தும் இருக்கின்றது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மட்டும் இல்லை. பாரதத்தில் தான் சித்திரங்கள் இருக்கின்றது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார். எனவே நீங்கள் அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறினால் உங்களுக்குள்ளும் மகிழ்ச்சி ஏற்படும். படக் கண்காட்சிகளில் நீங்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறீர்கள் அல்லவா? எல்லையற்ற தந்தையிடமிருந்து வந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை அடையுங்கள். இந்த லஷ்மி நாராயணன் சொர்க்கத்திற்கே அதிபதி அல்லவா? பிறகு அவர்கள் எங்கே சென்றனர். இதை யாருமே புரிந்துக் கொள்ளவில்லை. ஆகவே தான் முகம் மனிதர்களைப் போன்றும், நடத்தை குரங்கைப் போன்றும் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இப்போது உங்களுடைய முகம் மனிதர்களை போன்று இருக்கிறது, நடத்தை தேவதைகளைப் போன்று மாறிக் கொண்டிருக்கிறது. நாம் மீண்டும் அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக மாறுகிறோம் என அறிகிறீர்கள். பிறகு மற்றவர்களையும் இந்த முயற்சியை செய்விக்க வேண்டும். படக் கண்காட்சிகள் மூலம் சேவை செய்வது மிகவும் நல்லது. யாருக்கு இல்லற விவகாரங்களில் பந்தனம் இல்லையோ முதியவர்களாக, விதவைகளாக, குமாரிகளாக இருக்கிறார்களோ அவர்களுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சேவையில் ஈடுபட வேண்டும். இச்சமயம் திருமணம் செய்து கொள்வது மிகவும் நஷ்டம். திருமணம் செய்யாமல் இருப்பதே சுதந்திரமானது. இந்த மரண உலகம் அழுக்கான உலகம். அழுதுக் கொண்டிருக்கின்றனர் என பாபா கூறுகிறார். நீங்கள் தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த சேவையில் ஈடுபட வேண்டும். படக் கண்காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்க வேண்டும். சேவை செய்யக் கூடிய குழந்தைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் நன்றாக இருக்கும். ஒரு சிலர் பாபாவிடம் நாங்கள் வேலையை விட்டுவிடவா? என்று கேட்கிறார்கள். பாபா பார்ப்பார். தகுதி இருக்கிறது என்றால், சரி, சேவையை செய்யுங்கள் என அனுமதி அளிக்கிறார். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் கூற வேண்டும். தனது இராஜ்ய பாக்கியத்தை வந்து அடையுங்கள் என பாபா கூறுகின்றார். நீங்கள் 5000 வருடத்திற்கு முன்பு இராஜ்ய பாக்கியத்தை அடைந்தீர்கள், இப்போது மீண்டும் அடையுங்கள். என்னுடைய வழிப்படி மட்டும் செல்லுங்கள்.

 

நமக்குள் என்னென்ன அவகுணங்கள் இருக்கின்றது என பார்க்க வேண்டும். நீங்கள் இந்த பேட்ஜ்கள் மூலமாக கூட நிறைய சேவை செய்யலாம். இது முதல் தரமான பொருளாகும். இது ஒரு பைசா மதிப்புடையதாக இருக்கலாம், ஆனால் இதன் மூலம் எவ்வளவு உயர்ந்த பதவியைப் பெற முடியும் ! மனிதர்கள் படிப்பதற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள். இங்கே புத்தகங்கள் வேண்டும் என்ற விசயம் எதுவும் இல்லை. அனைவரின் காதுகளிலும் மட்டும் இந்த செய்தியைக் கொடுக்க வேண்டும். இதுவே தந்தையின் உண்மையான மந்திரம் ஆகும். மற்ற அனைவரும் பொய்யான மந்திரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொய்யான பொருட்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது. வைரங்களுக்குத் தான் மதிப்பிருக்கிறது. கற்களுக்கு இல்லை. ஒவ்வொரு வார்த்தையும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடையது என பாடப்பட்டிருக்கிறது. அவ்வாறு இந்த ஞானத்திற்காகவே கூறப்படுகிறது. அளவற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றது என பாபா கூறுகிறார். நீங்கள் அரைக் கல்பமாக படித்துக் கொண்டே வந்துள்ளீர்கள். அதன் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. இப்போது உங்களுக்கு ஞான ரத்தினங்களைக் கொடுக்கிறார். அவர்களுடையது சாஸ்திரங்களின் அதிகாரம் ஆகும். தந்தையோ ஞானக் கடல். இவருடைய ஒவ்வொரு வார்த்தையும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையதாகும். நீங்கள் உலகத்திற்கே அதிபதியாகிறீர்கள். பல கோடி மடங்கு செல்வந்தராக மாறுகிறீர்கள். இந்த ஞானத்திற்குத்தான் மகிமை இருக்கின்றது. அந்த சாஸ்திரங்களைப் படிப்பதால் ஏழையாகியிருக்கிறீர்கள். எனவே இந்த ஞான ரத்தினங்களை தானம் செய்ய வேண்டும். பாபா மிகவும் எளிய வழிமுறைகளைப் புரிய வைக்கின்றார். தனது தர்மத்தை மறந்து நீங்கள் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறீர்கள் என கூறுங்கள். பாரதவாசிகளாகிய உங்களின் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. அந்த தர்மம் எங்கே சென்றுவிட்டது. 84 லட்சம் பிறவிகள் என கூறியமையால் எந்த விஷயமும் புத்தியில் இல்லை. நீங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என பாபா புரிய வைக்கின்றார். இந்த லட்சுமி நாராயணன் ஆதிசனாதன தேவ தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர் அல்லவா? இப்போது தர்மம் கீழானதாக, செயல்கள் கீழானதாக ஆகிவிட்டது. மற்ற தர்மங்கள் அனைத்தும் இருக்கின்றது. இந்த ஆதி சனாதன தர்மம் மட்டும் இல்லை. இந்த தர்மம் இருந்த போது வேறு எந்த தர்மமும் இல்லை. எவ்வளவு எளிதாக இருக்கின்றது. இவர் தந்தை, இவர் தாதா. பிரஜா பிதா பிரம்மா இருக்கின்றார் என்றால் நிறைய பி.கே இருப்பார்கள் அல்லவா? தந்தை வந்து இராவணனின் சிறையில் இருந்து, சோகவனத்தில் இருந்து விடுவிக்கின்றார். சோகவனத்தின் பொருளைக் கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. இது சோக உலகமாக, துக்க உலகமாக இருக்கிறது என பாபா கூறுகின்றார். அது சுக உலகமாக இருக்கிறது. நீங்கள் உங்களுடைய அமைதியின் உலகத்தை மற்றும் சுக உலகத்தை நினைவு செய்து கொண்டேயிருங்கள். இன்கார்போரியல் வேர்ல்டு (நிராகார உலகம்) என கூறுகிறார்கள் அல்லவா? ஆங்கில வார்த்தை மிக நன்றாக இருக்கிறது! ஆங்கிலம் புழக்கத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. இப்போது பல மொழிகள் ஆகிவிட்டது. நிர்குண பால அமைப்பு...... என கூறுகிறார்கள். நிர்குணம் என்றால் எந்த குணமும் இல்லை. இவ்வாறு அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். நிர்குணம் என்ற பொருளைக் கூட புரிந்து கொள்ளவில்லை. பொருள் புரியாமலேயே பெயர் வைக்கிறார்கள். அளவு கடந்த அமைப்புகள் உள்ளன. பாரதத்தின் ஒரே ஒரு ஆதிசனாதன அமைப்பு இருந்தது. அப்போது வேறு எந்த தர்மும் இல்லை. ஆனால் மனிதர்கள் 5000 வருடங்களுக்குப் பதிலாக கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என எழுதிவிட்டனர். நீங்கள் அனைவரையும் இந்த அறியாமை இருளில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். சேவை செய்ய வேண்டும். இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், சிவபாபாவின் யக்ஞத்திலிருந்து சாப்பிடுகிறீர்கள், அருந்துகிறீர்கள். ஆனால், சேவை எதுவும் செய்யவில்லை என்றால் வலது கரமாக இருக்கக்கூடிய தர்மராஜ் நிச்சயமாக தண்டனை கொடுப்பார். ஆகவே எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. சேவை செய்வது மிகவும் எளிதாகும். அன்போடு யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைத்துக் கொண்டே இருங்கள். நாங்கள் கோவிலுக்குச் சென்றோம் கங்கைக்கரைக்கு சென்றோம் என சிலருடைய செய்திகள் பாபாவிற்கு வருகிறது. அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்கிறார்கள். ஆன்மீக சிந்தனை உடையவர்களுக்கு புரியவைப்பது எளிதாகும். லட்சுமி நாராயணனின் கோவிலில் சேவை செய்வது அனைத்தையும் விட நல்லதாகும். சரி, பிறகு அவர்களை இவ்வாறு உருவாக்கக்கூடியவர் சிவதந்தையே, அங்கேயும் சென்று புரிய வையுங்கள். காடு தீப்பற்றி எரியும். இது அனைத்தும் அழிந்து போகும். பிறகு உங்களுடைய நடிப்பும் முடிந்து போகும். நீங்கள் அரச குலத்தில் சென்று பிறவி எடுப்பீர்கள். இராஜ்யம் எப்படிக் கிடைக்கும் என்பது போகப்போக தெரியவரும். நாடகத்தில் முதலிலியேயே கூறமாட்டார்கள். என்ன பதவி அடைவோம் என நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அதிகமாக தான புண்ணியம் செய்யக்கூடியவர்கள் இராஜ்யத்தில் வருவார்கள் அல்லவா? இராஜாக்களிடம் நிறைய செல்வம் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் அழியாத ஞான ரத்தினங்களை தானம் செய்கிறீர்கள்.

 

இந்த ஞானம் பாரதவாசிகளுக்காகவே. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. தூய்மை இல்லாதவர்களை தூய்மையானவர்களாக மாற்றுவதற்காக தந்தை வந்திருக்கிறார் என்று கூறுங்கள். என்னை நினையுங்கள் என தந்தை கூறுகின்றார். எவ்வளவு எளிது. ஆனால் தமோபிரதானமான புத்தி உடையவர்கள் எதையுமே கடைப்பிடிப்பதில்லை. விகாரங்கள் நுழைந்திருக்கிறது. விலங்குகள் கூட விதவிதமாக இருக்கிறது. சிலருக்குள் நிறைய கோபம் இருக்கிறது. ஒவ்வொரு விலங்கின் சுபாவமும் வேறுபட்டு இருக்கிறது. துன்பம் கொடுக்கக்கூடிய விதவிதமான சுபாவங்கள் இருக்கிறது. எல்லாவற்றையும் விட முதலில் துக்கம் கொடுக்கக்கூடிய விகாரம் காமத்தில் ஈடுபடுவதாகும். இராவண இராஜ்யத்தில் தான் இந்த விகாரங்களின் இராஜ்யம் நடக்கின்றது. எவ்வளவு நல்ல நல்ல பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பந்தனத்தில் இருப்பவர்கள் என கூறுகிறார்கள். பாபா தினம்தோறும் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். உண்மையில் அவர்கள் ஞானத்தின் எல்லையை அடைந்துவிட்டால் பிறகு யாருமே அவர்களைப் பிடிக்க முடியாது. ஆனால், மோகம் நிறைய இருக்கிறது. சந்நியாசிகளுக்கு கூட வீடு வாசல் போன்றவை நினைவிற்கு வருகின்றன. அவர்கள் கஷ்டப்பட்டே அந்த பற்றை நீக்குகிறார்கள். இப்பொழுது நீங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் மறக்க வேண்டும். ஏனென்றால் இந்த பழைய உலகம் அழியப் போகின்றது. இந்த சரீரத்தையும் மறக்க வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். தூய்மையாக மாற வேண்டும். 84 பிறவிகளின் பாகத்தை நடிக்கத்தான் வேண்டும். இடையில் யாரும் திரும்பிப் போக முடியாது. இப்பொழுது நாடகம் முடியப் போகின்றது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு நிறைய குஷியிருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும். நடிப்பு முடியப் போகின்றது. பாபாவை அதிகமாக நினைக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். நினைவினால் தான் விகர்மம் அழியும். வீட்டிற்குச் சென்று பிறகு சுகதாமத்திற்கு வருவீர்கள். சீக்கிரம் இந்த உலகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் எப்படி போவார்கள். முதலில் உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் அல்லவா? முதலில் நாம் எவ்வளவு தகுதி அடைந்திருக்கின்றோம் என தனது நாடியைப் பார்த்துக்கொள்ள வேண்டும். சொர்க்கத்திற்குச் சென்று என்ன செய்வார்கள். முதலில் தகுதி அடைய வேண்டும் அல்லவா? பாபாவிற்கு நல்ல குழந்தையாக இருக்க வேண்டும். இந்த லட்சுமி நாராயணன் தகுதி உடைய நல்ல குழந்தைகள் அல்லவா? குழந்தைகளைப் பார்த்து இவர்கள் மிகவும் நல்ல குழந்தைகள் சேவைக்கு தகுதி உடையவர்கள் என பகவானே கூறுகின்றார். சிலர் தகுதி அற்றவர் எனவும் கூறுவார். தனது பதவியை தானாகவே நஷ்டமாக்கிக் கொள்கிறார்கள். பாபா உண்மையைக் கூறுகிறார் அல்லவா? பதீத பாவனா வாருங்கள், வந்து சுக உலகத்திற்கு அதிபதியாக்குங்கள் என அழைக்கிறார்கள். அளவற்ற சுகத்தைக் கேட்கிறார்கள் அல்லவா? சிறிதாவது சேவை செய்வதற்குத் தகுதி அடையுங்கள் என பாபா கூறுகின்றார். என்னுடைய பக்தர்களுக்கு, இப்பொழுது சிவபாபா சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறுங்கள். என்னை நினையுங்கள் மற்றும் தூய்மையாகுங்கள். தூய்மையான உலகத்திற்கு அதிபதியாகி விடுவீர்கள் என அவர் கூறுகின்றார். இந்த பழைய உலகம் தீப்பற்றிக் கொண்டு இருக்கின்றது. குறிக்கோளை எதிரில் பார்க்கும் போது நாம் இவ்வாறு மாறவேண்டும் என்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. முழுநாளும் புத்தியில் இது நினைவு இருந்தால் ஒருபோதும் எந்த விதமான சைத்தான் வேலையும் செய்ய மாட்டீர்கள். நாம் இவ்வாறு மாறிக்கொண்டு இருக்கிறோம் என்றால் தவறான வேலைகளை எப்படி செய்ய முடியும்?. ஆனால் யாருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையோ இப்படியெல்லாம் வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதில்லை. தனக்காக சம்பாதிப்பதும் இல்லை. எவ்வளவு நல்ல வருமானம். வீட்டில் அமர்ந்தபடியே அனைவரும் சம்பாதிக்க வேண்டும். பிறகு மற்றவர்களையும் சம்பாதிக்க வைக்க வேண்டும். வீட்டில் அமர்ந்த படியே இந்த சுயதர்சன சக்கரத்தைச் சுழற்றுங்கள். மற்றவர்களையும் சுயதர்சன சக்கரதாரி ஆக்குங்கள். எவ்வளவு மற்றவர்களை உருவாக்குகிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். இந்த லட்சுமி நாராயணனைப் போல மாறலாம். இதுவே உங்களுடைய குறிக்கோளாகும். அனைவரும் சூரிய வம்சியாக மாறுவதில் தான் கையை உயர்த்துகிறீர்கள். இந்த சித்திரங்கள் படக் கண்காட்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவைகளைப்பற்றி புரிய வைக்க வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை நமக்கு என்ன சொல்க் கொடுக்கின்றாரோ அதையே நாம் கேட்கின்றோம். பக்தி மார்க்கத்தின் விஷயங்களைக் கேட்பதில் நமக்கு விருப்பமில்லை. இந்த சித்திரங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. இவைகளை வைத்துக் கொண்டு நீங்கள் நிறைய சேவைகளை செய்ய முடியும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நாம் எந்தளவு தகுதி ஆகியிருக்கிறோம் என தனது நாடியைப் பார்க்க வேண்டும். தகுதி அடைந்து சேவையின் பலனை நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். ஞானத்தின் எல்லையற்ற வெளிப்பாட்டின் மூலம் பந்தனத்திலிருந்து விடுபடவேண்டும்.

 

2. ஒரு பாபாவின் வழிப்படி நடந்து உள்ளிருக்கும் அவகுணங்களை நீக்க வேண்டும். துக்கத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தை விட்டு விட்டு சுகம் நிறைந்தவர் ஆகவேண்டும். ஞான ரத்தினங்களை தானம் செய்ய வேண்டும்.

 

வரதானம்:

மாற்ற முடியாத எதிர்காலத்தை தெரிந்திருந்தாலும் கூட சிரேஷ்ட காரியத்தை வெளிப்படையான ரூபத்தில் செய்யக்கூடிய சதா சக்திசாலியானவர் ஆகுக.

 

புதிய சிரேஷ்ட உலகத்தின் எதிர்காலம் தெரிந்திருந்தாலும் கூட (நிச்சயிக்கப்பட்டதாக இருந்தாலும் கூட) சக்திசாலி ஆகுக என்ற வரதானத்தை அடைந்த குழந்தைகள் செயல் மற்றும் பலனின், முயற்சி மற்றும் பக்கியத்தின், நிமித்தம் மற்றும் பணிவிற்கான செயலின் தத்துவத்தின் படி நிமித்தமாகி காரியம் செய்கிறார்கள். உலகத்தினருக்கு நம்பிக்கை தென்படுவதில்லை. மேலும் நீங்கள் சொல்வதின் மூலம் இந்த காரியம் அநேக முறை நடைபெற்றுள்ளது, இப்பொழுது கூட நடைபெற்றே தீரும், ஏனெனில் சுய மாற்றத்தின் வெளிப்படையான ஆதாரத்திற்கு முன்னால் மற்ற எந்த ஆதாரத்தின் அவசியமும் ஏற்படுவதில்லை. கூட கூடவே பரமாத்மாவின் காரியத்தில் சதா வெற்றி அடங்கியிருக்கிறது.

 

சுலோகன்:

சொல்வது குறைவாகவும், செய்வது அதிகமாகவும் இருத்தல் - இது உயர்வான குறிக்கோளுடைய மகான் (பெருமைக்குரியவர்) ஆக்கிவிடுவது.

 

ஓம்சாந்தி