10.03.2019                           காலை முரளி                ஓம்சாந்தி          அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்           01.05.1984           மதுபன்


 

விஸ்தாரத்தில் சாரத்தின் அழகு

 

பாப்தாதா விஸ்தாரத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் மற்றும் விஸ்தாரத்தில் சார சொரூப குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். விஸ்தாரம் என்பது இந்த ஈஸ்வரிய மரத்தின் அலங்காரமாகும் மற்றும் சார சொரூப குழந்தைகள் இந்த மரத்தின் பலன் (பழம்) சொரூபம் ஆவார்கள். விஸ்தாரம் என்பது எப்பொழுதும் விதவிதமான ரூபத்தில் இருக்கிறது. மேலும் விதவிதமான சொரூபத்தின் அலங்காரம் நன்றாக இருக்கிறது. விதவிதமான அலங்காரம் மரத்திற்கு இன்னும் அழகாக இருக்கிறது. ஆனால் சார சொரூபத்தின் பலன் சக்திசாலியாக இருக்கிறது. விஸ்தாரத்தைப் பார்த்து சதா குஷி அடைகின்றனர். மேலும் பலனைப் (பழம்) பார்த்து சக்திசாலி ஆவதற்கான நல்விருப்பம் வைக்கின்றனர். பாப்தாதாவும் விஸ்தாரத்திற்கு நடுவில் சாரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். விஸ்தாரத்தில் சாரம் எவ்வளவு அழகாக இருக்கிறது! இதிலோ அனைவரும் அனுபவசாலிகள். சாரத்தின் சதவீதம் மற்றும் விஸ்தாரத்தின் சதவீதம் இரண்டிலும் எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது! இதையோ தெரிந்திருக்கிறீர்கள் தானே? விஸ்தாரத்தின் விசேஷத் தன்மை தனிப்பட்டது, மேலும் விஸ்தாரமும் அவசியமாகும், ஆனால் முக்கிய சார சொரூபம் பழமாகும் (பலன்). எனவே பாப்தாதா இரண்டையும் பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். விஸ்தாரம் என்ற இலைகளின் மீதும் அன்பு இருக்கிறது. மலர்களின் மீதும் அன்பு, பழங்களின் மீதும் அன்பு இருக்கிறது, எனவே பாப்தாதாவிற்கு குழந்தைகளுக்கு சமமாக சேவாதாரியாகி சந்திப்பதற்கு வந்தே தீரவேண்டியுள்ளது. எதுவரை சமமாக வில்லையோ, அதுவரை சாகார சந்திப்பைக் கொண்டாடமுடியாது. விஸ்தார சொரூப ஆதமாக்களாக இருந்தாலும் சரி, சார சொரூப ஆத்மாக்களாக இருந்தாலும் சரி இருவருமே பாபாவினுடையவர் ஆகியிருக்கிறார்கள், அதாவது குழந்தைகள் ஆகியிருக்கின்றனர். எனவே பாபாவிற்கு அனைத்து வரிசைக்கிரமமான குழந்தைகளின் சந்திப்பின் பாவனைக்கான பலனைக் கொடுத்தே ஆகவேண்டியுள்ளது. எப்பொது பக்தர்களுக்கு கூட பக்திக்கான பலன் அல்ப காலத்திற்கு பிராப்தி ஆகிறதோ அப்பொழுது குழந்தைகளுக்கான அதிகாரம் குழந்தைகளுக்கு அவசியம் பிராப்தி ஆகிறது.

 

இன்று முரளி நடத்த வரவில்லை. யாரெல்லாம் வெகுதூரத்தில் இருந்து வந்திருக்கின்றனரோ, அவர்களுடன் சந்திப்பை கொண்டாடுவதற்கான வாக்குறுதி நிறைவேற்ற வந்திருக்கிறார். சிலர் அன்போடு சந்திக்கின்றனர், சிலர் ஞானத்தின் ஆதாரத்தில் சந்திக்கின்றனர், சிலர் சமமான சொரூபத்தில் சந்திக்கின்றனர். ஆனால் பாபாவிற்கோ அனைவரையும் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. இன்று அனைத்து பக்கங்களிலிருந்தும் வந்துள்ள குழந்தைகளின் சிறப்பம்சங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்று டெல்லியின் சிறப்பம்சத்தை பார்த்துக் கொண்டிருந்தார். சேவை தொடங்கிய முதல் இடமாகும். மேலும் ஆதியிலும் கூட சேவாதாரிகளின் சேவைக்கான துவக்கத்திற்காக ஜமுனை நதிக்கரை தான் கிடைத்தது. ஜமுனா நதிக்கரை ஓரம் சென்று சேவை செய்தீர்கள் தானே! சேவையின் விதை கூட டெல்லியில் ஜமுனா நதிக்கரையில் ஆரம்பமாகியது. மற்றும் இராஜ்யத்தின் மாளிகை கூட ஜமுனா நதிக்கரையில் தான் இருக்கும், எனவே கோபி வல்லபர், கோப கோபியர்கள் கூடவே ஜமுனா நதிகரையும் பாடப்பட்டுள்ளது. பாப்தாதா ஸ்தாபனையின் அந்த சக்திசாலி குழந்தைகளின் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தார், எனவே டெல்லியைச் சேர்ந்தவர்களின் சிறப்பம்சம் தற்சமயத்திலும் உள்ளது, எதிர்காலத்திலும் உள்ளது. சேவையின் அஸ்திவார ஸ்தானமாக உள்ளது, இராஜ்யத்தின் அஸ்திவாரமாகவும் உள்ளது, அஸ்திவார இடத்தில் வசிக்கக் கூடியவர்கள் அவ்வளவு சக்திசாலியாக இருக்கின்றீர்கள் தானே! டெல்லியைச் சேர்ந்தவர்கள் மீது சதா சக்திசாலியாக இருப்பதற்கான பொறுப்பு உள்ளது. டெல்லியைச் சேர்ந்த நிமித்த ஆத்மாக்களுக்கு இந்த பொறுப்பு என்ற கீரிடம் இருக்கிறது தானே! ஒருபொழுதும் கீரீடத்தை கீழேயோ வைத்துவிடுவதில்லை தானே? டெல்லியில் வசிப்பவர்கள் என்றாலே சதா பொறுப்பு என்ற கீரீடம் அணிந்தவர்கள். புரிந்தா டெல்லியைச் சேர்ந்தவர்களின் சிறப்பம்சம்! சதா இந்த சிறப்பம்சத்தை செயலில் கொண்டு வரவேண்டும். நல்லது.

 

இரண்டாவது தேடி கண்டெடுக்கப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவனை மற்றும் அன்பின் நாடகத்தை நல்ல முறையில் காட்டுகின்றனர். ஒரு பக்கம் மிகுந்த பாவனை மற்றும் மிக மிக அன்பான ஆத்மாக்களாக இருக்கின்றனர், மற்றொரு பக்கம் உலகின் கணக்குப்படி கல்வித் துறையில் புகழ் பெற்றவர்களும் கர்நாடகத்தில் இருக்கின்றனர், அதனால் பாவனை மற்றும் பதவிக்கான உரிமையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். அதனால் கர்நாடகத்தில் இருந்து பலத்த குரலை (சேவை) எழுப்ப முடியும். நல்ல பலன் தரக்கூடிய பூமியாகும், ஏனென்றால் வி..பி களாக இருந்த போதிலும் கூட பாவனை மற்றும் சிரத்தையுடன் கூடிய பூமியாக இருக்கும் காரணத்தினால் பணிவுடன் இருக்கின்றனர். அது எளிய சாதனம் ஆகிவிடுகிறது. கர்நாடக பூமியானது இந்த சிறந்த காரியத்திற்கு நிமித்தமாக இருக்கிறது. தனது இந்த சிறப்பு அம்சம், பாவனை மற்றும் பணிவு இரண்டும் சேவையில் சதா இணைந்து இருக்கட்டும். இந்த விசேஷத்தன்மையை எந்தவித சூழ்நிலையிலும் விட்டுவிடக் கூடாது. கர்நாடகம் என்ற படகிற்கு இந்த இரண்டும் துடுப்புகளாகும். இவை இரண்டையும் சேர்த்தே வைத்திருக்கவும். முன்னே, பின்னே அல்ல. சேவை என்ற படகு, பூமியின் விசேஷத் தன்மையின் வெற்றியைக் காட்டும். இரண்டின் சமநிலை பெயரை புகழ் அடையச் செய்யும். நல்லது.

 

சதா தன்னை சார சொரூபமாக அதாவது பலன் சொரூபமாக ஆக்கக்கூடிய, சதா சார சொரூபத்தில் நிலைத்திருந்து பிறரையும் சார ஸ்திதியில் நிலைக்க வைக்கக்கூடிய, சதா சக்திசாஆத்மா, சக்திசாலி நினைவு சொரூப, சக்திசாலி சேவாதாரி, அப்படிப்பட்ட சமமான சொரூபத்தில் சந்திப்பைக் கொண்டாடக் கூடிய உயர்ந்த ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

 

10.03.2019                           காலை முரளி               ஓம்சாந்தி                         அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    03.05.1984          மதுபன்

 

பரமாத்மாவின் அனைத்திலும் உயர்ந்த முதல் படைப்பு பிராமணர்கள்

 

இன்று படைப்பவரான தந்தை தனது படைப்புகளை அதிலும் கூட முதல் படைப்பான பிராமண ஆத்மாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அனைத்திலும் உயர்ந்த முதல் படைப்பு பிரமாணர்களாகிய நீங்கள் தான் சிரேஷ்ட ஆத்மாக்கள் ஆவீர்கள். எனவே அனைத்து படைப்புகளைக் காட்டிலும் அன்பானவர்கள். பிரம்மா மூலமாக உயர்ந்ததிலும் உயர்ந்த படைப்பு வாய் வம்சாவளி மகான் ஆத்மாக்கள், பிராமண ஆத்மாக்கள். தேவதைகளைக் காட்டிலும் சிறந்தவர்கள் பிராமண ஆத்மாக்கள் என்று பாடப்பட்டுள்ளது. பிராமணர்கள் தான் ஃபரிஸ்தாவிலிருந்து தேவதைகள் ஆகின்றனர். ஆனால் பிராமண வாழ்க்கை ஆதி பிதா மூலமாக சங்கமயுகத்தின் முதலாம் வாழ்க்கையாகும். ஆதி சங்கமவாசி ஞான சொரூப திரிகாலதரிசி, திரிநேத்திரி பிராமண ஆத்மாக்கள் ஆவார்கள். சாகார சொரூபத்தில் சாகார உலகில் ஆத்மா பரமாத்மாவின் சந்திப்பு மற்றும் அனைத்து சம்மந்தத்தின் அன்பை வெளிப்படுத்தும் அனுபவம், பரமாத்மாவின் அழிவற்ற கஜானாக்களின் உரிமை, சாகார சொரூபத்தில் பிராமணர்களுக்குத் தான் இந்த பாடல் உள்ளது - நாங்கள் பார்த்தோம், நாங்கள் அடைந்தோம், சிவதந்தையை பிரம்மா பாபா மூலமாக. இது தேவதை வாழ்க்கையின் பாடல் அல்ல, சாகார உலகில் இந்த சாகார கண்கள் மூலமாக இரண்டு தந்தையரையும் பார்ப்பது, அவர்களுடன் உண்பது, அருந்துவது, நடப்பது, பேசுவது, கேட்பது, ஒவ்வொரு சரித்திரத்தையும் அனுபவம் செய்வது, விசித்திரத்தை (சிவபாபா) சித்திரத்தில் (பிரம்மா) பார்ப்பது என்ற இந்த சிறந்த பாக்கியம் பிராமண வாழ்க்கைக்குரியதாகும்.

 

பிராமணர்கள் தான் கூறுகின்றனர் - நாங்கள் கடவுளை தந்தையின் ரூபத்தில் பார்த்தோம். தாய், நண்பன், உறவுகள், நாயகன் என்ற சொரூபத்தில் பார்த்தோம். ரிஷிகள், முனிவர்கள், தபஸ்விகள், வித்வான்கள், ஆச்சாரியர்கள், சாஸ்திரிகள் போன்றோர் புகழை மட்டுமே பாடிக் கொண்டேயிருந்து விட்டனர். தரிசனத்திற்கு ஏங்குபவர்களாக இருந்து விட்டனர். எப்பொழுது வருவாரோ? எப்பொழுது தான் சந்திப்போமோ?..... என்ற எதிர்பார்ப்பில் பிறவி பிறவிகளின் சக்கரத்தில் வந்து கொண்டேயிருந்தனர், ஆனால் பிராமண ஆத்மாக்கள் பெருமிதத்துடன், நம்பிக்கையுடன் சொல்கின்றனர், போதையுடன் சொல்கின்றனர், குதூகலத்துடன் சொல்கின்றனர், உளமார சொல்கின்றனர் - எங்களுடைய பாபா இப்பொழுது கிடைத்துவிட்டார்! அவர்களோ ஆசைப்படுவர்கள், நீங்களோ சந்திப்பைக் கொண்டாட கூடியவர்கள்! பிராமண வாழ்க்கை என்றாலே அனைத்து அழிவற்ற, மறையாத, துண்டிக்கப்படாத, அசையாத சர்வ பிராப்தி சொரூப வாழ்க்கை, பிராமண வாழ்க்கை இந்த கல்ப மரத்தின் அஸ்திவாரம், வேராகும். பிராமண வாழ்க்கையின் ஆதாரத்தில் தான் அந்த மரம் வளர்ச்சியடைகிறது. பிராமண வாழ்க்கை என்ற வேரிலிருந்து அனைத்து விதமான ஆத்மாக்களுக்கு விதை மூலமாக முக்தி ஜீவன் முக்தியின் பிராப்தி என்ற தண்ணீர் கிடைக்கிறது. பிராமண வாழ்க்கையின் ஆதாரத்தினால் இந்த கிளைகள் வளர்ச்சியடைகின்றன. எனவே பிராமண ஆத்மாக்கள் அனைத்து விதவிதமான வம்சாவளியினரின் முன்னோர்கள் ஆவார்கள். பிராமண ஆத்மாக்கள் உலகின் அனைத்து சிறந்த காரியத்திற்கும் வடிவமைப்பிற்கும் நல்ல நேரத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள். பிராமண ஆத்மாக்கள் தான் அஸ்வமேத இராஜஸ்வ யக்ஞம், ஞான யக்ஞத்தை படைக்கக்கூடிய சிறந்த ஆத்மாக்கள் பிராமண ஆத்மாக்கள் ஒவ்வொரு ஆத்மாவின் 84 பிறவிகளின் ஜாதகத்தை தெரிந்துள்ளவர்கள். ஒவ்வொரு ஆத்மாவின் சிறந்த பாக்கியம் என்ற கோட்டை விதியை உருவாக்கக் கூடியவர் மூலமாக சிறந்ததாக்கக் கூடியவர்கள். பிராமண ஆத்மாக்கள், மகான் யாத்திரை - முக்தி, ஜீவன் முக்தி என்ற யாத்திரையை செய்விப்பதற்கு நிமித்தமானவர்கள். பிராமண ஆத்மாக்கள் அனைத்து ஆத்மாக்களுக்கும் கூட்டாக நிச்சயதார்த்தத்தை பாபாவுடன் செய்விப்பவர்கள். பரமாத்மாவின் கையோடு கை சேர்ப்பிப்பவர்கள். பிராமண ஆத்மாக்கள் பிறவி பிறவிகளுக்காக சதா தூய்மை என்ற பிணைப்பில் கட்டக்கூடியவர்கள். அமர கதையைச் சொல்லி அமரர் (தேவதை) ஆக்க கூடியவர்கள். புரிந்ததா - எவ்வளவு மகான்கள் மற்றும் எவ்வளவு பொறுப்புள்ள ஆத்மாக்கள் நீங்கள்! முன்னோர்கள் நீங்கள்! எப்படி முன்னோர்களோ அப்படியே வம்சாவளி உருவாகிறது. சாதாரணமானவர்கள் அல்ல நீங்கள்! குடும்பத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஏதோவொரு சேவை நிலையத்தின் பொறுப்பாளர் என்ற இந்த எல்லைக்குட்பட்ட பொறுப்பாளர் அல்ல நீங்கள். உலக ஆத்மாக்களின் ஆதார மூர்த்திகள், முன்னேற்றக்கூடிய மூர்த்திகள் நீங்கள். எல்லையற்ற பொறுப்பு ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் மீதும் உள்ளது. ஒருவேளை எல்லையற்ற பொறுப்பை நிர்வகிக்காமல், தனது லௌகீக குடும்பம் மற்றும் அலௌகீக குடும்பத்திலேயே சில நேரம் பறக்கும் கலை, சில நேரம் ஏறும் கலை, சில நேரம் நடக்கும் கலை, சில நேரம் நிற்கும் கலை, இந்த குட்டிகர்ண விளையாட்டிலேயே நேரத்தைப் போக்குபவர்கள் பிராமணர்கள் அல்ல. ஆனால் சத்திரிய ஆத்மாக்கள் ஆவார்கள். முயற்சியின் அதிசயத்தில் இதை செய்வோம், அவ்வாறு செய்வோம் என்ற அம்பை எய்யாமல் அபிநயம் செய்து கொண்டிருக்கிறார்கள். தோராயமாக இலக்கை குறி வைப்பதற்கும் இலக்கை அடைவதற்கும் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இலக்கை மதிப்பீடு செய்தவாறே இருந்துவிடுகின்றனர். இப்பொழுது செய்வோம், அப்படி செய்வோம் என்று இலக்கை அளவிடு செய்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தான் சத்திரிய ஆத்மாக்கள் என்று சொல்வோம். பிராமண ஆத்மாக்கள் அளவீடு செய்வதில்லை, எப்பொழுதும் இலக்கின் மீதே நிலைத்திருக்கின்றனர். முழுமையான இலக்கு எப்பொழுதும் புத்தியில் இருக்கவே இருக்கிறது. ஒரு வினாடியின் எண்ணத்தினால் வெற்றியாளர் ஆகிவிடுவார்கள். பாப்தாதா - பிராமண குழந்தைகள் மற்றும் சத்திரிய குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிராமணர்களின் வெற்றிக்கான விளையாட்டு மற்றும் சத்திரியர்களுக்கு சதா வில் அம்பின் சுமை தூக்கும் விளையாட்டு. ஒவ்வொரு நேரமும் முயற்சிக்கான உழைப்பு என்ற வில் இருக்கவே இருக்கிறது. ஒரு பிரச்சனைக்கான தீர்வு காண்கின்றனர், உடனே அடுத்த பிரச்சனை நின்று கொண்டிருக்கிறது. பிராமணர்கள் என்றாலே தீர்வு சொரூபமானவர்கள். சத்திரியர்கள் அடிக்கடி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே இருந்து கொண்டு இருக்கின்றனர். எப்படி சாகார ரூபத்தில் கேலியாக ஒரு கதை கூறியிருந்தார்கள் இல்லையா! சத்திரியர்கள் என்ன செய்தார்கள்? இதற்கு கதை இருக்கிறதல்லவா எலியை விரட்டினார்கள், உடனே பூனை வந்து விட்டது. இன்று பணப் பிரச்சனை, நாளை மன பிரச்சனை, நாளை மறுநாளோ உடல் பிரச்சனை மற்றும் உறவுகள் - தொடர்பில் வரக்கூடியவர்களின் பிரச்சனை. இவ்வாறாக உழைப்பிலேயே மூழ்கியிருக்கின்றனர், எப்பொழுதும் ஏதேனும் ஒரு புகார் கண்டிப்பாக இருக்கும். தன்னைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ இருக்கும். பாப்தாதா அவ்வாறு நேரத்திற்குத் தகுந்தவாறு ஏதேனும் உழைப்பில் மூழ்கியிருக்கக் கூடிய குழந்தைகளைப் பார்த்து கருணை, இரக்கமுள்ளவர் என்ற ரூபத்தில் பார்த்து இரக்கப் படுகிறார்.

 

சங்கமயுகம், பிராமண வாழ்க்கை உள்ளத்தை கவர்ந்தவரின் உள்ளத்தில் ஓய்வு எடுப்பதற்கான நேரமாகும். உள்ளத்தில் ஒய்வாக இருங்கள். பிரம்மா போஜனம் உண்ணுங்கள், ஞான அமிர்தம் பருகுங்கள், சக்திசாலியான சேவை செய்யுங்கள் மற்றும் ஓய்வாக குதூகலத்துடன் உள்ள சிம்மாசனத்தில் இருங்கள். ஏன் தொல்லைக் குள்ளாகிறீர்கள்? அய்யோ கடவுளே, என்று கூறவதில்லை, ஆனால் அய்யோ பாபா அல்லது அய்யோ தாதி, தீதி என்று கூறுகிறீர்கள் தானே! ஹே பாபா, ஹே தாதி, தீதி கொஞ்சம் கேளுங்களேன், ஏதேனும் செய்யுங்களேன்.... இது தான் தொல்லைக்கு ஆளாவது. இது ஓய்வாக இருப்பதற்கான யுகமாகும். ஆன்மீக குதூகலத்துடன் இருங்கள். ஆன்மீக குதூகலத்தில் இந்த சுகமான நாட்களைக் கழியுங்கள். அழியக் கூடிய குதூகலத்தில் இருக்க வேண்டாம். ஆடுங்கள், பாடுங்கள், வாடி விடாதீர்கள். பரமாத்மாவுடன் குதூகலத்தைக் கொண்டாடும் சமயம் இப்பொழுது கொண்டாடவில்லையென்றால், எப்பொழுது கொண்டாடுவீர்கள்! ஆன்மீக பெருமிதத்தில் அமருங்கள். ஏன் குழப்பம் அடைகிறீர்கள்? பாபாவிற்கு ஆச்சரியமாக உள்ளது - சின்னஞ் சிறு எறும்பு புத்தி வரை சென்று விடுகிறது. புத்தியோகத்தை நிலை தடுமாறச் செய்கிறது. எப்படி ஸ்தூலமான உடலில் கூட எறும்பு கடித்து விட்டால், உடல் அசையும், சலனம் அடையும் இல்லையா! அதுபோல் புத்தியை சலனப்படுத்தி விடுகிறது. எறும்பு, ஒருவேளை யானையின் காதுக்குள் சென்று விடுகிறது என்றால், மயக்கமுற செய்கிறது அல்லவா! அவ்வாறே பிராமண ஆத்மாக்களும் மயக்கமுற்று சத்திரியர் ஆகிவிடுகின்றனர். புரிந்தா என்ன விளையாட்டு விளையாடுகிறீர்கள் என்று! சத்திரியர்கள் ஆகாதீர்கள். பிறகு இராஜ்யத்திலும் திரேதாயுகம் தான் கிடைக்கும். சத்யுக தேவதைகள் உண்டு, களித்து, என்ன மீதமிருக்குமோ அது சத்திரியர்களுக்கு திரேதாவில் கிடைக்கும். கர்மம் என்ற வயலின் முதல் விளைச்சல் பிராமணர்களிலிருந்து தேவதைகளுக்குக் கிடைக்கிறது. மேலும் அடுத்த விளைச்சல் சத்திரியர்களுக்குக் கிடைக்கிறது. வயலின் முதலில் விளைச்சலின் சுவைக்கும் இரண்டாவது விளைச்சலின் சுவைக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதைத் தெரிந்திருக்கிறீர்கள் தானே! நல்லது!

 

மஹாராஷ்ட்ரா மற்றும் .பி. மண்டலம் வந்திருக்கின்றன. மஹாராஷ்ட்ராவிற்கு சிறப்பு இருக்கிறது. எவ்வாறு மஹாராஷ்ட்ரா என்ற பெயர் உள்ளதோ, அவ்வாறே மகான் ஆத்மாக்கள் என்ற அழகிய பூச்செண்டை பாப்தாதாவிற்கு வெகுமதியாக அளிப்பார்கள். மஹாராஷ்ட்ராவின் இராஜ்யம் அழகாவும் முழுமையாகவும் இருக்கிறது, எனவே மஹாராஷ்டரா அப்படிப்பட்ட முழுமையான பெயர், புகழ் பெற்ற ஆத்மாக்களை தொடர்பில் கொண்டு வர வேண்டும். எனவே தான் மகான் ஆத்மாக்களை உருவாக்கி அழகிய பூச்செண்டை பாபாவிற்கு முன்னால் கொண்டு வரவேண்டும் என்று கூறினார். இப்பொழுது கடைசி நேரத்தில் இந்த செல்வந்தர்களின் நடிப்பும் இருக்கிறது, சம்மந்ததில் அல்ல, தொடர்பின் நடிப்பு இருக்கிறது. புரிந்தா!

 

.பி. யில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் புகழ் பெற்ற உலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மகால் இருக்கிறது அல்லவா! எவ்வாறு .பி. யில் உலக அதிசயம் உள்ளதோ, அவ்வாறு .பி, சேர்ந்தவர்களுக்கு சேவையின் அதிசயமான வெளிப்படையான பலனைக் காட்ட வேண்டும். அது உள்நாடு மற்றும் வெளிநாட்டில், பிராமண உலகில் புகழ் பெற்றதாக இருக்க வேண்டும், அதாவது இவர்களோ மிகவும் அதிசயமான காரியம் செய்துள்ளார்கள் உலகின் அற்புதமானவர்கள் என்று. அவ்வாறு அதிசயமான காரியம் செய்ய வேண்டும். கீதா பாடசாலைகள் உள்ளன, சென்டர்கள் உள்ளன, இது ஒன்றும் அதிசயம் அல்ல. யார் இதுவரை செய்ய வில்லையோ, அதைச் செய்து காட்ட வேண்டும். அப்பொழுது தான் அற்புதம் என்று சொல்வோம். புரிந்ததா! வெளிநாட்டினரும் இப்பொழுது ஒவ்வொரு சீசனிலும் வந்துவிடுகின்றனர். வெளிநாட்டினர் வெளிநாட்டு பொருட்கள் மூலமாக உலகில் இரண்டு தந்தையரையும் வெளிப்படுத்துவார்கள். அருகில் இருப்பவர் என்றாலே இந்தக் கண்களால் பார்க்க முடியும், எனவே அப்பேற்பட்ட தந்தையை உலகிற்கு முன்னால் வெளிப்படுத்துவார்கள். புரிந்தா! வெளிநாட்டினர் என்ன செய்யவேண்டுமென்று! நல்லது - நாளையோ முழு கூட்டமும் சென்று விடும். எதிர்காலத்தில் அந்தநாளும் வரும் ஹெலிகாப்டரிலிருந்து கூட இறங்குவார்கள். அனைத்து பொருட்களும் உங்களுக்காகத் தான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. எப்படி சத்யுகத்தில் விமானங்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கிறது அல்லவா! இப்பொழுது இங்கே ஜீப் மற்றும் பேருந்துகள் வரிசையாக நின்றுக்கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் விமானங்களும் வரிசையாக நின்று கொண்டிருக்கும். அனைவரும் பயந்து ஒடிவிடுவார்கள், மேலும் அனைத்தையும் உங்களிடம் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் பயப்படுவார்கள், நீங்களோ பறப்பீர்கள். உங்களுக்கு மரண பயமோ இல்லை, முதலிலேயே இறந்துவிட்டீர்கள். பாகிஸ்தானில் மாதிரி (சாம்பிள்) பார்த்தீர்கள் தானே - அனைவரும் சாவிகளைக் கொடுத்து விட்டு சென்று விட்டனர். அதனால் அனைத்து சாவிகளும் உங்களுக்குக் கிடைக்கப் போகின்றன. பராமரிக்க மட்டும் செய்ய வேண்டும். நல்லது!

 

சதா பிராமண வாழ்க்கையின் அனைத்து சிறப்புகளையும் வாழ்வில் கொண்டு வரக்கூடிய, சதா உள்ளத்திற்கு ஓய்வு அளிக்கக்கூடிய பாபாவின் உள்ள சிம்மாசனத்தின் மீது ஆன்மீக குதூகலத்துடன், ஆன்மீக ஓய்வு எடுக்கக்கூடிய, ஸ்தூலமான ஓய்வு எடுப்பதல்ல, எப்பொழுதும் சங்கமயுகத்தின் உயர்ந்த பெருமிதத்தில் இருக்கக்கூடிய, உழைப்பிலிருந்து விடுபட்டு நேசமான வாழ்க்கையில் மூழ்கியிருக்கக்கூடிய, உயர்ந்த பிராமண ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் சமஸ்காரம் உரித்தாகுக.

 வரதான்:

ஞான இரத்தினங்களை தாரணை செய்து வீணானவைகளை அழிக்கக்கூடிய புனித அன்னப் பறவை ஆகுக.

 

புனித அன்னப் பறவைக்கு இரண்டு சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஒன்று ஞான இரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது, மற்றொன்று நிர்ணய சக்தி மூலமாக பாலையும் தண்ணீரையும் பிரித்தெடுப்பது. பால் மற்றும் தண்ணீர் என்பதன் பொருள் சக்திசாலியான து மற்றும் வீணானதை நிர்ணயம் செய்வதாகும். வீணானவற்றை நீருக்கு நிகரானது என்றும் சக்திசாலியான வற்றை பாலுக்கு நிகரானது என்றும் சொல்கின்றனர். எனவே வீணானவைகளை அழிப்பது என்றாலே புனித அன்னப் பறவை ஆவது. ஒவ்வொரு நேரமும் புத்தியில் ஞான இரத்தினங்கள் ஓடிக்கொண்டும், சிந்தனை நடந்து கொண்டும் இருந்ததென்றால், இரத்தினங்களால் நிரம்பி விடுவீர்கள்.

 

சுலோகன்:

எப்பொழுதும் தனது உயர்ந்த நிலையில் (பொசிஸிசன்) நிலைத்திலிருந்து எதிர்ப்பை (ஆப்போஸிசன்) அழிப்பவரே வெற்றி ஆத்மா ஆவார்.

 

ஓம்சாந்தி