ஓம் சாந்தி 10.05.2020 காலை முரளி அவ்யக்த பாப்தாதா, மதுபன்

ரிவைஸ்: 08.01.1986


  

பூமியின் புனித நட்சத்திரங்கள்

 

இன்று ஞான சூரியன் தந்தை தன்னுடைய அநேகவிதமான விசேஷங்களினால் நிரம்பிய விசேஷ நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு நட்சத்திரத்தின் விசேஷம் உலகைப் மாற்றிவதற்கு பிரகாசம் கொடுக்கக்கூடியது. இன்றைய நாட்களில் விசேஷமாக நட்சத்திரங்களைத் தேடி கண்டுப்பிடிப்பதில் உலகத்தினர் ஈடுபட்டிருக்கிறார்கள், எனென்றால் நட்சத்திரங்களின் பிரபாவம் பூமியின் மேல் ஏற்படுகிறது. அறிவியலைச் சேர்ந்தவர்கள் ஆகாயத்தின் நட்சத்திரங்களைத் தேடுகிறார்கள், பாப்தாதா தன்னுடைய புனித நட்சத்திரங்களின் விசேஷங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்பொழுது ஆகாயத்தின் நட்சத்திரங்கள் அவ்வளவு தூரத்தில் இருந்து தன்னுடைய நல்லது அல்லது தீய பிராபவத்தை ஏற்படுத்த முடிகிறது எனறால் புனித நட்சத்திரங்கள் நீங்கள் இந்த உலகத்தை பரிவர்த்தனை செய்வதற்கு, தூய்மை, சுகம்,. சாந்தி நிரம்பிய உலகை உருவாக்குவதற்கான பிரபாவத்தை எவ்வளவு சுபலமாக ஏற்படுத்த முடியும். நீங்கள் பூமியின் நட்சத்திரங்கள், அவைகள் ஆகாயத்தின் நட்சத்திரங்கள், பூமியின் நட்சத்திரங்கள் நீங்கள் இந்த உலகத்தை குழப்பத்திலிருந்து காப்பாற்றி சுகம் நிறைந்த உலகம் மற்றும் பொன்னான உலகத்தை உருவாக்குபவர்கள். இந்த நேரம் இயற்கை மற்றும் மனிதர்கள் இருவர்களுமே குழப்பம் ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறார்கள். ஆனால் புருஷோத்தம ஆத்மாக்கள் நீங்கள் உலகிற்கு சுகம், சாந்தியின் மூச்சைக் கொடுப்பதற்கு பொறுப்பாளராக இருக்கிறீர்கள். பூமியின் நட்சத்திரங்கள் நீங்கள் அனைத்து ஆத்மாக்களின் அனைத்து விருப்பங்களை நிறைவேற்றுபவர்கள், பிராப்தி சொரூபமான நட்சத்திரங்கள், அனைவரின் நம்பிக்கையின்மையை நம்பிக்கையில் மாற்றக்கூடிய சிரேஷ்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள். எனவே அமைதியின் நட்சத்திரம், புனித நட்சத்திரம், சுக சொரூப நட்சத்திரம் எப்பொழுதும் வெற்றி அடையும் நட்சத்திரம் அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றும் நட்சத்திரம், திருப்தியின் பிரபாவம் நிறைந்த நட்சத்திரமாகிய நான் என்னுடைய பிரபாவம் ஏற்படுத்தி ஜொலிப்பு, மற்றும் பொலிவு எந்தளவு இருக்கிறது என்று உங்களை நீங்களே சோதனை செயுயங்கள். நான் எந்தளவு பிரபாவம் ஏற்படுத்திக் கொண்டிருக்கறேன்? பிரபாவத்தின் வேகம் எந்தளவு உள்ளது? எப்படி அந்த நட்சத்திரங்களின் வேகத்தை சோதனை செய்கிறார்கள், அதேபோல் தன்னுடைய பிரபாவத்தின் வேகத்தை நீங்களே சோதனை செய்யுங்கள். ஏனென்றால் உலகத்தில் இந்த நேரம் புனித நட்சத்திரங்கள் உங்களுடைய தேவையாக இருக்கிறது. அம்மாதிரி பாப்தாதா அனைத்து விதமான நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

இந்த ஆன்மீக நட்சத்திரங்களின் கூட்டம் எவ்வளவு சிரேஷ்டமானதாக இருக்கிறது, மேலும் எந்தளவு சுகம் நிறைந்தாக இருக்கிறது. அந்தமாதிரி தன்னை மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் என்று நினைக்கிறீர்களா? எப்படி அந்த நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காக மனிதர்கள் எவ்வளவு விருப்பம் வைக்கிறார்கள். இப்பொழுது புனித நட்சத்திரங்கள் உங்களைப் பார்ப்பதற்காக அனைவரும் விருப்பமாக இருப்பார்கள் என்ற அந்த நேரமும் வந்து கொண்டிருக்கிறது, இந்த அமைதியின் பிரபாவம், சுகத்தின் பிரபாவம், ஆடாத அசையாதவராக ஆக்குவதற் கான பிரபாவம் எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது என்று நட்சத்திரங்களாகிய உங்களைத் தேடுவார்கள். இதையும் ஆராய்ச்சி செய்வார்கள். இப்பொழுதோ இயற்கையின் தேடுதலில் ஈடுபட்டிருக்கிறார்கள், எப்பொழுது இயற்கையின் தேடுதலில் களைப்படைந்து விடுவார்களோ அப்பொழுது இந்த ஆன்மீக ஆராய்ச்சி செய்வதற்கான எண்ணம் வரும். அதற்கு முன்பு புனித நட்சத்திரங்கள் நீங்கள் உங்களை சம்பன்னமாக ஆக்கிவிடுங்கள். ஏதாவது குணத்தின், அது அமைதி அல்லது சக்தியின் விசேஷமாக இருந்தாலும் அதை தன்னில் நிரப்புவதில் விசேஷமாக அதிவேகமாக தயார் செய்யுங்கள், நீங்களும் ஆராய்ச்சி செய்யுங்கள். அனைத்து குணங்களும் இருக்கின்றன. ஆனால் குறைந்தது ஒரு குணத்தின் விசேஷமாக தன்னை அதில் சம்பன்னமாக (முழுமையாக) ஆக்குங்கள். எப்படி டாக்டர்கள் இருக்கின்றார்கள் - பொதுவான நோய்களின் ஞானத்தையோ அனைவரும் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கூடவே சிலரில் விசேஷ ஞானம் இருக்கிறது. அந்த விசேஷத்தின் காரணமாக பெயர் பெற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். அந்த மாதிரி அனைத்து குணங்களிலும் நிரம்பியவராக ஆகியே தீர வேண்டும். இருந்தாலும் ஒரு விசேஷத்தை விசேஷ ரூபத்தில் அனுபவத்திலும் சேவையிலும் கொண்டு வந்து கொண்டே முன்னேறிச் செல்லுங்கள். எப்படி பக்தியிலும் ஒவ்வொரு தேவியின் மகிமையில், ஒவ்வொருவரின் விசேஷமும் வேறு வேறாக மகிமைபாடப்படுகிறது. மேலும் பூஜையும் அதே பிரகாரம் நடக்கும். எப்படி சரஸ்வதியை கல்வியின் தேவி என்று நம்புகிறார்கள். மேலும் பூஜை செய்கின்றார்கள், அவரும் சக்தி சொரூபம் தான், ஆனால் விசேஷமாக கல்வியின் தேவி என்று கூறி பூஜை செய்கிறார்கள். லக்ஷ்மியை செல்வத்தின் தேவி என்று கூறி பூஜை செய்கின்றார்கள் அதே போல் தனக்குள் அனைத்துக் குணங்கள், அனைத்து சக்திகள் இருந்தபோதிலும் ஒரு விசேஷத்தில் ஆழமாய் ஆராய்ச்சி செய்து தன்னை பிராபவசாலியாக ஆக்குங்கள். இந்த வருடத்தில் ஒவ்வொரு குணத்தின், ஒவ்வொரு சக்தியின் ஆராய்ச்சி செய்யுங்கள்.. ஒவ்வொரு குணத்தின் நுணுக்கத்தில் செல்லுங்கள். நுணுக்கத்தின் மூலம் அதனுடைய மகான் தன்மையை அனுபவம் செய்ய முடியும். நினைவு செய்வதின் பல்வேறு நிலைகளில் முயற்சி செய்வதின் வித வித நிலைகளின் ஆழமாகச் சென்று ஆராய்ச்சி செய்யு.ங்க.ள், ஆழத்தில் செல்லுங்கள் ஆழ்ந்த அனுபவங்களை செய்யுங்கள். அனுபவத்தின் கடலின் ஆழத்தில் செல்லுங்கள். மேலோட்டமாக அலைகளின் நீந்துவதில் அனுபவியாக ஆவது மட்டும் சம்பூர்ண அனுபவம் கிடையாது,. மேலும் உள்நோக்குமுகமுடையவராகி ஆழ்ந்த அனுபவங்களின் இரத்தினங்களினால் புத்தியை நிரம்பியதாக ஆக்குங்கள். ஏனென்றால் பிரத்யக்ஷம் ஆவதின் நேரம் அருகில் வந்து கொண்டிருக்கிறது. சம்பன்னம் ஆகுங்கள், சம்பூர்ணம் ஆகுங்கள். பிறகு அனைத்து ஆத்மாக்களின் எதிரில் அறியாமை என்ற திரைச் சீலை அகன்றுவிடும். உங்களுடைய சம்பூர்ண நிலையின் வெளிச்சத்தின் மூலம் இந்த திரைச்சீலை தானாகவே விலகி விடும். எனவே ஆராய்ச்சி செய்யுங்கள்,. மிகப் பிரகாசமான லைட்டாக ஆகுங்கள் அப்பொழுது தான் பொன்விழாவை கொண்டாடி இருக்கிறீர்கள் என்று கூறுவோம்.

 

பொன்விழாவின் விசேஷமாக உங்கள் ஒவ்வொருவர் மூலமாக அனைவருக்கும் ஒளிக்கிரணங்கள் ஆத்மாக்களை பொன்னானதாக ஆவதற்கான சக்தி கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்ற இந்த அனுபவம் ஆகட்டும், திருஷ்டி மூலமாகவும், நல்ல சக்திகளின் அனுபவம் ஆகட்டும். எனவே உங்களுடைய ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு காரியமும் பொன்னானதாக இருக்க வேண்டும், பொன்னாதாக ஆக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த பொன் விழா ஆண்டில் தன்னை பாரஸ்நாத்தின் குழந்தை மாஸ்டர் பாரஸ் நாத் (மாஸ்டர் வைரமாக்குபவர்) என்று புரிந்து கொள்ளுங்கள். எப்படிப்பட்ட இரும்புக்கு சமமான ஆத்மாவாக இருந்தாலும், ஆனால் பாபாவின் தொடர்பு மூலம் அந்த இரும்பும் தங்கமாக ஆகிவிடட்டும். இவர் இரும்பாக இருக்கிறார் என்று நினைக்காதீர்க்ள் ஆனால் நான் தங்கமாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். பாரஸின் வேலையே இரும்பையும் தங்கமாக ஆக்குவது. இதே லட்சியத்தை மற்றும் இதே லட்சணத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் புனித நட்சத்திரங்களின் பிரபாவம் உலகின் பார்வையில் வரும். இப்பொழுதோ இந்த நட்சத்திரம் வந்து கொண்டிருக்கிறது என்று பாவம் பயந்து கொண்டிருக்கிறார்கள். பிறகு புனித நாட்சத்திரங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன என்று குஷி அடைவார்கள். உலகின் நாலா புறங்களிலும் புனித நட்சத்திரங்களின் சாரல் அனுபவம் ஆகும். அனைவரின் வாயிலிருந்தும் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள், வெற்றி நட்சத்திரங்கள் வந்து விட்டன என்ற இந்த வார்த்தைகள் தான் வெளியாகும். சுகம், சாந்தியின் நட்சத்திரங்கள் வந்து விட்டன என்று கூறுவார்கள். இப்பொழுதோ தூர திருஷ்டி கண்ணாடி (டெலஷ்கோப்) எடுத்து பார்க்கிறார்கள் இல்லையா? பிறகு மூன்றாவது கண், தெய்வீகக் கண் மூலம் பார்ப்பார்கள். ஆனால் இந்த வருடம் தயார் செய்வதற்கானது நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும். நல்லது. நிகழ்ச்சியில் என்ன செய்வீர்கள். பாப்தாதாவும் சூட்சும வதனத்தில் காட்சியை வெளிப்படுத்தினார், காட்சி என்னவாக இருந்தது?

 

மகாநாட்டு மேடையிலேயோ பேச்சாளர்களைத்தான் அமர வைக்கிறீர்கள் இல்லையா? .மகாநாட்டு மேடை என்றால் பேச்சாளர்களின் மேடை., தலைப்பின் மேல் சொற்பொழிவு எப்பொழுதுமே செய்கிறீர்கள். மேலும் நன்றாகச் செய்கிறீர்கள். இந்த சொற்பொழிவிற்கான நேரம் குறைவாக இருக்கட்டும். மேலும் பிரபாவம் அதிகமாக இருக்கட்டும். அதே நேரத்தில் அனைத்து விதமான பேச்சாளர்கள் தங்களுடைய பிரபாவசாலியான சொற்பொழிவை செய்ய முடியும். அதற்கு ஏற்ற நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும். ஒரு நாள் விசேஷமாக அரை மணி நேரத்திற்காக இந்த நிகழ்ச்சியை வையுங்கள். மேலும் எப்படி வெளியில் இருந்து வந்திருப்பவர்கள், அல்லது விசேஷ சொற்பொழிவாளர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருக்கிறார்கள், அது நடந்து கொண்டிருக்கட்டும். ஆனால் அரை மணி நேரத்திற்காக ஒரு நாளில் மேடையின் எதிரிலும் பலவிதமான ஆயுளில் இருப்பவர்கள் ஒரு சின்னஞ்சிறு குழந்தை, ஒரு குமாரி, ஒரு தூய்மையான தம்பதிகள் இருக்கட்டும். ஒரு குடும்பத்தில் இருக்கும் தம்பதிகள் இருக்கட்டும், ஒரு வயதானவர் இருக்கட்டும், விதவிதமான வயதினர் அவர்கள் சந்திரன் மாதிரி மேடையில் அமர்ந்திருக்கட்டும். மேலும் மேடையில் உள்ள லைட் மந்தமாக இருக்கட்டும். மிகப் பிரகாசமாக இருக்க வேண்டாம். சாதாரணமாக இருக்கட்டும். மேலும் ஒவ்வொருவரும் மூன்று மூன்று நிமிடங்கள் இந்த சிரேஷ்ட வாழ்க்கை உருவாக்குவதற்காக பொன்னான வாக்கியங்கள் என்ன கிடைத்தது அதன் மூலம் நான் இந்த வாழ்க்கையை உருவாக்கிவிட்டேன் என்று தன்னுடைய விசேஷ பொன்னான வார்த்தைகளைக் கூறட்டும். சிறு வயது குமார் (குழந்தை) அதாவது பெண் குழந்தை கூறட்டும், குழந்தைகளுக்காக சொன்ன வாக்கியங்கள் என்ன கிடைத்தது என்று கூறட்டு.ம். குமாரி வாழ்க்கைக்காக பொன்னான வார்த்தைகள் என்ன கிடைத்து, பால பிரம்மாசாரி தம்பதியினருக்கு பொன்னான வார்த்தை என்ன கிடைத்து, குடும்பத்தில் டிரஸ்டியாக இருக்கும் ஆத்மாக்களுக்காக என்ன கிடைத்து, வயதானவர்களுக்கு பொன்னான வார்த்தைகள் என்ன கிடைத்து என்று ஒவ்வொருவரும் மூன்று மூன்று நிமிடங்கள் பேசட்டும். ஆனால் இறுதியில் பொன்னான வார்த்தைகளை சுலோகன் ரூபத்தில் முழு சபையினரையும் சொல்ல வையுங்கள். மேலும் எந்த நேரம் யார் சொல்கிறாரோ, அந்த நேரம் அவர் மீது ஒளி பரவட்டும். அப்போது இயல்பாகவே அனைவரின் கவனம் அவர் பக்கம் செல்லும். அமைதியின் பிராபவம் இருக்கட்டும். எப்படி ஏதாவது நாடம் நடத்துகிறீர்கள், அதே மாதிரியான காட்சிகள் இருக்கட்டும் சொற்பொழிவு இருக்கட்டும், ஆனால் காட்சியைப் பார்க்கும் ரூபத்தில் இருக்கட்டும், குறைவாக பேசட்டு மூன்று நிமிட நேரத்தை விட அதிகமாகப் பேச வேண்டாம், முன்பாகவே தயார் செய்திருக்க வேண்டும். மேலும் இரண்டாவது நாள் இதே ரூபத்தில் பலவிதமான துறைகளைச் சேர்ந்தவர்களுக்கான நிகழ்ச்சி இருக்கட்டும். யாராவது ஒருவர் டாக்டர் இருக்கட்டும், ஒரு வியாபார துறையைச் சார்ந்தவர் இருக்கட்டும், ஒருவர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணி செய்பவராக இருக்கட்டும்... அம்மாதிரி பலவிதமான துறைகளைச் சேர்ந்தவர்கள் 3 நிமிடங்கள் பேசட்டும். அதிகாரிக்குரிய வேலையைச் செய்துக் கொண்டே எந்த முக்கிய பொன்னான வார்த்தைகளின் தாரணையின் மூலம் செய்யும் காரியத்தில் வெற்றி அடைந்தவராக இருக்கட்டும். அவருடைய வெற்றியின் முக்கியமான விசயங்களை பொன்னான வார்த்தைகளின் ரூபத்தில் கூறட்டும். சொற் பொழிவாகத்தான் இருக்கும், ஆனால் சொல்லும் முறை கொஞ்சம் வேறு முறை இருப்பதினால் இந்த ஈஸ்வரிய ஞானம் எந்தளவு விசாலமானது, மேலும் ஒவ்வொரு துறைக்காக என்ன விசேஷம் இருக்கிறது என்பதை மூன்று மூன்று நிமிடங்களில் அனுபவம், தன்னுடைய அனுபவம் என்ற முறையில் சொல்ல வேண்டாம், ஆனால் அநேகர்கள் அனுபவம் செய்து விடட்டும். சூழ்நிலை அந்த மாதிரி அமைதியாக இருக்கட்டும். அதனால் கேட்பவர்களிலும் இடையில் பேசுவதற்கும் குழப்பம் செய்வதற்கும் தைரியமே இருக்க வேண்டாம். ஒவ்வொரு பிராமணனும் எவ்வளவு நேரம் நிகழ்ச்சி நடக்கிறதோ அவ்வளவு நேரம் எப்படி டிராப்பிக் கண்டோரல் பாடல் ஒலிக்கும் போது அனைவருமே ஒன்றாகச் சேர்ந்து அமைதியின் சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் அதேபோல் இந்த தடவை, இந்த வாயுமண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவதற்காக வாயினால் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டாம். ஆனால் அமைதியின் சொற்பொழிவு செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை வைத்துக் கொள்ள வேண்டும், நானும் ஒரு பேச்சாளன், கட்டுப்பட்டிருக்கிறேன். அமைதியின் பாஷையும் குறைந்தது அல்ல. இந்த பிராமணர்களின் சூழ்நிலை மற்றவர்களையும் அதே அனுபவத்தில் கொண்டு வரும். எந்தளவு முடியுமோ மற்ற காரிய நடவடிக்கைகளை முடித்துவிட்டு சபை நடக்கும் நேரத்தில் அனைத்து பிராமணர்களுக்கும் வாயுமண்டலத்தை உருவாக்குவதற்கான சகயோகம் கண்டிப்பாக கொடுக்கக் வேண்டும். ஒருவேளை யாருக்காவது அந்தமாதிரி முக்கியமான வேலை இருக்கிறது என்றால் அவர் முன்னுக்கு அமர வேண்டாம். முன்னால் குழப்பம் ஏற்படக்கூடாது. உதாரணமாக மூன்று மணி நேரம் பட்டி இருக்கிறது என்றால் அந்த நேரம் சொற்பொழிவு நன்றாக இருந்தது என்று சொல்ல மாட்டோம். ஆனால் நல்ல உணர்வு வந்தது என்று தான் கூறுவோம். சொற்பொழிவின் கூடவே அனுபவத்தின் உணர்வும் வரவேண்டும் இல்லையா! பிராணமணர்கள் யாரெல்லாம் வருகிறார்களோ அவர் நானும் பட்டியில் வர வேண்டும் என்று புரிந்து வரவேண்டும். மாநாட்டை பார்ப்பதற்காக வரவேண்டும் ஆனால் சகயோகி ஆகி வர வேண்டும். இதே விதமாக வாயுமண்டலத்தை அந்த மாதிரி சக்திசாலியானதாக ஆக்குங்கள். அதன் மூலம் எப்படிப்பட்ட குழப்பத்தில் இருக்கும் ஆத்மாக்களும் கொஞ்ச நேரத்திற்காவது அமைதி மற்றும் சக்தியின் அனுபவத்தை செய்து செல்லட்டும். இது 3000 பேர்கள் அமர்ந்திருக்கும் சபை என்று சொல்லாமல் பரிஸ்தாக்களின் சபை என்று அனுபவம் ஆகட்டும். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் நேரத்தில் சிரித்துக்கொள்ளுங்கள், கலகலப்பாக இருந்துக்கொள்ளுங்கள், ஆனால் மாநாட்டின் நேரத்தில் சக்தி சாலியான சூழ்நிலை இருக்கட்டும், அதனால் வரக்கூடிய மற்றவர்களும் அதேபோன்று தான் பேசுவார்கள். எப்படி வாயுமண்டலம் இருக்குமோ, அதே மாதிரி பேசக் கூடிய மற்றவர்களும் அதே வாயுமண்டலத்தில் வந்துவிடுவார்கள். எனவே கொஞ்ச நேரத்தில் அதிகமான பொக்கிஷங்களைக் கொடுப்பதற்கான நிகழ்ச்சியை உருவாக்குங்கள். அது சிறியதாக மற்றும் இனியதாக இருக்கட்டும். ஒருவேளை நம்முடைய பிராமணர்கள் (பிரம்மா குமார் குமாரிகள்) மெதுவாக பேசினார் என்றால் வெளியில் இருந்து வந்த மற்றவர்களும் மெதுவாகப் பேசுவார்கள் - நல்லது இப்போது என்ன செய்வீர்கள்? தன்னை விசேஷ நட்சத்திரம் என்று பிரத்யட்சம் செய்வீர்கள், அப்படியா? இல்லை, இந்த பொன்விழா ஆண்டை தன்னை சம்பன்னம் மற்றும் சம்பூர்ணம் ஆக்குவதற்கான வருடமாகக் கொண்டாடுங்கள் நீங்கள் குழப்பத்தில் வராதீர்கள், மற்றவர்களையும் குழப்பத்தில் கொண்டு வராதீர்கள். குழப்பம் செய்யும் இயற்கையே மிகவும் அதிகம். இந்த இயற்கை தன்னுடைய காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறது, நீங்கள் உங்களுடைய காரியத்தை செய்யுங்கள். நல்லது.

 

எப்பொழுதும் புனித நட்சத்திரம் ஆகி, உலகை சுகம் சாந்தி நிறைந்ததாக ஆக்கக்கூடிய, மாஸ்டர் பாரஸ்நாத் ஆகி, பொன்னான உலகத்தை உருவாக்கக்கூடிய, அனைவரையும் பொன்னாக ஆக்கக்கூடிய, எப்போதும் அனுபவங்களின் கடலின் ஆழத்தில், அனுபவங்களின் இரத்தினத்தினால் தன்னை நிரப்பக்கூடிய, சக்திசாலியான லைட் ஆகி அறியாமை என்ற திரைச் சீலையை அகற்றக்கூடிய, அந்த மாதிரி தந்தையை பிரத்யட்சம் செய்யக்கூடிய விசேஷ நட்சத்திரங்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

டீச்சர்களுடன் சந்திப்பு:

புது உலகை உருவாக்குவதற்கான காண்ட்ராக்ட் (ஒப்பந்தம்) எடுத்திருக்கிறீர்கள் தான் இல்லையா? அப்டியானால் புது உலகை உருவாக்குவதற்காக எப்பொழுதுமே புதிய ஊக்கம் புதிய உற்சாகம் இருக்கிறதா? அல்லது விசேஷமான நேரத்தில் மட்டும் ஊக்கம் வருகிறதா? சில நேரம் இருக்கும் ஊக்கம், உற்சாகத்தினால் புது உலகம் ஸ்தாபனை ஆவதில்லை. எப்பொழுதுமே ஊக்கம் உற்சாகத்தில் இருப்பவர்கள் தான் புது உலகை உருவாக்குவதற்கு பொறுப்பாளர் ஆகிறார்கள். எந்தளவு புது உலகத்தில் அருகாமையில் வந்து கொண்டேயிருப்பீர்களோ, அந்த அளவே புதிய உலகத்தின் விசேஷ பொருட்களின் விஸ்தாரமும் ஆகிக் கொண்டேயிருக்கும். புதிய உலகத்தில் வருபவர்களும் நீங்கள் என்றால் அதை உருவாக்குபவர்களும் நீங்களே தான். உருவாக்குவதில் சக்திகளும் ஈடுபடுத்தப்படுகிறது, நேரமும் எடுக்கிறது, யார் சக்திசாலியான ஆத்மாக்களாக இருப்பார்களோ அவர்கள் எப்போதும் தடைகளை அகற்றிவிட்டு முன்னேறிச் சென்று கொணடே இருப்பார்கள். அம்மாதிரி நீங்கள் புதிய உலகத்தின் அஸ்திவாரமாக இருக்கிறீர்கள். ஒருவேளை அஸ்திவாரம் உறுதியற்றதாக இருக்கிறது என்றால் அதன் மேல் உள்ள கட்டிடத்திற்கு என்னவாகும். எனவே புது உலகை உருவாக்குவதற்கான கடமை உள்ளவர்கள் யாராக இருக்கிறார்களோ அவர்கள் கடுமையாக உழைத்து அஸ்திவாரத்தை உறுதியானதாக ஆக்க வேண்டும். 21 பிறவிகளுக்கு அந்த கட்டிடம் உறுதியாக இருக்கும் அளவிற்கு இப்போது அஸ்திவாரத்தை உறுதியாக ஆக்குங்கள். நீங்கள் உங்களுடைய 21 பிறவிகளுக்கான கட்டிடத்தை தயார் செய்திருக்கிறீர்கள் தான் இல்லையா? நல்லது.

 

நான் தந்தையின் இதய சிம்மாசனதாரி ஆத்மா என்ற அனுபவம் செய்கிறீர்களா? இந்த நேரம் இதய சிம்மாசனதாரியாக இருப்பவர் பிறகு உலக இராஜ்யத்தின் சிம்மாசனதாரியாக ஆகிறார். யாருடைய இதயத்தில் ஒரு தந்தையின் நினைவு நிரம்பியிருக்கிறதோ அவர் தான் சிம்மாசனதாரியாக ஆகிறார். எப்படி தந்தையின் இதயத்தில் எப்பொழுதும் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். அதே போல் தந்தையின் நினைவு எப்பொழுதும் மற்றும் இயல்பாகவே இருக்கட்டும். தந்தையைத் வேறு என்ன தான் இருக்கிறது. எனவே நாம் சிம்மாசனதாரி என்ற இந்த போதையில் இருங்கள். குஷியி இருங்கள்.

 

விடைபெறும் நேரத்தில்: வியாழக்கிழமை (குருவார்) காலை 6 மணிக்கு: நாலாபுறங்களிலுமுள்ள அன்பான சகயோகி குழந்தைகள் மீது எப்போதும் மரத்தின் தலைவனின் பிரகஸ்பதி, அதாவது குருவின் திசையோ இருக்கவே இருக்கிறது. மேலும் இதே பிரகஸ்பதியின் திசையின் மூலம் சிரேஷ்டமாக ஆக்கும் சேவையில் முன்னேறிச் சென்று கொண்டேயிருக்கிறீர்கள். சேவை மற்றும் நினைவு இரண்டிலும் விசேஷமாக வெற்றியை அடைந்துக் கொண்டேயிருக்கிறீர்கள். மேலும் அடைந்து கொண்டிடயிருப்பீர்கள். குழந்தைகளைப் பொருத்தவரை சங்கமயுகம் தான் பிரகஸ்பதியின் அதாவது குருதிசையின் வேளையாகும். ஒவ்வொரு நேரமும் சங்கம யுகத்தின் பிரகஸ்பதி அதாவது பாக்கிவான். எனவே பாக்கியவானாக இருக்கிறீர்கள், பகவானுடையவர்களாக இருக்கிறீர்கள். பாக்கியத்தை உருவாக்கு பவர்களும் நீங்கள். நீங்கள் பாக்கியம் நிறைந்த உலகத்தின் அதிகாரிகள். அம்மாதிரியான நிரந்தர பாக்கியவான் குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம்.

 

வரதானம்:

ஈஸ்வரிய மரியாதைகளின் ஆதாரத்தில் உலகின் எதிரில் உதாரணமாக ஆகக்கூடிய சகஜயோகி ஆகுக!

 

உலகின் எதிரில் உதாரணமாக ஆவதற்காக அமிர்தவேளையிலிருந்து இரவு வரை என்னென்ன ஈஸ்வரிய மரியாதைகள் இருக்கின்றனவோ அதன்படியே நடந்து கொண்டேயிருங்கள். விசேஷமாக அமிர்த வேளையின் மகத்துவத்தை தெரிந்து அந்த நேரம் சக்திசாலியான நிலையை உருவாக்கினீர்கள் என்றால் முழு நாளின் வாழ்க்கை மகான் ஆகிவிடும். எப்பொழுது அமிர்தவேளையில் விசேஷமாக தந்தையிடமிருந்து சக்தியை நிரப்பிவிட்டீர்கள் என்றால் சக்தி சொரூபமாகி நடந்து கொள்வதினால் எந்த ஒரு காரியத்திலும் கடினம் அனுபவம் ஆகாது, மேலும் மரியாதைப் பூர்வமான வாழ்க்கையை வாழ்வதினால் சகஜயோகின் நிலையும் இயல்பாக உருவாகிவிடும். பிறகு உலகம் உங்களுடைய வாழக்கையைப் பார்த்து தங்களுடைய வாழ்க்கையை உருவாக்குவார்கள்.

 

சுலோகன்:

தன்னுடைய நடத்தை மற்றும் முகம் மூலம் தூய்மையின் சிரேஷ்ட தன்மையின் அனுபவத்தை செய்வியுங்கள்.

 

ஓம்சாந்தி