ஓம் சாந்தி.
மணமகள்களுக்கு யார் புரிய வைத்தார்? மணமகன் மணமகள்களுக்காக
வந்தார் என்று கூறுகிறார்கள். எத்தனை மணமகள்கள் இருக்கிறார்கள்?
ஒரு மணமகனுக்கு இத்தனை மணமகள்கள். அதிசயம் ஆகும் அல்லவா?
மனிதர்களோ கிருஷ்ணருக்கு 16,108 மணமகள்கள் இருந்தார்கள் என்று
கூறுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. எனக்கோ கோடிக்கணக்கான
மணமகள்கள் இருக்கிறார்கள் என்று சிவபாபா கூறுகிறார். அனைத்து
மணமகள்களை நான் என்னுடன் (ஸ்வீட் ஹோம்) இனிமையான இல்லத்திற்கு
அழைத்துச் செல்வேன். நம்மை மீண்டும் பாபா அழைத்துச் செல்ல
வந்துள்ளார் என்பதை மணமகள்களும் புரிந்துள்ளார்கள். ஜீவ ஆத்மா
தான் மணமகள் ஆவார். நமக்கு ஸ்ரீமத் கொடுத்து அலங்காரம்
செய்விக்க மணமகன் வந்துள்ளார் என்பது உள்ளத்தில் உள்ளது. வழியோ
ஒவ்வொருவருக்கும் கொடுக்கிறார்கள். கணவன் மனைவிக்கு, தந்தை
குழந்தைகளுக்கு மற்றும் சாதுக்கள் தங்களது சீடர்களுக்கு வழி
கூறுகிறார்கள். ஆனால் இவருடைய வழியோ எல்லாவற்றையும் விட
தனிப்பட்டதாகும். எனவே இதற்கு ஸ்ரீமத் என்று கூறப்படுகிறது.
மற்றது அனைத்தும் தனி வழியாகும். அவர்கள் எல்லோருமே தங்களது
சரீர நிர்வாகத்திற்காக ஆலோசனை கொடுக்கிறார்கள். சாதுக்கள்
சந்நியாசிகள் அனைவருக்குமே சரீர நிர்வாகத்திற்கான சிந்தனை
ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒருவருக்கொருவர் செல்வந்தராக ஆவதற்கான
வழி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சாதுக்கள் மற்றும்
குருக்கள் கூறும் வழி எல்லோரையும் விட நல்லதாகக் கருதப்படுகிறது.
ஆனால் அவர்கள் கூட தங்களது வயிற்றிற்காக எவ்வளவு செல்வத்தை
ஒன்று சேர்க்கிறார்கள்! எனக்கோ உடல் கிடையாது. நான் எனது
வயிற்றிற்காக எதுவும் செய்வதில்லை. உங்களுக்கும் கூட நாம்
மகாராஜா மகாராணி ஆகிடுவோம் என்ற தங்களது வயிற்றிற்கான வேலை தான்
இருக்கிறது. எல்லோருக்குமே வயிற்றினுடைய சிந்தனை உள்ளது. பிறகு
ஒருவர் சோள ரொட்டி சாப்பிடுகிறார். மற்றொருவர் அசோகா ஹோட்டலில்
சாப்பிடுகிறார். சாதுக்கள் பணத்தை ஒன்று சேர்த்து பெரிய கோவில்
ஆகியவை கட்டுகிறார்கள். சிவபாபா சரீர நிர்வாகத்தின் பொருட்டு
எதுவுமே செய்வது இல்லை. உங்களை சதா சுகமுடையவர்களாக
ஆக்குவதற்காக உங்களுக்கு எல்லாமே கொடுத்து விடுகிறார். நீங்கள்
(எவர் ஹெல்தி வெல்தி) சதா ஆரோக்கியம், செல்வமுடையவர்களாக
ஆகிறீர்கள். நானோ எவர்ஹெல்தி ஆவதற்கான முயற்சி (புருஷார்த்தம்)
செய்வதில்லை. நான் இருப்பதே அசரீரியாக. குழந்தைகளாகிய உங்களை
சதா சுகமுடையவர்களாக ஆக்குவதற்குத் தான் நான் வருகிறேன்.
சிவபாபாவோ நிராகாரமானவர் ஆவார். மற்ற அனைவருக்கும் வயிற்றை
பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். துவாபரயுகத்தில்
பெரிய பெரிய சந்நியாசி, தத்துவஞானி மற்றும் பிரம்ம ஞானிகள்
இருந்தார்கள். நினைவில் இருக்கும் பொழுது வீட்டில் அமர்ந்தபடியே
எல்லாமே கிடைத்துக் கொண்டிருந்தது. வயிறோ எல்லோருக்கும்
இருக்கிறது. அனைவருக்கும் உணவு தேவை. ஆனால் யோகத்தில்
இருக்கிறார்கள். எனவே அவர்கள் துன்பப்பட வேண்டி இருப்பதில்லை.
இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நீங்கள் எப்பொழுதும்
சுக முடையவர் களாக எப்படி இருக்க முடியும் என்ற வழி முறையைக்
கூறுகிறார். பாபா தனது வழியைக் கூறி உலகத்திற்கு அதிபதியாக
ஆக்குகிறார். நீங்கள் சிரஞ் சீவியாக இருங்கள். அமரர்களாக
இருங்கள். எல்லோரையும் விட நல்ல வழி அவருடையது ஆகும். மனிதர்களோ
நிறைய வழிகளைக் கூறுகிறார்கள். ஒரு சிலர் தேர்வுகள் எழுதி
தேர்ச்சி பெற்று வழக்கறிஞர் ஆகி விடுகிறார்கள். ஆனால் அவை
அனைத்தும் அல்ப காலத்திற்கானது ஆகும். தங்களுடைய மற்றும் தங்கள்
குழந்தை குட்டிகளின் வயிற்றுக்காக புருஷார்த்தம் செய்கிறார்கள்.
இப்பொழுது பாபா ஹே குழந்தைகளே, ஸ்ரீமத் படி நடந்து இந்த
ஆன்மீகப் படிப்பை படியுங்கள் என்று உங்களுக்கு ஸ்ரீமத்
கொடுக்கிறார். அதன் மூலம் மனிதர்கள் உலகிற்கு அதிபதி ஆகி
விடுவார்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்.
அப்பொழுது தந்தையின் நினைவில் இருப்பதால் எவர் ஹெல்தி வெல்தி
ஆகி விடுவார்கள். அவர் அவினாஷி (சர்ஜன்) மருத்துவர் ஆவார்.
தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் கூட ஆன்மீக மருத்துவர்
ஆவீர்கள். இதில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. ஆத்மாக்களுக்கு
வாய் மூலமாக ஸ்ரீமத் மட்டும் அளிக்கப்படுகிறது. சர்வோத்தம சேவை
குழந்தைகளாகிய நீங்கள் செய்ய வேண்டும். இப்பேர்ப்பட்ட வழி
உங்களுக்கு வேறு யாரும் கொடுக்க முடியாது. இப்பொழுது நாம்
தந்தையின் குழந்தைகள் ஆகி உள்ளோம். எனவே தந்தையின் தொழிலை
செய்ய வேண்டுமா? இல்லை உலகீய தொழில் செய்ய வேண்டுமா?
பாபாவிடமிருந்து நாம் அழியாத ஞான இரத்தினங்களின் பையை
நிரப்புகிறோம். சிவனுக்கு முன்னால் பையை நிரப்புங்கள் என்று
கூறுகிறார்கள். அவர்கள் 10-20 ஆயிரம் கிடைத்து விடும் என்று
நினைக் கிறார்கள். அவ்வாறு கிடைத்து விட்டது என்றால், அவர் மீது
சமர்ப்பணம் ஆகி விடுவார்கள். நிறைய உபசாரம் செய்வார்கள். இவை
அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். இப்பொழுது அனைவருக்கும்
தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். மேலும் எல்லையில்லாத
சரித்திரம் பூகோளத்தைக் கூறுங்கள். மிகவும் சுலபம் ஆகும்.
எல்லைக்குட்பட்ட சரித்திரம் பூகோளத் திலோ நிறைய விஷயங்கள்
உள்ளன. இந்த எல்லையில்லாத சரித்திர பூகோளத்தில் எல்லை யில்லாத
தந்தை எங்கு இருக்கிறார்? எப்படி வருகிறார்? ஆத்மாக்களாகிய
நமக்குள் எப்படி 84 பிறவிகளின் பாகம் நிரம்பி உள்ளது என்பது
கூறப்படுகிறது. அவ்வளவே! அதிக மாக எதையும் புரிய வைக்காதீர்கள்.
அ மற்றும் ஆ அவ்வளவே ! நான் ஆத்மா (அ) தந்தையை நினைவு செய்து
உலகிற்கு அதிபதி (ஆஸ்தி) ஆகி விடுவேன். இப்பொழுது கற்க்க
வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும். அல்ஃப் என்றால் அல்லா. பே
என்றால் அரசாட்சி. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். இந்த தொழில்
செய்யலாமா, இல்லை உலகீய தொழில் செய்து 200-400 ரூபாய்
சம்பாதிக்கலாமா? யாராவது புத்திசாலி பெண் குழந்தை இருக்கிறார்
என்றால், அவரது நண்பர்கள் உறவினர்களுக்கு கூட சரீர நிர்வாகம்
ஆகி விடும் வகையில் என்னால் அவர்களுக்கு கொடுக்க முடியும் என்று
பாபா கூறுகிறார். ஆனால் அந்த பெண் குழந்தை மிகவும் நல்லவராக
இருக்க வேண்டும். சேவை செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.
உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். பேச்சு
வார்த்தையில் மிகவும் இனிமையானவராக இருக்க வேண்டும். உண்மையில்
ஒரு குமாரியின் சம்பாத்தியத்தில் தாய் தந்தை சாப்பிட முடியாது.
பாபாவினுடையவராகி பிறகும் அந்த உலகீய சேவையில் அதிகமாக கவனம்
கொடுப்பது - இதுவோ அவமரியாதை ஆகி விட்டது. முழு மனித
குலத்தையும் சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குங்கள் என்று தந்தை
கூறுகிறார். குழந்தைகள் பிறகு உலகீய சேவையில் தலையிலடித்துக்
கொள்கிறார்கள்? பள்ளிக் கூடத்தைத் திறப்பதே அரசாங்கத்தின் வேலை
ஆகும். இப்பொழுது பெண் குழந்தைகள் புத்தியைப் பயன்படுத்த
வேண்டும். எந்த சேவை செய்யலாம் - ஈசுவரிய அரசாங்கத்தினுடையதா?
இல்லை அந்த அரசாங்கத்தினுடையதா? எப்படி இந்த பாபா வைர வியாபாரம்
செய்து கொண்டிருந்தார். பிறகு பெரிய பாபா இந்த அழியாத ஞான
ரத்தினங்களின் தொழில் செய்ய வேண்டும் என்று கூறினார். இதன்
மூலமாக நீங்கள் இது போல ஆகி விடுவீர்கள். சதுர்புஜத்தினுடையதும்
சாட்சாத்காரம் செய்வித்து விட்டார். இப்பொழுது அந்த உலக
அரசாட்சி பெற வேண்டுமா? இல்லை இதைச் செய்ய வேண்டுமா?
எல்லாவற்றையும் விட இது நல்ல தொழில் ஆகும். சம்பாத்தியம்
மிகவுமே நன்றாக இருந்தது. ஆனால் பாபா இவருக்குள் பிரவேசம்
செய்து தந்தை மற்றும் ஆஸ்தியை (அல்ஃப், பே) நினைவு செய்யுங்கள்
என்ற வழியைக் கூறினார். எவ்வளவு சுலபமானது. சிறிய குழந்தைகள்
கூட படிக்க முடியும். சிவபாபாவோ ஒவ்வொரு குழந்தையையும் புரிந்து
கொள்ள முடியும். இவரும் கற்றுக் கொள்ள முடியும். இவர் வெளி
முகமாக (பாஹர்யாமி) இருக்கிறார். சிவபாபா அந்தர்யாமி -
அனைத்தும் அறிந்தவர் ஆவார். இந்த பாபா கூட ஒவ்வொரு வருடைய
முகத்தின் மூலம், பேச்சின் மூலம், செயலின் மூலம் எல்லாமே
புரிந்து கொள்ள முடியும். பெண் குழந்தைகளுக்கு ஆன்மீக சேவையின்
வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைக்கிறது. இப்பொழுது நாம் மனிதனை
தேவதையாக ஆக்க வேண்டுமா? இல்லை முட்களை முட்களாகவே ஆக்க
வேண்டுமா? என்று உள்ளத்தில் தோன்ற வேண்டும். யோசியுங்கள், என்ன
செய்ய வேண்டும்? நிராகார பகவான் கூறுகிறார் - தேக உடபட
தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் துண்டித்து விடுங்கள்.
தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்து கொண்டே
இருங்கள். பிரம்மாவின் உடல் மூலமாக தந்தை பிராமணர்களிடம் தான்
உரையாடுகிறார். அந்த பிராமணர்கள் கூட பிராமண தேவி தேவதாய நம:
என்று கூறுகிறார்கள். அவர்கள் குக வம்சாவளி நீங்கள்
வாய்வம்சாவளி ஆவீர்கள். பாபாவிற்கு அவசியம் பிரம்மா குழந்தை
வேண்டும். குமார்கா (பிரகாஷ்மணி தாதிஜி), பாபாவிற்கு எத்தனை
குழந்தைகள்? என்று கூறுங்கள். ஒருவர் 600 கோடி என்று கூறுகிறார்.
மற்றொருவர் ஒரே ஒரு பிரம்மா என்று கூறுகிறார். நீங்கள்
திரிமூர்த்தி என்று கூறுகிறீர்கள் என்றாலும் கூட தொழிலோ தனித்
தனி தானே? விஷ்ணுவின் நாபியி-ருந்து பிரம்மா வெளிப்பட்டார்,
பிரம்மாவின் நாபியி-ருந்து விஷ்ணு - ஆக ஒன்று ஆகி விட்டார்கள்.
விஷ்ணு 84 பிறவிகள் எடுக்கிறார் அல்லது பிரம்மா எடுக்கிறார் -
விஷயமோ ஒன்றே தான். மீதம் இருப்பவர் சங்கரன். அப்படியின்றி
சங்கரனே சிவன் ஆகிறார் என்பதல்ல. இல்லை திரிமூர்த்தி என்று
கூறப்படுகிறது. ஆனால் சரியான குழந்தைகள் இருவர் ஆகிறார்கள். இவை
எல்லாமே ஞானத்தின் விஷயங்கள் ஆகும்.
எனவே பெண் குழந்தைகள் இந்த சேவை செய்வது நல்லதா? அல்லது
மெட்ரிக் ஆகியவை படிப்பது நல்லதா? அங்கோ அல்ப கால சுகம்
கிடைக்கும். சிறிதளவு சம்பளம் கிடைக்கும். இங்கோ நீங்கள்
வருங்கால 21 பிறவிகளுக்கு செல்வந்தர்களாக ஆக முடியும். எனவே
என்ன செய்ய வேண்டும்? கன்னிகையோ பந்தன மற்றவர் ஆவார். அதர்
கன்னி கையை (தாய்மார்கள்) விட குமாரி கன்னிகை வேகமாக செல்ல
முடியும். ஏனெனில் தூய்மையாக இருக்கிறார். மம்மா கூட குமாரியாக
இருந்தார் அல்லவா? பணம் பற்றிய விஷயமே கிடையாது. எவ்வளவு
வேகமாக சென்று விட்டார். எனவே பின்பற்ற வேண்டும். அதிலும்
குறிப்பாக கன்னியர்கள் பின்பற்ற வேண்டும். முட்களை மலராக ஆக்க
வேண்டும். ஈஸ்வரிய படிப்பினுடைய வாய்ப்பை எடுக்கலாமா? இல்லை,
உலகீயப் படிப்பின் வாய்ப்பை எடுப்பதா? கன்னிகைகளுக்கான
கருத்தரங்கு நடத்த வேண்டும். தாய்மார்களுக்கோ கணவர் ஆகியோரின்
நினைவு வரும். சந்நியாசிகளுக்குக் கூட நிறைய நினைவு வந்து
கொண்டே இருக்கும். கன்னியர்களோ படி ஏறக் கூடாது. சகவாசத்தின்
சாயம் நிறைய பதிந்து விடுகிறது. யாராவது பெரிய மனிதரின் மகனைப்
பார்த்தார். மனம் ஈடுபட்டு விட்டது. திருமணம் ஆகி விட்டது.
விளையாட்டு முடிந்து விட்டது. சென்டரிலிருந்து கேட்டு விட்டு
வெளியே போகிறார்கள். பின் விளையாட்டு முடிந்து போய் விடுகிறது.
இது மதுபன் ஆகும். இங்கு இப்பேர்ப்பட்டவர் களும் நிறைய பேர்
வருகிறார்கள். நாங்கள் போய் சென்டர் திறப்போம் என்று
கூறுகிறார்கள். வெளியே சென்ற உடன் காணாமல் போய் விடுகிறார்கள்.
இங்கு ஞான கர்ப்பத்தைத் தரிக்கிறார்கள். வெளியில் சென்ற உடன்
போதையில் மறைந்து போய் விடுகிறது. மாயை நிறைய தடை செய்கிறது.
மாயை கூட கூறுகிறது, ஆஹா ! இவர் பாபாவைக் கூட அடையாளம் கண்டு
கொண்டிருக் கிறார். பிறகும் பாபாவை நினைவு செய்வதில்லை. எனவே
நானும் ஒரு குத்து விடுகிறேன். பாபா, எங்களுக்கு குத்து விட
வேண்டாம் என்று நீங்கள் மாயைக்கு கூறுங்கள் என்று சொல்லா
தீர்கள். யுத்தக் களம் அல்லவா? ஒரு புறம் இருப்பது இராவணனின்
சேனை. மறுபுறம் இருப்பது இராமனின் சேனை. தைரியமுடையவர் ஆகி
இராமரின் பக்கம் செல்ல வேண்டும். அசுர சம்பிரதாயத்தைத் தான்
தெய்வீக சம்பிரதாயமாக ஆக்குவதற்கான தொழிலை செய்ய வேண்டும்.
யாருக்கு நீங்கள் உலகியல் கல்வியை படிப்பிப்பீர்களோ அவர்கள்
படித்து பெரியவர்களாக ஆவதற்குள் விநாசமும் முன்னால் வந்து
விடும். அறிகுறிகளைக் கூட நீங்கள் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். இரண்டு கிருஸ்தவ சகோதர சகோதரர்களும்
தங்களுக்குள் சேர்ந்து விட்டார்கள் என்றால் யுத்தம் ஏற்பட
முடியாது என்பதை பாபா புரிய வைத்துள்ளார். ஆனால் நாடகத்தின்
செயல் அவ்வாறு இல்லை. அவர்களுக்குப் புரிவதே இல்லை. இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் யோக பலத்தினால் இராஜதானி ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறீர்கள். இது சிவசக்தி சேனை ஆகும். நீங்கள்
சிவபாபாவிடமிருந்து பாரதத் தினுடைய பழைமையான ஞானம் மற்றும்
யோகத்தைக் கற்றுக் கொண்டு பாரதத்தை வைரம் போல ஆக்குகிறீர்கள்.
தந்தை கல்பத்திற்குப் பின்னால் தான் வந்து தூய்மை யற்றவர்களை (பதீதர்களை)
பாவனமாக ஆக்குகிறார். நீங்கள் அனைவருமே இராவணனின் சிறையில்
உள்ளீர்கள். சோக வனத்தில் உள்ளீர்கள். எல்லோருமே துக்க
மடைந்துள்ளீர்கள். பிறகு இராமர் வந்து அனைவரையும் விடுவித்து
அசோக வனமான சொர்க்கத்திற்கு அழைத்து செல்கிறார். முட்களை மலராக
மனிதர்களை தேவதையாக ஆக்குங் கள் என்று ஸ்ரீமத் கூறுகிறது.
நீங்கள் மாஸ்டர் துக்க ஹர்த்தா, சுக கர்த்தா (துக்கத்தை நீக்கி
சுகம் அளிப்பவர்) ஆவீர்கள். இதே தொழிலைச் செய்ய வேண்டும்.
ஸ்ரீமத் படி நடப்பதால் தான் நீங்கள் சிறந்தவர்களாக ஆகிறீர்கள்.
தந்தையோ ஆலோசனை தருகிறார். இப்பொழுது விண்ணப்பம் என்னுடையது.
விருப்பம் உங்களுடையது என்று கூறுகிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. (சர்விசபிள்) சேவை செய்யக் கூடியவர் ஆக வேண்டும்
என்றால் உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். வாயால்
மிகவும் இனிமையான வார்த்தைகளையே பேச வேண்டும். தேக சகிதம்
தேகத்தின் அனைத்து சம்பந்தங்களிலிருந்தும் புத்தி யோகத்தை
அகற்ற வேண்டும். சகவாசதோஷத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்
கொள்ள வேண்டும்.
2. தந்தைக்குச் சமானமாக மாஸ்டர் துக்க ஹர்த்தா சுக கர்த்தா
ஆக வேண்டும். ஆன்மீக சேவை செய்து உண்மையான சம்பாத்தியம் செய்ய
வேண்டும். ஆன்மீகத் தந்தையின் வழிப் படி ஆன்மீக சமூக ஊழியர் ஆக
வேண்டும்.