10.07.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இந்தப் படிப்பின் மூலம் சாந்திதாமத்தின் வழியாக தன்னுடைய சுக தாமத்திற்குச் செல்கிறீர்கள், இதுவே உங்களின் லட்சியமும் குறிக்கோளும் ஆகும், இதை ஒரு போதும் மறக்கக் கூடாது.

 

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் சாட்சியாகி இந்த சமயத்தில் நாடகத்தின் எந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

 

பதில்:

இந்த சமயத்தில் நாடகத்தில் முழுமையாக துக்கத்தின் காட்சி நடக்கிறது. ஒருவேளை யாருக்காவது சுகம் இருக்கிறது என்றாலும் அது அல்ப காலத்திற்காக, காகத்தின் எச்சத்திற்குச் சமமானதாக இருக்கும். மற்றபடி துக்கமே துக்கம்தான். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறீர்கள். வினாடிக்கு வினாடி எல்லைக்கப்பாற்பட்ட சிருஷ்டிச் சக்கரம் சுற்றியபடி இருக்கிறது, ஒரு நாள் போல மற்றொரு நாள் இருப்பதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். முழு உலகத்தின் நடிப்பு மாறியபடி இருக்கிறது. புதிய காட்சி நடந்தபடி இருக்கிறது.

 

ஓம் சாந்தி.

இரண்டு முறை ஓம் சாந்தி. ஒன்று- தந்தை சுயதர்மத்தில் நிலைத்திருக்கிறார். மற்றொன்று - குழந்தைகளுக்கும் கூட சொல்கிறார் - தனது சுயதர்மத்தில் நிலைத்திருங்கள், மேலும் தந்தையை நினைவு செய்யுங்கள் என்று. சுயதர்மத்தில் நிலைத்திருங்கள் என வேறு யாரும் சொல்ல முடியாது. குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் நிச்சயம் இருக்கிறது. நிச்சயபுத்தி விஜயந்தி (வெற்றி தரும்). அவர்கள்தான் (நிச்சய புத்தியுள்ளவர்கள்தான்) வெற்றியை அடைவார்கள். எதனுடைய வெற்றியை அடைவார்கள்? தந்தையின் ஆஸ்தியினுடைய வெற்றி. சொர்க்கத்திற்குச் செல்வது - இது தந்தையின் ஆஸ்தியை வெற்றி கொள்வதாகும். மற்றபடி பதவிக்கான முயற்சி. சொர்க்கத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இது சீச்சீ (கீழான) உலகமாகும் என குழந்தைகள் அறிவீர்கள். மிகவும் அதிகமான துக்கம் வரவுள்ளது. நாடகத்தின் சக்கரத்தைக் குறித்தும் கூட நீங்கள் அறிவீர்கள். பல முறை பாபா வந்துள்ளார் - தூய்மையாக்கி அனைத்து ஆத்மாக்களையும் கொசுக்களைப் போல் அழைத்துச் செல்ல, பிறகு தாமும் கூட நிர்வாண தாமத்தில் சென்று வசிப்பார். குழந்தைகளும் செல்வார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த குஷி இருக்க வேண்டும் - இந்த படிப்பின் மூலம் நாம் சாந்தி தாமத்தின் வழியாக சுகதாமம் செல்வோம். இது உங்களுடைய லட்சியம் மற்றும் குறிக்கோள். இதை மறக்கக்கூடாது. தினம் தோறும் மகா வாக்கியங்களைக் கேட்கிறீர்கள், நம்மை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்குவதற்காக தந்தை கற்பிக்கிறார் என புரிந்து கொள்கிறீர்கள். தூய்மையடைவதற்கான சகஜமான நினைவினுடைய உபாயத்தைக் கூறுகிறார். இதுவும் கூட புதிய விஷயம் இல்லை. பகவான் இராஜயோகம் கற்றுக் கொடுத்தார் என எழுதப் பட்டுள்ளது. கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டனர். இந்த ஒரு தவறைச் செய்து விட்டனர். குழந்தை களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் ஞானம் கீதையைத் தவிர வேறு ஏதோ சாஸ்திரங்களில் இருக்கும் என்பது கிடையாது. தந்தையின் மகிமையைப் போல வேறு எந்த மனிதருக்கும் கிடையாது என குழந்தைகள் அறிவீர்கள். தந்தை வராவிட்டால் சிருஷ்டி சக்கரம் சுற்றாது. துக்கதாமம் சுக தாமமாக எப்படி ஆகும்? சிருஷ்டி சக்கரம் சுற்றத்தான் வேண்டும். தந்தையும் வரவே வேண்டியுள்ளது. தந்தை அனைவரையும் அழைத்துச் செல்ல வருகிறார், பிறகு சக்கரம் சுற்றுகிறது. தந்தை வராவிட்டால் கலியுகத்திலிருந்து சத்யுகமாக எப்படி ஆகும்? மற்றபடி இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் இல்லை. கீதையில்தான் இராஜயோகம் இருக்கிறது. பகவான் அபு மலையில் வந்துள்ளார் என புரிந்து கொண்டுவிட்டால் சந்திப்பதற்காக ஒரேயடியாக ஓடுவார்கள். பகவானைச் சந்திக்க வேண்டும் என சன்னியாசிகள் கூட விரும்புகின்றனர் அல்லவா. திரும்பிச் செல்வதற்காக பதீத பாவனரை நினைவு செய்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் பல மடங்கு பாக்கியசாலி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே அளவற்ற சுகம் இருக்கும். புதிய உலகில் இருந்த தேவி தேவதா தர்மம் இப்போது இல்லை. தந்தை தெய்வீக இராஜ்யத்தின் ஸ்தாபனை பிரம்மாவின் மூலம்தான் செய்கிறார். இது தெளிவானதாகும். உங்களின் லட்சியம் குறிக்கோளே இதுதானாகும். இதில் சந்தேகப்படக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. போகப்போக இராஜ்யம் கண்டிப்பாக ஸ்தாபனை ஆகிறது என புரிந்து கொள்ளவே போகிறார்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கும். நீங்கள் சொர்க்கத்தில் இருக்கும் போதும் இதன் பெயர் கூட பாரதம் என்றுதான் இருக்கும், பிறகு நீங்கள் நரகத்திற்குச் செல்லும்போது இந்துஸ்தான் என்று ஆகி விடுகிறது. இங்கே எவ்வளவு துக்கமோ துக்கம் உள்ளது. பிறகு இந்த சிருஷ்டி மாறுகிறது, பிறகு சொர்க்கத்தில்தான் சுகதாமம் ஆகிறது. இந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. உலகில் மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. இப்போது காரிருள் நிறைந்த இரவாக உள்ளது என தந்தை தாமே சொல்கிறார். இரவில் மனிதர்கள் அடி வாங்கியபடி இருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். இதையும் சாட்சியாகி புத்தியில் தாரணை செய்ய வேண்டும். ஒவ்வொரு வினாடியாக எல்லைக்கப்பாற்பட்ட சிருஷ்டியின் சக்கரம் சுற்றியபடி இருக்கிறது. ஒரு நாள் போல இன்னொரு நாள் இருக்காது. முழு உலகின் நடிப்பும் மாறியபடிஇருக்கிறது. புதிய காட்சி நடந்தபடி இருக்கிறது. இந்த சமயம் முழுமையாக துக்கத்தின் காட்சிதான் உள்ளது. சுகம் இருந்தாலும் காகத்தின் எச்சத்தின் அளவுதான். மற்றபடி துக்கமே துக்கம்தான். இந்த பிறவியில் ஏதோ பெயரளவுக்கு சுகம் இருக்கலாம், பிறகு அடுத்த பிறவியில் துக்கம். இப்போது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இது இருக்கிறது - இப்போது நாம் நம்முடைய வீட்டிற்குச் செல்கிறோம். இதில் தூய்மையடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஸ்ரீஸ்ரீ (தந்தை) லட்சுமி நாராயணர் ஆவதற்கான ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுத்திருக் கிறார். வக்கீல் பாடம் சொல்பவர் - வக்கீல் ஆகுங்கள் என்று. இப்போது தந்தையும் சொல்கிறார் - ஸ்ரீமத்படி நடந்து என்று இப்படி ஆகுங்கள்.

 

தன்னைத்தானே கேட்க வேண்டும் - எனக்குள் எந்த அவகுணங்களும் இல்லைதானே? இந்த சமயத்தில் தேவதைகள் பாடவும் செய்கின்றனர் - குணமற்ற என்னுள் எந்த குணமும் இல்லை, நீங்கள்தான் இரக்கம் காட்ட வேண்டும் என்று. இரக்கம் என்றால் கருணை. பாபா சொல்கிறார் - குழந்தைகளே நான் யாருக்கும் இரக்கம் காட்டுவதே இல்லை. இரக்கம் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே காட்ட வேண்டும். இந்த நாடகம் உருவாகியுள்ளது. இரக்கமற்ற இராவணன் உங்களை துக்கத்தில் உள்ளாக்குகிறார். இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. இதில் இராவணனுடைய குற்றமும் எதுவுமில்லை. தந்தை வந்து வழி மட்டும் காண்பிக்கிறார். இதுவே அவரது கருணையாகும். மற்றபடி இந்த இராவண இராஜ்யம் மீண்டும் நடக்கும். நாடகம் அனாதியானது. இராவணனின் மீதும் குற்றமில்லை, மனிதர்கள் மீதும் குற்றமில்லை, சக்கரம் சுற்றத்தான் வேண்டும். இராவணனிட மிருந்து விடுவிப்பதற்காக தந்தை யுக்திகள் சொன்னபடி இருக்கிறார். இராவணனின் வழிப்படி நீங்கள் எந்த அளவு பாவாத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். இப்போது பழைய உலகமாக உள்ளது. பிறகு கண்டிப்பாக புதிய உலகம் வரும். சக்கரம் சுற்றும் அல்லவா. சத்யுகம் மீண்டும் வரவேண்டியுள்ளது. இப்போது சங்கமயுகமாக உள்ளது. மகாபாரதச் சண்டையும் கூட இந்த சமயத்தினுடையதேயாகும். வினாச காலத்தில் விபரீத (அன்பற்ற) புத்தி வினாசமடைவார்கள். இது நடக்க வேண்டியுள்ளது. மேலும் நாம் விஜயந்தி (வெற்றியாளர்கள்) சொர்க்கத்தின் எஜமானர் ஆகப்போகிறோம். மற்ற அனைவரும் இருக்கவே போவதில்லை. தூய்மையடையாமல் தேவதையாவது கடினமானது என்பதையும் கூட புரிந்துள்ளீர்கள். இப்போது தந்தையிடமிருந்து ஸ்ரீமத் கிடைக்கிறது உயர்வான தேவதை ஆவதற்காக. இப்படிப்பட்ட வழி பிறகு கிடைப்பது என்பது முடியாத ஒன்று. ஸ்ரீமத் கொடுப்பதற்கான அவருடைய பாகம் (நடிப்பும்) கூட சங்கமத்தில்தான் ஆகும். வேறு யாருக்குள்ளும் இந்த ஞானமே இல்லை. பக்தி என்றால் பக்தி தான். அதனை ஞானம் என்று சொல்வதில்லை. ஆன்மீக ஞானத்தை ஞானக்கடல் ஆத்மா தான் கொடுக்கிறார். அவருடைய மகிமையே ஞானக்கடல், சுகக் கடல் என்பதெல்லாம். தந்தை முயற்சிக்கான யுக்திகளும் கொடுக்கிறார். இப்போது தோல்வியடைந்து விட்டால் கல்ப கல்பத்திற்கும் தோல்வியடைவோம், நிறைய அடி விழும் என்ற இந்த சிந்தனையை புத்தியில் வைக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடக்காததால் அடி கிடைத்து விடுகிறது. பிராமணர்களின் மரம் கண்டிப்பாக வளர்ச்சியடையத்தான் வேண்டும். இப்போது நமக்கு நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறது என நீங்கள் அறிந்துள்ளீர்கள். தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகிற்குச் செல்லக் கூடிய நன்மை நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய உங்களின் புத்தியின் பூட்டு இப்போது திறந்துள்ளது. தந்தை புத்திவான்களுக்கெல்லாம் புத்திவான் அல்லவா! இப்போது நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். பிறகு முன்னால் போகப் போக யார் யாருடைய பூட்டு திறக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்த நாடகமும் நடக்கிறது. பிறகு சத்யுகத்திலிருந்து மீண்டும் நடக்கும். லட்சுமி நாராயணர் அரியாசனத்தில் அமரும்போது யுகம் தொடங்குகிறது. ஒன்றிலிருந்து 1250 ஆம் வருடம் வரை சொர்க்கம் என எழுதவும் செய்கிறீர்கள், எவ்வளவு தெளிவாக உள்ளது. கதை கரு சத்ய நாராயணருடையதாகும். கதை அமர்நாத்தின் உடையதல்லவா?. நீங்கள் இப்போது உண்மையிலும் உண்மையான அமர்நாத்தின் கதையைக் கேட்கிறீர்கள், அது பிற்காலத்தில் பாடப்படுகிறது. பண்டிகை முதலான அனைத்தும் இந்த சமயத்தினுடையதாகும். முதல் நம்பர் பண்டிகை சிவபாபாவின் ஜெயந்தி. கலியுகத்திற்குப் பிறகு உலகை மாற்றுவதற்காக தந்தை வர வேண்டியுள்ளது. படங்களை யாரும் உற்று கவனமாகப்பார்த்தால் எவ்வளவு முழுமையாக கணக்குப்படி உருவாக்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்வார்கள். எவ்வளவு கல்பத்திற்கு முன்பு முயற்சி செய்தார்களோ அவ்வளவு கண்டிப்பாக செய்வார்கள் - என்று அறியும் திறன் உங்களுக்குள் இருக்கிறது. சாட்சியாகி பிறரையும் பார்ப்பார்கள். தனது முயற்சி பற்றியும் அறிவார்கள். நீங்களும் அறிவீர்கள். மாணவர்கள் தம் படிப்பு குறித்து அறிய மாட்டார்களா என்ன? நாம் இந்த பாடத்தில் சரியாக படிக்காமல் பக்குவமற்றிருக்கிறோம் என மனம் கண்டிப்பாக அரிக்கும். பிறகு தோல்வி அடைந்து விடுவார்கள். பரீட்சையின் சமயம் சரியாக படிக்காதவர்களுக்கு இதயம் துடித்தபடி இருக்கும். குழந்தைகளாகிய நீங்களும் கூட காட்சியைப் பார்ப்பீர்கள். ஆனால் தோல்வி அடைந்தே விட்டால் என்னதான் செய்ய முடியும்! பள்ளியில் தேர்ச்சி பெற தவறி விட்டவர்கள் மீது பெற்றோரும் கோபம் கொள்கின்றனர், ஆசிரியரும் கோபித்துக் கொள்வார். நம்முடைய பள்ளியிலிருந்து குறைவானவர்கள் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் அவ்வளவு நன்றாக சொல்லிக் கொடுப்பது இல்லை, ஆகையால் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். செண்டரில் யார்யார் நல்ல ஆசிரியைகள் இருக்கின்றனர், எப்படி கற்பிக்கின்றனர் என பாபாவும் கூட அறிவார். அனைத்தும் தெரிந்து விடும். மேகங்களை அழைத்து வர வேண்டும் என பாபா கூறுகிறார். சிறு குழந்தைகளை அழைத்து வந்தால் அவர்களின் மீது பற்று இருக்கும். தனியாக வர வேண்டும். அப்போது புத்தி நல்ல விதமாக ஈடுபட்டிருக்கும். குழந்தைகளை அங்கும் கூட (வீட்டில்) பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

 

இந்த பழைய உலகம் சுடுகாடாக ஆகவுள்ளது என தந்தை சொல்கிறார். புதிய வீடு கட்டுகிறார்கள் என்றால் புத்தியில் இருக்கிறது அல்லவா - புதிய வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலை முதலானவைகளை செய்தபடி இருக்கின்றனர், ஆனால் புத்தி புதிய வீட்டின் பக்கம் இருக்கும். அமைதியாக அமர்ந்து விடுவதில்லை. அது எல்லைக்குட்பட்ட விசயம், இது எல்லைக்கப்பாற்பட்ட விசயம். அனைத்து காரியங்களையும் செய்தபடி நினைவும் இருக்க வேண்டும் - இப்போது நாம் வீட்டுக்குச் சென்று பிறகு தனது இராஜ்யத்திற்கு வரப்போகிறோம். அப்போது அபாரமான குஷி இருக்கும். தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, உங்கள் குழந்தைகள் முதலானவர்களைப் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். ஆனால் புத்தி அங்கே (பாபாவிடம்) ஈடுபட்டிருக்க வேண்டும். நினைவு செய்யாவிட்டால் பிறகு தூய்மையும் அடைய முடியாது. நினைவின் மூலம் தூய்மை, ஞானத்தின் மூலம் வருமானம். இங்கே அனைவருமே தூய்மையற்றவர்கள். இரு கரைகள் இருக்கின்றன. பாபாவை படகோட்டி என்று சொல்கின்றனர். ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை அந்தக் கரைக்கு (சுக தாமத்திற்கு) அழைத்துச் செல்கிறார் என நீங்கள் அறிவீர்கள். நாம் தந்தையை நினைவு செய்து மிகவும் அருகாமையில் சென்று கொண்டிருக்கிறோம் என ஆத்மா தெரிந்து கொண்டிருக்கிறது. படகோட்டி எனும் பெயர் கூட அர்த்தத்துடன் வைக்கப்பட்டுள்ளது அல்லவா. அனைவரும் இந்த மகிமை செய்கின்றனர் - எனது படகை அக்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள். த்யுகத்தில் இப்படி சொல்வார்களா என்ன? கலியுகத்தில் தான் கூப்பிடுகின்றனர். எதுவும் புரியாதவர்கள் இங்கே வரக்கூடாது என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாபாவின் தரப்பிலிருந்து தடை விதிக்கப்படுகிறது. நிச்சயம் இல்லாவிட்டால் ஒருபோதும் அழைத்து வரக்கூடாது. கொஞ்சமும் புரிந்து கொள்ள மாட்டார்கள். முதலில் 7 நாட்கள் கோர்ஸ் (பாடம்) கற்றுக் கொடுங்கள். சிலருக்கு 2 நாளில் அம்பு தைத்து விடுகிறது (புரிந்து விடுகிறது). நன்றாக தைத்து விட்டது என்றால் பிறகு விட மாட்டார்கள். நாங்கள் மேலும் 7 நாட்கள் கற்போம் என்று சொல்வார்கள். இவர்கள் இந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என நீங்கள் சட்டென புரிந்து கொள்வீர்கள். கூர்மையான புத்தி உள்ளவர்கள் தந்தையை அலட்சியப்படுத்த மாட்டார்கள். நல்லது, ஒரு வேலை போய்விட்டாலும் இன்னென்று கிடைத்து விடும், குழந்தைகள் அன்பான மனம் உள்ளவர்களின் வேலை முதலானவை எதுவும் விடுபடாது. அவர்களே ஆச்சரியப்படுவார்கள். சில குழந்தைகள் தம் கணவர்மார்களின் புத்தியை மாற்றச் சொல்லி கேட்கின்றனர். என்னிடம் சொல்ல வேண்டாம் என்று பாபா கூறுகிறார். நீங்கள் யோக பலத்தில் இருந்து பிறகு அமர்ந்து ஞானத்தைப் புரிய வையுங்கள். பாபா புத்தியை மாற்றுவதில்லை. பிறகு அனைவரும் இந்த வேலையை (வேண்டுதலை) செய்தபடி இருப்பார்கள். எந்த பழக்கம் ஏற்படுகிறதோ அதனைப் பிடித்துக் கொண்டு விடுகின்றனர். எந்த குருவிடமாவது யாருக்காவது காரியம் நடந்தது என்றால், அதைப் பற்றி கேட்டால் போதும் அவர்கள் பின்னால் போய்விடுவார்கள். புதிய ஆத்மா (பரமதாமத்திலிருந்து) வருகிறது என்றால் அதனுடைய மகிமை வெளிப்படுகிறது அல்லவா. பிறகு நிறைய சீடர்கள் உருவாகி விடுவார்கள், எனவே இந்த விஷயங்களையெல்லாம் பார்க்கக் கூடாது. நீங்கள் உங்களைப் பார்க்க வேண்டும் - நான் எந்த அளவு படிக்கிறேன்? இதனை விரிவாக பாபா விளக்குகிறார். மற்றபடி தந்தையை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் சொல்வதானால் அதனை வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும். ஆனால் ஞானக் கடலாக இருப்பவர் எனும்போது ஞானமும் கொடுப்பார் அல்லவா? இது முக்கியமான விஷயம் - மன்மனாபவ. கூடவே சிருஷ்டியின் முதல் இடை கடைசியின் ரகசியத்தையும் புரிய வைக்கிறார். படங்களும் கூட இந்த சமயத்தில் மிக நல்ல நல்லவையாக உருவாகியுள்ளன. அவைகளின் அர்த்தத்தையும் கூட தந்தை புரிய வைக்கிறார். விஷ்ணுவின் நாபியில் பிரம்மாவைக் காட்டியுள்ளனர். திரிமூர்த்திகளும் உள்ளனர், விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா - பிறகு இது என்ன? இது சரியா அல்லது தவறா என தந்தை வந்து புரிய வைக்கிறார். மனதில் தோன்றிய படங்களையும் கூட ஏராளமாக உருவாக்குகின்றனர் அல்லவா? சில சில சாஸ்திரங்களில் சக்கரமும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் சிலர் ஒரு விதமாக (சக்கரத்தின்) ஆயுளைப் பற்றி எழுதியுள்ளனர், சிலர் வேறு விதமாக எழுதியுள்ளனர். பல வழிகள் இருக்கின்றன அல்லவா? சாஸ்திரங்களில் எல்லைக்குட்பட்ட விஷயங்களை எழுதி விட்டனர், முழு உலகிலும் இராவண இராஜ்யம் உள்ளது என தந்தை எல்லைக்கப்பாற்பட்ட விஷயத்தைப் புரிய வைக்கிறார். நாம் எப்படி தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆகிறோம் என்ற இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. பிற்காலத்தில் பிறகு மற்ற மதங்கள் வருகின்றன. பல விதமானவைகளாக உள்ளன. ஒன்று, இன்னொன்றைப்போல இருப்பதில்லை. ஒரே மாதிரி முக லட்சணங்கள் இருவருக்கு இருக்க முடியாது. இது உருவாகி உருவாக்கப் பட்டுள்ள விளையாட்டாகும், அது மீண்டும் மீண்டும் நடந்தபடி இருக்கும். தந்தை குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். நேரம் குறைந்து கொண்டே போகிறது. தனக்குள் சோதித்துக் கொள்ளுங்கள் - நாம் எந்த அளவு குஷியில் இருக்கிறோம். நாம் எந்த விகர்மங்களும் செய்யக் கூடாது. புயல் காற்றுகள் வரவே செய்யும். தந்தை புரிய வைக்கிறார் - குழந்தைகளே, உள் நோக்கு முகமுள்ளவராகி தனது சார்ட்டை வைத்தீர்கள் என்றால் என்னென்ன தவறுகள் ஏற்படுகின்றனவோ அவைகளை உணர முடியும். இது யோக பலத்தின் மூலம் தன்னை மன்னித்துக் கொள்வது போலாகும். தந்தை எதுவும் மன்னிப்பது கிடையாது. நாடகத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே கிடையாது. நீங்கள் உங்களுடைய முயற்சியை செய்ய வேண்டும். பாவங்களுக்கான தண்டனைகளை மனிதர்கள் தாமே அனுபவிக்கின்றனர். மன்னிப்பின் விஷயமே கிடையாது. அனைத்து விஷயங்களிலும் முயற்சி செய்யுங்கள் என்று தந்தை சொல்கிறார். தந்தை வந்து ஆத்மாக்களுக்கு யுக்தியை சொல்கிறார். பழைய இராவணனுடைய தேசத்தில் வாருங்கள், தூய்மையற்ற எங்களை வந்து தூய்மையாக்குங்கள் என தந்தையை அழைக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அசுர சம்பிரதாயத்தவர்கள். நீங்கள் பிராமண சம்பிரதாயத் தவர்கள், தெய்வீக சம்பிரதாயத்தவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். முயற்சியும் கூட குழந்தைகள் வரிசைக் கிரமமாக செய்கின்றனர். பிறகு, இவருடைய அதிர்ஷ்டத்தில் இவ்வளவுதான் உள்ளது என சொல்லிவிடுகின்றனர். தனது நேரத்தை வீணாக்குகின்றனர். பல பிறவிகளுக்கும், கல்ப கல்பத்திற்கும் உயர் பதவியை அடைய முடியாது. தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இப்போது சேமிப்பு ஆகிறது, பிறகு நஷ்டத்தில் சென்று விடுகிறீர்கள். இராவண இராஜ்யத்தில் எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது! நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. உள் நோக்கு முகமுள்ளவராகி தன்னை சோதிக்க வேண்டும், தவறுகளை உணர்ந்து யோக பலத்தின் மூலம் மன்னிக்க வேண்டும். தனது முயற்சியை செய்ய வேண்டும்.

2. தந்தையிடமிருந்து கிடைக்கும் வழியில் முழுமையாக நடந்து தன் மீது தானே இரக்கம் காட்ட வேண்டும். சாட்சியாகி தனது மற்றும் பிறருடைய முயற்சியைப் பார்க்க வேண்டும். ஒருபோதும் தனக்குத் தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

 

வரதானம்:

நிரந்தர நினைவின் மூலம் அழிவற்ற வருமானம் சேமிக்கக் கூடிய அனைத்து பொக்கிஷங்களுக்கும் அதிகாரி ஆகுக.

 

நிரந்தர நினைவின் மூலம் ஒவ்வொரு அடியிலும் வருமானம் சேமித்துக் கொண்டே இருந்தால் சுகம், அமைதி, ஆனந்தம், அன்பு. இது போன்ற அனைத்து பொக்கிஷங்களுக்கும் அதிகாரி என்ற அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். எந்த கஷ்டத்தின் அனுபவமும் ஏற்படாது. சங்கமத்தில் பிராமணர்களுக்கு எந்த கஷ்டமும் ஏற்பட முடியாது. ஒருவேளை ஏதாவது கஷ்டம் வந்தாலும் அது பாபாவின் நினைவு ஏற்படுத்துவதற்காக வருகிறது. ரோஜா மலரின் கூடவே முள்ளும் அதை பாதுகாப்பதற்கான சாதனமாக இருக்கிறது. அதே போன்று இந்த கஷ்டங்கள் மேலும் தந்தையின் நினைவு ஏற்படுத்துவதற்கு நிமித்தமாக ஆகின்றன.

 

சுலோகன்:

பரமாத்மா ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் கர்மம் எனும் விதைக்கு சுப சங்கல்பங்களின் நீர் கிடைத்துக் கொண்டே இருந்தால் விதை சக்தி நிறைந்ததாகி விடும்.

 

ஓம்சாந்தி