10-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! அடிக்கடி ஆத்ம உணர்வுடையவர்களாக மாறுவதற்கு பயிற்சி செய்யுங்கள். நான் ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கிறேன், இப்போது நான் வீட்டிற்குப் போக வேண்டும்.

கேள்வி:
அனைத்தையும் விட முக்கியமான பண்டிகை எது? ஏன்?

பதில்:
அனைத்தையும் விட முக்கியமான பண்டிகை ரக்ஷ் பந்தன் ஆகும். ஏனென்றால் பாபா தூய்மையின் ராக்கி அணிவிக்கும் போது தான் பாரதம் சொர்க்கமாகிறது. ரக்ஷா பந்தன் அன்று குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் இந்த பண்டிகையை கொண்டாடுதல் எப்போதிலிருந்து ஆரம்பமாகியது, மேலும் ஏன்? என புரிய வைக்கலாம். சத்யுகத்தில் இந்த பண்டிகையின் அவசியம் இல்லை. ஆனால் இந்த ரக்ஷ் பந்தன் பரம்பரையாக வந்துக் கொண்டிருக்கிறது என அவர்கள் கூறி விடுகிறார்கள்.

பாடல்:
ஜெய ஜெய அம்பா மா......

ஓம் சாந்தி.
இது பக்தி மார்க்கத்தின் பாடல் ஆகும் பக்தி மார்க்கத்தில் பல விதமாகப் பாடப் பட்டிருக்கிறது. நிராகார், சூட்சும, ஸ்தூலம் மூன்றிற்கும் பாடப்பட்டிருக்கிறது. இப்போது பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நாம் ஆத்மா என்பதை குழந்தைகள் புரிந்துக் கொண்டனர். நமக்கு புரிய வைக்கக் கூடியவர். பரம்பிதா பரமாத்மா ஆவார். அனைத்து மனிதர்களுக்கும் சத்கதி அளிக்கக் கூடியவர். ஒருவரே. பிறகு அவருடன் யார் சேவை செய்கிறார்களோ அவர்களுடைய மகிமையையும் பாடுகிறார்கள். என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கூறுகின்றார். இப்போது பரம்பிதா பரமாத்மா நமக்கு நேரடியாக ஞானத்தை அளிக்கிறார் என ஆத்மா புரிந்துக் கொள்கிறது. அந்த தந்தையின் தூய்மையான நினைவிருக்க வேண்டும். வேறு யாருடைய பெயர், ரூபமும் நினைவில் வரக் கூடாது. அனைவரும் ஆத்மாக்கள். மற்றபடி உடல் கிடைத்திருப்பதால் உடலின் பெயர் மாறிக் கொண்டிருக்கிறது. ஆத்மாவிற்கு பெயர் கிடையாது. சரீரத்தின் மீது தான் பெயர் வைக்கப்படுகிறது. நான் கூட ஆத்மா என பாபா கூறுகின்றார். ஆனால் பரம் ஆத்மா அதாவது பரமாத்மா. எனக்கு பெயர் இருக்கிறது அல்லவா? நான் ஆத்மாவாக இருக்கிறேன். ஒரு போதும் சரீரத்தை எடுப்பதில்லை. ஆகவே, என்னுடைய பெயர் சிவன் என வைக்கப்பட்டிருக்கிறது. மற்ற அனைவரின் சரீரத்திற்கும் பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. எனக்கு சரீரம் இல்லை. பெயர் வேண்டும் அல்லவா? இல்லை என்றால் நானும் ஆத்மா என்றால் பரமாத்மா யார்? நான் பரமாத்மா, என்னுடைய பெயர் சிவன். எந்த பூஜையானாலும் லிங்கத்திற்கு செய்கிறார்கள். கல்லாகிய லிங்கத்தை பரமாத்மா என கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மொழிக்கு ஏற்ப பெயர். ஆனால் பொருள் ஒன்று தான். உங்களுடைய ஆத்மா எப்படியோ அப்படியே என்னுடையதும். நீங்களும் பிந்து, நானும் பிந்துவாக இருக்கிறேன். பிந்துவாகிய எனது பெயர் சிவன். புரிந்துக் கொள்வதற்குப் பெயர் வேண்டும் அல்லவா? இச்சமயம் பிரம்மா சரஸ்வதி என யார் பெரியவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கும் சத்கதி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் சத்கதி கிடைக்க வேண்டும். அனைத்து ஆத்மாக் களும் பரந்தாமத்தில் இருக்கின்றன. இருப்பினும் பரமாத்மாவை தனியாக வைப்பார்கள் அல்லவா? அனைவருக்கும் அவரவர் பாகம் கிடைத்திருக்கிறது. ருத்ர மாலையின் விதை ரூபம் பாபா அல்லவா? ஓ, காட் பாதர் என அனைவரும் அவரை நினைக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் அப்பாவை நினைக்கிறார்கள். அம்மாவை நினைப்பதில்லை. இங்கே பாரதத்தில் தான் வந்து பதீதர்களை பாவனமாக்குகிறார். தாய் கூட தத்தெடுக்கப்பட்டிருக் கிறார். சரஸ்வதியைக் கூட பரம்பிதா பரமாத்மா பிரம்மா மூலமாக தத்தெடுக்கிறார். மேலும் அவருக்குள் பிரவேசமாகி இருக்கிறார். இந்த தத்தெடுத்தல் வேறு விதமானது. யார் மூலமாவது செய்ய வேண்டும் அல்லவா? இவர் மூலமாக நான் ஞானத்தைக் கூறுகிறேன் என்கிறார். இவர் மூலமாக குழந்தைகளை தத்தெடுக்கிறேன். எனவே, இவர் தாய் என்பது நிரூபணமாகிறது. இல்லற மார்க்கம் அல்லவா? ஆனால் ஆணாக இருக்கிறார். ஆகவே, முக்கியமாக சரஸ்வதியை தாயிடத்தில் வைக்கப்படுகிறது. இது மிகவும் ஆழமான, புரிந்துக் கொள்ள வேண்டிய இரகசியமாகும். பிரஜா பிதா அல்லவா ! பிரஜைகளைப் படைக்கக் கூடியவர். இவர் மூலமாக அவர் படைக்கின்றார். சரஸ்வதி மூலமாகத் தத்தெடுப்பதில்லை. இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பதீத பாவனா! வாருங்கள், என பாடுகிறார்கள். இதை யார் கூறியது. ஆத்மா. ஏனென்றால் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் பதீதமாக உள்ளது. முதலில் தன்னை ஆத்மா என புரிந்துக் கொள்ள வேண்டும். ஆத்மா தான் நான் சரீரத்தை எடுக்கிறேன், விடுகிறேன் என கூறுகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் நிச்சயப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால், புது விஷயம் அல்லவா? வேறு யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் மனிதர்கள், பகவான் கிடையாது. ஆத்மா மற்றும் உடல் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன என யார் வந்தாலும் முதன் முதலில் இதைப் புரிய வையுங்கள். ஆத்மா அழிவற்றதாகும். முதலில் தன்னை ஆத்மா என புரிந்துக் கொள்ளுங்கள், நான் நீதிபதி, இதை யார் கூறியது? ஆத்மா இந்த உடல் மூலமாகக் கூறுகிறது. என்னுடைய உடலின் பெயரும் இருக்கிறது. மேலும் நீதிபதி பதவி என ஆத்மா அறிகிறது. இந்த உடலை விட்டு விட்டால் நீதிபதி பதவி மற்றும் பெயர், ரூபம் அனைத்தும் மாறிப் போகிறது. பதவியும் மாறிவிடும். எனவே முதன் முதலில் ஆத்மா உணர்வுடையவராக வேண்டும். மனிதர்களுக்கு ஆத்ம ஞானம் இல்லை. முதலில் ஆத்ம ஞானத்தை அளித்து பிறகு ஆத்மாவின் தந்தை பரமாத்மா என புரிய வையுங்கள். ஆத்மா துக்கம் அடையும் போது ஓ, கடவுளே! என அழைக்கிறது. அவரே பதீத பாவனர் ஆவார். அனைத்து ஆத்மாக்களும் பதீதமாகி விட்டது. எனவே, நிச்சயமாக பரம்பிதா பரமாத்மா வர வேண்டியிருக்கிறது. பதீத உலகம் மற்றும் பதீத உடலில் தூர தேசத்தில் இருக்கக் கூடிய என்னை அழைக்கிறார்கள். ஏனென்றால், நீங்கள் பதீதமாக இருக்கிறீர்கள். நான் எப்போதும் தூய்மையாக இருக்கிறேன் என பாபாவே கூறுகின்றார். பாரதம் தூய்மையாக இருந்தது. இப்போது பதீதமாகி இருக்கிறது. பதீத பாவனர் பாபா வந்து ஆத்மாக்களிடம் பேசுகின்றார். பிரம்மா உடலில் வந்து புரிய வைக்கின்றார். ஆகவே இவருடைய பெயர் பிரஜா பிதா பிரம்மா இவர் மூலமாகப் பிரஜைகளைப் படைக்கிறார். எப்படிப்பட்டவர்களை? நிச்சயமாக புதிய பிரஜைகளைப் படைப்பார். அபவித்திரமாக இருக்கக்கூடிய ஆத்மாக்களைப் பவித்ரமாக மாற்றுகிறார். எங்களை துக்கத்திலிருந்து விடுவியுங்கள், லிபரேட்(விடுவியுங்கள்) செய்யுங்கள் என ஆத்மா அழைக்கிறது. அனைவரையும் விடுவிக்கிறார். மாயை அனைவரையும் துக்கப்படுத்தியிருக்கிறது. சீதைகள் அழைக்கிறார்கள் அல்லவா? ஒரு சீதை அல்ல ! அனைவரும் இராவணணின் ஜெயிலில் விகாரி, கீழானவர்களாகி இருக்கின்றனர். இருப்பதே இராவண இராஜ்யம். இராமர் நிராகாரராக இருக்கிறார். இராம் இராம் என கூறுகிறார்கள் அல்லவா? ஒருவரைத்தான் ஜெபிக்கிறார்கள். காட் பாதர் சிவன் நிராகாரர் என்பதால், அவருக்கு உடல் வேண்டும் அல்லவா? எனவே, சிவபாபா இவர் மூலமாகப் புரிய வைக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் பதீதமாக இருப்பதால் சரீரமும் பதீதமாக இருக்கிறது. இப்போது நீங்கள் கருப்பாக இருக்கிறீர்கள், பிறகு வெள்ளையாக மாறுகிறீர்கள், பாபா ஞானக் கடல், ஞான மழையைப் பொழிகின்றார். இதனால் நீங்கள் வெள்ளையாகிறீர்கள். பாரதவாசி கள் வெள்ளையாக இருந்தீர்கள். பிறகு காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி, வைசியராகி, சூத்திர வம்சத்தினர் ஆகி, இருக்கிறீர்கள். ஏறும் கலை பாபா செய்கிறார். பிறகு இராவணன் அனைவரையும் இறங்கும் கலையில் கொண்டு வருகின்றான். பாரதத்தில் முதலில் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்போது இல்லை. பரமாத்மா இந்த உடல் மூலமாக குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார். சொத்து அடையக் கூடியவர்களுக்கு மகிழ்ச்சியின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். நிச்சயமாக ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தாங்கள் பாவனமாவதற்காக வந்துள்ளீர்கள். நானும் நிச்சயமாக பாவனமாக மாறுவேன். அப்போது தான் தூய்மையான உலகத்திற்கு அதிபதியாவேன். இவ்வாறு உறுதி மொழி எடுக்க வேண்டும். இதுவே ராக்கி தெய்வீக பந்தனம் ஆகும். குழந்தைகள் தந்தையிடம் உறுதி மொழி எடுக்கிறீர்கள். இவர் லௌகீக தேகத்தை உடைய தந்தை கிடையாது. இவரோ நிராகாரர் ஆவார். இவருக்குள் பிரவேசமாகி இருக்கிறார். நீங்களும் ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என கூறுகிறார். தன்னை ஆத்மா என உணர்ந்து பரம்பிதா பரமாத்மாவாகிய என்னை நினையுங்கள். பாரதத்தில் தான் தூய்மை இருந்தது. எவ்வளவு அமைதி சுகம் இருந்தது. மேலும் வேறு எந்த தர்மத்தினரும் இல்லை. பாபா நமக்கு இவ்வாறு புரிய வைக்கின்றார். நீங்களும் புரிந்துக் கொள்ளுங்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். பாபாவை நினைத்தால் தான் விகர்மங்கள் அழியும். தூய்மையாக மாற்றக் கூடியவர் ஒரேயொரு தந்தை ஆவார். நீங்கள் ஆத்மா, உங்களுடைய சுய தர்மம் அமைதி என பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் சாந்தி தாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். நீங்கள் கர்மயோகி, அமைதியில் நீங்கள் எவ்வளவு காலம் இருப்பீர்கள். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைத்தால் விகர்மம் அழியும். கலியுகத்தில் அனை வரும் பதீதமாக இருக்கிறார்கள். நாம் சங்கமத்தில் தூய்மையாகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். அழுக்கான உலகம் அழிய வேண்டும். இது மகாபாரத போர் ஆகும். இயற்கை சீற்றங்கள் நடக்கிறது. இவைகள் மூலமாக பழைய உலகம் அழியும். புதிய உலகத்தில் தான் தேவதைகள் இராஜ்ஜியம் இருக்கிறது. எனவே, இப்போது நாம் பரம்பிதா பரமாத்மாவின் கட்டளைப்படி நடக்கிறோம். அவருடைய ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. இந்த ஞானம் மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டியதாகும். ஒரு காதில் கேட்டு இன்னொரு காதில் விட்டு விடக் கூடாது என சொல்லுங்கள். இங்கே படிக்க வேண்டும். ஏழு நாட்களின் பட்டி பிரசித்தமானது. ஏழு நாட்கள் கேட்டுப் புரிந்துக் கொள்ளுங்கள். பாபாவையும் தன்னுடைய பிறவியையும் அறிந்துக் கொள்ளுங்கள். நாம் எப்படி அழுக்காக இருக்கிறோம். பிறகு எப்படி தூய்மையாக வேண்டும். ஒரு வேளை புரிந்துக் கொள்ளவில்லை என்றால், வருத்தப்பட வேண்டி இருக்கும். ஏனென்றால் தலை மீது பாவங்களின் சுமை நிறைய இருக்கிறது.

ஒரேயொரு தந்தை தான் மிகவும் அன்பானவர். அவரே நம்மை தூய்மையான உலகத்திற்கு அதிபதி யாக்குகிறார். மற்றவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பதீதமாக மாற்றுகிறார்கள். சத்யுகத்தில் தூய்மையான இல்லறம் இருந்தது. இப்போது அபவித்திரமாகி விட்டது. இதுவே இராவண இராஜ்யம் ஆகும். இப்போது சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்றால் தூய்மை ஆக வேண்டும். அப்போது தான் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கும். நாம் சாந்தி தாமத்தின் வாசிகள், பிறகு சுகதாமத்தில் சென்றோம். இப்போது துக்க தாமத்தில் இருக்கிறோம்? என்பதை நினைவு செய்யுங்கள். மீண்டும் சாந்தி தாமத்திற்குப் போக வேண்டும். ஆகவே, ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். வீட்டில் அமர்ந்த படியே ஒன்று தூய்மை யாகுங்கள், இரண்டாவது, என்னை நினைத்தால் பாவங்கள் அழிந்து போகும் என பாபா கூறுகிறார். நினைக்க வில்லை என்றால், தூய்மையாகவில்லை என்றால் விகர்மம் எப்படி அழியும்? இராவண இராஜ்யத்திலிருந்து எப்படி விடுபடுவீர்கள். இங்கே அனைவரும் சோக வனத்தில் இருக்கிறார்கள். பாரதம் அரை கல்பமாக சோக வனத்திலும் அரை கல்பம் அசோக வனத்திலும் இருக்கிறது. தாங்களும் பதீத உலகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் அதிகாரத்துடன் புரிய வைக்க கூடியவர்கள் என்றால் மரியாதையுடன் பேச வேண்டும். நீங்கள் இறை தந்தையின், வாரிசு நாங்கள், என்கிறீர்கள். ஆனால் தந்தையின் ஞானம் எங்கே இருக்கிறது. லௌகீக தந்தையை அறிகிறீர்கள். ஆனால் பாரலௌகீக தந்தை. இவ்வளவு எல்லையற்ற சுகத்தை அளிக்கிறார். சொர்க்கத்திற்கு அதிபதி ஆக்குகிறார். அவரை நீங்கள் அறியவில்லை. பாரதத்தை யார் சொர்க்கமாக மாற்றினாரோ அவரை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஆகவே, தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அனைவரும் கீழானவர்கள். ஏனென்றால், விகாரத்தினால் பிறக்கிறார்கள். இதை யார் வேண்டுமானாலும் புரிந்துக் கொள்வார்கள். இதில் அவமரியாதையின் விஷயம் இல்லை. இதுவோ புரிய வைக்கப்படுகிறது. ரக்ஷ் பந்தனின் மகத்துவமும் இருக் கிறது. விகாரங்களை வெற்றி அடைந்து என்னையும் சாந்திதாமத்தையும் நினைத்தால் நீங்கள் அங்கே சென்று விடுவீர்கள் என பாபா கூறுகிறார். நாம் சுகதாமத்திற்கு சாந்தி தாமம் வழியாகச் செல்கிறோம் என்பதை புத்தியில் நினைவில் வைக்க வேண்டும். முதலில் ஆத்ம உணர்வுடையவராக மாற வேண்டும். நான் ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கிறேன். மனிதர்கள் நாயாகவும், பூனையாகவும் ஆவதில்லை என்பதையும் பாபா புரிய வைத்திருக்கிறார். மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் எவ்வளவு ஏமாற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சொற்பொழிவாற்றும் போது நீங்கள் பதீதமாக இருக்கிறீர்கள் அல்லவா? அதனால் தான் பதீத பாவனர் தந்தையை நினைக்கிறீர்கள் என புரிய வையுங்கள். அனைத்து சீதைகளும் சோக வனத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சோகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. யார் இராஜ்யத்தை அடைந்தனரோ அவர்களும் நிறைய துக்கம் இருக்கிறது என நினைக்கிறார்கள். எவ்வளவு தலையை உருட்டிக் கொள்கிறார்கள். ஒன்றை அமைதி படுத்தினால் இன்னொன்று எழுகிறது. போர் நடந்துக் கொண்டே இருக்கிறது. அமைதிக்குப் பதிலாக மேலும் அசாந்தி ஏற்படுகிறது. தந்தை வந்து இந்த துக்கம், அசாந்தியை நீக்கி சுக தாமமாக மாற்றுகிறார். பழைய உலகத்தில் துக்கம் இருக்கிறது. புது உலகத்தில் சுகம் இருக்கிறது.

இந்த ராக்கி பந்தனம் பெரிய பண்டிகை யாகும். இந்த பழக்கத்தை யார் ஏற்படுத்தியது என புரிய வைக்க வேண்டும். பதீத பாவனர் பரம்பிதா பரமாத்மா வந்து தூய்மையின் உறுதி மொழி எடுக்க வைக்கிறார். 5000 வருடத்திற்கு முன்பு உறுதி மொழி எடுத்தீர்கள். இப்போது மீண்டும் பரம்பிதா பரமாத்மாவிடம் புத்தி யோகத்தை இணைத்தால் நீங்கள் தூய்மையாகிவிடுவீர்கள். எப்போதிலிருந்து ராக்கி அணிந்து கொண்டு வருகிறீர்கள் என கேளுங்கள். இதுவோ அனாதி முறை என்பார்கள். அட, தூய்மையான உலகத்தில் ராக்கி அணிவிக்க மாட்டார்கள். இங்கேயோ யாரும் தூய்மையாக இல்லை. இப்போது தூய்மையானால் தூய்மையான உலகத்திற்குச் செல்லலாம் என பாபா கட்டளை இடுகிறார். தூய்மை தான் முதன்மையானது. தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது. இப்போது இல்லை. சொர்க்கத்தில் துக்கத்தின் பெயரே இல்லை. நரகத்தில் சுகத்தின் பெயர் இல்லை. கீழானவர்களுக்கு அல்ப காலம் சுகம் கிடைக்கிறது. உயர்ந்தவர்களுக்கு அரை கல்பம் சுகம் கிடைக்கிறது. ராக்கி விழா முடியும். பிறகு போன கல்பத்தை போன்று நடந்தது என்று கூறுகிறீர்கள். இதை அறிகிறீர்கள். நாடகத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளாததால் குழம்பிப் போய் இருக்கிறார்கள். முதன் முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பாபா தான் வந்து விடுவிக்கிறார். ராக்கி பந்தனம் எப்போதிலிருந்து ஆரம்பம் ஆகியது. இதற்கும் கூட மிகப் பெரிய மகத்துவம் இருக்கிறது, வந்து புரிந்துக் கொள்ளுங்கள் என எழுத வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் புரிய வையுங்கள். எங்கு வேண்டுமானாலும் சொற்பொழிவாற்ற இடம் கொடுக்கட்டும். காங்கிரஸ்காரர்கள் கடைகளில் நின்று கொண்டு பேசினார்கள் என்றால் நிறைய பேர் வந்து விடுகிறார்கள். சேவைக்காக முயற்சி செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அதிகாரத்துடன் கூடவே மிகவும் மரியதையுடன் பேச வேண்டும். அனைவரையும் பதீதத்திலிருந்து பாவனமாக மாற்றுவதற்குகான யுக்தியைத் தெரிவிக்க வேண்டும்.

2. ஒருவரின் நினைவில் இருக்க வேண்டும். எந்த தேகதாரியின் பெயர் ரூபத்தையும் நினைக்க கூடாது. தூய்மையாவதற்காக உறுதி மொழி எடுக்க வேண்டும்.

வரதானம்:
எல்லைக்குட்பட்ட ஆசைகளைத் தியாகம் செய்து நல்லவர் ஆவதற்கான விதி மூலம் சர்வ பிராப்திகள் நிறைந்தவர் ஆகுக.

யார் எல்லைக்குட்பட்ட ஆசை வைக்கிறார்களோ, அவர்களின் ஆசைகள் ஒரு போதும் நிறைவேறாது. நல்லவராக ஆகக்கூடியவர்களின் அனைத்து சுப ஆசைகளும் தாமாகவே நிறைவேறி விடும். வள்ளலின் குழந்தைகள் எதையும் கேட்டுப் பெற (யாசிக்க) வேண்டிய தேவை இருக்காது. கேட்பதால் எதுவும் கிடைக்காது. கேட்பது என்றாலே ஆசை உள்ளது என்று பொருள். எல்லையற்ற சேவையின் சங்கல்பம் எல்லைக்குட்பட்ட ஆசையினுடையதாக இல்லாமல் இருக்குமானால் அவசியம் பூர்த்தி யாகும். எனவே எல்லைக்குட்பட்ட ஆசைக்கு பதிலாக நல்லவர் ஆவதற்கான விதியைத் தனதாக்கிக் கொள்வீர்களானால் சர்வ பிராப்திகளால் நிரம்பப் பெற்றவர் ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:
நினைவு மற்றும் சுயநலமற்ற சேவை மூலம் மாயாஜீத் ஆவது தான் வெற்றியாளர் ஆவதாகும்.