10.09.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உங்களுடைய பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக தந்தை வந்திருக்கிறார். எந்தளவு நீங்கள் நினைவில் இருக்கிறீர்களோ அந்தளவு பேட்டரி சார்ஜ் ஆகிக் கொண்டே செல்லும்.

 

கேள்வி:

உங்களுடைய உண்மையான படகிற்கு புயல் ஏன் அடிக்கிறது?

 

பதில்:

ஏனென்றால் இச்சமயம் செயற்கையானவர்கள் நிறைய தோன்றி இருக்கிறார்கள். சிலர் தன்னையே பகவான் என்கிறார்கள். சிலர் ரித்தி சித்தி காண்பிக்கிறார்கள். ஆகவே, மனிதர்கள் உண்மையை பகுத்தாராய முடியவில்லை. உண்மையான படகை அசைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் நம்முடைய உண்மையான படகு ஒரு போதும் மூழ்காது என உங்களுக்குத் தெரியும். இன்று யார் தடைகளை ஏற்படுத்துகிறார்களோ அவர்கள் இங்கே தான் சத்கதிக்கான வழி கிடைக்கிறது என நாளை புரிந்துக் கொள்வார்கள். அனைவருக்காகவும் இந்த ஒரு கடை தான் இருக்கிறது.

 

ஓம் சாந்தி!

ஆன்மீகக் குழந்தைகளுக்கு அல்லது ஆத்மாக்களுக்கு முன்பு (ஒம்சாந்தி). ஏனென்றால் ஆத்மா காது மூலமாகக் கேட்கிறது. ஆத்மாவில் தான் தாரணை ஆகிறது. பாபாவின் ஆத்மாவில் கூட ஞானம் நிரம்பி இருக்கிறது. குழந்தைகள் இந்த பிறவியில் ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். பக்தி மார்க்கத்தில் 63 பிறவிகளில் துவாபர் யுகத்திலிருந்து நீங்கள் தேக உணர்வில் இருக்கிறீர்கள். ஆத்மா என்றால் என்ன என்பது தெரியவில்லை. நிச்சயம் ஆத்மா இருக்கிறது. ஆத்மா தான் உடலில் பிரவேசம் ஆகிறது. ஆத்மாவிற்குத் தான் துக்கம் ஏற்படுகிறது. பதீத ஆத்மா பாவன ஆத்மா என்று கூறப்படுகிறது. பதீத பரமாத்மா என்று ஒரு போதும் கேட்டதில்லை. ஒரு வேளை அனைவருக்குள்ளும் பரமாத்மா இருந்தால் பதீத பரமாத்மா ஆகிவிடுவார். எனவே முக்கியமான விஷயம் ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். ஆத்மா எவ்வளவு சிறியதாக இருக்கிறது, அதில் எப்படி பதிவுகள் நிரம்பி இருக்கிறது என்பது தெரியவில்லை. நீங்கள் புது விஷயங்களைக் கேட்கிறீர்கள். இந்த நினைவு யாத்திரையும் பாபா தான் கற்பிக்கிறார். வேறு யாரும் கற்பிக்க முடியாது. இதில் உழைப்பும் இருக்கிறது. அடிக்கடி தன்னை ஆத்மா என புரிந்துக் கொள்ள வேண்டும். பாருங்கள் இந்த எமர்ஜன்ஸி லைட் வந்திருக்கிறது. இது பேட்டரி மூலமாக எரிகிறது. பிறகு இதை சார்ஜ் செய்கிறார்கள். பாபா எல்லோரையும் விட பெரிய சக்தி வாய்ந்தவர். எவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றன. அனைவரையும் அந்த சக்தியால் நிரப்ப வேண்டும். பாபா சர்வ சக்திவான் ஆவார். ஆத்மாக்களாகிய நாம் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றால் பேட்டரி எப்படி சார்ஜ் ஆகும். முழு கல்பமும் சார்ஜ் குறைந்துக் கொண்டே போகிறது. இப்போது மீண்டும் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது. நம்முடைய பேட்டரியின் சார்ஜ் குறைந்து விட்டது. இப்போது மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள் எப்படி? என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் என பாபா கூறுகின்றார். இது மிகவும் எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். என்னுடன் புத்தியை இணைத்தால் உங்களுடைய ஆத்மாவில் சக்தி நிறைந்து தூய்மையாகி விடும் என பாபா கூறுகின்றார். படிப்பில் தான் வருமானம் இருக்கிறது. நீங்கள் நினைவினால் தூய்மையாகிறீர்கள். ஆயுள் அதிகரிக்கிறது. பேட்டரி சார்ஜ் ஆகிறது. ஒவ்வொருவரும் பாபாவை எவ்வளவு நினைக்கிறோம் என பார்க்க வேண்டும். பாபாவை மறப்பதால் பேட்டரியில் சார்ஜ் காலியாகி விடுகிறது. யாருக்கும் உண்மையான தொடர்பு இல்லை. குழந்தைளாகிய உங்களுடையது தான் உண்மையான தொடர்பு ஆகும். பாபாவை நினைவு செய்யாமல் ஜோதி எப்படி எரியும். ஒரு பாபா மட்டும் தான் ஞானம் அளிக்கிறார்.

 

ஞானம் என்பது பகல், பக்தி என்பது இரவு என உங்களுக்குத் தெரியும். பிறகு இரவின் மீது வைராக்கியம் ஏற்படுகிறது. பிறகு பகல் ஆரம்பம் ஆகிறது. இரவை மறந்து விடுங்கள் என பாபா கூறுகிறார். இப்போது பகலை நினையுங்கள். சொர்க்கம் என்பது பகலாகும். நரகம் இரவாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது சைத்தன்யத்தில் இருக்கிறீர்கள். இந்த உடல் அழியக் கூடியது. மண்ணினால் ஆனது. மண்ணோடு கலந்து விடுகிறது. ஆத்மா அழிவற்றதல்லவா? மற்றபடி பேட்டரியின் சார்ஜ் குறைந்து விட்டது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு புத்திசாலி ஆகிறீர்கள். உங்களுடைய புத்தி வீட்டிற்குப் போகிறது. நாம் அங்கிருந்து வந்தோம். இங்கே சூட்சும வதனத்தைப் பற்றி தெரிந்து விட்டது. அங்கே நான்கு புஜங்களை உடைய விஷ்ணுவைக் காண்பிக்கிறார்கள். இங்கேயோ நான்கு புஜங்கள் இருக்காது. பிரம்மா சரஸ்வதி தான் லஷ்மி நாராயணன் ஆகிறார்கள் என்பது யாருடைய புத்தியிலும் இல்லை. ஆகவே விஷ்ணுவிற்கு நான்கு புஜங்களைக் காண்பிக்கிறார்கள். பாபாவைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. ஆத்மாவில் தான் சம்ஸ்காரம் நிரம்பி இருக்கிறது. ஆத்மா தான் தமோபிரதானத்திலிருந்து மீண்டும் சதோபிரதானம் ஆகிறது. ஓ, பாபா நாங்கள் சக்தியற்றவர்களாகிவிட்டோம். இப்போது நீங்கள் வாருங்கள் எங்களை சார்ஜ் செய்யுங்கள் என ஆத்மாக்கள் தான் தந்தையை அழைக்கிறார்கள். எந்தளவு நினைக்கிறீர்களோ அந்தளவு சக்தி கிடைக்கும் என்று இப்போது பாபா கூறுகின்றார். பாபாவிடம் மிகவும் அன்பிருக்க வேண்டும். பாபா நாங்கள் உங்களுடையவராக இருக்கின்றோம், உங்களுடன் தான் வீட்டிற்குச் செல்வோம். தாய் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்கு அழைத்துப் போகிறார்கள் அல்லவா? இங்கே உங்களுக்கு இரண்டு தந்தையர் உங்களை அலங்காரம் செய்வதற்காகக் கிடைத்திருக்கிறார்கள். அலங்காரம் கூட நன்றாக இருக்க வேண்டும். அதாவது அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக ஆக வேண்டும். எனக்குள் எந்த அவகுணமும் இல்லையே என தன்னையே கேட்டுக் கொள்ளுங்கள். மனதில் ஒரு வேளை புயல் வரலாம். செயல்களில் எதையும் செய்யவில்லையா? யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லையா? துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் பாபா. நாம் அனைவருக்கும் சுகத்தின் வழியைத் தெரிவிக்கின்றோம். பாபா நிறைய யுக்திகளைத் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றார். நீங்கள் படைவீரர்கள். உங்களுடைய பெயர் பிரஜா பிதா பிரம்மா குமார்-குமாரிகள். யார் உள்ளே வந்தாலும் முதலில் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்? யாரிடம் வந்திருக்கிறீர்கள்? என கேளுங்கள். நாங்கள் பி.கே.விடம் வந்திருக்கிறோம் என கூறுவார்கள். சரி, பிரம்மா யார் பிரஜா பிதா பிரம்மாவின் பெயர் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? ஆம், நீங்கள் கூட பிரஜாபிதாவின் குழந்தை தான். நாம் அனைவரும் குழந்தைகள் ஆகிவிட்டோம் அல்லவா! உங்களுடைய தந்தை இருக்கிறார். உங்களுக்கு அவரைப் பற்றி தெரியவில்லை. பிரம்மாவும் நிச்சயம் யாருக்காவது குழந்தையாக இருப்பார் அல்லவா? அவருடைய தந்தையின் உடல் பார்ப்பதற்குத் தெரிவதில்லை. பிரம்மா விஷ்ணு, சங்கர் இந்த மூவருக்கும் மேலே சிவபாபா இருக்கிறார். மூவரையும் படைக்கக் கூடியவர் திரிமூர்த்தி சிவன் என்று கூறப்படுகிறது. மேலே ஒரு சிவபாபா பிறகு மூவர் இருக்கிறார்கள். வம்சம் இருக்கிறது அல்லவா? பிரம்மாவின் தந்தை நிச்சயம் பகவானாகத்தான் இருப்பார். அவர் ஆத்மாக்களின் தந்தை சரி, பிரம்மா எங்கிருந்து வந்தார். நான் இவருக்குள் பிரவசேம் ஆகி இவருடைய பெயரை பிரம்மா என வைக்கிறேன் என பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கும் பெயர் வைத்தார் இவருக்கும் பிரம்மா என்ற பெயர் வைத்தார், இது என்னுடைய தெய்வீக அலௌகீக பிறவி என கூறுகின்றார். குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கிறேன். மற்றபடி இவருக்குள் பிரவேசம் ஆகிறேன். பிறகு உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன் ஆகவே, இவர் பாப்தாதா ஆகிவிட்டார். யாருக்குள் பிரவேசம் செய்தேனோ அவருடைய ஆத்மா இருக்கிறது அல்லவா? அவருக்கு பக்கத்தில் வந்து அமர்கிறேன். இரண்டு ஆத்மாக்களின் நடிப்பு இங்கு நிறைய நடக்கிறது. ஆத்மாவை அழைக்கிறார்கள் என்றால் ஆத்மா எங்கே வந்து அமரும்? நிச்சயம் பிராமணனின் பக்கத்தில் வந்து அமரும். இங்கேயும் இரண்டு ஆத்மாக்கள் பாபா மற்றும் தாதா. இவருக்கு அவருடைய பிறவிகளைப் பற்றித் தெரியாது என பாபா கூறுகின்றார். நீங்கள் கூட உங்களுடைய பிறவிகளைப் பற்றித் தெரியவில்லை என உங்களுக்கும் கூறுகின்றார். இப்போது கல்ப கல்பமாக 84-ன் சக்கரத்தில் சுழன்று விட்டு மீண்டும் போகிறோம் என்ற நினைவு வந்திருக்கிறது. இது சங்கம யுகம் ஆகும். இப்போது டிரான்ஸ்பர் ஆகின்றோம். யோகத்தினால் நீங்கள் சதோ பிரதானம் ஆகிவிடுவீர்கள். பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் பிறகு சத்யுகத்தில் வந்துவிடுவீர்கள். புத்தியில் முழு சக்கரமும் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. விரிவாகப் போக முடியாது. மரத்திற்குக் கூட ஆயுள் இருக்கிறது. பிறகு காய்ந்து போகிறது. இங்கே கூட அனைத்து மனிதர்களும் காய்ந்து போனவர்கள் போல ஆகிவிட்டனர். அனைவரும் ஒருவருக்கொருவர் துக்கம் அளித்துக் கொண்டே இருக்கின்றனர். இப்போது அனைவரின் உடலும் அழிந்து போகும். மீதமுள்ள ஆத்மாக்கள் சென்று விடுவார்கள். இந்த ஞானத்தை பாபாவைத் தவிர வேறு யாரும் அளிக்க முடியாது. பாபா தான் உலகத்தின் இராஜ்ய பதவியைக் கொடுக்கின்றார். அவரை எவ்வளவு நினைக்க வேண்டும். நினைவில் இல்லாததால் மாயை அடித்து விடுகிறது. எல்லாவற்றையும் விட கடுமையான அடி விகாரத்தினுடையதாகும். யுத்த மைதானத்தில் பிராமணர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா! எனவே உங்களுக்குத் தான் புயல் வரும். ஆனால் எந்த விகர்மமும் செய்யக் கூடாது. விகர்மம் செய்தீர்கள் என்றால் தோல்வி அடைந்து விடுவீர்கள். குழந்தைகள் தொல்லை படுத்தினார்கள் என்றால் கோபம் வந்து விடுகிறது. குழந்தைகள் நன்கு வளர்க்கவில்லை என்றால் கெட்டு போய்விடுவார்கள் அதனால் இதை செய்ய வேண்டியுள்ளது என்பதை கூறி பாபாவிடம் கேட்கிறார்கள். அடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். கிருஷ்ணரை உரலில் கட்டிப் போட்டனர் என காண்பிக்கிறார்கள் அல்லவா? கயிற்றினால் கட்டுங்கள் உணவளிக்காதீர்கள் அழுதழுது கடைசியில் இப்படி செய்ய மாட்டோம் என கூறுவார்கள். குழந்தை என்பதால் மீண்டும் செய்வர், புத்தி சொல்லித்தர வேண்டும். பாபா கூட குழந்தைகளுக்கு, குழந்தைகளே! ஒருபோதும் விகாரத்தில் ஈடுபடாதீர்கள், குலத்தை களங்கப் படுத்தாதீர்கள் என்று கற்றுத் தருகின்றார். லௌகீகத்தில் கூட சில குழந்தைகள் கெட்டவர்களாக இருந்தால் முகத்தில் ஏன் கரியை பூசுகின்றாய்? குலத்தை களங்கப்படுத்துகின்றாய், என தாய் தந்தையர் கூறுகின்றார்கள் அல்லவா? தோல்வி-வெற்றி, வெற்றி-தோல்வி அடைந்து அடைந்து கடைசியில் வெற்றி கிடைத்து விடும். உண்மையான படகிற்குப் புயல் நிறைய வரும் ஏனென்றால் செயற்கையானவர்கள் நிறைய தோன்றி விட்டனர், சிலர் தன்னையே பகவான் என்கிறார்கள். சிலரோ வேறு என்னென்ன கூறுகிறார்கள். ரித்தி சித்தி நிறைய காண்பிக்கிறார்கள். சாட்சாத்காரம் கூட செய்விக்கிறார்கள். அனைவருக்கும் சத்கதி அளிப்பதற்காக தந்தை வந்திருக்கிறார். பிறகு இந்த காடும் இருக்காது காட்டில் வசிக்கக் கூடியவர்களும் இருக்க மாட்டார்கள். இப்போது நீங்கள் சங்கம யுகத்தில் இருக்கிறீர்கள். இந்த பழைய உலகம் சுடுகாடு ஆகிவிட்டது என உங்களுக்குத் தெரியும். இறக்கப் போகிறவர்களிடம் யாரும் மனதை வைக்க முடியாது. இந்த உலகம் முடிந்துவிட்டது, வினாசம் ஆகியேவிட்டது. புதிய உலகம் பழையதாகும் போது தான் தந்தை வருகின்றார். தந்தையை நன்கு நினைத்தால் பேட்டரி சார்ஜ் ஆகும். மிகவும் நன்றாக வாணியை நடத்துகிறார்கள். ஆனால் நினைவின் கூர்மை இல்லை என்றால் அந்த சக்தி இருக்காது. கூர்மையான வாளாக இருக்காது. இது ஒன்றும் புது விஷயம் இல்லை என பாபா கூறுகிறார். 5000 வருடங்களுக்கு முன்பு வந்திருந்தார். முன்பு எப்போதாவது சந்தித்திருக் கின்றீர்களா என பாபா கேட்கின்றார். போன கல்பத்தில் சந்தித்தோம் என கூறுகின்றனர். சிலர் நாடகம் என்கிறார்கள். அதுவே முயற்சி செய்விக்கும் என்கின்றனர். சரி, இப்போது நாடகம் முயற்சி செய்வித்துக் கொண்டிருக்கிறது என்றால் செய்யுங்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கக் கூடாது. யார் போன கல்பத்தில் முயற்சி செய்தார்களோ அவர்கள் செய்வார்கள். இது வரை யார் வரவில்லையோ அவர்கள் வருவார்கள். யார் போகப் போக ஓடிவிட்டனரோ, திருமணம் செய்துக் கொண்டுவிட்டனரோ அவர்கள் கூட நாடகத்தில் நடிப்பு இருந்தால் மீண்டும் வந்து முயற்சி செய்வார்கள். வேறு எங்கு போக முடியும்? பாபாவிடம் தான் அனைவரின் வாலும் மாட்ட வேண்டியிருக்கிறது பீஷ்ம பிதா போன்றவர்களும் கூட கடைசியில் வருவார்கள் என எழுதப் பட்டிருக்கிறது. இப்போது எவ்வளவு கர்வம் இருக்கிறது. பிறகு அந்த கர்வம் முடிந்து விடும். நீங்களும் ஒவ்வொரு 5000 வருடங்களுக்குப் பிறகும் நடிப்பை நடிக்கிறீர்கள், இராஜ்யத்தை அடைகிறீர்கள், இழக்கிறீர்கள் ஒவ்வொரு நாளும் சென்டர்ஸ் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாரத வாசிகளிலும் முக்கியமாக தேவி தேவதைகளின் பூஜாரிகளுக்குப் புரிய வைக்க வேண்டும். சத்யுகத்தில் தேவி தேவதா தர்மம் இருந்ததால் அவர்களையும் பூஜை செய்கிறார்கள். கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவின் மகிமை செய்கிறார்கள் நாம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் மகிமை செய்கிறோம். அதை யார் ஸ்தாபனை செய்தது. அவர்கள் கிருஷ்ணர் நிறுவினார் என நினைக்கிறார்கள். அதனால் அவருடைய பூஜை செய்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களிலும் கூட வரிசைக் கிரமம் இருக்கின்றது. சிலர் இன்னும் எவ்வளவு நிறைய உழைக்கிறார்கள். சிலர் எவ்வளவு உழைக்கிறார்கள். கோவர்த்தன மலையை ஒரு விரலினால் தூக்கியது போன்று காண்பிக்கிறார்கள்.

 

இப்போது இது பழைய உலகம் ஆகும். அனைத்து பொருட்களிலும் சக்தி போய்விட்டது. தங்கம் கூட சுரங்கத்தில் கிடைப்பதில்லை. சொர்க்கத்தில் தங்க மாளிகையை உருவாக்குகிறார்கள். இப்போதோ அரசாங்கம் தொல்லைப்படுகிறது. ஏனென்றால் கடன் கொடுக்க வேண்டியிருக்கிறது அங்கேயோ அளவற்ற செல்வம் இருக்கிறது. சுவர்களில் கூட வைர வைடூரியங்களைப் பதிக்கிறார்கள். வைரங்கள் பதிக்க ஆர்வம் இருக்கிறது. அங்கே பணத்திற்கு எந்த குறையும் இல்லை. குபேரனின் பொக்கிஷம் இருக்கிறது. அல்லவா! அலாவுதீனின் ஒரு விளையாட்டைக் காண்பிக்கிறார்கள். விளக்கைத் தேய்ப்பதால் மாளிகை வருகிறது. இங்கே கூட தெய்வீக திருஷ்டி கிடைப்பதால் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள். அங்கே இளவரசன் இளவரசிகளிடம் முரளி (புல்லாங்குழல்) போன்ற அனைத்து பொருட்களும் வைரங்களால் செய்யப்பட்டது இருக்கிறது. இங்கேயோ இது போன்ற பொருட்களை அணிந்துக் கொண்டு அமர்ந்தால் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். கொலை செய்து விட்டுக் கூட எடுத்துச் சென்று விடுவார்கள். அங்கே இது போன்ற விஷயங்கள் இருக்காது. இந்த உலகமே மிகவும் பழையதாக அழுக்காகிவிட்டது இந்த லஷ்மி நாராயணனின் உலகம் ஆஹா! ஆஹா! என்று )பிரமிப்பாக) இருந்தது. வைர வைடூரியங்களின் மாளிகை இருந்தது. தனியாக இருக்க மாட்டார்கள் அல்லவா? அதற்கு சொர்க்கம் என்று கூறப்பட்டது. உண்மையில் நாம் சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாம் இந்த சோம்நாத் கோயிலை கட்டினோம், நாம் எப்படி இருந்தோம், பிறகு பக்தி மார்க்கத்தில் கோவில்களைக் கட்டி பூஜை செய்தோம். என புரிந்துக் கொள்கிறார்கள். ஆத்மாவிற்கு தன்னுடைய 84 பிறவிகளின் ஞானம் இருக்கிறது. எத்தனை வைர வைடூரியங்கள் இருந்தது. அது அனைத்தும் எங்கே சென்றது. மெல்ல மெல்ல அனைத்தும் அழிந்து விட்டது. முகலாயர்கள் வந்தனர். எவ்வளவு கொள்ளை அடித்துச் சென்று சமாதிகளில் வைரங்களைப் பதித்தனர். தாஜ்மகால் போன்றவைகளைக் கட்டினர். பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கிருந்து தோண்டி எடுத்துச் சென்றது. இப்போது ஒன்றும் இல்லை. பாரதம் பிச்சைக் காரனாக இருக்கிறது. கடன் மேல் கடன் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். தானியங்கள், சக்கரை போன்ற எதுவும் கிடைப்பதில்லை. இப்போது உலகம் மாற வேண்டும். ஆனால் அதற்கு முன்பு ஆத்மாவின் பேட்டரியை தூய்மையாக மாற்றுவதற்கு சார்ஜ் செய்ய வேண்டும். பாபாவை நிச்சயம் நினைக்க வேண்டும். புத்தியின் யோகம் பாபாவிடம் இருக்கட்டும். அவரிடம் இருந்து சொத்து கிடைக்கிறது. இதில் தான் மாயையிடம் போர் ஏற்படுகிறது. முன்பு இந்த விஷயங்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் புரிய வில்லை. மற்றவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் இருந்தீர்கள். இப்போது நீங்கள் சங்கமயுகத்தினர். அவர்கள் அனைவரும் கலியுகத்தினர். இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள் என மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் புரிய வைப்பதற்கு யுக்திகள் வேண்டும் அல்லவா? மெல்ல மெல்ல உங்களுடைய வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்போது பாபா மிகப் பெரிய பல்கலைக்கழகத்தை திறந்து வைத்துள்ளார். இதில் புரிய வைப்பதற்கு படங்கள் வேண்டும் அல்லவா? இன்னும் போகப் போக உங்களிடம் இந்த படங்கள் அனைத்தும் டிரான்ஸ்லைட் போன்று ஆகிவிடும். பிறகு புரிய வைப்பது கூட எளிதாக இருக்கும். நாம் நமது இராஜ்யத்தை பாபாவின் நினைவு மற்றும் ஞானத்தினால் மீண்டும் ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம். மாயை கடைசியில் மிகவும் ஏமாற்றுகிறது. ஏமாற்றத்திலிருந்து பாதுபாப்பாக இருங்கள் என பாபா கூறுகின்றார். வழிமுறைகளை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். பாபாவை நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும். நீங்கள் இந்த லஷ்மி நாராயணன் ஆகிவிடுவீர்கள் என்று மட்டும் வாயினால் கூறுங்கள். இந்த பேட்ஜ் கூட பகவானே உருவாக்கியது ஆகையால், இதற்கு எவ்வளவு மரியாதை அளிக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. அனைத்து குணங்களினாலும் தன்னை அலங்காரம் செய்துக் கொள்ள வேண்டும். ஒரு போதும் யாருக்கும் துன்பம் அளிக்கக் கூடாது. அனைவருக்கும் சுகத்திற்கான வழி காட்ட வேண்டும்.

 

2. முழு உலகும் சுடுகாடு ஆகிவிட்டது. ஆகவே இதன் மீது மனதை செலுத்தாதீர்கள். இப்போது நாம் டிரான்ஸ்பர் ஆகிக் கொண்டிருக்கின்றோம் நாம் புது உலகிற்குச் செல்ல வேண்டும் என்ற நினைவு இருக்கட்டும்.

 

வரதானம்:

இல்லறத்தில் இருந்தபடி என்னுடையது என்பதை தியாகம் செய்யக் கூடிய டிரஸ்டி, மாயையை வென்றவர் ஆகுக.

 

எப்படி அழுக்கில் புழுக்கள் பிறக்கின்றனவோ அது போல என்னுடையது என்பது வரும்போது மாயைக்கு பிறவி ஏற்படுகிறது. மாயையை வென்றவராக ஆவதற்கான சகஜமான வழி - தன்னை டிரஸ்டி என புரிந்துக் கொள்ளுங்கள். பிரம்மா குமார் என்றாலே டிரஸ்டி, டிரஸ்டிக்கு எதன் மீதும் மோகப் பற்றுதல் இருக்காது, ஏனென்றால் அவருக்குள் என்னுடையது என்பது இருக்காது. இல்லறத்தவர் என புரிந்து கொண்டால் மாயை வரும், மேலும் டிரஸ்டி என புரிந்து கொண்டால் மாயை ஓடி விடும், ஆகையால் விடுபட்டவர் ஆகி காரியம் செய்தீர்கள் என்றால் மாயா புரூஃப் (மாயையால் பாதிக்கப் படாதவர்) ஆகி இருப்பீர்கள்.

 

சுலோகன்:

எங்கே அபிமானம் (பற்றுதல்) இருக்குமோ அங்கே கண்டிப்பாக அவமானத்தின் உணர்வு வரும்.

 

ஓம்சாந்தி