10-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் ஆன்மிகத் தந்தையிடம் புதுப்புது ஆன்மிக விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், எப்படி ஆத்மாக்கள் நாம் நமது உருவத்தை மாற்றிக் கொண்டு வந்துள்ளோமோ, அது போல் பாபாவும் வந்துள்ளார்.

கேள்வி:

சின்ன சின்ன குழந்தைகள் பாபாவின் ஞானத்தின் மீது நல்லபடியாக கவனம் கொடுப்பார் களானால் அவர்களுக்கு என்ன டைட்டில் (பட்டம்) கொடுக்கலாம்?

பதில்:

ஸ்பிரிச்சுவல் லீடர் (ஆன்மிகத் தலைவர்) என்ற டைட்டில். சின்னக் குழந்தைகள் யாராவது தைரியமான காரியம் செய்து காட்டினால், பாபாவிடம் என்ன கேட்கிறார்களோ, அதில் கவனம் கொடுத்து மற்றவர்களுக்குப் புரிய வைப்பார்களானால் அவர்கள் மீது அனைவரும் அன்பு காட்டு வார்கள். பாபாவின் பெயரும் புகழ் பெறும்.

பாடல்:

ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள்........

ஓம் சாந்தி.
குழந்தைகள் அழைத்தனர். பாபா நம் அழைப்பிற்கிணங்கி வருகிறார்- நடைமுறையில் குழந்தைகள் என்ன சொல்கின்றனர்-பாபா, நீங்கள் மீண்டும் இராவண இராஜ்யத்தில் வாருங்கள். மீண்டும் மாயாவின் நிழல் படிந்துள்ளது என்று வார்த்தைகளாலும் சொல்லப்படுகிறது. மாயா எனச் சொல்லப்படுவது இராவணன். ஆக, அழைக்கின்றனர்- இராவண இராஜ்யம் வந்து விட்டது. அதனால் இப்போது மீண்டும் வந்து விடுங்கள். இராவணனுடைய இராஜ்யத்தில் இங்கு மிகுந்த துக்கம் உள்ளது. நாங்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக, பாவாத்மாக்களாக ஆகி விட்டோம். இப்போது பாபா நடைமுறையில் கண்கூடாக இங்கே இருக்கிறார். குழந்தைகள் அறிவார்கள், மீண்டும் அதே மகாபாரத யுத்தம் நடந்து கொண்டுள்ளது. பாபா ஞானம் மற்றும் இராஜயோகம் கற்பித்துக் கொண்டி ருக்கிறார். இவ்வாறு அழைக்கவும் செய்கின்றனர், நிராகார் பரமபிதா பரமாத்மா, நிராகார் நிலையிலிருந்து சரீர உருவத்தை எடுங்கள். உருவத்தை மாற்றுங்கள். பாபா புரிய வைக்கிறார், நீங்களும் பிரம்ம மகதத்துவம் அல்லது நிராகாரி உலகத்தில் வசிப்பவர்கள் தான். நீங்களும் கூட உருவத்தை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதை யாரும் அறிந்து கொள்ள வில்லை. நிராகார் (சரீரமற்ற) ஆத்மா தான் வந்து சாகார சரீரத்தை தாரணை செய்கின்றது. அது நிராகாரி உலகம். இது சாகாரி உலகம். அதன் நடுவில் சூட்சும (ஆகாரி) உலகம். (அதன் நடுவில் சூட்சும உலகம்) அது தனி. உங்கள் புத்தியில் உள்ளது, நாம் சாந்திதாமம் அல்லது நிர்வாண் தாமத்தில் இருந்து வருகிறோம். பாபா இப்போது முதன்-முதலில் புதிய படைப்பைப் படைக்க வேண்டி உள்ளது. ஆகவே சூட்சும உலகத்தைத் தான் படைப்பார். சூட்சும வதனத்திற்கு இப்போது நீங்கள் போக முடியும். பிறகு அங்கே போக வேண்டியது இருக்காது. முதன்-முதலில் நீங்கள் சூட்சும வதனத்தின் வழியாக வருவதில்லை. நேரடியாக வருகிறீர்கள். இப்போது (சங்கமயுகத்தில்) நீங்கள் சூட்சுமவதனத்திற்கு வரவும் போகவும் முடியும். நடந்து போகக் கூடிய விசயம் கிடையாது. இது குழந்தைகளாகிய உங்களுக்கு சாட்சாத்காரம் ஆகின்றது. மூலவதனத்தின் சாட்சாத்காரமும் கிடைக்க முடியும். ஆனால் அங்கே போக முடியாது. வைகுண்டத்தின் சாட்சாத்காரமும் கிடைக்க முடியும். அங்கேயும் போக முடியாது. முழுமையாக தூய்மை ஆகாத வரை. நாங்கள் சூட்சும வதனம் செல்ல முடியும் என்று நீங்கள் சொல்ல முடியாது. நீங்கள் சாட்சாத்காரமாகப் பார்க்க முடியும். இப்போது சிவபாபா, (பிரம்மா) தாதா மற்றும் குழந்தைகள் நீங்கள் உள்ளீர்கள் குழந்தைகள் நீங்கள் எப்படிபட்ட புதுப்புது ஆன்மிக விசயங்களைக் கேட்கிறீர்கள்! இவ்விசயங்களை உலகத்தில் வேறு யாரும் அறிந்து கொள்ளவில்லை. நிராகாரி உலகம் என்று அவர்கள் சொல்லலாம். ஆனால் அது எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. முதலாவ தாக ஆத்மாவைப் பற்றியே அறிந்து கொள்ளவில்லை எனும் போது பிறகு நிராகாரி உலகத்தை எப்படி அறிவார்கள்? பாபா முதல்-முதலில் வந்து நீங்கள் ஆத்மா என உணரு மாறு செய்கிறார். நீங்கள் ஆத்மா, பிறகு உருவத்தை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது நிராகாரில் இருந்து சாகாரில் வந்திருக் கிறீர்கள்.

இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஆத்மாவாகிய நாம் 84 பிறவிகளை எப்படி எடுக்கிறோம். அந்த பாகம் முழுவதும் ஆத்மாவிற்குள் பதிவாகியுள்ளது. முன்பும் இந்த விசயங் களைச் சொல்லியிருந்தார். பாபா சொல்கிறார் - இப்போது உங்களுக்கு ஆழமான மனதிற்கினிய விஷயங்களைச் சொல்கிறேன். எதை நீங்கள் முன்பு அறிந்திருக்கவில்லையோ, அதை இப்போது நீங்கள் அறிவீர்கள். புதுப்புது கருத்துக்கள் புத்தியில் வருகின்றன- போகின்றன. அதனால் மற்றவர்களுக்கும் உடனே புரிய வைக்க முடியும். நாளுக்கு நாள் இந்த பிராமணர்களின் மரம் வளர்ந்து கொண்டே போகிறது. இது தான் பிறகு தெய்விக மரமாக ஆகின்றது. பிராமணர்கள் அதிகமாக உருவாகுவார்கள். இப்போது பார்ப்பதற்கு எவ்வளவு சிறிதாக உள்ளது! எப்படி உலக வரைபடத்தில் இந்தியாவைப் பார்த்தால் எவ்வளவு சிறியதாகக் காணப் படுகிறது! உண்மையில் இந்தியா எவ்வளவு பெரியது! அவ்வாறு ஞானத்தை பற்றியும் சொல்லப்படுகின்றது - மன்மனாபவ, அதாவது அலஃப்- தந்தையை நினைவு செய்யுங்கள். விதை எவ்வளவு சிறியதாக உள்ளது! மரம் எவ்வளவு பெரியதாக வெளிவருகின்றது! ஆக, இந்த பிராமண குலமும் சிறியது, வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. நாம் இச்சமயம் பிராமணர்களாக உள்ளோம் என்பது உங்கள் புத்தியில் உள்ளது, பிறகு தேவதை ஆவோம். 84 பிறவிகளின் ஏணிப்படி மிக நன்றாக உள்ளது. குழந்தைகள் புரிய வைக்க முடியும், யார் 84 பிறவிகளை எடுக்கின்றனரோ, அவர்கள் தான் வந்து புரிந்து கொள்கின்றனர். பிறகு சிலர் 84, சிலர் 80 பிறவிகளை எடுப்பார்கள். இதையோ புரிந்து கொண்டிருக் கிறார்கள், நாம் இந்த தெய்விக குலத்தைச் சேர்ந்தவர்கள். நாம் சூரியவம்சி குலத்தவராக ஆவோம். தோல்வியடைந்து விட்டால் தாமதமாக வருவோம். அனைவரும் ஒன்றாக வர மாட்டார்கள். அநேகர் ஞானத்தைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர் என்றாலும் கூட ஒன்றாக வர மாட்டார்கள் இல்லையா? ஒன்றாகச் செல்வார்கள் (முக்தி), கொஞ்சம் கொஞ்சமாக (பிறவியில்) வருவார்கள். இதுவோ புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இல்லையா? அனைவரும் ஒன்றாக எப்படி 84 பிறவி எடுப்பார்கள்? பாபாவை அழைக்கின்றனர், பாபா, மீண்டும் வந்து கீதை ஞானத்தைச் சொல்லுங்கள். ஆகவே எப்போது மகாபாரத யுத்தம் நடைபெறுகிறதோ, இந்தச் சமயத்தில் தான் வந்து கீதை ஞானத்தைச் சொல்கிறார். இதுவே இராஜயோகம் எனச் சொல்லப்படு கின்றது. இப்போது நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். கல்ப-கல்பமாக 5000 ஆண்டு களுக்குப் பிறகு பாபா வந்து நமக்கு ஞானம் தருகிறார். சத்திய நாராயணன் கதை கேட்கின்றனர். இவர்கள் எங்கிருந்து வந்தனர்? பிறகு எங்கே சென்றனர்? அது பற்றித் தெரியாது. பாபா புரிய வைக்கிறார், குழந்தைகளே, இப்போது இராவணனின் நிழல் படிந்துள்ளது, இப்போது டிராமாவின் அடிப்படையில் இராவண இராஜ்யம் முடிவடையப் போகிறது. சத்யுகத்தில் இருப்பது இராம இராஜ்யம் மற்றும் இப்போது இருப்பது இராவண இராஜ்யம். இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள், நமக்குள் என்ன ஞானம் வந்துள்ளதோ, அது இந்த உலகத்தில் யாருக்கும் கிடையாது. இது நம்முடைய புதிய படிப்பு, புதிய உலகத் திற்கானது. கீதையில் கிருஷ்ணரின் பெயர் எழுதப் பட்டுள்ளது. அதுவோ பழைய விஷயம் இல்லையா? நீங்கள் இப்போது பதிய விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதை நாங்கள் ஒரு போதும் கேள்விப் பட்ட தில்லை-சிவபகவான் வாக்கு என்கிறீர்கள். நாங்கள் கிருஷ்ண பகவான் வாக்கு என்று தான் கேட்டு வந்திருக்கின்றோம் எனச் சொல்வார் கள். நீங்கள் புது உலகத்திற்காக ஒவ்வொன்றும் புதிதாகவே கேட்கிறீர்கள். பாரதம் புராதன மானது என்பதை இவர்கள் அனைவரும் அறிவார்கள். ஆனால் எப்போது இருந்தது, இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் எப்படி நடந்தது, இவர்கள் எப்படி இராஜ்யத்தை அடைந்தார்கள், அது பிறகு எங்கே போயிற்று என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. இவர்களின் இராஜ்யம் முடிந்து போகிற மாதிரி என்ன நடந்தது? யார் வெற்றி அடைந்தார்கள், எதுவுமே புரிந்து கொள்வதில்லை. மனிதர்கள், சத்யுகத்திற்கு இலட்சம் வருடங்கள் கொடுத்து விட்டனர். லட்சுமி-நாராயணர் லட்சம் வருடம் இராஜ்யம் செய்திருப்பார்கள் என்பது நடக்க முடியாத விஷயம். அப்படியிருந்தால் சூரியவம்சி இராஜாக்கள் ஏராளமாக இருந்திருப் பார்கள். அத்தகைய யாருடைய பெயரும் இல்லை. 1250 வருடங்கள் என்பது யாருக்குமே தெரியாது. பிறகு லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் எதுவரை நடைபெற்றது? இதுவும் யாருக்கும் தெரியாது என்றால் பிறகு லட்சம் வருடங்களின் விஷயம் யாருக்காவது எப்படித் தெரிய வரும்? யாருக்குமே புத்தி வேலை செய்வதில்லை. இப்போது சின்னஞ் சிறுவர்களாகிய நீங்கள் உடனே புரிய வைக்க முடியும். இது மிகவும் சுலபம். பாரதத்தின் கதை, முழுமையான கதை. இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சத்யுக- திரேதா வில் பாரதவாசி இராஜாக்கள் இருந்தனர். தனித்தனி சித்திரங்களும் உள்ளன. இங்கோ பல ஆயிரக் கணக்கான வருடங்கள் எனச் சொல்லி விடுகின்றனர். பாபா சொல்கிறார்- இதுவே 5000 ஆண்டுகளின் கதை ஆகும். இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி- நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இராஜ பரம்பரை இருந்தது. பிறகு புனர்ஜென்மம் எடுக்க வேண்டி வந்தது. சின்னச் சின்னப் பெண் குழந்தைகள் இவ்வளவு கொஞ்சமாகக் அமர்ந்து புரிய வைப்பார்களானால் இவர்களோ மிக நல்ல ஞானம் படித்துள்ளனர் எனப் புரிந்து கொள்வார்கள். இந்த ஆன்மிக ஞானம் ஆன்மிகத் தந்தையைத் தவிர வேறு யாரிடமும் கிடையாது. நீங்கள் சொல்வீர்கள், எங்களுக்கும் ஆன்மிகத் தந்தை வந்து சொல்லி யிருக்கிறார். ஆத்மா சரீரத்தின் மூலம் கேட்கிறது. ஆத்மா தான் சொல்லும் - நான் இன்னாராக ஆகப் போகிறேன். தன்னை பற்றி மனிதர்கள் உணர்வதில்லை. நம்மை பாபா உணர வைத்துள்ளார். நாம் ஆத்மா 84 பிறவிகளை முழுமையாக எடுக்கிறோம். இப்படி-இப்படி விஷயங்களை அமர்ந்து சொல்லிப் புரிய வைத்தால் சொல்வார்கள்-இவர்களுக்கு மிக நல்ல ஞானம் உள்ளது. கடவுள் ஞானம் நிறைந்தவர். பாடவும் செய்கின்றனர், கடவுள் ஞானம் நிறைந்தவர், ஆனந்த மயமாக இருப்பவர், விடுவிப்பவர் (லிபரேட்டர்), வழிகாட்டி (கைடு). ஆனால் எங்கே அழைத்துப் போவார் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. மனிதர்கள் எப்போது அதிக துக்கம் நிறைந்தவர்களாக ஆகின்றனரோ, அப்போது வந்து விடுவிக்கிறார். இராவணனின் இராஜ்யம் என்று ஒன்று உள்ளது. ஹெவன்லி காட் ஃபாதர் எனச் சொல்கின்றனர். நரகத்தை இராவண இராஜ்யம் எனச் சொல்லப் படுகின்றது. இந்த ஞானத்தை யாருக்காவது அமர்ந்து சொல்வீர்களானால் உடனே, இதை அனைவருக்கும் போய்ச் சொல்லுங்கள் என்பார்கள். ஆனால் மிக நல்ல தாரணை இருக்க வேண்டும். கண்காட்சியின் சித்திரங்கள் உள்ள புத்தகமும் உள்ளது. இன்னும் புரிந்து கொள்வார் களானால் மிகவும் சேவை செய்ய முடியும்.

இந்தக் குழந்தை (சகோதரி ஜெயந்தி) லண்டனில் அங்கே உள்ள தன்னுடைய ஆசிரியருக்குப் புரிய வைக்க முடியும். அங்கே லண்டனில் இந்த சேவை செய்ய முடியும். உலகத்தில் ஏமாற்று வேலை கள் நிறைய உள்ளன இல்லையா? இராவணன் ஒரேயடியாக அனைவரையும் ஏமாளிகளாக ஆக்கி விட்டிருக்கிறான். குழந்தைகள் முழு உலகின் சரித்திர- பூகோளத்தைப் புரிய வைக்க முடியும். லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் எவ்வளவு காலம் நடைபெற்றது? பிறகு இன்ன சகாப்தத்தில் இருந்து இஸ்லாமியர், பௌத்தர், கிறிஸ்தவர்கள் வருகின்றனர். வளர்ச்சி அடைந்து-அடைந்தே பலவித தர்மங்களின் மரம் எவ்வளவு பெரிய தாக ஆகி விடுகின்றது! அரைக்கல்பத்திற்குப் பிறகு மற்ற தர்மங்கள் வருகின்றன. இப்படி- இப்படி விஷயங்களை இவர்கள் அமர்ந்து சொல்வார் களானால், இவர்களோ ஆன்மிகத் தலைவர்கள் (ஸ்பிரிச்சுவல் லீடர்), இவர்களிடம் ஆன்மிக ஞானம் உள்ளது என்று சொல்வார்கள். இவர்கள் பிறகு சொல்வார்கள் - இந்த ஞானம் இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஸ்பிரிச்சுவல் காட் ஃபாதர் கொடுத்துக் கொண்டிருக் கிறார். அவர் விதை வடிவமாக இருப்பவர். இது தலைகீழான மரம். விதை ஞானம் நிறைந்தது. விதைக்கு மரத்தைப் பற்றிய ஞானம் இருக்கும் இல்லையா? இது பலவித தர்மங்களின் மரம். பாரதத்தின் தெய்விக தர்மம் என்று சொல்லப்படுகின்றது. முதலில் லட்சுமி-நாராயணரின் இராஜ்யம். பிறகு ராம்-சீதாவின் இராஜ்யம் இருக்கும். இது அரைக்கல்பம் நடக்கின்றது. அதன் பின் வருகின்றனர் இஸ்லாமியர்......... மரம் விருத்தி அடைந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறு இந்தக் குழந்தை சொற்பொழிவு செய்து புரிய வைக்க வேண்டும்-இந்த மரம் எப்படி வெளிப்படு கின்றது. இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று நாங்கள் புரிய வைக்க முடியும். வெளி நாட்டில் வேறு யாரும் இல்லை. இந்தக் குழந்தை சென்று புரிய வைக்க வேண்டும்-இப்போது இரும்பு யுகத்தின் கடைசி. தங்கயுகம் வரப் போகிறது என்றால் அங்குள்ளவர்கள் மிகவும் குஷியாகி விடுவார்கள். பாபா யுக்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதன் மீது கவனம் கொடுக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு மரியாதை அதிகம் கிடைக்கும். சிறியவர்கள் யாராவது தைரியமான காரியம் செய்வார்களானால் அவர் களிடம் அதிக அன்பு செலுத்துகின்றனர். பாபாவிற்கு இவ்வாறு தோன்றுகிறது - இப்படி சிறு குழந்தைகள் இதில் கவனம் கொடுத்தால் ஆன்மிகத் தலைவராக ஆகி விடலாம். ஆன்மிக இறைத் தந்தை (ஸ்பிரிச்சுவல் காட் ஃபாதர்) அமர்ந்து ஞானம் தருகிறார். கிருஷ்ணரை காட் ஃபாதர் எனச் சொல்வது தவறாகும். கடவுளோ நிராகாராக உள்ளார். ஆத்மாக்கள் நாம் அனைவரும் சகோதரர்கள், அவர் தந்தை. அனைவரும் இரும்பு யுகத்தில் துக்கத்தில் இருக்கும் போது அவர் வருகிறார். எப்போது மீண்டும் இரும்பு யுகம் வருகிறதோ, அப்போது தந்தை தங்க யுகத்தை ஸ்தாபனை செய்வதற்காக வர வேண்டியுள்ளது. பாரதம் புராதன சுகதாமமாக இருந்தது, சொர்க்கமாக இருந்தது. மிகக் குறைவான மனிதர்கள் இருந்தனர். மற்ற இத்தனை ஆத்மாக்களும் எங்கே இருந்தனர்? சாந்திதாமத்தில் இருந்தனர். ஆக, இது போல் புரிய வைக்க வேண்டும். இதில் பயப்படுவதற்கான வியம் கிடையாது. இது கதையாகும். கதையை குஷியோடு கூறுவர். உலகத்தின் சரித்திர-பூகோளம் எப்படி ரிப்பீட் ஆகிறது என்பதைக் கதை என்றும் சொல்லலாம். இவை உங்களுக்கு பக்காவாக நினைவிருக்க வேண்டும். பாபா சொல்கிறார்-ஆத்மா எனக்குள் முழு மரத்தினுடைய ஞானம் உள்ளது, அதை நான் திரும்பவும் சொல்கிறேன். ஞானம் நிறைந்த தந்தை குழந்தைகளுக்கு ஞானம் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். இவர் போய் ஞானம் கொடுத்தால் நீங்கள் மற்றவர் களையும் அழையுங்கள் எனச் சொல்வார்கள். சொல்லுங்கள், ஆம், அழைக்க முடியும், ஏனென்றால் அவர்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றனர்-பாரதத்தின் புராதன இராஜயோகம் என்பது என்னவாக இருந்தது? அதன் மூலம் பாரதம் சொர்க்கமாக ஆனது - இதை யாராவது புரிய வைக்கலாம். இப்போது சந்நியாசிகள் என்ன சொல்வார்கள்? ஆன்மிக ஞானம் கீதையில் மட்டும் உள்ளது. ஆக, அவர்கள் கீதையைப் பற்றி சொல்கின்றனர். கீதையை எவ்வளவு படிக்கின்றனர்! மனப்பாடம் செய்து கொண்டே இருக்கின்றனர். இது ஆன்மிக ஞானமா என்ன? இதுவோ மனிதர்களின் பெயரில் உருவாக்கப் பட்டது. ஆன்மிக ஞானத்தை மனிதர்கள் தர முடியாது. நீங்கள் இப்போது வேறுபாட்டைப் புரிந்து கொண்டீர்கள். அந்த கீதைக்கும் பாபா சொல்லும் கீதைக்கும் இடையில் இரவு-பகலுக்குள்ள வேறு பாடு உள்ளது. ஸ்ரீமத் (ஞானம்) கொடுத்தவர் தந்தை, ஆனால் கிருஷ்ணர் என்று பெயர் போட்டு விட்டனர். சத்யுகத்தில் கிருஷ்ணருக்கு இந்த ஞானம் கிடையாது. தந்தை ஞானம் நிறைந்தவர். எவ்வளவு முறைகேடான (தவறான) விசயங்கள்! கிருஷ்ணரின் ஆத்மா சத்யுகத்தில் இருந்த போது ஞானம் கிடையாது. எவ்வளவு சிக்கலாகி யுள்ளது! இவர் களெல்லாம் வெளிநாடு சென்று பெயரை வெளிப்படுத்த முடியும். சொற்பொழிவு செய்யலாம். சொல்லுங்கள், உலகத்தின் சரித்திர-பூகோளத்தின் ஞானத்தை நாங்கள் உங்களுக்குத் தர முடியும். கடவுள் சொர்க்கத்தை எப்படி ஸ்தாபனை செய்கிறார்? அது சொர்க்கத்திலிருந்து பிறகு நரகமாக எப்படி ஆகிறது என்பதை நாங்கள் உங்களுக்குப் புரிய வைக்கிறோம். இதை அமர்ந்து குறிப்புகளாக எழுத வேண்டும். பிறகு நாம் ஏதேனும் பாயின்ட் மறந்து விடாமல் இருக்கிறோமா எனப் பார்க்க வேண்டும். பிறகு நினைவு செய்து எழுத வேண்டும். இது போல் பயிற்சி செய்வதால் மிக நன்றாக எழுதுவீர்கள், மிக நன்றாகப் புரிய வைப்பீர்கள். அப்போது பெயர், புகழ் கிடைக்கும். இங்கிருந்தும் பாபா யாரையாவது வெளி நாட்டுக்கு அனுப்ப முடியும். இவர்கள் சென்று புரிய வைத்தாலும் மிகவும் நல்லது. 7 நாட்களில் மிகவும் புத்திசாலி ஆக முடியும். புத்தி மூலம் தாரணை செய்ய வேண்டும். விதை மற்றும் மரம் பற்றியது விவரமான ஞானமாகும். சித்திரங்களை வைத்து நல்லபடியாகப் புரிய வைக்க முடியும். சேவைக்கான ஆர்வம் இருக்க வேண்டும். மிக உயர்ந்த பதவி ஆகி விடும். ஞானம் மிக சுலபமானது. இது பழைய மோசமான உலகம். சொர்க்கத்திற்கு முன் இந்தப் பழைய உலகம் மாட்டுச் சாணம் போன்றதாகும். இதிலிருந்து துர்நாற்றம் வருகிறது. அது தங்கத்தின் உலகம். இது அழுக்கான உலகம். குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் இந்த சரீரத்தை விட்டுச் சென்று இளவரசர்-இளவரசி ஆவோம். விபத்து நிகழாத அளவு (பாதுகாப்பான) விமானம் அங்கே இருக்கும், அதனால் ஒரு போதும் விபத்து நிகழாது. இந்தக் குஷி குழந்தைகளுக்கு உள்ளுக்குள் இருக்குமானால் ஒரு போதும் எந்த ஒரு விஷயத்திலும் அழுகை வராது. நீங்கள் புரிந்து கொண்டி ருக்கிறீர்கள் இல்லையா-நாம் இளவரசர்-இளவரசி ஆவோம். ஆக, உங்களுக்கு ஏன் உள்ளுக்குள் குஷி ஏற்படக்கூடாது? - வருங்காலத்தில் அப்படிப்பட்ட பாடசாலைக்குச் செல்வோம், இதை-இதைச் செய்வோம். இதெல்லாம் ஏன் மறந்து போகிறது என்பது குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மிகுந்த நஷா இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இந்தப் பழைய மோசமான சாணம் போன்ற (அசுத்தமான) உலகினை புத்தி மூலம் மறந்து சத்யுக உலகத்தை நினைவு செய்து அளவற்ற குஷி மற்றும் நவில் இருக்க வேண்டும். ஒரு போதும் அழக் கூடாது.

2) பாபா சொல்லும் ஆழமான, ரமணீகரமான (மகிழ்ச்சித் தரும்) வியங்களை தாரணை செய்து அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். ஸ்பிரிச்சுவல் லீடர் (ஆன்மிகத் தலைவர்) என்ற டைட்டில் பெற வேண்டும்.

வரதானம்:

காரியங்கள் செய்தாலும் காரியங்களின் பந்தனத்திலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய சகஜயோகி, இயற்கையான யோகி ஆகுக.

யார் மகாவீர் குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்களை சாகார உலகின் எந்த ஒரு கவர்ச்சியும் தன் பக்கம் ஈர்க்க முடியாது. அவர் தன்னை ஒரு விநாடியில் விடுபட்டு மற்றும் தந்தைக்குப் பிரியமானவராக ஆக்கிக் கொள்ள முடியும். கட்டளை கிடைத்ததும் சரீரத்திலிருந்து விலகி அசரீரி, ஆத்ம அபிமானி, பந்தன முக்த், யோகயுக்த் ஸ்திதியின் அனுபவம் செய்யக் கூடியவர் தான் சகஜயோகி, இயற்கையான யோகி, சதா யோகி, கர்ம யோகி மற்றும் சிரேஷ்ட யோகியாக ஆவார். அவர் எப்போது விரும்புகின்றாரோ, எவ்வளவு காலம் விரும்புகின்றாரோ தனது சங்கல்பம், சுவாசத்தை ஒரு பிரானேஷ்வரன் தந்தையின் நினைவில் நிலைக்கச் செய்ய முடியும்.

சுலோகன்:

ஏக்ரஸ் ஸ்திதி என்ற சிரேஷ்ட இருக்கையில் அமர்ந்திருப்பது தான் தபஸ்வி ஆத்மாவின் அடையாளமாகும்.