10.10.21    காலை முரளி            ஓம் சாந்தி   11.08.88      பாப்தாதா,   மதுபன்


வெற்றியின் காந்தம் - சேர்ந்திருப்பது மற்றும் அனுசரிப்பது

அனைவரின் அன்பும் அன்புக் கடலில் கலந்து விட்டது. இவ்வாறே சதா அன்பில் மூழ்கியிருந்து மற்றவர்களுக்கும் அன்பின் அனுபவத்தை செய்வித்துக் கொண்டே செல்லுங்கள். பாப்தாதா அனைத்துக் குழந்தை களின் ஒருமித்த கருத்துத்துடன் இருக்கும் குழுவைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார். பறந்து கொண்டே இருக்கும் போது வரக் கூடியவர்களுக்கு சதா பறக்கும் கலையின் வரதானம் தானாகவே பிராப்தியாக கிடைத்துக் கொண்டே இருக்கும். வந்திருக்கும் அனைத்துக் குழந்தைகளின் ஆர்வம்-உற்சாகத்தைப் பார்த்து பாப்தாதா அனைத்துக் குழந்தைகளின் மீதும் அன்பு மலர்களின் மழை பொழிந்து கொண்டிருக்கின்றார். எண்ணங் களில் ஒன்றாக இருப்பது மற்றும் சன்ஸ்காரம் பாபாவிற்குச் சமமாக ஒன்றாக இருப்பது - இவ்வாறு ஒன்றாக இருப்பது தான் தந்தையின் சந்திப்பாகும். இதுவே பாப்சமான் ஆவதாகும். எண்ணங்களில் ஒன்றாக இருப்பது, சன்ஸ்காரங்களில் ஒன்றாக இருப்பது - ஒன்றாக இருப்பது தான் பணிவான வராக ஆகி பொறுப்பானவர் ஆவ தாகும். நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறீர்கள், வந்து விடுவீர்கள். சேவையில் வெற்றியின் அடையாளத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக் கின்றார். அன்பான சந்திப்பு செய்வதற்காக வந்திருக்கிறீர்கள், சதா அன்பானவர்களாக ஆகி அன்பின் அலைகள் பரப்புவதற்காக வந்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொரு விசயத்திலும் வீட்டிலிருந்து தான் தானம் ஆரம்பம் ஆக வேண்டும். முதலில் தன் மீது, தனது மிக அன்பான வீடு, பிறகு பிராமணக் குடும்பத்தின் மீது, பிறகு உலகித்தின் மீது. ஒவ்வொரு சங்கல்பத்திலும் அன்பு, சுயநலமற்ற உண்மையான அன்பு, உள்ளப்பூர்வமான அன்பு, ஒவ்வொரு சங்கல்பத்திலும் இரக்கம், ஒவ்வொரு சங்கல்பத்திலும் கருணை, வள்ளலுக்கான குணம் இயற்கையான குணமாக ஆகிவிட வேண்டும் - இது தான் அன்பான சந்திப் பாகும், சங்கல்பத்தில் இணைந்திருப்பது, சிந்தனைகளில் இணைந்திருப்பது, சன்ஸ்காரங்களில் இணைந்திருப்பதாகும். அனைவருக்கும் உதவி என்ற காரியத்திற்கு முன் சதா அனைத்து சிரேஷ்ட பிராமண ஆத்மாக்களின் உதவியானது உலகை எளிதாக மற்றும் தானாகவே உதவியாளராக ஆக்கிவிடும். ஆகையால் வெற்றி நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. சந்திப்பது மற்றும் வளைவது என்றால் அநுசரித்து செல்வதாகும். இதுவே வெற்றிக்கான காந்தம் ஆகும். அனைத்து ஆத்மாக்களும் மிக எளிதாகவே இந்த காந்தத் தின் ஈர்ப்பில் வந்து விடுவார்கள்.

மீட்டிங்கிற்கு வந்திருக்கும் குழந்தைகளுக்கும் பாப்தாதா அன்பின் வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக் கின்றார். நெருக்கத்தில் இருக்கிறீர்கள் மற்றும் சதா நெருக்கத்தில் இருப்பீர்கள். தந்தையிடம் மட்டுமின்றி தங்களுக்குள்ளும் நெருக்கத்தில் இருக்கும் காட்சியை பாப்தாதாவிற்கு காண்பித்தீர்கள். உலகிற்கு காட்சி காண்பிப் பதற்கு முன் பாப்தாதா பார்த்தார். வரக்கூடிய அனைத்துக் குழந்தைகளும் உங்களது காட்சியைப் பார்த்து என்ன காரியம் செய்ய வேண்டும்? எப்படி இருக்க வேண்டும்? என்பதை எளிதாகவே புரிந்து கொள்வார்கள். உங்களது காரியங்கள் தான் செயல் திட்டம் ஆகும். நல்லது.

திட்டங்கள் அனைத்தும் நன்றாக செய்திருக்கிறீர்கள். இந்த காரியம் ஆரம்பிக்கும் முன் வர்க்கங் களை தயார் செய்ய வேண்டும் என்ற விசேஷ தூண்டுதல் பாப்தாதாவிற்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆக இந்த மகான் காரியத்தில் எந்த ஒரு வர்க்கமும் இல்லாமல் இருந்து விடக் கூடாது என்ற இலட்சியம் அவசியம் வைக்க வேண்டும். காலத்தின் அநுசாரமாக அதிகமாக செய்ய முடியாவிட்டாலும், முன்உதாரணம் அவசியம் தயார் செய்ய வேண்டும் என்ற முயற்சி அல்லது இலட்சியம் அவசியம் வைக்க வேண்டும். மற்றபடி இதே காரியத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பீர்கள். நேரத்தின் அநுசாரமாக செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் முடிவு நேரத்தை நெருக்கத்தில் கொண்டு வருவதற்கு அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது. ஆனால் உலக ஆத்மாக்கள் இவ்வளவு பேரை ஒரே நேரத்தில் நெருக்கத்தில் கொண்டு வர முடியாது. ஆகையால் நீங்கள் - நாம் அனைத்து ஆத்மாக்களையும் அனைத்து வர்க்கங்களின் ஆதாரத்தில் உதவியாளர்களாக ஆக்கியிருக்கின்றோம் என்று உரிமையுடன் கூற வேண்டும். ஆக இந்த இலட்சியம் அனைத்து காரணங்களையும் நிறைவேற்றி விடும். என்ன செய்து கொண்டிருக் கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது? என்று எந்த ஒரு வர்க்கத்தின் புகார் இருந்து விடக் கூடாது. விதை விதையுங்கள். மற்றபடி எப்போது நேரம் கிடைக்குமோ, எப்படி செய்ய முடியுமோ, அவ்வாறு செய்யுங்கள். எப்படி செய்து? எவ்வளவு செய்வது? என்று சுமை ஆகிவிடக் கூடாது. எவ்வளவு நடக்க வேண்டுமோ, அது நடந்து விடும். எவ்வளவு செய்தீர்களோ, அந்த அளவிற்கு வெற்றியின் நெருக்கத்தில் வந்தீர்கள். முன்உதாரணம் தயார் செய்ய முடியும் அல்லவா?

மற்றடி இந்திய அரசாங்கத்தை நெருக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்ற சிரேஷ்ட சங்கல்பம் செய்தீர்கள், அது அனைவரின் புத்தியை நெருக்கத்தில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் அனைத்து பிராமண ஆத்மாக்களும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை சுத்த சங்கல்பமாகிய வெற்றி கிடைத்தே தீரும் - இந்த சுத்த சங்கல்பம் மற்றும் பாப்சமான் வைப்ரேசன் உருவாக்கி, வெற்றிக்கான திட நிச்சயத்துடன் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். ஆனால் எந்த ஒரு பெரிய காரியம் செய்வதற்கு முன்பு, எவ்வாறு ஸ்தூலத்திலும் பார்த்திருப்பீர்கள் - ஏதாவது சுமையை தூக்குகின்றனர் எனில் என்ன செய்வார்கள்? அனைவரும் சேர்ந்து விரல் கொடுப்பர், மேலும் ஒருவருக்கொருவர் தைரியம்-உற்சாகம் அதிகப்படுத்தும் வார்த்தைகள் பேசுவர். பார்த்திருக்கிறீர்கள் அல்லவா! அவ்வாறே நிமித்தமாக யார் வேண்டுமென்றாலும் ஆகட்டும், ஆனால் இந்த விசேஷ காரியத்திற்கு சதா அனைவருக்கும் அன்பு, அனைவருக்கும் உதவி, அனைவருக்கும் சக்திக்கான ஆர்வம்-உற்சாகத்திற்கான வைப்ரேசன் கும்பகர்ணனை தூக்கத் திலிருந்து எழுப்பி விடும். இந்த விசேஷ காரியத்தின் மீது அவசியம் கவனம் செலுத்த வேண்டும். விசேஷமாக சுயம், அனைத்து பிராமணனர்கள் மற்றும் உலக ஆத்மாக்களின் சகயோகம் அடைவது தான் வெற்றிக்கான சாதனமாகும். இதில் சிறிது குறை ஏற்பட்டாலும் வெற்றியில் குறை ஏற்படுவதற்கு நிமித்தமாக ஆகிவிடுவீர்கள். ஆகையால் பாப்தாதா அனைத்து குழந்தை களின் தைரியத்திற்கான ஓசையைக் கேட்டு அந்த நிமிடத்திலேயே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றார். மேலும் குறிப்பாக குழுவின் அன்பின் காரணத்தினால் அன்பிற்கு கைமாறு செய்வதற்காக வந்திருக் கின்றார். மிகவும் நன்றாக இருக்கிறீர்கள், மேலும் மிக மிக நன்றாக பலமுறை ஆகியிருக்கிறீர்கள். ஆகையால் இரட்டை அயல்நாட்டுக் குழந்தைகள் தூரத்தில் இருந்தாலும் எவரெடியாகி பறக்க வேண்டும் என்பதற்காக பாப்தாதா விசேஷமாக குழந்தைகளின் இதயத்தை மாலையாக ஆக்கி அணிந்து கொள்கின்றார். நல்லது.

குமாரிகள் கன்னையாவினுடையவர்களாக இருக்கின்றனர். ஒரு சப்தத்தை நினைவில் வைத்துக் கொண்டால் போதும் - அனைத்திலும் ஒன்று (ஏக்), ஒரே வழி (ஏக்மத்), ஒரே ரசனை (ஏக்ரஸ்), ஒரே பாபா. பாரதத்தின் குழந்தைகளுக்கும் பாப்தாதா உள்ளப்பூர்வமாக வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். எப்படிப்பட்ட இலட்சியம் வைத்தீர்களோ, அதற்கான இலட்சணங்களை நடைமுறையில் கொண்டு வந்தீர்கள். புரிந்தாதா? சிலருக்கு கூறினேன், சிலருக்குக் கூறவில்லை என்பது கிடையாது, அனைவருக்கம் கூறுகின்றேன். (தாதியை) யார் நிமித்தமாக ஆகின்றார்களோ, அவர்களுக்கு சிந்தனை இருக்கவே செய்கிறது. இதுவே கருணையின் அடையாளமாகும். நல்லது.

மீட்டிங்கில் வந்த அனைத்து சகோதர-சகோதரிகளை பாப்தாதா மேடைக்கு அழைத்தார்

அனைவரும் புத்தியை நன்றாக பயன்படுத்தினீர்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் சேவையின் அன்பை அறிவார். சேவையில் முன்னேறுவதனால் எந்த அளவிற்கு நாலாபுறமும் வெற்றி கிடைத்திருக்கிறது? என்பதை சிந்திக்க வேண்டும், பார்க்க வேண்டும். மற்றபடி சேவையில் ஈடுபாடு நன்றாக இருக்கிறது. இரவு-பகல் சேவைக்காக ஓடுகிறீர்கள். பாப்தாதா கடின உழைப் பையும் அன்பின் ரூபத்தில் பார்க்கின்றார். கடின உழைப்பு செய்யவில்லை, அன்பை வெளிப்படுத் தியிருக்கிறீர்கள். நல்லது. ஆர்வம்-உற்சாகத்துடன் இருக்கக் கூடிய துணை கிடைத்திருக்கிறது. விசால காரியம் மற்றும் விசால உள்ளம் இருக்கிறது. ஆகையால் எங்கு விசாலதா இருக்கிறதோ, அங்கு வெற்றி கிடைத்தே தீரும். பாப்தாதா அனைத்துக் குழந்தைகளின் சேவையின் ஈடுபாட்டை பார்த்து குஷியின் பாட்டு பாடுகின்றார். பலமுறை பாட்டு கூறியிருக்கின்றேன் - ஆஹா குழந்தைகளே ஆஹா. நல்லது. வருவதில் எவ்வளவு இரகசியங்கள் இருந்தன! இரகசியங்களை புரிந்து கொள்பவர்கள் அல்லவா! இரகசியங்களுக்குத் தெரியும், பாபாவிற்குத் தெரியும். (தாதி பாப்தாதாவிற்கு போக் கொடுக்க விரும்பினார்) இன்று திருஷ்டியின் மூலமாகவே ஏற்றுக் கொள்கின்றேன். நல்லது.

அனைவரின் புத்தியும் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. மேலும் ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! ஆகையால் வெற்றி மிகவும் நெருக்கத்தில் இருக்கிறது. நெருக்கம் வெற்றியை அருகில் கொண்டு வரும். களைப்படைந்து விடவில்லை தானே? அதிக காரியம் கிடைத்து விட்டது? ஆனால் பாதி காரியம் தந்தை செய்கின்றார். அனைவரின் ஆர்வமும் நன்றாக இருக்கிறது. உறுதித்தன்மையும் இருக்கிறது. எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறீர்கள்? காந்தத்தை வைத்து விட்டால் நெருக்கம் என்பது அனைவரின் கழுத்தில் மாலையாக விழுந்து விடும். இவ்வாறு அனுபவம் ஏற்படுகிறதா? நல்லது. அனைவரும் மிக நன்றாக இருக்கிறீர்கள்.

தாதிகளுக்காக கூறப்பட்ட அவ்யக்த மகாவாக்கியம் (31.03.1988)

தந்தை குழந்தைகளுக்கு நன்றி கூறுகின்றார், குழந்தைகள் தந்தைக்கு கூறுகிறீர்கள். ஒருவருக் கொருவர் நன்றி கூறி கூறி முன்னேறியிருக்கிறீர்கள். முன்னேறுவதற்கான விதி இது தான். இந்த விதியின் மூலம் உங்களது குழு நன்றாக இருக்கிறது. ஒருவருக்கொருவர் சரி என்று கூறினீர்கள், நன்றி கூறினீர்கள், முன்னேறினீர்கள். இந்த விதியை அனைவரும் பின்பற்றும் போது பரிஸ்தா ஆகிவிடுவீர்கள். பாப்தாதா சிறிய மாலையைப் பார்த்து குஷி அடைகின்றார். இப்பொழுது கங்கனம் உருவாகியிருக்கிறது, கழுத்து மாலை உருவாகிக் கொண்டிருக்கிறது. கழுத்து மாலை உருவாக்கு வதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இப்பொழுது கவனம் தேவை. அதிக சேவையில் சென்று விடுவதால் அவ்வபொழுது சுயத்தின் மீது கவனம் குறைந்து விடுகிறது. விஸ்தாரத்தில் சில நேரம் சாரம் கலந்து விடுகிறது. வெளிப்படையான ரூபத்தில் இருப்பது கிடையாது. இப்பொழுது இது ஏற்பட வேண்டும் என்று நீங்கள் தான் கூறுகின்றீர்கள். அப்படிப்பட்ட நாட்கள் வரும் - எது நடக்க வேண்டுமோ, அதுவே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறுவீர்கள். முதலில் தீபங்களின் மாலை இங்கேயே தயார் ஆகும். பாப்தாதா உங்களது ஆர்வம்-உற்சாகத்தை அதிகப்படுத்து வதற்காக முன்உதாரணமாக நினைக்கின்றார். உங்களது ஒற்றுமை தான் யக்ஞத்தின் கோட்டை ஆகும். 10 பேர் இருந்தாலும், 12 பேர் இருந்தாலும் கோட்டைச் சுவர்களாக இருக் கிறீர்கள் எனில் பாப்தாதா எவ்வளவு குஷி அடைவார்! பாப்தாதா இருக்கவே செய்கின்றார்! இருப்பினும் நிமித்த மாக நீங்கள் இருக்கிறீர்கள். இதே போன்ற குழு இரண்டாவது, மூன்றாவது குழு உருவாகி விட்டால் அதிசயம் ஏற்பட்டு விடும். இப்போது இப்படிப்பட்ட குழு தயார் செய்யுங்கள். முதல் குழுவைப் பார்த்து இவர்கள் தங்களுக்குள் அன்பாக இருக்கின்றனர் என்று அனைவரும் கூறுகின்றனர். சுபாவம் பலவிதமாக இருக்கத் தான் செய்யும், ஆனால் மரியாதை இருக்கிறது, அன்பு இருக்கிறது, சரி என்று கூறுகின்றனர், சரியான நேரத்தில் தன்னை அனுசரித்துக் கொள்கின்றனர். ஆகையால் இந்த கோட்டைச் சுவர் உறுதியாக இருக்கிறது. அதனால் தான் முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள். அஸ்திவாரத்தைப் பார்த்து குஷி ஏற்படுகிறது அல்லவா! எவ்வாறு இந்த முதல் குழு தென்படுகிறதோ, அதே போன்று சக்திசாலி குழுவாக ஆகிவிட்டால் சேவை பின்னால் வந்து கொண்டே இருக்கும். நாடகத்தில் வெற்றி மாலை நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆக அவசியம் ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் வருவீர்கள், அப்போது தான் மாலை உருவாகும். ஒரு மணி ஒருபுறமும், மற்றொரு மணி அதி-ருந்து தூர இருந்தால் மாலை உருவாகாது. மணிகள் சந்தித்துக் கொள்ள வேண்டும், நெருக்கத்தில் வர வேண்டும், அப்போது தான் மாலை தயாராகும். ஆக முன் உதாரணம் நன்றாக இருக்கிறது. நல்லது.

இப்பொழுது சந்திப்பு செய்வதை முழுமையாக்க வேண்டும். இரதமும் அதிகப்படியான சக்திகள் மூலம் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கின்றேன் அல்லவா! இது சாதாரண விசயம் கிடையாது. அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது அல்லவா! இருப்பினும் அனைத்து சக்திகளும் சேமிப்பாகி இருக்கிறது. ஆகையால் இரதமும் உதவி செய்து கொண்டிருக்கிறது. சக்திகள் சேமிப்பாகவில்லை எனில் இவ்வளவு சேவைகள் கடினமாகி விடும். இதுவும் நாடகத்தில் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பாகம் இருக்கிறது. எந்த சிரேஷ்ட காரியம் சேமிப்பாகிறதோ, அது சரியான நேரத்தில் காரியத்திற்கு பயன்படுகிறது. எவ்வளவு ஆத்மாக்களின் ஆசிர்வாதமும் கிடைத்து விடுகிறது! அதுவும் சேமிப்பாகிறது. ஏதாவது விசேஷ குணம் சேமிப்பாகின்ற காரணத் தினால் விசேஷ பாகம் இருக்கிறது. இரதம் தடையின்றி செல்ல வேண்டும் - இதுவும் நாடகத்தில் பாகம் இருக்கிறது. 6 மாதம் எந்த குறையும் இல்லை. நல்லது. அனைவரையும் திருப்திப் படுத்துவாய்.

ரிவைஸ் 11.08.1988 அவ்யக்த பாப்தாதா, மதுபன்

அவ்யக்த முரளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில விலை மதிப்பற்ற

மகாவாக்கியங்கள் (கேள்வி-பதில்)

கேள்வி: எந்த ஒரு சப்தத்தின் சொரூபத்தில் நிலைத்திருப்பதன் மூலம் அனைத்து பலவீனங்களும் அழிந்து விடும்?

பதில்: புருஷார்த்தி என்ற சப்தத்தின் அர்த்தத்தின் சொரூபத்தில் நிலைத்திருங்கள் போதும். புருஷ் அதாவது இந்த இரதத்திற்கு சாரதியாக இருக்கின்றேன், இயற்கைக்கு எஜமானராக இருக்கின்றேன். இந்த ஒரு சப்தத்தின் அர்த்தத்தின் சொரூபத்தில் நிலைத்திருப்பதன் மூலம் அனைத்து பலவீனங் களும் அழிந்து விடும். புருஷ் இயற்கைக்கு அதிகாரியாக இருக்கிறதே தவிர அடிமை அல்ல. சாரதி என்றால் இரதத்தை நடத்தக் கூடியவரே அன்றி இரதத்திற்கு அடிமையாக இருப்பவர் அல்ல.

கேள்வி: ஆதிகாலத்தில் இராஜ்ய அதிகாரி ஆவதற்கு எந்த சன்ஸ்காரத்தை இப்பொழுதிலிருந்தே தாரணை செய்ய வேண்டும்?

பதில்: தனது ஆதி, அழிவற்ற சன்ஸ்காரங்களை இப்பொழுதிலிருந்தே தாரணை செய்யுங்கள். ஒருவேளை ஆதிகாலம் போர் வீரனுக்கான சன்ஸ்காரம் இருந்தால் அதாவது யுத்தம் செய்து செய்து நேரத்தை கழித்தால் இன்று வெற்றி, நாளை தோல்வி. அவ்வபொழுது வெற்றி, அவ்வபொழுது தோல்வி, சதா காலத்திற்கான வெற்றிக்கான சன்ஸ்காரத்தை உருவாக்கவில்லை யெனில் சத்திரியன் என்று கூறப்படுவீர்கள், பிராமணர்கள் அல்ல. பிராமணர்கள் தேவதைகளாக ஆவர், சத்திரியர் சத்திரியராக ஆகிவிடுவர்.

கேள்வி: உலகை மாற்றுபவராக ஆவதற்கு முன் எந்த ஒரு மாற்றம் கொண்டு வரும் சக்தி தேவை?

பதில்: உலகை மாற்றுபவராக ஆவதற்கு முன் தனது சன்ஸ்காரங்கள் மாற்றுவதற்கான சக்தி தேவை. திருஷ்டி மற்றும் விருத்தியில் மாற்றம் தேவை. நீங்கள் பார்க்கக் கூடியவர்கள், இந்த திருஷ்டியின் மூலம் பார்க்கக் கூடியவர்கள். தெய்வீக் கண்களினால் பாருங்கள், இந்த சரீர கண்களினால் அல்ல. தெய்வீகக் கண்களினால் பார்க்கும் போது தானாகவே தெய்வீக ரூபம் தென்படும். சரீர கண்கள் சரீரத்தைத் தான் பார்க்கும், சரீரத்தைப் பற்றியே சிந்திக்கும் - இந்த காரியம் பரிஸ்தா அல்லது பிராமணர்களுடையது அல்ல.

கேள்வி: தங்களுக்குள் சகோதரன், சகோதரி என்ற சம்பந்தம் இருந்தாலும் எந்த தெய்வீகக் கண்களினால் பார்க்கும் போது திருஷ்டி அல்லது விருத்தி ஒருபோதும் சஞ்சலம் ஆகாது?

பதில்: சரீரமுடைய ஒவ்வொரு பெண்ணையும் சக்தி ரூபமாக, ஜெகத்தாயின் ரூபத்தில், தேவியின் ரூபத்தில் பாருங்கள் - இதுவே தெய்வீகப் பார்வையினால் பார்ப்பதாகும். சக்தியின் மூன் யாராவது அசுர விருத்தியுடன் வந்தால் அழிந்து விடுவர். ஆகையால் நமது சகோதரி அல்லது ஆசிரியர் அல்ல, ஆனால் சிவசக்தியாக இருக் கின்றார். தாய்மார்கள், சகோதரிகளும் தங்களது சிவசக்தி சொரூபத்தில் நிலைத்திருக்க வேண்டும். என்னுடைய விசேஷமான சகோதரர், விசேஷ மாணவன் அல்ல, அவர் மகாவீரராக இருக்கின்றார் மற்றும் சிவசக்தியாக இருக்கின்றார்.

கேள்வி: மகாவீரரின் விசேஷதா என்ன?

பதில்: அவரது உள்ளத்தில் சதா ஒரு இராமர் இருப்பார். மகாவீர் இராமருடையவர், சக்திகளும் சிவனுக்குடையவர்கள். எந்த ஒரு சரீரதாரியைப் பார்த்தாலும் நெற்றியில் ஆத்மாவைப் பாருங்கள். ஆத்மாவுடன் பேச வேண்டுமே தவிர சரீரத்துடன் அல்ல. பார்வை நெற்றி மணியின் மீது செல்ல வேண்டும்.

கேள்வி: எந்த ஒரு சப்தத்தை சோம்பல் ரூபத்தில் பயன்படுத்தாமல் ஒரு எச்சரிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். அது எது?

பதில்: புருஷார்த்தி என்ற சப்தத்தை சோம்பல் ரூபத்தில் பயன்படுத்தாமல் ஒவ்வொரு விசயத் திலும் திட சங்கல்பம் உடையவராக ஆக வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இருங்கள். எது செய்தாலும், சிரேஷ்ட காரியம் தான் செய்ய வேண்டும். சிரேஷ்ட நிலை தான் அடைய வேண்டும். ஓம்சாந்தி.
 

வரதானம்:
விகாரங்களின் வம்சத்தின் அம்சத்தையும் அழித்து விடக் கூடிய சர்வ சமர்ப்பணம் அல்லது டிரஸ்டி ஆகுக.

சிலர் பழைய சன்ஸ்காரங்களின் சொத்தை தேவைப்படும் என்று நினைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றனர். பிறகு மாயையும் ஏதாவது ரூபத்தில் பிடித்து விடுகிறது. பழைய ரிஜிஸ்டரின் ஒரு சிறிய துண்டையும் பிடித்து விடும், மாயை மிகவும் வேகமாக இருக்கிறது. அதன் கண்டறியும் சக்தி ஒன்றும் குறைந்தது கிடையாது. ஆகையால் விகாரங்களின் வம்சத்தின் அம்சத்தையும் அழித்து விடுங்கள். எந்த ஒரு மூலையிலும் சிறிதும் பழைய பொக்கிஷத்தின் அடையாளம் இருக்கக் கூடாது - இது தான் சர்வ சமர்ப்பணம், டிரஸ்டி அல்லது யக்ஞ சிநேகி என்று கூறப் படுகிறது.

சுலோகன்:
ஒருவரது விசேஷதாவின் காரணத்தினால் அவர் மீது விசேஷ அன்பு கொள்வது கூட பற்று ஆகும்