காலை முரளி                  10.11.2019           அவ்யக்த பாப்தாதா,  

 மதுபன்  ரிவைஸ்    06.03.1985


 

சங்கமயுகம் உற்சவத்திற்கான யுகம், பிராமண வாழ்க்கை உற்சாகத்தின் வாழ்க்கை

 

இன்று மிக தூய்மையான மிக உயர்ந்த தந்தை தன்னுடைய ஹோலி அதாவது துய்மையான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த அன்னப் பறவைகளுடன் ஹோலியைக் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறார். திரி மூர்த்தி தந்தை மூன்று விதமான ஹோலியின் தெய்வீக இரகசியத்தைக் கூறுவதற்காக வந்திருக்கிறார். சங்கமயுகமே ஹோலியுகம் தான். சங்கம யுகம் உற்சவத்தின் யுகம். சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுடைய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் உற்சாகம் நிரம்பிய உற்சவம். அஞ்ஞான ஆத்மாக்கள் தன்னை உற்சாகத்தில் கொண்டுவருவதற்காக உற்சவங்களைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களைப் பொறுத்தவரையில் இந்த பிராமண வாழ்க்கை உற்சாகத்தின் வாழ்க்கை. ஊக்கம் குஷியால் நிரம்பிய வாழ்க்கை, எனவே, சங்கம யுகமே உற்சவத்தின் யுகம். ஈஸ்வரிய வாழ்க்கை எப்பொழுதும் ஊக்கம் உற்சாகம் நிறைந்த வாழ்க்கை. எப்பொழுதுமே குஷியில் ஆடிக் கொண்டு ஞானத்தின் சக்திசாலியான அமிர்தத்தை குடித்துக் கொண்டு, சுகம் நிறைந்த பாடலைப் பாடிக் கொண்டு, உள்ளத்தின் அன்பின் பாடலைப் பாடிக் கொண்டு உங்களுடைய இந்த சிரேஷ்ட வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். அஞ்ஞான ஆத்மாக்கள் ஒரு நாள் கொண்டாடுவார்கள் அற்பகாலத்தின் உற்சாகத்தில் வருகிறார்கள். பிறகு எப்படி இருந்தார்களோ மீண்டு:ம் அப்படியே ஆகிவிடுகிறார்கள். நீங்கள் உற்சவத்தைக் கொணண்டாடிக் கொண்டே ஹோலி ஆகிறீர்கள் மற்றவர்களையும் ஹோலி ஆக்குகிறீர்கள். அவர்கள் கொண்டாட மட்டும் செய்வார்கள், ஆனால் நீங்கள் கொண்டாடி விட்டு அந்த மாதிரி ஆகிவிடுகிறீர்கள். மனிதர்கள் மூன்று விதமான ஹோலியைக் கொண்டாடுவார்கள். 1. எரிப்பதற்கான ஹோலி இன்னொன்று வண்ணம் பூசுவதற்கான ஹோலி மூன்றாவது மங்களமான சந்திப்பை செய்வதற்கான ஹோலி இந்த மூன்று விதமான ஹோலி யில் ஆன்மீக இரகசியம் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஸ்தூல ரூபத்தில் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சங்கம யுகத்தில் மகான் ஆத்மாக்கள் நீங்கள் எப்பொழுது தந்தையின் குழந்தையாக ஆகிறீர்களோ அதாவது ஹோலி அதாவது தூய்மையாக ஆகிறீர்கள் என்றால், முதலில் என்ன செய்கிறீர்கள்? முதலில் அனைத்து பழைய சுபாவம் சம்ஸ்காரத்தில் யோக அக்னியில் பஸ்பம் செய்கிறீர்கள் அதாவது எரிக்கிறீர்கள். அதன் பிறகு தான் நினைவு மூலமாக தந்தையின் தொடர்பின் வர்ணம் பூசப்படுகிறது. நீங்களும் முதலில் எரிக்கும் ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள். பிறகு பிரபுவின் தொடர்பில் வண்ணத்தில் வண்ணமயமாக்கப்பட்டுவிடுகிறீர்கள். அதாவது தந்தைக்குச் சமமாக ஆகிவிடுகிறீர்கள். தந்தை ஞானக்கடல் என்றால், குழந்தைகளும் தொடர்பின் பிரபாவத்தில் ஞான சொரூபம் ஆகிவிடுகிறீர்கள். எது தந்தையின் குணமோ அது உங்களுடைய குணமாக ஆகிவிடுகிறது, எது தந்தையின் சக்திகளோ அவை உங்களுடைய பொக்கிஷமாக ஆகிவிடுகிறது. உங்களுடைய சொத்தாக ஆகிவிடுகிறது. அந்த மாதிரி தொடர்பின் வண்ணம் அழியாததாக பூசப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல ஜென்மங்களுக்காக அந்த வண்ணம் அழியாததாக ஆகிவிடுகிறது. மேலும் எப்பொழுது தொடர்பின் வண்ணம் பூசப்பட்டு விடுகிறது என்றால், இந்த ஆன்மீக வர்ணத்தின் ஹோலியைக் கொண்டாடி விடுகிறீர்கள். பிறகு ஆத்மா மற்றும் பரமாத்மாவின், தந்தை மற்றும் குழந்தைகளின் சிரேஷ்ட சந்திப்பின் மேளா எப்பொழுதுமே நடந்து கொண்டே இருக்கிறது.

 

அஞ்ஞான ஆத்மாக்கள் உங்களுடைய இந்த ஆன்மீக ஹோலியை நினைவு ரூபத்தில் கொண்டாடத்தொடங்கி விட்டார்கள். உங்களுடைய நடைமுறை உற்சாகம் நிரம்பிய வாழ்க்கையின் பலவிதமான ரூபத்தில் நினைவுச் சின்னமாக கொண்டாடி அற்பகாலத்திற்காக குஷி அடைந்து விடுகிறார்கள். ஒவ்வொரு அடியிலும் உங்களுடைய சிரேஷ்ட வாழ்க்கையில் என்னென்ன விசேஷங்கள் பிராப்தியானதோ அவற்றை நினைவு செய்து சிறிது நேரத்திற்காக அவர்களோ மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நினைவு சின்னத்தைப் பார்த்து மற்றும் கேட்டு இது நம்முடைய விசேஷங்களின் நினைவு சின்னம் என்று மகிழ்ச்சி அடைகிறீர்கள் தான் இல்லையா! நீங்கள் மாயாவை எரித்தீர்கள், மேலும் அவர்கள் ஹோலிகாவை உருவாக்கி எரித்துவிடுகிறார்கள். அந்தளவு ரமணிகரமான கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதை கேட்டு உங்களுக்கும் நம்முடைய விசயத்தை எப்படி ஆக்கிவிட்டார்கள் என்று சிரிப்பு வரும். ஹோலியின் உற்சவத்தை உங்களுடைய பலவிதமான பிராப்தியின் நினைவின் ரூபத்தில் கொண்டாடுகிறார்கள். இப்பொழுது நீங்கள் எப்பொழுதும் குஷியாக இருக்கிறீர்கள். குஷியின் பிராப்தியின் நினைவு சின்னமாக மிகவும் குஷியை அடைந்து ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். அந்த நேரம் அனைத்து துக்கத்தையும் மறந்து விடுவார்கள். மேலும் சதா காலத்திற்காக துக்கத்தை மறந்து விட்டீர்கள். உங்களுடைய குஷியின் பிராப்தியைக் கொண்டாடுகிறார்கள்.

 

இன்னொரு விசயம் கொண்டாடும் நேரத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் மிகவும் லேசானவர்கள் ஆகி, லேசான ரூபத்தில் கொண்டாடுவார்கள். அன்றைய நாளில் அனைவரின் மன நிலை அதாவது மூடும் லேசாக இருக்கும். அப்படி இது நீங்கள் டபுள் லைட் ஆவதற்கான நினைவு ஆகும். எப்பொழுது நீங்கள் பிரபுவின் தொடர்பு என்ற வண்ணத்தில் வண்ணமாக்கப்பட்டு விடுகிறீர்கள் என்றால் டபுள் லைட் ஆகிவிடுகிறீர்கள் தான் இல்லையா?

 

அப்படி இது உங்களடைய விசேஷத்தின் நினைவுச் சின்னம் ஆகும். இன்னொரு விசயம் இந்த நாளில் சிறியவர்கள் பெரியவர்கள் எந்த சம்மந்தத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சமமான சுபாவத்தில் இருப்பார்கள். சின்னஞ்சிறிய பேரனாக இருந்தாலும் கூட அவரும் தாத்தாவிற்கு வண்ணம் பூசுவார். அனைத்து சம்மந்தங்களின் ஆயுள் உணர்வு மறந்து விடுகிறது. சமமான பாவனையில் வந்து விடுவார்கள். இதுவும் உங்களுடைய விசேஷமான சமமான பாவனை அதாவது சகோதரன் சகோதரன் என்ற நிலை, மேலும் எந்த ஒரு தேகத்தின் சம்மந்தத்தின் பார்வை இல்லை, இது சகோதரன் சகோதரன் என்ற சமமான நிலைக்காக நினைவு சின்னம் ஆகும். இன்னொரு விசயம் இந்த நாளில் பலவிதமான வண்ணங்களினால் பீச்சாங்குழலை நிரப்பி ஒருவர் இன்னொருவர் மேல் வர்ணம் தெளிப்பார்கள். இதுவும் இந்த நேரத்தின் சேவையின் நினைவு சின்னம் ஆகும். எந்த ஒரு ஆத்மாவுக்கும் திருஷ்டி அன்பு சொரூபம் ஆவதற்கான வண்ணத்தை, வண்ணத்தை சுகத்தின், அமைதியின், சக்திகளின் அப்படி எத்தனை வண்ணங்களை வீசுகிறீர்கள். வண்ணம் நிரந்தரமாகவே இருக்கும் அளவிற்கு வண்ணத்தை பூசிவிடுகிறீர்கள், அழிக்க வேண்டியதாக இருக்காது, அதற்காக முயற்சி செய்ய வேண்டியதாக இருக்காது. மேலும் ஒவ்வொரு ஆத்மாவும் நான் எப்பொழுதுமே இந்த வர்ணங்களிலேயே வர்ணம் பூசப்பட்டு இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். எனவே, உங்கள் அனைவரிடமும் ஆன்மீக வண்ணங்களின் ஆன்மீக திருஷ்டியின் பீச்சாங்குழல் இருக்கிறது தான் இல்லையா? ஹோலி விளையாடுவீர்கள் தான் இல்லையா? இந்த ஆன்மீக ஹோலி உங்கள் அனைவரின் வாழ்க்கையின் நினைவுச் சின்னம் ஆகும். பாப்தாதாவுடன் அந்த மாதிரியான மங்களகரமான சந்திப்பை செய்தீர்கள். அந்த சந்திப்பை செய்துக் கொண்டே தந்தைக்குச் சமமாக ஆகிவிட்டீர்கள். அந்த மாதிரியான மங்களகரமான சந்திப்பு செய்தீர்கள். அதன் காரணமாக இணைந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். யாரும் உங்களைப் பிரிக்க முடியாது.

 

இன்னொரு விசயம் இந்த நாள் அனைத்து கடந்த கால விசயங்களை மறப்பதற்கான நாள். 63 ஜென்மங்களின் கடந்த காலத்து விசயங்களை மறந்து விடுகிறீர்கள் இல்லையா? கடந்தவைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறீர்கள். எனவே, ஹோலி என்பதற்கு கடந்தது கடந்ததாக ஆனது என்ற அர்த்தத்தையும் கூறுகிறார்கள். எப்படிப்பட்ட கடுமையான பகைமையையும் மறந்து சந்திப்பை செய்வதற்கான பண்டிகையாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நீங்களும் ஆத்மாவின் எதிரியாகிய அசுர சம்ஸ்காரம், அசுர சுபாவத்தை மறந்து பிரபுவை சந்திப்பதில் செய்வீர்கள் இல்லையா? எண்ண அளவில் கூட பழைய சம்ஸ்காரம் நினைவில் வர வேண்டாம். அப்படி இதையும் நீங்கள் மறப்பதின் விசேஷத்தின் நினைவு சின்னமாக கொண்டாடுகிறார்கள். அப்படி உங்களுடைய விசேஷங்கள் எத்தனை இருக்கின்றன என்று கேட்டீர்களா? உங்களுடைய ஒவ்வொரு குணத்தின் ஒவ்வொரு விசேஷத்தின் கர்மத்தின் வேறு வேறு நினைவுச் சின்னங்களாக ஆக்கிவிட்டார்கள். யாருடைய ஒவ்வொரு காரியத்தின் நினைவு சின்னத்தை நினைவு செய்து மற்றவர்கள் குஷியில் வந்துவிடுகிறார்களோ சுயம் அவர் எவ்வளவு மகானாக இருப்பார்? புரிந்ததா! நான் யார் என்று நீங்களே தெரிந்துக் கொண்டீர்களா? ஹோலியாக இருக்கிறீர்கள் தான், இருந்தாலும் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றன?

 

இரட்டை வெளிநாட்டினர் தன்னுடைய இந்த சிரேஷ்ட தன்மையின் நினைவுச் சின்னத்தைத் தெரியாமல் இருந்த போதிலும், உங்களுடைய நினைவின் மகத்துவத்தை உலகத்தினர் நினைவு செய்து நினைவுச் சின்னத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஹோலி என்றால் என்ன என்று புரிந்ததா? நீங்கள் அனைவருமோ வண்ணங்களினால் வண்ணமயமாக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த மாதிரி அன்பின் வண்ணத்தில் வண்ணமயமாக்கப் பட்டிருக்கிறீர்கள் அதன் காரணமாக தந்தையைத் தவிர வேறு எதுவுமே தென்படுவதில்லை. அன்பிலேயே சாப்பிட்டுக் கொண்டும், சென்றுக் கொண்டும் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருக்கிறீர்கள். உறுதியாக வண்ணம் பூசப்பட்டு விட்டதுதான் இல்லையா? அல்லது உறுதியற்ற நிலையா? எந்த வண்ணம் பூசப்பட்டு உள்ளது உறுதியானதா? அல்லது அழியக் கூடியதா? கடந்ததை கடந்ததாக ஆக்கிவிட்டீர்களா? தவறாகக் கூட பழைய விசயம் நினைவில் வர வேண்டாம். வந்து விட்டது என்ன செய்வது என்று கூறுகிறீர்கள் தான் இல்லையா? இது தவறுதலாக வந்து விட்டது. புதிய ஜென்மம், புதிய விசயங்கள், புதிய சம்ஸ்காரம், புதிய உலகம், இந்த பிராமணர்களின் உலகம் தான் புதிய உலகம். பிராமணர்களின் மொழியும் புதியது. ஆத்மாவின் மொழியும் புதியதுதான் இல்லையா? அவர்கள் என்ன கூறுகிறார்கள் மேலும் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? பரமாத்மாவைப் பற்றியும் அனைத்துமே புதிய விசயங்கள். அப்படி மொழியும் புதியது பழக்கம் நெறிமுறைகளும் புதியது, சம்மந்தம் தொடர்பும் புதியது, அனைத்தும் புதியதாக ஆகிவிட்டது. பழையது முடிவடைந்து விட்டது. புதியது தொடங்கிவிட்டது, புதிய பாடல் பாடுகிறீர்கள் ஏன் என்ற பழைய பாடலைப் பாடுவதில்லை. ஆஹா ! சபாஷ் ஆஹா ! என்பது புதிய பாடல். அப்படி நீங்கள் எந்த பாடல் பாடுகிறீர்கள்? ஐயோ ஐயோ என்ற பாடலை பாடுவதில்லை தான் இல்லையா? உலகத்தில் ஐயோ! ஐயோ! என்று கூறுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள், அது நீங்கள் இல்லை. அப்படி அழியாத ஹோலியைக் கொண்டாடி விட்டீர்கள் என்றால், கடந்ததை கடந்ததாக ஆக்கி சம்பூர்ண தூய்மை ஆகிவிட்டீர்கள்.தந்தையின் தொடர்பின் வண்ணத்தில் வண்ணமயமாக்கிவிட்டீர்கள். அப்படி ஹோலி கொண்டாடி விட்டீர்கள் இல்லையா?

 

எப்பொழுதும் தந்தை மற்றும் நான் சேர்ந்தே இருக்கிறோம். மேலும் முழு சங்கமயுகத்திலும் எப்பொழுதும் சேர்ந்தே இருப்போம். பிரியவே முடியாது. அந்த மாதிரியான ஊக்கம் உற்சாகம் நான் மற்றும் என்னுடைய பாபா என்பது உள்ளத்தில் இருக்கிறது தான் இல்லையா? அல்லது திரைக்குப் பின்னால் மூன்றாவது யாராவது இருக்கிறாரா? எப்பொழுதாவது எலி எப்பொழுதாவது பூனை வெளிப்பட்டு வருகிறதா? அந்த மாதிரி இல்லையே?. அனைத்தும் முடிவடைந்து விட்டது தான் இல்லையா? எப்போது தந்தை கிடைத்து விட்டார் என்றால், அனைத்தும் கிடைத்து விட்டது. மேலும் இன்னும் கிடைப்பதற்கு ஒன்றுமே இல்லை. உறவினர்களும் இல்லை, பொக்கிஷங்களும் இல்லை சக்திகளும் இல்லை, குணங்களும்இல்லை ஞானமும் இல்லை வேறு அடைய வேண்டும் என்ற பிராப்தியும் இல்லை. எனவே இன்னும் வேறு என்ன வேண்டும். இதைத் தான் ஹோலி கொண்டாடுவது என்று கூறுவது. புரிந்ததா?

 

நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள். கவலையற்ற இராஜாக்கள், ஒரு பைசா இல்லாத இராஜாக்கள் துக்கம் இல்லாத உலகத்தின் இராஜாக்கள். அந்த மாதிரி மகிழ்ச்சியில் வேறு யாரும் இருக்க முடியாது. இந்த உலகத்தில் மிகப் பெரிய செல்வந்தனாக இருந்தாலும் மற்றும் உலகத்தில் மிகவும் பெயர் பெற்ற நபராக இருந்தாலும், மிகுந்த சாஸ்திரம் தெரிந்த சாஸ்திரவாதியாக இருந்தாலும், வேத பாடங்களைப் படித்தவராக இருந்தாலும், நௌதா (தீவிர) பக்தனாக இருந்தாலும், நம்பர் ஒன் அறிவியல் விஞ்ஞானியாக இருந்தாலும், எந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும், அந்த மாதிரியான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை இந்த வாழ்க்கையில் கடின உழைப்பு இல்லை. அன்பே அன்பு தான் இருக்கிறது என்ற வாழ்க்கை இருக்க முடியாது. கவலையில்லை ஆனால் நற்சிந்தனையாளர்களாக, நற்சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறீர்கள் அந்த மாதிரி மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை முழு உலகத்தையும் சுற்றி வாருங்கள் ஒருவேளை யாராவது கிடைத்தார்கள் என்றால், அவரை அழைத்து வாருங்கள். எனவேதான் இந்த பாடலைப் பாடுகிறீர்கள் இல்லையா - மதுபன்னில், தந்தையின் உலகத்தில் மகிழ்ச்சியே மகிழ்ச்சிதான் என்று. சாப்பிடுகிறீர்கள் என்றாலும் மகிழ்ச்சியில் சாப்பிடுகிறீர்கள். தூங்குகிறீர்கள் என்றாலும் மகிழ்ச்சியோடு தூங்குகிறீர்கள். மருந்து மாத்திரை எடுத்து துங்குவதற்கான அவசியமே இல்லை. தந்தையுடன் தூங்கிவிட்டீர்கள் என்றால், மாத்திரைகள் எடுக்கவேண்டி இருக்காது. தனியாக தூங்குகிறீர்கள் என்றால் தான் இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. இங்கு வலிக்கிறது என்று கூறுகிறீர்கள். அதனால் மாத்திரை எடுக்க வேண்டி இருக்கிறது. தந்தை உடன் இருக்கிறார் பாபா நான் உங்களுடன் தூங்குகிறேன் அவ்வளவு தான். இது தான் மாத்திரை. அந்த மாதிரி நேரமும் வரும் எப்படி தொடக்க காலத்தில் மருந்துகள் இருந்ததில்லை நினைவிருக்கிறது தான் இல்லையா? தொடக்க காலத்தில் எவ்வளவு காலம் மருந்தே இருக்கவில்லை. ஆம் கொஞ்சம், பாலாடை வெண்ணைய் சாப்பிட்டீர்கள், ஆனால் மருந்து சாப்பிடவில்லை. அப்படி தொடக்கத்தில் எப்படி பயிற்சி செய்விக்கப்பட்டது இல்லையா? இதுவோ பழைய உடல் இறுதியில் அந்த தொடக்க காலத்து நாட்கள் மீண்டும் அதே போல் நடக்கும். காட்சிகளையும் நீங்கள் அனைவரும் மிகவும் விசித்திரமானவர்களைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். அநேகர்களுக்கு ஒரு தடவை காட்சி பார்த்து விட வேண்டும் என்ற இச்சை இருக்கிறது இல்லையா? இறுதி வரையிலும் உங்களில் யார் உறுதியாக இருப்பீர்களோ அவர்களுக்கு காட்சிகள் கிடைக்கும். பிறகு அதே கூட்டத்தில் பக்தியும் நடக்கும், சேவை முடிவடைந்து விடும் இப்பொழுது சேவையின் காரணமாக அங்கு இங்கு கலைந்து சென்றுவிட்டீர்கள். பிறகு அனைத்து நதிகளும் கடலில் வந்து கலந்து விடும். ஆனால் அந்த நேரம் மிக மென்மையானதாக இருக்கும். சாதனங்கள் இருந்தபோதிலும் வேலை செய்யாது எனவே, புத்தியின் தொடர்பு மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது புத்தியில் டச் ஆகிவிட வேண்டும் அதாவது உணர்ந்து விட வேண்டும் ஒரு வினாடி கூட தாமதம் செய்தால் கூட கை விட்டு சென்றுவிடும். எப்படி அவர்களும் எப்படி பொத்தானை அழுக்குவதில் ஒரு வினாடி காலதாமதம் செய்தாலும் கூட ரிசல்ட் என்னவாக இருக்கும். இதுவும் ஒருவேளை புத்தியின் உணர்த்துதல் ஏற்படுத்துவதற்கு ஒரு வினாடி காலதாமதம் ஆனாலும் கூட வந்து சேர்வது கடினம் ஆகிவிடும். அந்த மனிதர்களும் எவ்வளவு கவனத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படி இது புத்தியின் உணர்தல். எப்படி தொடக்க காலத்தில் வீட்டில் அமர்ந்திருக்கும் போதே வாருங்கள் என்று சப்தம் கேட்டீர்கள், அழைப்பு வந்தது வந்து சேர்ந்துவிட்டீர்கள். நீங்களும் உடனே வீட்டை விட்டு வெளியேறினீர்கள். அதே போலவே இறுதியிலும் தந்தையின் செய்தி ஓசை உங்களை வந்து சேரும். எப்படி சாகாரத்தில் அனைத்து குழந்தைகளையும் அழைத்தோம் அதே போல் ஆகார ஒளி வடிவ ரூபத்திலும் அனைத்து குழந்தைகளையும் வாருங்கள்! வாருங்கள்! என்று வரவழைப்போம். வர வேண்டும் மற்றும் உடன் செல்ல வேண்டும். அந்த மாதிரி எப்பொழுதும் தன்னுடைய புத்தி தெளிவாக இருக்க வேண்டும்.

 

மேலும் எங்காவது கவனம் சென்றது என்றால், தந்தையின் அழைப்பு மற்றும் தந்தை சொல்லும் விசயங்கள் தவறி விடும். இவை அனைத்துமே கண்டிப்பாக நடக்கப் போகிறது. நாங்களோ வந்து சேர்ந்து விடுவோம் என்று டீச்சர்கள் யோசிக்கிறார்கள். இந்த மாதிரியும் நடக்கலாம் உங்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபா டைரக்ஷன் கொடுக்கலாம். அங்கு ஏதாவது விசேஷ காரியம் செய்ய வேண்டியதாக இருந்தால், அங்கு ஏதாவது மற்றவர்களுக்கு சக்தி கொடுக்க வேண்டியதாக இருந்தால், யாரையாவது உடன் அழைத்துச் செல்ல வேண்டியதாக இருந்தால் இதுவும் நடக்கும். ஆனால் தந்தையின் டைரக்ஷன் பிராமணம் நீங்கள் இருக்க வேண்டும். மன்மத் படி அதாவது மனம் சொல்லும் வழிப்படி பற்றுதலின் காரணமாக எந்த காரியமும் செய்யாதீர்கள். ஐயோ என்னுடைய சென்டர் என்ற நினைவே வர வேண்டாம். இந்த மாணவனை என்னோடு அழைத்துச் செல்ல வேண்டும் அவர் நெருக்கமானவர் உதவி செய்பவர் என்று அப்படியும் வேண்டாம். யாருக்காகவாவது தாமதித்து நின்றீர்கள் என்றால், தங்கிப் போய் விடுவீர்கள். அந்த மாதிரி தயாராக இருக்கிறீர்கள் இல்லையா? இதைத்தான் எவரெடியாக இருப்பது என்று கூறுவது. எப்பொழுதுமே அனைத்தையும் கட்டிவைத்த நிலையில் இருக்க வேண்டும். அந்த நேரம் இதை செய்து விடட்டுமா, அதைச செய்து விடட்டுமா, சுருக்கத்தில் கொண்டு வருவதற்கான எண்ணமே வர வேண்டாம். சாகார பாபா காலத்தில் நினைவிருக்கிறது தானே, யாரெல்லாம் சேவை செய்யக் கூடிய குழந்தைகளெல்லாம் இருந்தார்களோ அவர்களது ஸ்தூல பெட்டி எப்பொழுதுமே தயாராக இருக்கும். டிரெயின் வருவதற்கு 5 நிமிடம் இருக்கும் மேலும் நீ சேவைக்குச் செல் என்று டைரக்ஷன் கிடைத்தது. அப்படி பெட்டி படுக்கை எப்போதும் தயாராக இருந்தது. ஸ்டேஷனுக்கு முன்பு டிரெயின் வந்து சேர்ந்து விட்டது, அப்போது தான் இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார், அந்த மாதிரி கூட அனுபவம் செய்தீர்கள் இல்லையா? இதுவும் மனதின் நிலையில் பெட்டி படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும். தந்தை அழைத்தவுடன் குழந்தைகள் ஆஜர் என்று இருக்க வேண்டும். இதைத்தான் எவரெடி என்று கூறுவது. நல்லது.

 

அந்த மாதிரி எப்பொழுதும் தொடர்பின் வண்ணத்தில் வண்ணம் பூசப்பட்ட, எப்பொழுதும் கடந்ததை கடந்ததாக ஆக்கி நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை சிரேஷ்டமாக ஆக்கக் கூடிய, எப்பொழுதும் பரமாத்மா சந்திப்பை செய்யக் கூடிய, எப்பொழுதும் ஒவ்வொரு காரியத்திலும் பாபாபவின் நினைவிலிருந்து செய்யக் கூடிய, அதாவது ஒவ்வொரு காரியத்தின் நினைவுச் சின்னத்தை உருவாக்கக் கூடிய, எப்பொழுதும் குஷியில் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சங்கம யுகத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடக் கூடிய, அந்த மாதிரி தந்தைக்குச் சமமான தந்தையின் ஒவ்வொரு எண்ணத்தை புத்தியால் பிடித்துக் கொள்ளக் கூடிய எப்பொழுதும் புத்தியை சிரேஷ்டமாக, தெளிவாக வைக்கக் கூடிய, அந் தமாதிரியான ஹோலி ஹேப்பி அதாவது புனித, சந்தோஷமான அன்னப் பறவைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

பாப்தாதா அனைத்து குழந்தைகளின் கடிதங்களுக்கு பதில் கூறிக் கொண்டே ஹோலிக்கான வாழ்த்துக்கள் கூறினார்.

நாலாபுறங்களிலும் உள்ள பாரதம் மற்றும் வெளிநாட்டின் அனைத்து குழந்தைகளின் அன்பு நிரம்பிய, ஊக்கம் உற்சாகம் நிரம்பிய மேலும் சில இடங்களிலிருந்து தன்னுடைய முயற்சி செய்வதின் உறுதிமொழிகள் நிரம்பிய அனைவரின் கடிதம் மற்றும் செய்தி பாப்தாதாவிற்குக் கிடைத்தது. பாப்தாதா அனைத்து புனித அன்னப் பறவைகளுக்கு எப்பொழுதும் எப்படி தந்தையோ அப்படி நான்! இந்த நினைவின் விசேஷ சுலோகனை வரதானத்தின் ரூபத்தில் நினைவூட்டுகிறார். எந்த ஒரு காரியம் செய்தாலும் எண்ணத்தை வைத்தாலும் முதலில் எது தந்தையின் எண்ணமோ அதுவே இந்த எண்ணமா எது தந்தையின் காரியமோ அதுவே என்னுடைய காரியம் என்று சோதனை செய்யுங்கள். ஒரு நொடியில் சோதனை செய்யுங்கள் பிறகு நடைமுறையில் கொண்டு வாருங்கள். அதனால் எப்பொழுதுமே தந்தைக்குச் சமமான சக்திசாலி ஆத்மாவாகி வெற்றியின் அனுபவம் செய்வீர்கள். வெற்றி எனது பிறப்புரிமை என்று அப்படி சுலபமாக பிராப்தியின் அனுபவம் செய்வீர்கள். நானே வெற்றியின் நட்சத்திரம் என்றால், வெற்றி என்னிடமிருந்து பிரிந்து செல்ல முடியாது. வெற்றியின் மாலை எப்பொழுதும் கழுத்தில் இருக்கிறது என்றால் ஒவ்வொரு காரியத்திலும் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். பாப்தாதா இன்றைய இந்த ஹோலி யின் கூட்டத்தில் நீங்கள் அனைத்து புனித அன்னப் பறவைகளை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் மற்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், அன்போடு அனைவரையும் பார்க்கிறோம் அனைவரின் விசேஷம் என்ற பல வகையான நறுமணங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரின் விசேஷத்தின் எவ்வளவு இனிமையான நறுமணம். தந்தை ஒவ்வொரு விசேஷ ஆத்மாவை விசேஷங்களுடன் பார்த்துக் கொண்டே ஆஹா! என்னுடைய சகஜ யோகி குழந்தையே ஆஹா! என்னுடைய பல கோடி மடங்கு பாக்கியம் நிறைந்த குழந்தையே என்ற இந்த பாடலைத்தான் பாடுகிறார். நீங்கள் அனைவருமே அவரவர்களின் விசேஷத்துடன் மேலும் பெயரையும் சேர்த்து தன்னை நேர் எதிரில் அனுபவம் செய்துக் கொண்டே அன்பு நினைவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள், மேலும் எப்பொழுதும் தந்தையின் பாதுகாப்பு நினைவின் குடை நிழலில் உடன் இருந்து மாயாவுடன் பயப்படாதீர்கள். சிறிய விசயம், பெரிய விசயம் இல்லை. சிறியதைப் பெரியதாக ஆக்காதீர்கள் பெரியதை சிறியதாக ஆக்குங்கள். உயர்ந்த நிலையில் இருந்தீர்களென்றால் பெரியது சிறியதாக ஆகிவிடும். கீழே இருந்தீர்கள் என்றால், சிறியதும் பெரியதாக ஆகிவிடும் எனவே பாப்தாதாவின் துணை இருக்கிறது கை இருக்கிறதென்றால் பயப்படாதீர்கள், அதிகமாக பறந்துக் கொண்டே இருங்கள், பறக்கும் கலையின் மூலம் ஒரு நொடியில் அனைத்தையும் கடந்து சென்று விடுங்கள். தந்தையின் துணை எப்பொழுதுமே பாதுகாப்பாக வைத்திருக்கும் மேலும் வைக்கும். அனைத்து கண்டெடுக்கப்பட்ட செல்லமானவர்களே என்று கூறி பாப்தாதா ஹோலிக்கான வாழ்த்துக்களைக் கூறுகிறார். (பிறகு அனைத்து குழந்தைகளும் பாப்தாதாவுடன் ஹோலி கொண்டினார்கள் மேலும் பிக்னிக் செய்தார்கள்)

 

வரதானம் :

உயர்ந்த தந்தை, உயர்ந்த நான் மற்றும் உயர்ந்த காரியம் இந்த நினைவின் மூலம் சக்திசாலியாக ஆகக் கூடிய தந்தைக்குச் சமமானவர் ஆகுக !

 

எப்படி இன்றைய உலகத்தில் ஏதாவது வி..பியின் குழந்தையாக இருக்கிறார் என்றால் அவர் தன்னையும் வி..பி என்று நினைப்பார், ஆனால் தந்தையை விட உயர்ந்தவரோ யாருமே இல்லை. நான் அந்த மாதிரி உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தை உயர்ந்த ஆத்மா! என்ற இந்த நினைவு சக்திசாலியாக ஆக்கி விடும். உயர்ந்த தந்தை, உயர்ந்த நான் மற்றும் உயர்ந்த காரியம் அந்த மாதிரி நினைவில் இருப்பதனால் எப்பொழுதும் தந்தைக்குச் சமமாக ஆகிவிடுவீர்கள். முழு உலகத்திலும் சிரேஷ்ட மற்றும் உயர்ந்த ஆத்மாக்கள் உங்களைத் தவிர வேறு யாருமே இல்லை எனவே, உங்களுக்குத் தான் மகிமையும் மற்றும் பூஜையும் நடக்கிறது.

 

சுலோகன் :

சம்பூரண நிலை என்ற கண்ணாடியில் தன்னுடைய சூட்சும பற்றுதல்களை சோதனை செய்யுங்கள் மற்றும் அதிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

ஓம்சாந்தி