10-11-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் தந்தையைப் போன்று முரளீதரர்களாக அவசியம் ஆக வேண்டும், முரளீதர் குழந்தைகள் தான் தந்தையின் உதவியாளர்கள் ஆவர், தந்தை அவர்களைப் பார்த்து தான் மகிழ்ச்சி அடைகின்றார்.

கேள்வி:
எந்த குழந்தைகளின் புத்தியானது மிக மிகப் பணிவானதாக ஆகிவிடுகிறது?

பதில்:
யார் அழிவற்ற ஞான ரத்தினங்களை தானம் செய்து உண்மையான தானிகளாக ஆகிறார்களோ, புத்திசாலியான விற்பனையாளர்களாக (சேல்ஸ் மேன்) ஆகிவிடுகிறார்களோ அவர்களது புத்தி மிக மிக பணிவானதாக ஆகிவிடுகிறது. சேவை செய்து செய்து புத்தி சுத்த மடைந்து விடுகிறது. தானம் செய்வதில் ஒருபொழுதும் அபிமானம் வரக் கூடாது. சிவபாபா கொடுத்ததை கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பது புத்தியில் சதா இருக்க வேண்டும். சிவபாபா வின் நினைவு இருப்பதன் மூலம் நன்மை ஏற்பட்டு விடும்.

பாடல்:
நீங்கள் தான் தாயாக.....

ஓம் சாந்தி.
தாய் தந்தையாக இருப்பவர் பாட்டு கேட்க வைப்பதன் மூலம் பெயர் நிரூபணம் ஆகிவிடாது. முதலில் சிவாய நமஹ என்ற பாட்டு கேட்டு பிறகு தாய், தந்தை என்ற பாட்டைக் கேட்க வைப்பதன் மூலம் ஞானம் பற்றி அறிந்து கொள்ள முடியும். மனிதர்கள் கோயில்களுக்குச் செல்கின்றனர், லெட்சுமி நாராயணனின் கோயிலுக்குச் செல்வர், கிருஷ்ணரின் கோயிலுக்குச் செல்வர், அனைவரின் முன் சென்று நீங்கள் தான் தாயாக, தந்தையாக....... என்று அர்த்தம் புரியாமல் கூறிவிடுகின்றனர். முதலில் சிவாய நமஹ என்ற பாட்டு கேட்கச் செய்ய வேண்டும், பிறகு தாயாக, தந்தையாக என்பதை கேட்கச் செய்தால் மகிமை பற்றி அறிந்து கொள்வர். புதிதாக யாராவது வந்தால் இந்தப் பாட்டு மிக நன்றாக இருக்கிறது. புரிய வைப்பதற்கு எளிதாக இருக்கிறது. தந்தையின் பெயரே சிவன், சிவன் சர்வவியாபி என்று கூறுவது கிடையாது. பிறகு அனைவரின் மகிமையும் ஒன்று போல் ஆகிவிடும். அவரது பெயரே சிவன். வேறு யாரும் தன் மீது சிவாய நமஹ என்று வைத்துக் கொள்ள முடியாது. அவரது வழி மற்றும் பாதை அனைவரிடத்திலிருந்தும் தனிப்பட்டது. தேவதைகளிடமிருந்தும் தனிப்பட்டது. இந்த ஞானத்தைக் கற்றுக் கொடுப்பவர் தாய் தந்தை தான். சந்நியாசிகளுக்குத் தாய் கிடையாது, ஆகையால் அவர்கள் இராஜயோகம் கற்பிக்க முடியாது. சிவாய நமஹ! என்று யாரையும் கூற முடியாது. தேகதாரிகளை சிவாய நமஹ என்று கூறுவது கிடையாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். ஆனால் குழந்தைகளாகிய உங்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. சில நல்ல நல்ல குழந்தைகளும் கூட கருத்துக்களைத் தவற விட்டு விடுகின்றனர். தன்னை அதி புத்திசாலிகளாக பலர் நினைத்துக் கொள்கின்றனர். இதில் உள்ளத் தூய்மை தேவை. ஒவ்வொரு விசயத்திலும் உண்மை கூற வேண்டும், சத்தியமாக இருக்க வேண்டும் - இதற்கு நேரம் தேவைப்படுகிறது. தேக அபிமானத்தில் வருவதன் மூலம் பிறகு சம்மந்தம், தொடர்பு போன்ற விசயங்கள் வந்து விடுகிறது. நான் ஆத்ம அபிமானியாக இருக்கிறேன் என்று இப்பொழுது யாரும் கூறி விட முடியாது. பிறகு கர்மாதீத நிலை ஏற்பட்டுவிடும். வரிசைக் கிரமம் இருக்கிறது. சிலர் மிகவும் (பக்குவமற்ற) கெட்ட குழந்தைகளாகவும் இருக்கின்றனர். யார் பாபாவின் சேவை செய்கின்றனர் என்பது தெரிந்து விடுகிறது. எப்பொழுது சிவபாபாவின் உள்ளத்தில் அமர்கிறீர்களோ அப்பொழுது தான் ரூத்ர மாலையின் நெருக்கத்தில் வர முடியும் மற்றும் சிம்மாசனத்திற்குத் தகுதியானவர்களாக ஆவீர்கள். லௌகீக தந்தையின் உள்ளத்திலும் கூட நல்ல குழந்தைகள் தான் அமர்கின்றனர், அவர்கள் தான் தந்தைக்கு உதவியாளர்களாக ஆகிவிடுகின்றனர். இதுவும் எல்லையற்ற தந்தை யின் அழிவற்ற ஞான ரத்தினங்களின் வியாபாரம் ஆகும். ஆக வியாபாரத்தில் உதவி செய்பவர் களைப் பார்க்கும் பொழுது தந்தையும் மகிழ்ச்சி அடைவார். அழிவற்ற ஞான ரத்தினங்களை தாரணை செய்து மற்றும் தாரணை செய்விக்க வேண்டும். நான் காப்பீடு செய்திருக்கிறேன் என்று சிலர் நினைக்கின்றனர். அதற்கான பலன் உங்களுக்குக் கிடைத்து விடும். இங்கு பலருக்கு தானம் செய்ய வேண்டும். தந்தையைப் போன்று அழிவற்ற ஞான ரத்தினங்களை தானம் செய்வதில் தானியாக (உபசாரம் செய்பவர்) ஆக வேண்டும். ஞான ரத்தினங்களினால் பையை நிரப்புவதற் காகவே தந்தை வருகின்றார், செல்வத்திற்கான விசயம் கிடையாது. தந்தைக்கு நல்ல குழந்தைகள் தான் பிடிக்கும். வியாபாரம் செய்யத் தெரியவில்லை எனில் பிறகு அவர்களை முரளீதரனின், வியாபாரியின் குழந்தை என்று எப்படி கூற முடியும்? நான் தொழில் செய்வது கிடையாது என்று வெட்கப்பட வேண்டும். விற்பனையாளர் புத்திசாலியாக இருப்பதைப் பார்த்து, பிறகு அவரையே பங்குதாரர்களாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். சும்மா இருந்தால் பங்குதாரர்களாக ஆகிவிட முடியாது. இந்த தொழிலில் ஈடுபடுவதன் மூலம் புத்தி மிகுந்த பணிவானதாக ஆகிவிடுகிறது. சேவை செய்து செய்து புத்தி சுத்தமானதாக ஆகிவிடுகிறது. பாபா, மம்மா தங்களது அனுபவம் கூறுகின்றனர். பாபா கற்றுக் கொடுப்பவர், இந்த பாபா நன்றாக தாரணை செய்து நன்றாக முரளி கூறுகிறார் என்பதை அறிவீர்கள். சரி, இவரிடத்தில் சிவபாபா இருக்கின்றார், அவரே முரளீ தரனாக இருக்கின்றார், இருப்பினும் இந்த பாபாவும் அறிவார் அல்லவா! இல்லையெனில் இந்த அளவிற்கு பதவி எப்படி அடைவார்? சிவபாபா கூறுவதாக எப்பொழுதும் நினையுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். சிவபாபாவின் நினைவு இருப்பதன் மூலம் உங்களுக்கும் நன்மை ஏற்பட்டு விடும். இவரிடத்தில் சிவபாபா வருகின்றார். மம்மா தனியாகக் கூறுகிறார், மம்மாவின் சாமர்த்தியமாகும். அவரது பெயரை வெளிப்படுத்த வேண்டும், ஏனெனில் பெண்களுக்கு உதவி செய்யப்படுகிறது. எப்படிப்பட்டவளாக இருந்தாலும் நீ என்னுடையவள், பாதுகாப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறுவர் அல்லவா! ஆண்கள் தான் இவ்வாறு கூறுகின்றனர். நீ எப்படிப்பட்டவனாக இருந்தாலும் என்னுடையவர்..... என்று மனைவி கூறுவது கிடையாது. தந்தையும் கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், பாதுகாப்பு கொடுத்தே ஆக வேண்டும். தந்தையின் பெயர் தான் வெளிப்படுகிறது. இங்கு தந்தையின் பெயர் வெளிப்பட்டு இருக்கிறது, பிறகு சக்திகளின் பெயர் வெளிப்படுகிறது. அவர்களுக்கு சேவைக்கான நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. நாளுக்கு நாள் சேவை மிக எளிதானதாக ஆகிவிடும். ஞானம் மற்றும் பக்தி, பகல் மற்றும் இரவு, சத்யுகம் - திரேதா பகல், அங்கு சுகம், துவாபர்-கலியுகம் இரவு, துக்கமாகும். சத்யுகத்தில் பக்தி இருக்காது. எவ்வளவு எளிதாக இருக்கிறது! ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லையெனில் தாரணை செய்ய முடியாது. மிக எளிதாகக் கருத்துக்கள் கிடைக்கின்றன. உற்றார் உறவினர்களிடத்தில் சென்று புரிய வையுங்கள், தனது வீட்டில் உள்ளவர்களை எழுப்புங்கள். நீங்கள் இல்லறத்தில் இருக்கக் கூடியவர்கள். ஆக மிக எளிதாக மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடியும். சத்கதியின் வள்ளல் ஒரே ஒரு பரலௌகீகத் தந்தை ஆவார். அவரே ஆசிரியராக, சத்குருவாக இருக்கின்றார். மற்றவர்கள் அனைவரும் துவாபரத்திலிருந்து துர்க்கதி தான் அளித்து வந்தனர். தீயவர்கள், பாவ ஆத்மாக்கள் கலியுகத்தில் இருக்கின்றனர். சத்யுகத்தில் பாவ ஆத்மாக்களின் பெயரே கிடையாது, இங்கு அஜாமில், அகலிகைகள் போன்ற பாவ ஆத்மாக்கள் உள்ளனர். அரைக்கல்பம் சொர்க்கம் இருந்தது என்று கூறப்படுகிறது. பிறகு பக்தி ஆரம்பமாகும் பொழுது தாழ்வாகிவிடுவது ஆரம்பமாகி விடுகிறது. அவசியம் கீழே விழுந்தே ஆக வேண்டும். சூரியவம்சி கீழே விழுந்து சந்திரவம்சி ஆகின்றனர். பிறகு கீழே விழுந்து கொண்டே வருவீர்கள். துவாபரத்திலிருந்து அனைவரும் கீழே விழ வைப்பவர்களையே சந்தித்து வந்தீர்கள். இதையும் நீங்கள் இப்பொழுது அறவீர்கள். நாளுக்கு நாள் உங்களுக்குள் சக்திகள் வந்து விடும். சாது போன்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கு யுக்திகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். பரம்பிதா பரமாத்மா சர்வவியாபியாக எப்படி இருக்க முடியும்? என்பதை கடைசியில் புரிந்து கொள்வர். புரிய வைப்பதற்கு நிறைய கருத்துக்கள் உள்ளன. பக்தி முதலில் கலப்படமற்றிருந்தது, பிறகு கலப்படம் ஆகிவிட்டது. கலைகள் குறைகின்றன. இப்பொழுது எந்த கலையும் கிடையாது. கலைகள் எவ்வாறு குறைகின்றன? என்பது கல்பமரம் மற்றும் சக்கரம் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. புரிய வைப்பது மிகவும் எளிதாகும், ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லையெனில் புரிய வைக்க முடியாது. ஆத்ம அபிமானிகளாக ஆவது கிடையாது. பழைய தேகத்தில் மாட்டியிருக்கின்றனர். தந்தை கூறுகின்றார் - இந்த பழைய தேகத்திலிருக்கும் பற்றுதலை நீக்கி தன்னை ஆத்மா என்று உணருங்கள். ஆத்ம அபிமானியாக ஆகவில்லையெனில் பதவியும் உயர்ந்த பதவி அடைய முடியாது. மாணவர்கள் கடைசியிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். உற்றார், உறவினர்கள், ஆசிரியர், மாணவர்கள் போன்ற அனைவரும் புரிந்து கொள்வர் இவருக்கு படிப்பில் கவனம் இல்லை. இங்கும் ஸ்ரீமத் படி நடக்கவில்லையெனில் இதே நிலை தான் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். யார் பிரஜைகளாக ஆவார்கள்? யார் வேலைக்கார்களாக ஆவார்கள்? போன்ற அனைத்தும் புரிந்து விடும். தந்தை புரிய வைக்கின்றார் - தனது உற்றார் உறவினர்களுக்கு நன்மை செய்யுங்கள். இது நியமம் ஆகும். வீட்டில் மூத்த சகோதரர் இருக்கிறார் எனில் சிறிய சகோதரருக்கு உதவி செய்வது அவரது கடமையாகும். இதைத் தான் வீட்டிலுள்ளவர்களுக்கு நன்மை செய்வது முத-ல் நம் வீட்டி-ருந்து தானம் செய்வது ஆரம்பமாகட்டும் என்று கூறப்படுகிறது. தந்தை கூறுகின்றார் - செல்வம் கொடுத்தால் செல்வம் குறையாது ...... செல்வம் கொடுக்கவில்லையெனில் கிடைக்கவும் செய்யாது, பதவியும் அடைய முடியாது. வாய்ப்புகள் மிக நன்றாகவே கிடைக்கிறது. கருணை யுள்ளம் உடையவர்களாக ஆக வேண்டும். நீங்கள் சந்நியாசிகள், சாதுக்களின் மீதும் கருணை யுள்ளம் உடையவர்களாக ஆகிறீர்கள். வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் தங்களது பரலௌகீகத் தந்தையை அறியவில்லை, எந்த தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் சதா சுகத்திற்கான ஆஸ்தியைக் கொடுக்கிறாரோ அவரை யாரும் அறியவில்லை. அதிகாரிகளே தரம் தாழ்த்தவர்களாக இருக்கும் பொழுது பிறகு யார் உத்தமர்களாக, உயர்வானவர்களாக ஆக்குவது? என்று கேட்கின்றனர்.

இன்றைய நாட்களில் சாதுக்களுக்கு அதிக மரியாதை இருக்கிறது. தந்தை இவர்கள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துகிறார் என்று நீங்கள் எழுதும் பொழுது அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். நாளடைவில் உங்களது பெயர் பிரபலமாகும். உங்களிடம் பலர் வந்து கொண்டே இருப்பார்கள். கண்காட்சிகளும் உருவாகிக் கொண்டே இருக்கும். கண்டிப்பாக யாராவது விழிப்படைவார்கள். சந்நியாசிகளும் விழிப்படைவார்கள். இருப்பது ஒரே ஒரு கடை எனும் பொழுது எங்கு செல்வார்கள். மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புரிய வைப்பதற்கு நல்ல நல்ல சித்திரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அதனை யார் வேண்டுமென்றாலும் வந்து படிக்க முடியும். எப்பொழுது வைக்கோல் போர் தீ பற்றி எரிகிறதோ அப்பொழுது மனிதர்கள் விழிப்படைவார்கள், ஆனால் மிகவும் தாமதமாக, குழந்தைகளுக்கும் இவ்வாறு தான். கடைசியில் எவ்வளவு தான் ஓட முடியும்! போட்டியிலும் சிலர் முதலில் ஓடி விடுகின்றனர். வெற்றிக்கான பரிசு குறைவானவர்களுக்குத் தான் கிடைக்கிறது. இது உங்களது ஓட்டப் பந்தயமாகும். ஆன்மீக யாத்திரையில் ஓடுவதற்கும் ஞானி ஆத்மாக்கள் தேவை. தந்தையை நினைவு செய்யுங்கள், இதுவும் ஞானம் அல்லவா! இந்த ஞானம் வேறு யாரிடத்திலும் கிடையாது. ஞானத்தின் மூலம் மனிதர்கள் வைரம் போன்று ஆகின்றனர். அஞ்ஞானத்தின் மூலம் சோழி போன்று ஆகின்றனர். தந்தை வந்து சதோ பிரதான பிராப்தியை உருவாக்குகின்றார். பிறகு அது சிறிது சிறிதாக ஆகி குறைந்து கொண்டே செல்கிறது. இவையனைத்து கருத்துக்களையும் தாரணை செய்து நடை முறையில் கொண்டு வர வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மகாதானிகளாக ஆக வேண்டும். பாரதத்தை மகாதானி என்று கூறுகின்றனர். ஏனெனில் இங்கு தான் நீங்கள் தந்தையின் முன் உடல், மனம், பொருள் அனைத்தையும் அர்ப்பணிக்கிறீர்கள். ஆக தந்தை யும் பிறகு அனைத்தையும் அர்பணித்து விடுகிறார். பாரதத்தில் அதிக மகாதானிகள் உள்ளனர். மற்ற மனிதர்கள் அனைவரும் குருட்டு நம்பிக்கையில் மாட்டியிருக்கின்றனர். இங்கு நீங்கள் ஈஸ்வரனின் சரணா கதியில் வந்திருக்கிறீர்கள். இராவணனின் துக்கத்திலிருந்து வந்து இராமரின் அடைக்கலம் அடைந்திருக் கிறீர்கள். நீங்கள் அனைவரும் சோகவனத்தில் இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் அசோக வனத்தில் அதாவது சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். சொர்க்கம் ஸ்தாபனை செய்யும் தந்தையின் சரணாகதியை அடைந்திருக்கிறீர்கள். சிலர் குழந்தைப் பருவத்திலேயே வலுக்கட்டாய மாக வந்து விட்டனர், ஆக அவர்களுக்கு இந்த சரணாகதியின் சுகம் ஏற்படாது. அதிர்ஷ்டத்தில் கிடையாது, அவர்களுக்கு மாயை இராவணனின் சரணம் தேவைப்படுகிறது. ஈஸ்வரனின் சரணாகதியிலிருந்து நீங்கி மாயையின் சரணத்தில் செல்ல விரும்புகின்றனர். ஆச்சரியமான விசயம் அல்லவா!

சிவாய நமஹ! என்ற பாட்டு நன்றாக இருக்கிறது. நீங்கள் இசைக்க முடியும். மனிதர்கள் இதன் பொருளை புரிந்து கொள்ள முடியாது. நாம் ஸ்ரீமத்-ன் ஆதாரத்தில் யதார்த்த பொருளைப் புரிய வைக்க முடியும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவர்கள் பொம்மை விளையாட்டு விளையாடு கின்றனர். நாடகப்படி இந்த பாட்டின் உதவியும் கிடைக்கிறது. தந்தையினுடையவர்களாக ஆகி பிறகு சேவை செய்யவில்லையெனில் உள்ளத்தில் எப்படி அமர முடியும்? சில குழந்தைகள் கெட்டவர்களாக இருக்கின்றனர் எனில் எவ்வளவு துக்கம் கொடுக்கின்றனர்! இங்கு அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள், மனைவி இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள், அழக் கூடாது. நாடகத்தில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். மம்மா, பாபாவும் சென்று விடுவார்கள், ஒப்பற்ற குழந்தைகளும் அட்வான்சில் (முன்னதாகவே) சென்று விடுவார்கள். நடிப்பு நடித்தே ஆக வேண்டும். இதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? சாட்சியாக இருந்து நாம் விளையாட்டைப் பார்க்கிறோம். மனநிலை எப்பொழுதும் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். பாபாவிற்கும் சிந்தனைகள் வருகின்றன, அவசியம் வருவார் என்று சட்டமும் கூறுகிறது. மம்மா, பாபா முழுமையடைந்து விட்டனர் என்பது கிடையாது. முழுமை நிலை கடைசியில் ஏற்படும். இந்த நேரத்தில் யாரும் தங்களை முழுமை யானவர்கள் என்று கூற முடியாது. நஷ்டம் ஏற்பட்டது, சிலர் சண்டையிட்டனர், செய்தித்தாளில் பி.கு பற்றி தவறாக எழுதப்பட்டது, இவை அனைத்தும் கல்பத்திற்கு முன்பும் ஏற்பட்டது. கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது! 100 சதவிகித நிலை கடைசியில் ஏற்படும். எப்பொழுது கருணை உள்ளமுடையவர்களாக ஆகிறீர்களோ, தனக்குச் சமமாக பிறரை ஆக்குகிறீர்களோ அப்பொழுது தான் தந்தையின் உள்ளத்தில் அமர முடியும். காப்பீடு செய்திருப்பது என்பது தனிப்பட்ட விசயமாகும். அது தனக்காக செய்கிறீர்கள். இது ஞான ரத்தினங்களின் தானம் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தந்தையை முழுமையான நினைவு செய்யவில்லையெனில் தலையிலிருக்கும் விகர்மங்களின் சுமை திறக்கப்பட்டு விடும். கண்காட்சிகளிலும் புரிய வைப்பதற்குத் தகுதியானவர்கள் தேவை. புத்திசாலிகளாக ஆக வேண்டும். இரவில் நினைவு செய்வதில் மஜா ஏற்படுகிறது. இந்த ஆன்மீக நாயகனை அதிகாலை நேரத்திலும் நினைவு செய்ய வேண்டும். பாபா, நீங்கள் எவ்வளவு இனிமையானவராக இருக்கிறீர்கள், எப்படியிருந்தவரை எப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்! நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) உள்ளத்தில் சதா சத்தியமானவர்களாக இருக்க வேண்டும். உண்மையே பேச வேண்டும், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். தேக அபிமானத்திற்கு வசமாகி தன்னை அதிபுத்திசாலி என்று புரிந்து கொள்ளக் கூடாது. அகங்காரத்தில் வரக் கூடாது.

2) சாட்சியாக இருந்து விளையாட்டைப் பார்க்க வேண்டும். நாடகத்தில் உறுதியாக இருக்க வேண்டும். எந்த விசயத்திலும் கவலைப்படக் கூடாது. மன நிலை சதா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

வரதானம்:
சுய இராஜ்ய சக்தியின் மூலம் உலக இராஜ்ய சக்தியை பலனாக அடையக் கூடிய மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.

யார் இந்த நேரத்தில் சுய இராஜ்ய சக்தியுடையவராக இருக்கிறார்களோ அதாவது கர்மேந்திரியங் களின் மீது வெற்றி அடைந்திருக்கிறார்களோ அவர்களே உலக இராஜ்ய சக்தியை பலனாக அடைய முடியும். சுய இராஜ்ய அதிகாரி தான் உலக இராஜ்ய அதிகாரி ஆகின்றனர். எனவே ஆத்மாவின் சக்தியாகிய மனம், புத்தி மற்றும் சன்ஸ்காரம் இந்த மூன்றின் மீது அதிகாரி யாக இருக்கின்றேனா? மனம் உங்களை நடத்துகிறதா? அல்லது நீங்கள் மனதை நடத்துகிறீர்களா? சில நேரங்களில் சன்ஸ்காரம் தன் பக்கம் ஈர்த்து விடுவதில்லை தானே? சுய இராஜ்ய ஸ்திதி சதா மாஸ்டர் சர்வ சக்திவான் ஸ்திதியாகும். அதில் எந்த ஒரு சக்தியும் குறை இருக்காது.

சுலோகன்:
என்னுடைய பாபா என்ற அனைத்து பொக்கிஷங்களின் சாவியை சதா கூடவே வைத்திருந்தால் எந்த ஒரு ஈர்ப்பும் ஈர்க்க முடியாது.