11.01.2017    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! 21 பிறவிகளுக்கு சதா சுகமானவர்களாக ஆவதற்கு இந்தக் குறுகிய காலமே உள்ள சமயத்தில் தேகி அபிமானி ஆவதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 

கேள்வி :

தெய்வீக ராஜதானியை ஸ்தாபனை செய்வதற்காக ஒவ்சொருவருக்கும் எந்த ஓர் ஆர்வம் இருக்க வேண்டும்?

 

பதில் :

சேவைக்கான ஆர்வம். ஞான ரத்தினங்களின் தானம் எப்படி செய்வோம்? இந்த ஆர்வம் வைக்க வேண்டும். இது உங்களுடைய மிஷன் - (ஒரு இயக்கம்) தூய்மையற்றவர்களை தூய்மைக்குவதற்கானது. அதனால் குழந்தைகள் இராஜ்யத்தை விரிவு படுத்துவதற்காக நன்கு சேவை செய்ய வேண்டும். எங்கெங்கு மேளா முதலியன நடைபெறுகின்றனவோ, மக்கள் குளிக்கச் செல்கின்றனரோ, அங்கெல்லாம் நோட்டீஸ் அச்சடித்து விநியோகம் செய்ய வேண்டும். தண்டோரா போட வேண்டும்.

 

பாடல் :

உங்களை அடைந்ததால் உலகத்தை அடைந்தோம்........

 

ஓம் சாந்தி.

நிராகார் சிவபாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - குழந்தைகளே, தேகி ஆத்ம அபிமானி ஆகுக. தன்னை ஆத்மா என உணருங்கள். பாபாவை நினைவு செய்யுங்கள். நாம் ஆத்மா, நமக்கு பாபா படிப்பு சொல்லித் தருகிறார். பாபா புரிய வைத்துள்ளார்- சம்ஸ்காரங்கள் அனைத்தும் ஆத்மாவில் தான் உள்ளன. எப்போது மாயா இராவணனின் இராஜ்யம் ஆரம்பமாகிறதோ, அல்லது பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறதோ, அப்போது தேக அபிமானி ஆகிவிடுகின்றனர். பிறகு எப்போது பக்தி மார்க்கத்தின் கடைசி வருகிறதோ, அப்போது பாபா வந்து குழந்தைகளுக்குச் சொல்கிறார் - இப்போது தேகி அபிமானி ஆகுங்கள். நீங்கள் ஜபம், தவம், தான-புண்ணியம் முதலியன செய்திருக்கிறீர்கள். அதனால் எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. 5 விகாரங்கள் உங்களுக்குள் பிரவேசமானதால் நீங்கள் தேக அபிமானி ஆகி விட்டிருக்கிறீர்கள். இராவணன் தான் உங்களை தேக அபிமானி ஆக்குவது. உண்மையில் அசல் நீங்கள் தேகி அபிமானியாகத் தான் இருந்தீர்கள். மீண்டும் இந்தப் பயிற்சி செய்ய வைக்கப் படுகிறது. அதாவது தன்னை ஆத்மா என உணருங்கள். இந்தப் பழைய சரீரத்தை விட்டு நாம் புதியதை எடுத்துக் கொள்ள வேண்டும். சத்யுகத்தில் இந்த 5 விகாரங்கள் இருப்பதில்லை. தேவி-தேவதைகள் சிரேஷ்ட தூய்மையானவர்கள் எனச் சொல்லப் படுகின்றனர் அவர்கள் சதா ஆத்ம அபிமானியாக இருக்கும் காரணத்தால் 21 பிறவிகளுக்கு சதா சுகமானவர்களாக உள்ளனர். பிறகு எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறதோ, அப்போது நீங்கள் மாறி தேக அபிமானியாக ஆகி விடுகிறீர்கள். இவர்கள் ஆத்ம அபிமானிகள் என்றும் அவர்கள் தேக அபிமானிகள் என்றும் சொல்லப் படுகின்றனர். நிராகாரி உலகத்திலோ தேக அபிமானி மற்றும் ஆத்ம அபிமானியின் கேள்விக்கே இடமில்லை. அதுவே அமைதி உலகமாகவே உள்ளது. இந்த சம்ஸ்காரங்கள் இந்த சங்கமயுகத்தில் தான் உள்ளன. நீங்கள் தேக அபிமானி நிலையில் இருந்து தேகி அபிமானியாக ஆக்கப் படுகிறீர்கள். சத்யுகத்தில் நீங்கள் தேகி அபிமானியாக இருக்கிற காரணத்தால் துக்கத்தை அனுபவிப்பதில்லை. ஏனென்றால் நாம் ஆத்மா என்ற ஞானம் உள்ளது. இங்கோ அனைவரும் தங்களை தேகம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். பாபா வந்து புரிய வைக்கிறார் - குழந்தைகளே, இப்போது தேகி அபிமானி ஆவீர்களானால் விகர்மங்கள் விநாசமாகி விடும். பிறகு நீங்கள் விகர்மாஜீத் ஆகி விடுவீர்கள். சரீரமும் உள்ளது, இராஜ்யமும் செய்கிறீர்கள் என்றால் ஆத்ம அபிமானியாக இருக்கிறீர்கள். இப்போது உங்களுக்குக் கிடைக்கும் இந்தக் கல்வி மூலம் ஆத்ம அபிமானி ஆகி விடுகிறீர்கள். சதா சுகமாக இருக்கிறீர்கள். ஆத்ம அபிமானியாக இருப்பதன் மூலம் தான் உங்கள் விகர்மங்கள் விநாசமாகின்றன. அதனால் பாபா புரிய வைக்கிறார்-என்னை நினைவு செய்து கொண்டே இருப்பீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். அவர்கள் போய் கங்கா ஸ்நானம் செய்கின்றனர். அதன் மூலம் விகர்மங்கள் விநாசமாவதற்கு. அது ஒன்றும் பதீத-பாவனியோ கிடையாது. யோக அக்னியும் இல்லை, இது போன்று சந்தர்பங்களின் போது குழந்தைகள் உங்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. எப்படி சமயமோ அப்படி சேவை. எவ்வளவு ஏராளமான மனிதர்கள் ஸ்நானம் செய்வதற்காகச் சென்றிருப்பார்கள்! கும்பமேளாவில் எல்லா இடங்களிலும் போய்க் குளிக்கின்றனர். சிலர் கடல், சிலர் நதிகளிலும் போய்க் குளிக்கச் செல்கின்றனர். ஆக, அனைவருக்கும் கொடுப்பதற்காக எவ்வளவு நோட்டீஸ்கள் அச்சடிக்க வேண்டியதிருக்கும். நிறைய நோட்டீஸ்களை விநியோகிக்க வேண்டும். பாயின்ட் இது தான் இருக்க வேண்டும் - சகோதர-சகோதரிகளே, சிந்தனை செய்து பாருங்கள், பதீத-பாவனர், ஞானக்கடல் மற்றும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ள ஞான நதிகள் மூலமாக நீங்கள் தூய்மையாக முடியுமா அல்லது இந்தத் தண்ணீரின் கடல் மற்றும் நதிகள் மூலமாக நீங்கள் தூய்மையாக முடியுமா? இந்தப் புதிரை விடுவித்தால் ஒரு விநாடியில் நீங்கள் ஜீவன்முக்தி அடைய முடியும். இராஜ்ய பாக்கியத்தின் ஆஸ்தியையும் அடைய முடியும். இப்படி-இப்படி நோட்டீஸ்களை ஒவ்வொரு சென்டரிலும் அச்சடிக்க வேண்டும். நதிகளோ எல்லாப் பக்கமும் உள்ளன. நதிகள் வெகுதூரத்திலிருந்து வெளிப் பட்டுள்ளன. நதிகளோ அங்கங்கே அநேகம் உள்ளன. பிறகு ஏன் இந்த நதியில் குளித்தால் தான் தூய்மையாவார்கள் எனச் சொல்கிறீர்கள். குறிப்பாக ஓரிடத்திற்கு இவ்வளவு செலவு செய்து கஷ்டப் பட்டு ஏன் செல்ல வேண்டும்? ஒரு நாள் குளிப்பதால் தூய்மையாகி விடுவார்கள் என்பதெல்லாம் கிடையாது. குளிப்பதோ ஜென்ம-ஜென்மாந்தரமாகச் செய்கின்றனர். சத்யுகத்திலும் குளிக்கின்றனர். அங்கோ எப்போதுமே தூய்மையாகவே உள்ளனர். இங்கோ குளிரில் எவ்வளவு கஷ்டப் பட்டுக் கொண்டு செல்கின்றனர். ஆகவே அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும், பார்வையற்றவர்க்கு ஊன்றுகோல் ஆக வேண்டும். விழிப்படையச் செய்ய வேண்டும். பதீத-பாவனர் வந்து தூய்மையாக்குகிறார். ஆக, துக்கத்தில் இருப்பவர்களுக்கு வழி சொல்ல வேண்டும். இதுபோல சின்னச் சின்ன நோட்டீஸ்கள் அனைத்து மொழிகளிலும் அச்சிடப் பட்டிருக்க வேண்டும். ஒரு லட்சம்-இரண்டு லட்சம் அச்சடிக்க வேண்டும். யாருடைய புத்தியில் ஞானத்தின் நஷா ஏறியுள்ளதோ, அவர்களின் புத்தி வேலை செய்யும். இந்தச் சித்திரங்கள் 2-3 லட்சம் அனைத்து மொழிகளிலும் இருக்க வேண்டும். ஒவ்வோரிடத்திலும் போய் சேவை செய்ய வேண்டும். ஒரே ஒரு பாயின்ட் முக்கியமானதாகும். வந்து புரிந்து கொள்ளுங்கள்-ஒரு விநாடியில் முக்தி-ஜீவன்முக்தி எப்படிக் கிடைக்கின்றது என்று. முக்கிய சென்டர்களின் முகவரிகளைப் போடுங்கள், பிறகு அவர்கள் படித்தாலும் சரி, படிக்கவில்லை என்றாலும் சரி. குழந்தைகள் நீங்கள் திரிமூர்த்தி சித்திரத்தைப் பற்றிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் - பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்பது நிச்சயமாக நடைபெறுகின்றது. நாளுக்கு நாள் மனிதர்கள் புரிந்து கொண்டே செல்வார்கள்-நிச்சயமாக விநாசமோ முன்னால் நின்று கொண்டுள்ளது. இந்தச் சண்டைகள் முதலியன அதிகரித்துக் கொண்டே செல்லும். சொத்துக்களின் சம்மந்தமாகவும் கூட எவ்வளவு சச்சரவுகள் நடைபெறுகின்றன! பிறகு இல்லை என்றால் கொலை கூடச் செய்து விடுகின்றனர். விநாசமோ முன்னாலேயே இருக்கிறது. யார் நல்லபடியாக கீதை, பாகவதம் முதலியவற்றைப் படித்திருப்பார்களோ, அவர்கள் புரிந்து கொள்வார்கள்-நிச்சயமாக இதுவோ இதற்கு முன்பும் கூட நடந்துள்ளது. ஆக, குழந்தைகள் நீங்கள் நல்லபடியாகப் புரிய வைக்க வேண்டும் - தண்ணீரில் குளிப்பதால் மனிதர்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாகி விடுவார்களா அல்லது யோக அக்னி மூலம் தூய்மையாவார்களா? பகவான் சொல்கிறார் - என்னை நினைவு செய்வதால் தான் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். எங்கெல்லாம் உங்களுடைய சென்டர்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் விசேஷமாக வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற நோட்டீஸ்களை அச்சடித்து வெளியிட வேண்டும். மேளாக்களும் அநேகம் நடைபெறுகின்றன, அவற்றிற்கு ஏராளமான பேர் செல்கின்றனர். ஆனால் அவர்கள் புரிந்து கொள்வது கடினம். நோட்டீஸ்களை விநியோகிப்பதற்கும் அநேகர் வேண்டும். அவர்கள் புரிய வைக்க முடியும். அப்படிப்பட்ட இடங்களில் நின்று கொள்ள வேண்டும். இது ஞானரத்தினங்களாகும். சேவைக்கான மிகுந்த ஆர்வம் வைக்க வேண்டும். நாம் நம்முடைய தெய்விக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறோம் இல்லையா? இதுவே மனிதரை தேவதை ஆக்குவதற்கான அல்லது தூய்மையில்லா நிலைமை தூய்மையாக்குவதற்கான மிஷன் (இயக்கம்). இதையும் நீங்கள் எழுத முடியும்-பாபா புரிய வைத்துள்ளார்-மன்மனாபவ. பதீத-பாவனர் எல்லையற்ற தந்தையை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகி விடும். யாத்திரையின் பாயின்ட்டும் கூட குழந்தைகள் உங்களுக்கு அடிக்கடி புரிய வைக்கப் படுகின்றது. பாபாவை அடிக்கடி நினைவு செய்யுங்கள். நினைத்து-நினைத்து சுகம் பெறுங்கள். உடலைப் பற்றிய கவலை, வேதனை அனைத்தும் விட்டுப் போகும். நீங்கள் சதா ஆரோக்கியமானவர்களாக ஆகி விடுவீர்கள். பாபா மந்திரம் தந்திருக்கிறார்-என்னை நினைவு செய்யுங்கள். சிவசிவ என்று சொல்லிக் கொண்டே அமர்ந்து விடுங்கள் என்றல்ல. சிவனுடைய பக்தர்கள் இது போல் சிவசிவ என்று சொல்லிக் கொண்டு மாலை ஜபிக்கின்றனர். உண்மையில் அது ருத்ர மாலை. சிவன் மற்றும் சாகி ராம். மேலே இருப்பது சிவன். மற்றது சின்னச் சின்ன மணிகள், அதாவது ஆத்மாக்கள். ஆத்மா இவ்வளவு சிறிய புள்ளியாக உள்ளது. கருப்புமணிகளின் மாலையும் உள்ளது. ஆக, சிவனுடைய மாலையும் உருவாக்கப் பட்டுள்ளது. ஆத்மா தன்னுடைய தந்தையை நினைவு செய்ய வேண்டும். மற்றப்படி வாயினால் சிவசிவ என்று சொல்ல வேண்டியதில்லை. சிவசிவ என்று சொல்வதால் பிறகு புத்தியோகம் மாலையின் பக்கம் சென்று விடும். அர்த்தத்தையோ யாரும் புரிந்து கொள்வதில்லை. சிவசிவ என்று ஜபிப்பதால் விகர்மங்கள் விநாசமாகாது. மாலை சுற்றுகிறவர்களிடம் இந்த ஞானம் கிடையாது-சங்கமயுகத்தில் நேரடியாக சிவபாபா வந்து மாமேகம் (என்னை மட்டும்) நினைவு செய்யுங்கள் என்ற மந்திரம் தராத வரை விகர்மங்கள் விநாசமாகாது. மற்றப்படி யாரேனும் எவ்வளவு தான் உட்கார்ந்து சிவசிவ என்று சொன்னாலும் விகர்மங்கள் விநாசமாகாது. காசியில் சென்றும் அமர்ந்து கொள்கின்றனர். அப்போது சிவகாசி, சிவகாசி என்று சொல்லிக் கொண்டே உள்ளனர். காசியில் சிவனுடைய பிரபாவம் (வசீகர சக்தி) இருப்பதாகச் சொல்கின்றனர். சிவனுடைய கோவில்களையோ மிக உயர்ந்ததாகக் கட்டியுள்ளனர். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள்.

 

நீங்கள் புரிய வைக்க முடியும்-எல்லையற்ற தந்தை சொல்கிறார், என்னிடம் (யோகம்) நினைவு வைப்பதால் நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள். குழந்தைகளுக்கு சேவைக்கான ஆர்வம் இருக்க வேண்டும். பாபா சொல்கிறார், நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வேண்டும். குழந்தைகள் நீங்களும் கூட தூய்மையாக்கும் சேவை செய்யுங்கள். நோட்டீஸ்களை எடுத்துச் சென்று புரிய வையுங்கள். சொல்லுங்கள், இவற்றை நன்றாகப் படியுங்கள். மரணம் முன்னாலேயே நின்று கொண்டுள்ளது. இது துக்க உலகம். இப்போது ஞான ஸ்நானம் ஒரே ஒரு தடவை செய்வதால் விநாடியில் ஜீவன்முக்தி கிடைக்கின்றது. பிறகு நதிகளில் குளிப்பதற்கும் அலைவதற்கும் என்ன தேவை உள்ளது? எங்களுக்கு விநாடியில் ஜீவன்முக்தி கிடைக்கிறது, அதனால் தான் தண்டோரா போடுகிறோம். இல்லையென்றால் இது போல் நோட்டீஸை யாரும் அச்சடிக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு சேவைக்கான ஆர்வம் அதிகம் இருக்க வேண்டும். கேள்விகள் உருவாக்கப் பட்டிருப்பதும் சேவைக்காகத் தான். அநேகருக்கு சேவைக்கான ஆர்வம் இருப்பதில்லை. எப்படி சேவை செய்வது என்பது கவனத்தில் வருவது கூட இல்லை. இதில் மிக நல்ல வியக்கத் தக்க (கூர்மையான) புத்தி வேண்டும். யாருடைய கால்களில் தேக அபிமானம் என்ற விலங்குகள் இடப்பட்டுள்ளனவோ, அவர்கள் தேகி அபிமானி ஆக முடியாது. இவர்கள் போய் என்ன பதவி பெறுவார்கள் என்பது புரிய வைக்கப் படுகின்றது. இரக்கம் வருகிறது. அனைத்து சென்டர்களிலும் பார்க்கப் படுகின்றது - யார் யார் புருஷார்த்தத்தில் வேகமாகச் சென்று கொண்டு இருக்கின்றனர் என்று. சிலரோ எருக்கம்பூவாகவும் உள்ளனர். சிலர் ரோஜாப்பூவாகவும் உள்ளனர். நாம் இன்ன பூவாக இருக்கிறோம். நாம் பாபாவின் சேவை செய்யவில்லை என்றால் புரிந்து கொள்ள வேண்டும், நாம் போய் எருக்கம்பூவாக ஆவோம். பாபாவோ மிக நல்ல முறையில் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் வைரம் போல் ஆவதற்கான புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். சிலரோ உண்மையான வைரமாக உள்ளனர். சிலரோ கருப்பு நிறக் கரியாகவும் உள்ளனர். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நாம் வைரம் போல் ஆக வேண்டும். தன்னைத் தான் கேட்க வேண்டும்-நாம் வைரம் போல் ஆகியிருக்கிறோமா? நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) தேக அபிமானத்தின் விலங்குகளை உடைத்து தேகி அபிமானி ஆக வேண்டும். ஆத்ம அபிமானி நிலையில் இருப்பதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

2) சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும். பாபாவுக்கு சமமாகப் தூய்மையற்றதிலிருந்து தூய்மையாக்குவதற்கான சேவை செய்ய வேண்டும். உண்மையான வைரமாக ஆக வேண்டும்.

 

வரதானம் :

சிரேஷ்ட மற்றும் சுபமான மனோநிலை மூலம் வார்த்தை மற்றும் கர்மத்தை உயர்வானதாக ஆக்கக் கூடிய உலகை மாற்றுபவர் ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் தங்களின் பலவீனமான உணர்வுகளை அகற்றி சுப மற்றும் உயர்வான எண்ணங்களை தாரணை செய்வதற்கான விரதம் மேற்கொள்ளுகின்றனரோ, அவர்களுக்கு இந்த சிருஷ்டியும் கூட உயர்வானதாகத் தென்படும். உள்ளுணர்வின் மூலம் திருஷ்டி மற்றும் செயலுக்கும் கூடத் தொடர்பு உள்ளது. எந்த ஒரு நல்ல அல்லது கெட்ட விஷயம் முதலில் மனதில் தாரணை ஆகின்றது. அதன் பிறகு சொல் மற்றும் செயல் வருகின்றது. மனநிலை உயர்ந்ததாக ஆவதென்றால் சொல் மற்றும் செயல் தானாகவே உயர்வானதாக ஆவதாகும். நல்ல மனோநிலை மூலம் தான் வாயுமண்டலம் உருவாகின்றது. உயர்வான உள்ளுணர்வு என்ற விரதத்தை தாரணை செய்பவர்கள் தாமாகவே உலகை மாற்றுபவர்களாக ஆகின்றனர்.

 

சுலோகன் :

விதேகி அல்லது அசரீரி ஆவதற்கான அப்பியாசம் செய்வீர்களானால் எவருடைய மனதின் உணர்வுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

 

தபஸ்வி மூரத் ஆகுங்கள்

சமயத்தின் சமீபத்தின் பிரமாணம் இப்போது உண்மையான தபஸ்வி ஆகுங்கள். உங்களுடைய உண்மையான தபஸ்யா அல்லது சாதனை தான் எல்லையற்ற வைராக்கியமாகும். இப்போது எல்லையற்ற வைராக்கிய உள்ளுணர்வு மூலம் நாலாபுறமும் தபஸ்யாவின் வாயுமண்டலத்தை உருவாக்குங்கள். உங்களுடைய தபஸ்யா மனசா சேவையின் நிமித்தமாகட்டும்

 

ஒம்சாந்தி