11.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! சதா குஷியில் இருங்கள் மற்றும் பிறருக்கும் கூட குஷியைக் கொடுங்கள், இதுவே அனைவரின் மீதும் இரக்கம் (கிருபை) காட்டுவதாகும். யாருக்கும் வழி காட்டுவது என்பது அனைத்திலும் பெரிய புண்ணியம் ஆகும்.

 

கேள்வி:

எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக யார் இருக்க முடியும்? மகிழ்ச்சி நிறைந்தவராக ஆவதற்கான ஆதாரம் என்ன?

 பதில்:

ஞானத்தில் மிகவும் புத்திசாலியாக இருப்பவர்கள்தான் மகிழ்ச்சி நிறைந்தவராக இருக்க முடியும். அவர்கள் நாடகத்தை கதை போல அறிந்திருப்பார்கள் மற்றும் நினைவு செய்வார்கள். மகிழ்ச்சி நிறைந்தவராக ஆவதற்கு சதா தந்தையின் ஸ்ரீமத்படி நடந்து கொள்ளுங்கள். தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள் மற்றும் தந்தை புரிய வைப்பதை நல்ல விதமாக மனன சிந்தனை செய்யுங்கள். மனன சிந்தனை செய்து செய்து மகிழ்ச்சி நிறைந்தவராக ஆகி விடுவீர்கள்.

 ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுடன் ஆன்மீக உரையாடல் செய்து கொண்டிருக்கிறார். நம்முடைய தந்தை ஒருவரே மற்றும் அவர் படிப்பும் சொல்லித்தருகிறார், ஆசிரியரின் வேலை படிப்பிப்பது. குருவின் வேலை இலட்சியத்தைக் கூறுவது என்பதை குழந்தைகள் அறிவார்கள். இலட்சியத்தையும் குழந்தைகள் புரிந்து கொண்டு விட்டனர். முக்தி ஜீவன் முக்திக்காக நினைவின் யாத்திரை கண்டிப்பாக தேவை. இரண்டுமே சகஜமானதுதான். 84 பிறவிகளின் சக்கரம் சுற்றியபடி இருக்கிறது. இப்போது நம்முடைய 84 பிறவிகளின் சக்கரம் முடிந்து விட்டது, எனவே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ஆனால் பாவாத்மாக்கள் முக்தி, ஜீவன் முக்தியில் திரும்பிச் செல்ல முடியாது. இப்படியாக மனன சிந்தனை செய்ய வேண்டும். யார் செய்கிறார்களோ அவர்கள் அடைவார்கள். குஷியில் கூட அவர்கள்தான் வருவார்கள் மற்றும் பிறரையும் குஷியில் கொண்டு வருவார்கள். வழி காட்டுவதற்காக பிறர் மீதும் இரக்கம் காட்ட வேண்டும். இது புருஷோத்தம சங்கம யுகம் என்று குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதுவும் கூட சிலருக்கு நினைவில் இருக்கிறது, சிலருக்கு இருப்பதில்லை. மறந்து விடுகிறது. இது நினைவில் இருந்தாலே கூட குஷியின் அளவு ஏறிக்கொண்டே இருக்கும். அப்பா, டீச்சர், குரு என்ற ரூபத்தில் நினைவு செய்தாலும் குஷியின் அளவு அதிகரிக்கும். ஆனால் போகப்போக சற்று கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. மலைகளின் மீது ஏறி இறங்குவது போல குழந்தைகளுடைய நிலையும் கூட ஆகிறது. சிலர் மிகவும் உயரத்தில் ஏறுகிறார்கள், பிறகு விழுந்தார்கள் என்றால் முன்பை விட அதிகமாக விழுந்து விடுகின்றனர். சேமித்த வருமானம் உடனே போய்விடுகிறது. எவ்வளவுதான் தான புண்ணியங்கள் செய்கின்றனர், ஆனால் பிறகு புண்ணியம் செய்தபடியே பாவம் செய்யத் தொடங்கி விட்டால் அனைத்து புண்ணியமும் அழிந்து விடுகிறது. அனைத்திலும் பெரிய புண்ணியம் தந்தையை நினைவு செய்வது. நினைவின் மூலம்தான் புண்ணிய ஆத்மா ஆவீர்கள். ஒருவேளை கெட்ட தொடர்பின் மூலம் தவறுகளையே செய்தபடி சென்றீர்கள் என்றால் முன்பைவிட கீழே விழுந்து விடுவீர்கள். பிறகு அந்த கணக்கு சேமிப்பாகி இருக்காது. நஷ்டமாகி விடும். பாவ கர்மம் செய்வதன் மூலம் நஷ்டமாகி விடும். பாவக் கணக்கு நிறைய ஏறி விடும். கணக்குவழக்கு பார்க்கப்படுகிறது அல்லவா! உங்களுடையது புண்ணியக் கணக்காக இருந்தது. பாவம் செய்வதால் அது 100 மடங்காகி விடுகிறது, இன்னும் கூட நஷ்டத்தில் வந்து விடும். பாவம் கூட சில மிகப் பெரியதாகவும், சில இலேசானதாகவும் இருக்கிறது. காமம் மிகப் பெரியது, கோபம் இரண்டாவது, பேராசை அதை விடக் குறைவானது. அனைத்திலும் அதிகமாக காமத்திற்கு வசப்படுவதன் மூலம் சேர்த்து வைத்த சேமிப்பு நஷ்டமாகி விடுகிறது. இலாபத்திற்குப் பதிலாக நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. சத்குருவை நிந்தித்தவர்களுக்கு பதவி கிடைக்காது. தந்தையுடையவர் ஆகி பிறகு விட்டு விடுகின்றனர். என்ன காரணம்? அடிக்கடி காமத்தின் அடி விழுகிறது. இது கடுமையான எதிரியாகும். அதனுடைய கொடும்பாவியைத்தான் எரிக்கின்றனர். கோபம், பேராசையின் கொடும்பாவியை எரிப்பதில்லை. காமத்தின் மீதுதான் முழுமையாக வெற்றி பெற வேண்டும். அப்போது உலகை வென்றவர் ஆவீர்கள். இராவண இராஜ்யத்தில் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி இருக்கும் எங்களை வந்து பாவனமாக்குங்கள் என்று அனைவரும் பாடவும் செய்கின்றனர். தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடிய சீதைகளின் இராமரே (பதீதபாவன சீதாராம்) வாருங்கள். ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை கண்டிப்பாக புதிய உலகை ஸ்தாபனை செய்ய வருவார் என்பதையும் தெரிந்துள்ளனர். ஆனால் (கல்பத்தின் ஆயுள்) அதிகமான காலத்தைக் கொடுத்ததால் அடர்ந்த காரிருள் ஆகி விட்டது. ஞானம் மற்றும் அஞ்ஞானம் உள்ளது அல்லவா! பக்தி அஞ்ஞானமாகும். யாருக்கு பூஜை செய்கின்றனரோ அவர்களையும் தெரிந்து கொள்ளவில்லை எனும்போது அவர்களிடம் ஞானம் எப்படி செல்லும்? ஆகையால் தான புண்ணியங்கள் முதலானவை பலனற்றுப் போகின்றன. அல்ப காலத்திற்காக கொஞ்சம் காகத்தின் எச்சத்திற்குச் சமமான சுகம் கிடைக்கிறது. மற்றபடி துக்கமே துக்கம்தான் உள்ளது. இப்போது தந்தை கூறுகிறார் - என்னை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய அனைத்து துக்கமும் நீங்கி விடும். இப்போது பார்க்க வேண்டும் நாம் எவ்வளவு நினைவு செய்கிறோம், பழையது முடிந்து புதியது சேமிப்பு ஆகியுள்ளது என்று. சிலரோ கொஞ்சம் கூட சேமிப்பதில்லை. நினைவே அனைத்திற்கும் ஆதாரமாகும். நினைவு இன்றி பாவங்கள் எப்படி நீங்கும் அல்லது துண்டிக்கப்படும்? பல பிறவிகளின் பாவங்கள் நிறையவே இருக்கின்றன. இந்தப் பிறவியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதால் பிறவி பிறவிகளின் பாவங்கள் துண்டிக்கப்படாது. இந்தப் பிறவியினுடையது மட்டும் இலேசானதாகும். மற்றபடி நிறைய முயற்சி செய்ய வேண்டும். இத்தனை பிறவிகளின் கணக்கு வழக்கு அனைத்தும் நினைவின் மூலம்தான் லேசாகும். நம்முடைய யோகம் எந்த அளவு உள்ளது என சிந்திக்க வேண்டும். நம்முடைய பிறவி சத்யுகத்தின் ஆரம்பத்தில் இருக்குமா? யார் அதிக முயற்சி செய்கின்றனரோ அவர்கள் தான் சத்யுகத்தின் ஆரம்பத்தில் பிறவி எடுப்பார்கள். அவர்கள் மறைந்திருக்க முடியாது. மற்றபடி அனைவரும் சத்யுகத்தில் வரமாட்டார்கள். காலம் கழித்து பிறவி எடுத்து சிறிய பதவி அடைவார்கள். ஒருவேளை ஆரம்பத்தில் வரவும் செய்கிறார்கள், என்றாலும் வேலைக்காரர்களாக இருப்பார்கள். இது புரிந்து கொள்ளக்கூடிய பொதுவான விஷயம். ஆகையால் தந்தையை மிகவும் நினைவு செய்ய வேண்டும். நாம் புதிய உலகிற்காக உலகின் எஜமான் ஆவதற்காக வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். யார் நினைவு செய்கின்றனரோ அவர்களுக்கு கண்டிப்பாக குஷி இருக்கும். இராஜா ஆக வேண்டுமென்றால் பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் நான் இராஜா ஆகக் கூடியவன் என்று எப்படி நினைக்க முடியும். யார் சென்டர் திறக்கிறார்களோ மற்றும் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கும் மிகுந்த இலாபம் கிடைக்கிறது. அவர்களுக்கும் பிரதிபலன் கிடைத்துவிடுகிறது. சிலர் 3-4 சென்டர்களைக் கூட திறக்கிறார்கள். யார் யார் செய்கிறார்களோ அவர்களுடைய கணக்கு (தகவல்) வருகிறது. அவர்கள் ஒன்று சேர்ந்து மாயையின் துக்கம் நிறைந்த மலையை தூக்குகிறார்கள். இதில் அனைவரும் தோள் கொடுக்கிறார்கள். ஆக, அனைவருக்கும் பிரதிபலன் கிடைக்கிறது. யார் நிறைய பேருக்கு வழி சொல்கிறார்களோ, எவ்வளவு உழைக்கிறார்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி கிடைக்கிறது. அவர்களுக்கு மிகுந்த குஷி ஏற்படுகிறது. நாம் எத்தனை பேருக்கு வழி கூறினோம்? எவ்வளவு பேரை முன்னேற்றினோம்? என்று நம் மனதிற்கு தெரியும். அனைத்தையும் செய்வதற்கான நேரம் இதுதான். அனைவருக்கும் சாப்பிட குடிக்க கிடைக்கத்தான் செய்கிறது. சிலர் ஒரு வேலையும் செய்வதில்லை. மம்மா எவ்வளவு சேவை செய்தார்! சேவை மூலம் அவருக்கு மிகுந்த நன்மை ஏற்பட்டது. நன்மை அடைவதற்கும் கூட சேவை நிறைய தேவைப்படுகிறது. யோகம் கூட சேவை அல்லவா! எவ்வளவு ஆழமான வழிமுறைகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் போகப்போக என்னனென்ன கருத்துக்கள் வெளிப்படும். நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். புதுப்புது கருத்துக்கள் வெளிப்படும். யார் சேவையில் தீவிரமாக இருக்கிறார்களோ அவர்கள் உடனே கருத்துக்களை கிரகித்துக்கொள்கிறார்கள். யார் சேவை செய்வதில்லையோ அவர்களுடைய புத்தியில் எதுவும் பதியாது. புள்ளி ரூபமாக எப்படி நினைப்பது? ஆத்மா எவ்வளவு பெரியது? என்று நீங்கள் யாரிடமாவது கேளுங்கள். ஆத்மாவுடைய தேசம், காலம் கேட்டால் யாருக்கும் சொல்லத் தெரியாது. மனிதர்கள் பரமாத்மாவின் பெயர், ரூபம், தேசம், காலம் கேட்கிறார்கள். நீங்கள் ஆத்மாவைப்பற்றி கேட்டால் குழம்பிப் போவார்கள். இது யாருக்கும் தெரியாது. ஆத்மா இவ்வளவு சிறிய புள்ளி அதில் இவ்வளவு பாகம் அடங்கியிருக்கிறது! இங்கே கூட நிறைய பேருக்கு ஆத்மா பரமாத்மாவைப் பற்றி தெரிவதில்லை. விகாரங்களை மட்டும் சன்யாசம் செய்து விட்டனர். இது கூட அதிசயமாகும். சன்யாசிகளின் தர்மம் தனிப்பட்டது. இந்த ஞானம் உங்களுக்கானதாகும். நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். பிறகு தூய்மையை இழந்துவிட்டீர்கள், மீண்டும் தூய்மையாக வேண்டும் என்று பாபா புரிய வைக்கிறார். நீங்கள் தான் 84 பிறவி சக்கரத்தை சுற்றுகின்றீர்கள். உலகத்தில் இந்த ஞானம் பற்றி கொஞ்சம் கூட தெரியாது. ஞானம் தனிப்பட்டது பக்தி தனிப்பட்டது. ஞானம் முன்னேற்றுகிறது. பக்தி கீழே விழ வைக்கிறது. இரவு பகலுக்கான வேறுபாடு உள்ளது. மனிதர்கள் எவ்வளவு தான் தன்னை வேத சாஸ்திரங்கள் தெரிந்தவர் என்று நினைத்தாலும் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. உங்களுக்கும் இப்போது தான் தெரியவந்துள்ளது. உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். பாபாவை மறப்பதன் காரணத்தினால் தான் குஷி மறைந்து போகிறது. இல்லையானால் அளவற்ற குஷி இருக்க வேண்டும். பாபாவிடமிருந்து உங்களுக்கு இந்த ஆஸ்தி கிடைத்துக்கொண்டிருக்கிறது. பாபா சாட்சாத்காரம் காட்டுகிறார். சாட்சாத்காரம் பார்த்தார்கள் ஆனால், ஸ்ரீமத்படி நடக்கவில்லையென்றால் என்ன இலாபம்! தந்தையை துக்கத்தில் நினைவு செய்கிறார்கள். தந்தையை விடுவிப்பவர், ஹே ராம், ஹே பிரபு என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் யார் என்று தெரிவதில்லை. தன்னை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்று பக்தியில் யாரும் சொல்வதில்லை. அப்படி சொல்லியிருந்தால், பரம்பரை பரம்பரையாக சொல்லி வந்திருப்பார்கள். பக்தி பரம்பரையாக வருகிறது அல்லவா! பக்தி அளவற்றது. ஞானம் ஒன்றுதான். பக்தியின் மூலம் பகவான் கிடைப்பார் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எப்படி? எப்போது? என்பது தெரிவதில்லை. பக்தி எப்போது ஆரம்பமானது? யார் அதிக பக்தி செய்கிறார்கள்? என்பவை யாருக்கும் தெரிவதில்லை. இன்னும் 40 ஆயிரம் வருடங்கள் பக்தி செய்து கொண்டே இருப்போமா என்ன? ஒரு பக்கம் மனிதர்கள் பக்தி செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் நீங்கள் ஞானம் பெற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். மனிதர்களோடு எவ்வளவு தலையை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! இவ்வளவு கண்காட்சிகள் வைக்கிறீர்கள், ஆனால் கூட கோடியில் சிலர் தான் வெளிப்படுகிறார்கள். எவ்வளவு பேரை தனக்கு சமமாக மாற்றி கொண்டு வருகிறோம். உண்மையிலும் உண்மையான பிராமணர்கள் எவ்வளவு பேர்? என்ற கணக்கை இப்போது போட முடியாது. பொய்யான குழந்தைகளும் நிறைய பேர் இருக்கிறார்கள். பிராமணர்கள் கதை சொல்கிறார்கள். பாபா கீதையின் கதையை சொல்கிறார். பாபாவைப் போல குழந்தைகளும் கதை சொல்கிறார்கள். குழந்தைகளுடைய வேலையும் உண்மையிலும் உண்மையான கீதையை சொல்வதாகும். சாஸ்திரங்கள் அனைவருக்கும் இருக்கிறது. உண்மையில் சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத் தினுடையதாகும். ஞானத்தின் புத்தகம் ஒரே ஒரு கீதையாகும். கீதை தாயும் தந்தையுமாக இருக்கிறது. தந்தைதான் வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார். மனிதர்கள் அப்படிப்பட்ட தந்தைக்கு நிந்தனை செய்கிறார்கள். சிவபாபா வினுடைய ஜெயந்தி வைரத்திற்கு சமமானதாகும். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் தான் சத்கதியின் வள்ளல் ஆவார். மற்ற யாருக்கும் மகிமையும் ஏற்பட முடியாது. தேவதைகளுக்கு மகிமை பாடுகிறார்கள். ஆனால் தேவதைகளாக மாற்றக் கூடியவர், ஒரு தந்தை தான். நம்முடைய (கன்ஷ்ட்ரக்ஷன்) தர்ம ஸ்தாபனையும் நடக்கிறது, தீயவைகளின் (டிஷ்டிரக்ஷன்) அழிவு காரியமும் நடக்கிறது. யார் எதையும் புரிய வைக்க முடிய வில்லையோ அவர்கள் ஸ்தூலமான காரியம் (சேவை) செய்யுங்கள். இராணுவத்தில் கூட அனைத்து வேலைகளையும் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். படித்தவர்கள் முன்னால் படிக்காதவர்கள் சுமையை தூக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மம்மா பாபா என்ன செய்கிறார்களோ அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். யார் நெருக்கமான குழந்தைகள் என்று நீங்களே புரிந்து கொள்ள முடியும். பாபாவிடம் கேட்டால் பாபா கூட இவரைப் பின்பற்றுங்கள் என்று பெயரைச் சொல்வார். யார் சேவாதாரி இல்லையோ அவர்கள் மற்றவர்களுக்கு என்ன புரிய வைக்க முடியும். அவர்கள் இன்னும் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள். தன்னுடைய முன்னேற்றம் செய்ய விரும்பினால், இங்கே செய்து கொள்ள முடியும் என்று பாபா புரிய வைக்க முடியும். நாம் 84 பிறவிகள் எப்படி எடுத்தோம் என்று படங்கள் வைக்கப் பட்டுள்ளது. இப்போது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள் என்றால், மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள். இப்படி ஆக வேண்டும் என்று புரிய வைப்பது எவ்வளவு எளிது. நேற்று இவர்களை பக்தி செய்திருந் தோம். இன்று பக்தி செய்வதில்லை. ஞானம் கிடைத்து விட்டது. இப்படி நிறைய பேர் வந்து ஞானத்தைப் பெறுவார்கள். எந்தளவு நிறைய சென்டர்களை திறப்பீர்களோ அந்தளவு நிறைய பேர் வந்து புரிந்து கொள்வார்கள். கேட்பதன் மூலம் அவர்களுக்கு குஷியின் அளவு அதிகரிக்கும். நரனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். உண்மையான சத்திய நாராயணனின் கதை கூட இருக்கிறது. பக்தியின் மூலம் விழுந்து கொண்டே போகிறார்கள். ஞானம் என்றால் என்ன என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தை யதார்த்தமாக புரிய வைக்கிறார். பாபா சொல்கிறார் - நேற்று உங்களுக்கு இராஜ்யத்தை கொடுத்தேன். பிறகு அந்த இராஜ்யம் எங்கே போனது? இதை நாம் தெரிந்திருக்கிறோம். இது விளையாட்டாகும். ஒரே ஒரு தந்தை தான் முழு விளையாட்டின் இரகசியத்தை சொல்கிறார். நாம் சொல்கிறோம் - பாபா நீங்கள் நாடகத்திற்கு கட்டுப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் தூய்மையற்ற உலகத்தில், தூய்மையற்ற உடலில் வந்துதான் ஆக வேண்டும். ஈஸ்வரனுக்கு நிறைய மகிமை பாடுகிறார்கள். குழந்தைகள் சொல்கிறார்கள் - நாங்கள் உங்களை அழைத்தோம் ஆகையால் எங்களுக்கு சேவை செய்ய, அதாவது எங்களை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்க நீங்கள் வந்து தான் ஆக வேண்டும். கல்ப கல்பமாக எங்களை தேவதையாக மாற்றிவிட்டு நீங்கள் சென்றுவிடுகிறீர்கள். இது ஒரு கதை போல உள்ளது. யார் புத்திசாலிகளோ அவர்களுக்கான ஒரு கதையாகும். குழந்தைகளாகிய நீங்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக ஆக வேண்டும். பாபா கூட நாடகப்படி சேவாதாரி ஆகியுள்ளார். என்னுடைய வழிப்படி நடங்கள் என்று பாபா சொல்கிறார். தன்னைத்தான் ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். தேக அபிமானத்தை விடுங்கள். புதிய உலகத்தில் உங்களுக்கு புதிய சரீரம் கிடைக்கும். பாபா என்ன புரிய வைக்கிறாரோ, அதை நன்றாக சிந்தனை செய்யுங்கள். நாம் இப்படி ஆவதற்காக வந்திருக்கிறோம் என்று புத்தியின் மூலம் புரிந்து கொள்கிறீர்கள். இலட்சியம் முன்னால் இருக்கிறது. பகவானுடைய மகா வாக்கியம், உலகத்து மனிதர்கள் பகவானை மனிதன் என்று நினைக்கிறார்கள் அல்லது நிராகார் என்று சொல்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் கூட நிராகாரி ஆவீர்கள். சரீரத்தை எடுத்து பாகத்தை நடிக்கிறீர்கள். பாபா கூட பாகத்தை நடிக்கிறார். யார் நன்றாக சேவை செய்வார்களோ அவர்களுக்குத் தான் நான் கண்டிப்பாக மாலையின் மணியாக ஆவேன் என்ற நிச்சயம் ஏற்படும். நரனிலிருந்து நாராணன் ஆக வேண்டும். தோல்வி அடைவதன் மூலம் தானாகவே இராமர் சீதை ஆகிவிடுவார்கள். பகவான் படிப்பிக்கிறார் என்றால், நன்றாக படிக்க வேண்டும். ஆனால் மாயையின் எதிர்ப்பு நிறைய ஏற்படுகிறது. மாயை புயலைக் கொண்டுவருகிறது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 தாரணைக்கான முக்கிய சாராம்:

1. ஞான சிந்தனை செய்து அளவற்ற குஷியின் அனுபவம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் வழி சொல்லக் கூடிய இரக்கம் கொள்ள வேண்டும். தீய தொடர்பில் வந்து எந்த ஒரு பாவ காரியமும் செய்யக் கூடாது.

 2. மாயையின் துக்கங்களின் மலையை தூக்குவதற்கு ஒன்று சேர்ந்து தோள் கொடுக்க வேண்டும். சென்டர்களைத் திறந்து பலருக்கு நன்மை செய்ய நிமித்தமான கருவி ஆக வேண்டும்.

 வரதானம்:

பிராமண வாழ்க்கையில் சதா மகிழ்ச்சி மற்றும் கவனம் என்ற மனநிலையில் இருக்கக் கூடிய இணைந்த ரூபதாரி ஆகுக.

 ஒருவேளை ஏதாவது பிரச்சனையின் காரணத்தினால் மகிழ்ச்சியான மனநிலை மாறுகிறது எனில் அதை சதா கால மகிழ்ச்சி என்று கூற முடியாது. பிராமண வாழ்க்கையில் சதா மகிழ்ச்சி மற்றும் கவனமான மனநிலையுடன் இருக்க வேண்டும். மனநிலை மாறக் கூடாது. மனநிலை மாறுகின்ற போது எனக்கு ஏகாந்தம் (தனிமை) தேவை என்று கூறுகின்றனர். இன்று எனது மனநிலை இவ்வாறு இருக்கிறது. தனியாக இருக்கும் போது தான் மனநிலை மாறுகிறது, சதா இணைந்த ரூபத்தில் இருந்தால் மனநிலை மாறாது.

 சுலோகன்:

ஏதாவது ஒரு உற்சவத்தை கொண்டாடுவது என்றாலே நினைவு மற்றும் சேவையின் உற்சாகத்தில் இருப்பதாகும்.

 

 பிரம்மா பாபாவிற்கு சமம் ஆவதற்கான விசேஷ முயற்சி:

 இப்போது தீவிர முயற்சிக்காக நான் டபுள் லைட் பரிஸ்தா என்ற இலட்சியம் வையுங்கள். நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் பரிஸ்தா சொரூபத்தின் அனுபவத்தை அதிகப்படுத்துங்கள். அசரீரிக்கான பயிற்சி செய்யுங்கள். விநாடியில் எந்த எண்ணங்களையும் சமாப்தி செய்வதில், சன்ஸ்காரம், சுபாவத்தில் டபுள் லைட்டாக இருங்கள்.

ஓம்சாந்தி