11.01.2021    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! குழந்தைகளாகிய உங்களை உலகின் எஜமானாக ஆக்குவதற்காக மிகவும் அன்பான சிவபாபா வந்துள்ளார், நீங்கள் அவரின் வழிப்படி (ஸ்ரீமத்) நடந்து செல்லுங்கள்.

 

கேள்வி:

மனிதர்கள் பரமாத்மாவைக் குறித்து ஒன்றுக்கொன்று முரணான எந்த இரு விஷயங்களை சொல்கின்றனர்?

 

பதில்:

ஒரு தரப்பினர் சொல்கின்றனர் - பரமாத்மா அகண்ட ஜோதியாக உள்ளார். மற்றொரு தரப்பினர் சொல்கின்றனர் - அவர் பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர். இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. சரியான ரூபத்தை தெரிந்து கொள்ளாத காரணத்தினால் பதிதராக (தூய்மையற்றவர்களாக) ஆகிக் கொண்டே செல்கின்றனர். தந்தை வரும்போது தனது சரியான அறிமுகத்தைக் கொடுக்கிறார்.

 

பாடல்: இறந்தாலும் உங்கள் மடியில். . . .

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யாராவது இறக்கும் போது தந்தையிடம் பிறவி எடுக்கின்றனர். சொல்லும் போது தந்தையிடம் பிறவி எடுத்தார் என்றே சொல்வார்கள், தாயின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. வாழ்த்துகள் தந்தைக்குக் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது நாம் ஆத்மாக்கள் என தெரிந்திருக்கிறீர்கள், அது சரீரத்தின் விசயமாகி விட்டது. ஒரு சரீரத்தை விடுத்து மற்றொரு தந்தையிடம் செல்கின்றனர். நீங்கள் 84 பிறவிகள் எடுத்து 84 தந்தைகளை அடைந்தீர்கள். உண்மையில் நீங்கள் நிராகார தந்தையின் அசலான குழந்தைகள். ஆத்மாக்களாகிய நீங்கள் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள். நிர்வாண தாமம் அல்லது சாந்தி தாமம் என சொல்லக் கூடிய அந்த இடத்தில் வசிப்பவர்கள். உண்மையில் நீங்கள் அங்கே வசிப்பவர்கள். தந்தையும் அங்கே வசிக்கிறார். இங்கே வந்து லௌகிக தந்தையின் குழந்தைகள் ஆகும்போது அந்த தந்தையை மறந்து விடுகின்றீர்கள். சத்யுகத்தில் கூட நீங்கள் சுகம் மிக்கவர்களாக ஆகும்போது அந்த பரலௌகிக தந்தையை மறந்து விடுகின்றீர்கள். சுகத்தில் அந்த தந்தையைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. துக்கத்தில் நினைவு செய்கின்றனர். மேலும் நினைவும் கூட ஆத்மாதான் செய்கிறது. லௌகிக தந்தையை நினைவு செய்யும்போது புத்தி சரீரத்தின் பக்கம் இருக்கிறது. இந்த பாபா அந்த பாபாவை நினைவு செய்யும்போது ஓ பாபா ! என சொல்வார். இருவருமே பாபாதான். பாபா என்பதே சரியான வார்த்தையாகும். அவரும் தந்தை, இவரும் தந்தை. ஆத்மா அந்த ஆன்மீகத் தந்தையை நினைக்கும்போது புத்தி அங்கே செல்கிறது. இதை தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்போது பாபா வந்துள்ளார், நம்மை தன்னுடையவர்களாக ஆக்கியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். முதன் முதலில் நான் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பினேன். நீங்கள் மிக மிக செல்வந்தர்களாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து நாடகத்தின் திட்டத்தின்படி நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாக ஆகியுள்ளீர்கள். இப்போது நாடகத்தின்படி துக்கத்தின் உலகம் அழிய வேண்டியுள்ளது. உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே சதோபிரதானமாக இருந்தன, பிறகு தங்க யுகத்திலிருந்து வெள்ளி யுகத்திற்கு ஆத்மா வரும்போது சரீரமும் வெள்ளி யுகத்தில் வந்தது, பிறகு தாமிர யுகத்தில் வந்தது. இப்போது உங்களுடைய ஆத்மா முற்றிலுமே பதிதமாகி விட்ட போது சரீரமும் கூட பதிதமாக உள்ளது - யாரும் விரும்பாத 14 காரட் தங்கத்தைப் போல. அது கருப்பாகி விடுகிறது. நீங்களும் கூட இப்போது கருப்பாக இரும்பு யுகத்தவர்களாக ஆகி விட்டீர்கள். இப்போது ஆத்மா மற்றும் சரீரம் இப்படி கருப்பாகி விட்டிருக்கும்போது எப்படி தூய்மையாகும்? ஆத்மா தூய்மையடையும் போது சரீரமும் தூய்மையாக கிடைக்கும். அது எப்படி நடக்கும்? கங்கா ஸ்நானம் செய்வதன் மூலமா? அல்ல. ஓ பதீத பாவனா ! என்றே கூக்குரலிடவும் செய்கின்றனர். இதை ஆத்மா சொல்கிறது. புத்தி பரலௌகிக தந்தையிடம் சென்று விடுகிறது - ஓ பாபா ! வாருங்கள், பாபா எனும் வார்த்தையே எவ்வளவு இனிமையாக உள்ளது. பாரதத்தில்தான் பாபா, பாபா என சொல்கின்றனர். இப்போது நீங்கள் ஆத்மாபிமானியாகி பாபாவுடையவர்களாக ஆகியுள்ளீர்கள். நான் உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பியிருந்தேன், புதிய சரீரத்தை தாரணை செய்திருந்தீர்கள் என தந்தை சொல்கிறார். இப்போது நீங்கள் என்னவாக ஆகிவிட்டிருக்கிறீர்கள். இந்த விஷயங்கள் எப்போதும் உள்ளுக்குள் இருக்க வேண்டும். பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும். ஓ பாபா ! ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மை இழந்துவிட்டோம், இப்போது நீங்கள் வந்து தூய்மையாக்குங்கள் என நினைவு செய்கின்றனர் அல்லவா. நாடகத்திலும் இந்த நடிப்பு இருக்கிறது, ஆகையால் அழைக்கின்றனர். நாடகத்தின் திட்டப்படி அவர் திரும்பவும் வரும்போது கூட பழைய உலகம் புதியதாக ஆக வேண்டி உள்ளது எனவே சங்கம யுகத்தில்தான் வருவார்.

 

மிக மிக அன்பான பாபா என குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம் இருக்கிறது. அன்பான, மிக அன்பான, மிக மிக அன்பான என சொல்லவும் செய்கின்றனர். லௌகிக சம்மந்தங்களில் முதலாவது தந்தை ஆகும், அவர் பிறவியைக் கொடுக்கிறார். பிறகு ஆசிரியர். அவர் நல்லவர். அவரிடம் படித்து பதவியை அடைகிறீர்கள். ஞானம் வருமானத்திற்கான வழி என சொல்லப் படுகிறது. ஞானம் என்பது அறிவு. யோகம் என்பது நினைவு. ஆக, எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, அவர் உங்களை சொர்க்கத்திற்கு எஜமானாக ஆக்கியிருந்தார், அவரை நீங்கள் இப்போது மறந்து விட்டீர்கள். சிவபாபா எப்படி வந்தார் என யாருக்கும் தெரியாது. படங்களிலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. பிரம்மா மூலம் சிவபாபா ஸ்தாபனை செய்விக்கிறார். கிருஷ்ணர் எப்படி இராஜயோகம் கற்பிப்பார்? இராஜயோகம் கற்பிப்பதே சத்யுகத்திற்காக. எனவே கண்டிப்பாக சங்கமயுகத்தில் தந்தைதான் கற்பித்திருப்பார். சத்யுகத்தை ஸ்தாபனை செய்பவர் பாபா. சிவபாபா இவர் (பிரம்மா) மூலம் செய்விக்கிறார், அவர் செய்து செய்விப்பவர் அல்லவா. அவர்கள் திரிமூர்த்தி பிரம்மா என சொல்லி விடுகின்றனர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் சிவன் அல்லவா. இவர் சாகாரத்தில் (ஸ்தூலத்தில்) இருப்பவர், அவர் நிராகாரமாக இருப்பவர். சிருஷ்டியும் இங்குதான் இருக்கிறது. இந்த சிருஷ்டியினுடையது தான் சக்கரம், அது சுற்றிக் கொண்டே இருக்கும், மீண்டும் மீண்டும் நடந்தபடி இருக்கும். சூட்சும வதனத்தை சிருஷ்டியின் சக்கரம் என பாடப்படுவதில்லை. உலகில் மனிதர்களின் வரலாறு புவியியல் மீண்டும் மீண்டும் நடந்தபடி இருக்கும். சூட்சும வதனத்தில் சக்கரம் எதுவும் இருப்பதில்லை. உலகத்தின் வரலாறு புவியியல் மீண்டும் மீண்டும் நடக்கும் என பாடவும் செய்கின்றன்ர். அது இங்குள்ள விசயமாகும். சத்யுகம்-திரேதா-துவாபர- கலி . . . இடையில் கண்டிப்பாக சங்கமயுகம் தேவை. இல்லாவிட்டால் கலியுகத்தை சத்யுகமாக யார் மாற்றுவார்? நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்க தந்தை சங்கமயுகத்தில் வருகிறார். இது உயர்வான அத்தாரிட்டியான இறைத் தந்தையின் பல்கலைக் கழகமாகும். கூடவே தர்மராஜாவும் இருக்கிறார். குணமற்றவனாகிய எனக்குள் எந்த குணமும் இல்லை என ஆத்மா சொல்கிறது. யார் தேவதைகளின் கோவில்களுக்குச் சென்றாலும் அவர்களுக்கு முன்பாக இப்படி சொல்கின்றனர். சொல்ல வேண்டியது தந்தைக்கு முன்பாக. அவரை விட்டு விட்டு சகோதரர்களை (தேவதைகளை) வந்து பிடித்துக் கொள்கிறார்கள். இந்த தேவதைகள் சகோதரர்கள் அல்லவா. சகோதரர்களிடமிருந்து எதுவும் கிடைக்காது. சகோதரர்களுக்கு பூஜை செய்து செய்து கீழே இறங்கியே வந்தனர். பாபா வந்துள்ளார், அவரிடமிருந்து நமக்கு ஆஸ்தி கிடைக்கிறது என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். தந்தையையே தெரிந்து கொள்வது கிடையாது, எங்கும் நிறைந்தவர் என சொல்லி விடுகின்றனர். ஒரு சிலர் அகண்ட ஜோதி தத்துவம் என சொல்கின்றனர். சிலர் அவர் பெயர் உருவத்திற்கு அப்பாற்பட்டவர் என சொல்கின்றனர். அகண்ட ஜோதி சொரூபம் எனும்போது பெயர் உருவத்திற்கு அப்பாற்பட்டவர் என எப்படி சொல்கிறீர்கள்? தந்தையை அறிந்து கொள்ளாத காரணத்தால்தான் தூய்மை இழந்து விட்டனர். தமோபிரதானமாகவும் ஆகவே வேண்டியுள்ளது. பிறகு தந்தை வரும்போது அனைவரையும் சதோபிரதானமாக ஆக்குகிறார். ஆத்மாக்கள் அனைத்தும் நிராகார உலகத்தில் தந்தையுடன் இருக்கும், பிறகு இங்கே சதோ-ரஜோ-தமோவில் வந்து நடிப்பை நடிக்கின்றன. ஆத்மாதான் தந்தையை நினைவு செய்கிறது. தந்தை வருகிறார், பிரம்மா உடலின் ஆதாரம் எடுக்கிறேன் என சொல்லவும் செய்கிறார். இவர் பாக்கியசாலி ரதமாக இருக்கிறார். ஆத்மா இல்லாமல் ரதம் இருக்க முடியாது. இது ஞானமழை என இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்தார், ஞானத்தின் மூலம் என்ன நடக்கிறது? தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகம் உருவாகிறது. கங்கை-யமுனை சத்யுகத்திலும் இருக்கும். கிருஷ்ணர் யமுனை நதிக்கரையில் விளையாடுகிறார் என சொல்கின்றனர். இப்படி எந்த விசயமும் கிடையாது. அவர் சத்யுகத்தின் இளவரசர். மிகவும் நல்ல முறையில் அவர் வளர்க்கப்படுகிறார், ஏனென்றால் மலர் அல்லவா. மலர்கள் எவ்வளவு நன்றாக அழகாக இருக்கின்றன. முள் நிறைந்த காட்டை தந்தை வந்து மலர்த் தோட்டமாக ஆக்குகிறார், ஆகையால் அவரது பெயர் பபூல் நாத் (முள்ளை மலராக்குபவர்) என வைத்து விட்டுள்ளனர். முட்களை மலராக்குகிறார், ஆகையால் மகிமை பாடுகின்றனர் - முட்களை மலராக்கும் பாபா. இப்போது தந்தையின் மீது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். அந்த லௌகிக தந்தையோ உங்களை சாக்கடையில் போடுகிறார். இந்த தந்தை 21 பிறவிகளுக்கு உங்களை சாக்கடையிலிருந்து வெளியேற்றி தூய்மையாக்குகிறார். அவர் உங்களை தூய்மை இழக்க வைக்கிறார், ஆகவேதான் லௌகிக தந்தை இருந்த போதும் பரலௌகிக தந்தையை ஆத்மா நினைவு செய்கிறது.

 

அரை கல்பம் தந்தையை நினைவு செய்தோம் என நீங்கள் இப்போது அறிகிறீர்கள். தந்தை கண்டிப்பாக வரவும் செய்கிறார். சிவ ஜெயந்தி கொண்டாடுகின்றனர் அல்லவா. நாம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையுடையவராகி இருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். இப்போது நம்முடைய சம்மந்தம் அவருடனும் இருக்கிறது மற்றும் லௌகிக தந்தையுடனும் இருக்கிறது. பரலௌகிக தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மை அடைவீர்கள். அவர் நம்முடைய லௌகிக தந்தை மற்றும் இவர் பரலௌகிக தந்தை என ஆத்மாவுக்குத் தெரியும். பக்தி மார்க்கத்திலும் கூட இது ஆத்மாவுக்குத் தெரியும். ஆகவேதான் ஓ பகவானே, ஓ இறைத் தந்தையே ! என அழைக்கின்றனர். அழிவற்ற தந்தையை நினைவு செய்கின்றனர். அந்த தந்தை வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். இது யாருக்கும் தெரியாது. சாஸ்திரங்களில் யுகங்களுக்கும் கூட மிகவும் நீண்ட ஆயுளைக் கொடுத்து விட்டனர். தந்தை தூய்மையற்றவரை தூய்மைப்படுத்த வருகிறார் என்பது யாருடைய சிந்தனையிலும் வருவதில்லை. ஆக கண்டிப்பாக சங்கம யுகத்தில் வருவார். கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான வருடங்கள் என எழுதி மனிதர்களை முற்றிலும் அடர்ந்த காரிருளில் தள்ளி விட்டனர். தந்தையை அடைவதற்காக அடிவாங்கியபடி இருக்கின்றனர். யார் அதிகம் பக்தி செய்கின்றனரோ, அவர்களுக்கு பகவான் கிடைப்பார் என சொல்கிறார். அனைவரையும் விட அதிக பக்தி செய்பவர்களுக்கு கண்டிப்பாக முன்னதாகவே கிடைக்க வேண்டும். தந்தை கணக்கும் கூட சொல்லியிருக்கிறார் - அனைவரையும் விட முன்னதாக பக்தி நீங்கள் செய்கிறீர்கள். எனவே உங்களுக்குத்தான் முதன் முதலில் பகவான் மூலம் ஞானம் கிடைக்க வேண்டும், நீங்கள்தான் பிறகு புதிய உலகத்தில் இராஜ்யம் செய்வீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், இதில் கஷ்டப்படக் கூடிய விசயம் எதுவுமில்லை. நீங்கள் அரைக் கல்பம் நினைவு செய்தீர்கள் என தந்தை சொல்கிறார். சுகத்தில் யாரும் நினைவு செய்வதே இல்லை. இறுதியில் துக்கம் மிக்கவர்களாக ஆகிவிடும்போது நான் வந்து சுகம் மிக்கவர்களாக ஆக்குகிறேன். இப்போது நீங்கள் பெரிய மனிதர்களாக ஆகிறீர்கள். முதலமைச்சர், பிரதமர் போன்றவர்களின் பங்களாக்கள் எவ்வளவு முதல் தரமாக உள்ளது. அங்கே (சத்யுகத்தில்) பசுக்கள் முதலானவை, (ஆசனங்கள் போன்ற) ஃபர்னிச்சர்கள் முழுவதும் அதுபோல முதல் தரமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக (தேவதைகளாக) ஆகிறீர்கள். அங்கே உங்களுக்கான மாளிகைகள் கூட வைர வைடூரியங்களால் உருவாக்கப் பட்டதாக இருக்கும். அங்கே உங்களுடைய ஃபர்னிச்சர்கள் தங்கத்தால் ஆனதாக முதல் தரமானதாக இருக்கும். இங்கே ஊஞ்சல் முதலானவை அனைத்துமே மிகவும் கீழ்தரமானதாக இருக்கிறது. அங்கேயோ அனைத்து பொருட்களுமே முதல் தரமான வைர வைடூரியங்களால் ஆனதாக இருக்கும். இது ருத்ர ஞான யக்ஞம். சிவனை ருத்ரன் எனவும் சொல்கின்றனர். பக்தி முடிவடையும்போது பகவான் ருத்ர ஞான யக்ஞத்தைப் படைக்கிறார். சத்யுகத்தில் யக்ஞம் அல்லது பக்தியின் விசயமே இருக்காது. இந்த சமயத்தில்தான் தந்தை இந்த அழிவற்ற ருத்ர ஞான யக்ஞத்தைப் படைக்கிறார், பின்னர் இதனுடைய புகழ் பாடப்படுகிறது. பக்தி எப்போதுமே நடந்து கொண்டிருக்காது. பக்தி மற்றும் ஞானம். பக்தி இரவாகும், ஞானம் பகலாகும். தந்தை வந்து பகலாக ஆக்குகிறார் எனும்போது குழந்தைகளுக்கு தந்தையின் மீது எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். பாபா நம்மை உலகின் எஜமானாக ஆக்குகிறார். மிகவும் அன்பான தந்தையாவார். அவரை விடவும் அன்பான பொருள் எதுவும் இருக்க முடியாது. பாபா வந்து எங்களுடைய துக்கத்தை நீக்குங்கள் என்று அரைக் கல்பமாக நினைவு செய்தபடி வந்தீர்கள் - இப்போது தந்தை வந்துள்ளார். நீங்கள் உங்களுடைய இல்லற விசயங்களில் இருக்கத்தான் வேண்டும். இங்கே (மதுபன்) பாபாவுடன் எதுவரை அமர்ந்திருப்பீர்கள். தந்தையுடன் பரமதாமத்தில்தான் இருக்கமுடியும். இங்கே இவ்வளவு குழந்தைகள் எல்லோரும் இருக்க முடியாது. ஆசிரியர் எப்படி கேள்வி கேட்பார்? ஒலிபெருக்கியில் பதில் எப்படி கொடுக்க முடியும்? ஆகையால் கொஞ்சம் கொஞ்சம் மாணவர்களுக்குப் கற்க்கிறார். கல்லூரிகள் நிறைய உள்ளன, பிறகு அனைவருக்கும் பரீட்சை நடக்கிறது. தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இங்கேயோ ஒரு தந்தைதான் கற்பிக்கிறார். துக்கத்தில் அனைவரும் அந்த பரலௌகிக தந்தையை நினைக்கின்றனர். இப்போது இந்த தந்தை வந்து விட்டார். மிகப் பெரிய மகாபாரதச் சண்டையும் கூட கண் முன் இருக்கிறது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் வந்தார் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அது நடக்க வாய்ப்பில்லை. பாவம் குழப்பமாகி விட்டார்கள் அல்லவா. எனினும் கூட கிருஷ்ணா, கிருஷ்ணா என நினைவு செய்தபடி இருக்கின்றனர். இப்போது மிகவும் அன்பான சிவனும் இருக்கிறார், கிருஷ்ணரும் இருக்கிறார். ஆனால் அவரோ நிராகாரமாக இருப்பவர், இவர் சாகாரத்தில் இருப்பவர். நிராகார தந்தை அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். இருவருமே மிகவும் அன்பானவர்கள்தான். கிருஷ்ணரும் உலகின் எஜமான் அல்லவா. அதிகமான அன்பானவர் யார் என இப்போது நீங்கள் தீர்மானிக்க முடியும். சிவபாபாதான் இப்படி தகுதி வாய்ந்தவராக ஆக்குகிறார் அல்லவா. கிருஷ்ணர் என்ன செய்கிறார்? தந்தைதான் அவரை அப்படி உருவாக்குகிறார், எனவே பாடலும் கூட அந்த தந்தையுடையதாக இருக்க வேண்டும். சங்கரின் நடனத்தைக் காட்டுகின்றனர். உண்மையில் நடனம் முதலான விசயம் இல்லை. நீங்கள் அனைவரும் பார்வதிகள் என தந்தை புரிய வைத்துள்ளார். இந்த சிவனாகிய அமர்நாத் உங்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அது நிர்விகாரி உலகம். விகாரத்தின் விசயம் கிடையாது. தந்தை விகாரி உலகத்தைப் படைக்க மாட்டார். விகாரத்தில்தான் துக்கம் உள்ளது. மனிதர்கள் ஹடயோகம் முதலானவைகளை நிறைய கற்கின்றனர். குகைகளில் சென்று அமர்கின்றனர், நெருப்பில் கூட நடந்து செல்கின்றனர். மந்திர தந்திரங்களும் நிறைய இருக்கின்றன. மாயாஜாலத்தின் மூலம் நிறைய பொருட்களை வெளிப்படுத்துகின்றனர். பகவானையும் கூட மந்திரவாதி, ரத்தின வியாபாரி, வியாபாரி என்றெல்லாம் சொல்கின்றனர் எனும்போது கண்டிப்பாக சைதன்யமானவர் அல்லவா. நான் ஆத்மாவாக இருக்கிறேன் என சொல்லவும் செய்கிறார், மந்திரவாதி அல்லவா. மனிதரை தேவதையாக, பிச்சைக் காரரிலிருந்து இளவரசனாக ஆக்குகிறார். இப்படிப்பட்ட மாயாஜாலம் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்

1. மலர்த்தோட்டத்திற்குச் செல்ல வேண்டும், ஆகையால் மணம் வீசும் மலர்களாக வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. ஒரு பரலௌகிக தந்தையுடன் அனைத்து சம்மந்தங்களையும் இணைக்க வேண்டும்.

 

2. சிவபாபா அன்பிலும் அன்பானவர், அந்த ஒருவர் மீது தான் அன்பு செலுத்த வேண்டும். சுகத்தை வழங்கும் வள்ளல் தந்தையை நினைவு செய்ய வேண்டும்.

 

வரதான்:

இந்த உலகப்த்தின் பற்றுதலிலிருந்து விடுபட்டவராகி அவ்யக்த வதனத்தில் உலா வரக்கூடிய பறக்கும் பறவை ஆகுக.

 

புத்தி என்ற விமானத்தின் மூலம் அவ்யக்த வதனம் மற்றும் பரந்தாமத்திற்கு சென்று வருவதற்காக பறக்கும் பறவை ஆகுங்கள். புத்தியின் மூலம் நினைத்த நேரத்தில், விரும்பும் இடத்திற்கு சென்று சேர்ந்து விடலாம். இந்த உலகத்தின் பற்றுதலிலிருந்து முற்றிலும் விடுபட்டு இருக்கும் பொழுது தான் இந்த நிலை ஏற்படும். இது சாரமற்ற உலகமாக இருக்கிறது, இந்த சாரமற்ற உலகத்தில் எந்தவித வேலையில்லாத பொழுது, எந்த பிராப்தியும் இல்லை என்றால், புத்தியின் மூலம் கூட செல்வதை நிறுத்தி விடுங்கள். இது மிக பயங்கரமான நரகமாக இருக்கிறது, இதில் செல்வதற்கான எண்ணம் மற்றும் கனவு கூட வரக்கூடாது.

 

சுலோகன்:

தனது முகம் மற்றும் நடத்தையின் மூலம் சத்திய நாகரீகத்தை அனுபவம் செய்ய வைப்பது தான் சிரேஷ்ட தன்மையாகும்.

 

ஓம்சாந்தி