11.02.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! ஞான வாளில் யோகத்தின் கூர்மை தேவை, அப்போதுதான் வெற்றி கிடைக்கும், ஞானத்தில் யோகத்தின் கூர்மை இருந்தது என்றால் அதனுடைய தாக்கம் கண்டிப்பாக இருக்கும்.

 

கேள்வி:

நீங்கள் இறைவனின் தூதுவர்களாக இருக்கிறீர்கள், நீங்கள் முழு உலகிற்கும் என்ன செய்தியைக் கொடுக்க வேண்டும்?

 

பதில்:

முழு உலகிற்கும் இந்த செய்தியைக் கொடுங்கள் - நீங்கள் அனைவரும் தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள், தேக அபிமானத்தை விடுங்கள், ஒரு தந்தையாகிய என்னை நினைவு செய்தால் உங்களுடைய தலை மேலிருந்து பாவங்களின் சுமை இறங்கி விடும். ஒரு தந்தையின் நினைவின் மூலம் நீங்கள் பாவனராகி (தூய்மையானவராகி) விடுவீர்கள் என்று இறைவன் கூறியுள்ளார். உள்நோக்கு முகமாக உள்ள குழந்தைகள் தான் இப்படி அனைவருக்கும் செய்தி கொடுக்க முடியும்.

 

ஓம் சாந்தி.

எந்த மனிதருமே அவர்கள் தெய்வீக குணமுள்ளவரானாலும் சரி, அசுர குணமுள்ளவரானாலும் சரி, பகவான் என்று சொல்லப்பட மாட்டார்கள் என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். தெய்வீக குணம் நிறைந்தவர்கள் சத்யுகத்தில் இருப்பார்கள், அசுர குணம் நிறைந்தவர்கள் கலியுகத்தில் இருப்பார்கள் என்பதை குழந்தைகள் அறிவார்கள். ஆகையால் பாபா இப்படி எழுதிப் போட வைத்தார் - தெய்வீக குணமுள்ளவராக இருக்கிறீர்களா அல்லது அசுர குணம் நிறைந்தவரா? சத்யுகத்தைச் சேர்ந்தவரா அல்லது கலியுகத்தவரா? இந்த விஷயங்கள் மனிதர்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. நீங்கள் ஏணிப்படிகள் படத்தை வைத்து நல்ல முறையில் புரிய வைக்க முடியும். உங்களுடைய ஞானத்தின் பாணங்கள் மிகவும் நன்றாக உள்ளன, ஆனால் அதில் கூர்மை தேவைப்படுகிறது. வாளில் கூட கூர்மை இருக்கிறது. அதுபோல சிலர் மிகவும் அதிகமான (புத்தி) கூர்மை நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். வெளிநாடு சென்று விட்ட குரு கோவிந்த சிங்கின் வாள் போல. அந்த வாளை எடுத்துக் கொண்டு ஊர்வலம் நடத்துகின்றனர். மிகவும் சுத்தமாக வைக்கின்றனர். இரண்டு பைசாவுக்கான வாள் கூட இருக்கிறது எதில் அதிக கூர்மை இருக்கிறதோ அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். குழந்தைகளிலும் கூட இப்படிப்பட்டவர்கள் உள்ளனர். சிலருக்குள் ஞானம் அதிகம் உள்ளது, யோகத்தின் கூர்மை குறைவாக உள்ளது. பந்தனத்தில் இருப்பவர்கள், ஏழைகள் சிவபாபாவை அதிகமாக நினைவு செய்கின்றனர். அவர்களுக்குள் ஞானம் குறைவாக உள்ளது, யோகத்தின் கூர்மை நிறைய இருக்கிறது. அவர்கள் தமோபிரதானத்தில் இருந்து சதோ பிரதானமாக ஆகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு அர்ஜுனன்- காட்டுவாசி (ஏகலைவன்) உதாரணத்தைக் கூட காட்டுகின்றனர், அது போல. அம்பை எய்வதில் அர்ஜுனனை விடவும் ஏகலைவன் மிகவும் திறமை வாய்ந்தவராக ஆகிவிட்டார். அர்ஜுனன் என்றால் (பாபாவின்) வீட்டில் இருப்பவர்கள். அவர்கள் தினம்தோறும் (பாபா சொல்வதை) கேட்கிறார்கள். அவர்களை விடவும் வெளியில் இருப்பவர்கள் வேகமாகச் சென்று விடுகின்றனர். யாருக்குள் ஞானத்தின் கூர்மை இருக்கிறதோ அவர்கள் முன்னால் மற்றவர்கள் சுமை தூக்கிச் செல்கின்றனர். விதி என்று சொல்வார்கள். யாராவது (தேர்ச்சி அடையாமல்) தவறி விட்டாலோ, திவாலாகி விட்டாலோ அதிர்ஷ்டத்தின் மீது பழி கூறிவிடுகிறார்கள். ஞானத்துடன் கூட யோகத்தின் கூர்மையும் கண்டிப்பாக தேவை. கூர்மை இல்லாவிட்டால் அவர்கள் அரைகுறை ஞானி ஆவார்கள். குழந்தைகளும் உணர்கின்றனர். சிலருக்கு கணவன் மீது, சிலருக்கு வேறு யார் மீதாவது அன்பு ஏற்படுகிறது. ஞானத்தில் மிகவும் வேகமாக இருப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் குழப்பம் இருக்கும். இங்கே முழுக்க முழுக்க சாதாரணமாக இருக்க வேண்டும்.

 

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் எதையும் பாராதது போல (சாட்சியாக) இருக்க வேண்டும். ஒரு தந்தையிடம் தான் அன்பு வைக்க வேண்டும். இதன் அர்த்தமாகத்தான் கை வேலை செய்யட்டும், மனம் நினைவு செய்யட்டும் என்று பாடப்படுகிறது. அலுவலகம் முதலானவற்றில் வேலை செய்தபடி நான் ஆத்மா என்பது புத்தியில் இருக்க வேண்டும். என்னை நினைவு செய்தபடி இருங்கள் என்று பாபா கட்டளை இட்டிருக்கிறார். பக்தி மார்க்கத்தில் கூட வேலை காரியங்கள் செய்தபடி ஏதாவது ஒரு தேவதையை நினைவு செய்தபடி இருக்கின்றனர். அதுவோ கல்லில் செய்த பொம்மை. அதில் ஆத்மா இல்லை. லட்சுமி நாராயணர் பூஜிக்கப்படுகின்றனர். அவர்கள் கூட கல்லினால் ஆன மூர்த்திகள் அல்லவா. சொல்லுங்கள் - இவர்களின் ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றன? கண்டிப்பாக ஏதோ பெயர் உருவத்தில் இருக்கின்றனர் என்று இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் யோக பலத்தின் மூலம் தூய்மையான தேவதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். லட்சியம் குறிக்கோள் கூட இருக்கிறது. மற்றொரு விஷயம், ஞானக்கடல் மற்றும் ஞான கங்கைகள் இந்த புருஷோத்தம சங்கம யுகத்தில்தான் இருக்கின்றனர் என்று தந்தை புரிய வைக்கிறார். ஒரே சமயத்தில் இருக்கின்றனர். ஞானக்கடல் வருவதே கல்பத்தின் இந்த சங்கம யுகத்தில்தான். நிராகார பரமபிதா பரமாத்மா சிவன் ஞானக்கடல் ஆவார். அவருக்கு பேசுவதற்கும் கூட கண்டிப்பாக சரீரம் தேவைப்படுகிறது. மற்றபடி நீரின் விஷயம் எதுவுமில்லை. இந்த ஞானம் உங்களுக்கு கிடைப்பதே சங்கமயுகத்தில்தான். மற்ற அனைவரிடமும் பக்தி உள்ளது. பக்தி மார்க்கத்தவர் கங்கையின் நீரையும் கூட பூஜித்தபடி இருக்கின்றனர். பதீத பாவனர் ஒரு தந்தைதான் ஆவார். அவர் வருவதே ஒரு முறைதான் - பழைய உலகம் மாறவேண்டிய நேரத்தில். இப்போது இதை பிறருக்கு புரிய வைப்பதில் புத்தியும் தேவை. ஏகாந்தத்தில் இருந்து, ஞானக்கடல் பரமபிதா பரமாத்மா ஒரே ஒரு சிவன்தான் என்பதை புரிந்து கொண்டுவிடும்படியாக என்ன எழுதலாம் என்று மனன சிந்தனை செய்ய வேண்டும். அவர் வரும்போது அவருடைய குழந்தைகளாக ஆகக்கூடிய பிரம்மாகுமார்-குமாரிகள் ஞானத்தை தாரணை செய்து ஞான கங்கைளாக ஆகின்றனர். பல ஞான கங்கைகள் இருக்கின்றனர், அவர்கள் ஞானத்தைக் கூறுகின்றனர். அவர்தான் (சிவபாபாதான்) சத்கதியை வழங்க முடியும். தண்ணீரில் குளிப்பதால் தூய்மையாக முடியாது. ஞானம் இருப்பதே சங்கம யுகத்தில் தான். இதை புரிய வைக்க யுக்தி தேவைப்படுகிறது. மிகவும் உள் நோக்கு தன்மை தேவை. சரீரத்தின் உணர்வை விட்டு தன்னை ஆத்மா என புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் நாம் முயற்சியாளர்கள் என்று கூறுகிறோம், நினைவு செய்து செய்து பாவங்கள் அழிந்து விடும், யுத்தம் ஆரம்பமாகிவிடும், அதற்குள் அனைவருக்கும் செய்தி கிடைத்து விட வேண்டும். செய்தியை சிவபாபாதான் கொடுக்கிறார். தன்னை தூதுவர்கள் என்று சொல்கிறார் அல்லவா. நீங்கள் அனைவருக்கும் இந்த செய்தியைக் கொடுக்கிறீர்கள் - தம்மை ஆத்மா என புரிந்து கொண்டு பரமபிதா பரமாத்மாவுடன் நினைவின் தொடர்பை வைத்தீர்கள் என்றால் உங்களுடைய பிறவி பிறவிகளின் பாவங்கள் நீங்கிவிடும் என்று தந்தை உறுதியளிக்கிறார். இதனை தந்தை அமர்ந்து பிரம்மாவின் வாய் மூலம் புரிய வைக்கிறார். கங்கை தண்ணீர் எதை புரிய வைக்கப் போகிறது? எல்லைக்கப்பாற்பட்ட தந்தை எல்லைக்கப்பாற்பட்ட குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - நீங்கள் சத்யுகத்தில் சுகம் நிறைந்தவர்களாக, செல்வந்தர்களாக இருந்தீர்கள், இப்போது துக்கம் நிறைந்தவர்களாக, ஏழைகளாக ஆகிவிட்டீர்கள். இது எல்லைக்கப்பாற்பட்ட விஷயம். மற்றபடி இந்த படங்கள் முதலானவைகள் பக்தி மார்க்கத்தினுடையதாகும். இந்த பக்தி மார்க்கத்தின் தேவையான பொருட்களும் உருவாக வேண்டும். சாஸ்திரம் படிப்பது, பூஜை செய்வது பக்தி அல்லவா. தந்தை கூறுகிறார் - நான் சாஸ்திரம் முதலானவைகளை படிப்பிப்பதில்லை. நான் தூய்மையற்றவர்களாக இருக்கும் உங்களை தூய்மையாக்க தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள் என்று ஞானம் சொல்கிறேன். இப்போது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே தூய்மையற்றிருக்கின்றன. இப்போது தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் இந்த தேவதையாக ஆகி விடுவீர்கள். தேகத்தின் அனைத்து பழைய சம்மந்தங்களிலிருந்தும் பற்று நீங்க வேண்டும். நீங்கள் வந்தீர்கள் என்றால் நாங்கள் வேறு யார் பேச்சையும் கேட்க மாட்டோம், உங்கள் ஒருவருடன் மட்டுமே அனைத்து சம்மந்தங்களையும் வைப்போம், மற்ற அனைத்து தேகதாரிகளையும் மறந்து விடுவோம் என்று பாடவும் செய்கின்றனர் அல்லவா. இப்போது தந்தை உங்களுடைய வாக்குறுதியை உங்களுக்கு நினைவு படுத்துகிறார். என்னுடன் நினைவின் தொடர்பு வைப்பதன் மூலமே உங்களின் பாவ கர்மங்கள் அழியும் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் புதிய உலகின் எஜமானன் ஆகி விடுவீர்கள். இது லட்சியம் மற்றும் குறிக்கோள் ஆகும். ராஜாக்களுடன் பிரஜைகளும் கூட உருவாக வேண்டும். ராஜாக்களுக்கு தாச தாசிகளும் தேவை. தந்தை அனைத்து விஷயங்களையும் புரிய வைத்தபடி இருக்கிறார். நல்ல விதமாக நினைவில் இல்லாமல், தெய்வீக குணங்களை தாரணை செய்யாமல் இருந்தால் எப்படி உயர் பதவியை அடைவீர்கள்? வீட்டில் ஏதாவது ஒரு விஷயத்தில் சண்டை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அல்லவா. உங்கள் வீட்டில் கலகங்கள் நடக்கின்றன, ஆகையால் ஞானம் (புத்தியில்) நிலைப்பதில்லை என்று பாபா எழுதுகிறார். கணவன் மனைவி இருவரும் சரியாக நடக்கிறீர்களா என்று பாபா கேட்கிறார். நடத்தை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். கோபத்தின் அம்சம் கூட இருக்கக் கூடாது. இப்போது உலகத்தில் எவ்வளவு கலவரங்களும் அசாந்தியும் உள்ளது. உங்களில் பலரும் ஞான யோகத்தில் கூர்மையானவராக ஆகிவிட்டால் மேலும் பலர் நினைவு செய்வதில் ஈடுபடுவார்கள். உங்களின் பயிற்சியும் நன்றாக ஆகிவிடும் மற்றும் புத்தியும் விசாலமாகி விடும்.

 

பாபாவுக்கு சிறிய படங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை. அனைத்தும் பெரிய பெரிய படங்களாக இருக்க வேண்டும். வெளியே முக்கியமான இடங்களில் வையுங்கள். நாடகத்தின் பெரிய பெரிய படங்களை வைக்கின்றனர் அல்லவா. கெட்டுப் போகாத அளவு நல்ல நல்ல படங்களை உருவாக்குங்கள். ஏணிப்படிகள் படத்தையும் பெரிது பெரிதாக தயார் செய்து அனைவரின் பார்வையும் படும்படியான இடத்தில் வையுங்கள். (படங்கள் வரையும்) ஷீட்களில் (துணி அல்லது தட்டி) வண்ணங்கள் மழையாலும் வெயிலாலும் கெட்டுப் போகாத அளவு உறுதியாக இருக்க வேண்டும். முக்கியமான இடங்களில் வையுங்கள். அல்லது எங்காவது கண்காட்சி நடைபெறுகிறது என்றால் முக்கியமான இரண்டு மூன்று படங்கள் போதுமானது. இந்த சிருஷ்டி சக்கரம் கூட சுவர் அளவுக்கு உருவாக வேண்டும். 8-10 பேர் தூக்கி எடுத்து வைக்க வேண்டியிருக்கலாம். தூரத்திலிருந்து யார் பார்த்தாலும் தெளிவாக தெரிந்து கொண்டு விட வேண்டும். சத்யுகத்தில் மற்ற இந்த அனைத்து தர்மங்களும் இருக்காது. அவர்கள் பின்னால் வருகின்றனர். முதலில் சொர்க்கத்தில் மிகவும் கொஞ்ச மனிதர்கள்தான் இருப்பார்கள். இப்போது இருப்பது சொர்க்கமா அல்லது நரகமா என்பது குறித்து நீங்கள் நல்ல விதமாக புரிய வைக்க முடியும். வருபவர்களுக்கு புரிய வைத்தபடி இருங்கள். பெரிய பெரிய படங்கள் இருக்க வேண்டும். எப்படி பாண்டவர்களின் பெரிய பெரிய உருவங்களை உருவாக்குகின்றனர். நீங்கள் கூட பாண்டவர்கள் அல்லவா.

 

சிவ பாபா சங்கம யுகத்தில் கற்பிக்கிறார். அந்த ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசர், நீங்கள் புரிய வைத்து புரிய வைத்து உங்களுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொள்கிறீர்கள். சிலர் படிப்பதிலிருந்து இந்த படிப்பை விட்டு விடுகின்றனர். பள்ளியிலும் கூட சிலர் படிக்க முடியாவிட்டால் படிப்பை விட்டு விடுகின்றனர். இங்கும் கூட நிறைய பேர் படிப்பை விட்டு விட்டார்கள், பிறகு அவர்கள் சொர்க்கத்திற்கு வரமாட்டார்களா என்ன? நான் உலகின் எஜமானாக இருக்கிறேன், என்னிடமிருந்து யாராவது இரண்டு வார்த்தைகள் கேட்டாலும் கூட சொர்க்கத்தில் கண்டிப்பாக வருவார்கள். முன்னே செல்லச் செல்ல நிறைய பேர் கேட்பார்கள். இந்த முழு இராஜ்யமும் கல்பத்திற்கு முன்பு போல ஸ்தாபனை ஆகிறது. நாம் பல முறை இராஜ்யத்தை அடைந்தோம், பிறகு இழந்தோம் என்று புரிந்து கொள்கின்றனர். வைரத்தைப் போல் இருந்தோம் இப்போது சோழி போல ஆகியுள்ளோம். பாரதம் வைரத்தைப் போல் இருந்தது. பிறகு இப்போது என்ன ஆனது? அதே பாரதம்தான் இருக்குமல்லவா? இந்த சங்கமம் புருஷோத்தம யுகம் எனப்படுகிறது. மிக உத்தமமான புருஷார்களும் இருக்கின்றனர். மற்ற அனைவரும் கீழானவர்கள். பூஜைக்குரியவர்களாக இருந்தவர்களே பூஜாரிகளாக ஆகியுள்ளனர். 84 பிறவிகள் எடுக்கின்றனர். அந்த சரீரங்களும் அழிந்து விட்டன, ஆத்மாவும் தமோபிரதானமாகி விட்டது. சதோபிரதானமாக இருக்கும்போது பூஜை செய்வதில்லை. சைதன்யத்தில் (உயிரோட்டத்துடன்) இருக்கின்றனர். இப்போது நீங்கள் சிவபாபாவை சைதன்யத்தில் நினைவு செய்கிறீர்கள். பிறகு பூஜாரிகளாகும்போது கல்லை பூஜை செய்வீர்கள். இப்போது பாபா சைதன்யமாக உள்ளாரல்லவா! பிறகு அவருடைய கல் மூர்த்தியைத்தான் உருவாக்கி பூஜை செய்கின்றனர். இராவண இராஜ்யத்தில் பக்தி தொடங்குகிறது. அதே ஆத்மாக்கள்தான் வித விதமான சரீரங்களை தாரணை செய்து வந்தனர். கீழே விழுவதால்தான் பக்தி தொடங்குகிறது. பாபா பிறகு வந்து ஞானத்தைக் கொடுக்கும் போது பகல் தொடங்கி விடுகிறது. பிராமணர்களே தேவதைகளாக ஆகிவிடுகின்றனர். இப்போது தேவதை என்று கூற மாட்டோம். பிரம்மா சத்யுகத்தில் இருப்பதில்லை. வேறு எந்த பெயரும் வைக்கப் படுவதில்லை, சிவபாபா இவருக்குள் வருகிறார். அவர் ஞானக் கடலாக இருப்பவர், இந்த பிரம்மாவின் உடல் மூலம் ஞானத்தை கொடுக்கிறார். ஆக படங்கள் முதலானவைகளையும் மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்க வேண்டும். இதில் எழுத்து மூலமான விளக்கங்கள்தான் பயன்படும். தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது நீர் நிறைந்த கடலா? அல்லது நீரோட்டமுள்ள நதியா? அல்லது ஞானக்கடல் மற்றும் அவரிடமிருந்து உருவான ஞான நதிகளாகிய பிரம்மாகுமார்-குமாரிகளா? இவர்களுக்குத்தான் தந்தை ஞானம் கொடுக்கிறார். பிரம்மாவின் மூலம் பிராமணர் ஆகக் கூடியவர்கள் தான் பிறகு தேவதைகளாகின்றனர். விராட ரூப படமும் கூட மிகப் பெரியதாக காட்ட வேண்டும். இது முக்கியமான படமாகும்.

 

பாபா புரியவைக்கிறார் - இனிமையான குழந்தைகளே, நீங்கள் தங்கள் புத்தியை தூய்மையாக ஆக்க வேண்டும். இவர்களுக்குள் குற்றப் பார்வை இருப்பதை பாபா பார்த்தார் என்றால் இவர்களால் ஸ்ரீமத்படி நடக்க முடியாது என்று புரிந்து கொள்கிறார். உங்களுடைய ஆத்மா இப்போது திரிகால தரிசி ஆகிறது. இதை அபூர்வமாக சிலர் புரிந்து கொள்கின்றனர். மிகவும் புத்தியற்றவர்களாக இருக்கின்றனர். தந்தையுடன் மணமுறிவு செய்து கொண்டு விடுகின்றனர் (விட்டு விட்டு சென்று விடுகின்றனர்). இராஜ்யத்தின் ஸ்தாபனம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். அதில் அனைவரும் தேவைப்படுகின்றனர். பின்னால் அனைத்தும் காட்சியில் தெரியும். முதல் தரமான தாச தாசிகளும் உருவாகின்றனர். முதல்தரமான தாசி கிருஷ்ணரை பாலனை செய்வார் (வளர்ப்பார்). பாத்திரங்கள் தேய்ப்பவர்கள், உணவை பரிமாறுபவர்கள், சுத்தம் செய்பவர்கள் என அனைவரும் இருப்பார்கள். இங்கிருந்துதான் உருவாகுவார்கள். முதல் எண்ணில் வருபவர்கள் கண்டிப்பாக நல்ல பதவியை அடைவார்கள். அந்த (தெய்வீக) நறுமணம் வீசும். பாபாவுக்கு குழந்தைகளிடமிருந்து வாசனை வருகிறது இந்த குழந்தை நன்றாக முரளி வகுப்பை நடத்துகிறது, ஆனால் நினைவு குறைவாக உள்ளது. சில மனைவியர் கணவன்மார்களை விடவும் முன்னால் சென்று விடுகின்றனர். ஒருவர் ஞானத்தில் இருக்கிறார், பாபா! மற்றொரு சக்கரம் (உடன் இருக்கும் கணவர் அல்லது மனைவி) சரியில்லை என்று கூறுகின்றனர். ஒருவர் மற்றவருக்கு கவனத்தைக் கொடுக்க வேண்டும். இல்லற மார்க்கம் அல்லவா. ஜோடி ஒன்று போல இருக்க வேண்டும். தமக்குச் சமமாக ஆக்க வேண்டும். பிற்காலத்தில் நீங்கள் உலகத்தையே மறந்து விடுவீர்கள். நான் அன்னமாக இருக்கிறேன், இவர் கொக்கு போல இருக்கிறார் என்று புரிந்து கொள்கிறீர்கள் அல்லவா. சிலரிடம் ஏதாவது அவகுணம் உள்ளது, சிலரிடம் வேறு ஏதாவது அவகுணம். முரண்பாடுகளும் இருக்கின்றன. நிறைய முயற்சி செய்ய வேண்டியுள்ளது. மிகவும் சகஜமானதும் கூட. ஒரு வினாடியில் ஜீவன்முக்தி. ஒரு பைசா செலவு கூட இல்லாமல் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி அடைய முடியும். ஏழைகளாக உள்ளவர்கள் நன்றாக சேவை செய்தபடி இருக்கின்றனர். யாரெல்லாம் வெறும் கையுடன் வந்தார்கள் என்பது தெரியுமல்லவா. நிறைய கொண்டு வந்தவர்கள் இன்று இல்லை, மற்ற ஏழைகள் நிறைய பேர் உயர் பதவி அடைந்து கொண்டிருக்கின்றனர். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாராம்:

1. ஞான வாளில் யோகத்தின் கூர்மையை நிரப்புவதற்காக கர்மங்கள் செய்தபடியே உள்நோக்கு முகமுள்ளவராகி நான் ஆத்மா என்ற பயிற்சி செய்ய வேண்டும். ஆத்மாவாகிய எனக்கு தந்தையின் கட்டளை - நிரந்தரமாக என்னை நினைவு செய் என்பதாகும். ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு வையுங்கள். தேகம் மற்றும் தேகத்தின் சம்மந்திகளிடமிருக்கும் பற்றுதலை நீக்கி விடுங்கள்.

 

2. இல்லறத்தில் இருந்தபடி ஒருவர் மற்றவருக்கு கவனம் கொடுத்தபடி அன்னப்பறவையாகி உயர் பதவி அடைய வேண்டும். கோபத்தின் அம்சத்தையும் நீக்கி விட வேண்டும். தன்னுடைய புத்தியை தூய்மையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 

வரதானம்:

தீவிர முயற்சியின் மூலமாக அனைத்து பந்தனங்களையும் கடந்து பொழுது போக்காக அனுபவம் செய்யக் கூடியவராகி டபுள் லைட் ஆகுக.

 

பல குழந்தைகள் நான் சரியாக இருக்கிறேன், ஆனால் இந்த சம்ஸ்காரங்கள், மனிதர்கள், வாயுமண்டலத்தின் பந்தனம்..... போன்ற காரணங்கள் இருக்கிறது அல்லவா. ஆனால் காரணங்கள் எப்படி இருந்தாலும் தீவிர முயற்சியாளர்கள் அனைத்து விஷயங்களையும் ஒன்றுமே இல்லை என்பது போல கடந்து விடுவார்கள். அவர்கள் எப்போதும் பொழுது போக்காக அனுபவம் செய்வார்கள். இந்த நிலைக்கு பறக்கும் கலை என்று கூறப்படுகிறது. பறக்கும் கலையின் அடையாளம் டபுள் லைட் ஆகும். அவர்களை எந்த விதமான சுமையும் அலைச்சலில் கொண்டுவர முடியாது.

 

சுலோகன்:

ஒவ்வொரு குணம் மற்றும் ஞானத்தின் விஷயத்தை தனது நிஜ சம்ஸ்காரமாக மாற்றிக் கொள்ளுங்கள்

 

ஓம்சாந்தி