11-02-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

நாடகத்தின் அனைத்து இரகசியங்களும் தெரிந்து கொண்டிருப்பதால் எந்த காட்சி உங்களுக்கு புதிதாக இருப்பதில்லை?

பதில்:

இந்த சமயத்தில் குழப்பம், சண்டை சச்சரவாக உள்ளது, வினாச காலத்தில் விபரீத புத்தி யுடையவர்களாகி தன்னுடைய குலத்தையே அழிப்பதற்காக பல சாதனங்களை தயாரித்தபடி இருக்கின்றனர். இது புதிய விஷயம் ஏதுமில்லை. ஏனெனில் இந்த உலகம் மாறித் தான் ஆக வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். மகாபாரதச் சண்டைக்குப் பிறகுதான் நம்முடைய புதிய உலகம் வரும்.

பாடல்:

இன்று அதிகாலையில் யார் வந்தது. . . .

ஓம் சாந்தி. அதிகாலையில் யார் வந்து முரளியை வாசிப்பது? உலகமோ முற்றிலும் அடர்ந்த காரிருளில் உள்ளது. - ஞானக் கடல், பதித பாவனர், பிராணேஸ்வரன் தந்தையிடமிருந்து நீங்கள் இப்போது முரளியை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவர் பிராணனைக் காப்பாற்றக் கூடிய ஈஸ்வரன். ஓ ஈஸ்வரா! இந்த துக்கத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று அழைக்கின்றனர் அல்லவா.. அவர்கள் எல்லைக்குட்பட்ட உதவியைக் கேட்கின்றனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட உதவி கிடைக்கிறது, ஏனென்றால் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அல்லவா. ஆத்மாவும் குப்தமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளின் சரீரம் காணக் கூடியதாக உள்ளது. குழந்தைகளுக்கு தந்தையின் ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கிடைக்கிறது. அனைத்து சாஸ்திரங் களிலும் உயர்வான கீதை புகழ் வாய்ந்தது. அதில் பெயர் மட்டும் ஸ்ரீகிருஷ்ணர் என போட்டு விட்டனர். ஸ்ரீமத் பகவானுடைய மகா வாக்கியம் என இப்போது நீங்கள் அறிவீர்கள். பிரஷ்டாச்சாரியிலிருந்து சிரேஷ்டாச்சாரி (தாழ்வான நிலையி-ருந்து உயர்வானவர்களாக) ஆக்கக் கூடியவர் ஒரு தந்தைதான் ஆவார் என்பதையும் புரிந்து கொண்டீர்கள். அவர்தான் நரனிலிருந்து நாராயணராக ஆக்குகிறார். சத்ய நாராயணரின் கதையும் உள்ளது. அமர கதை பாடப்படுகிறது. அமரபுரியின் எஜமானாக ஆக்குவது அல்லது நரனிலிருந்து நாராயணராக ஆக்குவது - விஷயம் ஒன்று தான். இது மரணலோகமாகும். பாரதம் தான் அமரபுரியாக இருந்தது. இது யாருக்கும் தெரியாது. இங்குதான் அமரனாகிய பாபா பார்வதிக்கு சொன்னார். ஒரு பார்வதியோ அல்லது ஒரு திரௌபதியோ இருக்கவில்லை. நிறைய குழந்தைகள் இதனைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சிவபாபா பிரம்மாவின் மூலம் சொல்கிறார். நான் பிரம்மாவின் மூலம் இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறேன் என தந்தை சொல்கிறார்.

குழந்தைகள் கண்டிப்பாக ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும் என தந்தை புரிய வைத்திருக்கிறார். தந்தைதான் அப்படி ஆக்க முடியும். ஆத்மாவைக் குறித்த ஞானம் உள்ள மனிதர்கள் உலகில் யாரும் இல்லை. ஆத்மாவின் ஞானமே இல்லாதபோது பரமாத்மாவின் ஞானம் எப்படி இருக்கும்? ஆத்மாக் களாகிய நாமே பரமாத்மா என சொல்லி விடுகின்றனர். எவ்வளவு பெரிய தவறில் உலகம் மாட்டிக் கொண்டிருக்கிறது. முற்றிலுமே கல்புத்தியாக உள்ளனர். வெளி நாட்டினரும் கூட கல் புத்தியில் குறைந்தவர்கள் அல்ல, நாம் நம்மையும் அழித்துக் கொண்டு முழு உலகத்தையும் அழிக்கக் கூடிய அணுகுண்டு முதலானவைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதும் கூட அவர்களுக்கு புத்தியில் வருவதில்லை. ஆக இந்த சமயத்தில் புத்தி எதற்கும் உதவாததாக உள்ளது. தனது வினாசத்தையே செய்து கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு இது ஏதும் புதிய விஷயம் அல்ல. நாடகத்தின்படி அவர்களுடைய நடிப்பும் உள்ளது என அறிவீர்கள். நாடகத்தின் பந்தனத்தில் கட்டப்பட்டுள்ளனர். கல்புத்தி இல்லா விட்டால் இப்படிப்பட்ட காரியம் செய்வார்களா? முழு குலத்தையும் நாசம் செய்து கொண்டிருக் கின்றனர். என்னதான் செய்து கொண்டிருக்கின்றனர் - அதிசயமாக உள்ளதல்லவா. அமர்ந்தபடியே, இன்று சரியாக இருக்கிறார்கள், நாளை ராணுவத்தில் கட்டுப்பாடு குறைந்து போய்விட்டால் ஜனாதிபதியையே கொன்று விடுகின்றனர். இப்படிப்பட்ட விபரீதங்கள் நடந்தபடி இருக்கின்றன. யாருக்கும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் அல்லவா. இன்றைய உலகில் குழப்பம், சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளது. கல்புத்தி உடையவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர். வினாச காலத்தில் தந்தையிடம் யார் அன்பற்ற புத்தியாக உள்ளனரோ அவர்களுக்கு வினாசம் என்று பாடப்பட்டுள்ளது என்பதை இப்போது குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். இப்போது இந்த உலகம் மாற வேண்டியுள்ளது. மகாபாரத சண்டை ஏற்பட்டது என்பதையும் கூட அறிவீர்கள். தந்தை இராஜயோகம் கற்பித்திருந்தார். சாஸ்திரங்களிலோ முழு வினாசத்தைக் காட்டி விட்டனர். ஆனால் முழு வினாசம் ஆகாது, அப்படியானால் பிரளயம் ஏற்பட்டு விடும். மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், 5 தத்துவங்கள் மிகுந்திருக்கும். அப்படி ஆக முடியாது. பிரளயம் ஏற்பட்டு விட்டால் பிறகு மனிதர்கள் எங்கிருந்து வருவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் விரல் சூப்பியபடி ஆலிலையின் மீது கடலில் வந்தார் என காட்டுகின்றனர். பாலகன் எப்படி அதுபோல வரமுடியும்? சாஸ்திரங்களில் இது போன்ற விஷயங்களை எழுதி விட்டுள்ளனர். கேட்கவே வேண்டாம். இப்போது குமாரிகளாகிய உங்கள் மூலம் இந்த வித்வான்கள், பீஷ்ம பிதாமகர் முதலானவர்களின் மீதும் கூட ஞான அம்புகள் விடப்படுகின்றன. போகப்போக அவர்களும் கூட வருவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் சேவையில் தீவிரமாக இருக்கிறீர்களோ, தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுத்தபடி இருக்கிறீர்களோ அந்த அளவு உங்களுடைய தாக்கம் (பிரபாவம்) அதிகரிக்கும். ஆம், தடைகளும் ஏற்படும். இந்த ஞான யக்ஞத்தில் அசுர சம்பிரதாயத்தவரின் தடைகள் அதிகமாக ஏற்படும் என்பதும் கூட பாடப்பட்டுள்ளது. அப்படியென்றால் என்ன என்பது பாவம் கல்புத்தி மனிதர்களுக்குத் தெரியாது. இவர்களின் (பிரமமா குமாரிகளின்) ஞானமே தனிப்பட்டதாக உள்ளது என சொல்வார்கள். இது புதிய உலகிற்கான புதிய விஷயங்கள் என்பதும் கூட நீங்கள் புரிந்துள்ளீர்கள். இந்த இராஜயோகத்தை உங்களுக்கு வேறு யாரும் கற்றுத் தரமுடியாது என தந்தை சொல்கிறார். ஞானம் மற்றும் யோகத்தை தந்தைதான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சத்கதியை வழங்கும் வள்ளல் ஒரு தந்தையே ஆவார், அவர்தான் பதித பாவனர் எனும்போது கண்டிப்பாக பதிதர்களுக்குத் தான் (தூய்மையற்றவர்களுக்குத்தான்) ஞானத்தைக் கொடுப்பார் அல்லவா. நாம் தங்க புத்தி உடையவர்களாகி பாரஸ்நாத் ஆகிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாரதம் தங்கயுகமாக (சத்திய யுகம்) இருந்தது. மனிதர்கள் எவ்வளவு கோவில்களைக் கட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் (மூர்த்திகள்) யார், என்ன செய்து சென்றார் என்பதன் அர்த்தத்தை கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. பாரஸ் நாதரின் கோவிலும் உள்ளது, ஆனால் யாருக்கும் தெரியாது. பாரதம் பாரஸ்புரியாக இருந்தது, தங்கம், வைர-வைடூரியங்களால் ஆன மாளிகைகள் இருந்தன. நேற்றைய விஷயமாகும். அவர்கள் ஒரு சத்யுகத்திற்கு இலட்சக்கணக்கான வருடங்கள் என சொல்லி விடுகின்றனர். முழு நாடகமும் 5 ஆயிரம் வருடத்தினுடையது என தந்தை சொல்கிறார். ஆகையால் இன்றைய பாரதம் எப்படி உள்ளது, நேற்றைய பாரதம் எப்படி இருந்தது? என்று ஒப்பிடப்படுகிறது. இலட்சக்கணக்கான வருடங்கள் என்றால் யாருடைய நினைவிலும் இருக்க முடியாது. குழந்தை களாகிய உங்களுக்கு இப்போது நினைவு கிடைத்துள்ளது. பாபா ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங் களுக்குப் பிறகு வந்து நமக்கு நினைவூட்டுகிறார் என அறிவீர்கள். இந்த லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் எப்போது இருந்தது? எவ்வளவு வருடங்கள் ஆகியுள்ளது? என யாரிடமாவது கேட்டால் இலட்சக்கணக்கான வருடங்கள் என சொல்லி விடுவார்கள். இது 5 ஆயிரம் வருடங்களின் விஷயமாகும் என நீங்கள் புரிய வைக்க முடியும். கிறிஸ்துவுக்கு இத்தனை வருடங்களுக்கு முன்னர் சொர்க்கம் இருந்தது என சொல்லவும் செய்கின்றனர். தந்தை வருவதே பாரதத்தில்தான். பாபாவின் ஜெயந்தி கொண்டாடுகின்றனர் என்றால் கண்டிப்பாக ஏதோ செய்து சென்றிருப்பார் என்பதும் கூட குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார். பதித பாவனர் எனும்போது கண்டிப்பாக வந்து தூய்மையாக்குவார். ஞானக்கடல் என்றால் கண்டிப்பாக ஞானம் கொடுப்பார் அல்லவா. யோகத்தில் அமருங்கள், தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தந்தையை நினைவு செய்யுங்கள் என்பது ஞானம் அல்லவா. அவர்கள் ஹடயோகிகள் ஆவார்கள். கால் மீது காலை வைத்து அமர்கின்றனர். என்னென்னவெல்லாம் செய்கின்றனர். தாய்மார்களாகிய நீங்கள் அப்படி செய்ய முடியாது. அமரவும் முடியாது. இனிமையான குழந்தைகளே, இப்படியெல்லாம் எதுவும் செய்ய வேண்டிய அவசிய மில்லை. பள்ளியில் மாணவர்கள் விதிப்படி உட்காருகின்றனர் அல்லவா. தந்தையோ அது கூட சொல்வதில்லை. எப்படி வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளுங்கள். உட்கார்ந்து களைத்து விட்டால் நல்லது, தூங்கி விடுங்கள். பாபா எதையும் தடை செய்வதில்லை. இது முற்றிலும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும், இதில் கஷ்டப்படக்கூடிய விஷயம் எதுவும் இல்லை. எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருந்தாலும் சரி. கேட்டபடியே சிவபாபாவின் நினைவில் இருந்தபடி உடலிலிருந்து உயிர் பிரியலாம். சொல்ல முடியாது. கங்கையின் கரையில் இருந்தபடி வாயில் கங்கா ஜலம் இருக்க வேண்டும், அப்போது உயிர் பிரிய வேண்டும் என பாடப்படுகிறது அல்லவா. அவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்களாகும். உண்மையில் இது ஞான அமிர்தத்தின் விஷயமாகும். உண்மையில் இப்படித்தான் உயிர் பிரிய வேண்டும் என நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பரம்தாமத்திலிருந்து வருகிறீர்கள். என்னை விட்டு விட்டுச் செல்கிறீர்கள். நானோ குழந்தைகளாகிய உங்களை உடன் அழைத்துச் செல்வேன். குழந்தைகளாகிய உங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக நான் வந்துள்ளேன். உங்களுக்கு வீட்டைப் பற்றியும் தெரியாது, ஆத்மாவைப் பற்றியும் தெரியாது. மாயை முற்றிலும் சிறகுகளைத் துண்டித்து விட்டது, ஆகையால் ஆத்மாவுக்குப் பறக்க முடியவில்லை, ஏனெனில் தமோபிரதானமாக உள்ளது. எதுவரை சதோபிரதானமாக ஆக வில்லையோ அதுவரை சாந்தி தாமத்திற்கு எப்படிச் செல்ல முடியும்? நாடகத்தின் திட்டப்படி அனைவருமே தமோபிரதானமாக ஆகத்தான் வேண்டும் என்பதும் தெரியும். இந்த சமயத்தில் முழு மரமும் முற்றிலுமாக பட்டுப் போகும் நிலைக்கு வந்து விட்டது. அனைத்து ஆத்மாக்களுமே தமோபிரதானமாக உள்ளனர் என குழந்தைகள் அறிவார்கள். புதிய உலகத்தில் சதோபிரதானமாக இருப்பார்கள். இங்கே யாருடைய நிலையும் சதோபிரதானமாக இருக்க முடியாது. இங்கே ஆத்மா தூய்மையடைந்து விட்டால் பிறகு இங்கே இருக்காது, ஒரேயடியாக ஓடி விடும். அனைவருமே முக்திக்காக அல்லது சாந்தி தாமத்திற்குச் செல்வதற்காக பக்தி செய்கின்றனர். ஆனால் யாருமே திரும்பிச் செல்ல முடியாது. சட்டம் சொல்வதில்லை. தாரணை செய்வதற்காக தந்தை இந்த அனைத்து இரகசியங்களையும் அமர்ந்து புரிய வைக்கிறார். என்றாலும் முக்கியமான விஷயம் தந்தையை நினைவு செய்ய வேண்டும், சுயதரிசன சக்ரதாரிகள் ஆக வேண்டும் என்பதாகும். விதையை நினைவு செய்வதன் மூலம் முழு மரமும் புத்தியில் வந்து விடும். மரம் முதலில் சிறியதாக இருக்கும், பிறகு பெரியதாப வளரும். பல தர்மங்கள் உள்ளன அல்லவா. நீங்கள் ஒரு வினாடியில் தெரிந்து கொண்டு விடுகிறீர்கள். உலகில் யாருக்கும் தெரியாது. அனைவருக்கும் ஒரு தந்தையாய் இருப்பவர், மனித சிருஷ்டியின் விதை ரூபமாக இருப்பவர். தந்தை ஒரு போதும் எங்கும் நிறைந்தவராக இருக்க முடியாது. இது பெரியதிலும் பெரியதான தவறாகும். மனிதர்களை ஒரு போதும் பகவான் என சொல்ல முடியாது இதை நீங்கள் புரிய வைக்கவும் செய்கிறீர்கள். தந்தை குழந்தைகளுக்கு மிகவும் சகஜாமாக்கி புரிய வைக்கிறார், பிறகு யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ, நிச்சயம் இருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக தந்தையிடம் ஆஸ்தியை பெறுவார்கள். நிச்சயம் இல்லையென்றால் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அதிர்ஷ்டமே இல்லை யென்றால் என்ன முயற்சியை செய்வார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை யென்றால் அவர்கள் எதுவும் புரியாதவர்கள் போல்தான் அமர்ந்திருப்பார்கள். எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை வழங்குவதற்காக தந்தை வந்துள்ளார் என்பதில் கூட நிச்சயம் இருப்பதில்லை. புதிதாக ஒருவர் சென்று மருத்துவக் கல்லூரியில் அமர்ந்தால் என்ன புரியும்? எதுவும் புரியாது, அதுபோல இருப்பார்கள். இங்கும் கூட அப்படி வந்து உட்கார்கிறார்கள். இந்த அழிவற்ற ஞானம் வினாசம் அடைவதில்லை. இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறதல்லவா என்பதையும் தந்தை புரிய வைத்திருக்கிறார். ஆக, வேலைக்காரர்கள், பிரஜைகள், பிரஜைகளுக்கும் வேலைக்காரர்கள் என அனைவரும் தேவை அல்லவா. ஆக, இப்படிப்பட்டவர்களும் வருகின்றனர். ஒரு சிலருக்கோ மிகவும் நல்ல விதமாக புரிந்து விடும். அவர்களுடைய கருத்துகளையும் கூட எழுதுகின்றனர் அல்லவா. போகப்போக கொஞ்சம் முன்னேற முயல்வார்கள். ஆனால் அந்த சமயம் கஷ்டமாக இருக்கும், ஏனென்றால் அந்த சமயத்தில் நிறைய கலவரங்கள் நடக்கும். நாளுக்கு நாள் புயல்கள் அதிகரித்தபடி இருக்கின்றன. இவ்வளவு செண்டர்கள் உள்ளன. நல்ல விதமாக புரிந்தும் கொள்வார்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்பதும் எழுதப் பட்டுள்ளது. வினாசத்தையும் முன்னால் பார்க்கிறீர்கள். வினாசம் ஆகவே வேண்டியுள்ளது. பிறப்பு விகிதம் குறைய வேண்டும் என அரசாங்கம் சொல்கிறது, ஆனால் என்னதான் செய்ய முடியும்? மரத்தின் வளர்ச்சி ஆகவே வேண்டியுள்ளது. தந்தை இருக்கும் வரை அனைத்து தர்மங்களின் ஆத்மாக்களும் இங்குதான் இருக்க வேண்டும். திரும்பிப் போகும் நேரம் வரும்போது அங்கிருந்து ஆத்மாக்கள் வருவது நிற்கும். இப்போது அனைவரும் வரவே வேண்டியுள்ளது. ஆனால் இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை. இராவண இராஜ்யமாக உள்ளது, எங்களுக்கு இராம இராஜ்யம் வேண்டும் என பாபுஜி (காந்திஜி) கூட சொல்லிக் கொண்டிருந்தார். இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என சொல்கின்றனர், ஆக இதனுடைய அர்த்தம் இது நரகமாக உள்ளது என்பதல்லவா. மனிதர்கள் இதனையும் கூட புரிந்து கொள்வதில்லை. சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்றால் நல்லதுதானே. கண்டிப்பாக நரகவாசியாக இருந்தார். மனிதர்களின் தோற்றம் மனிதனாக இருப்பினும், லட்சணங்கள் குரங்கு போல் இருக்கின்றன என பாபா புரிய வைக்கிறார். பதித பாவன சீதாராம் என அனைவரும் பாடியபடி இருக்கின்றனர். நாம் பதிதராக உள்ளோம், பாவனமாக்குபவர் ஒரு தந்தை ஆவார். அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் சீதைகள், தந்தை இராமன் ஆவார். நேரடியாகச் சொன்னால் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. இராமனை அழைக்கின்றனர். இப்போது குழந்தை களாகிய உங்களுக்கு தந்தை மூன்றாம் கண்ணைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் வேறொரு உலகில் இருப்பது போல் இருக்கிறீர்கள். பழைய உலகத்தில் என்னென்னவெல்லாம் செய்தபடி இருக்கின்றனர். இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் புரியாதவரிலிருந்து புரிந்தவர் களாக ஆகியுள்ளீர்கள். இராவணன் உங்களை எவ்வளவு முட்டாள்களாக ஆக்கி விட்டான். இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களும் தமோபிரதானமாகி விட்டுள்ளதால் தந்தை வந்து சதோபிர தானமாக ஆக்குகிறார் என தந்தை புரிய வைக்கிறார். தந்தை சொல்கிறார் - நீங்கள் தன்னுடைய சேவையும் செய்யுங்கள், ஒரு விஷயத்தை மட்டும் நினைவு வையுங்கள் - தந்தையை நினைவு செய்யுங்கள். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமடைவதற்கான வழியை வேறு யாரும் சொல்ல முடியாது. அனைவரின் ஆன்மீக மருத்துவர் ஒருவரே ஆவார். அவர்தான் வந்து ஆத்மாவுக்கு ஞான ஊசி போடுகிறார், ஏனென்றால் ஆத்மாதான் தமோ பிரதானமாகியுள்ளது. தந்தை அழிவற்ற சர்ஜன் (மருத்துவர்) என சொல்லப்படுகிறார். இப்போது ஆத்மா சதோபிரதானத்திலிருந்து தமோபிர தானமாகியுள்ளது, இதற்கு ஊசி போட வேண்டும். தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு தனது தந்தையை நினைவு செய்யுங்கள். புத்தியின் தொடர்பை மேலே (பரந்தாமத்தில்) ஈடுபடுத்துங்கள். வாழ்ந்தபடியே தூக்கில் தொங்குவது போல (புத்தியை பரந்தாமத் தில்) அதாவது புத்தியின் யோகத்தை இனிமையான வீட்டின் மீது ஈடுபடுத்துங்கள். நாம் இனிமையான அமைதி நிறைந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும். நிர்வாண தாமம் இனிமையான வீடு எனப்படுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த பழைய உலகம் வினாசமாகி இருக்கின்றது, ஆகையால் இதிலிருந்து தன்னை தான் விடுபட்டவர்களாக புரிந்து கொள்ள வேண்டும். மரத்தின் வளர்ச்சியுடன் கூடவே வரக்கூடிய தடைகள் எனும் புயல்களைக் கண்டு பயப்படக் கூடாது. கடந்து செல்ல வேண்டும்.

2. ஆத்மாவை சதோபிரதானமாக்குவதற்காக தனக்கு ஞான-யோகத்தின் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். தனது புத்தியின் தொடர்பை இனிமையான வீட்டின் மீது ஈடுபடுத்த வேண்டும்.

வரதானம்:

தனது பாக்கியம் மற்றும் பாக்கியத்தை வழங்குபவரின் நினைவின் மூலம் அனைத்து குழப்பங்களிலிருந்து விடுபட்டிருக்கக் கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.

எப்போதும் ஆஹா எனது பாக்கியம், ஆஹா எனது பாக்கியத்தை வழங்கும் வள்ளல் இந்த மனதின் சூட்சம குரலை கேட்டுக் கொண்டே இருங்கள். மேலும் குஷியில் நடனமாடிக் கொண்டேயிருங்கள். எதை தெரிந்துக் கொள்ள வேண்டுமோ, அதை தெரிந்துக் கொண்டு விட்டேன். எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்து விட்டேன் என்ற இந்த அனுபவத்தில் இருந்தீர்கள் என்றால் அனைத்து குழப்பத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். இப்பொழுது (குழப்பமான சூழ-ல்) சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை விடுவிப்பதற்கான நேரமாக இருக்கிறது. ஆகையால் மாஸ்டர் சர்வ சக்திவானாக இருக்கிறேன். மாஸ்டர் படைப்பவனாக இருக்கிறேன் என்ற இந்த நினைவின் மூலம் குழந்தைத் தனமான சின்னஞ்சிறு விˆயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

சுலோகன்:

தாமரை மலரில் அமர்ந்திருப்பவர்கள் தான் மாயாவின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டும், பாபாவின் அன்பில் மூழ்கியிருக்கக் கூடிய சிரேஷ்ட கர்மயோகி ஆவார்கள்.