11.04.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! பாபா வள்ளலாக இருக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையிடமிருந்து எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. கேட்பதற்குப் பதிலாக இறப்பது மேல் என்ற பழமொழி உள்ளது.

 

கேள்வி:

எந்த நினைவு சதா இருந்தால் எந்த விசயத்தைப் பற்றிய கவலையும், சிந்தனையும் இருக்காது?

 

பதில்:

நல்லதோ, கெட்டதோ - எதுவெல்லாம் கடந்து முடிந்ததோ, அது நாடகத்தில் இருந்தது. முழு சக்கரம் முடிவடைந்த பிறகு மீண்டும் திரும்பி நடக்கும். யார், என்ன முயற்சி செய்கின்றார்களோ அப்படிப்பட்ட பதவியை அடைவார்கள். இந்த விசயத்தை நினைவில் வைத்துக் கொண்டால் எந்த விசயத்தைப் பற்றிய கவலையும், சிந்தனையும் இருக்காது. குழந்தைகளே! கடந்தைவைகளை சிந்திக்காதீர்கள், எந்த விசயத்தையும் கேட்காதீர்கள், கூறாதீர்கள். எந்த விசயம் கடந்து முடிந்ததோ அதை சிந்திக்காதீர்கள் மற்றும் திரும்பிச் செய்யாதீர்கள் என்பது தந்தையின் கட்டளையாகும்.

 

ஓம்சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீகத் தந்தை வந்து புரிய வைக்கின்றார். ஆன்மீகத் தந்தையை வள்ளல் என்று கூறுகின்றனர். அவர் சுயமாகவே குழந்தைகளுக்கு அனைத்தையும் கொடுக்கின்றார். உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காகவே வருகின்றார். எப்படி ஆவது? இவையனைத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். வழிக்காட்டிக் கொண்டே இருக்கின்றார். வள்ளல் அல்லவா! ஆக அனைத்தையும் சுயமாகவே கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். கேட்பதை விட இறப்பது மேல். எந்த பொருளும் கேட்கக் கூடாது. சில குழந்தைகள் சக்தி, ஆசீர்வாதம், கருணையை கேட்டுக் கொண்டே இருக் கின்றனர். பக்தி மார்க்கத்தில் கேட்டு, கேட்டு தலை குனிந்து முழு ஏணிப்படியில் இறங்கி வந்தீர்கள். இப்பொழுது கேட்பதற்கு எந்த அவசியமும் கிடையாது. வழிப்படி நடங்கள் என்று தந்தை கூறுகின்றார். கடந்தவைகளை ஒருபொழுதும் சிந்திக்காதீர்கள் என்று ஒருபுறம் கூறுகின்றார். நாடகத்தில் எதுவெல்லாம் நடந்ததோ நடந்து முடிந்து விட்டது. அதைப்பற்றி சிந்திக்காதீர்கள். திரும்பவும் நினைவு செய்யாதீர்கள். இரண்டு வார்த்தைகளை மட்டுமே தந்தை கூறுகின்றார் - என் ஒருவனை மட்டுமே நினைவு செய்யுங்கள். பாபா கட்டளை அதாவது ஸ்ரீமத் கொடுக்கின்றார். அதன்படி நடப்பது குழந்தைகளின் கடமையாகும். இது அனைத்தையும் விட மிக உயர்ந்த கட்டளையாகும். யார், எவ்வளவு தான் கேள்விகளை கேட்டாலும் பாபா இரண்டு வார்த்தைகளை மட்டுமே புரிய வைக்கின்றார். நான் பதீத பாவனனாக இருக்கின்றேன். நீங்கள் என்னை நினைவு செய்து கொண்டே இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். அவ்வளவு தான், நினைவிற்காக யாராவது கட்டளை (டைரக்ஷன்) கொடுப்பார்களா என்ன? தந்தையை நினைவு செய்ய வேண்டும், வேறு எதிலும் தலையை உடைத்துக் கொள்ள வேண்டும் அல்லது கதற வேண்டும் என்பது கிடையாது. உள்ளுக்குள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். வேறு என்ன கட்டளைகளை கொடுக்கின்றார்? 84 பிறவிச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் தேவதைகளாக ஆக வேண்டும். தேவதைகளின் மகிமைகளை நீங்கள் அரைகல்பத்திற்கு செய்தீர்கள்.

 

(குழந்தையின் அழுகுரல் கேட்கின்றது) யாரும் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்ற கட்டளை அனைத்து சென்டரிலும் உள்ளவர்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி யார் அடைய வேண்டுமோ அவர்கள் தானாகவே ஏற்பாடு செய்வார்கள். இது ஆன்மீகத் தந்தையின் பல்கலைக்கழகமாகும். இதில் சிறிய குழந்தைகள் அவசியமில்லை. சேவை செய்வதற்கு தகுதியானவர்களாக ஆன பின்பு புத்துணர்வு ஏற்படுத்துவதற்காக பிராமணிகள் (ஆசிரியர்கள்) அழைத்து வர வேண்டும். பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, இது பல்கலைக்கழகமாகும். இங்கு குழந்தைகளை அழைத்து வருபவர்கள் இது பல்கலைக்கழகம் என்று புரிந்து கொள்வது கிடையாது. இது பல்கலைக்கழகம் என்பது முக்கியமான விசயமாகும். இதில் படிக்கக் கூடியவர்கள் மிக நல்ல புத்திசாலிகளாக இருக்க வேண்டும். பக்குவமற்றவர்களும் தொந்தரவு செய்வார்கள். ஏனெனில் தந்தையின் நினைவில் இல்லையெனில் புத்தி இங்கு அங்கு என்று அலைந்து கொண்டே இருக்கும். நஷ்டம் ஆக்கி விடுவார்கள். நினைவில் இருக்க முடியாது. குழந்தைகளை அழைத்து வந்தால் இதில் உங்களுக்குத் தான் நஷ்டம் ஏற்படுகின்றது. இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் என்பதை அறிந்திருக்கவில்லை, இங்கு மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகின்றோம். தந்தை கூறுகின்றார் - குடும்பத்தில் குழந்தைகளுடன் இருங்கள், இங்கு ஒருவாரத்திற்கு அல்லது 3-4 நாட்கள் இருந்தால் போதும். ஞானம் மிகவும் எளியதாகும். தந்தையைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லையற்ற தந்தையை புரிந்து கொள்வதன் மூலம் எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கும். எந்த ஆஸ்தி? எல்லையற்ற இராஜ்யத்திற்கான ஆஸ்தி. கண்காட்சிகளிலும், மியுசியத்திலும் சேவை நடைபெறுவது கிடையாது என்று நினைக்காதீர்கள். பல மற்றும் கணக்கிட முடியாத பிரஜைகள் உருவாகின்றனர். பிராமண குலம், சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சம் - மூன்றும் இங்கு தான் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. ஆக இது மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். எல்லையற்ற தந்தை படிப்பிக்கின்றார். முற்றிலுமாக புத்தி நிறைந்து விட வேண்டும். ஆனால் தந்தை சாதாரண உடலில் இருக்கின்றார். படிப்பும் சாதாரண ரூபத்தில் படிப்பிக்கின்றார். ஆகையால் தான் மனிதர்களுக்கு நல்லது என்று தோன்றுவது கிடையாது. இறை தந்தையின் பல்கலைக்கழகம் இவ்வாறு இருக்கின்றது. நான் ஏழைப்பங்காளன் என்று தந்தை கூறுகின்றார். ஏழைகளுக்குத் தான் படிப்பிக்கின்றேன். செல்வந்தர்கள் படிப்பதற்கு சக்தியற்றவர்களாக உள்ளனர். அவர்களது புத்தியில் மாட மாளிகை மட்டுமே இருக்கும். ஏழைகள் செல்வந்தர்களாகவும், செல்வந்தர்கள் ஏழைகளாக ஆவது தான் நியமமாகும். தானம் என்பது செல்வந்தர்களுக்கு கொடுக்கப்படுமா என்ன? இதுவும் அழிவற்ற ஞான ரத்தினங்களின் தானமாகும். செல்வந்தர்கள் தானத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். புத்தியில் அமராது. அவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட படைப்பான செல்வங்களில் மாட்டிக் கொண்டு இருப்பர். அவர்களுக்கு இதுவே சொர்க்கம் போன்று இருக்கின்றது. நமக்கு மற்றொரு சொர்க்கம் என்பது அவசியமில்லை என்று கூறுகின்றனர். பெரிய மனிதர்கள் யாராவது இறந்து விட்டால் அவர் சொர்க்கத்திற்கு சென்று விட்டதாக கூறுகின்றனர். சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்று அவர்களாகவே கூறுகின்ற பொழுது இது இப்பொழுது நரகமாக இருக்கின்றதல்லவா! ஆனால் நரகம் என்றால் என்ன? என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கல்புத்தியுடன் இருக்கின்றனர். இது உங்களது மிக உயர்ந்த பல்கலைக்கழகமாகும். தந்தை கூறுகின்றார் - யாருடைய புத்தி பூட்டப்பட்டிருக்கின்றதோ அவர்களுக்குத் தான் வந்து படிப்பிக்கின்றேன். தந்தை வருகின்ற பொழுது தான் பூட்டு திறக்கப்படுகின்றது. உங்களது புத்திப் பூட்டு எப்படித் திறக்கும்? என்று தந்தை சுயம் கட்டளையிடுகின்றார். தந்தையிடத்தில் எதையும் கேட்கக் கூடாது. இதில் நம்பிக்கை இருக்க வேண்டும். மிகவும் அன்பான தந்தையாக இருக்கின்றார்! அவரை பக்தியில் நினைவு செய்து வந்தோம். யாரை நினைவு செய்தோமோ அவர் கண்டிப்பாக ஒருமுறை வருவாரல்லவா! நினைவு செய்வதே மீண்டும் திரும்பி நடைபெறுவதற்காகவே. தந்தை வந்து குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். பாபா எப்படி வந்திருக்கின்றார்? என்ன கூறுகின்றார்? என்று குழந்தைகள் வெளியில் உள்ளவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். குழந்தைகளே! நீங்கள் அனைவரும் பதீதமானவர்களாக இருக்கின்றீர்கள். நான் வந்து தான் பாவனமாக ஆக்குகின்றேன். பதீதமாக ஆகியிருக்கக் கூடிய உங்களது ஆத்மா இப்பொழுது பதீத பாவனனாகிய என்னை நினைவு செய்யுங்கள், சுப்ரீம் ஆத்மாவாகிய (பரமாத்மா) என்னை நினைவு செய்யுங்கள். இதில் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் பக்தி மார்க்கத்தில் அரைகல்பத்திற்கு கேட்டுக் கொண்டே வந்தீர்கள், அடைந்தது எதுவும் இல்லை. இப்பொழுது கேட்பதை நிறுத்துங்கள். நான் சுயமாகவே உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். தந்தையினுடையவர்களாக ஆவதன் மூலம் ஆஸ்தி கிடைக்கவே செய்யும். பெரிய குழந்தைகள் உடனேயே தந்தையைப் புரிந்து கொள்கின்றனர். தந்தையின் ஆஸ்தி என்னவெனில் 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் இராஜ்யமாகும். நரகவாசிகளாக இருக்கின்ற பொழுது ஈஸ்வரனின் பெயரில் தானம், புண்ணியம் செய்வதன் மூலம் அற்ப காலத்திற்கு சுகம் கிடைப்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். மனிதர்கள் தர்மத்திற்காக ஒதுக்குகின்றனர். குறிப்பாக வியாபாரிகள் ஒதுக்குகின்றனர். வியாபாரிகளாக இருக்கக் கூடியவர்கள், நாம் தந்தையிடம் வியாபாரம் செய்வதற்காக வந்திருக்கின்றோம் என்று கூறுவர். குழந்தைகள் தந்தையிடத்தில் வியாபாரம் செய்கின்றீர்கள் அல்லவா! தந்தையின் சொத்தைப் பெற்றுக் கொண்டு அதன் மூலம் பக்தி சிரத்தையுடன் தானம், புண்ணியம் செய்கின்றனர். தர்மசாலை, கோயில் போன்றவற்றை கட்டினால் அதற்கு தந்தையின் பெயரை வைக்கின்றனர். ஏனெனில் யாரிடமிருந்து சொத்துக்களை அடைக்கின்றனரோ அவர்களுக்காக கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவும் வியாபாரம் ஆகி விடுகின்றது. அவையனைத்தும் உலகீய விசயங்களாகும். இப்பொழுது தந்தை கூறுகின்றார் கடந்தவைகளை சிந்திக்காதீர்கள். தவறான விசயங்களைக் கேட்காதீர்கள். தவறான கேள்விகளை யாராவது கேட்டால் இப்படிப்பட்ட விசயங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறி விடுங்கள். நீங்கள் முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். பாரதத்தின் பழமையான இராஜயோகம் மிகவும் பிரபலமானதாகும். எந்த அளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, தெய்வீக குணங்களை தாரணை செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள். இது பல்கலைக்கழகமாகும். இலட்சியம் தெளிவாக இருக்கின்றது. முயற்சி செய்து இவ்வாறு ஆக வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். யாருக்கும் எந்த வகையிலும் துக்கம் கொடுக்கக் கூடாது. துக்கத்தை நீக்கி சுகம் கொடுக்கும் தந்தையின் குழந்தைகள் அல்லவா! அது சேவையின் மூலம் தெரிந்து விடும். பலர் புதிது புதிதாக வருகின்றனர். 25-30 வருடங்கள் உள்ளவர்களை விட 10-12 நாட்களாக வருபவர்கள் தீவிரமாகி விடுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் தங்களுக்குச் சமமாக ஆக்க வேண்டும். பிராமணன் ஆகாத வரைக்கும் தேவதைகளாக எப்படி ஆக முடியும்? கிரேட் கிரேட் கிராண்ட் பாதர் பிரம்மா அல்லவா! யார் இருந்து விட்டு சென்றிருக்கின்றார்களோ அவர்களைப் புகழ்ந்து கொண்டிருப்பர். பிறகு மீண்டும் அவர் கண்டிப்பாக வருவார். எந்த விழா போன்றவைகள் பாடப்பட்டாலும், அனைவரும் இருந்து சென்றிருக்கின்றனர், மீண்டும் வருவார்கள். இந்த நேரத்தில் அனைத்து விழாக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன - ரக்ஷா பந்தன் போன்ற ....... அனைத்தின் இரகசியங்களையும் தந்தை புரிய வைத்துக்கொண்டிருக்கின்றார். நீங்கள் தந்தையின் குழந்தைகளாக இருக்கின்றீர்களெனில் கண்டிப்பாக தூய்மையாக ஆக வேண்டும். பதீத பாவன் தந்தையை அழைக்கின்றோமெனில் தந்தை வழி காண்பிக்கின்றார். கல்ப கல்பத்திற்கும் யார் ஆஸ்தி அடைந்திருக்கின்றார்களோ, அதுவே மிகச் சரியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. நீங்களும் சாட்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். பாப்தாதாவும் சாட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் - இவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவார்? இவரது நடத்தைகள் எப்படி இருக்கின்றது? ஆசிரியர் அனைத்தும் அறிந்திருப்பார் அல்லவா - எத்தனை பேரை தனக்குச் சமமாக ஆக்கியிருக்கின்றனர்? எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றனர்? இது இறை தந்தையின் பல்கலைக்கழகம் என்ற நினைவு முதலில் புத்தியில் இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் இருப்பதே கல்விக்காக. அது எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகம். இது எல்லையற்ற பல்கலைக்கழகமாகும். துர்கதியிலிருந்து சத்கதி, நரகத்திலிருந்து சொர்க்கத்தை உருவாக்கக் கூடிய தந்தை ஒரே ஒருவரே. தந்தையின் பார்வை அனைத்து ஆத்மாக்களின் பக்கமும் செல்கின்றது. அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். திரும்பி அழைத்துச் செல்ல வேண்டும். உங்களை மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களையும் நினைவு செய்து கொண்டிருப்பார். அதில் குழந்தைகளுக்குத் தான் படிப்பிக்கின்றார். வரிசைப்படியாக வந்தது போன்று அவ்வாறே செல்வோம் என்பதையும் புரிந்திருக்கின்றீர்கள். அனைத்து ஆத்மாக்களும் வரிசைக் கிரமமாக வருகின்றன. நீங்களும் வரிசைக்கிரமமாக எப்படிச் செல்வீர்கள்? என்பதும் புரிய வைக்கப்படுகின்றது. கல்பத்திற்கு முன்பு எது நடந்ததோ அதுவே நடக்கும். நீங்கள் புது உலகிற்கு எப்படி வருவீர்கள்? என்பதும் உங்களுக்கு புரிய வைக்கப்பட்டிருக்கின்றது. வரிசைக்கிரமமாக புது உலகிற்கு வரக் கூடியவர்களுக்கே புரிய வைக்கபடுகின்றன.

 

குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிந்து கொள்வதன் மூலம், தங்களது தர்மத்தை மற்றும் அனைத்து தர்மத்தின் மரத்தை அறிந்து கொள்கின்றீர்கள். இதில் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை, ஆசீர்வாதமும் கிடையாது. பாபா கருணை காட்டுங்கள், இரக்கம் காட்டுங்கள் என்று எழுதுகின்றீர்கள். தந்தை எதுவும் செய்யமாட்டார். வழி காட்டுவதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். அனைவரையும் பாவன மாக்குவது தான் நாடகத்தில் எனது நடிப்பாகும். கல்ப கல்பமாக எப்படி நடித்தேனோ அவ்வாறு நடிப்பு நடிக்கின்றேன். நல்லதோ, கெட்டதோ எது கடந்து முடிந்ததோ, நாடகத்தில் இருக்கின்றது. எந்த விசயத்தைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. நாம் முன்னேறிக் கொண்டே இருக்கின்றோம். இது எல்லையற்ற நாடகம் அல்லவா! முழு சக்கரமும் முடிவடைந்த பிறகு மீண்டும் திரும்பி நடைபெறும். யார், எப்படிப்பட்ட முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் அப்படிப்பட்ட பதவியை அடைவார்கள். கேட்க வேண்டிய அவசியமில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் அளவற்று கேட்டீர்கள். அனைத்து செல்வங்களையும் அழித்து விட்டீர்கள். இவை அனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனை புரிய வைக்கின்றார். அரைகல்பத்திற்கு பக்தி செய்து, சாஸ்திரங்கள் படித்து எவ்வளவு செலவுகள் ஏற்படுகின்றன! இப்பொழுது நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. தந்தை வள்ளல் அல்லவா! வள்ளலுக்கு அவசியமில்லை. கொடுப்பதற்காகவே அவர் வருகின்றார். நான் சிவபாபாவிற்கு கொடுத்திருக்கின்றேன் என்று நினைக்காதீர்கள். அட! சிவபாபாவிடமிருந்து நிறைய கிடைக்கின்றது. நீங்கள் அடைவதற்காக இங்கு வந்திருக்கின்றீர்கள் அல்லவா! ஆசிரியரிடத்தில் மாணவர்கள் அடைவதற்காக வருகின்றனர். அந்த லௌகீக தந்தை, ஆசிரியர், குரு மூலம் நீங்கள் நஷ்டத்தையே அடைந்தீர்கள். இப்பொழுது குழந்தைகள் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும், அப்பொழுது தான் உயர்ந்த பதவி அடைய முடியும். சிவபாபா டபுள் ஸ்ரீ ஸ்ரீ ஆக இருக்கின்றார். நீங்கள் ஒற்றை ஸ்ரீ உடையவர்களாக ஆகின்றீர்கள். ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணன் என்று கூறப்படுகின்றது. ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ நாராயணன் இருவராக ஆகி விட்டனர். விஷ்ணுவை ஸ்ரீ ஸ்ரீ என்று கூறுவர். ஏனெனில் இருவரும் இணைந்திருக்கின்றனர். இருப்பினும் இருவரையும் ஆக்குவது யார்? ஒரே ஒருவர் தான் ஸ்ரீ ஸ்ரீ மற்றபடி ஸ்ரீ ஸ்ரீ ஆக யாரும் இருப்பது கிடையாது. இன்றைய நாட்களில் ஸ்ரீ லட்சுமி நாராயணன், ஸ்ரீ சீதாராம் என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். ஆக குழந்தைகள் இவையனைத்தையும் தாரணை செய்து குஷியுடன் இருக்க வேண்டும்.

 

இன்றைய நாட்களில் ஆன்மீகக் கருத்தரங்கமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஆன்மீகம் என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது கிடையாது. ஆன்மீக ஞானத்தை ஒருவரைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. பாபா அனைத்து ஆத்மாக்களுக்கு தந்தையாக இருக்கின்றார். அவரை ஆன்மீகத் தந்தை என்று கூறுகின்றோம். தத்துவத்தையும் ஆன்மீகம் என்று கூறிவிடுகின்றனர். இது காடாக இருக்கின்றது, ஒருவருக்கொருவர் துக்கத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர் என்பதையும் அறிந்திருக்கின்றீர்கள். அஹிம்சா பரமோ தேவி தேவதா தர்மம் (துக்கம் கொடுக்காத மிக உயர்ந்த தேவி தேவதா தர்மம்) என்று பாடப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு எந்த சண்டை சச்சரவுகளும் இருக்காது. கோபப்படுவதும் இம்சையாகும். பிறகு பாதி இம்சை என்றாலும், என்ன கூறினாலும் சரியே. இங்கு முற்றிலும் அஹிம்சையாக ஆக வேண்டும். எண்ணம், சொல், செயலில் எந்த தவறான விசயங்களும் இருக்கக் கூடாது. சிலர் போலீசாராக வேலை செய்கின்றனர் எனில் அதிலும் யுக்தியுடன் வேலை செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ அன்பாக வேலை வாங்க வேண்டும். பாபாவிற்கு சுய அனுபவம் இருக்கின்றது. அன்பாக தனது வேலைகளை செய்விக்கின்றார். இதில் மிகுந்த யுக்தி தேவை. ஒன்றுக்கு நூறு மடங்கு தண்டனை எப்படி கிடைக்கும்? என்பதை மிக அன்புடன் மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நான் துக்கத்தை நீக்கி சுகத்தை கொடுக்கும் தந்தையின் குழந்தையாக இருக்கின்றேன். ஆகையால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. இலட்சியத்தை எதிரில் வைத்து தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். தனக்குச் சமமாக ஆக்கக் கூடிய சேவை செய்ய வேண்டும்.

 

2. நாடகத்தின் ஒவ்வொரு பாகத்தை அறிந்திருந்தும் கடந்து போன எந்த விசயங்களைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. எண்ணம், சொல், செயலில் எந்த தவறான காரியமும் ஏற்படக் கூடாது என்பதில் கவனம் கொடுத்து இரட்டை அஹிம்சாதாரிகளாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

நான்கு பாடங்களிலும் தந்தையின் மனதுக்குப் பிடித்தமான மதிப்பெண் எடுக்கக் கூடிய இதய சிம்மாசன அதிகாரி ஆகுக.

 

எந்தக் குழந்தைகள் நான்கு பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுக்கின்றனரோ, முதலிலிருந்து கடைசி வரை நல்ல எண்ணிக்கையில் தேர்ச்சியடைகின்றனரோ அவர்களே மதிப்புடன் தேர்ச்சி (பாஸ் வித் ஹானர்) பெற்றவர் எனப்படுவார்கள். இடையிடையில் மதிப்பெண்கள் குறைந்து, பிறகு சரிப்படுத்திக் கொள்வது போல் அல்ல, ஆனால் அனைத்து பாடங்களிலும் தந்தையின் மனதிற்குப் பிடித்தவர்கள்தான் இதய சிம்மாசான அதிகாரி ஆகின்றனர். கூடவே, பிராமணரின் உலகத்தில் அனைவருக்கும் அன்பானவராக, அனைவரின் சகயோகியாக, அனைவரின் மரியாதையை பிராப்தி செய்பவராக இருப்பவர் இதய சிம்மாசன அதிகாரியாக இருந்து இராஜ்ய சிம்மாசனத்தின் அதிகாரியாக ஆவார்கள்.

 

சுலோகன்:

யார் உள்ளத்திற்குள் நான் தந்தையுடையவன், தந்தை என்னுடையவர் என்ற எல்லையற்ற பாடல் இசைத்துக் கொண்டே இருக்கிறாரோ அவர் தான் உள்ளத்தில் இடம் பிடித்தவர் (தில் ரூபா - மனதிற்கு இனிமையானவர்) ஆவார்.

 

ஓம்சாந்தி