ஓம் சாந்தி.
நாம் ஆத்மா என்பதில் குழந்தைகளுக்கு நிச்சயம் உள்ளது. பாபா
பகவான் நமக்கு கற்பித்துக்கொண்டிருக்கிறார். ஆகவே
குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். அவரே நேரில்
வந்துள்ளதால் ஆத்மா புரிந்து கொள்கிறது, பாபா வந்துள்ளார் -
அனைவருக்கும் சத்கதி அளிப்பதற்காக என்பதை. அனைவருக்கும் சத்கதி
அளிக்கும் வள்ளல், ஜீவன் முக்தி அளிக்கும் வள்ளல் அவர் தான்.
குழந்தைகள் அறிந்துள்ளனர், மாயா அடிக்கடி மறக்கடித்து
விடுகின்றது. ஆனால் நாம் பாபாவின் முன்னால் அமர்ந்துள்ளோம்.
நிராகார் பாபா இந்த ரதத்தில் அமர்ந்துள் ளார் என்பதைப் புரிந்து
கொண்டுள்ளனர் இல்லையா! . எப்படி முஸ்லீம்கள் (தோலாலான)
இடுப்புப் பட்டையைக் குதிரை மீது வைக்கின்றனர். அவர்கள்
சொல்வார்கள், இந்தக் குதிரை மீது முகம்மது சவாரி செய்தார் என்று.
அடையாளமாக வைத்து விடுகின்றனர். இங்கோ நிராகார் பகவானின்
பிரவேசம். சம்மந்தப்பட்டது. குழந்தை களுக்கு மிகுந்த குஷி
இருக்க வேண்டும். சொர்க்கத்தின் எஜமானராக உருவாக்குகின்ற பாபா
அல்லது உலகத்தின் எஜமானராக உயர்த்தக் கூடிய பாபா வந்து விட்டார்.
பாபா, கீதையின் உண்மையிலும் உண்மை யான பகவான். ஆத்மாவின் புத்தி
பாபாவின் பக்கம் சென்று விடு கின்றது. இது ஆத்மாக்களுக்கு
தந்தையிடம் உள்ள அன்பாகும். இந்தக் குஷி யாருக்கு அதிகரிக்கிறது?
யார் நீண்ட காலம் பிரிந்து இருந்துள்ளனரோ, அவர்களுக்கு. பாபா
தாமே சொல்கிறார், நான் உங்களை சுகத்தின் சம்மந்தத்தில்
அனுப்பியிருந்தேன். இப்போது நீங்கள் துக்கத்தின் பந்தனத்தில்
இருக்கிறீர்கள். நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,
அனைவருமோ 84 பிறவிகளை எடுக்க மாட்டார்கள். 84 லட்சம் பிறவிகளின்
சக்கரமோ யாருடைய புத்தியிலும் பதியாது. பாபா 84 பிறவிகளின்
சக்கரத்தை மிகச் சரியாகச் சொல்லி யுள்ளார். பாபாவின் குழந்தைகள்
84 பிறவி களை எடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இப்போதோ நீங்கள்
அறிவீர்கள், நாம் ஆத்மா இந்த கர்மேந்திரியங்கள் மூலம்
கேட்கிறோம். பாபா இந்த (பிரம்மாவின்) வாய் மூலம் சொல்லிக்
கொண்டிருக்கிறார். அவரே சொல்கிறார், நான் இவருடைய சரீர
உறுப்புகளின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இவருடைய
பெயரை பிரம்மா என வைக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவாக மனிதர்
தான் இருக்க வேண்டும் இல்லையா? சூட்சுமவதனத்தில் பிரஜாபிதா
பிரம்மா எனச் சொல்ல மாட்டார்கள். ஸ்தூல வதனத்தில் வந்து
சொல்கிறார், நான் இந்த பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி உங்களைத்
தத்தெடுக்கிறேன். நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள்
ஈஸ்வரனின் மடியில் செல்கிறோம். சரீரம் இல்லாமலோ மடி இருக்க
முடியாது. ஆத்மா சொல்கிறது, நான் சரீரத்தின் மூலம் இவருடையவனாக
ஆகிறேன். இந்த (பிரம்மாவின்) சரீரத்தை இவர்(சிவபாபா) கடனாகப்
பெற்றுக் கொண்டுள்ளார். இந்த சரீரம் இவருடையதல்ல. ஆத்மா
இவருக்குள் பிரவேசமாகியுள்ளது. உங்களுடைய சரீரத்திலும் கூட
ஆத்மா பிரவேசமாகியது இல்லையா? இந்த பாபாவும் சொல்கிறார் - நான்
இவருக்குள் இருக்கிறேன். சில நேரம் குழந்தையாக ஆகிறேன், சில
நேரம் அம்மாவாகவும் ஆகிறேன். மந்திர வாதி அல்லவா? அநேகர் பிறகு
இந்த விளையாட்டை மாயமந்திரம் எனப் புரிந்து கொண்டுள்ளனர்.
உலகத்தில் பொய்யான ரித்தி சித்தி (செப்படி வித்தை)யின் ஏமாற்று
வேலை அதிகம் நடைமுறையில் உள்ளது. கிருஷ்ணராகவும் ஆகி
விடுகின்றனர். யாருக்குக் கிருஷ்ணரின் மேல் பாவனை இருக்குமோ,
அவர்களுக்கு உடனே கிருஷ்ணர் காணப்படுவார். அவரை ஏற்றுக்
கொள்வார்கள். அவரைப் பின்பற்றுவோராகவும் ஆகி விடுவார்கள். இங்கோ
அனைத்தும் ஞானத்தின் விசயங்களாகும். முதலில் இந்த உறுதியான
நிச்சயம் வேண்டும்- நான் ஆத்மா, மேலும் பாபாவோ சொல்கிறார், நான்
உங்களுடைய தந்தை, குழந்தைகளாகிய உங்களைத் திரிகாலதரிசி
ஆக்குகிறேன். இத்தகைய ஒரு ஞானத்தை யாராலும் தர இயலாது. பக்தி
மார்க்கத்தின் இறுதி எப்போது வருகிறதோ, அப்போது தந்தை வர வேண்டி
உள்ளது. அநேகருக்கு சிவலிங்கத்தின், அகண்ட ஜோதி சொரூபத்தின்
சாட்சாத்காரம் ஏற்படுகிறது. எப்படி யாருடைய பாவனை உள்ளதோ,
அதையும் நிறைவேற்றுகிறேன். ஆனால் என்னோடு யாரும் சந்திப்பதில்லை.
என்னையோ அறிந்து கொள்வதே இல்லை. இப்போதோ நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள், பாபாவும் புள்ளி, நாமும் புள்ளி. ஆத்மா
எனக்குள் இந்த ஞானம் உள்ளது ஆத்மாக்களாகிய உங்களுக் குள்ளும்
இந்த ஞானம் உள்ளது. நாம் ஆத்மாக்கள் பரந்தாமத்தில் வசிப்பவர்கள்
என்பதும் யாருக்கும் தெரியாது. எப்போது நீங்கள் பாபாவுக்கு
முன்னால் போய் அமர்ந்து கொள்கிறீர் களோ, அப்போது மெய் சி-ர்த்து
நிற்கின்றது. ஓஹோ! ஞானக்கடலாகிய சிவபாபா இவருக்குள் அமர்ந்து
நமக்குக் கற்பிக்கிறார். மற்றப்படி கிருஷ்ணர் அல்லது கோபி யரின்
விஷயமோ கிடையாது. இங்கேயும் இல்லை, சத்யுகத்திலும் இருக்க
மாட்டார்கள். அங்கோ ஒவ்வோர் இளவரசர், இளவரசிகளும் அவரவர்
மாளிகையில் இருப்பார்கள். யார் வந்து பாபாவிடம் ஆஸ்தி பெற
இருக்கிறார்களோ, அவர்கள் தான் இந்த அனைத்து விஷயங்களையும்
புரிந்து கொள்வார்கள். ஆக, இந்த குஷியும் மனதில் இருக்க
வேண்டும். நீங்கள் தான் தாயும் தந்தையும் எனச் சொல்லவும்
செய்கின்றனர். ஆனால் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வில்லை.
தந்தை என்பதோ சரி தான், பிறகு தாய் என்று சொல்லப்படுபவர் யார்?
மாதாவோ அவசியம் வேண்டும். இந்த மாதாவுக்கு யாரும் மாதா ஆக
முடியாது. இந்த இரகசியம் மிகவும் புரிந்து கொள்ள வேண்டியதாகும்.
மேலும் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை சொல்கிறார்,
உங்களுக்குள்ளும் எந்த ஓர் அவகுணமும் இருக்கக் கூடாது. குணமற்ற
என்னிடம் எந்த ஒரு நல்ல குணமும் இல்லை எனப் பாடவும்
செய்கின்றனர். இப்போது குழந்தைகளை குணவான்களாக மாற்ற வேண்டும்.
எந்த ஒரு காம விகாரமோ கோப விகாரமோ இருக்கக் கூடாது. தேகத்தின்
அகங்காரமும் இருக்கக் கூடாது.
இச்சமயம் நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். நாம் இங்கே
இருக்கிறோம் என்பதை அறிவீர்கள். பிறகும் கூட மனச்சோர்வு ஏன் வர
வேண்டும்? ஆனால் இந்தப் பக்குவமடைந்த மன நிலை என்பது கடைசியில்
தான் வரும். பாடப்பட்டும் உள்ளது, அதீந்திரிய சுகம் என்றால்
என்னவென்று கோப-கோபியரிடம் கேளுங்கள் என்று. இது கடைசியில்
இருக்கும். நான் 75 சதவிகிதம் அதீந்திரிய சுகத்தில் இருக்கிறேன்
என்பதாக யாரும் சொல்ல முடியாது. இச்சமயம் பாவங்களின் சுமை
அதிகம் உள்ளது. குருவின் கிருபையால் அல்லது கங்கா ஸ்நானத்தால்
பாவங்கள் நீங்குவதில்லை. பாபா கடைசியில் தான் வந்து ஞானம்
தருகிறார். கன்யாக்கள் மூலமாக பாணங்கள் எய்யப் பட்டதாகவும்
இறந்து போனதாகவும் காண்பிக் கின்றனர். பிறகு இறக்கும் சமயம்
கங்கை நீரை அருந்தச் செய்தனர். நீங்கள் இங்கே மூர்ச்சை அடையும்
போது பாபாவின் நினைவூட்டப் படுகின்றது. என்னை மட்டும் நினைவு
செய்யுங்கள் என பாபா சொல்கிறார், இது குழந்தைகளுக்குப்
பழக்கமாக ஆகிவிட வேண்டும். யாராவது நினைவு செய்ய வைக்க வேண்டும்
என்று இருக்கக் கூடாது. சரீரத்தை விடும் நேரத்தில் தானாகவே
நினைவு வர வேண்டும். யாருடைய உதவியும் இல்லாமல் பாபாவை நினைவு
செய்ய வேண்டும். அந்த மனிதர்களோ மந்திரம் தருகின்றனர். அதுவோ
பொதுவான விஷயம். இச்சமயம் அதிகமான குழப்பங்கள் முதலியவை
நடைபெறுகின்றன. நீங்கள் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறீர்கள்.
அந்த சமயம் சிவ-சிவ எனச் சொல்லுங்கள் என்று சொல்ல மாட்டார்கள்.
அந்த சமயம் முழுமையான நினைவு இருக்க வேண்டும். அன்பு இருக்க
வேண்டும். அப்போது தான் நம்பர் ஒன் பதவி பெற முடியும்.
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நான் உங்களுடைய தந்தை,
கல்பத்திற்கு முன்பும் கூட உங்களை மணமுள்ள மலர்களாக
ஆக்கியிருந்தேன். சத்யுகத்தில் யோக பலத்தினால் பூ மாதிரிக்
குழந்தைகள் பிறப்பார்கள். துக்கம் தரும் எந்த ஒரு பொருளும்
அங்கே இருக்காது. பெயரே சொர்க்கம்! ஆனால் அங்கே யார்
வசிக்கிறார்கள் - இதை பாரத வாசிகள் அறிந்திருக்கவில்லை.
சாஸ்திரங்களில் இது போன்ற விஷயங்கள் அநேகம் எழுதப் பட்டுள்ளன.
அதாவது அங்கேயும் கூட ஹிரண்யகசிபு முதலியவர்கள் இருந்தனர் - இவை
அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாதனங்கள். பக்தியும் கூட
முதலில் சதோபிரதானமாக இருக்கிறது. பின்னால் மெது-மெதுவாகத்
தமோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்கிறது.
பாபா சொல்கிறார், நான் உங்களை ஆகாயத்தில் ஏற்றி உயர்த்தி
வைக்கிறேன். நீங்கள் கொஞ்சம்-கொஞ்சமாகக் கீழே இறங்கி
வருகிறீர்கள். மனிதர்கள் யாருக்கும் மகிமை என்பது கிடையாது.
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை மட்டுமே.
மற்றப்படி குருமார்கள் அநேக விதமான தீர்த்த யாத்திரை
முதலியவற்றைக் கற்றுத் தருகின்றனர். பிறகும் கீழே இறங்கிக்
கொண்டே இருக்கின்றனர். பக்தி மார்க்கத்தில் மீராவுக்கு
சாட்சாத்காரம் கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் ஒன்றும் உலகத்தின்
எஜமானி ஆகவில்லை. உங்களுக்கோ பாபா சொல்கிறார்-ஜின் பூதமாக
ஆகுங்கள். உங்களுக்கு வேலை தருகிறேன்-அலஃப் (தந்தை) மற்றும் பே
(ஆஸ்தி)யை நினைவு செய்து கொண்டே இருங்கள். களைத்துப்
போகிறீர்கள், நினைவு செய்யவில்லை என்றால் மாயா உங்களைப்
பச்சையாகவே (உயிரோடு) விழுங்கி விடும். ஜின் பூதம் விழுங்கி
விட்டதாக ஒரு கதையும் உள்ளது. பாபாவும் சொல்கிறார், நீங்கள்
நினைவு செய்யவில்லை என்றால் மாயா பச்சையாக விழுங்கி விடும்.
நினைவில் அமர்வதன் மூலம் குஷி அதிகரிக்கிறது. பாபா நம்மை
உலகத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். பாபா நமக்கு முன்பாக
அமர்ந்துள்ளார். ஆத்மாக்கள் நீங்கள் கேட்கிறீர்கள். இனிமையான,
செல்லக் குழந்தைகளே, நான் உங்களை முக்தி தாமத்திற்கு அழைத்துச்
செல்வதற்காக வந்துள்ளேன். திரும்பிச் செல்வதற்காக அதிக முயற்சி
செய்கின்றனர். ஆனால் யாராலும் செல்ல முடியாது. கலியுகத்திற்குப்
பிறகு சத்யுகம், இரவுக்குப் பிறகு பகல் வந்தேயாக வேண்டும்.
நீங்கள் அறிவீர்கள், சத்யுகத்தில் நாம் மட்டுமே இருப்போம். பாபா
மீண்டும் உங்களுக்கு இராஜ்ய பாக்கியத்தைத் தருகிறார். குஷியின்
அளவு கடைசியில் அதிகரிக்கும். நாடகம் முடிவு வரும் போது விநாசம்
நடைபெறும். நீங்கள் சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டே
இருப்பீர்கள். இரத்த ஆறு ஓடும் விளையாட்டு இல்லையா? என்ன பாவம்
செய்தனர் - கொல்வதற்காக வெடி குண்டு முதலியவற்றைத்
தயாரித்துள்ளனர்? இறந்து போவார்கள் என்பது சரி தான். அவர்களும்
புரிந்து கொண்டுள்ளனர் - யாரோ நம்மைத் தூண்டிக்
கொண்டிருக்கின்றனர். விரும்பாமலே கூட நாம் இந்த வெடிகுண்டுகள்
முதலியவற்றைத் தயாரிக்கிறோம். செலவோ மிக அதிகம் ஆகிறது.
டிராமாவில் விதிக்கப்பட்டுள்ளது - இவற்றால் விநாசம் நடந்தே
தீரும். அநேக தர்மங்களின் நடுவில் ஒரு தர்மம் இராஜ்யம் செய்ய
இயலாது. இப்போது அநேக தர்மங்கள் விநாசமாகி ஒரு தர்மத்தின்
ஸ்தாபனை நடைபெறுகின்றது.
நீங்கள் அறிவீர்கள், நாம் பாபாவின் ஸ்ரீமத்படி இராஜ்யத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறோம். அவர்கள் பிறகு மைதானத்தில்
டிரில் முதலியவற்றைக் கற்றுக் கொள் வதற்காகச் சென்று
விடுகின்றனர். இறக்க வேண்டும், இறந்து போக வைக்க வேண்டும் எனப்
புரிந்து கொண்டுள்ளனர். இங்கோ அந்த விஷயம் கிடையாது. பாபா
வந்திருக்கிறார் என்பதால் மிகுந்த குஷி இருக்க வேண்டும்.
பழமையான பாரதத்தின் இராஜயோகத்தை நிராகார் பகவான் தான் கற்றுக்
கொடுத்தார். பெயரை மாற்றிக் கிருஷ்ணர் என வைத்து விட்டனர்.
சந்நியாசிகள் புரிந்து கொண்டுள்ளனர், நம்முடையது தான் பழமையான
யோகம் என்று. உங்களுக்கு எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார்!
குழந்தைகளே, என்னை அறிவீர்களா - நான் உங்களுடைய தந்தை. என்னைத்
தான் பதீத-பாவனர், ஞானக்கடல் எனச் சொல்கிறீர்கள். கிருஷ்ணரோ
அசுத்தமான உலகத்தில் வர முடியாது. கிருஷ்ணரைப் பிறகு துவாபர
யுகத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். எவ்வளவு தவறான புரிதல்!
முற்றிலும் தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளனர். எப்போது அனைவரையும்
முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமோ அப்போது தான் நான்
வருகிறேன்.
நீங்கள் அறிவீர்கள், நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம்
இறை மாணவர்கள். இதை சிந்தனை செய்து கொண்டே இருப்பீர்களானால்
உடல் சி-ர்த்துபோகும். பாபா குழந்தை களாகிய உங்களுக்கு
ஞானத்தின் கருவை தாரணை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு
நீங்கள் இதை ஏன் மறந்து விடுகிறீர்கள்? குழந்தை பிறந்ததும் பாபா
எனச் சொல்லத் தொடங்கி விடுகிறது. நாம் வாரிசு எனப் புரிந்து
கொள்கின்றனர். ஆக, நிரந்தரமாகத் தாத்தாவை நினைவு செய்யுங்கள்.
பாபா வழிமுறை தருகிறார், குழந்தைகளே, காமம் மகாசத்ரு. இது
உங்களுக்கு முதல்-இடை-கடைசி வரை அதிகமாகத் துன்பம்
கொடுத்துள்ளது. இது மரண உலகம், வேஷ்யாலயம். இராமர் சிவாலயத்தை
அமைக்கிறார். அதில் தேவி-தேவதா தர்மத்தின் இராஜ்யம் இருக்கும்.
ஆனால் அவர்கள் எப்படி இராஜ்யத்தைப் பெற்றார்கள், எப்போது
பெற்றார்கள், இதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள்.
தேவி-தேவதைகள் ஒரு போதும் மறுபிறவி எடுப்பதில்லை என அவர்கள்
நினைக்கின்றனர். யாராவது ஒரு பெரிய மனிதருக்கு இது புரிந்து
விட்டால் அந்தச் செய்தி பரவி விடும். ஏழைகளின் வார்த்தை யையோ
யாரும் கேட்பதில்லை. உங்களிலும் கூட நம்பர்வார் தாரணை உள்ளவர்
இருக்கிறீர்கள். பாடசாலை ஒன்று தான். ஆசிரியர் ஒருவர் தான்.
மற்றப்படி படிக்கிறவர்கள் நம்பர்வார் உள்ளனர். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மாயாவின் போராட்டத்திலிருந்து தன்னைப்
பாதுகாத்துக் கொள்வதற்காக ஜின் ஆகி தந்தை மற்றும் ஆஸ்தியை
நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். தலை மீதுள்ள பாவங்களின்
சுமையை யோக பலத்தினால் இறக்கி வைக்க வேண்டும். அதீந்திரிய
சுகத்தில் இருக்க வேண்டும்.
2) வாயினால் வெறுமனே சிவ-சிவ என்று சொல்ல வேண்டியதில்லை.
பாபாவிடம் உண்மை யான அன்பு வைக்க வேண்டும். முள்ளில் இருந்து
மலர்களை உருவாக்கும் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.