11-06-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பிராமணனாக ஆகிய பிறகு தந்தையின் பெயர் கெடுமளவிற்கு நடந்து கொள்ளக் கூடாது. தொழில் போன்றவைகள் செய்தாலும் ஸ்ரீமத் படி மட்டும் நடந்து கொண்டே இருங்கள்.

கேள்வி:
இறை மாணவர்களின் வாயில் எந்த வார்த்தை வெளிப்படக் கூடாது?

பதில்:
படிப்பு படிப்பதற்கு எனக்கு நேரமில்லை என்ற வார்த்தை உங்களது வாயில் வரக் கூடாது. தந்தை எந்தக் குழந்தைகளின் மீதும் பிரச்சனை, சுமைகளை ஏற்றுவது கிடையாது, அதிகாலையில் எழுந்து ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் படிப்புப் படியுங்கள் என்று தான் கூறுகின்றார்.

கேள்வி:
மனிதர்களின் திட்டம் என்ன? இறைவனின் திட்டம் என்ன?

பதில்:
அனைவரும் ஒன்றாக இணைந்து ஒன்றாகி (ஒற்றுமையாகி) விட வேண்டும் என்பது மனிதர்களின் திட்டம் ஆகும். மனிதன் நினைப்பது ஒன்று........ தந்தையின் திட்டம் பொய்யான கண்டத்தைச் சத்திய கண்டமாக்குவதாகும். ஆகச் சத்திய கண்டம் செல்வதற்காக அவசியம் சத்தியமானவர்களாக ஆக வேண்டும்.

பாடல்:
இன்றைய மனிதர்கள் ....

ஓம் சாந்தி.
குழந்தைகளும் ஓம்சாந்தி என்று கூறுகிறீர்கள். ஆத்மாவானது இந்தச் சரீரத்தின் மூலம் ஓம்சாந்தி என்று கூறுகிறது. உள்ளே இருக்கும் ஆத்மாவின் சுயதர்மம் அமைதி என்பதை மறந்து விடக் கூடாது. தந்தையும் வந்து ஓம்சாந்தி என்று கூறுகின்றார். குழந்தை களாகிய நீங்கள் அமைதியாக எங்கே இருக்கிறீர்களோ, தந்தையும் அங்குத் தான் இருக்கின்றார். அது நமது சாந்திதாமம் அல்லது வீடாகும். உலகில் எந்த ஒரு வித்வான், ஆச்சாரியர்கள் இந்த விசயங்களை அறியவில்லை. ஆத்மா தான் பரமாத்மா என்று கூறிவிடுகின்றனர். ஆத்மா என்றால் என்ன? என்ற ஞானமும் யாரிடத்திலும் கிடையாது. இவ்வளவு கோடிக் கணக்கான ஆத்மாக்கள் நட்சத்திரம் போன்று இருக்கின்றன. ஒவ்வொரு ஆத்மாவிலும் அவரவர்களுக்கான அழிவற்ற பாகம் பதிவாகியிருக்கிறது. தகுந்த நேரத்தில் வெளிப்படுகிறது. இதைத் தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். தந்தையும் ஜீவாத்மாவாக ஆகாமல் ஜீவாத்மாக் களுக்குப் புரிய வைக்க முடியாது. எனக்கும் அவசியம் சரீரம் வேண்டும் அல்லவா! எப்போது படைப்புகளைப் படைக்க வேண்டியிருக்கிறதோ அப்போது தான் சரீரத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் படைப்புகளைப் படைக்கின்றார். படைப்பவர் நிராகார சிவன் ஆவார். பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் பிரம்மா குமார், குமாரிகளுக்குப் புரிய வைக்கின்றார், சூத்ரர்களுக்கு அல்ல. இப்போது நம்முடையது பிராமணத் தர்மம். முன்பு சூத்ர வர்ணத்தில் இருந்தோம். அதற்கு முன்பு வைஷ்ய வர்ணம், சத்ரிய வர்ணம். உலகத்தினர் இந்த விசயங்களை அறியவில்லை. உண்மையில் பிராமணர்கள் தான் தேவதைகளாக, பிறகு சத்ரியர் களாக, வைஷ்யர்கள், சூத்ரர்களாக ஆகின்றனர். பிராமணர்களுடையது குடுமி யாகும். முன்பு பிராமணர்கள் பசுவின் (கால்) குளம்பு போன்று குடுமி வைத்திருந்தனர். நீங்கள் குட்டிக்கர்ண விளையாட்டு விளையாடுகிறீர்கள். நான் விளையாடுவது கிடையாது. இந்த வர்ணங்களின் சக்கரத்தில் நீங்கள் வருகிறீர்கள், எவ்வளவு எளிதான விசயமாகும்! உங்களது பெயரே சுயதரிசன சக்கரதாரி. மற்றபடி சாஸ்திரங்களில் என்னென்னவோ விசயங் களை எழுதி வைத்து விட்டனர்! பிராமணர்களாகிய நாம் தான் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகிறோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த அலங்காரங்களின் அடையாளங்களைத் தேவதை களிடம் கொடுத்திருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் சம்பூர்ண மானவர்கள். அவர்களுக்குத் தான் அழகாக இருக்கிறது. இந்த ஞானத்தைத் தாரணை செய்வதன் மூலம் நீங்கள் மீண்டும் சக்கரவர்த்தி இராஜாவாக ஆகிறீர்கள். இப்போது தந்தையின் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். இது ருத்ர ஞான யக்ஞமாகும். யக்ஞத்திற்குப் பிராமணர்கள் அவசியம் தேவை. சூத்திரர்கள் யக்ஞத்தை படைக்க முடியாது. ருத்ரன் சிவபாபா யக்ஞத்தை படைத்திருக் கின்றார் எனில் பிராமணர்கள் அவசியம் தேவை. நான் பிராமணக் குழந்தைகளிடத்தில் தான் உரையாடுகிறேன் என்று தந்தை கூறுகின்றார். எவ்வளவு பெரிய யக்ஞமாக இருக்கிறது! எப்போது தந்தை வந்தாரோ, வந்தவுடனேயே யக்ஞத்தை படைத்து விட்டார். இது தான் அஸ்வமேதம், அதாவது சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எங்கு? பாரதத்தில். சத்யுக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். இதைச் சிவ ஞான யக்ஞம் என்று கூறினாலும், ருத்ர ஞான யக்ஞம் என்று கூறினாலும் சரியே. சோமநாத கோயிலும் அவருடையதே. அந்த ஒரு வருக்கே பல பெயர் உள்ளன. இது யக்ஞம் என்று கூறப்படுகிறது, பாடசாலை என்று கூறப்படுவது கிடையாது. தந்தை ருத்ர ஞான யக்ஞத்தை படைத்திருக்கின்றார். யக்ஞத்தை பாடசாலை என்று கூற முடியாது. பிராமணர் களின் மூலம் யக்ஞம் உருவாக்கப் படுகிறது. பிராமணர்களுக்குத் தட்சணை கொடுக்கும் வள்ளல் போலாநாத் ஆவார். அவரைத் தான் சிவபோலாநாத் பண்டாரி என்று கூறுகின்றனர். இப்போது நீங்கள் அவர் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். பாப்தாதா குழந்தைகளைத் தத்தெடுத் திருக்கின்றார். இவர் பெரிய அம்மா ஆவார். பிறகு தாய்மார்களைப் பாதுகாப்பதற்காக மம்மா நியமிக்கப் படுகின்றார். அவர் அனை வரையும் விடத் தீவிரமாகச் சென்று விடுகிறார். இவரது பாகம் முக்கியமானது. அவர் ஞான, ஞானேஸ்வரி ஜெகதம்பா. மகாலெட்சுமியை ஞான, ஞானேஸ்வரி என்று கூறுவது கிடையாது. லெட்சுமி என்றால் செல்வத்தின் தேவதை. இவரது வீட்டில் லெட்சுமி இருக்கிறார் அதாவது செல்வம் அதிகம் இருக்கிறது என்று கூறகின்றனர் அல்லவா! லெட்சுமி யிடம் செல்வம் தான் கேட்கின்றனர். 12 மாதங்கள் முடிவடைந்து விட்டால் வேள்வி நடத்துகின்றனர் (லெட்சுமியை வரவேற்கின்றனர்) ஜெகதம்பா அனைவரின் மன விருப்பங் களை நிறைவேற்றுபவர். ஜெகதம்பா பிரஜாபிதாவின் மகள், அவரது பெயர் சரஸ்வதி என்பதைக் குழந்தைகள் அறிவீர்கள். ஒரே ஒரு பெயர் தான், அவ்வளவு தான். மம்மாவாகவும் இருக்கிறார், குழந்தையாகவும் இருக்கிறார். நீங்கள் சிவபாபாவின் மூலம் ஞானம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இவரைத் தந்தை வந்து தத்தெடுத்திருக்கின்றார். பிரம்மா என்று பெயர் வைத்திருக்கின்றார். நான் தூய்மை இல்லாத சரீரத்தில் வருகிறேன் என்ற கூறுகின்றார். சாஸ்திரங்களிலும் இந்த விசயங்கள் எதுவும் கிடையாது. புது உலகிற்காக நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். முள்ளிலிருந்து மலராக ஆகிக் கொண்டிருக்கிறோம். சூத்ரன் என்றால் முள்ளாக இருந்தோம். இப்போது பிராமணர்கள், மலர்களாக ஆகியிருக்கிறோம். பிராமணர்களை மலர்களாக ஆக்கக் கூடியவர் தந்தை. அவர் பூந்தோட்டத்தின் எஜமானர். நீங்கள் வரிசைக்கிரமமான தோட்டக்காரர்களாக இரு கிறீர்கள். யார் நல்ல நல்ல தோட்டக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மற்றவர் களையும் தன்னைப் போல் ஆக்குவார்கள். நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது, வரிசைக்கிரமமாக இருக்கிறது, இதற்குத் தான் ஆன்மீக ஞானம் என்று கூறப்படுகிறது. ஈஸ்வரன் ஞானம் கொடுப்பவர் ஆவார். சாஸ்திரம் போன்ற அனைத்தையும் மனிதர்கள் கூறுகின்றனர். இந்த ஆன்மீக ஞானத்தை ஆத்மாக்களுக்குச் சுப்ரீம் ஆத்மா கொடுக்கின்றார், வேறு யாருக்கும் படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் கிடைப்பதே கிடையாது. கட்டுக் கதை கூறிக் கொண்டே இருக்கின்றனர். இது பொய்யான உலகமாகும். அனைத்தும் பொய்யானது. உண்மையில் முன்பு பொய்யான தங்கம், இரத்தின நகை கிடையவே கிடையாது. இப்போது எவ்வளவு பொய்யானது வெளிப்பட்டு விட்டது! உண்மையானதை வைத்துக் கொள்ள விடுவது கிடையாது. பொய்யான உலகம் இராவண இராஜ்யம் ஆகும். சத்திய கண்டம் இராமரால் ஸ்தாபனை செய்யப்பட்ட இராஜ்யமாகும். இது சிவபாபாவினால் ஸ்தாபனை செய்யப்பட்ட யக்ஞமாகும். பாடசாலையாகவும் இருக்கிறது, யக்ஞமாகவும் இருக்கிறது, வீடாகவும் இருக்கிறது. நாம் பரலௌகீகத் தந்தை மற்றும் பிரஜாபிதா பிரம்மாவின் எதிரில் அமர்ந்திருக் கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதுவரை பிராமணன் ஆகவில்லையோ ஆஸ்தி எப்படி அடைய முடியும்? யக்ஞத்தை பாதுகாப்பதற்கு உண்மையான பிராமணர்கள் தேவை. விகாரத்தில் செல்பவர்களைப் பிராமணர்கள் என்று கூறுவது கிடையாது. ஒரு கால் இராவணனின் படகிலும், மற்றொன்று இராமரின் படகிலும் இருந்தால் பலன் என்ன கிடைக்கும்? கீழே விழுந்து விடுவர். இப்படிப்பட்ட நடத்தையின் மூலம் பெயர் கெடுத்து விடுகின்றனர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தை என்று கூறிக் கொள்கிறீர்கள், பிறகு காரியங்கள் சூத்ரன் போன்று இருக்கிறது. தொழில் போன்றவைகளைச் செய்யுங்கள், ஆனால் ஸ்ரீமத்படி நடக்கும் போது பொறுப்பு அவருடையதாக ஆகிவிடுகிறது என்று தந்தை கூறுகின்றார்.

நீங்கள் இங்கு வந்திருப்பதே ஈஸ்வரிய வழி (அறிவுரை) அடைவதற்காக. அது அசுர வழியாகும். சிரேஷ்டம் ஆவதற்காக நீங்கள் ஸ்ரீமத் அடைகிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை உயர்ந்த வழிமுறை கொடுக்கின்றார். மனிதனிலிருந்து தேவதை ஆவதற்கான உயர்ந்த வழி நமக்குக் கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் சூரியவம்சி இராஜாவாக ஆவோம் என்று கூறவும் செய்கிறீர்கள். இது இராஜஸ்வ, பிரஜாஸ்வ கிடையாது. நீங்கள் இராஜா, ராணி ஆகிறீர்கள் எனில் பிரஜைகளும் அவசியம் உருவாக வேண்டும். எவ்வாறு மம்மா, பாபா முயற்சி செய்து ஆனார்களோ அதே போன்று குழந்தைகளும் ஆக வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கும் குஷி ஏற்பட வேண்டும். பிரம்மா குமார், குமாரிகளாகிய நாம் சிவபாபாவின் பேரன், பேத்திகளாக இருக்கிறோம். சிவனைப் பிரஜாபிதா என்று கூறுவது கிடையாது. அவர் படைப்பவர். சொர்க்கத்தில் இருப்பவர்கள் தேவி தேவதைகள். தந்தை தான் மனிதர்களைத் தேவதைகளாக ஆக்குகின்றார். உங்களது உடல் கல்ப விருட்சத்தைப் போன்று புத்துணர்வு அடைகிறது. அசுத்தமாக (கருப்பாக) ஆகிவிட்ட உங்களது ஆத்மாவை சுத்தமானதாக (வெள்ளையாக) ஆக்குகின்றார். எப்போது சம்பூர்ணமாக ஆகிவிடுவீர்களோ பிறகு சரீரம் இருக்காது. அதனால் தான் முட்கள் நிறைந்த காடு தீ பற்றிக் கொள்கிறது. அதில் அனைத்தும் விநாசம் ஆகிவிடும். இது எல்லையற்ற விசயமாகும். அது எல்லையற்ற தீவாகும், இது எல்லைக்குட்பட்டது. எத்தனை மொழிகள் உள்ளனவோ அவ்வளவு பெயர்கள் வைத்து விட்டனர். பல தீவுகள் உள்ளன. ஆனால் இந்த உலகமே தீவாகும். முழு உலகிலும் இராவண இராஜ்யம் இருக்கிறது. என்ன நிலை அடைந்து விட்டது? என்று பாட்டிலும் கேட்டீர்கள் அல்லவா! அங்கு ஒருவரையொருவர் அடிக்கமாட்டார்கள். அங்கு இராம இராஜ்யம், இராம பிரஜைகள் ....... துக்கத்திற்கான விசயங்கள் இருக்காது என்று கூறுகின்றார். யாருக்காவது துக்கம் கொடுப்பதும் பாவமாகும். பிறகு அங்கு இந்த இராவணன், அனுமான் போன்றவர்கள் எங்கிருந்து வந்தனர்? முதல் முக்கிய விசயம் என்னவெனில் இறை தந்தை என்று கூறுகிறீர்கள் எனில் அவர் எப்படிச் சர்வவியாபியாக இருக்க முடியும்? என்று நீங்கள் கூற முடியும். பிறகு தந்தையர்களாக (பாதர்ஹுட்) ஆகிவிடுவர். அனைவரும் தந்தைகளாகவோ ஆக முடியாது.

அரைக் கல்பம் நீங்கள் பொய்யான வருமானம் செய்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க வேண்டும். இப்போது சத்திய கண்டத்திற்கான சத்திய வருமானம் செய்ய வேண்டும். அவர்களும் வருமானத்திற்காகச் சாஸ்திரம் போன்றவற்றைக் கூறுகின்றனர். சிவபாபா இந்தச் சாஸ்திரம் போன்ற எதையும் படிக்க வில்லை. அவரோ ஞானம் நிறைந்தவர், ஞானக் கடல் ஆவார். அவர் சத்தியமானவர், சைத்தன்யமானவர். சத்திய கண்டத்திற்காக நாம் சத்திய வருமானம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பொய்யான கண்டம் விநாசம் ஆகிவிடும். தேகச் சகிதமாக இவை அனைத்தும் விநாசம் ஆகிவிடும். எப்படி யுத்தம் நடக்கும் என்பதை நீங்கள் அனைவரும் பார்ப்பீர்கள். அனைவரும் ஒன்றாகி (ஒற்றுமையாகி) விட வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர், ஆனால் பிரிவு ஏற்பட்டுக் கொண்டே செல்கிறது. மனிதன் நினைப்பது ஒன்று....... அவர்களது திட்டங்கள் அனைத்தும் விநாசத்திற்கானது. ஈஸ்வரனின் திட்டம் என்ன? என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். பொய்யான கண்டத்தைச் சத்திய கண்டமாக ஆக்குவதற்காக, மனிதனை தேவதையாக்குவதற்காகத் தந்தை வந்திருக்கின்றார். சத்திய தந்தையின் மூலம் நீங்கள் சத்திய மானவர்களாக ஆகிறீர்கள். மேலும் இராவணனின் மூலம் பொய்யானவர்களாக ஆகிறீர்கள். தந்தை தான் சத்திய ஞானம் கொடுக்கின்றார். பிராமணர்களாகிய உங்களது கை நிறைந்து விடும். மற்றபடி சூத்ரர்களின் கை காலியாக இருக்கும்.

நாம் தேவி தேவதைகளாக ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போன்று இருங்கள் மற்றும் என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அவரை நினைவு செய்வதை ஏன் மறக்க வேண்டும்? எந்தத் தந்தை சொர்க்கத் திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றாரோ அவரை நீங்கள் மறந்து விடுகிறீர்கள், இது புது விசயமாகும், இதற்கு ஆத்ம அபிமானியாக ஆக வேண்டியிருக்கிறது. ஆத்மா அழிவற்றது, ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது. ஆத்ம அபிமானியாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஏனெனில் திரும்பிச் செல்ல வேண்டும். தேக உணர்வை விட்டு விடுங்கள். இது 84 பிறவிகளின் இற்றுப் போன செருப்பாகும். ஆடை அணிந்து அணிந்து இற்றுப் போய் விடுகிறது அல்லவா! அதுபோல நீங்களும் இந்தப் பழைய சரீரத்தை விட வேண்டும். இப்போது காமச் சிதையிலிருந்து இறங்கி ஞானச் சிதையில் அமருங்கள். பலரால் விகாரங்கள் இன்றி இருக்க முடிவதே கிடையாது. துவாபரத் திலிருந்து இந்த விகாரங்களின் காரணத்தினால் தான் நீங்கள் மிகப் பெரிய தீராத நோயாளி களாக ஆகிவிட்டீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது இந்த விகாரங்களை வெல்லுங்கள். காம விகாரத்தில் செல்லாதீர்கள். இந்தச் சரீரம் அசுத்தமானது, தூய்மையற்றது அல்லவா! இங்கு அனைவரும் விகாரத்தினால் பிறக்கின்றனர். சத்யுகம், திரேதாவில் இந்த விகாரம் இருக்காது. அங்கும் இது இருந்தால் அதைச் சொர்க்கம் என்றும் இதை நரகம் என்றும் ஏன் கூற வேண்டும்! சாஸ்திரங்களில் எந்த இலட்சியமும் கிடையாது என்று தந்தை கூறுகின்றார். இங்கு இலட்சியம் இருக்கிறது. நாம் இப்போது மனிதனிலிருந்து தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதுவெல்லாம் படித்தீர்களோ அதை மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அதில் எந்தச் சாரமும் கிடையாது. உங்களுக்கு ஒரே ஒரு முறை தான் முன்னேறும் கலை ஏற்படுகிறது. பிறகு கீழிறங்கும் கலையாகும். எவ்வளவு தான் தலை உடைத்துக் கொண்டாலும் கீழே இறங்கியே ஆக வேண்டும். தூய்மையை இழந்தே தீர வேண்டும். இது சீ சீ உலகமாகும். நமது பாரதம் சொர்க்கமாக இருந்தது, இப்போது நரகமாக இருக்கிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முதலில் ஆதி சநாதன ஒரே ஒரு தர்மம் மட்டுமே இருந்தது, அது இப்போது கிடையாது. மீண்டும் அந்தத் தர்மம் ஸ்தாபனை ஆகிறது. பாபா மீண்டும் பிரம்மாவின் மூலம் வந்து ஸ்தாபனை செய்கின்றார். நாம் மீண்டும் இராஜ்யம் அடைகிறோம் என்று நீங்களும் கூறுவீர்கள். இராஜ்யம் அடைந்த பின்பு இந்த ஞானம் மறைந்து விடும். இந்த ஞானம் தூய்மை இல்லாதவர் களுக்குத் தான் கிடைக்கிறது - தூய்மை ஆவதற்காக. பிறகு தூய்மை யான உலகில் ஞானம் எப்படி இருக்கும்! லெட்சுமி, நாராயணனின் இராஜ்யம் எவ்வளவு காலம் இருந்தது? என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பாபா, நாங்கள் 5 ஆயிரம் ஆண்டிற்குப் பிறகு இராஜ்யம் அடைவதற்காக மீண்டும் வந்திருக்கிறோம் என்று கூறுகிறீர்கள். ஒரு மனிதன் நான் (எருமை) மாடாக இருக்கிறேன் ....... என்ற உதாரணமும் கொடுக்கின்றார். ஆக அந்த நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. இந்த ஐன்னல் மூலம் எப்படி வெளியேர முடியும்? என்று கூற ஆரம்பித்து விட்டார். இந்த விசயம் உங்களுடையது. நாம் பாபாவின் குழந்தைகள் என்ற நம்பிக்கை வைக்கிறீர்கள். நான் நான்கு கைகளுடையவன் என்று கூறுவதனால் ஆகிவிட முடியாது. உருவாக்கக் கூடியவர் அவசியம் தேவை. இது நரனிலிருந்து நாராயணனாக ஆக்கக் கூடிய ஞானமாகும். யார் நல்ல முறையில் தாரணை செய்து மற்றும் செய்விக்கிறார்களோ அவர்களே உயர்ந்த பதவி அடைவார்கள். படிப்பதற்கு எனக்கு நேரமில்லை என்று மாணவர்கள் கூற முடியாது. இல்லையெனில் வீட்டிலேயே அமர்ந்து விடுங்கள். படிப்பு இன்றி ஆஸ்தி அடைய முடியாது. இறைத் தந்தையின் மாணவனாக இருந்து கொண்டு நேரமில்லை என்று கூறுகிறீர்கள். தந்தையினுடையவர்களாகி பிறகு விட்டு விடுகிறீர்கள் எனில் நீங்கள் மகா மூர்க்கர்கள் என்று தந்தை கூறுவார். ஒரு மணி நேரம், அரை மணி நேரம்...... உங்களுக்கு நேரம் கிடையாதா! நல்லது அதிகாலையில் அமர்ந்து பாபாவை நினைவு செய்யுங்கள். எந்தப் பிரச்சனை-சுமையைத் தலை மீது போடுவது கிடையாது. அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் சுயதரிசன சக்கரத்தை சுற்றினால் போதும். மற்றவர்களுக்கு இல்லையென்றாலும் தனக்கு நன்மை செய்து கொள்ளுங்கள். கருணை உள்ளமுடையவர் களாகி எந்த அளவிற்கு மற்றவர்களுக்கு நன்மை செய்வீர்களோ அதற்கேற்ப உயர்ந்த பதவி அடைவீர்கள். மிக உயர்ந்த வருமான மாகும். யாரிடத்தில் அதிகச் செல்வம் இருக்கிறதோ அவர்கள் நேரமில்லை என்று கூறு கின்றனர். செல்வந்தர்கள் அங்கு ஏழைகளாக ஆக வேண்டும் மற்றும் ஏழைகள் செல்வந்தர் களாக ஆக வேண்டும். அனைவரையும் விடத் தாய்மார்கள் தான் அதிகம் கண்ணீர் விடு கின்றனர், அவர்களை மகிழ்ச்சியால் சிரிப்பவர்களாக மாற்ற வேண்டும். நிரந்தரமாக நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். மதுவனத்தில் அமைதி இருப்பதால் அதிக வருமானம் செய்ய முடியும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சத்திய கண்டத்திற்காக உண்மையான வருமானம் செய்ய வேண்டும். ஆத்ம அபிமானியாகி இருக்க வேண்டும். இந்த இற்றுப் போன சரீரத்தின் மீதான அபிமானத்தை விட்டு விட வேண்டும்.

2) கருணையுள்ளம் உடையவராகித் தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவு செய்து, சுயதரிசன சக்கரத்தை சுற்ற வேண்டும்.

வரதானம்:
சுபபாவனை மூலம் வீணானவற்றை சக்தி வாய்ந்ததாக மாற்றக்கூடிய தூய அன்னப்பறவை ஆகுக.

யார் எதிர்மறைத் தன்மையை விட்டுவிட்டு நேர்மறையான தன்மையைத் தாரணை செய்கின்றார்களோ, அவர்களைத் தூய அன்னப்பறவை என்று சொல்லப்படுகிறது. பார்த் தாலும், கேட்டாலும் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது. எதிர்மறையானவற்றை அதாவது வீணான விசயங்கள், வீணான கர்மத்தை - கேட்கவும் கூடாது, செய்யவும் கூடாது மற்றும் பேசவும் கூடாது. வீணானதை சக்திவாய்ந்ததாக மாற்றிவிடுங்கள். இதற்காக ஒவ்வொரு ஆத்மாவிற் காகவும் சுபபாவனை வைக்க வேண்டும். சுபபாவனையினால் தலை கீழான விசயம் கூட நேராக ஆகிவிடுகிறது. ஆகையினால், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் நீங்கள் சுபபாவனைக் கொடுங்கள். சுபபாவனைக் கல்லையும் தண்ணீர் ஆக்கிவிடும். வீணானது சக்தி வாய்ந்ததாக மாறிவிடும்.

சுலோகன்:
அதீந்திரிய சுகத்தின் அனுபவம் செய்ய வேண்டும் என்றால் சாந்த சொரூப ஸ்திதியில் நிலைத்திருங்கள்.