11-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! இந்த ஆன்மீக படிப்பை தாரணை செய்ய வேண்டுமென்றால் புத்தி தூய்மையான தங்கப் பாத்திரமாக இருக்க வேண்டும். தூய்மையின் ராக்கி அணிந்தீர்கள் என்றால் இராஜ்ய திலகம் கிடைத்து விடும்.

கேள்வி:
இச்சமயம் அனைத்து குழந்தைகளும் தந்தை மூலமாக எந்தவொரு சான்றிதழ் பெறுவதற் கான முயற்சி (புருஷார்த்தம்) செய்ய வேண்டும்?

பதில்:
தூய்மையான உலகத்திற்கு செல்வதற்காக, தூய்மை அதாவது தகுதியுடையவர் ஆவதற்கான சான்றிதழ் பெற வேண்டும். இச்சமயத்தில் தூய்மையின் உறுதி எடுத்தீர்கள் என்றால் தான் புத்தி தங்கயுகத் தினுடையதாக மாறும். தூய்மையின் சான்றிதழ் பெறுவதற்காக தந்தையின் ஆலோசனை யாவது: குழந்தைகளே, மற்ற அனைத்திலிருந்தும் உங்களது புத்தியோகத்தை நீக்கி ஞான சிதையில் அமருங்கள். ஒரு தாய் தந்தையைப் பின்பற்றுங்கள். பாவனமாக இருக்கவே வேண்டும் என்ற இந்த வாக்குறுதியைக் கொடுங்கள். தந்தையிடம் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.

பாடல்:
சகோதரனே என்னுடைய ராக்கியின் பந்தனத்தை கடைபிடித்து நடத்துவாய்.. ..

ஓம் சாந்தி.
இந்த பாடலை குழந்தைகள் அனேக முறை கேட்டிருக்கிறீர்கள். இதுவோ இரக்ஷா பந்தனத்தின் உற்சவம் அல்லது பாடல். பக்தி மார்க்கத்தில் கொண்டாடி பாடிக் கொண்டே வருகிறார் கள். இப்பொழுது இது ஞான மார்க்கமாகும். குழந்தைகளே, இந்த மாயை இராவணன் மீது வெற்றி அடைவதால், நீங்கள் உலகத்தை வென்றவராக, அதாவது உலகத்திற்கு அதிபதி ஆவீர்கள் என்று தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார். உழைப்பே 5 விகாரங்கள் மீது வெற்றி அடைவதற்கானது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதில் காம விகாரம் பெரிய எதிரி ஆகும். தூய்மையின் காரணமாகத் தான் அடிதடி, குழப்பம் ஆகியவை நடக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை தான் மாயை மீது வெற்றி அடையுமாறு செய்து உலகத்திற்கு அதிபதியாக ஆக்க முடியும். இதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். எல்லையில்லாத தந்தையின் ஆஸ்தி பெறுவதற்கு நாம் அவசியம் தூய்மையாக வேண்டும். உலகியல் படிப்பு கூட தூய்மையில் தான் படிக்கப்படுகிறது. இது ஆன்மீகப் படிப்பாகும். இதில் பாத்திரம் தங்கமானதாக இருக்க வேண்டும். அதாவது தூய்மையானதாக இருக்க வேண்டும். அதில் தான் ஞானச் செல்வம் நிலைக்க முடியும். தூய்மை ஆவதில் நேரம் பிடிக்கிறது. ஏனெனில், இப்பொழுது எல்லோருடைய பாத்திரமும் மண்ணினுடையதாக ஆகி விட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் தூய்மையாகி திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். எந்த அளவிற்கு ஞான யோகத்தில் தாரணை ஆகிக் கொண்டே போகுமோ, அந்த அளவிற்கு புத்தி தூய்மை ஆகிக் கொண்டே போகும். ஏனெனில், இப்பொழுது நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பது புத்தியில் உள்ளது. இரும்பு யுகத்திலிருந்து செம்பு யுகத்திற்கு வர வேண்டும், பிறகு வெள்ளியுகத்திற்கு, அதன் பிறகு தங்கயுகத்திற்கு வர வேண்டும். இந்த படிப்பு எப்பேர்ப்பட்டது என்றால், போகப்போக மாயையின் தாக்குதல் ஏற்பட்டு விடுகிறது. எல்லோருமே தூய்மையாக இருக்க முடியாது. மாயை பெரிய புயலை எடுத்து வருகிறது. இரும்பு யுகத்திலிருந்து செம்பு யுகத் திற்கு வருவதால், மாயையின் புயல்கள் சூழ்ந்து கொண்டு விடுகிறது. பிறகு புத்தி மீண்டும் இரும்பு யுகத்தினதாக ஆகி விடுகிறது. மேலும் விழுந்து விடுகிறார்கள். இவ்வாறு விழுவது மற்றும் எழுவது என்பது கண்டிப்பாக நடக்கிறது. திரும்பவும் ஏறி மீண்டும் செம்பு யுகம், வெள்ளி யுகம், பிறகு தங்க யுகத்தில் வர வேண்டும். படிக்கப் படிக்க, ஞானம் கேட்க கேட்க, கடைசியில் நம்முடைய அந்த தங்கயுக புத்தியாக ஆகி விடும், அப்பொழுது நாம் சரீரத்தை விட்டு விடுவோம். இச்சமயம் விழுவது எழுவது நிறைய நடக்கும். நேரம் பிடிக்கிறது. புத்தி தங்க யுகத்தினுடையதாக ஆகி விடும் பொழுது பிறகு இராஜ்ய அதிகாரி ஆகிறார்கள். தூய்மையின் ராக்கி கட்டுவதால், இராஜ திலகம் கிடைக்கும் என்றும் பாடப்பட்டுள்ளது. எனவே நாம் இராஜ்யத்தைப் பெறுவதற்காக, தூய்மையின் உறுதி எடுக்க வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஞானம் மற்றும் யோகத்தை தாரணை செய்வதில் எவ்வளவு நேரம் பிடிக்கிறது. தங்க யுகத்திலிருந்து இரும்பு யுகம் வரை வருவதிலோ 5 ஆயிரம் வருடங்கள் பிடிக்கின்றது. இப்பொழுதோ படிக்க வேண்டும் - அது கூட இந்த ஒரு பிறவியில் தான் ஆக வேண்டி உள்ளது. எந்த அளவிற்கு உயர்ந்த படிப்பை படித்துக் கொண்டே செல்வீர்களோ, அந்த அளவிற்கு குஷி அதிகரித்துக் கொண்டே போகும். நாம் புத்தியோக பலம் மற்றும் ஞான பலத் தினால் இராஜதானியை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் பலம்(சக்தி) இருக்கிறது. கொஞ்சம் படித்தால் கொஞ்சம் பலம், அதிகமாக படிப்பதால் அதிக பலம் கிடைக்கிறது. பெரிய பதவி கிடைக்கிறது. இதுவும் அதே போலத் தான். குறைவாக படிப்பதால் பதவியும் குறைவாகக் கிடைக்கிறது. இந்த பிராமண தர்மம் மிகவும் சிறியது என்று தந்தை புரிய வைத்துள்ளார். பிராமணர்கள் தான் தேவதைகளாக, சூரிய வம்சத்தினராக, சந்திர வம்சத்தினராக ஆகிறார்கள். இப்பொழுது புருஷார்த்தம் (முயற்சி) செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நாம் செம்பு யுகம் வரை வந்துள்ளோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இனி தங்கம், வெள்ளி யுகம் வரை வர வேண்டும். கடைசியில் குழந்தைகள் கூட ஏராளமாக ஆகி விடுகிறார்கள் அல்லவா? எல்லாமே தூய்மையைப் பொருத்ததாகும். எந்த அளவிற்கு நினைவில் இருப்பீர்களோ, அந்த அளவிற்கு சக்தி கிடைக்கும். நாம் தூய்மையாக ஆகி, பாரதத்தைத் தூய்மையாக ஆக்குவோம் என்று தந்தைக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். குழந்தைகள் ராக்கி கட்ட செல்கிறீர்கள் என்றால் கூட புரிய வைக்க வேண்டி உள்ளது. இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயும், பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக்குவதற்காக, நாம் இந்த ராக்கி அணிவிக்க வந்திருந்தோம். எனவே, ராக்கி பந்தனம் என்பது ஒரு நாளின் விஷயமல்ல. கடைசி வரைக்கும் நடந்துக் கொண்டே இருக்கும். உறுதி எடுத்துக் கொண்டே இருப்பீர்கள். படிப்பின் மீது கவனம் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள். ஞானம் மற்றும் யோகத்தினால் நாம் இரும்பு யுகத்திலிருந்து தங்க யுகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தமோபிரதான நிலையிலிருந்து, சதோபிரதானமாக ஆக வேண்டும். இந்த விஷயங்களைப் புதியவர்கள் யாரும் புரிந்து கொள்ள முடியாது. எனவே உங்களுடைய 7 நாள் பட்டி பிரசித்தமானது. முதலில் நாடியைப் பார்க்க வேண்டி உள்ளது. தந்தையின் அறிமுகம் ஆகாதவரை, நிச்சயம் ஏற்படாத வரை, புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்கள் மூலமாக அறிமுகம் பெற்றுக் கொண்டே செல்வார்கள். விருட்சம் வளர்ச்சி அடைந்து கொண்டே போகும். சுயராஜ்யம் ஸ்தாபனை ஆவதில் நேரம் பிடிக்கிறது. நீங்கள் தங்கயுகத்தில் வராத வரை, சிருஷ்டியின் விநாசம் ஏற்பட முடியாது. அந்த நேரம் வரும், அப்பொழுது மிகவும் ஏராளமான குழந்தைகள் ஆகி விடுவார்கள். இப்பொழுது ரக்ஷா பந்தனில் பெரிய பெரிய மனிதர்களிடம் செல்வீர்கள். அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டி இருக்கும். பதீத பாவன தந்தை, இந்த பதீத உலகத்தைப் பாவனமாக ஆக்க, இந்த சங்கமத்தில் தான் வருகிறார். உண்மையில் பாரதம் பாவனமாக இருந்தது. இப்பொழுதோ பதீதமாக உள்ளது. மகாபாரதப் போர் எதிரிலேயே உள்ளது. குழந்தைகளே, மாயை என்ற இராவணன் உங்களுடைய பெரிய எதிரி ஆவான் என்று பகவான் தந்தை கூறுகிறார். அவர்களோ உலகாயத சிறு சிறு எதிரிகளாக இருக்கிறார்கள். பாரதத்தில் எல்லோரையும் விட பெரிய எதிரி இராவணன் ஆவான். எனவே தூய்மையின் ராக்கி கட்ட வேண்டும். ஹே பாபா, பாரதத்தை சிறந்ததாக (சிரேஷ்டாச்சாரி) ஆக்குவதற்காக, நாங்கள் தூய்மையாக இருப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும். மற்றவர்களையும் தூய்மையாக ஆக்கிக் கொண்டே இருப்போம். இப்பொழுது எல்லோரும் இராவணனிடம் தோல்வி அடைந்துள்ளார்கள். பாரதத்தில் தான் இராவணனை எரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அரை கல்பம் இராவணனின் இராஜ்யம் நடந்தது. இதை நீங்கள் புரிய வைக்க வேண்டியுள்ளது. புரிய வைக்காமல் ராக்கி கட்டுவது எதற்கும் பயனில்லை. இந்த கதையை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். தூய்மையாக ஆனீர்கள் என்றால், சத்யுகத்தில், நரனிலிருந்து நாராயணன் பதவியை அடைவீர்கள் என்று 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயும் தந்தை கூறி இருந்தார் என்று வேறு யாரும் இப்படி கூற மாட்டார்கள். இந்த சத்ய நாராயணரின் கதை அல்லது அமரநாத்தின் கதையை நீங்கள் தான் கூற முடியும். பாரதம் தூய்மையாக இருந்தது, தங்கப் பறவையாக இருந்தது என்பதை புரிய வைக்க வேண்டி உள்ளது. இப்பொழுதோ தூய்மையற்று இருக்கிறார்கள். இரும்புப் பறவை என்று கூற வேண்டும். தந்தையின் அறிமுகம் அளித்து விட்டு கேளுங்கள், உண்மையில் தந்தை, பிரம்மா மூலமாக ஆஸ்தி அளிக்கிறார் என்பதை ஏற்று கொள்கிறீர்களா? இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். 84 பிறவிகள் முடிவடைகிறது. மாயையிடம் தோல்வி அடைந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும் மாயை மீது வெற்றி அடைய வேண்டும். குழந்தைகளே, இப்பொழுது தூய்மை ஆகுங்கள் என்று தந்தை தான் வந்து கூறுகிறார். ஆம், சரி பாபா என்று குழந்தைகள் கூறுகிறார்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்பவர்களாக கண்டிப்பாக ஆவோம். தூய்மையாக ஆகி பாரதத்தை அவசியம் தூய்மையாக ஆக்குவோம். நாங்கள் ஒன்றும் உங்களிடம் பைசா வாங்குவதற்காக வரவில்லை என்று கூறுங்கள். நாங்களோ தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வந்துள்ளோம். நீங்கள் எல்லோருமே தந்தையின் இனத்தவர் ஆவீர்கள் அல்லவா? தந்தை வந்து செய்தி அளிக்கிறார். குழந்தைகளே மற்ற அனைத்தையும் புத்தி மூலமாக தியாகம் செய்யுங்கள் என்று ஆலோசனை அளிக்கிறார். நீங்கள் தனியாக (அசரீரியாக) வந்திருந்தீர்கள். முதன் முதலில் நீங்கள் சொர்க்கத்தில் பாகம் ஏற்று நடித்தீர்கள். நீங்கள் வெண்மையாக அதாவது தூய்மையாக இருந்தீர்கள். பிறகு காமச் சிதையில் அமர்ந்ததால் இப்பொழுது கருப்பாக ஆகி விட்டுள்ளீர்கள். பாரதம் தங்கயுகமாக இருந்தது. இப்பொழுது பாரதம் இரும்பு யுகத்தினுடையது என்று கூறப்படுகிறது. இப்பொழுது மீண்டும் காமச் சிதையிலிருந்து இறங்கி ஞான சிதையில் அமர வேண்டும். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தூய்மையின் உறுதி எடுங்கள். ஒரு தந்தையின் குழந்தைகள் நாம் சகோதர சகோதரிகள் ஆவோம். நீங்களும் கூட குழந்தைகள் ஆவீர்கள். ஆனால் புரியாமல் உள்ளீர்கள். பி.கே. ஆனீர்கள் என்றால், அப்பொழுது தான் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி பெற முடியும். இது இருப்பதே பதீதமான தாழ்ந்தவர்களுடைய (ப்ரஷ்டாச்சாரி) உலகம். ஒருவர் கூட சிரேஷ்டாச்சாரி (சிறந்தவர்) கிடையாது. சத்யுகத்தில் ஒருவர் கூட ப்ரஷ்டாச்சாரியாக இருக்க மாட்டார். இது எல்லையில்லாத விஷயமாகும். முழு சிரேஷ்டாச்சாரி உலகத்தை ஸ்தாபனை செய்வது ஒரு தந்தையினுடைய வேலையே ஆகும். பிரம்மா குமார், குமாரிகளாகிய நாம் தந்தை யிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம். தூய்மையின் உறுதி எடுக்கிறோம். யார் தூய்மையின் உத்தரவாதம் கொடுக்கிறார்களோ அவர்களுடைய புகைப்படத்தை எடுத்து நாம் ஆல்பம் உருவாக்கு கிறோம் பாவனமாக ஆகாமல், பாவன உலகத்திற்கு செல்வதற்கான சான்றிதழ் கிடைக்காது. தந்தை தான் வந்து தகுதியுடையவராக ஆக்கி சான்றிதழ் தருகிறார். அனைவரின் பதீத பாவனர், சத்கதி அளிக்கும் வள்ளல், ஒரே ஒரு தந்தை ஆவார். பதீதமானவர்கள் லாயக்கில்லை அல்லவா? பாரதம் தான் திவாலாகி துக்கமுடையதாக ஆகி விட்டுள்ளது. ஏனெனில் தூய்மை யற்றதாக உள்ளது. சத்யுகத்தில் பாவனமாக இருக்கும் பொழுது பாரதம் சுகமுடையதாக இருந்தது. இப்பொழுது பாவனம் ஆகுங்கள் என்று தந்தை கூறுகிறார்? சட்டம் கொண்டு வாருங்கள், யார் பாவனமாக ஆக விரும்பு கிறார்களோ, அவர்களை பலவந்தப்படுத்தக் கூடாது என்று. ஆண்கள் விகாரத்திற்காக மிகவும் தொல்லைப்படுத்து கிறார்கள். எனவே தாய்மார்கள் பாரதத்தை சிறந்ததாக ஆக்குவதில் உதவி செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இது பற்றி ஆராய்வதற்கு குழு அமைக்க வேண்டும். ஆனால் அந்த பலம் இது வரை குழந்தைகளிடம் வரவில்லை. தங்க நிலைக்கு வரும் பொழுது, எவருக்கும் புரிய வைப்பதற் கான அந்த பெருமிதம் இருக்கும். குழந்தைகளுக்கு நாளுக்கு நாள் நிறைய குறிப்புக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. மிகவுமே உயர்ந்த ஏற்றம் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார் கள். தாய் தந்தையைப் பின்பற்ற வேண்டி உள்ளது. தாய், தந்தை என்று கூறுகிறார்கள். அவர் தந்தை ஆவார். எனவே இவர் தாய் ஆகிறார். ஆனால் ஆண் ஆக இருக்கிறார். எனவே மாதாவிற்கு கலசம் கொடுக்கபபடுகிறது. நீங்கள் கூட தாய்மார்கள் ஆவீர்கள். ஆண்கள் சகோதரர்கள் ஆவார்கள். சகோதரன் சகோதரிக்கு, சகோதரி சகோதரனுக்கு தூய்மையின் உறுதிமொழி எடுக்குமாறு செய்விக்கிறார். தாய்மார்களை முன்னால் வைத்து முன்னேற வைக்கின்றார். அவர்கள் தாய்மார் களை உயர்த்துகிறார்கள். முன்பெல்லாம் ஜனாதிபதி பிரதம மந்திரி ஆகியோர் பெண்களாக இருந்தார்களா என்ன? முன்போ இராஜாக்களின் இராஜ்யம் இருந்தது. முன்பெல்லாம் ஏதாவது புதிய கண்டுபிடிப்பு எடுத்து வந்தார்கள் என்றால் ராஜாவிடம் போய் கூறுவார்கள். அவர்கள் பிறகு அவற்றை அதிகரிப்பதற்காக உத்தரவு இடுவார்கள். இங்கு நடப்பதோ குடியரசு இராஜ்யம். ஆனால் ஒரு சிலர் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உழைக்க வேண்டி இருக்கிறது. கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை போட்டு பெரிய தவறு செய்து விட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நமது விஷயத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வார். ஒருவர் ஏற்க மாட்டார். இனி முன்னால் போகப்போக உங்களுக்குள் பலம் வந்து விடும். நாம் தங்கயுகத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆத்மா கூறுகிறது. புத்தியின் பூட்டு இப்பொழுது திறந்துள்ளது. ஞானத்தை இப்பொழுது நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும். கடைசியில் முடிவாக எல்லோரும் அவசியம் புரிந்து கொள்வார்கள். அபலைகள் மீது கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. திரௌபதியின் துகிலுரித்தார்கள் என்று சாஸ்திரங்களில் உள்ளது. எனவே அந்த நேரத்தில் நினைவு செய்வதை தவிர வேறு என்னதான் செய்ய முடியும்? உள்ளுக்குள் சிவபாபாவை நினைவு செய்தார்கள் என்றால், அந்த பாவம் ஏற்படாது. கட்டுப்பாட்டு இழந்துள்ளார்கள். ஆம். பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொருவருடைய கர்மபந்தனம் தனித்தனி ஆகும். ஒரு சிலரோ ஒரேயடியாக மனைவியைக் அடித்து விடுகிறார்கள். அவர்கள் பின் அங்கு நல்ல பதவியை அடைந்து விடுவார் என்று கருதுகின்றனர். என்ன தான் செய்ய முடியும்? தூய்மையாக இருப்பதற்கான யுக்தியை தந்தை நல்ல முறையில் புரிய வைக்கிறார். பிரம்மா குமார் குமாரி, சகோதர சகோதரி ஆகி விட்டார்கள். விகாரத்தின் பார்வை இருக்க முடியாது. ஒரு வேளை இந்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள் என்றால் பெரிய காயம் ஏற்பட்டு விடும் என்று தந்தை கூறுகிறார். எல்லையில்லாத தந்தை கூறுவதை ஏற்கவில்லை என்றால், அடி வாங்குவோம் விழுந்து விடுவோம் என்று புத்தியும் கூறுகிறது. அடிக்கடி விழுந்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் தோற்றுப் போய் விடுவீர்கள். இது குத்து சண்டை ஆகும் அல்லவா? இவை எல்லாமே மறைமுகமான விஷயங்கள் ஆகும். இங்கு தூய்மை மற்றும் படிப்பு முக்கியமானதாகும். வேறு எந்த படிப்பும் கிடையாது. பக்தி மார்க்கத்தில் ஏராளமான தொழில்கள் உள்ளன. பக்தர்கள் பக்தி செய்து கொண்டிருக்கும் பொழுது கூட பகவான் அணு அணுவிலும் இருக்கிறார் என்று கூறி விடுகிறார்கள். இப்பொழுது உங்களுக்கு ஞானம் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நீங்கள் கூட பகவான் எங்கும் நிறைந்தவர் என்று கூறிக் கொண்டிருந்தீர்கள். எங்கு பார்த்தாலும் நீயே நீதான். எல்லாமே பகவானின் லீலை ஆகும். பகவான் பல்வேறு ரூபங்களைத் தரித்து லீலை செய்துக் கொண்டிருக்கிறார். நல்லது. அணு அணுவில் என்ன லீலை செய்வார்? எல்லையில்லாத தந்தைக்கு நிந்தனை செய்து விடுகிறார்கள். இதுவும் நாடகம் ஆகும். அப்பொழுது தான் தந்தை வர வேண்டி உள்ளது. குழந்தைகளுக்கு குஷி ஏற்பட வேண்டும். நீங்கள் தூய்மையான உலகிற்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்றால் தூய்மையாக வேண்டும் என்ற தந்தையின் உத்தரவு கிடைத்துள்ளது. அப்படியின்றி சொர்க்கத்திற்கு சென்று விடுவோம் அல்லவா என்பதல்ல. பிறகு என்ன பதவி அடைவீர்கள்? அது ஒன்றும் புருர்த்தம் (முயற்சி) அல்ல. ராஜா ராணி ஆவதற்காக முயற்சி செய்ய வேண்டும். நாடகத்தின் இரகசியத்தை யாரும் புரிந்து கொள்வது இல்லை. கல்ப கல்பமாக நாம் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாபா வருகிறார். படங்களை பாருங்கள், எவ்வளவு நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. பெரிய படங்களுக்கு முன்னால் கூட்டி வர வேண்டும். நீங்கள் எல்லோரும் சர்ஜன் (மருத்துவர்) ஆவீர்கள். சிவபாபா அழிவற்ற கோல்டன் சர்ஜன் ஆவார். நீங்களும் வரிசைக்கிரமமான சர்ஜன் ஆவீர்கள். இப்பொழுது யாருமே முழுமையாக தங்கயுகத்தினராக ஆகவில்லை. நீங்கள் சேவை செய்ய வேண்டும். புரிய வைக்கும் நேரத்தில் ஒவ்வொருவருடைய நாடியையும் பார்க்க வேண்டும். மகாரதியாக இருப்பவர்கள் நன்றாக நாடியை பார்ப்பார்கள். நீங்கள் முழுமையாக தங்கயுகத்தினராக ஆக வேண்டும். இப்பொழுது ஆகவில்லை. ஆவதற்கு நேரம் பிடிக்கிறது. மாயையின் புயல்கள் மிகவுமே தொல்லைப் படுத்து கின்றன. இந்த எல்லா விஷயங்களும் புரிந்து கொள்வதற்கானது ஆகும். தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி பெற வேண்டும். மேலும் மிகவும் உண்மையுடன் நடக்க வேண்டும். உள்ளுக்குள் எந்த ஒரு தீயதும் இருக்கக் கூடாது. மாயை துன்பப்படுத்துகிறது. ஏனெனில் நினைவு இல்லை. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையிடம் வாக்குறுதி கொடுத்த பிறகு மீறக் கூடாது. தூய்மை மற்றும் படிப்பினால் ஆத்மாவை தங்கயுகத்தினுடையதாக ஆக்க வேண்டும்.

2. மற்ற எல்லாவற்றையும் புத்தி மூலமாக தியாகம் செய்து அசரீரி ஆவதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். யோக பலத்தின் மூலமாக மாயையின் புயல்கள் மீது வெற்றி அடைய வேண்டும்

வரதானம்:
தன்னை உலக நன்மைக்கான நிமித்தம் எனப்புரிந்து கொண்டு வீணானதிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடிய பாபாவிற்கு சமமானவர் ஆகுக.

பாபா உலகத்திற்கு நன்மை செய்பவராக இருப்பதை போல, குழந்தைகளும் கூட உலக நன்மைக்கு நிமித்தமானவராக இருக்கிறீர்கள். நிமித்த ஆத்மாக்களாகிய உங்களுடைய உள்ளுணர்வின் மூலம் வாயுமண்டலமே மாற்றம் அடையப் போகிறது. எண்ணங்களைப் போன்று தான் உள்ளுணர்வு இருக்கும் ஆகையால் உலக நன்மைக்கு பொறுப்பான ஆத்மாக்களின் ஒரு நொடியின் எண்ணம் மற்றும் உள்ளுணர்வுக் கூட வீணானதாக இருக்க முடியாது. எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், மனிதர்களாக இருந்தாலும் சுயத்தின் பாவனை, சுயத்தின் உள்ளுணர்வு நன்மையுடையதாக இருக்கும். நிந்தனை செய்யக்கூடியவர்களின் மீதும் கூட சுபபாவனை இருக்கும் பொழுது தான் வீணானதிலிருந்து விடுபட்ட தந்தைக்கு சமமானவர் என்று சொல்ல முடியும்.

சுலோகன்:
சகயோகத்தின் சக்தி மூலம் அசம்பவமான (முடியாத) விஷயத்தையும் சம்பவமாக (முடித்து) ஆக்க முடியும்