11-09-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சத்யமான தந்தை சத்யமான கண்டத்தை ஸ்தாபனை செய்கிறார், நீங்கள் நரனிலிருந்து நாராயணராவதற்கான உண்மையிலும் உண்மையான ஞானத்தைக் கேட்பதற்காக தந்தையிடம் வந்துள்ளீர்கள்.

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் இல்லற விசயத்தில் மிக மிக கவனத்துடன் நடக்க வேண்டும் - ஏன்?

பதில்:

ஏனெனில் உங்களுடைய நிலையும் கடைபிடிக்கின்ற வழியும் அனைவரையும் விட தனி யானது. உங்களுடையது குப்தமான ஞானமாகும். ஆகையால் விசால புத்தி யுள்ளவராகி அனை வரிடமும் உறவை பராமரிக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதர - சகோதரன் அல்லது சகோதரன் - சகோதரி என உள்ளுக்குள் புரிந்து கொள்ள வேண்டும். மனைவி தனது கணவரைப் பார்த்து நீங்கள் என் சகோதரர் என சொல்ல வேண்டும் என்பதல்ல. இதை யாராவது கேட்டால் இவருக்கு என்ன ஆகி விட்டது என சொல்வார்கள். யுக்தியுடன் நடக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஆன்மீகம் என்ற வார்த்தையை சேர்த்து சொல்லாமல் தந்தை என்று மட்டும் சொன்னாலும் இவர் ஆன்மீகத் தந்தை என புரிந்து கொள்ளலாம். தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். அனைவரும் தம்மை சகோதர - சகோதரன் என சொல்லவே செய்கின்றனர். ஆக தந்தை அமர்ந்து குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். அனைவருக்குமே புரிய வைக் காமல் இருக்கலாம். கீதையிலும் பகவானுடைய மகா வாக்கியம் என எழுதப்பட்டுள்ளது. யாருக்காக? அனைவரும் பகவானுடைய குழந்தைகள். அந்த பகவான் தந்தை என்றால் பகவானின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள். பகவான்தான் புரிய வைத்திருப்பார். இராஜ யோகத்தை கற்பித்திருப்பார். இப்போது உங்களின் புத்தியின் பூட்டு திறந்திருக்கிறது. உங்களைத்தவிர வேறு யாருக்கும் இப்படிப்பட்ட சிந்தனைகள் ஒட முடியாது. யார் யாருக் கெல்லாம் செய்தி கிடைத்தபடி இருக்குமோ அவர்கள் பாடசாலையில் வந்து கொண்டு இருப்பார்கள், படித்துக் கொண்டும் இருப்பார்கள். கண்காட்சியை பார்த்தோம், இப்போது சென்று மேலும் கேட்போம் என நினைத்துக் கொள்வார்கள். முதன் முதலான முக்கிய மான விசயம் ஞானக்கடல், பதித பாவனர், கீதா ஞானத்தின் வள்ளல், சிவனுடைய மகா வாக்கியங்கள். இவர்களுக்குக் கற்பிப்பவர், புரிய வைப்பவர் யார் என அவர்களுக்குத் தெரிய வேண்டும். அந்த பரமாத்மா, ஞானக்கடல் நிராகாரமானவர். அவர் சத்யமானவர். அவர் சத்யத்தையே சொல்வார், பிறகு அதில் எந்த கேள்வியும் எழ முடியாது. சத்யமான வருக்காக நீங்கள் அனைத்தையும் விட்டு விட்டீர்கள். எனும்போது முதன் முதலில் நமக்கு பரமபிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் இராஜயோகம் கற்பிக்கிறார் என்பது குறித்து புரிய வைக்க வேண்டும். இது இராஜ்ய பதவியாகும், அனைவரின் தந்தை, அந்த பரலௌகிக தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார், அவரே அனைவரிலும் உயர்ந்த அத்தாரிட்டி (அதிகாரம் மிக்கவர்) ஆவார் என அவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டு விடும். ஆக வேறு எந்த கேள்வியும் எழவே முடியாது. அவர் பதித பாவனர் (தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர்). அவர் இங்கே வரும்போது தாம் வரவேண்டிய நேரத்தில் வருவார். இது அதே மகாபாரதச் சண்டை என்பதையும் பார்க்கிறீர்கள். வினாசத்திற்குப் பிறகு நிர்விகாரி உலகம் ஏற்பட வேண்டும். பாரதம்தான் நிர்விகாரியாக இருந்தது என்பது மனிதர்களுக்குத் தெரியாது. புத்தி வேலை செய்வதில்லை. கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது. அதனுடைய சாவி பரமபிதா பரமாத்மாவிடம் தான் உள்ளது. ஆகையால் உங்களுக்கு கற்பிப்பவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. தாதா (பிரம்மா) புரிந்து கொள் கிறார், அப்போது விளக்கம் கொடுப்பதற்காக கொஞ்சம் பேசுகிறார், ஆகையால் முதன் முதலாக இதனை புரிய வையுங்கள் - இதில் சிவ பகவானுடைய மகா வாக்கியம் என எழுதியுள்ளது. அவர் சத்ய மானவர். தந்தை ஞானம் நிறைந்தவர். சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் இரகசியத் தைப் புரிய வைக்கிறார். இந்த படிப்பு இப்போது உங்களுக்கு அந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை யிடமிருந்து கிடைக்கிறது. அவரே சிருஷ்டியை படைப்பவர், தூய்மை இழந்த சிருஷ்டியை தூய்மை யாக்குபவர். ஆக, தந்தையின் அறிமுகத்தை முதன் முதலில் கொடுக்க வேண்டும். அந்த பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுடைய சம்மந்தம் என்ன? அவர் நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய உணமையான ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை சத்யமானவர் என குழந்தைகள் அறிவார்கள், அந்த தந்தைதான் சத்யமான கண்டத்தை உருவாக்குகிறார். நீங்கள் இங்கு வந்ததே நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக தான் சட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டால் பிறகு நாம் வக்கீல் ஆகிவிடுவோம் என புரிந்து கொள்கின்றனர். இப்போது நமக்கு பகவான் படிப்பிக்கிறார் என்ற நிச்சயம் ஏற்பட்டுள்ளது. சிலர் நிச்சய புத்திய உள்ளவர்களாகி பிறகு சந்தேக புத்தியுடையவர் களாகின்றனர் அவர்களை மற்றவர்கள், நீங்கள் தானே கூறி வந்தீர்கள். பிறகு பகவானை ஏன் விட்டு வந்தீர்கள்? சந்தேகம் வரும்போது ஓடிப்போனவர்களாக ஆகி விடுகின்றனர். ஏதாவது ஒரு பாவ கர்மம் செய்கின்றனர். பகவானுடைய மகா வாக்கியம் - காமம் மிகப் பெரிய எதிரி. அதன் மீது வெற்றி அடைவதன் மூலம்தான் உலகை வென்றவர் ஆக முடியும். யார் தூய்மை அடைகின்றனரோ அவர்கள்தான் தூய்மையான உலகிற்குச் செல்வார்கள். இங்கு இருப்பது இராஜ யோகத்தின் விஷயமாகும், நீங்கள் சென்று இராஜ்யம் செய்வீர்கள். மீதமுள்ள மற்ற ஆத்மாக்கள் தங்கள் கணக்குகளை முடித்து விட்டு திரும்பிச் சென்று விடுவார்கள். இது இறுதிக்காலமாகும். இப்போது சத்யுகத்தின் ஸ்தாபனை கண்டிப்பாக ஆக வேண்டும் என்று புத்தி சொல்கிறது. சத்யுகம் தூய்மையான உலகம் என சொல்லப்படுகிறது. மற்ற அனைவரும் முக்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்கள் பிறகு தம்முடைய நடிப்பை மீண்டும் நடிக்க வேண்டும். நீங்களும் தூய்மை யடைந்து தூய்மையான உலகின் எஜமானர் ஆவதற்காக உங்கள் முயற்சியை செய்தபடி இருக்கிறீர்கள். தன்னை எஜமானர் என புரிந்து கொள்வார்கள் அல்லவா. பிரஜைகளும் எஜமானர்கள் ஆவர். இப்போது பிரஜைகள் கூட நம்முடைய பாரதம் என சொல்கின்றனர் அல்லவா. இப்போது அனைவரும் நரகவாசிகள் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இப்போது நாம் சொர்க்கவாசிகள் ஆவதற்காக இராஜ யோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். அனைவரும் சொர்க்கவாசியாக ஆக மாட்டார்கள். பக்தி மார்க்கம் முடிவடையும்போது நான் வருகிறேன் என தந்தை சொல்கிறார். நான் வந்து தான் அனைத்து பக்தர்களுக்கும் பக்தியின் பலனைக் கொடுக்க வேண்டும். பக்தர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் அல்லவா. அனைவரும் ஓ இறைத் தந்தையே! என கூப்பிட்டபடி இருக்கின்றனர். பக்தர்கள் வாயிலிருந்து ஓ இறைத் தந்தையே, ஓ ! பகவானே ! என்பது கண்டிப்பாக வெளிப்படுகிறது. இப்போது பக்தி மற்றும் ஞானத்திற் கிடையே வித்தியாசம் உள்ளது. உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் ஓ ஈஸ்வரா ! ஓ பகவானே! என்பது வெளிப்படுவதில்லை. மனிதர்களுக்கு அரைக் கல்ப காலமாக இது பழக்கமாகி விட்டது. அவர் நம்முடைய தந்தை என்பது உங்களுக்குத் தெரியும், நீங்கள் ஓ பாபா என சொல்லக் கூடாது. தந்தையிடமிருந்து நீங்கள் ஆஸ்தியை எடுக்க வேண்டும். முதலில் நாம் தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்கிறோம் என்ற நிச்சயம் இருக்க வேண்டும். தந்தை குழந்தைகளை ஆஸ்தி எடுக்கக் கூடிய உரிமையுள்ளவர்களாக ஆக்குகிறார். இவர் உண்மை யான தந்தை அல்லவா. நாம் எந்தக் குழந்தைகளை ஞான அமிர்தம் குடிக்க வைத்து, ஞானச்சிதையில் அமரவைத்து உலகின் எஜமானராக தேவி தேவதைகளாக ஆக்கியிருந் தோமோ அவர்கள் காமச் சிதையில் அமர்ந்து பஸ்மமாகி விட்டனர் என தந்தை அறிவார். இப்போது நான் ஞானச்சிதையில் அமர்த்தி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

ஆத்மாக்களாகிய நீங்கள் அங்கே சாந்தி தாமம் மற்றும் சுகதாமில் இருப்பீர்கள் என தந்தை புரிய வைத்திருக்கிறார். சுகதாமம் நிர்விகாரி உலகம், சம்பூரண நிர்விகாரி என சொல்லப் படுகிறது. அங்கே தேவதைகள் வசிக்கின்றனர், மேலும் அது இனிமையான வீடு (ஸ்வீட் ஹோம்) ஆத்மாக் களின் வீடு. அனைத்து நடிகர்களும் அந்த சாந்தி தாமத்திலிருந்து இங்கே நடிப்பை நடிக்க வரு கின்றனர். ஆத்மாக்களாகிய நாம் இங்கே வசிப்பவர்கள் அல்ல. அந்த உலகாயத நடிகர்கள் இங்கே வசிப்பவர்களாக இருக்கின்றனர். வீட்டிலிருந்து வந்து உடையை மாற்றிக் கொண்டு நடிப்பை நடிக்கின்றனர். நம்முடைய வீடு சாந்தி தாமம், அங்கே மீண்டும் நாம் திரும்பிச் செல்கிறோம் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைத்து நடிகர்களும் மேடையில் வந்து விடும் போது தந்தை வந்து அனைவரையும் அழைத்துச் செல்வார், ஆகையால் அவரை விடுவிப்பவர், வழிகாட்டி என கூறப்படுகின்றது. துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர் எனும்போது இவ்வளவு அனைத்து மனிதர்களும் வேறு எங்கே செல்வார்கள்? பதித பாவனரை எதற்காக அழைக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தனது மரணத்திற்காக. துக்கத்தின் உலகத்தில் இருக்க விரும்பவில்லை, அதனால் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என சொல்கின்றனர். இவர்கள் அனைவரும் முக்தியை ஏற்பவர்கள் ஆவர். பாரதத்தின் பழமையான யோகம் எவ்வளவு புகழ் வாய்ந்தது. பழமை யான இராஜயோகம் கற்பிப்பதற்காக வெளிநாட்டிற்கும் செல்கின்றனர். சன்னியாசிகளுக்கு மரியாதை கொடுக்கக் கூடிய கிறிஸ்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். காவி உடை ஹடயோகத்திற்கானதாகும். நீங்கள் வீடு வாசலை விட வேண்டியதில்லை. வெள்ளை உடையின் பந்தனம் எதுவுமில்லை. ஆனால் வெள்ளை உடை நன்றாக உள்ளது. நீங்கள் பட்டியில் இருந்த போது உடையும் இதுவாக ஆகிவிட்டது. இன்றைய நாட்களில்

வெண்மையை விரும்புகின்றனர். மனிதர்கள் இறந்து விடும்போது வெள்ளை போர்வையை போர்த்துகின்றனர். ஆக, யாரென்றாலும் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இரண்டு தந்தையர் உள்ளனர், இந்த விசயங்களை புரிந்து கொள்வதில் சிறிது காலம் பிடிக்கிறது. கண்காட்சிகளில் இவ்வளவு புரிய வைக்க முடியாது. சத்யுகத்தில் ஒரு தந்தை, இந்த சமயத்தில் உங்களுக்கு மூன்று தந்தையர்கள் உள்ளனர், ஏனென்றால் பகவான் பிரஜாபிதா பிரம்மாவின் உடலில் வருகிறார். அவரும் அனைவருக்கும் தந்தையாக உள்ளார். நல்லது, இந்த மூன்று தந்தையரில் உயர்ந்த ஆஸ்தி யாருடையது? நிராகார தந்தை எப்படி ஆஸ்தியைக் கொடுப்பார்? அவர் பிரம்மாவின் மூலம் கொடுக்கிறார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்கிறார், பிரம்மா வின் மூலம் ஆஸ்தியும் கொடுக்கிறார். இந்தப் படங்களைக் கொண்டு நீங்கள் நல்ல விதமாகப் புரிய வைக்க முடியும். சிவபாபா இருக்கிறார், பிறகு இவர் பிரஜாபிதா பிரம்மா ஆதி தேவன், ஆதி தேவி. இவர் பாட்டனுக்கும் பாட்டன் முப் பாட்டனார். சிவனாகிய என்னை பாட்டனுக்கும் பாட்டன் முப்பாட்டன் என சொல்ல மாட்டார்கள். நான் அனைவரின் தந்தை ஆவேன். இவர் பிரஜாபிதா பிரம்மா. நீங்கள் சகோதர-சகோதரனாக ஆகி விட்டீர்கள், தங்களுக்குள் குற்றமுள்ள செயல்களை நடத்த முடியாது. ஒருவேளை இருவருடைய விகாரத்தின் திருஷ்டி தங்களுக்குள் ஈர்க்கின்றது என்றால் பிறகு விழுந்து விடுகின்றனர், தந்தையை மறந்து விடுகின்றனர். நீ என்னுடைய குழந்தையாகி முகத்தைக் கருப்பாக்கிக் கொள்கிறாயே என தந்தை சொல்கிறார். எல்லைக்கப் பாற்பட்ட தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். உங்களுக்கு இந்த போதை ஏறி இருக்கிறது. இல்லற விசயங்களிலும் இருக்க வேண்டும், லௌகிக சம்பந்த களிடமும் முகத்தைக் காட்ட வேண்டும் என அறிவீர்கள். லௌகிக தந்தையை நீங்கள் தந்தை என சொல்வீர்கள் அல்லவா. அவரை நீங்கள் சகோதரர் என சொல்ல முடியாது. சாதாரண முறையில் தந்தையை தந்தை எனத் தான் சொல்வோம். புத்தியில் இவர் நம்முடைய லௌகிக தந்தை என்பது இருக்கிறது. ஞானம் இருக்கிறதல்லவா. இந்த ஞானம் மிகவும் விசித்திரமானது. இந்தக் காலத்தில் பெயரிட்டும் கூட அழைக்கின்றனர் ஆனால் யாராவது வெளியிலிருந்து வரக்கூடியவர்களுக்கு முன்னால் சகோதரா என்று சொல்லி விட்டால் இவருடைய புத்தி கெட்டு விட்டது என புரிந்து கொள்வார்கள். இதில் நல்ல யுக்தி தேவைப்படுகிறது. உங்களுடையது குப்தமான ஞானம், குப்தமான சம்மந்தமாகும். மனைவிமார்கள் கணவருடைய பெயரைச் சொல்லி அழைக்க முடியாது. கணவன்மார்கள் மனைவியரை பெயரிட்டு அழைக்க முடியும். இதில் மிகவும் யுக்தியுடன் நடக்க வேண்டும். லௌகிகத்துடனும் உறவை பராமரிக்க வேண்டும். புத்தி மேலே (தந்தையிடம்) போய்விட வேண்டும். நாம் தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மற்றபடி சித்தப்பாவை சித்தப்பா என்றும் அப்பாவை அப்பா என்றும்தான் அழைக்க வேண்டி யுள்ளது அல்லவா. யார் பிரம்மாகுமார் - பிரம்மாகுமாரி ஆகவில்லையோ அவர்கள் சகோதர - சகோதரி என புரிந்து கொள்ள மாட்டார்கள். பி.கு. ஆகியிருப்பவர்கள் இந்த விசயங்களை புரிந்து கொள்வார்கள். வெளி ஆட்களோ முதலிலேயே திகைப்பார்கள். இதில் புரிந்து கொள்ளக் கூடிய நல்ல புத்தி தேவை. தந்தை குழந்தைகளை விசால புத்தியாக ஆக்குகிறார். நீங்கள் முதலில் எல்லைக்குட்பட்ட புத்தியில் இருந்தீர்கள். இப்போது புத்தி எல்லைக் கப்பாற்பட்ட நிலைக்குச் சென்று விடுகிறது. அவர் நம்முடைய எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். இவர்கள் அனை வரும் நம்முடைய சகோதர-சகோதரிகள். ஆனால் வீட்டில் மாமியாரை மாமியார் என்றுதான் சொல்வோம், சகோதரி என்று சொல்ல மாட்டோம். வீட்டில் இருந்தபடி மிகவும் யுக்தியுடன் நடக்க வேண்டும். இல்லையென்றால் உலகினர் இவர்கள் கணவரை சகோதரன், மாமியாரை சகோதரி என்று சொல்லி விடுகின்றனர், இது என்ன என கேட்பார்கள். இந்த ஞானத்தின் விசயங்கள் நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள், வேறு யாருக்கும் தெரியாது. பிரபு, உங்கள் வழியும் கதியும் நீங்கள்தான் அறிவீர்கள் என சொல் கின்றனர் அல்லவா. இப்போது நீங்கள் அவர் குழந்தைகளாக ஆகிறீர்கள் எனும்போது உங்களுடைய நிலையும் வழியும் நீங்கள்தான் அறிவீர்கள், மிகவும் கவனத்துடன் நடக்க வேண்டும். எங்கும் யாரும் குழப்பமடையக் கூடாது. ஆக கண்காட்சியில் குழந்தைகளாகிய நீங்கள் முதன் முதலாக நம்மை படிப்பிக்கக் கூடியவர் யார் என்பதை புரிய வைக்க வேண்டும். இப்போது பகவான் யார் என்பதை நீங்கள் சொல்லுங்கள். நிராகாரமான சிவனா அல்லது ஸ்ரீகிருஷ்ணரா? கீதையில் பகவானின் மகாவாக்கியம் என்று இருக்கிறது, சிவ பரமாத்மா அந்த மகா வாக்கியங்களை உரைத்தாரா அன்றி ஸ்ரீகிருஷ்ணரா? (என்று கேளுங்கள்) கிருஷ்ணரோ சத்யுகத்தின் முதல் இளவரசர். கிருஷ்ண ஜெயந்தியை சிவ ஜெயந்தி என சொல்ல முடியாது. சிவ ஜெயந்திக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி. சிவ ஜெயந்தியின் மூலம் சொர்க்கத்தின் முதல் இளவரசராக ஸ்ரீகிருஷ்ணர் எப்படி ஆனார் என்பது புரிந்து கொள்ளக் கூடிய விசயமாகும். சிவஜெயந்தி, கீதா ஜெயந்தி பிறகு அடுத்து வருவது கிருஷ்ண ஜெயந்தி, ஏனென்றால் தந்தை இராஜ யோகத்தை கற்பிக்கிறார் அல்லவா. குழந்தைகளின் புத்தியில் ஞானம் வந்துள்ளது. சிவபரமாத்மா வராத வரையில் சிவஜெயந்தி கொண்டாட முடியாது. சிவன் வந்து கிருஷ்ணபுரியை ஸ்தாபனை செய்யாதவரை கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாட முடியும்? கிருஷ்ணரின் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர், ஆனால் புரிந்து கொள்வதில்லை. கிருஷ்ணர் இளவரசராக இருந்தார் என்றால் கண்டிப்பாக சத்யுகத்தில் இருப்பார் அல்லவா. தேவி தேவதைகளின் இராஜ்யம் கண்டிப் பாக இருக்கும். ஒரு கிருஷ்ணருக்கு மட்டும் இராஜ்யம் கிடைக்காது அல்லவா. கண்டிப்பாக கிருஷ்ணபுரி இருக்கும். கிருஷ்ணபுரி. . . என சொல்லவும் செய்கின்றனர். இந்த உலகம் தற்சமயம் கம்சபுரியாக உள்ளது. கிருஷ்ணபுரி என்பது புதிய உலகம், கம்சபுரி பழைய உலகம். தேவதை களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது, தேவதைகள் வென்றனர் என சொல்கின்றனர். ஆனால் அப்படி அல்ல. கம்சபுரி அழிந்தது பிறகு கிருஷ்ணபுரி ஸ்தாபனை ஆகியது. கம்சபுரி பழைய உலகத்தில் இருக்கும். புதிய உலகத்தில் கம்சன், பூதம் முதலானவர்கள் இருக்க மாட்டார்கள். இங்கே பாருங்கள் எவ்வளவு மனிதர்கள் இருக்கின்றனர். சத்யுகத்தில் மிகவும் குறைந்த மனிதர்கள் இருப்பார்கள். இதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும், இப்போது உங்கள் புத்தி வேலை செய்கிறது. தேவதைகள் எந்த வொரு சண்டையும் போடவில்லை. தெய்வீக சம்பிரதாயத்தவர்கள் சத்யுகத்தில் இருப்பார் கள். அசுர சம்பிரதாயத்தவர்கள் இங்கே உள்ளனர். மற்றபடி தேவதைகளுக்கும் அசுரர் களுக்கும் சண்டை ஏற்படவில்லை, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சண்டை நடக்கவில்லை. நீங்கள் இராவணனின் மீது வெற்றி அடைகிறீர்கள். இந்த விகாரங்களின் மீது வெற்றி அடைந்தால் உலகை வென்றவர் ஆகி விடுவீர்கள். இதில் சண்டை எதுவும் போடக்கூடியதில்லை. சண்டை என்ற பெயர் பயன்படுத்தினால் வன்முறை என்றாகிவிடும். இராவணன் மீது வெற்றி அடைய வேண்டும், ஆனால் அகிம்சையான முறையில். தந்தையை நினைவு செய்வதால் மட்டுமே நம்முடைய பாவங்கள் அழியும். பாரதத்தின் பழமையான இராஜயோகம் புகழ் வாய்ந்ததாகும்.

என்னுடன் புத்தியின் தொடர்பை ஈடுபடுத்தினீர்கள் என்றால் பாவங்கள் பஸ்மமாகும் என தந்தை சொல்கிறார். தந்தை பதித பாவனர் ஆவார் எனும்போது புத்தியின் தொடர்பை தந்தையிடம் ஈடுபடுத்த வேண்டும், அப்போது நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆகி விடுவீர்கள். இப்போது நீங்கள் நடைமுறையில் அவருடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள், இதில் சண்டையின் வியமே எதுவும் இல்லை. யார் நல்ல விதமாக படிப்பார்களோ, தந்தையுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்து வார்களோ, அவர்கள்தான் கல்பத் திற்கு முன்பு போல தந்தையிடம் ஆஸ்தியை அடைவார்கள். இந்த பழைய உலகின் வினாசமும் உண்டாகும். அனைவரும் கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு செல்வார்கள். பிறகு வகுப்பு மாற்றல் அடைந்து வரிசைக் கிரமமாக சென்று அமர்வார்கள் அல்லவா. நீங்களும் வரிசைக்கிரமமாகச் சென்று அங்கே இராஜ்யம் செய்வீர்கள். எவ்வளவு புரிந்து கொள்ளக்கூடிய வியங்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. இந்த இறுதிக் (விநாச) காலத்தில் சத்யுகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். தந்தை மற்றும் தந்தையின் காரியத்தில் ஒருபோதும் சந்தேகத்தை எழுப்பக் கூடாது.

2. ஞானம் மற்றும் சம்மந்தம் குப்தமானது, ஆகையால் லௌகிகத்தில் மிகவும் யுக்தியுடன், விசால புத்தியாகி நடக்க வேண்டும். கேட்பவர்கள் குழம்பிவிடும்படியான சொற்களைப் பேசக் கூடாது.

வரதானம்:

மன்மத், பரமத்தை சமாப்தி செய்து ஸ்ரீமத்படி நடந்து பல கோடிகளின் வருமானத்தை சேமிக்கக் கூடிய பத்மாபதம் பாக்கியசாலி ஆகுக.

ஸ்ரீமத்படி நடக்கக் கூடியவர்கள் மன்மத் (மனவழி) அல்லது பரமத் (பிறர் காட்டும் வழி) படி ஒரு எண்ணம் கூட செய்ய முடியாது. ஸ்திதியின் வேகம் ஒருவேளை தீவிரமாக இல்லை என்றால் அவசியம் ஏதாவது ஸ்ரீமத்தில் மன்மத் அல்லது பரமத்தின் கலப்படம் உள்ளது என்று அர்த்தம். மன்மத் என்றால் சிறிதளவு ஞானமுள்ள ஆத்மாவிடம் இருக்கும் சமஸ்காரத்தின் அனுசாரம் என்ன எண்ணம் உருவாகிறதோ, அது ஸ்திதியை தடுமாறச் செய்கிறது. ஆகையினால், சோதனை செய்யுங்கள் மற்றும் செய்ய வைத்திடுங்கள். ஒரு அடி கூட ஸ்ரீமத் இல்லாமல் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் பல கோடிகளின் வருமானத்தை சேமிப்பு செய்து பத்மாபதம் பாக்கியசாலி ஆகமுடியும்.

சுலோகன்:

மனதில் அனைவருக்காகவும் நன்மையின் பாவனை உருவாகி இருக்க வேண்டும். இதுவே விஷ்வ கல்யாணகாரி ஆத்மாவின் செயல்பாடு ஆகும்.