11.11.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! மன்மனாபவ என்ற வசியப்படுத்தும் மந்திரத்தின் மூலமாகத் தான் நீங்கள் மாயை மீது வெற்றி அடைய முடியும். இதே மந்திரத்தை அனைவருக்கும் நினைவூட்டுங்கள்.

 

கேள்வி:

இந்த எல்லையில்லாத நாடகத்தில் எல்லோரையும் விட வலுவான வேலையாட்கள் யார் யார் மற்றும் எப்படி?

 

பதில்:

இந்த பழைய உலகத்தை சுத்தப்படுத்தக் கூடிய எல்லோரையும் விட வலிமையான வேலையாட்கள் இயற்கை சேதங்கள் ஆகும். பூகம்பம் ஏற்படுகிறது வெள்ளம் வருகிறது. சுத்தம் ஆகி விடுகிறது. இதற்காக பகவான் யாருக்கும் (டைரக்ஷன்) உத்தரவு அளிப்பதில்லை. தந்தை எப்படி குழந்தைகளை அழிப்பார். இதுவோ நாடகத்தில் ஒரு பாகம் உள்ளது. இராவணனின் இராஜ்யம் அல்லவா? இதனை இறைவனால் ஏற்படுத்தப்படும் சேதங்கள் என்று கூற முடியாது.

 

ஓம் சாந்தி.

தந்தை தான் குழந்தைகளே மன்மனாபவ என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். அப்படியின்றி குழந்தைகள் வந்து தந்தைக்குப் புரிய வைக்க முடியும் என்பதல்ல. "சிவபாபா மன்மனாபவ" என்று குழந்தைகள் கூற மாட்டார்கள். அப்படி இல்லை. குழந்தைகள் தங்களுக்குள் அமர்ந்து உரையாடுகிறார்கள் (சிட் - சேட்) ஆலோசனை செய்கிறார்கள் என்றாலும் கூட மூல மகா மந்திரமோ தந்தை தான் தருகிறார். குருக்கள் மந்திரம் கொடுக்கிறார்கள். இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது? புதிய சிருஷ்டியை (படைப்பு) படைக்கக் கூடிய தந்தை தான் மன்மனாபவ என்ற முதன் முதலாவதான மந்திரத்தை அளிக்கிறார். இதனுடைய பெயரே வசியப்படுத்தும் மந்திரம் என்பதாகும். அதாவது மாயை மீது வெற்றி பெறுவதற்கான மந்திரம் ஆகும். இது ஒன்றும் உள்ளுக்குள் ஜபிக்க வேண்டியது இல்லை. இதுவோ புரிய வைக்கக்கூடியதாகும். தந்தை அர்த்தத்துடன் புரிய வைக்கிறார். கீதையில் உள்ளது என்றாலும் கூட பொருளை எவரும் புரிந்து கொள்வதில்லை. இது கீதையின் அத்தியாயமாகும். ஆனால் பெயரை மட்டும் மாற்றி விட்டுள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு பெரிய பெரிய புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன! உண்மையில் இதுவோ தந்தை வந்து குழந்தைகளுக்கு வாய் வழியாக (ஓரல்) புரிய வைக்கிறார். தந்தையின் ஆத்மாவில் ஞானம் உள்ளது. குழந்தைகளினுடைய ஆத்மா தான் தாரணை செய்கிறது. மற்றபடி எளிதாகப் புரிய வைப்பதற்காக மட்டுமே இந்த படங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தை களாகிய உங்களுடைய புத்தியிலோ இந்த முழு ஞானம் உள்ளது. உண்மையில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பின்னால் தான் இந்த கண்டங்கள் சேர்ந்துள்ளன. எனவே அந்த படத்தையும் ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். பாரதத்தில் இவர்களுடைய இராஜ்யம் இருக்கும் பொழுது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை என்பதை அதில் காண்பிக்கிறீர்கள். இப்பொழுதோ எத்தனை தர்மங்கள் உள்ளன! பிறகு இவை அனைத்தும் இருக்காது. இது பாபாவின் திட்டம் ஆகும். அவர்களுக்கு பாவம் எவ்வளவு கவலை ஏற்பட்டுள்ளது! குழந்தை களாகிய நீங்கள் இதுவோ முற்றிலும் சரியானது ஆகும் என்பதைப் புரிந்துள்ளீர்கள். தந்தை வந்து பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என்றும் எழுதப்பட்டுள்ளது. எதனுடைய ஸ்தாபனை? புதிய உலகத்தின் ஸ்தாபனை. யமுனையின் கரை - இது தான் தலை நகரம் ஆகும். அங்கு ஒரே ஒரு தர்மம் இருக்கும். செடி முற்றிலும் சிறியது ஆகும். இந்த விருட்சத்தின் ஞானம் கூட தந்தை தான் அளிக்கிறார். சக்கரத்தின் ஞானம் அளிக்கிறார். சத்யுகத்தில் ஒரே ஒரு மொழி இருக்கும். வேறு எந்த மொழியும் இருக்காது. ஒரே ஒரு பாரதம் இருந்தது. ஒரே ஒரு இராஜ்யம் இருந்தது. ஒரே ஒரு மொழி இருந்தது என்பதை நீங்கள் நிரூபிக்கலாம். "பேரடைஸ்" சொர்க்கத்தில் சுகம் சாந்தி இருந்தது. துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்கவில்லை. "ஹெல்த், வெல்த், ஹேப்பினெஸ்" (ஆரோக்கியம், செல்வம், சுகம்) எல்லாமே இருந்தது. பாரதம் புதியதாக இருக்கும் பொழுது ஆயுளும் மிகவும் நீண்டதாக இருந்தது. ஏனெனில் தூய்மை இருந்தது. தூய்மையாக (பவித்திரதா) இருக்கும் பொழுது மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். தூய்மையற்று (அபவித்திரதா) இருக்கும் பொழுது பாருங்கள், மனிதர்களின் நிலைமை என்னவாக ஆகி விடுகிறது! அமர்ந்தபடியே அகால மரணம் ஆகி விடுகிறது. இளைஞர்களும் இறந்து விடுகிறார்கள். எவ்வளவு துக்கம் ஏற்படுகிறது! அங்கு அகால மரணம் ஏற்படுவது இல்லை. முழு ஆயுள் இருக்கும். தலைமுறை வரை அதாவது முதுமைப் பருவம் வரை யாரும் இறப்பதில்லை.

 

யாருக்காவது புரிய வைக்கிறீர்கள் என்றால் எல்லையில்லாத தந்தையை நினைவு செய்யுங்கள், அவரே பதீத பாவனர் ஆவார், அவரே சத்கதி தாதா (சத்கதியின் வள்ளல்) ஆவார் என்பதை புத்தியில் பதிய வைக்க வேண்டும். உங்களிடம் அந்த வரை படம் கூட இருக்க வேண்டும். அப்பொழுது நிரூபித்து புரிய வைக்க முடியும். இன்றைய வரை படம் இது. நாளைய வரை படம் இது. ஒரு சிலரோ நல்ல முறையில் கேட்கவும் செய்கிறார்கள். இதை முழுமையாகப் புரிய வைக்க வேண்டி உள்ளது. இந்த பாரதம் அவினாஷி (அழியாத) கண்டம் ஆகும். இந்த தேவி தேவதா தர்மம் இருக்கும்பொழுது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. இப்பொழுது அந்த ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இல்லை. இந்த இலட்சுமி நாராயணர் எங்கு சென்றார்கள் என்பதை யாராலும் கூற முடியாது. யாரிடமுமே அதைக் கூறுவதற்கான வலிமை கிடையாது. குழந்தைகளாகிய உங்களால் நல்ல முறையில் இரகசியங்களுடன் கூடி புரிய வைக்க முடியும். இதில் குழம்ப வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எல்லாமே அறிந்துள்ளீர்கள் மற்றும் உங்களால் (ரிபீட்) திரும்ப அதைக் கூற முடியும். இவர்கள் எங்கு சென்றார்கள் என்று நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்க முடியும். உங்களுடைய கேள்வியைக் கேட்டு ஆச்சரியப்பட்டு விடுவார்கள். இவர்கள் கூட எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயத்துடன் கூறுகிறீர்கள். புத்தியில் உள்ளது அல்லவா? சத்யுகமான புதிய உலகத்தில் நம்முடைய இராஜ்யம் இருந்தது என்று நீங்கள் சட்டென்று கூறுவீர்கள். ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. (எவ்ரி திங் நியூ) எல்லாமே புதியதாக இருக்கும். ஒவ்வொரு பொருளும் சதோபிரதானமாக இருக்கும். தங்கம் கூட ஏராளமாக இருக்கும். சுலபமாக எடுக்கப்பட்டு விடும். பின் அந்த தங்கக் கற்களால் கட்டிடங்கள் ஆகியவை அமைக்கப்படக் கூடும். அங்கு எல்லாமே தங்கத்தினுடையதாக இருக்கும். சுரங்கங்கள் எல்லாம் புதியதாக இருக்கும் அல்லவா? போலியான தோ எடுத்து வரவே மாட்டார்கள். எனவே உண்மையானது (அசல்) நிறைய இருக்கும். இங்கு (ரியல்) உண்மை என்ற பெயரே கிடையாது. (இமிடேஷன்) போலியானது எவ்வளவு தீவிரமாக உள்ளது.எனவே பொய்யான மாயை பொய்யான சரீரம்.. என்று கூறப்படுகிறது. செல்வம் கூட பொய்யாகவே இருக்கும். வைரம், முத்துக்கள் ஆகியவை எப்பேர்ப்பட்ட இரகங்களாக வெளிப்படுகின்றன என்றால், இது உண்மையானதா இல்லை பொய்யானதா என்று தெரியவும் வராது. (ஷோ) பகட்டு எவ்வளவு இருக்கும் என்றால், போலியானதா இல்லை உண்மையானதா என்று பகுத்தறியவே முடியாது. அங்கோ இது போன்ற போலியான பொருட்கள் இருப்பதில்லை. விநாசம் ஏற்பட்டு விடும் பொழுது எல்லாமே பூமிக்குள் சென்று விடுகின்றன. இவ்வளவு பெரிய பெரிய கற்கள், வைரங்கள் ஆகியவற்றை கட்டிடங்களில் பதிக்க முடியும். அவை எல்லாம் எங்கிருந்து வந்திருக்க கூடும். யார் அறுத்து எடுப்பார்கள்? இந்தியாவில் கூட நிபுணர்கள் (எக்ஸ்பர்ட்) நிறைய பேர் உள்ளார்கள். திறமைசாலியாக ஆகிக் கொண்டே செல்வார்கள். பிறகு அங்கு இந்த திறமைகளை எடுத்துக் கொண்டு வருவார்கள் அல்லவா? கிரீடங்கள் ஆகியவை வைரங்களால் மட்டும் உருவாக்குவார்களா என்ன? அங்கோ முற்றிலுமே (ரிஃபைன்) சுத்திகரிக்கப்பட்ட உண்மையான வைரங்கள் இருக்கும். இந்த மின்சாரம், தொலைபேசி, மோட்டார் ஆகியவை முதலில் எதுவுமே இல்லாமல் இருந்தது. பாபாவின் இந்த வாழ்க்கைக்குள்ளேயே என்னவெல்லாம் வெளிப்பட்டுள்ளது! 100 வருடங்களுக்குள் இவை எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கோ பெரிய நிபுணர்கள் (எக்ஸ்பர்ட்) இருப்பார்கள். இதுவரையும் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். புத்திசாலியாக ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். இதுவும் குழந்தைகளுக்கு சாட்சாத்காரம் செய்விக்கப்படுகிறது. அங்கு ஹெலிகாப்டர்கள் கூட எளிதாக இயக்கப்படக் கூடியதாக இருக்கும். குழந்தைகள் கூட மிகவும் சதோபிரதானமானவர்களாக, கூரிய புத்தி உடையவர்களாக இருப்பார்கள். இனி கொஞ்சம் முன்னால் போய்ப் பாருங்கள், உங்களுக்கு எல்லாமே சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே இருக்கும். எப்படி தங்களுடைய தேசத்திற்கு பக்கத்தில் வரும் பொழுது மரங்கள் தென்படுகின்றன அல்லவா! உள்ளுக்குள் குஷி ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதோ வீடு வந்தே விட்டது! இப்பொழுதே வந்து சேர்ந்து விட்டோம்.கடைசியில் உங்களுக்கும் இது போல சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே இருக்கும். (மோஸ்ட் பிலவட்) மிகவும் அன்பிற்குரிய பாபா ஆவார் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். அவர் இருப்பதே (சுப்ரீம் ஆத்மா) உயர்ந்த ஆத்மாவாக. அவரை எல்லோரும் நினைவும் செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் கூட பரமாத்மாவை நினைவு செய்து கொண்டிருந்தீர்கள் அல்லவா? ஆனால் அவர் சிறியவராக இருக்கிறாரா அல்லது பெரியவராக இருக்கிறாரா என்பது தெரியாமல் இருந்தது. புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்று கூட பாடுகிறார்கள். எனவே அவசியம் பிந்து ரூபமாக இருப்பார் அல்லவா? அவருக்குத் தான் சுப்ரீம் ஆத்மா அதாவது பரமாத்மா என்று கூறப்படுகிறது. அவருக்குள் விசேஷத்தன்மைகள் எல்லாமே இருக்கவே இருக்கிறது. ஞானக் கடல் ஆவார். எனவே என்ன ஞானம் கூறுவார். அதுவும் அவர் வந்து கூறும் பொழுது தானே தெரிய வரும் இல்லையா? நீங்கள் கூட முதலில் அறிந்திருந்தீர்களா என்ன? பக்தியை மட்டும் அறிந்திருந்தீர்கள்.இப்பொழுதோ என்ன ஆச்சரியம், ஆத்மாவைக் கூட இந்த கண்களால் பார்க்க முடியாது, பிறகு தந்தையையும் மறந்து விடுகிறோம் என்பதும் தெரியவருகிறது. நாடகத்தில் பாகம் எவ்வாறு உள்ளது என்றால், யாரை உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறாரோ அவருடைய பெயரைப் போட்டு விடுகிறார்கள் மேலும் ஆக்கியவரின் பெயரே இல்லாமல் செய்து விடுகிறார்கள். கிருஷ்ணரை திரிலோகி நாத், வைகுண்டநாதன் என்று கூறி விட்டுள்ளார்கள். பொருள் எதையும் புரியாமல் இருக்கிறார்கள். பெருமைப்படுத்தி விடுகிறார்கள். அவ்வளவு தான். பக்தி மார்க்கத்தில் அநேக விஷயங்களை உருவாக்கி இருக்கிறார்கள். பகவானிடம் எவ்வளவு வலிமை உள்ளது என்றால் அவர் ஆயிரம் சூரியன்களை விட தேஜோமயமானவர், அவரால் எல்லாவற்றையும் சாம்பலாக்கி விட முடியும் என்று கூறுகிறார்கள். இப்படி யெல்லாம் கூறி வைத்துள்ளார்கள். "நான் குழந்தைகளை எப்படி எரிப்பேன்" என்று தந்தை கூறுகிறார். இது நடக்க கூடியதல்ல. குழந்தைகளை தந்தை ("டிஸ்ட்ராய்") அழித்து விடுவாரா என்ன? இல்லை. இதுவோ நாடகத்தில் ஒரு பாகம் உள்ளது. பழைய உலகம் முடியப் போகிறது. பழைய உலகத்தின் விநாசத்திற்காக இந்த இயற்கை சேதங்கள் எல்லாமே வேலைக்காரர் போன்றவை. அப்படியின்றி அவைகளுக்கு விநாசம் செய்யுங்கள் என்று தந்தை (டைரக்ஷன்) உத்தரவு பிறப்பிக்கிறார் என்பதல்ல. புயல்கள் வருகின்றன, பஞ்சம் ஏற்படுகிறது. இதெல்லாம் "இப்படி செய்யுங்கள்" என்று பகவான் கூறுகிறாரா என்ன? ஒருபொழுதும் இல்லை. இதுவோ நாடகத்தில் ஒரு பாகமாக உள்ளது. குண்டுகளைத் தயாரியுங்கள் என்று தந்தை கூறுவதில்லை. இவை எல்லாமே இராவணனின் வழி என்று கூறுவார்கள். இது ஏற்கனவே அமைந்துள்ள அமைக்கப்பட்ட நாடகம் ஆகும். இராவணனின் இராஜ்யம் ஆகும். எனவே அசுர புத்தி உடையவர்களாக ஆகி விடுகிறார்கள். எவ்வளவு பேர் இறக்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் எரித்து விடுவார்கள். இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள விளையாட்டு ஆகும். அது (ரிபீட்) திரும்பத் திரும்ப நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மற்றபடி சங்கரன் நெற்றிக் கண்ணை திறந்ததால் விநாசம் ஆகி விடுகிறது என்பதல்ல. இவற்றை இறை சேதங்கள் என்று கூட கூற மாட்டார்கள். இவை இயற்கையானதே ஆகும்.

 

இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத் அளித்துக் கொண்டிருக்கிறார். யாருக்குமே துக்கம் ஆகியவை அளிக்கும் விஷயமே கிடையாது. தந்தையோ இருப்பதே சுகத்தின் வழி கூறுபவராக. நாடகத் திட்டப்படி வீடு பழையதாக ஆகிக் கொண்டே போகும். இந்த முழு உலகமே பழையதாக ஆகி விட்டுள்ளது என்று தந்தையும் கூறுகிறார். இது முடிந்து போய் விட வேண்டும். தங்களுக்குள் எப்படி சண்டையிடுகிறார்கள், பாருங்கள்! அரக்க புத்தியினர் ஆவார்கள் அல்லவா? ஈசுவரிய புத்தியினராக இருக்கும் பொழுது கொல்வது போன்ற எந்த விஷயங்களும் கூட கிடையாது. நானோ அனைவருக்கும் தந்தை ஆவேன் என்று தந்தை கூறுகிறார். எனக்கு அனைவர் மீதும் அன்பு உள்ளது. பாபா இங்கு பார்க்கிறார். பிறகும் நெருக்கமான குழந்தைகள் மீது தான் பார்வை செல்கிறது. அவர்கள் தந்தையை மிகவும் அன்புடன் நினைவு செய்கிறார்கள். சேவையும் செய்கிறார்கள். இங்கு அமர்கையில் தந்தையின் பார்வை சேவை செய்யும் குழந்தைகள் பக்கம் சென்று விடுகிறது. சில சமயம் டேராடூன், சில சமயம் மீரட், சில சமயம் டில்லி.... எந்த குழந்தைகள் என்னை நினைவு செய்கிறார்களோ நானும் அவர்களை நினைவு செய்கிறேன். யார் என்னை நினைவும் செய்ய வில்லை என்றாலும் கூட, நான் எல்லோரையும் நினைவு செய்கிறேன். ஏனெனில் நான் எல்லோரையும் அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது அல்லவா? ஆம், யார் என் மூலமாக சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தைப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் பின் உயர்ந்த பதவியை அடைவார்கள். இவை எல்லையற்ற விஷயங்கள் ஆகும். அந்த ஆசிரியர்கள் ஆகியோர் எல்லைக்குட்பட்டவர்கள் ஆவார்கள். இவர் எல்லையில்லாதவர் ஆவார். எனவே குழந்தைகளுக்குள் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! எல்லோருடைய பாகமும் ஒன்று போல இருக்க முடியாது என்று தந்தை கூறுகிறார். இவருடைய பாகமோ இருந்தது. ஆனால் பின்பற்றுபவர்கள் கோடியில் ஒருவராக வெளிப்பட்டார்கள். "பாபா நான் 7 நாட்களின் குழந்தை ஆவேன், ஒரு நாள் குழந்தை ஆவேன்" என்று கூறுகிறார்கள். எனவே "குட்டிகள்" தான் இல்லையா? எனவே தந்தை ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். உண்மையில் நதியைக் கூட கடந்து வந்திருந்தார்கள். பாபா வந்த உடனே தான் ஞானம் ஆரம்பமாகியது. அவருக்கு எவ்வளவு மகிமை உள்ளது! அந்த கீதையின் அத்தியாயமோ நீங்கள் பல பிறவிகளாக எத்தனையோ முறை படித்திருக்கக் கூடும். வித்தியாசம் பாருங்கள் எவ்வளவு உள்ளது! கிருஷ்ண பகவான் கூறுகிறார் (கிருஷ்ண பகவானுவாச) என்பது எங்கே? சிவ பரமாத்மா கூறுகிறார் (சிவ பரமாத்மா வாச) என்பது எங்கே? இரவு பகலுக்கான வித்தியாசம் உள்ளது. நாம் உண்மையான கண்டத்தில் இருந்தோம். சுகமும் நிறைய பார்த்தோம் என்பது உங்கள் புத்தியில் இப்பொழுது உள்ளது. 3/4 பங்கு சுகம் பார்க்கிறீர்கள். தந்தை சுகத்திற்காகத் தான் நாடகத்தை அமைத்தாரேயன்றி துக்கத்திற்காக அல்ல. இதுவோ பின்னால் உங்களுக்கு துக்கம் கிடைத்துள்ளது. யுத்தமோ இவ்வளவு சீக்கிரம் ஏற்பட முடியாது. உங்களுக்கு நிறைய சுகம் கிடைக்கிறது. பாதிப் பாதி என்றாலும் கூட இவ்வளவு ஆனந்ம் இருக்காது. 3500  வருடங்கள் வரை எந்த சண்டையும் இருக்காது. வியாதிகள் ஆகியவை இருக்காது. இங்கோ பாருங்கள் நோய்களுக்கு பின்னால் நோய்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சத்யுகத்தில் இது போல தானியங்களை அரித்து சாப்பிடும் புழுக்கள் எல்லாம் இருக்குமா என்ன? ஆக அதனுடைய பெயரே சொர்க்கம் ஆகும். எனவே நீங்கள் உலகத்தின் வரைபடத்தைக் கூட காண்பிக்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள். உண்மையில் பாரதம் இவ்வாறாக இருந்தது. வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. பிறகு வரிசைக்கிரமமாக தர்ம ஸ்தாபனை செய்பவர்கள் வருகிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு உலகத்தின் சரித்திரம் மற்றும் பூகோளம் பற்றித் தெரியும். உங்களைத் தவிர மற்ற எல்லோருமோ "நேதி நேதி.. (தெரியாது, தெரியாது) எங்களுக்கு தந்தை (பகவானைப்) பற்றித் தெரியாது" என்று கூறி விடுவார்கள். அவருக்கென்று எந்த ஒரு பெயர் ரூபம், தேசம், காலம் கிடையாது என்றுக் கூறி விடுகிறார்கள். பெயர் ரூபம் இல்லை என்றால் பின் எந்த ஒரு தேசமும் கூட இருக்க முடியாது. ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது தந்தை தனது சரியான அறிமுகத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. சதா அளவற்ற குஷியில் இருப்பதற்காக எல்லையில்லாத தந்தை கூறும் எல்லையில்லாத விஷயங்களை நினைவு செய்ய வேண்டும் மற்றும் தந்தையைப் பின்பற்றிக் கொண்டே நடக்க வேண்டும்.

 

2. சதா ஆரோக்கியமாக இருப்பதற்காக தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். தூய்மையின் ஆதாரத்தில் (ஹெல்த், வெல்த் மற்றும் ஹேப்பினெஸ்) ஆரோக்கியம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியின் ஆஸ்தியை தந்தையிடமிருந்து பெற வேண்டும்.

 

வரதான்:

சக்திசாலியான நினைவு மூலம் நொடியில் பலமடங்கு வருமானத்தை சேமிக்கக் கூடிய கோடான கோடி பாக்கியசாலி ஆகுக.

 

ஒரு வினாடியின் நினைவு மூலம் பலமடங்கு வருமானம் சேமிப்பு ஆகுமளவிற்கு உங்களுடைய நினைவு சக்திசாலியாக இருக்க வேண்டும். யாருடைய ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு வருமானம் இருக்கிறது என்றால் எவ்வளவு பலமடங்கு சேமிப்பு ஆகிவிடும், ஆகையால் தான் சொல்லப் படுகிறது கோடான கோடி பாக்கியசாலி.எவருக்காவது நல்ல வருமானம் இருக்கிறது என்றால், அவர்களுடைய முகத்தின் மலர்ச்சி தனிப்பட்டதாகி விடுகிறது. ஆகையால் உங்களுடைய முகத்திலும் கூட பலமடங்கு வருமானத்தின் மகிழ்ச்சி தென்படும். அவ்வாறு ஆன்மீக மகிழ்ச்சி, ஆன்மீகக் குஷி இருக்க வேண்டும் அது இவர்கள் தனிப்பட்டவர்கள் என்று அனுபவம் செய்விக்க வேண்டும்

 

சுலோகன்:

நாடகத்தில் அனைத்துமே நன்றாகத் தான் இருக்கும், என்ற நினைவின் மூலம் கவலையற்ற பேரரசர் ஆகுங்கள்.

 

ஓம்சாந்தி