ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்,
குழந்தைகளே! விழுவதும் மற்றும் சமாளித்துக் கொள்ளவும் வேண்டும்.
அடிக்கடி பாபாவை மறக்கின்றீர்கள் என்றால் விழுகின்றீர்கள்.
நினைவு செய்கின்றீர்கள் என்றால் பாதுகாப்புடன் இருக்கின்றீர்கள்.
மாயை பாபாவின் நினைவை மறக்கச் செய்கிறது ஏனென்றால் புதிய விசயம்
அல்லவா! இப்படி தந்தையை யாரும் ஒருபோதும் மறப்பதில்லை. மனைவி
ஒருபோதும் தங்களுடைய கணவனை மறப்பது கிடையாது. நிச்சயம் செய்து
விட்டால் புத்தியின் தொடர்பு மாட்டிக் கொள்கிறது. மறப்பதற்கான
விசயமே இருப்பதில்லை. கணவர், கணவர் தான். தந்தை, தந்தை தான்.
இவர் நிராகாரமான தந்தையாக இருக்கின்றார், இவரை பிரியதர்ஷன்
என்றும் சொல்கிறார்கள். பக்தர் களை பிரியதர்ஷனிகள் என்று
சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் அனைவரும் பக்தர்களாக
இருக்கிறார்கள். பகவான் ஒருவரே ஆவார். பக்தர்களை பிரியதர்ஷனிகள்
என்றும் பகவானை பிரியதர்ஷன் அல்லது பக்தர்களை இரட்சிப்பவர்
என்றும் பகவானை தந்தை என்றும் சொல்லப் படுகிறது.
பதிகளுக்கெல்லாம் பதி அல்லது தந்தைக்கெல்லாம் தந்தை அவர் ஒருவரே
ஆவார். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தந்தை பரமாத்மாவே ஆவார். லௌகீக
தந்தை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இருக்கிறார்கள். பரலௌகீக
பரமபிதா அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஒரே ஒரு இறை தந்தை
ஆவார், அவருடைய பெயர் சிவபாபா ஆகும். வெறுமனே இறை தந்தை,
மவுண்ட் அபு என்று எழுதினால் கடிதம் வந்து சேருமா சொல்லுங்கள்?
பெயர் எழுத வேண்டும் அல்லவா! இவர் எல்லையற்ற தந்தை ஆவார்.
அவருடைய பெயர் சிவன் ஆகும். சிவகாசி என்று சொல்கிறார்கள் அல்லவா!
அங்கே சிவனுடைய கோயில் இருக்கிறது. கண்டிப்பாக அங்கேயும்
சென்றிருப்பார்கள். இராமன் இங்கே சென்றார், அங்கே சென்றார்,
காந்தி இங்கே சென்றார்................ அதனால் சிவபாபாவின்
சித்திரமும் இருக்கிறது. ஆனால் அவர் நிராகாரமானவராக
இருக்கின்றார். அவரை தந்தை என்று சொல்லப்படுகிறது, வேறு
யாரையும் அனைவருக்கும் தந்தை என்று சொல்ல முடியாது. பிரம்மா,
விஷ்ணு, சங்கருக்கும் கூட அவர் தந்தையாவார். அவருடைய பெயர்
சிவன் ஆகும். காசியில் கூட கோயில் இருக்கிறது, உஜ்ஜெயினியில்
கூட சிவனுடைய கோயில் இருக்கிறது. இவ்வளவு கோயில்கள் ஏன்
உருவாகியது என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. இலஷ்மி
நாராயணனுடைய பூஜை செய்கிறார்கள், இவர்கள் சொர்க்கத்தின்
எஜமானர்களாக இருந்தார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் எப்போது
சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தார் கள், இவர்கள் எப்படி
எஜமானர்களாக ஆனார்கள் என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை.
பூஜாரிகள் யாருடைய பூஜை செய்கிறார்களோ, அவர்களுடைய தொழிலையே
தெரிந்திருக்க வில்லை என்றால் இதனை கண்மூடித்தனம் என்று
சொல்லப்படும் அல்லவா! இங்கேயும் கூட பாபா என்று சொல்கிறார்கள்,
ஆனால் முழுமையான அறிமுகம் இல்லை. தாய்-தந்தையரை
தெரிந்திருக்கவில்லை. இலஷ்மி - நாராயணனுடைய பூஜாரிகள் பூஜை
செய்கிறார்கள், சிவனுடைய கோயிலுக்குச் சென்று மகிமை
செய்கிறார்கள், நீங்கள் தான் தாயும் தந்தையும்.............
என்று பாடுகிறார்கள், ஆனால் அவர் எப்படி தாயும் தந்தையுமாக
இருக்கின்றார், எப்போது ஆகியிருந்தார் என்பது போன்ற எதையும்
தெரிந்திருக்க வில்லை. பாரதவாசிகள் தான் முற்றிலும்
தெரிந்திருக்க வில்லை. கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள் போன்றவர்கள்
தங்களுடைய கிறிஸ்துவை, புத்தரை நினைவு செய்கிறார்கள். உடனே
அவர்களுடைய வரலாற்றைச் சொல்வார்கள் - கிறிஸ்து இந்த சமயத்தில்
கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்ய வந்திருந்தார். பாரதவாசிகள்
யாரையாவது பூஜிக்கிறார்கள் என்றால், அவர்கள் யார் என்பது
இவர்களுக்கு தெரியாது. சிவனையோ, பிரம்மா-விஷ்ணு-சங்கரையோ,
ஜகதம்பாவையோ, ஜகத்பிதாவையோ, இலஷ்மி நாராயணனையோ
தெரிந்திருக்கவில்லை, வெறுமனே பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய வரலாறு என்ன போன்ற எந்த விசயங்களையும்
தெரிந்திருக்கவில்லை. நீங்கள் சொர்க்கத்தில் இருந்தபோது
உங்களுடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக இருந்தது,
நீங்கள் இராஜ்யம் செய்தீர்கள் என்று பாபா வந்து
ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். உண்மையில் நாம் இராஜ்யம்
செய்தோம், நாம் மறுபிறவி எடுத்து, 84 பிறவிகளை
அனுபவித்து-அனுபவித்து இராஜ்யத்தை இழந்து விட்டோம் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். வெண்மையிலிருந்து கருப்பாக ஆகி
விட்டோம். சுந்தராக (தூய்மையாக) இருந்தீர்கள், இப்போது ஷியாமாக
(தூய்மை யற்றவர்களாக) ஆகி விட்டீர்கள். இன்றைக்கு நாராயணனை
கருப்பாக காட்டுகிறார்கள் என்றால் அதே கிருஷ்ணர் தான்
நாராயணனாக இருந்தார் என்பது நிரூபணமாகிறது. ஆனால் இந்த விசயங்
களை முற்றிலும் புரிந்து கொள்வதே இல்லை.
யாதவர்கள் ஏவுகணைகளை கண்டுபிடிப்பவர்கள் மற்றும்
கௌரவர்களும்-பாண்டவர்களும் சகோர- சகோதரர்களாவர். அவர்கள் அசுர
சகோதரர்கள் மற்றும் இவர்கள் தெய்வீக சகோதர்களாக இருந்தார்கள்.
இவர்களும் அசுரர்களாக இருந்தார்கள், இவர்களை பாபா
உயர்ந்தவர்களாக மாற்றி தெய்வீக சகோதரர்களாக மாற்றியுள்ளார்.
இரண்டு சகோதரர்களுக்கும் என்ன ஆயிற்று? பாண்டவர் களுக்கு வெற்றி
கிடைத்தது, கௌரவர்கள் அழிந்து விட்டார்கள். இங்கு அமர்ந்து
கொண்டே மம்மா-பாபா என்று சொல்கிறார்கள் ஆனால்
தெரிந்திருக்கவில்லை. பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடப்பதில்லை. பாபா
நமக்கு இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைத்
தெரிந்திருக்கவில்லை. நிச்சயம் இருப்பதில்லை. தேக- அபிமானிகளாக
இருக்கின்ற காரணத் தினால், தேகத்தின் நண்பர்கள்-உறவினர்கள்
போன்றவர்களை நினைவு செய்கிறார்கள். இங்கே தேகமற்ற பாபாவை நினைவு
செய்ய வேண்டும். இது புதிய விசயமாக ஆகி விட்டது அல்லவா!
மனிதர்கள் யாரும் இதை புரிய வைக்க முடியாது. இங்கே
தாய்-தந்தையரிடம் அமர்ந்து கொண்டே கூட அவர்களை
தெரிந்திருக்கவில்லை. இது அதிசயமாக இருக்கிறது அல்லவா!
பிறப்பும் இங்கே தான் நடந்தது. இருந்தாலும் தெரிந்திருக்கவில்லை
ஏனென்றால் நிராகாரமானவராக இருக் கின்றார். அவரை சரியான முறையில்
புரிந்து கொள்ள முடிவதில்லை. அவருடைய வழிப்படி நடப்பதில்லை
என்றால் பிறகு ஆச்சரியப்படும்படி வெளியே சென்று விடுகிறார்கள்.
யாரிடமிருந்து சொர்க்கத்தின் 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறதோ,
அவரையே தெரிந்து கொள்ளாத காரணத் தினால் ஓடி விடுகிறார்கள். யார்
பாபாவை தெரிந்திருக்கிறார்களோ, அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று
சொல்லப்படுகிறது. துக்கத்திலிருந்து விடுவிப்பவர் ஒரு பாபாவே
ஆவார். உலகத்தில் அதிக துக்கம் இருக்கிறது அல்லவா! இந்த
இராஜ்யமே கீழானதாக இருக்கிறது. இருந்தாலும் நாடகத்தின்படி 5
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட கீழான உலகமே
இருக்கும், பிறகு பாபா வந்து சத்யுக உயர்ந்த சுயராஜ்யத்தை
ஸ்தாபனை செய்வார். நீங்கள் மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காக
வந்துள்ளீர்கள். இது மனிதர்களின் உலகமாகும். தேவதைகளின் உலகம்
சத்யுகத்தில் இருக்கிறது. இங்கே தூய்மையற்ற மனிதர்கள்
இருக்கிறார்கள், சத்யுகத்தில் தூய்மை யான தேவதைகள்
இருக்கிறார்கள். இது பிராமணர்களாக ஆகியிருக்கின்ற உங்களுக்குத்
தான் புரிய வைக்கப்படுகிறது. யார் பிராமணர்களாக ஆகிக் கொண்டே
செல்கிறார்களோ அவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டே
செல்லப்படுகிறது. அனைவரும் பிராமணர்களாக ஆக மாட்டார்கள். யார்
பிராமணர்களாக ஆகிறார்களோ அவர்கள் தான் பிறகு தேவதைகளாக ஆவார்கள்.
பிராமணர் களாக ஆகவில்லை என்றால் தேவதைகளாக ஆக முடியாது.
பாபா-மம்மா என்று சொன்னீர்கள் என்றால் பிராமண குலத்தில்
வந்துள்ளீர்கள் என்பதாகும். பிறகு அனைத்தும் படிப்பின்
முயற்சியில் ஆதாரப்பட்டிருக்கிறது. இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது, மற்றபடி இப்ராஹிம், புத்தர் போன்றவர்கள்
யாரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில்லை. கிறிஸ்து தனியாகவே
வந்தார். யாருக்குள்ளோ பிரவேசம் செய்தார், கிறிஸ்துவ தர்மத்தை
ஸ்தாபனை செய்தார் பிறகு யாரெல்லாம் கிறிஸ்துவ தர்மத்தின்
ஆத்மாக்களோ அவர்கள் மேலிருந்து வந்து கொண்டிருக் கிறார்கள்.
இப்போது அனைத்து கிறிஸ்துவ ஆத்மாக்களும் இங்கே இருக்கின்றன.
இப்போது கடைசியில் அனைவரும் திரும்பி செல்ல வேண்டும். பாபா
அனைவருக்கும் வழிகாட்டியாக ஆகி அனைவரை யும் துக்கத்திலிருந்து
விடுவிக்கின்றார். பாபா தான் மனித குலம் அனைத்திற்கும்
விடுவிப்பவர் மற்றும் வழிகாட்டியாவார். அனைத்து ஆத்மாக்களையும்
திரும்பி அழைத்துச் செல்வார். ஆத்மா தூய்மை யற்றதாக இருக்கின்ற
காரணத்தினால் திரும்பிச் செல்ல முடியாது. நிராகார உலகம்
தூய்மையானது அல்லவா! இப்போது இந்த சாகார(பௌதீக) உலகம் தூய்மை
யற்றதாக இருக்கிறது. இப்போது இவர்கள் அனைவரும் நிராகார
உலகத்திற்கு செல்ல தூய்மை யாக்குவது யார்? ஆகையினால் தான் ஓ இறை
தந்தையே! வாருங்கள் என்று அழைக்கிறார்கள். எப்போது முழு உலகமும்
கீழானதாக ஆகி விடுகின்றதோ அப்போது நான் ஒரு முறை தான்
வருகின்றேன் என்று இறை தந்தை கூறுகின்றார். ஒருவர் மற்றவரை
கொல்வதற்காக எவ்வளவு குண்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றை
உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்! ஒன்று அணுகுண்டுகளை
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் மற்றொன்று இயற்கை சீற்றங்களான
வெள்ளம், பூகம்பம் போன்றவை நிகழும், மின்னல் தாக்கும்,
நோய்வாய்ப்படுவார்கள் ஏனென்றால் உரம் உருவாக வேண்டும் அல்லவா!
குப்பைகள் தான் எருவாக ஆகிறது அல்லவா! எனவே இந்த முழு
உலகத்திற்கும் எரு வேண்டும் அதன் மூலம் முதல் தரமானவைகள் (தானியங்கள்)
உற்பத்தி ஆகும். சத்யுகத்தில் பாரதம் மட்டுமே இருந்தது. இப்போது
இவ்வளவு அனைத்தும் வினாசம் ஆக வேண்டும். நான் வந்து தெய்வீக
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றேன் மற்ற அனைத்தும் அழிந்து விடும்,
மற்றபடி நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வீர்கள் என்று பாபா
கூறுகின்றார். அனைவரும் சொர்க்கத்தை நினைவு செய்கிறார்கள்
அல்லவா! ஆனால் எதை சொர்க்கம் என்று சொல்லப்படுகிறது என்பதைத்
தெரிந்திருக்கவில்லை. யாராவது இறந்து விட்டால் சொர்க்க பதவி
அடைந்து விட்டார் என்று சொல்வார்கள். அட, கலியுகத்தில் யாராவது
இறந்தால் கண்டிப்பாக கலியுகத்தில் மறுபிறவி எடுப்பார் அல்லவா!
இந்தளவிற்கு கூட யாரிடத்திலும் புத்தி இல்லை. தத்துவ மேதைகள்
என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள், எதையும் புரிந்து
கொள்வதில்லை. மனிதர்கள் கோயிலில் இருக்கக் கூடியவர்களாக
இருந்தார்கள். அது பாற்கடல், இது விஷக்கடலாகும். இந்த விசயங்கள்
அனைத்தையும் பாபா தான் புரிய வைக்கின்றார். மனிதர்களுக்குத்
தான் படிப்பிக்க முடியும், விலங்குகளுக்கு படிப்பிக்க முடியாது.
இந்த நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாபா புரிய
வைக்கின்றார். எப்படி செல்வந்தர்கள் இருக்கிறார்களோ, அப்படி
வீட்டு உபயோகப் பொருட்கள் இருக்கும். ஏழைகளிடத்தில்
மண்பாண்டங்கள் இருக்கும், செல்வந்தர்களிடத்தில் நிறைய பொருட்கள்
இருக்கும். நீங்கள் சத்யுகத்தில் செல்வந்தர்களாக ஆகின்றீர்கள்
எனும்போது உங்களுடைய மாளிகைகள் வைர-வைடூரியங்களினால் ஆனதாக
இருக்கிறது. அங்கே எந்த குப்பை போன்றவைகளும் இருப்பதில்லை,
துர்நாற்றம் இருப்பதில்லை. இங்கே துர்நாற்றம் இருக்கிறது
ஆகையினால் அகர்பத்தி போன்றவை ஏற்றப்படுகின்றன. அங்கே மலர்கள்
போன்றவற்றில் இயற்கையான நறுமணம் இருக்கிறது. அகர்பத்தி
ஏற்றுவதற்கான அவசியம் இருப்பதில்லை, அதனை சொர்க்கம் என்று
சொல்லப்படுகிறது. பாபா சொர்க்கத்திற்கு எஜமானர்களாக
ஆக்குவதற்காக படிப்பிக் கின்றார். பாருங்கள், எவ்வளவு சாதரணமாக
இருக்கின்றார்! இப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்வதற்குக் கூட
மறந்து விடுகிறீர்கள்! முழுமையான நிச்சயம் இல்லாத காரணத்தினால்
மறந்து விடுகிறார்கள். யாரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி
கிடைக்கிறதோ, அப்படிப்பட்ட தாய்-தந்தையரை மறந்து விடுவது என்பது
எவ்வளவு அதிர்ஷ்டமற்ற நிலை! பாபா வந்து உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்களாக ஆக்குகின்றார். அப்படிப்பட்ட தாய்- தந்தையரின்
வழிப்படி நடக்கவில்லை என்றால் 100 சதவீதம் மிகவும்
அதிர்ஷ்டமற்றவர்கள் என்று தான் சொல்ல முடியும். வரிசைக்
கிரமமாக இருப்பார்கள் அல்லவா! படிப்பின் மூலம் உலகத்திற்கு
எஜமானர் களாவது எங்கே, வேலைக்காரர்களாக ஆவது எங்கே! நாம்
எந்தளவிற்கு படிக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள
முடியும். அங்கே தர்மத்தை ஸ்தாபனை செய்ய தர்ம பிதாக்கள் மட்டுமே
வருகிறார்கள், இங்கே தாய்-தந்தை இருக்கிறார்கள் ஏனென்றால்
குடும்ப மார்க்கம் அல்லவா! தூய்மையான குடும்ப மார்க்கம்
இருந்தது. இப்போது தூய்மையற்ற குடும்ப மார்க்கமாகும்.
இலஷ்மி-நாராயணன் தூய்மையாக இருந்தார்கள் என்றால் அவர்களுடைய
குழந்தைகளும் கூட தூய்மையாக இருந்தார்கள். நாம் என்னவாக ஆவோம்
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். தாய்-தந்தையர் எவ்வளவு
உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார்கள், அப்படி என்றால் அவர்களைப்
பின்பற்ற வேண்டும் அல்லவா! பாரதத்தை தான் தாய், தந்தை நாடு
என்று சொல்லப்படுகிறது. சத்யுகத்தில் அனைவரும் தூய்மையாக
இருந்தார்கள், இங்கே தூய்மையற்றவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு
நல்ல விதத்தில் புரிய வைக்கப்படுகிறது ஆனால் பாபாவை நினைவு
செய்வதில்லை என்றால் புத்தியின் பூட்டு பூட்டிக்கொள்கிறது.
கேட்டு-கேட்டு பிறகு படிப்பை விட்டு விடுகிறார்கள் என்றால்
பூட்டு ஒரேயடியாக பூட்டிக்கொள்கிறது. பள்ளியில் கூட
வரிசைக்கிரமம் இருக்கிறது. கல்புத்தி மற்றும் தங்கபுத்தி என்று
சொல்லப்படுகிறது. கல்புத்தி எதையும் புரிந்து கொள்வதில்லை, முழு
நாளிலும் 5 நிமிடங்கள் கூட பாபாவை நினைவு செய்வதில்லை. 5
நிமிடம் நினைவு செய்தால் அந்தளவு தான் பூட்டு திறக்கும்.
அதிகமாக நினைவு செய்தால் நன்றாக பூட்டு திறந்து விடும்.
அனைத்தும் நினைவில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. சில குழந்தைகள்,
பிரியமான பாபா அல்லது பிரியமான தாதா என்று கடிதம் எழுது
கிறார்கள். வெறுமனே பிரியமான தாதா என்று தபாலில் கடிதம்
போட்டால் கிடைக்குமா? பெயர் வேண்டும் அல்லவா! தாதா-தாதிகளோ
உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இன்று தீபாவளி. தீபாவளி அன்று புதிய கணக்கு வைப்பார்கள்.
நீங்கள் உண்மையிலும் உண்மை யான பிராமணர்கள். அந்த பிராமணர்கள்
வியாபாரிகளின் மூலம் புதிய கணக்கை வைக்க வைக்கின்றார்கள்.
நீங்களும் கூட தங்களுடைய புதிய கணக்கை வைக்க வேண்டும். ஆனால்
இது புதிய உலகத்திற்கானதாகும். பக்திமார்க்கத்தினுடையது
எல்லையற்ற நஷ்ட கணக்காகும். நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியை
அடைகிறீர்கள், எல்லையற்ற சுகம்-அமைதியை அடைகிறீர்கள். இந்த
எல்லையற்ற விசயங்களை எல்லையற்ற தந்தை வந்து புரிய வைக்கின்றார்
மேலும் எல்லையற்ற சுகத்தை அடையக் கூடிய குழந்தைகள் தான் இவை
யனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். கோடியில் சிலர் தான்
பாபாவிடம் வருகிறார்கள். போகப்போக வருமானத்தில் நஷ்டம் ஏற்பட்டு
விடுகிறது என்றால் சேமித்து வைத்ததும் கூட இல்லாமல் போய்
விடுகிறது. யாருக்காவது தானம் கொடுக்கும் போது தான் உங்களுடைய
கணக்கு வளர்ச்சி பெறுகிறது. தானம் செய்வதில்லை என்றால்
வருமானத்தில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. வருமானம் வளர வேண்டும்
என்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அது எப்போது ஏற்படும்
என்றால் யாருக்காவது தானம் செய்யும் போது, பலனை அடையச் செய்யும்
போது ஆகும். யாருக்காவது பாபாவின் அறிமுகத்தை அளித்தீர்கள்
என்றால் சேமிப்பு ஆகிறது என்பதாகும். அறிமுகத்தை அளிப்பதில்லை
எனும்போது சேமிப்பும் ஆவதில்லை. உங்களுடைய வருமானம் மிக-மிகப்
பெரியதாகும். முரளியின் மூலம் உங்களுக்கு உண்மையான வருமானம்
ஏற்படுகிறது, முரளி யாருடையது என்பது மட்டும் தெரிந்து விட்டால்
போதும். யார் கருப்பாக (தூய்மை யற்றவர்களாக) ஆகி விட்டார்களோ,
அவர்கள் தான் வெண்மையாக ஆவதற்கு முரளியைக் கேட்க வேண்டும்
என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முரளியில்
தங்களுடைய மந்திரம் இருக்கிறது. இறைவனுடைய மந்திரம் என்று
சொல்கிறார்கள் அல்லவா! எனவே இந்த முரளியில் இறை மந்திரம்
இருக்கிறது. இந்த ஞானம் கூட உங்களுக்கு இப்போது இருக்கிறது.
தேவதை களிடத்தில் இந்த ஞானம் இருக்கவில்லை. அவர்களிடத்திலேயே
இந்த ஞானம் இல்லாத போது பின்னால் வந்தவர்களிடத்தில் ஞானம்
எப்படி இருக்க முடியும்? பின்னால் உருவாகின்ற சாஸ்திரம்
போன்றவைகளும் அழிந்து விடும். உங்களுடைய இந்த உண்மையான கீதைகள்
மிகவும் குறைவானதாகும். உலகத்தில் அந்த கீதைகள் இலட்சக்கணக்கில்
இருக்கும். உண்மையில் இந்த சித்திரம் தான் உண்மையான கீதையாகும்.
இந்த படங்களின் மூலம் புரிந்து கொள்ளும் அளவிற்கு அந்த கீதையின்
மூலம் புரிந்து கொள்ள முடியாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.