12.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நன்மை செய்யும் தந்தையின் குழந்தைகளாகிய உங்களது காரியம் என்னவெனில் அனைவருக்கும் நன்மை செய்வதாகும். அனைவருக்கும் தந்தையின் நினைவை ஏற்படுத்த வேண்டும் மற்றும் ஞானம் கொடுக்க வேண்டும்.

 கேள்வி:

மகாரதி என்று பாபா எந்த குழந்தைகளைக் கூறுகின்றார்? அவர்களது அடையாளம் என்ன?

 பதில்:

யார் நன்றாக படித்து மற்றும் கற்பிக்கின்றார்களோ, யார் மீது சதா குருதிசை இருக்கின்றதோ, யார் தனது மற்றும் அனைவரின் முன்னேற்றத்திற்காக சதா சிந்திக்கின்றார்களோ, யார் யக்ஞ சேவையில் எலும்புகளை கொடுக்கின்றார்களோ, யார் பாபாவின் காரியத்தில் உதவியாளர்களாக இருக்கின்றார்களோ அவர்களே மகாரதிகள் ஆவர். அப்படிப்பட்ட மகாரதி குழந்தைகளை பாபா கூறுகின்றார் - இவர்கள் எனது நல்ல (தகுதியான) குழந்தைகள்.

 ஓம் சாந்தி.

இன்றைய நாட்களில் குழந்தைகள் சிவஜெயந்திக்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர். வாழ்த்து அட்டை போன்றவற்றையும் அச்சடிக்கின்றீர்கள். தந்தை அநேக முறை புரிய வைத்திருக்கின்றார். முக்கியமான அனைத்து விசயங்களும் கீதையில் இருக்கின்றது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட கீதையைப் படித்து படித்து அரைகல்பத்திற்கு கீழே இறங்கி வந்தீர்கள். அரைகல்பம் பகல், அரைகல்பம் இரவு என்பதையும் குழந்தைகள் தான் புரிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது பாபா தலைப்பு கொடுக்கின்றார், அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஞானத்தின் சாஸ்திரம் ஒரே ஒரு கீதை தான், மற்ற அனைத்து சாஸ்திரங்களும் பக்தியினுடையது என்பதை சகோதர, சகோதரிகளே வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் எழுத வேண்டும். ஞானத்தின் சாஸ்திரம் ஒன்றே ஒன்று தான், அதனை புருஷோத்தம சங்கமயுகத்தில் எல்லையற்ற தந்தை பரம்பிதா பரமாத்மா திரிமூர்த்தி சிவன் கூறுகின்றார் அல்லது பிரம்மாவின் மூலம் கூறிக் கொண்டு இருக்கின்றார் என்று எழுதுங்கள். இதன் மூலம் 21 பிறவிகளுக்கு சத்கதி ஏற்படும். ஞானத்தின் கீதையின் மூலம் 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கின்றது. பிறகு 63 பிறவிகளில் மனிதர்களால் கூறப்பட்ட பக்திக்கான கீதை நடைபெறுகின்றது. இராஜயோகத்தைக் கற்பித்து தந்தை சத்கதியை ஏற்படுத்தி விடுகின்றார். பிறகு கேட்க வேண்டிய அவசியமிருக்காது. இந்த ஞானத்தின் கீதையினால் பகல் ஏற்பட்டு விடுகின்றது. இதனை ஞானக் கடலாக இருக்கக்கூடிய தந்தை தான் கூறுகின்றார், இதன் மூலம் 21 பிறவிகளுக்கு கதி, சத்கதி ஏற்படுகின்றது அதாவது 100 சதவிகிதம் தூய்மை, சுகம், அமைதிக்கான ஆடாத, நிலையான சத்யுக தெய்வீக இராஜ்யத்தை அடைகின்றோம். 21 பிறவிகளுக்கு முன்னேறும் கலை ஏற்படுகின்றது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட கீதையினால் கீழே இறங்கும் கலை ஏற்படுகின்றது. பக்தியின் கீதை மற்றும் ஞான கீதையைப் பற்றி மிக நல்ல முறையில் சிந்தனை செய்ய வேண்டும். இது தான் முக்கியமான விசயமாகும், இதனை மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. திரிமூர்த்தி சிவஜெயந்தி தான் ஸ்ரீமத் பகவத் கீதை ஜெயந்தி அதன் மூலம் அனைவருக்கும் சத்கதி ஏற்படுகின்றது என்று நீங்கள் எழுதுகின்றீர்கள். சிவஜெயந்தியின் மூலமாகவே உலகில் அமைதி ஏற்படும் என்றும் நீங்கள் கூற முடியும். முக்கியமான வார்த்தைகள் மிகவும் அவசியமானதாகும். அது தான் அனைத்திற்கும் ஆதாரமாகும். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதியைக் கொடுக்க முடியாது என்று அனைவருக்கும் கூற முடியும். புருஷோத்தம சங்கமயுகத்தில் சத்கதி கொடுப்பதற்காக பகவான் வருகின்றார், இப்பொழுது சத்கதி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த 2-3 கருத்துக்கள் முக்கியமானதாகும். சிவன் மற்றும் கிருஷ்ணரின் கீதையில் வித்தியாசம் இருக்கின்றது. திரிமூர்த்தி சிவ பகவானிடமிருந்து சங்கமத்தில் கீதையை கேட்பதன் மூலம் சத்கதி ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட கருத்துக்களை சிந்தனை செய்கின்ற பொழுது தான் மற்றவர்களைப் பிரபாவப்படுத்த முடியும். மனிதர்கள் மனிதர்களுக்கு ஒருபொழுதும் சத்கதி ஏற்படுத்த முடியாது. ஆசிரியர் மற்றும் சத்குருவாக இருக்கக் கூடிய ஒரே ஒரு திரிமூர்த்தி பரம்பிதா பரமாத்மா சிவன் இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில் அனைவருக்கும் சத்கதி செய்வித்துக் கொண்டிருக்கின்றார். அழைப்பிதழ்களில் சிறிது கருத்துக்களையும் எழுத வேண்டும். கலியுக சோழி போன்ற பதீத மனிதனிலிருந்து சத்யுக வைரம் போன்ற பாவனமான தேவி தேவதையாக ஆவதற்கான ஈஸ்வரிய அழைப்பிதழ் என்று மேலே எழுதப்பட வேண்டும். இவ்வாறு எழுதுவதன் மூலம் அறிந்து கொள்வதற்காக மனிதர்கள் குஷியுடன் வருவார்கள். சத்கதியின் வள்ளலாகிய பாபாவிற்குத் தான் சிவஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. முற்றிலும் தெளிவான வார்த்தைகளாக இருக்க வேண்டும். மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் அநேக சாஸ்திரங்களைப் படிக்கின்றனர். தலையை உடைத்துக் கொள்கின்றனர். இங்கு ஒரே விநாடியில் எல்லையற்ற தந்தையிடமிருந்து முக்தி ஜீவன் முக்தி கிடைக்கின்றது. தந்தையினுடையவராகி அவரிடமிருந்து ஞானம் அடைகின்ற பொழுது அவரிடமிருந்து ஜீவன் முக்தி கண்டிப்பாக கிடைக்கும். முதலில் முக்திக்குச் சென்று, பிறகு எப்படி முயற்சி செய்திருக்கின்றார்களோ அதன்படி ஜீவன் முக்திக்கு கண்டிப்பாக வருவீர்கள். கண்டிப்பாக ஜீவன் முக்தி கிடைக்கும், ஆனால் ஆரம்பத்தில் வருவது அல்லது கடைசியில் வருவதா? முதலில் ஜீவன் முக்தியில் வருகின்றீர்கள் பிறகு ஜீவன் பந்தனத்தில் வருகின்றீர்கள். இப்படிப்பட்ட முக்கியமான கருத்துக்களை தாரணை செய்தால் அதிக சேவை செய்ய முடியும். தந்தையை அறிந்திருக்கின்றீர்களெனில் மற்றவர்களுக்கும் அறிமுகத்தைக் கொடுங்கள். யாருக்கும் அறிமுகத்தைக் கொடுக்கவில்லையெனில் ஞானம் இல்லை என்று பொருள். புரிய வைக்கப்படுகிறது தான், ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை! கல்யாணகாரி தந்தையின் குழந்தைகள் எனில் கல்யாண் (மங்களம்) செய்ய வேண்டும். இல்லையெனில், பேச்சளவில் இந்தக் குழந்தை நான் சிவபாபாவின் குழந்தை என்று கூறுவதாக தந்தை நினைப்பார். நன்மை, மங்களம் செய்வதே இல்லை. ஏழையோ, பணக்காரனோ அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஆனால் ஏழைகளே முதலில் எடுத்துக் கொள்வர். ஏனெனில் அவர்களுக்கு நேரம் கிடைக்கின்றது. நாடகத்தில் இவ்வாறு தான் பதிவாகியிருக்கின்றது. ஒரு செல்வந்தன் இப்பொழுது வந்து விட்டால் அவருக்குப் பின்னால் பலர் வந்து விடுவார்கள். இப்பொழுது மகிமை வெளிப்பட்டால் அநேகர் வந்து விடுவார்கள்.

 உங்களுடையது ஈஸ்வரிய பதவியாகும். நீங்கள் தனக்கும் மற்றும் மற்றவர்களுக்கும் நன்மை செய்கின்றீர்கள். யார் தனக்கு நன்மை செய்யவில்லையோ அவர்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாது. தந்தை கல்யாணகாரியாக இருக்கின்றார், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளலாக இருக்கின்றார். நீங்களும் உதவி யாளர்கள் அல்லவா! அது பக்திமார்க்கத்தின் திசை என்பது உங்களுக்குத் தெரியும். சத்கதி மார்க்கத்தின் திசை ஒன்றே ஒன்று தான். யார் நன்றாக படித்து மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றார்களோ அவர்களுக்கு குரு திசையாகும். அவர்களை மகாரதி என்று கூறலாம். நான் மகாரதியாக இருக்கின்றேனா? என்று தனது உள்ளத்திடம் கேளுங்கள். இன்னாரைப் போன்று சேவை செய்கின்றேனா? காலாட் படையில் உள்ளவர்கள் ஒருபொழுதும் மற்றவர்களுக்கு ஞானம் கூற முடியாது. மற்றவர்களுக்கு நன்மை செய்யவில்லையெனில் தன்னை கல்யாணகாரி தந்தையின் குழந்தை என்று ஏன் கூறிக் கொள்கின்றீர்கள்? தந்தை முயற்சி செய்ய வைக்கின்றார். இந்த யக்ஞ சேவையில் எலும்புகளையும் கொடுக்க வேண்டும். மற்றபடி சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது இது சேவையா என்ன? இப்படிப்பட்டவர்கள் சென்று பிரஜைகளுக்கு தாச தாசிகளாக ஆவார்கள். முயற்சி செய்து நரனிலிருந்து நாராயணனாக ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நல்ல குழந்தைகளைப் பார்த்து தந்தையும் குஷியடைவார். தன் குழந்தை நல்ல பதவியடைவார் என்று லௌகீக தந்தை அறிகின்ற பொழுது அவரும் குஷியடைவார். பரலௌகீக தந்தையும் இவ்வாறு கூறுகின்றார். எல்லையற்ற தந்தையும் கூறுகின்றார் - நான் உங்களை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன். இப்பொழுது நீங்கள் மற்றவர்களையும் ஆக்குங்கள். மற்றபடி வயிற்றுக்கு மட்டும் பூஜை செய்வதனால் என்ன பலன்? சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்ற ஒரு விசயத்தை மட்டுமே அனைவருக்கும் கூறுங்கள். உணவு சாப்பிடும் பொழுதும் ஒருவருக்கொருவர் தந்தையின் நினைவை ஏற்படுத்தும் பொழுது, இவருக்கு சிவபாபாவின் மீது அதிக அன்பு இருக்கின்றது என்று அனைவரும் கூறுவர். இது சகஜமல்லவா! இதில் என்ன நஷ்டம் இருக்கின்றது? பழக்கம் ஆகி விட்டால் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பீர்கள் மற்றும் பாபாவை நினைவு செய்து கொண்டும் இருப்பீர்கள். தெய்வீக குணங்களும் கண்டிப்பாக தாரணை செய்ய வேண்டும். ஹே, பதீத பாவனனே வாருங்கள் என்று அனைவரும் இப்பொழுது அழைத்துக் கொண்டு இருக்கின்றனரெனில் கண்டிப்பாக பதீதமாக இருக்கின்றனர். சங்கராச்சாரியரும் சிவனை நினைவு செய்கின்றார். ஏனெனில் அவரே பதீத பாவனனாக இருக்கின்றார். அரைகல்பத்திற்கு பக்தி செய்கின்றீர்கள், பிறகு பகவான் வருகின்றார். யாருக்கும் கணக்கு தெரியாது. தந்தை புரிய வைக்கின்றார் - யக்ஞம், தவம், தானம் மூலமாக நான் கிடைப்பதில்லை. இதில் கீதையும் வந்து விடுகின்றது. இந்த சாஸ்திரங்கள் படிப்பதன் மூலம் யாருக்கும் சத்கதி ஏற்படுவதில்லை. கீதை, வேதம், உபநிடதங்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும். தந்தை குழந்தைகளுக்கு எளிய இராஜயோகம் மற்றும் ஞானத்தைக் கற்பிக்கின்றார். இதன் மூலம் இராஜ்யத்தைப் பிராப்தியாக ஆக்குகின்றார். இதன் பெயரே இராஜயோகம் ஆகும். இதில் புத்தகத்திற்கான எந்த விசயமும் கிடையாது. பதவியை அடையச் செய்வதற்காக படிப்பை ஆசிரியர் படிப்பை கற்பிக்கின்றார். ஆக பின்பற்ற வேண்டுமல்லவா! சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று அனைவருக்கும் கூறுங்கள். அவர் நம் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கின்றார். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் விகர்மம் விநாசம் ஆகும். ஒருவருக்கொருவர் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டு, முன்னேற்றம் அடைய வேண்டும். எந்த அளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ அந்த அளவிற்கு தனக்குத் தான் நன்மை ஏற்படுகின்றது. நினைவு யாத்திரையின் மூலம் முழு உலகையும் தூய்மையாக ஆக்குவோம். நினைவிலிருந்து உணவு சமைத்தால் அதிலும் சக்தி வந்து விடும். ஆகையால் தான் உங்களது பிரம்மா போஜனத்திற்கு அதிக மகிமை இருக்கின்றது. அந்த பக்தர்கள் பிரசாதம் படைக்கின்ற பொழுதும் இராம், இராம் என்று கூறிக் கொண்டே இருப்பர். இராமரின் பெயரில் தானம் செய்கின்றனர். உங்களுக்கு அடிக்கடி புத்தியில் பாபாவின் நினைவு இருக்க வேண்டும். முழுநாளும் புத்தியில் ஞானம் இருக்க வேண்டும். தந்தை யிடத்தில் முழு படைப்பின் முதல், இடை, கடை ஞானம் இருக்கின்றதல்லவா! உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், நீங்கள் அவரை நினைவு செய்தால் உயர்ந்த பதவியை பலனாக அடைவீர்கள். பிறகு மற்றவர்களை ஏன் நினைவு செய்ய வேண்டும்? தந்தை கூறுகின்றார் - என்னை நினைவு செய்யுங்கள் எனில் பிற அனைத்தையும் விட வேண்டியிருக்கின்றது. இது தான் கலப்படமில்லாத நினைவு ஆகும். நினைவு வரவில்லையெனில் முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். தனது முன்னேற்றத்திற்காக, உயர்ந்த பதவியடைவதற்காக கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும். நம்மையும் ஆசிரியராக ஆக்கக் கூடிய சிவபாபா நமக்கு ஆசிரியராக இருக்கின்றார். நீங்கள் அனைவரும் வழிகாட்டிகள் அல்லவா! வழிகாட்டிகளின் வேலையே வழி காட்டுவதாகும். இந்த அளவிற்கு முழு ஞானம் முன்பு உங்களிடத்தில் இல்லாமல் இருந்தது. ஒரு பைசாவிற்கும் உதவாத படிப்பு என்று முன்பு கூறினர், அவ்வாறு கண்டிப்பாக ஏற்படும். நாடகப்படி முந்தைய கல்பத்தைப் போன்று படித்துக் கொண்டே இருக்கின்றனர். கல்பத்திற்குப் பிறகும் இவ்வாறே படிப்பார்கள். கடைசியில் உங்களுக்கு அனைத்தும் சாட்சாத்காரம் ஏற்படும். சாட்சாத்கார் (தெய்வீக காட்சி) ஏற்படுவதற்கு கால தாமதம் ஏற்படாது. பாபாவிற்கு சீக்கிரம் சீக்கிரமாக சாட்சாத்கார் ஏற்பட்டது. இன்னார் ராஜாவாக ஆவார்கள், இப்படிப்பட்ட ஆடைகள் இருக்கும். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு அதிகமான சாட்சாத்கார் ஏற்பட்டது. பிறகு கடைசியில் அதிகம் ஏற்படும், பிறகு நினைவு செய்வீர்கள். நல்லது.

 இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 தாரணைக்கான முக்கிய சாரம்:

1) உணவு சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் தந்தையின் நினைவை ஏற்படுத்துங்கள். ஒரு சிவபாபாவின் மீது மட்டுமே உண்மையான அன்பு வையுங்கள்.

 2) யக்ஞ சேவையில் எலும்புகள் தேய சேவை செய்ய வேண்டும். தந்தைக்கு முழு உதவியாளர்களாக ஆக வேண்டும்.

 வரதானம்:

நிச்சயபுத்தி உடையவராகி பலவீனமான சங்கல்பங்களின் வலையை சமாப்தி செய்யக்கூடிய வெற்றி நிறைந்தவர் ஆகுக.

 இப்பொழுது வரை பெரும்பான்மையான குழந்தைகள் பலவீனமான சங்கல்பங்களைத் தான் கொண்டு வருகின்றனர் - இது நடக்குமா அல்லது நடக்காதா என்பது தெரியவில்லை, என்ன ஆகும்? என்று யோசிக்கின்றனர். இந்த பலவீனமான எண்ணமே சுவர் போன்று ஆகிவிடுகிறது, மேலும், வெற்றி அந்த சுவருக்குள்ளே மறைந்துவிடுகிறது. மாயை பலவீனமான எண்ணங்களின் வலையை விரித்துவிடுகிறது, அதே வலையில் மாட்டிக்கொள்கின்றனர். ஆகையினால், நான் நிச்சயபுத்தி உடைய வெற்றியாளர் ஆவேன், வெற்றி எனது பிறப்புரிமை ஆகும் என்ற இந்த நினைவின் மூலம் பலவீனமான எண்ணங்களை சமாப்தி செய்யுங்கள்.

 சுலோகன்:

மூன்றாவது, ஜ்வாலாமுகி (எரிமலை) கண் திறந்திருந்தது என்றால் மாயை சக்தியற்றதாக ஆகிவிடும்.

 

அனைத்து கோப கோபியருக்காக மாதேஷ்வரி அவர்களின் திருக்கரங்களால் எழுதப்பட்ட நினைவுக் கடிதம் (1961)

அனைத்து கோப கோபியருக்கும் மிகுந்த அன்பு நினைவுகள் உரித்தாகுக!

 

நீங்கள் அனைவரும் இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலருக்கு சமமாக தனது வாழ்வில் வெற்றியை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா! செல்லமான கோபர்களோ இப்பொழுது சேவையை நல்ல முறையில் வளர்ச்சி அடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள், மிகவும் நல்லது. இறுதியில் நம்முடைய பரம பூஜைக்குரிய தந்தையின் அறிமுகம் அனைவருக்கும் கிடைத்துத் தான் ஆக வேண்டும். இந்த உயர்ந்த பிராப்தியை கோடியில் ஒருவரே அடைய முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால், அத்தகைய மலர் அவசியம் உருவாகுவார் அல்லவா! நல்லது, தீவிர வேகத்துடன் சேவையை அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். அழிவற்ற ஞான செல்வம் என்ற பொக்கிஷமோ மிகவும் சிறந்தது, குறையாதது, இது தந்தை மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஒருவர் இதை அடைந்துவிட்டார் எனில் ஜென்ம ஜென்மத்திற்காக செல்வந்தர் ஆகிவிடுவார், இது அத்தகைய பொருள் ஆகும். சொல்லுங்கள் செல்லமான கோப கோபியர்களே, இது சரியான விசயம் தானே!

 

கோப கோபியராகிய நீங்கள் அனைவரும் அதீந்திரிய சுகமயமான வாழ்க்கையின் அனுபவத்துடன், வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே செல்லுங்கள். பாருங்கள் செல்லமான கோப கோபியரே, இப்பொழுது பிராமண குலத்தின் வளர்ச்சியில் தான் அனைவருடைய நன்மை உள்ளது. பிறகோ, பிராமணரிலிருந்து அவசியம் தேவதை ஆகிவிடு வோம். எவ்வாறு சிலர் தன்னுடைய இல்லற வாழ்வில் இருந்து கொண்டே பிராமண குல வம்சத்தினர் ஆகி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அதாவது இல்லற வாழ்வில் இருந்து கொண்டே தூய்மையாக இருக்கிறீர்கள் மற்றும் பதி, பத்தினி ஒரு தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள், அத்தகைய தூய்மையான தாரணையில் இருக்கிறீர்கள். மற்றபடி அனைவரும் அந்த பரமபிதா தந்தையினுடைய வழிகாட்டுதன்படி தான் நடக்க வேண்டும், இதையே ஸ்ரீமத்படி நடப்பது என்று சொல்லப்படுகிறது. இத்தகைய தாரணை செய்யக்கூடியவர்களையே பிராமண குல வம்சத்தினர் என்று கூறப்படுகிறது. எப்பொழுது அதே தந்தை, ஆசிரியர், சத்குரு ஆகியிருக்கின்றார், தர்மராஜராகவும் இருக்கின்றார் எனில், ஏன் அவருடைய மடியின் குழந்தையாகி (தத்தெடுக்கப்பட்ட குழந்தையாகி) தன்னுடைய முழுமையான அதிகாரத்தைப் பெறக்கூடாது! அவரிடமிருந்து தான் எதிர்காலத்தில் சுகம், சாந்தியின் முழுமையான அதிகாரம் பிராப்தியாகக் கிடைக்கிறது.

 

சொல்லுங்கள் செல்லமான கோப கோபியரே, அத்தகைய எளிதான இரகசியத்தைப் புரிந்து கொண்டுவிட்டீர்கள் அல்லவா! வாழ்ந்து கொண்டே இறந்து போவது அதாவது மர்ஜீவா எடுப்பதற்கு பயப்படவில்லை அல்லவா! இன்று இந்தக் கடிதத்தை ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்கு வந்திருப்பதாகப் புரிந்துகொள்ளுங்கள் மற்றும் தன்னுடைய கடிதம் எனப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். மேலும், தாயின் (மம்மா) அன்பு கூட ஒவ்வொருவரும் தனக்கு கிடைத்திருப்பதாகப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கோப கோபியர் மீதும் பெயர் சகிதம் தாயின் எல்லை கடந்த அன்பு உள்ளது. நல்லது, தனது சௌபாக்கியத்தை உயர்ந்ததாக்குவதற்கான முயற்சியில் தீவிர வேகத்துடன் ஈடுபட்டு இருப்பது தான் கல்யாணகாரி ஆவதாகும். சுயம் பரமபிதா உயர்ந்த ஆஸ்தியை கொடுப்பதற்காக வந்திருக்கின்றார் என்பது எப்பொழுது தெரிந்துவிட்டதோ பிறகு, அதைப் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நல்லது, விடைபெற்றுக் கொள்கின்றேன். ஓம்சாந்தி.

 

பிரம்மா பாபாவிற்கு சமமாக ஆகுவதற்காக விசேஷ முயற்சி

எவ்வாறு தந்தை பிரம்மா அனேக எனது, எனது என்பதை ஒரு எனது என்பதில் அடக்கிவிட்டார். எனக்கு ஒரு பாபாவைத் தவிர வேறு எவரும் இல்லை. இவ்வாறு தந்தையைப் பின்பற்றுங்கள். இதன் மூலம் மனஒருமுகப்படும் (ஏகாக்ரதா) சக்தி அதிகரிக்கும். பிறகு, எங்கு விரும்புகிறீர்களோ, எவ்வாறு விரும்புகிறீர்களோ, எவ்வளவு நேரம் விரும்புகிறீர்களோ, அவ்வளவு, அவ்வாறே மனம் ஒருமுகப்பட்டுவிடும். இந்த ஒருமுகப்படும் சக்தி மூலம் தானாகவே ஏக்ரஸ் ஃபரிஷ்தா சொரூபத்தின் அனுபவம் கிடைக்கும்.

ஓம்சாந்தி