12.01.2021    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! படிப்பு மற்றும் தெய்வீக குணங்களின் ரிஜிஸ்டர் வையுங்கள். தினந்தோறும் என் மூலமாக எந்த தவறும் நடக்க வில்லையா? என்று சோதியுங்கள்.

 

கேள்வி :

குழந்தைகளாகிய நீங்கள் இராஜ்ய திலகத்தை அடைய என்ன முயற்சி செய்ய வேண்டும்?

 

பதில் :

1. சதா கட்டளைக்கு கீழ் படிந்தவராக இருக்க முயற்சி செய்யுங்கள். சங்கமத்தில் கட்டளைக்கு கீழ் படிந்தவர் என்ற திலகத்தை வைத்தால் இராஜ்ய திலகம் கிடைத்து விடும். கட்டளைக்கு கீழ் படியாதவர் என்றால் அதாவது கட்டளையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், மதிக்காதவர்கள் இராஜ்ய திலகத்தை அடைய முடியாது.

 

2. எந்த ஒரு நோயையும் சர்ஜனிடம் (மருத்துவரிடம்) மறைக்காதீர்கள். மறைத்தீர்கள் என்றால் பதவி குறைந்து போகும். பாபாவை போன்று அன்புக் கடலாக ஆனால் இராஜ்ய திலகம் கிடைத்து விடும்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு படிப்பு என்றால் ஞானம் அறிவு என்று புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த படிப்பு மிகவும் எளிதானது. மற்றும் மிகவும் உயர்ந்தது. மற்றும் உயர்ந்த பதவியை அளிக்கக் கூடியது என்று குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். இந்த படிப்பை நாம் உலகத்திற்கு அதிபதியாவதற்காக படித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் அறிகிறீர்கள். எனவே, படிப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். எவ்வளவு உயர்ந்த படிப்பாகும். இது அதே கீதையின் பிரதியாகும். தற்சமயம் சங்கமயுகமாகவும் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது விழித்தெழுந்திருக்கிறீர்கள். மற்ற அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். மாயையின் தூக்கத்தில் தூங்குகின்றனர் என பாடப்பட்டிருக்கிறது. உங்களை பாபா வந்து எழுப்பி இருக்கிறார். இனிமையான குழந்தைகளே நினைவு யாத்திரையின் பலத்தால் நீங்கள் முழு உலகத்தையும் முந்தையை கல்பத்தில் செய்தது போன்றே இராஜ்யம் செய்வீர்கள் என்ற ஒரு விசயத்தை மட்டும் புரிய வைக்கிறார். இதை பாபா நினைவு படுத்துகிறார். கல்ப கல்பமாக நாம் யோக பலத்தால் உலகத்திற்கு அதிபதியாகின்றோம். மேலும் தெய்வீக குணங்களை தாரணை செய்கிறோம் என்ற நினைவு வந்துவிட்டது என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறார்கள். யோகத்தின் மீதும் முழு கவனம் கொடுக்க வேண்டும். யோக பலத்தினால் குழந்தைகளாகிய உங்களுக்குள் தானாகவே தெய்வீக குணங்கள் வருகின்றது. நிச்சயமாக இந்த பரீட்சை மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காக ஆகும். நீங்கள் இங்கே யோக பலத்தினால் மனிதனிலிருந்து தேவதையாவதற்காக வந்துள்ளீர்கள். நம்முடைய யோக பலத்தினால் முழு உலகமும் தூய்மையாக வேண்டும் என அறிகிறீர்கள். தூய்மையாக இருந்தது, இப்போது அசுத்தமாகி விட்டது. முழு சக்கரத்தின் இரகசியத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொண்டீர் கள். மேலும் மனதிலும் இருக்கிறது. யாராவது புதியதாக இருந்தால் இந்த விஷயங்ககளை புரிந்துக் கொள்வது மிகவும் எளிதாகும். தேவதைகளாகிய நீங்கள் பூஜைக்குரியவராக இருந்தீர்கள். பிறகு பூஜாரியாக, தமோபிரதானம் ஆகிவிட்டீர்கள். வேறு யாரும் இவ்வாறு கூற முடியாது. பாபா தெளிவாகக் கூறுகின்றார். அது பக்தி மார்க்கம் ஆகும். இது ஞான மார்க்கம் ஆகும். பக்தி முடிந்து விட்டது. முடிந்த விசயத்தை சிந்திக்காதீர்கள். அது விழக் (கீழே இறங்கக்) கூடிய விஷயம் ஆகும். இப்போது பாபா ஏறக் கூடிய விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கின்றார். நாம் கண்டிப்பாக தெய்வீக குணங்களைக் கடைபிடிக்க வேண்டும் என குழந்தைகள் அறிகிறார்கள். நாம் எவ்வளவு நேரம் நினைவில் இருந்தோம், நம் மூலமாக என்ன தவறுகள் நடந்தது என்று தினந்தோறும் சார்ட் எழுத வேண்டும். தவறுகளின் சுமை இருப்பின் அடி விழும். அந்த படிப்பில் கூட நடத்தை மற்றும் குணங்களைப் பார்க்கப்படுகிறது. இதிலும் கூட நடத்தை மற்றும் குணங்களைப் பார்க்கப்படுகிறது. பாபா உங்களுடைய நன்மைக்காகத் தான் கூறுகின்றார். அதிலும் படிப்பு மற்றும் குணங்களைப் பற்றி ரெஜிஸ்டர் வைக்கிறார்கள். இங்கே குழந்தைகளும் தெய்வீக நடத்தை உடையவராக மாற வேண்டும். தவறுகள் நடக்கக் கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும். என் மூலமாக எந்த தவறும் நடக்க வில்லையா? இதற்காகத் தான் நீதிமன்றம் (கச்சேரி) கூட வைக்கிறார். வேறு எந்த பள்ளிகளிலும் நீதிமன்றம் கிடையாது. தன் மனதையே கேளுங்கள். மாயையின் காரணமாக ஏதாவது தவறுகள் நடந்துக் கொண்டிருக்கிறதா? ஆரம்பத்தில் நீதி மன்றம் போன்றவைகள் இல்லை. குழந்தைகள் உண்மையை தெரிவித்தனர். ஒரு வேளை உண்மையை கூறவில்லை என்றால் அந்த தவறு அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று பாபா புரிய வைக்கின்றார். தலைகீழான மற்றும் தவற்றிற்கான தண்டனை கிடைத்து விடுகிறது. தவறை தெரிவிக்காததால் கட்டளைக்கு கீழ் படியாதவர் என்ற திலகம் வைக்கப்படுகிறது. பிறகு இராஜ்ய திலகம் கிடைக்காது. கட்டளையை மதிக்கவில்லை, கட்டளைக்கு கீழ் படியாதவராக இருக்கிறார் என்றால் இராஜ்யத்தை பெற முடியாது. சர்ஜன் பல்வேறு விதமாக புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். சர்ஜனிடம் ஒரு வேளை நோயை (தவறுகளை) மறைத்தால் பதவியும் குறைந்து போகும். சர்ஜனுக்கு தெரிவிப்பதால் அடி (தண்டனை) எதுவும் கிடைப்பதில்லை அல்லவா. பாபா எச்சரிக்கை என்று மட்டும் கூறுவார். பிறகு ஒரு வேளை இவ்வாறு தவறு செய்தீர்கள் என்றால் நஷ்டத்தை அடைவீர்கள். பதவி மிகவும் குறைந்து போகும். அங்கேயோ இயற்கையாகவே தெய்வீக நடத்தை இருக்கும். இங்கே முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி தோல்வி அடையக் கூடாது. குழந்தைகளே அதிகமாக தவறு செய்யாதீர்கள் என்று பாபா கூறுகிறார். பாபா மிகவும் அன்பின் கடலாக இருக்கிறார். குழந்தைகளும் மாற வேண்டும். பாபாவைப் போன்றே குழந்தைகளும் இருக்கிறார்கள். ராஜா ராணி எப்படியோ அப்படியே பிரஜைகள். பாபா ராஜா கிடையாது. பாபா நம்மை தனக்கு சமமாக மாற்றுகிறார் என நீங்கள் அறிகிறீர்கள். பாபாவிற்கு என்னென்ன மகிமை செய்கிறார்களோ அது உங்களுக்கும் இருக்க வேண்டும். பாபாவிற்கு சமமாக மாற வேண்டும். மாயா மிகவும் வலிமையானது. உங்களை ரெஜிஸ்டர் வைப்பதற்கு விடுவதில்லை. மாயாவின் வலையில் அனைவரும் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாயாவின் சிறையிலிருந்து நீங்கள் வெளிவர முடிவதில்லை. உண்மையை கூறுவதில்லை. துல்லியமாக நினைவின் சார்ட் வையுங்கள் என்று பாபா கூறுகின்றார். காலையில் எழுந்து தந்தையை நினையுங்கள். பாபாவின் மகிமை செய்யுங்கள். பாபா தாங்கள் எங்களை உலகத்திற்கு அதிபதியாக மாற்றுகிறீர்கள் என்றால் நாங்கள் உங்களுடைய மகிமையை செய்வோம். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு மகிமை செய்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. தேவதைகளின் மகிமை கூட கிடையாது. மகிமை பிராமணர்களாகிய உங்களுடையதாகும். அனைவருக்கும் சத்கதியை கொடுக்கக் கூடியவர் ஒரேயொரு தந்தையாவார். அவரே படைக்கக் கூடியவர், டைரக்டர் ஆவார். சேவையும் செய்கிறார். மேலும் குழந்தைகளுக்கு புரியவும் வைக்கிறார். நடைமுறையில் (உண்மையை) கூறுகிறார்கள். அவர்கள் பகவான் வாக்கு என்று சாஸ்திரங்களின் வாயிலாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். கீதையை படிப்பதற்காக வருகிறார்கள். பிறகு அதன் மூலமாக என்ன கிடைக்கிறது. எவ்வளவு அன்போடு உட்கார்ந்து படிக்கிறார்கள். பக்தி செய்கிறார்கள். இதனால் என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. நாம் ஏணியில் கீழே தான் இறங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தமோபிரதானமாக மாறத்தான் வேண்டும். நாடகத்தில் இவ்வாறு நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இந்த ஏணிப்படியின் இரகசியத்தை வேறு யாரும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சிவபாபா தான் பிரம்மா மூலமாக புரிய வைக்கிறார். இதையும் இவரிடமிருந்து புரிந்துக் கொண்டு பிறகு உங்களுக்கு புரிய வைக்கின்றார். முக்கியமான பெரிய டீச்சர், பெரிய சர்ஜன் பாபா தான் ஆவார். அவரைத் தான் நினைக்க வேண்டும். பிராமணியை நினையுங்கள் என்று கூறவில்லை. ஒருவரை மட்டும் தான் நினைக்க வேண்டும். ஒருபோதும் யாருடனும் மோகம் வைக்கக் கூடாது. ஒரு தந்தையிடம் இருந்து தான் பாடத்தை கற்க வேண்டும். மோகமற்றவர்களாக மாற வேண்டும். இதில் மிகவும் கடின உழைப்பு வேண்டும். முழு பழைய உலகத்தின் மீதும் வைராக்கியம். இது அழியப் போகிறது. இதன் மீது அன்போ பற்றுதலோ கூடாது. எவ்வளவு பெரிய பெரிய கட்டடங்களை கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பழைய உலகம் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் விழிப்படைந்து மேலும் மற்றவர்களையும் விழிப்படையச் செய்கிறீர்கள். பாபா ஆத்மாக்களைத் தான் எழுப்புகிறார். தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று அடிக்கடி கூறுகிறார். சரீரம் என்று நினைத்தால் தூங்கியது போன்றாகும். தன்னை ஆத்மா என்று உணருங்கள். மேலும் தந்தையை நினையுங்கள். ஆத்மா அழுக்காக இருப்பதால் சரீரமும் அழுக்காக கிடைக்கிறது. ஆத்மா தூய்மையானால் சரீரமும் தூய்மையாக கிடைக்கிறது.

 

நீங்கள் தான் இந்த தேவி தேவதா குலத்தினர் என பாபா புரிய வைக்கிறார். பிறகு நீங்களே மாறுவீர்கள். எவ்வளவு எளிதாக இருக்கிறது. இப்படிப்பட்ட எல்லையற்ற தந்தையை நாம் ஏன் நினைக்கக் கூடாது. காலையில் எழுந்து தந்தையை நினையுங்கள். பாபா நீங்கள் செய்வதோ அதிசயம். நீங்கள் எங்களை எவ்வளவு உயர்ந்த தேவி தேவதைகளாக மாற்றி நிர்வாண தாமத்தில் சென்று விடுகிறீர்கள். இவ்வளவு உயர்ந்தவர்களாக வேறு யாரும் மாற்ற முடியாது. நீங்கள் எவ்வளவு எளிதாகக் கூறுகிறீர்கள். எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ வேலைகளை செய்துக் கொண்டிருந்தாலும் பாபாவை நினைக்க முடியும். நினைவின் மூலமாகத் தான் உங்களுடைய படகு கடந்து போக (கரை சேர) முடியும். அதாவது கலியுகத்திலிருந்து கடந்து சிவாலயத்தில் அழைத்து செல்வார். சிவாலயத்தையும் நினைக்க வேண்டும். சிவபாபா ஸ்தாபனை செய்தது சொர்க்கமாகும். எனவே, இரண்டின் நினைவும் வருகிறது. சிவபாபாவை நினைவு செய்வதால் நாம் சொர்க்கத்திற்கு அதிபதியாகுவோம். இந்த படிப்பே புதிய உலகத்திற்காக ஆகும். பாபாவும் புது உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறார். நிச்சயம் பாபா வந்து ஏதாவது கடமை செய்வார் அல்லவா. நாடகத்தின்படி நான் எனது பாகத்தை நடிக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு 5000 வருடத்திற்கு முன்னதான நினைவு யாத்திரை மற்றும் முதல் இடை, கடை இரகசியத்தை தெரிவிக்கிறேன். ஒவ்வொரு 5000 வருடத்திற்குப் பிறகும் பாபா நம்முன் வருகிறார் என அறிகிறீர்கள். ஆத்மா தான் பேசுகிறது. சரீரம் பேசாது. ஆத்மாவைத் தான் தூய்மையாக்க வேண்டும் என்று பாபா குழந்தைகளுக்கு கற்பிக்கிறார். ஆத்மா ஒரு முறை தான் தூய்மையாக வேண்டும். நான் பல முறை உங்களைப் படிக்க வைத்தேன், மீண்டும் படிக்க வைப்பேன் என்று பாபா கூறுகிறார். இவ்வாறு வேறு எந்த சன்னியாசியும் கூற முடியாது. குழந்தைகளே, சென்ற கல்பத்தில் எப்படி நான் உங்களை படிக்க வைத்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தேன். பல முறை உங்களை படிக்க வைத்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தேன். இப்படி எவ்வளவு அதிசயமான விஷயங்களை பாபா புரிய வைக்கிறார். ஸ்ரீமத் எவ்வளவு உயர்ந்தது. ஸ்ரீமத்தினால் தான் நாம் உலகத்திற்கு அதிபதியாகிறோம். மிக பெரியதிலும் பெரிய பதவியாகும். யாருக்காவது பெரிய லாட்டரி கிடைத்தால் தலை (புத்தி) கெட்டுப் போய்விடுகிறது. சிலர் போக போக நம்பிக்கை அற்றவராகி விடுகிறார்கள். நாங்கள் படிக்க முடியாது. நாங்கள் விஷ்வத்தின் இராஜ்ய பதவியை எப்படி அடைவோம். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் குஷி இருக்க வேண்டும். அதிந்திரீய சுகம் மற்றும் குஷியின் விஷயங்களை என் குழந்தைகளிடம் கேளுங்கள் என பாபா கூறுகிறார். அனைவருக்கும் குஷியின் விஷயங்களை சொல்வதற்காக நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள் தான் உலகத்திற்கு அதிபதியாக இருந்தீர். பிறகு 84 பிறவிகள் அனுபவித்து அடிமையாகி விட்டீர். நான் உங்களுடைய அடிமை, நான் அடிமை என பாடுகிறார்கள். தன்னை கீழானவன் என்று கூறுதல், சிறியவனாகி செல்லுதல் நல்லது என நினைக்கிறார்கள். பாருங்கள் பாபா யார்? அவரை யாரும் அறியவில்லை. அவரை நீங்கள் மட்டும் தான் அறிகிறீர்கள். பாபா எப்படி வந்து அனைவரையும் குழந்தாய், குழந்தாய் என்று கூறி புரிய வைக்கிறார். இது ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பாகும். அவரிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பதவி கிடைக்கிறது. மற்றபடி கங்கையில் நீராடுவதால் சொர்க்கத்தின் இராஜ்ய பதவி எதுவும் கிடைக்காது. கங்கையில் பலமுறை நீராடி இருக்கிறார்கள். இதுவோ கடல் தண்ணீரிலிருந்து வருகிறது. ஆனால் இந்த மழை எப்படி தோன்றுகிறது. இதற்கு இயற்கை என்று கூறுவார்கள். இச்சமயம் பாபா உங்களுக்கு அனைத்தையும் புரிய வைக்கிறார். ஆத்மா தான் தாரணை செய்கிறது. சரீரம் செய்வதில்லை. உண்மையில் பாபா நம்மை எப்படியிருந்து எப்படி மாற்றிவிட்டார் என நீங்கள் உணருகிறீர்கள். குழந்தைகளே தன் மீது இரக்கம் காட்டுங்கள் என்று பாபா கூறுகிறார். எந்த தவறும் செய்யாதீர்கள். தேக உணர்வுடையவர் ஆகாதீர்கள். தேவையின்றி உங்களின் பதவி குறைந்து போகும். ஆசிரியர் புரிய வைப்பார் அல்லவா. பாபா எல்லையற்ற டீச்சர் என உங்களுக்கு தெரியும். உலகில் எத்தனை நிறைய மொழிகள் இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தை அச்சடித்தாலும் அனைத்து மொழிகளிலும் அச்சடிக்க வேண்டும். ஏதாவது புத்தகங்கள் அச்சடித்தால் அனைவருக்கும் பிரதி அனுப்பி விடுங்கள். ஒரு பிரதி நூலகத்திற்கும் அனுப்பி விட வேண்டும். செலவை பற்றி ஒன்றும் இல்லை. பாபாவின் பொக்கிஷம் நிறைய நிரம்பி போகும். பணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள். வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாது. ஒரு வேளை சிறிது வீட்டிற்கு எடுத்து சென்றால் பரமாத்மாவின் யக்ஞத்தில் திருட்டு ஆகிவிடும். என்ன அவமானம், இப்படி கம்சனின் புத்தி இருக்கக் கூடாது. பரமாத்மாவின் யக்ஞத்தில் திருட்டு! அவர்களைப் போன்று மகான் பாவ ஆத்மா வேறு யாரும் இருக்க முடியாது. எவ்வளவு பாவியாகி விடுகிறார்கள். இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று பாபா கூறுகிறார். நீங்கள் இராஜ்யம் செய்வீர்கள். அவர்கள் உங்களுடைய வேலைக்காரன் ஆவார். வேலைக்காரன் இல்லாமல் இராஜ்யம் எப்படி நடக்கும். போன கல்பத்திலும் இவ்வாறு தான் ஸ்தாபனை நடந்தது.

 

தனக்கு நன்மை செய்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் ஸ்ரீமத் படி செல்லுங்கள் என இப்போது பாபா கூறுகிறார். தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். கோபப்படுதல் தெய்வீக குணம் கிடையாது. அது அசுர குணம் ஆகும். யாராவது கோபப்பட்டால் சும்மா இருந்து விட வேண்டும். பதிலளிக்கக் கூடாது. ஒவ்வொருவரின் நடத்தையின் மூலம் புரிந்துக் கொள்ள முடியும். அவகுணம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. யாராவது கோபப்படும் போது அவர்களின் முகம் தாமிரம் போன்று ஆகி சிவந்து விடுகிறது. வாயிலிருந்து குண்டு வெடிக்கிறது. தனக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பதவி குறைந்து போகிறது. புரிந்துக் கொள்ள வேண்டும். ஏதாவது பாவ கர்மம் செய்தால் அதை எழுதி விடுங்கள் என்று பாபா கூறுகிறார். பாபாவிற்கு தெரிவிப்பதால் மன்னிப்பு கிடைக்கும். சுமை இலேசாகி விடும். பிறவி பிறவியாக நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இச்சமயம் நீங்கள் ஏதாவது பாவ கர்மம் செய்தால் 100 மடங்கு தாண்டனை கிடைக்கும். பாபா முன்பு தவறு செய்தால் 100 மடங்கு தண்டனை கிடைத்து விடும். செய்தீர்கள், மேலும் அதை தெரிவிக்கவில்லை என்றால் இன்னும் அது வளர்ச்சி அடையும். தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று பாபா புரிய வைக்கிறார். பாபா குழந்தைகளின் புத்தியை நன்றாக மாற்றுவதற்காக வந்திருக்கிறார். இவர் எப்படிப்பட்ட பதவி அடைவார் என்று அறிவார். அதுவும் 21 பிறவிகளின் விஷயம் ஆகும். யார் சேவை செய்யக் கூடிய குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்களின் சுபாவம் மிகவும் இனிமையாக இருக்க வேண்டும். சிலர் பாபா இந்த தவறு நடந்து விட்டது என்று உடனே பாபாவிற்கு தெரிவிக்கிறார்கள். பாபா மகிழ்ச்சி அடைகிறார். பகவான் மகிழ்ச்சி அடைகிறார் என்றால் வேறு எண்ண வேண்டும். இவர் அப்பா, டீச்சர், குரு மூன்றுமே ஆவார். இல்லை என்றால் மூவருமே கோபம் அடைவார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. ஸ்ரீமத் படி நடந்து தன்னுடைய புத்தியை நல்லதாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த தவறும் செய்யக் கூடாது. கோபத்தில் வந்து வாயிலிருந்து குண்டுகளை வெடிக்கக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும்.

 

2. மனதால் ஒரு பாபாவை மகிமை செய்ய வேண்டும். இந்த பழைய உலகத்தின் மீது பற்றோ அன்போ வைக்கக் கூடாது. எல்லையற்ற வைராக்கியம் உடையவர் மற்றும் பற்றற்றவர் ஆக வேண்டும்.

 

வரதானம்:

தனது அவ்யக்த அமைதியான சொரூபத்தின் மூலமாக வாயு மண்டலத்தை அவ்யக்தமாக ஆக்கக் கூடிய சாட்சாத் மூர்த்தி ஆவீர்களாக.

 

எப்படி சேவைகளுக்கான மற்ற நிகழ்ச்சி நிரல்களை அமைக்கிறீர்களோ, அதே போல காலை முதல் இரவு வரையும் நினைவு யாத்திரையில் எப்படி மற்றும் எப்பொழுது இருப்பீர்கள் என்பதற்கான நிழ்ச்சி நிரலையும் அமையுங்கள். மேலும் இடையிடையே இரண்டு மூன்று நிமிடங்களுக்காக சங்கல்பங்களின் போக்குவரத்தை (டிராஃபிக்) நிறுத்திக் கொண்டு விடுங்கள். யாராவது (வ்யக்த) ஸ்தூல உணர்வில் அதிகமாக தென்பட்டு கொண்டிருந்தால் நீங்கள் அவருக்கு எதுவும் கூறாமலேயே தங்களது அவ்யத்தி சாந்த ரூபத்தை எப்படி தாரணை செய்ய வேண்டும் என்றால் அவர்களும் சமிக்ஞை மூலமாகவே புரிந்து கொண்டு விடவேண்டும். இதனால் வாயுமண்டலம் கூட அவ்யக்தமாக இருக்கும். விந்தையான தன்மை தென்படும் மேலும் நீங்கள் சாட்சாத்காரம் செய்விக்கும் சாட்சாத் மூர்த்தி ஆகி விடுவீர்கள்.

 

ஸ்லோகன்:

முழுமையான சத்தியமே தூய்மைக்கான ஆதாரம் ஆகும்.

 

ஓம்சாந்தி