12.03.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! உள்நோக்குமுகமாகி நினைவின் பயிற்சி செய்யுங்கள், ஆத்ம அபிமானி மற்றும் பரமாத்ம அபிமானியாக எவ்வளவு நேரம் இருக்கின்றோம் என சோதனை செய்யுங்கள்.

 

கேள்வி:

எந்தக் குழந்தைகள் தனிமையில் சென்று ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்கின்றார்களோ, அவர்களது அடையாளம் என்னவாக இருக்கும்?

 

பதில்:

அவர்களது வாயிலிருந்து தவறான வார்த்தைகள் வெளிவராது. 2. தங்களுக்குள் சகோதர-சகோதரன் என்ற அன்பு மிகுந்திருக்கும். 3. எப்போதும் பால் பாயாசம் போன்று இருப்பார்கள். 4. தாரணை மிக நன்றாக இருக்கும். அவர்களால் எந்த பாவ கர்மமும் ஏற்படாது. 5. அவர்களது பார்வை மிக இனிமையானதாக இருக்கும். ஒருபோதும் தேக அபிமானம் வராது. 6. யாருக்குமே துக்கம் கொடுக்கமாட்டார்கள்.

 

ஓம் சாந்தி.

ஆன்மீகக் குழந்தைகளுக்காக, ஆத்மா என்று மட்டும் கூறினால் உடல் நீங்கிவிடுகிறது. எனவே ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார் - தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நமக்கு பாபாவிடமிருந்து இந்த ஞானம் கிடைக்கிறது. குழந்தைகள் ஆத்ம அபிமானியாக இருக்க வேண்டும். பாபா வந்திருப்பதே குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக. சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாக இருக்கிறீர்கள் ஆனால் பரமாத்ம அபிமானியாக இருப்பதில்லை. இங்கு நீங்கள் ஆத்ம அபிமானியாகவும், பரமாத்ம அபிமானியாகவும் ஆகிறீர்கள். அதாவது நாம் பாபாவுடைய வாரிசுகளாகிறோம். இங்கு இருப்பதற்கும் மற்றும் அங்கு இருப்பதற்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. இங்கு படிப்பு இருக்கிறது. அங்கு படிக்க வேண்டிய விஷயமில்லை. இங்கு ஒவ்வொருவரும் தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்கின்றனர். மேலும் பாபா நமக்கு கற்பிக்கிறார் என்ற இந்த நம்பிக்கையில் இருந்து கேட்டீர்களென்றால் தாரணை மிக நன்றாக இருக்கும். ஆத்ம அபிமானி ஆகிவிடுவீர்கள். இந்த மனநிலையில் நிலைத்திருப்பதற்கான குறிக்கோள் மிகப் பெரியது. கேட்கும்போது மிக எளிதாகத் தோன்றுகிறது. நாம் எவ்வாறு தன்னை ஆத்மா மற்றும் பிறரையும் ஆத்மா என புரிந்து பேசுகிறோம் என்ற இந்த அனுபவத்தையே குழந்தைகள் கூற வேண்டும். பாபா கூறுகின்றார். நான் இந்த உடலில் இருக்கின்றேன். ஆனால் என்னுடையது உண்மையான பயிற்சியாகும். நான் குழந்தைகளை ஆத்மா என்று தான் நினைக்கிறேன். ஆத்மாவுக்கு கற்பிக்கின்றேன், பக்திமார்க்கத்தில் கூட ஆத்மா தனது பங்கை நடித்து வந்திருக்கிறது. பங்கை நடித்து, நடித்து தூய்மையற்றதாகிவிட்டது. இப்போது மீண்டும் ஆத்மா தூய்மையாக வேண்டும். அதுவும் எதுவரை பாபாவை பரமாத்மா எனப் புரிந்து நினைவு செய்ய வில்லையோ அதுவரை, எப்படி தூய்மை ஆவோம்? இதற்கு குழந்தைகள் மிகவும் உள்நோக்குமுகமாகி, நினைவின் பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஞானம் எளிது. மற்றபடி இந்த நம்பிக்கை இருக்க வேண்டும் - நாம் ஆத்மா படிக்கின்றோம், பாபா நமக்கு கற்பிக்கிறார், அதனால் தாரணையும் இருக்கும். மேலும் எந்த பாவகர்மமும் நேராது. இந்த சமயம் நம் மூலம் எந்த பாவகர்மமும் நேராது என்பது அல்ல. பாவகர்மத்தை வென்றவராக இறுதியில் தான் ஆவோம். சகோதர-சகோதரன் என்ற பார்வை மிக இனிமை யானதாக உள்ளது. இதில் ஒருபோதும் தேக அபிமானம் வராது. பாபாவின் இந்த ஞானம் மிக ஆழமானது என்று குழந்தைகள் நினைக்கின்றனர். ஒருவேளை உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆக வேண்டுமெனில் இந்த பயிற்சி நல்லமுறையில் செய்ய வேண்டியுள்ளது. இதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது உள்நோக்குமுகமாக ஆவதற்கு தனிமையும் வேண்டும். ஆத்மாவையே பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னையும் ஆத்மா எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியை இங்கு செய்வதனால் பழக்கம் ஏற்பட்டுவிடும். பிறகு தனது சார்ட்டையும் வைக்க வேண்டும் - எதுவரை ஆத்ம அபிமானி ஆகியிருக்கிறோம்? (என்று பதிவிட வேண்டும்) ஆத்மாவிற்குத் தான் நாம் கூறுகின்றோம், அதனிடம் தான் பேசுகின்றோம். இந்த பயிற்சி மிக நன்றாக இருக்க வேண்டும். இந்த விஷயமோ சரிதான் எனக் குழந்தைகள் புரிந்திருப்பீர்கள். தேக அபிமானம் நீங்கிவிட வேண்டும். மேலும் நாம் ஆத்ம அபிமானி ஆகிவிட வேண்டும். முயற்சி செய்து தன்னை ஆத்ம எனப் புரிந்து பாபாவை நினைவு செய்வது - இந்த சார்ட் (Chart) மிக ஆழமானது. பெரிய பெரிய மகாரதிகளும் புரிந்திருப்பார்கள் - பாபா ஒவ்வொரு நாளும் என்ன பாடம் மனன சிந்தனை செய்வதற்காக சொல்லிக் கொடுக்கின்றாரோ, இதுவே மிகப் பெரிய முக்கிய பாயிண்ட்ஸ் (Points) ஆகும். பிறகு ஒருபோதும் வாயிலிருந்து தவறான எந்த வார்த்தையும் வெளிவராது. சகோதர-சகோதரருக்குள் மிகுந்த அன்பு உண்டாகும். நாம் அனைவரும் கடவுளின் வாரிசுகள் ஆவோம். பாபாவின் புகழைத் தெரிந்தே வைத்திருக்கிறீர்கள். கிருஷ்ணரது புகழ் தனி, அவரை அனைத்து குணங்களும் நிரம்பியவர்..... என்று கூறுகிறோம். ஆனால் கிருஷ்ணரிடம் குணம் எங்கிருந்து வந்தது. அவரது புகழ் தனிப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அனைத்து குணங்களும் நிறைந்தவராகியதோ, பாபாவால் தானே! எனவே தன்னை மிகவும் சோதிக்க வேண்டும், ஒவ்வொரு அடியிலும் முழுமையான கணக்கு வழக்கை வைக்க வேண்டும். வியாபாரிகள் முழு நாளின் (வரவு செலவை) இரவில் கவனிக்கின்றனர். உங்களுடையதும் வியாபாரம் தானே! இரவில் சோதனை செய்ய வேண்டும் - நாம் அனைவரையும் சகோதர-சகோதரன் எனப் புரிந்து பேசினோமா? யாருக்கேனும் துக்கம் தரவில்லை தானே? ஏனெனில் நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். சகோதரர்கள் நாமனைவரும் பாற்கடல் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம் என்று. இது விஷக்கடல் ஆகும். இப்போது நீங்கள் இராவண இராஜ்யத்திலும் இல்லை, இராம இராஜ்யத்திலும் இல்லை. நீங்கள் இடையில் இருக்கிறீர்கள். அதனால் தன்னை ஆத்மா எனப் புரிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். எதுவரை நம்முடைய அந்த சகோதர-சகோதரப் பார்வை என்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது? என்று பார்க்க வேண்டும் ஆத்மாக்கள் நாம் அனைவரும் தங்களுக்குள் சகோதர-சகோதரர்களாக இருக்கிறோம், நாம் இந்த சரீரத்தின் மூலம் பங்கை நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மா அழிவற்றது, சரீரம் அழியக் கூடியது, நாம் 84 பிறவிகளின் பங்கை நடித்திருக்கிறோம். இப்போது பாபா வந்திருக்கிறார், நிரந்தரமாக என்னை நினையுங்கள், தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆத்மா எனப் புரிந்து கொள்வதால் சகோதர-சகோதரர் ஆகிவிடுகிறோம். இதை பாபா தான் புரிய வைக்கிறார். பாபாவைத் தவிர வேறு யாருடைய பங்கும் இல்லை, பிரேரணை (தூண்டுதல்) போன்ற விஷயம் இல்லை. எவ்வாறு ஆசிரியர் அமர்ந்து புரிய வைக்கிறாரோ, அவ்வாறு பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இது சிந்தனை செய்யக்கூடிய விஷயம், இதில் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. பாபா தொழில் போன்றவைகளை செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால் நினைவு யாத்திரையும் அவசியம் வேண்டும். அதற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். அனைவரது சேவையும் வேறுபட்டது. சிலர் அதிக நேரம் ஒதுக்க முடியும். ஒருவருக்கொருவர் சகோதர-சகோதரன் எனப் புரிந்து கொண்டு பத்திரிக்கைகளில் கூட யுக்தியுடன் எழுத வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டியிருக்கிறது.

 

பாபா வந்து அனைத்து ஆத்மாக்களுக்கும் கற்பிக்கிறார். ஆத்மாவில் தெய்வீக குணங்களின் சமஸ்காரங்களை இப்போதே நிரப்ப வேண்டும். பாரதத்தின் பழமையான யோகம் எதுவென மனிதர்கள் கேட்கின்றனர். நீங்கள் புரிய வைக்கலாம். ஆனால் நீங்கள் இப்போது மிகக் குறைவானவர்களே இருக்கிறீர்கள், உங்களது பெயர் வெளிவரவில்லை. ஈஸ்வரன் யோகம் (நினைவு யாத்திரை) கற்றுக் கொடுக்கிறார். அவசியம் அவருடைய குழந்தைகளும் இருப்பார்கள். இது யாருக்குமே தெரியவில்லை என்பதையும் தெரிந்திருப்பார்கள். நிராகார தந்தை எப்படி வந்து கற்பிக்கின்றார், அதை அவரே புரிய வைக்கின்றார் - நான் கல்ப-கல்பமாக சங்கமயுகத்தில் வந்து, நானே கூறுகின்றேன் நான் எப்படி வருகின்றேன் என்று, யாருடைய உடலில் வருகிறேன் என்பதில் குழப்பம் அடைவதற்கான விஷயம் இல்லை. இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடகம். ஒருவருக்குள் நான் வருகிறேன். பிரஜாபிதா பிரம்மா மூலம் ஸ்தாபனை. முதன் முதலில் அவர் தான் செல்ல குழந்தை ஆகின்றார். ஆதிசனாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார். பிறகு அவரே முதல் நம்பரில் வருகிறார். பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா எப்படி ஆகின்றார் என்ற இந்த படத்தின் மீது புரிய வைப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இதை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. புரிய வைப்பதற்கு யுக்தி வேண்டும். பாபா எவ்வாறு தேவதை தர்மத்தை ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறார், எவ்வாறு சக்கரம் சுற்றுகிறது, என்பதை இப்பொழுது நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இந்த விஷயங்களை வேறு யாரும் தெரிந்துக் கொள்ள முடியாது. அதனால் அவ்வாறு யுக்தியுடன் எழுதுங்கள் என்று பாபா கூறுகின்றார். சரியான யோகத்தை யார் கற்றுத் தர முடியும் என்பது தெரிந்துவிட்டால், உங்களிடம் நிறைய பேர் வந்துவிடுவார்கள். இத்தனை பெரிய ஆசிரமம் என்னவெல்லாம் இருக்கின்றதோ, அனைவரும் (அலை அலையாக) சந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். இது கடைசியில் நடக்கும், பிறகு அதிசயப்படுவார்கள். உலகிலுள்ள அவ்வளவு அனைத்து சங்கங்களும் பக்தி மார்க்கத்தினுடையது. ஞான மார்க்கத்தினுடையது ஒன்றுமில்லை. அப்பொழுது தான். உங்களுடையது வெற்றியடையும். ஒவ்வொரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பாபா வருகின்றார் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா மூலம் நீங்கள் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள், பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றீர்கள். எப்படியெல்லாம் யாருக்கேனும் எழுத்து மூலம் புரிய வைக்க வேண்டும் என்ற அனைத்தும் கல்ப-கல்பமாக யுக்திகள் வருகின்றன, அது நிறைய பேருக்கு தெரிந்துவிடுகின்றது. பாபாவைத் தவிர ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்ய முடியாது. உங்களுக்குத் தெரியும் - அந்த பக்கம் இராவணன் இந்த பக்கம் இராமர், இராவணன் மீது நீங்கள் வெற்றியடைகிறீர்கள். அவர்கள் அனைவரும் இராவணன் சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஈஸ்வரிய சம்பிரதாயத்தை சேர்ந்த நீங்கள் மிக குறைவானவர்கள். பக்திக்கு எவ்வளவு பகட்டு உள்ளது. எங்கெங்கு தண்ணீர் உள்ளதோ ஆறு குளங்கள் அங்கெங்கெல்லாம் திருவிழா நடக்கிறது. எவ்வளவு செலவு செய்கின்றனர். எவ்வளவு பேர் மூழ்கி இறக்கின்றனர். இங்கேயோ அந்த விஷயம் இல்லை. இருந்தாலும் பாபா கூறுகின்றார் ஆச்சரியப்படும் அளவிற்கு என்னை தெரிந்துக் கொள்கின்றனர், கேட்கின்றனர், சொல்கின்றனர், தூய்மையாக இருக்கின்றனர். இருந்தாலும் ஆஹா! மாயை உன் மூலம் தோல்வியும் அடைகின்றனர். கல்ப-கல்பமாக அவ்வாறு நடக்கிறது. தோல்வி அடைவதும் ஏற்படுகிறது. மாயாவுடன் போர் ஆகும். மாயாவின் பிரபாவம் (தாக்கம்) இருக்கிறது. பக்தியோ அசைந்தே ஆக வேண்டும் அரைக்கல்பம் நீங்கள் பலனை அனுபவிக்கின்றீர்கள். பிறகு இராவண இராஜ்யத்தில் இருந்து பக்தி ஆரம்பமாகின்றது. அதனுடைய அடையாளமும் நிலைத்து இருக்கிறது. விகாரத்தில் சென்று விடுகின்றார்கள் பிறகு தேவதைகளாக இருப்பதில்லை. எவ்வாறு விகாரி ஆகின்றனர் என்பதை உலகில் யாரும் தெரிந்திருக்கவில்லை. வாம மார்க்கத்தில் சென்றுவிட்டனர் என்று சாஸ்திரத்தில் எழுதியிருக்கின்றனர். எப்பொழுது போனார்கள் - இதை புரிந்துக் கொள்ளவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் நல்ல முறையில் புரிந்துக் கொண்டு, புரிய வைக்க வேண்டியதாக இருக்கிறது. எப்பொழுது நம்பிக்கை புத்தி இருக்கிறதோ, அப்பொழுது இதையும் புரிந்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு கவர்ச்சி ஏற்படும், அப்பேற்பட்ட தந்தையிடம் எங்களை சந்திக்க வையுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகு முதலில் இந்த போதை இருக்கிறதா? நம்பிக்கைப் புத்தி இருக்கிறதா? என்று பாருங்கள். நினைவில் மூழ்கியிருக்கலாம். கடிதம் எழுதிக் கொண்டு இருக்கலாம் - நீங்கள் எங்களுடைய உண்மையான தந்தை, உங்களிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது, உங்களை சந்திக்காமல் எங்களால் இருக்க முடியாது. என்றெல்லாம் திருமணம் நிச்சயித்திற்குப் பிறகு சந்திப்பு ஏற்படுகிறது. நிச்சயம் ஆனப் பிறகு துடிக்கின்றனர். நமது எல்லைக்கப்பாற்பட்ட தந்தை, ஆசிரியர், மணவாளன் போன்ற அனைத்துமாக இருக்கின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மற்ற அனைவரிடமிருந்தும் துக்கம் கிடைத்தது. அதற்குப் பதிலாக பாபா சுகம் கொடுக்கின்றார் அங்கும் அனைவரும் சுகம் கொடுக்கின்றனர். இந்த சமயம் நீங்கள் சுகத்தின் சம்மந்தத்தில் பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

 

இது புருஷோத்தமர் ஆவதற்கான புருஷோத்தம யுகமாகும். முக்கிய விஷயம் - தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்வது, தந்தையை அன்புடன் நினைவு செய்வது. நினைவு செய்வதன் மூலம் மகிழ்ச்சியின் அளவு ஏறும். நாம் அனைவரையும் விட அதிக பக்தி செய்திருக்கிறோம். நிறைய ஏமாற்றம் அடைந்து விட்டோம் இப்பொழுது நம்மை திரும்ப அழைத்துச் செல்ல அவசியம் தூய்மை ஆக வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். சார்ட் வைக்க வேண்டும் - முழு நாளில் எத்தனை பேருக்கு தந்தையின் அறிமுகம் கொடுத்தோம்? பாபாவின் அறிமுகம் கொடுக்காமல் சுகம் வருவதில்லை, துடிப்பு ஏற்பட்டு விடுகிறது. யக்ஞத்தில் அதிக தடைகளும் ஏற்படுகின்றன, அடி வாங்குகின்றனர். வேறு எந்த சத்சங்கத்திலும் தூய்மையின் விஷயம் இல்லை. இங்கு நீங்கள் தூய்மை ஆகின்றீர்கள். அதனால் அசுர மக்கள் தடைகளை ஏற்படுத்துகின்றனர். தூய்மையாகி வீட்டிற்குச் செல்ல வேண்டும். சம்ஸ்காரத்தை ஆத்மா எடுத்துச் செல்கிறது. போர்க்களத்தில் இறந்துவிட்டால் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்று கூறுகின்றனர். அதனால் மகிழ்ச்சியோடு போருக்குச் செல்கின்றனர். உங்களிடம் கமாண்டர், மேஜர், சிப்பாய்கள் போன்றோர் எங்கெங்கெல்லாமோ இருந்து வருகின்றனர். சொர்க்கத்திற்கு எவ்வாறு செல்வார்கள்? போர்க்களத்தில் நண்பர், உறவினர்களின் நினைவு வருகிறது. இப்போது அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என பாபா கூறுகிறார். தன்னை ஆத்மா என உணருங்கள், சகோதர-சகோதரன் எனப் புரிந்து கொள்ளுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள். யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி அடைவார்கள். நாம் சகோதர-சகோதரர் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதன் பொருளை தெரிந்து கொள்ளவில்லை. தந்தையையே தெரிந்து கொள்ளவில்லை.

 

நாம் சுயநலமற்ற சேவை செய்கிறோம் என உலகினர் நினைக்கின்றனர். எங்களுக்கு பிரதிபலனுக்கான ஆசையில்லை. ஆனால் பலனோ அவசியம் கிடைக்கிறது. சுயநலமற்ற சேவையோ ஒரு பாபா தான் செய்கிறார். பாபாவை எவ்வளவு நிந்தனை செய்திருக்கிறோம் தேவதைகளுக்கும் கூட நிந்தனை செய்துள்ளோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். இப்போது தேவதைகள் யாருக்கும் ஹிம்சை செய்ய முடியாது. இங்கே நீங்கள் இரட்டை அஹிம்சாவாதிகள் ஆகிறீர்கள். காமத்தில் ஈடுபடுவதில்லை, கோபப்படுவதுமில்லை. கோபமும் பெரிய விகாரம் ஆகும். குழந்தைகள் மீது மிகுந்த கோபம் கொண்டுவிட்டேன் எனக் கூறுகின்றனர். ஒருபோதும் அடிப்பது போன்றவை கூடாது என பாபா புரிய வைக்கிறார். அவரும் சகோதரன், அவருக்குள்ளும் ஆத்மா இருக்கிறது. ஆத்மா சிறியது, பெரியது ஆவதில்லை. இவர் குழந்தை அல்ல, ஆனால் உங்களது சிறிய சகோதரன். ஆத்மா என புரிந்து கொள்ள வேண்டும். சிறிய சகோதரரை அடிக்கக் கூடாது. அதனால் தான் கிருஷ்ணரை உரலில் கட்டியதாகக் காட்டுகின்றனர். உண்மையில் அப்படிப்பட்ட விஷயங்கள் இல்லை. இவை விதவிதமான படிப்பினைகள் ஆகும். மற்றபடி கிருஷ்ணருக்கு வெண்ணெய் பற்றி என்ன கவலை வேண்டியிருக்கிறது! தவறான திருட்டுச் செயலை அவர்கள் புகழவும் செய்கின்றனர்! நீங்கள் சரியாக புகழ் பாடுகிறீர்கள், அவரோ, அனைத்து குணங்களும் நிறைந்தவர், 16 கலைகள் நிறைந்தவர் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் நிந்தனை செய்வது கூட நாடகத்தில் பொருந்தியுள்ளது. இப்போது அனைவரும் தமோபிரதானமாகிவிட்டுள்ளனர். பாபா வந்து சதோபிரதானம் ஆக்குகின்றார். கற்றுத் தருபவர் எல்லையற்ற தந்தை. அவரது வழிப்படி நடக்க வேண்டியுள்ளது. கடினத்திலும், கடினமானது இந்த பாடமாகும். பதவியும் நீங்கள் எவ்வளவு உயர்ந்ததாக அடைகிறீர்கள்! ஒருவேளை எளிதாக இருந்ததென்றால் அனைவரும் இந்த தேர்வில் ஈடுபட்டுவிடுவார்கள். இதில் கடின உழைப்பு இருக்கிறது. தேக அபிமானம் வருவதால் பாவ கர்மமாகிவிடும். எனவே தொட்டாற் சுருங்கியின் எடுத்துக்காட்டு இருக்கிறது. பாபாவை நினைவு செய்வதனால் நீங்கள் நிமிர்ந்து நின்றுவிடுவீர்கள். மறப்பதனால் ஏதேனும் ஒரு தவறு நேர்ந்துவிடும். பதவியும் குறைந்ததாகிவிடுகிறது. படிப்பினையோ அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு கீதை உருவாக்கப்பட்டுள்ளது. கருட புராணத்தில் மனிதர்கள் பயப்படுமளவிற்கு பயங்கரமான விஷயங்களை எழுதியிருக்கின்றனர். இராவண இராஜ்யத்தில் பாவங்களோ ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஏனெனில் இருப்பதே முட்களின் காடாகும். பார்வையையும் மாற்ற வேண்டும் என பாபா கூறுகின்றார். நீண்ட காலமாக விழுந்திருக்கின்றனர், அதனால் உடலின் பக்கம் அன்பு சென்றுவிடுகிறது. அழியக்கூடிய பொருள் மீது அன்பு வைப்பதால் இலாபம் தான் என்ன? அழிவற்றதுடன் அன்பு செலுத்துவதால் அழிவற்றதாகிவிடுகிறது. குழந்தைகளுக்கு இதுவே டைரக்ஷன் - அமர்ந்தாலும், எழுந்தாலும், நடந்தாலும், சுற்றினாலும் தந்தையை நினைவு செய்யுங்கள். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகத் தந்தையுடைய ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. உடல் அழியக் கூடியது, அதன் மீதுள்ள அன்பை விலக்கி அழிவற்ற ஆத்மாவிடம் அன்பு செலுத்த வேண்டும். அழிவற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா சகோதர-சகோதரன், நாம் சகோதரனுடன் பேசுகிறோம் என்று பயிற்சி செய்ய வேண்டும்.

 

2. ஞான மனன சிந்தனை செய்து வாயிலிருந்து ஒருபோதும் தவறான வார்த்தைகள் வந்துவிடாத அளவிற்கு தனது மனநிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு அடியிலும் தனது சார்ட்டை சோதனை செய்ய வேண்டும்.

 

வரதான்:

ஈஸ்வரிய தொடர்பில் இருந்து தவறான தொடர்பின் யுத்தத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சதா உண்மையான தொடர்பில் உடையவர் ஆகுக.

 

எப்படிப்பட்ட மோசமான தொடர்பாக இருந்தாலும் உங்களின் சிரேஷ்டமான தொடர்ப்பு பலமடங்கு சக்திசாலியானது. ஈஸ்வரிய தொடர்புக்கு முன்னால் அந்த தொடர்பு ஓன்றுமே இல்லை. அனைவருமே பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்பொழுது நாமே பலவீனமாக இருக்கிறமோ அப்பொழுது தான் தவறான தொடர்பு யுத்தம் செய்கிறது. எவரொருவர் சதா ஒரு பாபாவின் தொடர்பில் இருக்கிறார்களோ அதாவது சதா உண்மையான தொடர்பில் இருக்கிறார்களோ அவர்கள் மேலும் எந்தவித தொடர்பின் வண்ணத்தால் பாதிக்கப் படமாட்டார்கள். வீனான விசயம், வீணான தொடர்பு அதாவது தவறான தொடர்பு அவர்களை கவர்ச்சிக்க முடியாது.

 

சுலோகன்:

தீயவற்றை கூட நல்லதாக மாற்றம் செய்யக் கூடியவரால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

 

ஓம்சாந்தி