12-03-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையின் கரத்தைப் பிடித்துள்ளீர்கள். உங்கள் குடும்பத்துடன் வாழ்கின்றபோதிலும், தந்தையைத் தொடர்ந்து நினைவு செய்வதன் மூலம், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள்.

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டிய உற்சாகம் என்ன? சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவதற்கான வழிமுறை என்ன?

பதில்:

ஞானக்கடலாகிய தந்தை தினமும் உங்களுக்குத் தட்டுநிறைய ஞான இரத்தினங்களைத் தருகின்றார் என்ற உற்சாகத்தை எப்பொழுதும் கொண்டிருங்கள். நீங்கள் எந்தளவிற்கு யோகத்தில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களுடைய புத்தி தொடர்ந்தும் தூய்மையாகும். இந்த அநாதியான ஞான இரத்தினங்கள் மாத்திரமே உங்களுடன் சேர்ந்து வரும். நீங்கள் சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவதற்கு தாய், தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள். அவருடைய ஸ்ரீமத்திற்கு ஏற்றவாறு முன்னேறிச் செல்லுங்கள். அத்துடன் மற்றவர்களையும் உங்களுக்குச் சமனாக ஆக்குங்கள்.

ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் இந்நேரத்தில் எங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்? நாங்கள் ஆன்மீகத் தந்தையின் பல்கலைக்கழகத்தில் அல்லது பாடசாலையில் அமர்ந்திருக்கின்றோம் என நீங்கள் கூறுகின்றீர்கள். நாங்கள் ஆன்மீகத் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றோம் என்பது எங்கள் புத்தியில் உள்ளது. அந்தத் தந்தை உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியத்தை விளங்கப்படுத்துகின்றார். பாரதத்தின் உயர்ச்சியும், வீழ்ச்சியும் எவ்வாறு இடம்பெறுகின்றது எனவும் அவர் எங்களுக்குக் காட்டுகின்றார். தூய்மையாக இருந்த பாரதம் இப்பொழுது தூய்மையற்றதாகிவிட்டது. பாரதம் முடிசூடப்பட்டிருந்தது. பின்னர் அதனை வெற்றி கொண்டவர் யார்? இராவணன். இராச்சியம் இழக்கப்பட்டது, எனவே அது வீழ்ச்சியாகும், அப்படித்தானே? இங்கே எந்த அரசரும் இல்லை. ஒருவர் இருந்திருந்தால், அவரும் தூய்மையற்றவராகவே இருந்திருப்பார். இந்த பாரதத்தில் மாத்திரமே சூரியவம்ச சக்கரவர்த்திகளும், சக்கரவர்த்தினிகளும் இருந்தார்கள். சூரிய வம்ச சக்கரவர்த்;திகளும், சந்திர வம்ச அரசர்களும் இருந்தார்கள். இப்பொழுது இவ்விடயங்கள் உங்கள் புத்தியில் உள்ளன. இவ்விடயங்கள் பற்றி உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. உங்களுடைய ஆன்மீகத் தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களுடைய ஆன்மீகத் தந்தையின் கரத்தைப் பிடித்துள்ளீர்கள். நீங்கள் குடும்பத்தில் வாழ்கின்றபோதிலும், இப்பொழுது நீங்கள் சங்கம யுகத்தில் நிற்கின்றீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நாங்கள் தூய்மையற்ற உலகிலிருந்து தூய்மையான உலகிற்குச் செல்கின்றோம். கலியுகம் தூய்மையற்ற யுகம், சத்தியயுகம் தூய்மையான யுகமாகும். தூய்மையற்ற மனிதர்கள் தூய மனிதர்களின் விக்கிரகங்களின் முன்னால் சென்று அவர்களுக்கு வணக்கம் செலுத்துகின்றார்கள். அவர்களும் பாரதத்திற்குச் சொந்தமான மனிதர்களாகவே இருந்தார்கள், ஆனால் அவர்கள் திவ்விய குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தார்கள். நாங்களும் இப்பொழுது தந்தையிடமிருந்து அவ்வாறான திவ்விய குணங்களைக் கிரகிக்கின்றோம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் சத்திய யுகத்தில் இந்த முயற்சியைச் செய்யமாட்டோம். அங்கே அதன் பலனை நீங்கள் பெறுவீர்கள். இங்கே நீங்கள் திவ்விய குணங்களைக் கிரகிப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். எந்தளவிற்கு நான் பாபாவை நினைவு செய்து தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்றேன் எனத் தொடர்ந்து உங்களைச் சோதியுங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யும் அளவிற்கேற்ப சதோபிரதான் ஆகுவீர்கள். தந்தை அநாதியாகவே சதோபிரதானானவர். இப்பொழுது இது தூய்மையற்ற உலகமும், தூய்மையற்ற பாரதமுமாகும். தூய உலகில் புதிய பாரதம் இருந்தது. பல்வேறுபட்ட மக்கள் உங்களிடம் கண்காட்சிகளுக்கு வருவார்கள். சிலர் கூறுகின்றார்கள்: எவ்வாறு உணவு அவசியமோ அதேபோன்று இந்த விகாரங்களும் உணவேயாகும், அவையில்லாவிடில் நாங்கள் இறந்துவிடுவோம். எவ்வாறாயினும் அவ்வாறு எதுவுமே இல்லை. சந்நியாசிகள் தூய்மையாகிறார்கள். அவ்வாறாயின், அவர்கள் உண்மையில் இறக்கின்றார்களா? அவ்வாறு பேசுபவர்கள் அஜாமிலைப் போன்ற மாபெரும் பாவிகள் எனப் புரிந்துகொள்ளப்படுகின்றது. ‘நீங்கள் உணவுடன் அதை ஒப்பிடுகின்றீர்கள், உண்மையிலேயே நீங்கள் அது இல்லாவிடில் இறந்துவிடுவீர்களா?’ என இதுபற்றி உங்களிடம் கேட்பவர்களிடம் கூறுங்கள். சுவர்க்கத்திற்கு வர இருப்பவர்கள் சதோபிரதான் ஆகுவார்கள். பின்னர் அவர்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளுக்கூடாக செல்வார்கள். பின்னர் வருகின்ற ஆத்மாக்கள் விகாரமற்ற உலகைக் காணமாட்டார்கள். எனவே, அந்த ஆத்மாக்கள் கூறுவார்கள்: நாங்கள் அது இல்லாமல் வாழமுடியாது. இவ்விடயம் உண்மையானது என்பது சூரிய வம்சத்திற்கு சொந்தமானவர்களின் புத்தியில் உடனடியாகவே பிரவேசிக்கும். உண்மையிலேயே சுவர்க்கத்தில் விகாரத்தின் பெயரோ அல்லது சுவடோ இருக்கமாட்டாது. பலவிதமான மனிதர்கள் பலவிதமான விடயங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள். யார் மலர்கள் ஆகுவார்கள் என நீங்கள் புரிந்துகொள்வீர்கள். சிலர் முட்களாகவே இருப்பார்கள். சுவர்க்கத்தின் பெயர் பூந்தோட்டம் ஆகும். இது முட்காடாகும். பல்வேறு முட்கள் உள்ளன. நாங்கள் இப்பொழுது மலர்கள் ஆகுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில் இலக்ஷ்மியும், நாராயணனும் சதா மலர்ந்திருக்கும் ரோஜாக்களாவர். அவர்கள் ராஜ மலர்கள் என அழைக்கப்படுகின்றனர். அது திவ்விய மலர்களின் இராச்சியம் ஆகும். உண்மையில் அவர்களும் முயற்சி செய்திருக்கவே வேண்டும். அவர்கள் கல்வியினூடாகவே அவ்வாறு ஆகினார்கள். நாங்கள் இப்பொழுது இறை குடும்பத்துக்குரியவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்னர் எங்களுக்குக் கடவுளைத் தெரியாது. தந்தை வந்து இந்தக் குடும்பத்தை உருவாக்கினார்;. ஒரு தந்தை முதலில் ஒரு மனைவியைத் தத்தெடுக்கின்றார், பின்னர் அவருடன் குழந்தைகளை உருவாக்குகின்றார். பாபாவும்கூட இவரைத் தத்தெடுத்து, இவர் மூலம் குந்தைகளாகிய உங்களை உருவாக்குகின்றார். நீங்கள் அனைவரும் பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். இந்த உறவுமுறை தூய இல்லறப்பாதை ஆகின்றது. சந்நியாசிகளின் பாதை தனிப்பட்ட பாதையாகும். அங்கே எவரும், எவரையும் மம்மா அல்லது பாபா என்று அழைப்பதில்லை. இங்கே நீங்கள் மம்மா, பாபா என்று கூறுகின்றீர்கள். மற்றைய சத்சங்கங்கள் யாவும் சந்நியாசப் பாதைக்குச் சொந்தமானவையாகும். இந்த ஒரேயொரு தந்தையையே நீங்கள் தாயும் தந்தையும் என அழைக்கின்றீர்கள். தந்தை இங்கேயிருந்து விளங்கப்படுத்துகின்றார்: பாரதத்தில் தூய இல்லறப்பாதை இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்றதாகிவிட்டது. மீண்டும் ஒருமுறை நான் அதே தூய இல்லறப் பாதையை ஸ்தாபிக்கின்றேன். உங்களுடைய தர்மமே பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது என உங்களுக்குத் தெரியும். எனவே ஏனைய பழைய சமயத்தவர்களின் சகவாசத்தை நீங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும்? நீங்கள் சுவர்க்கத்தில் பெருமளவு சந்தோஷத்துடன் வாழ்வீர்கள். அங்கே வைரங்களாலும் பெறுமதிவாய்ந்த இரத்தினங்களினாலும்; ஆன மாளிகைகள் இருக்கும். இங்கே அமெரிக்கா, ரஷ்யா போன்ற இடங்களில் அவர்கள் எவ்வளவுதான் செல்வந்தவர்களாக இருந்தாலும் சுவர்க்கத்தின் சந்தோஷம் இருக்கமுடியாது. தங்கக் கட்டிகளைக் கொண்டு எவருமே மாளிகைகளைக் கட்டமுடியாது. தங்க மாளிகைகள் சத்திய யுகத்தில் மாத்திரமே இருக்கும். இங்கே தங்கம் எங்கே உள்ளது? அங்கே, வைரங்களும், பெறுமதியான இரத்தினங்களும் எல்லா இடங்களிலும் பதிக்கப்படும். இங்கே வைரங்களும் மிகவும் விலையுயர்ந்தவையாக ஆகிவிட்டன. இவை யாவும் தூசாகப்போகின்றன. புதிய உலகில் அனைத்துப் புதிய சுரங்கங்களும் மீண்டும் நிறைந்திருக்கும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். இப்பொழுது அவை அனைத்தும் தொடர்ந்து வெறுமையாக்கப்படுகின்றன. கடல் தட்டு நிறைய வைரங்களையும் பெறுமதி வாய்ந்த இரத்தினங்களையும் பரிசாகக் கொடுத்தாக அவர்கள் காட்டியுள்ளார்கள். அங்கே நீங்கள் எல்லையற்ற வைரங்களையும் பெறுமதிவாய்ந்த இரத்தினங்களையும் பெறுவீர்கள். அவர்கள் கடலையும் ஒரு தேவ ரூபமாக கருதுகின்றார்கள். தந்தையே ஞானக்கடல் என நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஒவ்வொருநாளும் ஞானக்கடலான தந்தை தட்டு நிறைந்த ஞான இரத்தினங்களையும், ஞான ஆபரணங்களையும் தருகின்றார் என்ற உற்சாகம் சதா இருக்கவேண்டும். அது தண்ணீராலான கடலாகும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு உங்கள் புத்தியை நிரப்பக்கூடிய ஞான இரத்தினங்களைக் கொடுக்கிறார். எந்தளவிற்கு நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்களின் புத்தி தூய்மையாகும். நீங்கள் இந்த அநாதியான ஞான இரத்தினங்களை மாத்திரமே உங்களுடன் கொண்டுசெல்வீர்கள். தந்தையின் நினைவும் இந்த ஞானமுமே பிரதான விடயங்களாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு பெருமளவு உள்ளார்ந்த உற்சாகம் இருக்கவேண்டும். தந்தை மறைமுகமானவர்; நீங்களும் மறைமுகமான சேனைகளாவீர்கள். அவர்கள் வன்முறையற்ற மறைமுகமான போர்வீரர்கள் என்று கூறுகின்றார்கள். இன்னார் இன்னார் மிகப்பலமான போர்வீரர். எவ்வாறாயினும் பெயர் தெரியாதிருப்பது என்பது சாத்தியமில்லை. அரசாங்கம் ஒவ்வொருவரினதும் முழுப்பெயரையும் முகவரியையும் வைத்திருக்கின்றார்கள். மறைமுகமான போர் வீரர்கள், வன்முறை அற்றவர்கள் என்பது உங்களுடைய பெயர்களேயாகும். முதலாவது வன்முறை காமம் ஆகும். இது ஆரம்பத்திலிருந்து, மத்தியினூடாக இறுதிவரை நிச்சயமாக துன்பத்தையே கொடுக்கிறது. இதனாலேயே அவர்கள் ஓ தூய்மையாக்குபவரே, வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள் எனக் கூறுகின்றார்கள். தூய உலகில் தூய்மையற்ற எவரும் இருக்கமுடியாது. இப்பொழுதே நீங்கள் அவரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்காக கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும் மாயையும் குறைந்தவளல்ல. மாயையின் ஒரு அறையே மிகவும் பலமானது, அவள் உங்களை முழுமையாக சாக்கடைக்குள் வீழ்த்திவிடுவாள். விகாரத்தில் வீழ்ந்தவர்களின் புத்தி முற்றிலும் அழிந்துவிடும். தந்தை உங்களுக்கு பெருமளவு கூறுகின்றார்;;; நீங்கள் எவரும் எந்த சரீரதாரி மீதும் அன்பு வைக்காதீர்கள். தந்தையொருவர் மீதே நீங்கள் உங்களுடைய அன்பை வைத்திருக்கவேண்டும். எந்தவொரு சரீரதாரியையும் அதிகமாக நேசிக்காதீர்கள்; எந்தச் சரீரதாரிகளிலும் அன்பு வைக்காதீர்கள். சரீரமற்ற தந்தைமீதே அன்பு கொண்டிருங்கள். தந்தை தொடர்ந்தும் பெருமளவு விளங்கப்படுத்துகின்றார். இருந்தும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களின் பாக்கியத்தில் அது இல்லாவிடின், அவர்கள் ஒருவரின் சரீரத்தில் சிக்கிவிடுவார்கள். நீங்களும் புள்ளி வடிவானவர்களே எனத் தந்தை பெருமளவு கூறியுள்ளார். ஆத்மாவின் ரூபமும் பரமாத்மாவின் ரூபமும் நிச்சயமாக ஒரே மாதிரியானவை. ஓர் ஆத்மா பெரிதாகவோ, அல்லது சிறிதாகவோ இருக்கமுடியாது. ஆத்மாக்கள் அநாதியானவர்கள். ஒவ்வொருவரின் பாகமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பெருந்தொகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். பின்னர் 900,000 இலிருந்து ஒரு மில்லியன்வரை இருப்பார்கள். சத்தியயுக ஆரம்பத்தில் விருட்சம் மிகவும் சிறியது. முழுமையான அழிவு ஒருபோதும் இடம்பெறமாட்டாது. அனைத்து மனித ஆத்மாக்களும் அசரீரி உலகில் வசிப்பார்கள் என உங்களுக்குத் தெரியும். அவர்களுக்கும் ஒரு விருட்சம் இருக்கின்றது. ஒரு விதை விதைக்கப்பட்டதும் முழு விருட்சமும் அதிலிருந்து வெளியாகும். ஆரம்பத்தில் இரண்டு இலைகள் வெளியாகும். இதுவும்கூட எல்லையற்ற விருட்சமாகும். சக்கரத்தின் படத்தை விளங்கப்படுத்துவது மிக இலகுவானது. இதைக் கடையுங்கள். இப்பொழுது இது கலியுகமாகும். சத்தியயுகத்தில் ஒரு தர்மமே இருந்தது, எனவே அங்கு வெகுசில மனிதர்களே இருப்பார்கள். இப்பொழுது பெருந்தொகையான மனிதர்களும், பல மதங்களும் இருக்கின்றன. முன்னர் இங்கேயிருக்காத மனிதர்கள் யாவரும் எங்கே செல்வார்கள்? அனைத்து ஆத்மாக்களும் பரந்தாமத்திற்குத் திரும்பிச் செல்வார்கள். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியிலுள்ளது. எவ்வாறு தந்தை ஞானக்கடலாக இருக்கின்றாரோ, அவர் உங்களையும் அவ்வாறே ஆக்குகின்றார். நீங்கள் கற்று அந்த அந்தஸ்தை அடைகின்றீர்கள். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். ஆகையினால், அவர் நிச்சயமாக சுவர்க்கம் எனும் ஆஸ்தியை பாரத மக்களுக்குக் கொடுக்கின்றார். அவர் ஏனைய அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச்செல்வார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளேன். நீங்கள் எந்தளவுக்கு முயற்சி செய்கின்றீர்களோ, அதற்கேற்ப அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கேற்ப மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். அனைத்தும் நீங்கள் செய்யும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. மம்மா, பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர விரும்பினால் தாய், தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள். சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவதற்கு, அவர்களது செயற்பாடுகளுக்கேற்ப வாழுங்கள். அத்துடன் மற்றவர்களையும் உங்களுக்குச் சமனாக ஆக்குங்கள். பாபா உங்களுக்குப் பல்வேறு வழிமுறைகளைக் காட்டியுள்ளார். ஒருவருடன் அமர்ந்திருந்து பட்ஜைப் பற்றி மிக நன்றாக விளங்கப்படுத்துங்கள். புண்ணியமான மாதங்களில் (பூஜை, தபஸ்யா, விரதம் போன்றவற்றிற்குரிய மாதங்கள்) படங்களை இலவசமாக வழங்குங்கள் என பாபா கூறுகின்றார். பாபா பரிசு கொடுக்கிறார். குழந்தைகள் தங்களுடைய கைகளில் பணத்தைப் பெறும்போது, பாபாவுக்கு செலவுகள் இருக்கின்றன என நினைப்பார்கள், இல்லையா? எனவே அவர்கள் விரைவாக பாபாவுக்கு அதை அனுப்புவார்கள். இது அதே குடும்பம், இல்லையா? ஒளிபுகவிடும் படங்களுடன் கண்காட்சிகளை உருவாக்கும்போது பலர் அதைக் காண வருவார்கள். அது ஒரு புண்ணியச்செயல் ஆகும். மனிதர்களை முட்களிலிருந்து மலர்களாகவும், பாவ ஆத்மாக்களிலிருந்து புண்ணிய ஆத்மாக்களாகவும் மாற்றுவது என்பது துரித சேவைக்கான பாதை என அழைக்கப்படுகின்றது. ஒரு கண்காட்சியில் ஒரு அறையை நீங்கள் வாடகைக்கு எடுக்கும்போது பலர் வருவார்கள். அதில் செலவு குறைவாகும். நீங்கள் தந்தையிடமிருந்து சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவதற்காக இங்கே வந்துள்ளீர்கள். எனவே அவர்களும் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவதற்காக கண்காட்சிகளுக்கு வருவார்கள். இது ஒரு கடையாகும். தந்தை கூறுகின்றார்: இந்த ஞானத்தின் மூலமே நீங்கள் அதிக சந்தோஷத்தைப் பெறுவீர்கள். எனவே, நன்றாகக் கற்று, முயற்சி செய்து முழுமையாகச் சித்தியடையுங்கள். தந்தை மாத்திரமே இங்கேயிருந்து அவருடைய அறிமுகத்தையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய அறிமுகத்தையும் கொடுக்கின்றார். வேறு எவராலும் அதைக் கொடுக்கமுடியாது. இப்பொழுது நீங்கள் தந்தையின் மூலம் முக்காலங்களையும் அறிந்தவர்கள் ஆகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: எவருக்குமே நான் யார் என்றோ, என்னவாக இருக்கின்றேன் என்றோ சரியாகத் தெரியாது. நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே, உங்களுக்கு சரியாகத் தெரிந்திருந்தால், நீங்கள் என்னை விட்டுச் செல்லமாட்டீர்கள். இது ஒரு கல்வியாகும். கடவுளே இங்கேயிருந்து கற்பிக்கின்றார். அவர் கூறுகிறார்: நான் உங்களுடைய கீழ்ப்படிவான சேவகன். தந்தை, ஆசிரியர் இருவருமே கீழ்ப்படிவான சேவகர்களாவர். நாடகத்தில் எனது பாகம் நிச்சயமாக அப்படியானதே, பின்னர் நான் அனைவரையும் திரும்ப என்னுடன் அழைத்துச்செல்வேன். ஸ்ரீமத்தைப் பின்பற்றி, திறமைச்சித்தியெய்துங்கள். கல்வி மிக இலகுவானது. அனைவரிலும் வயதானவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார். சிவபாபா கூறுகின்றார்: நான் வயதானவரல்லர். ஆத்மா வயதானவர் ஆகுவதில்லை. ஆனால் அவரது புத்தி கல்லாகின்றது. எவ்வாறாயினும் என்னுடையது தெய்வீகமான புத்தியாகும். அதனாலேயே நான் உங்களுடைய புத்தியை தெய்வீகமானதாக்க வருகின்றேன். நான் கல்பம் கல்பமாக வருகிறேன். நான் எண்ணற்ற தடவைகள் உங்களுக்குக் கற்பிக்கிறேன். இருந்தும், நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள். சத்திய யுகத்தில் இந்த ஞானத்திற்கான தேவை இருக்காது. தந்தை மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். பின்னர் அவ்வாறான தந்தையை அவர்கள் விவாகரத்துச் செய்கின்றார்கள். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: மிகப்பெரிய முட்டாள்களைப் பார்க்க விரும்பினால் இங்கே பாருங்கள். அவர்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்ற அவ்வாறான தந்தையை விட்டு நீங்கிவிடுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: என்னுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றினால், அமரத்துவமான பூமியில் உலக சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி ஆகுவீர்கள். இது மரணபூமியாகும். நாங்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்த அதே தேவர்களாக இருந்தோம் என குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நாங்கள் இப்பொழுது என்னவாக ஆகிவிட்டோம்? தூய்மையற்ற பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டோம். நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை அதே இளவரசர்கள் ஆகுகின்றோம். அனைவரது முயற்சியும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. சிலர் வீழ்ந்துவிடுகிறார்கள். சிலர் நம்பிக்கைத்துரோகிகள் ஆகிவிடுகிறார்கள். அவ்வாறான பல நம்பிக்கைத் துரோகிகள் இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களிடம் பேசவும் கூடாது. எவராவது ஞானம் பற்றிய விடயங்கள் அல்லாது வேறு எதைப் பற்றியாவது வினவினால் அவர் அசுரத்தனமானவர் என உங்களால் புரிந்து கொள்ள முடியும். நல்ல சகவாசம் உங்களை அக்கரைக்குக் கொண்டுசெல்லும். ஆனால் தீய சகவாசமோ உங்களை மூழ்கடித்துவிடும். ஞானத்தில் திறமைசாலிகளாக இருப்பவர்களுடனும், பாபாவின் இதயத்தில் இருப்பவர்களுடனுமே சகவாசத்தை வைத்திருங்கள். அவர்கள் ஞானத்தின் இனிமையான விடயங்களை உங்களுக்கு கூறுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சேவைசெய்கின்ற, நம்பிக்கையுள்ள, கீழ்ப்படிவான குழந்தைகளுக்கு தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவிடமிருந்து அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. சரீரமற்ற, தந்தையின் மீது அன்பு கொண்டிருங்கள். எந்தவொரு சரீரதாரியினதும் பெயரிலோ, ரூபத்திலோ சிக்கிக்கொள்ள உங்கள் புத்தியை அனுமதிக்காதீர்கள். மாயையிடமிருந்து அறை வாங்காமலிருப்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.
  2. ஞானம் பற்றிய விடயங்களைத் தவிர, ஏனைய விடயங்களைக் கூறுபவர்களின் சகவாசத்தை வைத்திருக்காதீர்கள். முழுமையாகச் சித்தியடைவதற்கு முயற்சி செய்யுங்கள். முட்களை மலர்களாக்கும் சேவையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:

சகல காரணங்களுக்கும் தீர்வு காணுகின்ற ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாகவிருந்து பயப்படுவதிலிருந்து விடுபட்டிருப்பீர்களாக.

இந்த நேரத்தில், தற்காலிக சந்தோஷம் இருப்பதுடன், கவலை, பயம் என்ற இரு விடயங்களும் உள்ளன. பயம் எங்கு இருக்கிறதோ, அங்கே மன நிம்மதி இருக்க முடியாது. பயம் இருக்கும் இடத்தில் அமைதியும் இருக்க முடியாது. எனவே, சந்தோஷத்துடன் கூடவே கவலை, அமைதியின்மை ஆகியவற்றிற்கான காரணங்களும் உள்ளன. எவ்வாறாயினும், நீங்கள் சகல சக்திகள் என்ற பொக்கிஷங்கள் நிறைந்தவர்களும், சகல காரணங்களுக்கும் தீர்வு காண்பவர்களும், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்கின்ற தீர்வின் சொரூபங்களுமான மாஸ்டர் சர்வ சக்திவான் குழந்தைகள் என்பதால், நீங்கள் கவலை, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறீர்கள். உங்கள் முன்னிலையில் எந்த பிரச்சினைகள் வந்தாலும், அவை உங்களுடன் விளையாடவே வருகின்றனவே அன்றி உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல.

சுலோகம்:

உங்கள் மனோபாவத்தை மேன்மையானதாக ஆக்கினால், உங்கள் வீடும், குடும்பமும் இயல்பாகவே மேன்மை அடையும்


---ஓம் சாந்தி---