12.05.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே ! இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு அழைத்துச் செல்ல உங்களுக்கு படகோட்டி கிடைத்துள்ளார், உங்களுடைய கால்கள் இப்போது இந்தப் பழைய உலகத்தில் இல்லை, உங்களுடைய நங்கூரம் எடுக்கப்பட்டுவிட்டது

 

கேள்வி:-

மந்திரவாதி பாபாவின் அதிசயமான மந்திரம் என்ன, அதை வேறு யாரும் செய்ய முடியாது?

 

பதில்:

சோழிக்கு சமமான ஆத்மாவை வைரத்திற்குச் சமமாக மாற்றுவது, தோட்டக்காரனாக ஆகி முட்களை மலராக்கி விடுவது - இது மிகவும் அதிசயமான மந்திரமாகும், இதை ஒரு மந்திரவாதியான பாபா மட்டும் தான் செய்கின்றார், வேறு யாரும் அல்ல. மனிதர்கள் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே மந்திரவாதி என்று சொல்லிக் கொள்கிறார்கள், ஆனால் பாபாவைப் போல் மந்திரம் செய்ய முடியாது.

 

ஓம் சாந்தி.

முழு சிருஷ்டி சக்கரத்தில் அல்லது நாடகத்தில் பாபா ஒரு முறை தான் வருகின்றார். வேறு எந்த சத்சங்கம் போன்றவற்றிலும் இப்படி புரிந்து கொள்ள மாட்டார்கள். அந்த கதை சொல்லக் கூடிய தந்தையும் அல்ல, அந்த குழந்தைகளும் அல்ல. உண்மையில் அவர்கள் பின்பற்றுபவர்களும்(சிஷ்யர்கள்) அல்ல. இங்கே நீங்கள் குழந்தைகளாகவும் இருக்கின்றீர்கள், மாணவர்களாகவும் இருக்கின்றீர்கள் மற்றும் சிஷ்யர் களாகவும் இருக்கின்றீர்கள். பாபா குழந்தைகளை தன்னோடு அழைத்துச் செல்வார். தந்தை செல்கின்றார் என்றால் குழந்தைகளும் கூட இந்த மோசமான உலகத்திலிருந்து தங்களுடைய மலர் போன்ற உலகத்திற்குச் சென்று இராஜ்யம் செய்வார்கள். இது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் வர வேண்டும். இந்த சரீரத்திற்குள் இருக்கின்ற ஆத்மா குஷியாகின்றது. உங்களுடைய ஆத்மா மிகவும் குஷி அடைய வேண்டும். எல்லையற்ற தந்தை வந்துள்ளார், அவர் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார், இந்தப் புரிதலும் குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது. மற்றபடி முழு உலகத்தில் இருக்கின்றவர்கள் புரியாதவர்களாகவே இருக்கிறார்கள். இராவணன் உங்களை எவ்வளவு முட்டாள்களாக்கி விட்டான் என்று பாபா கூறுகின்றார். பாபா வந்து புத்திசாலிகளாக மாற்றுகின்றார். முழு உலகத்தின் மீது இராஜ்யம் செய்யத் தகுதியாக, அந்தளவிற்கு புத்திசாகளாக மாற்றுகின்றார். இந்த மாணவ வாழ்க்கையும் கூட ஒரு முறை தான் நடக்கிறது, பகவான் வந்து படிப்பிக்கும்போது ஆகும். இது உங்களுடைய புத்தியில் இருக்கிறது, மற்றபடி யார் தங்களுடைய வேலை தொழில் போன்றவற்றில் மாட்டிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் பகவான் படிப்பிக்கின்றார் என்பது புத்தியில் வர முடியாது. அவர்களுக்கு தங்களுடைய தொழில் போன்றவை தான் நினைவு இருக்கிறது. எனவே பகவான் நமக்கு படிப்பிக்கின்றார் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும்! மற்றவர்கள் அனைவரும் ஒரு பைசாவிற்கு ஒப்பானவர்களின் குழந்தைகளாவர், நீங்கள் பகவானுடைய குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள், எனவே குழந்தைகளாகிய உங்களுக்கு அளவற்ற குஷி இருக்க வேண்டும். சிலர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலர் பாபா எங்களுக்கு முரளி நன்றாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை, .............. என்று சொல்கிறார்கள். அட, முரளி என்ன கஷ்டமானதா என்ன? பக்தியில் சாது-சந்நியாசிகளிடம் சென்று நாங்கள் ஈஸ்வரனை எப்படி அடைவது என்று கேட்பதைப் போல் இருக்கிறது! ஆனால் அவர்கள் தெரிந்திருக்கவில்லை. பகவானை நினைவு செய்யுங்கள் என்று மட்டும் விரலால் சமிக்ஞை காட்டுவார்கள். அவ்வளவு தான் குஷியாகி விடுகிறார்கள். அவர் யார் என்பதை உலகத்தில் யாரும் தெரிந்திருக்கவில்லை. தங்களுடைய தந்தையை யாரும் தெரிந்திருக்கவில்லை. இந்த நாடகமே அப்படித் தான் உருவாக்கப்பட்டுள்ளது, இருந்தாலும் மறந்து விடுவார்கள். உங்களில் கூட அனைவரும் பாபா மற்றும் படைப்பைத் தெரிந்திருக்கவில்லை. ஆங்காங்கே போதை இறங்கி விடுகிற மாதிரி நடத்தையில் இருக்கிறார்கள், கேட்கவே கேட்காதீர்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுடைய கால்கள் பழைய உலகத்தில் இல்லாதது போல் ஆகும். கலியுக உலகத்திலிருந்து இப்போது கால்கள் உயர்த்தப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள், கப்பலின் நங்கூரங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் சென்று கொண்டிருக்கிறோம், பாபா நம்மை எங்கே அழைத்துச் செல்வார் என்பது புத்தியில் இருக்கிறது ஏனென்றால் பாபா படகோட்டியாகவும் இருக்கின்றார் என்றால் தோட்டக்காரராகவும் இருக்கின்றார். முட்களை மலர்களாக மாற்றுகின்றார். அவரைப் போல் முட்களை மலர்களாக்கும் தோட்டக்காரர் வேறு யாரும் இல்லை. இந்த மந்திரம் குறைந்ததா என்ன. சோழியைப் போன்ற ஆத்மாவை வைரத்திற்குச் சமமாக மாற்றுகின்றார். இன்றைக்கு நிறைய மந்திரவாதிகள் வந்து விட்டார்கள், இது ஏமாற்றுக்கார உலகமாகும். பாபா சத்குருவாக இருக்கின்றார். சத்குரு அழிவற்றவர் என்றும் சொல்கிறார்கள். மிகவும் ஈடுபாட்டோடு சொல்கிறார்கள். எப்போது தாங்களாகவே சத்குரு ஒருவர் தான் என்று சொல்கிறார்களோ, அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல் ஒருவர் தான் என்று சொல்கிறார்கள் பிறகு தங்களை ஏன் குரு என்று சொல்லிக் கொள்ள வேண்டும்? அவர்களும் எதையும் புரிந்து கொள்வதில்லை, மக்களும் எதையும் புரிந்து கொள்வதில்லை. இந்தப் பழைய உலகத்தில் என்ன தான் வைக்கப்பட்டுள்ளது? தந்தை புதிய வீட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று குழந்தைகளுக்குத் தெரிகிறது என்றால் புதிய வீட்டை வெறுப்பவர்கள் மற்றும் பழைய வீட்டின் மீது அன்பு வைப்பவர்கள் யார் இருப்பார்கள். புத்தியில் புதிய வீடு தான் நினைவிருக்கிறது. நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளாக ஆகியிருக்கின்றீர்கள் என்றால் பாபா நமக்காக புதிய உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் என்பது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். நாம் அந்த உலகத்திற்கு செல்கின்றோம். அந்தப் புதிய உலகத்திற்கு நிறைய பெயர்கள் இருக்கின்றன. சத்யுகம், ஹெவன், பேரடைஸ், வைகுண்டம் போன்றவைகளாகும்.......... உங்களுடைய புத்தி இப்போது பழைய உலகத்திலிருந்து நீங்கி விட்டது ஏனென்றால் பழைய உலகத்தில் துக்கமே துக்கம் தான் இருக்கிறது. இதனுடைய பெயரே நரகம், முட்களின் காடு, மோசமான நரகம், கம்சபுரி என்பன ஆகும். இதனுடைய அர்த்தத்தையும் யாரும் தெரிந்திருக்க வில்லை. கல்புத்தி அல்லவா. பாரதத்தின் நிலை என்னவாக ஆகிவிட்டது பாருங்கள்! இந்த சமயத்தில் அனைவரும் கல்புத்தியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று பாபா கூறுகின்றார். சத்யுகத்தில் அனைவரும் தங்கபுத்தியுடைவர் கள், எப்படி இராஜா இராணியோ அப்படி பிரஜைகளும் ஆவர். இங்கே இருப்பதோ பிரஜைகளின் மீது பிரஜை களின் இராஜ்யமாகும் ஆகையினால் அனைவருடைய (ஸ்டாம்ப்) தபால்தலையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பாபா என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் நினைவிருக்க வேண்டும். பிறகு இரண்டாவதாக உயர்ந்தவர் யார்? பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கு எந்த உயர்வும் இல்லை. சங்கருக்கு ஆடை போன்றவைகளை எப்படி உருவாக்கி விட்டார்கள்! அவர் பாங்க் குடிக்கின்றார், ஊமத்தையைச் (போதை வஸ்து) சாப்பிடுகின்றார்........... என்று சொல்லிவிடுகிறார்கள். இது அவமரியாதை அல்லவா!. இந்த விஷயங்கள் நடப்பதே இல்லை. தங்களுடைய தர்மத்தையே மறந்தவர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய தேவதைகளை என்னென்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு அவமரியாதை செய்கிறார்கள்! ஆகையினால் தான் பாபா கூறுகின்றார், என்னையும் அவமரியாதை செய்வதோடு சங்கருக்கும், பிரம்மாவிற்கும் அவமரியாதை செய்கிறார்கள். விஷ்ணுவிற்கு அவமரியாதை நடப்பதில்லை. உண்மையில் மறைமுகமாக அவருக்கும் செய்கிறார்கள், ஏனென்றால் விஷ்ணு தான் இராதா-கிருஷ்ணர் ஆவர். கிருஷ்ணர் சிறிய குழந்தை எனும்போது மகாத்மாக்களை விடவும் உயர்ந்தவர் என்று பாடப்படுகிறது. இந்த பிரம்மா கடைசியில் சந்நியாசம் செய்கின்றார், அவர் சிறிய குழந்தை தூய்மையாகவே இருக்கின்றார். பாவம் போன்றவற்றை தெரிந்திருக்கவே இல்லை. எனவே உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா, இருந்தாலும் பிரஜாபிதா பிரம்மா எங்கே இருக்க வேண்டும் என்பது பாவம்! அவர்களுக்கு தெரியவில்லை. பிரஜாபிதா பிரம்மாவை சரீரமுடையவராகவும் காட்டுகிறார்கள். அஜ்மீரில் அவருடைய கோயில் இருக்கிறது. பிரம்மாவிற்கு தாடி மீசை வைத்து காட்டுகிறார்கள், சங்கர் அல்லது விஷ்ணுவிற்கு வைப்பதில்லை. எனவே இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். பிரஜாபிதா பிரம்மா சூட்சுமவதனத்தில் எப்படி இருப்பார்! அவர் இங்கே இருக்க வேண்டும். இந்த சமயத்தில் பிரம்மாவிற்கு எவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள்? பிரஜாபிதா பிரம்மாகுமார குமாரிகள் இவ்வளவு அதிக மானோர் இருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது என்றால் கண்டிப்பாக பிரஜாபிதா பிரம்மா இருப்பார் அல்லவா! உயிருள்ளவராக இருக்கின்றார் என்றால் கண்டிப்பாக ஏதாவது செய்து கொண்டிருப்பார். பிரஜாபிதா பிரம்மா குழந்தைகளை மட்டும் உருவாக்குகிறாரா அல்லது வேறு எதையும் செய்கிறாரா? ஆதி தேவன் பிரம்மா, ஆதி தேவி சரஸ்வதி என்று சொல்கிறார்கள், ஆனால் அவர்களுடைய நடிப்பு என்ன, என்பது யாருக்கும் தெரியவில்லை. படைப்பவர் என்றால் கண்டிப்பாக இங்கே இருந்துவிட்டு சென்றிருப்பார். கண்டிப்பாக பிராமணர்களை சிவபாபா தத்தெடுத்திருப்பார். இல்லையென்றால் பிரம்மா எங்கிருந்து வந்தார்? இவை புதிய விஷயங்கள் அல்லவா? எதுவரை பாபா வரவில்லையோ அதுவரை யாரும் தெரிந்து கொள்ள முடியாது. யாருக்கு என்ன நடிப்போ அதையே நடிக்கிறார்கள். புத்தர் என்ன நடிப்பை நடித்தார், எப்போது வந்தார், வந்து என்ன செய்தார் என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள், அவர் குருவாக இருக்கின்றாரா, டீச்சராக இருக்கின்றாரா, தந்தையாக இருக்கின்றாரா? இல்லை. சத்கதியை கொடுக்க முடியாது. அவர் தன்னுடைய தர்மத்தை மட்டும் படைப்பவராக இருக்கின்றார், குரு கிடையாது. பாபா குழந்தைகளைப் படைக்கின்றார்! பிறகு படிப்பிக்கின்றார். தந்தை, டீச்சர், குரு மூன்றுமாகவும் இருக்கின்றார். வேறு யாராவது நீங்கள் படிப்பியுங்கள் என்று சொல்வார்களா என்ன!. வேறு யாரிடமும் இந்த ஞானம் இல்லவே இல்லை. எல்லையற்ற தந்தை தான் ஞானக்கடலாக இருக்கின்றார். எனவே கண்டிப்பாக ஞானத்தை சொல்வார் அல்லவா! பாபா தான் சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் மீண்டும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து சந்தித்திருக்கிறீர்கள் என்று பாபா கூறுகின்றார். யாரை முழு உலகமும் தேடிக் கொண்டிருக்கிறதோ, அவர் நமக்கு கிடைத்து விட்டார் என்ற குஷி குழந்தைகளுக்குள் இருக்கிறது. பாபா கூறுகின்றார், குழந்தைகளே, நீங்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்து சந்தித்திருக்கிறீர்கள். குழந்தைகள் சொல்கிறார்கள் - ஆமாம் பாபா, நாங்கள் நிறைய முறை சந்தித்திருக்கிறோம். உங்களை யாராவது எவ்வளவு தான் அடித்தாலும்-உதைத்தாலும் கூட உள்ளுக்குள் அந்த குஷி இருக்கிறது அல்லவா. சிவபாபாவை சந்திக்கும் நினைவு இருக்கிறது அல்லவா! நினைவின் மூலம் எவ்வளவு பாவங்கள் அழிகிறது. அபலைகள், பாந்தேகளுக்கு (கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு) இன்னும் அதிகமாக அழிகிறது ஏனென்றால் அவர்கள் அதிகம் சிவபாபாவை நினைவு செய்கிறார்கள். கொடுமைகள் நடக்கிறது என்றால் புத்தி சிவபாபாவின் பக்கம் சென்று விடுகிறது. சிவபாபா காப்பாற்றுங்கள் என்றழைக்கிறார்கள். எனவே நினைவு செய்வது நல்லது அல்லவா!. தினமும் அடி வாங்கினாலும் கூட, சிவபாபாவை நினைவு செய்வார்கள், இது நன்மை தான் அல்லவா! அப்படிப்பட்ட அடிக்கு பலியாக வேண்டும். அடி விழுகிறது என்றால் நினைவு செய்கிறார்கள். கங்கை நீர் வாயில் இருக்க வேண்டும், கங்கையின் அருகில் இருக்க வேண்டும், அப்போது உயிர் உடலை விட்டு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். உங்களுக்கு அடி கிடைக்கும் போது, புத்தியில் அல்லா மற்றும் ஆஸ்தி நினைவிருக்க வேண்டும் அவ்வளவு தான்! தந்தை என்று சொல்வதின் மூலம் ஆஸ்தி கண்டிப்பாக நினைவிற்கு வரும். தந்தை என்று சொன்னவுடன் ஆஸ்தி நினைவுக்கு வராதவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள். தந்தையின் கூடவே சொத்து கண்டிப்பாக நினைவிற்கு வரும். உங்களுக்கும் கூட சிவபாபாவின் கூடவே ஆஸ்தி கண்டிப்பாக நினைவு வரும். அவர்கள் உங்களை விஷத்திற்காக (விகாரத்திற்காக) அடி கொடுத்து சிவபாபாவை நினைவூட்டுகிறார்கள். நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தியை அடைகிறீர்கள், பாவம் அழிந்து விடுகிறது. இது கூட நாடகத்தில் உங்களுக்கு மறைமுகமான நன்மையாகும். எப்படி சண்டை நன்மை செய்கிறது என்று இருக்கிறதோ அதுபோல் இந்த அடி கூட நல்லதாக இருக்கிறது அல்லவா!

 

இன்றைக்கு குழந்தைகளுடைய கண்காட்சி மேளாவின் சேவையில் வேகம் இருக்கிறது. நவ நிர்மாண (புதிய உலக ஸ்தாபனை) கண்காட்சியின் கூடவே கேட் வே டு ஹெவன் என்று எழுதுங்கள். இரண்டு வாக்கியங்களும் இருக்க வேண்டும். புதிய உலகம் எப்படி ஸ்தாபனை ஆகிறது, என்பதின் கண்காட்சி இருக்கிறது என்றால் மனிதர்கள் அதைக் கேட்டு குஷி ஏற்படும். புதிய உலகம் எப்படி ஸ்தாபனை ஆகிறது என்பதற்காக இந்த சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வந்து பாருங்கள்! கேட் வே டு நியு வேல்ட்(புதிய உலகத்திற்கான நுழை வாயில்) என்ற வாக்கியமும் சரியே ஆகும். இந்த சண்டையின் மூலம் கேட் திறக்கிறது. பகவான் வந்தார் என்று கீதையிலும் இருக்கிறது, வந்து இராஜயோகம் கற்றுக் கொடுத்தார். மனிதனிலிருந்து தேவதையாக மாற்றினார் என்றால் கண்டிப்பாக புதிய உலகத்தின் ஸ்தாபனை நடந்திருக்கும். மனிதர்கள் சந்திரனுக்குப் போக எவ்வளவு முயற்சி செய்கிறார்கள்! எங்கு பார்த்தாலும் நிலத்தைத் தான் பார்க்கிறார்கள்.. மனிதர்கள் யாரும் தென்படவில்லை என்று மட்டுமே சொல்கிறார்கள். இதனால் என்ன தான் பயன் உள்ளது. இப்போது நீங்கள் உண்மையான அமைதியில் செல்கிறீர்கள் அல்லவா! அசரீரியாக ஆகின்றீர்கள். அது அமைதியான உலகமாகும். நீங்கள் மரணத்தை விரும்புகிறீர்கள், சரீரத்தை விட்டு விட விரும்புகிறீர்கள். பாபாவைக் கூட மரணத்திற்காகவே அழைக்கிறீர்கள், வந்து தங்களோடு முக்தி-ஜீவன்முக்திக்கு அழைத்துச் செல்லுங்கள். ஆனால் புரிந்து கொள்வதே இல்லை, தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவரை அழைக்கிறோம் என்றால் காலனுக்கெல்லாம் காலனை அழைப்பதாக ஆகிறது. பாபா வந்திருக்கின்றார், வீட்டிற்கு செல்லுங்கள், நாம் வீட்டிற்குச் செல்வோம் என்று கூறுகின்றார் நாம் வீட்டிற்குச் செல்கிறோம், என்பதை இப்போது புரிந்து கொள்கிறீர்கள். புத்தி வேலை செய்கிறது அல்லவா. இங்கே நிறைய குழந்தைகள் இருப்பார்கள், அவர்களுடைய புத்தி வேலை தொழிலின் பக்கம் ஓடிக்கொண்டே இருக்கும். இன்னார் நோயுற்றிருக்கின்றார், என்னவாகியிருக்கும்? அனேக விதமான எண்ணங்கள் வந்து விடுகிறது. நீங்கள் இங்கே அமர்ந்துள்ளீர்கள், ஆத்மாவின் புத்தி பாபா மற்றும் ஆஸ்தியின் பக்கம் இருக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். ஆத்மாதான் நினைவு செய்கிறது அல்லவா. யாருடைய குழந்தையாவது இலண்டனில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், நோயுற்றிருக்கிறார் என்று செய்தி வருகிறது. அவ்வளவு தான் புத்தி சென்று விடும். பிறகு ஞானம் புத்தியில் நிற்காது. இங்கே அமர்ந்திருந்தாலும் புத்தியில் அவருடைய நினைவு வந்து கொண்டே இருக்கும் யாருடைய கணவராவது நோயுற்றுவிட்டால் மனைவியின் எண்ணம் மேல்-கீழாகி விடும். புத்தி போகிறது அல்லவா! எனவே நீங்களும் இங்கு அமர்ந்து கொண்டே அனைத்தையும் செய்து கொண்டே சிவபாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். அப்போதும் கூட ஆஹா சௌபாக்கியமே தான்! எப்படி அவர்கள் கணவனையோ அல்லது குருவையோ நினைவு செய்கிறார்களோ, அதுபோல் நீங்கள் பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் தங்களுடைய ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கக் கூடாது. எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்வீர்களோ சேவையிலும் பாபா தான் நினைவிற்கு வருவார். என்னுடைய பக்தர்களுக்குப் புரியப் வையுங்கள் என்று பாபா கூறியுள்ளார். இதை யார் சொன்னது? சிவபாபா. கிருஷ்ணருடைய பக்தர்கள் என்ன புரிய வைப்பீர்கள்? கிருஷ்ணர் புதிய உலகத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றார் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள். படைப்பவர் இறை தந்தையாவர், கிருஷ்ணர் படைப்பதில்லை. பரமபிதா பரமாத்மா தான் பழைய உலகத்தை புதியதாக மாற்றிக் கொண்டிருக்கிறார், இதை ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள். புதியதிலிருந்து பழையது, பழையதிலிருந்து புதியதாக ஆகின்றது . (கல்பத்திற்கு) காலத்தை அதிகமாக கொடுத்து விட்டதால் மனிதர்கள் காரிருளில் இருக்கிறார்கள். இப்போது உள்ளங்கையில் சொர்க்கம் இருக்கிறது. நான் உங்களை அந்த சொர்க்கத்திற்கு எஜமானர்களாக்க வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார். ஆவீர்கள் தானே? ஆஹா, ஏன் ஆக மாட்டீர்கள்? நல்லது, என்னை நினைவு செய்யுங்கள், தூய்மையாகுங்கள். நினைவின் மூலம் தான் பாவங்கள் அழியும். விகர்மங்களின் சுமை ஆத்மாவில் இருக்கிறது, சரீரத்தில் இல்லை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒருவேளை சரீரத்தில் சுமை இருந்தால் சரீரத்தை எரிக்கும்போது அதனுடன் பாவங்களும் எரிந்து விட வேண்டும். ஆத்மா அழிவற்றதாக இருக்கிறது, அதில் துரு மட்டும் தான் சேருகிறது. அதை நீக்குவதற்கு பாபா ஒரே ஒரு யுக்தியை கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள். தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாவதற்கான யுக்தி எவ்வளவு நன்றாக இருக்கிறது. கோயில் கட்டக் கூடியவர்கள், சிவனுடைய பூஜை செய்பவர்களும் கூட பக்தர்கள் தான் அல்லவா! பூஜாரியை ஒருபோதும் பூஜிக்கத்தக்கவர் என்று சொல்ல முடியாது. நல்லது!

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) யாரை முழு உலகமும் தேடிக்கொண்டிருக்கிறதோ, அந்தத் தந்தை நமக்கு கிடைத்து விட்டார், என்ற குஷியில் இருக்க வேண்டும். நினைவின் மூலம் தான் பாவங்கள் அழிகிறது ஆகையினால் எந்த சூழ்நிலையிலும் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். ஒரு நிமிடம் கூட தங்களுடைய நேரத்தை வீணாக்கக் கூடாது.

 

2) இந்தப் பழைய உலகத்திலிருந்து புத்தியின் நங்கூரத்தை எடுத்து விட வேண்டும். தந்தை நமக்காக புதிய வீட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார், இது மோசமான நரகமாகும், கம்சபுரியாகும், நாம் வைகுண்டபுரிக்குச் செல்கின்றோம் என்ற நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்.

 

வரதானம்:

நடந்தாலும் சென்றாலும் ஃபரிஷ்தா சொரூபத்தின் சாட்சாத்காரம் (காட்சி அளித்தல்) செய்விக்கும் சாட்சாத்கார மூர்த்தி ஆவீர்களாக.

 

எப்படி ஆரம்பத்தில் பிரம்மா மறைந்து போய் ஸ்ரீகிருஷ்ணர் தென்பட்டுக் கொண்டிருந்தார், இதே சாட்சாத்காரம் அனைத்தையும் விடுவித்து விட்டது. அது போல, இப்பொழுது கூட சாட்சாகாரத்தின் மூலமாக சேவை ஆகட்டும். சாட்சாத்காரத்தின் பிராப்தி ஆகும் பொழுது, அது போல ஆகாமல் இருக்க முடியாது. எனவே நடந்தாலும், சென்றாலும் ஃபரிஷ்தா சொரூபத்தின் சாட்சாத்காரம் செய்வியுங்கள். சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் (பாஸனா) - உணர்வை ஏற்படுத்தக் கூடியவராக ஆகுங்கள். அப்பொழுது இவர்கள் அல்லாவின் (இறை தந்தையின்) மக்கள் என்று புரிந்து கொண்டு விடுவார்கள்.

 

ஸ்லோகன்:

எப்பொழுதும் ஆன்மீக ஆனந்தத்தை (மௌஜ்) அனுபவம் செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் ஒரு பொழுதும் (மூஞ்ஜ்) குழம்ப மாட்டீர்கள்.

 

ஓம்சாந்தி