ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுத்த செல்லக்
குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். சிவன் போலாநாத் (கள்ளங்கபடமற்றவர்)
என சொல்லப் படுகிறார். மேலும் உடுக்கை அடிக்கக் கூடியவரை சங்கர்
என சொல்லி விடுகின்றனர். இங்கே எவ்வளவு ஆசிரமங்கள் உள்ளன, அங்கே
வேத, சாஸ்திரங்கள், உபநிடதங்கள், முதலானவை களைச் சொல்கின்றனர்,
இதுவும் கூட உடுக்கை அடிப்பது போல் தான் ஆகும். எவ்வளவு
ஆசிரமங்கள் உள்ளன, அங்கே மனிதர்கள் சென்று இருக்கவும்
செய்கின்றனர். ஆனால் இலட்சியம், குறிக்கோள் எதுவும் இல்லை.
குருமார்கள் நம்மை சப்தங்களைக் கடந்து சாந்தி தாமத்திற்கு
அழைத்துச் செல்வார்கள் என புரிந்து கொள்கின்றனர். இங்கேயே
உயிர்த்தியாகம் செய்வோம் என்ற சிந்தனையில் சென்று தங்குகின்றனர்.
ஆனால் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. அவர்கள் அவரவருடைய
பக்தி முறை முதலானவைகளைக் கற்பிக்கின்றனர். இது உண்மையிலும்
உண்மையான வானபிரஸ்தம் என இங்கே குழந்தைகள் தெரிந்துள்ளனர்.
குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவருமே வான
பிரஸ்திகளாக உள்ளனர். மற்றபடி முக்தி தாமத்திற்குச்
செல்வதற்கான முயற்சியை செய்வித்துக் கொண்டிருக்கின்றார். இப்படி
சத்கதி அல்லது சப்தத்திலிருந்து கடந்த நிலைக்குச் செல்லக்
கூடிய வழி காட்டக் கூடியவர் வேறு யாரும் இல்லை. கதி, சத்கதி
வழங்கும் வள்ளல் ஒருவரே ஆவார். இல்லற விஷயங்களை விட்டு விட்டு
இங்கே வந்து உட்கார்ந்து விடுங்கள் என தந்தை சொல்ல முடியாது..
ஆம் யார் சேவை செய்யத் தகுந்தவர்களோ அவர்களை இங்கே வைக்க
முடியும். மற்றவர்களுக்கும் வானபிரஸ்தத்திற்கான வழியை காட்ட
வேண்டும், ஏனென்றால் இப்போது அனைவருமே சப்தங்களை கடந்து
செல்வதற்கான நேரம் ஆகும். வானபிரஸ்தம், அதாவது
முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியவர் ஒரு தந்தைதான்
ஆவார். அந்த தந்தையிடம் அருகாமையில் தான் நீங்கள்
அமர்ந்திருக்கிறீர்கள். அந்த மனிதர்கள் வானபிரஸ்த நிலையில்
இருந்தாலும் யாரும் திரும்பிப் போக முடியாது. வான பிரஸ்தத்தில்
அழைத்துச் செல்பவர் ஒரு தந்தையே ஆவார். அவர்தான் நல்ல வழி
கொடுப்பார். பாபா நாங்கள் வீட்டாரை அழைத்து வந்து இங்கேயே
இருந்து விடுகிறோம் என யாராவது சொல்லக் கூடும். இல்லை, இவர்
சேவை செய்ய தகுதி வாய்ந்தவரா இல்லையா என பார்க்க
வேண்டியிருக்கும். யாராவது பந்தனத் திலிருந்து விடுபட்டவராக,
வயதானவராக, சேவை செய்யத் தகுந்தவராக இருந்தால் அவருக்கு ஸ்ரீமத்
(சிரேஷ்ட வழி) கொடுக்கப்படுகிறது. செமினார் (கருத்தரங்கம்)
ஏற்பாடு செய்தீர்கள் என்றால் சேவைக்கான யுக்திகள் கற்றுக்
கொள்வோம், கன்யாக்களுடன் கூடவே தாய்மார் களும், ஆண்களும் கூட
கற்றுக் கொள்வார் கள் என குழந்தைகள் சொல்கின்றனர். இதுவே
செமினார் (கருத்தரங்கம்) அல்லவா. பாபா தினம்தோறும் பிறருக்கு
எப்படி புரிய வைப்பது என பயிற்சி செய்வித்தபடி இருக்கிறார்.
வழிகள் கொடுத்தபடி இருக்கிறார். முதலில் ஒரு விஷயத்தை மட்டும்
புரிய வையுங்கள். அனைவரும் நினைவு செய்யக் கூடிய பரமபிதா
பரமாத்மா உங்களுக்கு என்னவாக இருக்கிறார். ஒருவேளை தந்தை என்ற
சம்மந்தமெனில் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்க வேண்டும்.
நீங்கள் தந்தையை தெரிந்து கொண்டிருக்க வில்லை. அனைத்திலும்
பகவான் இருக்கிறார் என சொல்லி விடுகிறீர்கள். ஒவ்வோர் அணுவிலும்
பகவான் இருக்கிறார் என்றால் உங்களின் நிலை எப்படி இருக்கும்?
நாம் பாபாவின் முன்னால் அமர்ந்திருக்கிறோம் என இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். பாபா நம்மை தகுதி
வாய்ந்தவர்களாக ஆக்கி, முள்ளிலிருந்து மலராக மாற்றி உடன்
அழைத்துச் செல்வார், மற்ற அனைவரும் காட்டிற்கான வழியைத்தான்
காட்டுகின்றனர். தந்தையோ எவ்வளவு சகஜமான வழியை காட்டுகிறார்.
ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என பாடப் பட்டுள்ளது. அது பொய்
ஏதும் இல்லை. பாபா என சொல்லி விட்டீர்கள் என்றால் ஜீவன் முக்தி
அடைந்து விட்டீர்கள் என அர்த்தம். பாபா முதலாவதாக தமது
வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் அனைவரும் தம்முடைய
வீட்டை மறந்து விட்டிருக்கிறீர்கள் அல்லவா. இறைத்தந்தை அனைத்து
செய்தியாளர்களையும் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக அனுப்பி
வைக்கிறார் - பிறகு சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என ஏன்
சொல்கிறீர்கள்? மேலே இருந்து அனுப்பி வைக்கிறார் அல்லவா. ஒருவர்
என சொல்கின்றனர் பிறகு ஏற்பதில்லை. தந்தை தர்ம ஸ்தாபனை
செய்வதற்காக அனுப்பி வைக்கிறார் என்றால் அவர் களுடைய
அமைப்பினரும் அவர்களுக்குப் பின்னால் வரத் தொடங்குவார்கள்.
முதன் முதலில் தேவி தேவதைகளின் வம்சம். முதன் முதலில் ஆதி
சனாதன தேவி தேவதா தர்மத்தினரான லட்சுமி நாராயணர் தம்முடைய
பிரஜைகளுடன் வருவார்கள், வேறு யாரும் பிரஜைகளுடன் வருவதில்லை.
அவர்கள் ஒருவராக வருவார்கள், பிறகு இரண்டாமவர், மூன்றாமவர் என
வருவார்கள். இங்கே நீங்கள் அனைவரும் தந்தை யிடமிருந்து ஆஸ்தியை
எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். இது பாடசாலையாகும்.
வீட்டில் அமர்ந்தபடி ஒரு மணி நேரம், அரை மணி நேரம், . . . கால்
மணி நேரம். ஒரு வினாடியில் உங்களுக்கு இதை மட்டும் சொல்கிறார்
- பரமபிதா பாமாத்மாவிடம் உங்களுக்கு என்ன உறவு என்பதை. பரமபிதா
என வாயால் சொல்கின்றனர். அவர் அனைவரின் தந்தை, படைப்பவர்,
எனினும் தந்தை என புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன சொல்வது!
தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் கண்டிப்பாக
சொர்க்கத்தின் இராஜ்யத்தைக் கொடுப்பார். பாரதத்திற்குக்
கொடுத்திருந்தார் அல்லவா. நரனிலிருந்து நாராயணனாக்கக் கூடிய
இராஜயோகம் புகழ் வாய்ந்ததாகும். இது சத்ய நாராயணனின் கதையும்
கூட ஆகும். அமர கதை, மூன்றாம் கண்ணின் அதாவது மூன்றாவது கண்
கிடைக்கக் கூடிய கதையும் ஆகும். பாபா நமக்கு ஆஸ்தி கொடுத்துக்
கொண்டிருக்கிறார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை
ஸ்ரீமத் கொடுக்கிறார். அவரின் வழியின் மூலம் கண்டிப்பாக
நன்மைதான் ஏற்படும். பாபா ஒவ்வொருவரின் நாடியையும் பார்க்கிறார்.
அவர்களுக்கு பந்தனம் எதுவும் கிடையாது; சேவையும் செய்ய முடியும்;
தந்தை தகுதியைப் பார்த்து வழி கொடுக்கிறார். சூழ்நிலையைப்
பார்த்து சொல்லப் படுகிறது - நீ இங்கே இருக்கலாம், சேவையும்
செய்தபடி இருப்பாயாக. எங்கெங்கெல்லாம் தேவையோ, கண்காட்சிகளில்
பலரும் தேவைப்படுகின்றனர். வயதானவர் களும் தேவை, கன்யாக்களும்
தேவை. அனைவருக்கும் அறிவுரை கிடைத்தப்படி இருக்கிறது. இது
படிப்பாகும். பகவானுடைய மகாவாக்கியம். பகவான் என நிராகாரருக்கு
சொல்லப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் அவருடைய குழந்தைகள். ஓ
இறைத் தந்தையே என சொல்கிறீர்கள் எனும் போது அவரை எங்கும்
நிறைந்தவர் என சொல்ல மாட்டோம். லௌகிக தந்தை எங்கும் நிறைந்தவரா
என்ன? அல்ல, நீங்கள் தந்தை என சொல்கிறீர்கள், மேலும் தந்தை
பதித பாவனர் என பாடவும் செய்கிறீர்கள் எனும்போது கண்டிப்பாக
இங்கே வந்து தூய்மை யாக்குவார். தூய்மையற்றவரிலிருந்து
தூய்மையானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என குழந்தைகளாகிய
நீங்கள் அறிகிறீர்கள்.
5 ஆயிரம் வருடங்கள் கழித்து மீண்டும் வந்து
கிடைத்திருக்கின்ற என்னுடைய குழந்தைகளே ! என தந்தை சொல்கிறார்.
நீங்கள் மீண்டும் ஆஸ்தியை எடுக்க வந்திருக்கிறீர்கள். இராஜ்யம்
ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என அறிவீர்கள். எப்படி மம்மா
பாபா சிவபாபா விடமிருந்து ஆஸ்தியை எடுக்கின்றனர், அது போல்
நாமும் அவரிடமிருந்து எடுக் கிறோம், தந்தையை பின்பற்றுங்கள்.
மம்மா பாபா போல சேவையும் செய்யுங்கள். மம்மா பாபா நரனிலிருந்து
நாராயணனாக ஆவதற்கான கதை சொல்கின்றனர். பிறகு நாம் ஏன் குறைவானதை
(தவறானவற்றை) கேட்க வேண்டும். சூரிய வம்சத்தவர்களாக
இருந்தவர்களே சந்திர வம்சத்தவர்களாகவும் ஆவார்கள். முதலில்
சூரிய வம்சத்தில் செல்ல வேண்டும் அல்லவா. அறிவு சக்தி
இருக்கிறது அல்லவா. அறிவு சக்தி இல்லாமல் யாரும் பள்ளிக்
கூடத்தில் அமர முடியாது. பாபா ஸ்ரீமத் கொடுக்கிறார். இவருக்குள்
பாபா பிரவேசம் ஆகியிருக் கிறார் என நாம் அறிந்திருக்கிறோம்.
இல்லாவிட்டால் பிரஜாபிதா எங்கிருந்து வந்தார்? பிரம்மா
சூட்சுமவதனவாசி ஆவார். பிரஜாபிதா இங்கே தான் இருக்க வேண்டும்
அல்லவா. தந்தை சொல்கிறார் - பிரம்மாவின் மூலம் நான் ஸ்தாபனை
செய்கிறேன். யாரை? பிராமணரை. இந்த பிரம்மாவுக்குள் பிரவேசம்
செய்கிறேன். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தில் பிரவேசம்
செய்கிறீர்கள் அல்லவா. என்னை ஞானக்கடல் என சொல்கின்றனர். ஆக
நிராகாரமாக உள்ள நான் எப்படி சொல்வேன்? கிருஷ்ணரை ஞானக்கடல் என
சொல்வதில்லை. கிருஷ்ணரின் ஆத்மா பல பிறவிகளின் கடைசியில்
ஞானத்தை எடுத்து கிருஷ்ணராக ஆகியுள்ளது, இப்போது இல்லை. பகவான்
மூலம் இராஜயோகத்தைக் கற்று தேவி தேவதைகள் சொர்க்கத்தின்
எஜமானாக ஆனார்கள் என நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு கல்பமும்
உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக் கிறேன் என தந்தை சொல்கிறார்.
படிப்பின் மூலம் இராஜ்யம் கிடைக்கிறது. நீங்கள் இராஜாக்
களுக்கெல்லாம் இராஜாவாக ஆகப் போகிறீர்கள். உங்களின் இலட்சியம்
குறிக்கோளே இதுவாகும். மீண்டும் சூரியவம்சத்தின் தேவி
தேவதைகளாக ஆவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஒரு தேவி தேவதா
தர்மத்தின் ஸ்தாபனை நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பல பல
தர்மங்கள் இருக்கின்றன. பல குருமார்கள் இருக்கின்றனர். அவர்கள்
அனை வரும் முடிந்து போய் விடுவார்கள். இந்த அனைத்து
குருமார்களுக்கெல்லாம் குரு, சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு தந்தை
ஆவார். சாதுக்களுக்கும் சத்கதியை வழங்குவதற்காக வந்திருக்
கிறேன். இனி போகப் போக அவர்களும் கூட உங்கள் முன்னால் தலை
வணங்குவார்கள் - சென்ற கல்பத்தில் செய்தது போல.
குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் நாடகத்தின் முழு
இரகசியமும் உள்ளது. சூட்சும வதனத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கரர்
இருக்கின்றனர், இங்கே இருப்பவர் பிரஜாபிதா என அறிவீர்கள்.
பிரம்மாவின் வயதான உடலில் பிரவேசம் செய்கிறேன் என சொல்கிறார்.
இவர் களுக்கும் சொல்கிறேன் - ஓ குழந்தைகளே, நீங்கள் அனைவரும்
பிராமணர்கள், உங்கள் மீது கலசத்தை வைக்கிறேன், நீங்கள் இவ்வளவு
பிறவிகள் எடுக்கிறீர்கள். இந்த சமயம் இருப்பதே கொடுமையான நரகம்,
மற்றபடி நரகம் என சொல்லப்படக் கூடிய நதி எதுவும் கிடையாது.
கருட புராணத்தில் நிறைய விசயங்கள் எழுதி விட்டுள்ளனர். இப்போது
பாபா குழந்தைகளுக்கு வந்து புரிய வைக்கிறார். இவரும்
பிரம்மாவும் படித்திருக்கிறார் அல்லவா. ஆக இப்போது போலாநாத் (கள்ளங்கபடமற்ற)
தந்தை கள்ளங்கபடமற்ற குழந்தைகளாகிய உங்களுக்கு அமர்ந்து புரிய
வைக்கிறார். ஏழையாய் இருக்கும் கள்ளங்கபடமற்ற குழந்தைகளை பிறகு
உயர்ந்தவரிலும் உயர்ந்த செல்வந்தர்களாக ஆக்குகிறார். சூரிய
வம்சத்து எஜமானாக ஆகிறோம் என நீங்கள் அறிவீர்கள். பிறகு மெல்ல
மெல்ல கீழே இறங்கியே வந்து என்னவாக ஆகி விட்டீர்கள். என்ன
அதிசயமான விளையாட்டு. சொர்க்கத்தில் எவ்வளவு அளவற்ற செல்வங்கள்
இருந்தது. இப்போதும் கூட ராஜாக்களின் மிகப் பெரிய பெரிய
மாளிகைகள் உள்ளன. ஜெய்ப்பூரில் கூட உள்ளன. இப்போதே
இப்படிப்பட்ட மாளிகைகள் உள்ளன, இன்னும் எதிர்காலத்தில்
எப்படியெல்லாம் இருக்கும் என தெரியாது. அரசாங்க இல்லம் - இப்படி
உருவாகாது. ராஜாக்களின் மாளிகைகள் உருவாக்கும் கவர்ச்சியே
தனிப்பட்டது. நல்லது, பிறகு சொர்க்கத்தின் மாடலை (மாதிரி)
பார்க்க வேண்டும் என்றால் அஜ்மீருக்குச் செல்லுங்கள். ஒரு மாடல்
செய்வதிலும் கூட நல்ல முயற்சியை உழைப்பு செய்திருக்கின்றனர்.
பார்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு குஷி ஏற்படும். இங்கேயோ பாபா
சட்டென காட்சி தெரிய வைத்து விடுகிறார். திவ்ய திருஷ்டியில் (தெய்வீக
பார்வையில்) பார்ப்பதையெல்லாம் பிறகு நீங்கள் நடைமுறையில்
பார்க்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் பக்தர்களுக்கு காட்சிகள்
தெரிகின்றன, ஆனால் அவர்கள் வைகுண்டத்தின் எஜமானாக ஏதும்
ஆகவில்லை. நீங்கள் நடைமுறையில் எஜமானாக ஆகிறீர்கள். இப்போது
நரகம்தான் உள்ளது. ஒருவரை ஒருவர் அடித்து, சண்டை யிட்டபடி
இருக்கின்றனர். குழந்தைகள் தந்தையை, சகோதரர்களை கூட கொலை
செய்யக் கூட தாமதிப்பதில்லை. சத்யுகத்தில் சண்டை முதலானவற்றின்
விஷயமே கிடையாது. இப்போதைய வருமானத்தின் மூலம் நீங்கள் 21
பிறவிகளுக்கு பதவியை அடைகிறீர்கள். ஆக எவ்வளவு குஷி இருக்க
வேண்டும். முதல் விஷயம், தந்தையின் அறிமுகமும் தந்தையின்
வரலாற்றினையும் தெரிந்திருக்கவில்லை என்றால் என்னதான் லாபம்
உள்ளது, இவ்வளவு தான புண்ணியங்கள் செய்தபடி பாரதத்தின் நிலை
இப்படி ஆகி விட்டது. ஆனால் இதனை யாரும் புரிந்து கொள்வதில்லை.
பக்திக்குப் பிறகு பகவான் கிடைப்பார் என சொல்கின்றனர். ஆனால்
எப்போது மற்றும் யாருக்கு கிடைப்பார்? அனைவருமே பக்தி
செய்கின்றனர், ஆனால் இராஜ்யம் அனைவருக்குமே கிடைப்பதில்லை.
எவ்வளவு புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த
சாஸ்திரங்கள் முதலானவைகளை மறந்து விடுங்கள், வாழ்ந்தபடியே
இறந்து விடுங்கள் என நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சொல்லலாம்.
பிரம்மம் தத்துவம் ஆகும். அதிலிருந்து ஆஸ்தி கிடைக்க முடியாது.
ஆஸ்தி தந்தையிடமிருந்து தான் கிடைக்கும். ஒவ்வொரு கல்பமும் நாம்
எடுக்கிறோம். புது விஷயம் எதுவுமில்லை. இப்போது நாடகம் முடியப்
போகிறது. நாம் சரீரத்தை விடுத்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
எந்த அளவு நினைவு செய்கிறீர்களோ அந்த அளவு இறுதி நிலைக்கேற்ற
கதி கிடைக்கும். இது கடைசி காலம் என சொல்லப்படுகிறது.
பாவாத்மாக்களின் கணக்கு வழக்கு முடிய வேண்டும். இப்போது
யோகபலத்தின் மூலம் புண்ணிய ஆத்மா ஆக வேண்டும். வைக்கோலுக்கு
தீப் பற்றப் போகிறது. ஆத்மாக்கள் திரும்பிச் செல்லப்போகிறார்கள்.
ஒரு தர்மத்தின் ஸ்தாபனை ஆகிறது எனும்போது பல தர்மத்தவர்கள்
கண்டிப்பாக திரும்பிச் சென்று விடுவார்கள். சரீரத்தை உடன்
எடுத்துச் செல்ல மாட்டார்கள்.
மோட்சம் கிடைக்க வேண்டும் என சிலர் சொல்லலாம். ஆனால், இது
உருவாகி உருவாக்கப் பட்ட நாடகம், இது எப்போதும் நடந்தபடிதான்
இருக்கும் எனும்போது அது எப்படி நடக்கும்? இதற்கு எப்போதும்
முடிவு கிடையாது. அனாதியான சக்கரம் எப்படி சுழல்கிறது என்ற
இரகசியத்தை தந்தை வந்து இப்போது புரிய வைக்கிறார். இந்த அனைத்து
விஷயங்களையும் புரிய வைக்க வேண்டும். எப்போது அதிகமாக புரிந்து
கொள்ளத் தொடங்குகின்றனரோ பிறகு விருத்தி (வளர்ச்சி) அடையத்
தொடங்கும். உங்களுடைய இந்த தர்மம் மிகவும் உயர்ந்ததாகும். இதனை
பறவை தின்று விடுகிறது, மற்ற தர்மங்களை பறவை தின்று விடுவதில்லை.
குழந்தைகளாகிய நீங்கள் இந்த உலகின் மீது ஆர்வம் வைக்கக் கூடாது
- இது சுடுகாடு ஆகும். பழைய உலகின் மீது என்ன பற்றுதலை வைப்பது?
அமெரிக்காவில் இருக்கும் புத்திசாலிகள் யாரோ தூண்டுகின்றனர் என
புரிந்து கொள்வார்கள். மரணம் முன்னால் நின்றிருக்கிறது. வினாசம்
ஆகவே வேண்டும். அனைவருக்கும் மனதுக்குள் அப்படி எண்ணம் ஓடிக்
கொண்டே தான் இருக்கிறது. நாடகத்தின் விதி அப்படி உருவாக்கப்
பட்டுள்ளது. சிவபாபா வள்ளலாக இருக்கிறார். இவருக்கு எந்த
ஆர்வமும் கிடையாது. நிராகாரமாக இருக்கிறார். இவை அனைத்தும்
குழந்தைகளுடையது. புதிய உலகமும் குழந்தைகளுடையதாகும். உலகின்
இராஜ்யத்தை நாம் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம், நாம் தான்
இராஜ்யம் செய்யப் போகிறோம். பாபா எவ்வளவு தன்னலமற்றவராக
இருக்கிறார். நீங்கள் பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால்
அப்போது உங்களுடைய புத்தியின் பூட்டு திறக்கும். நீங்கள் இரட்டை
மகாதானிகளாக இருக்கிறீர்கள். உடல்-மனம்-பொருளைக் கொடுக்
கிறீர்கள், அழிவற்ற ஞான ரத்தினங்களையும் கொடுக்கிறீர்கள்.
சிவபாபாவுக்கு நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள்? உபயோகித்த
பொருளைக் (இறந்தவரின் பொருட்களை தானமாக கொடுத்து விடுவது போல)
கொடுக்கிறீர்கள் அல்லவா. ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம். . . ஈஸ்வரன்
பசித்திருக் கிறாரா என்ன? அல்லது கிருஷ்ணார்ப்பணம் செய்கின்றனர்.
இருவரையும் பிச்சைக்காரர்களாக ஆக்கி விட்டனர். அவரோ வள்ளலாக
இருப்பவர். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பழைய உலகத்தின் எந்தப் பொருளின் மீதும் பற்று
வைக்கக் கூடாது. இந்த உலகில் எந்த விசயத்தின் மீதும் ஆர்வம்
வைக்கக் கூடாது. ஏனென்றால் இது சுடுகாடாக ஆகப் போகிறது.
2. இப்போது நாடகம் முடிவடைகிறது, கணக்கு வழக்கு முடித்துக்
கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும், ஆகையால் யோகபலத்தின் மூலம்
பாவங்களிலிருந்து விடுபட்டு புண்ணிய ஆத்மா ஆக வேண்டும். இரட்டை
தானி ஆக வேண்டும்.