12.06.22    காலை முரளி            ஓம் சாந்தி   03.04.91      பாப்தாதா,   மதுபன்


அனைத்து எல்லைக்குட்பட்டவைகளிலிருந்து விடுபட்டு எல்லையற்ற வைராக்யமுடையவர்களாக ஆகுங்கள்.

கல்பத்திற்குப் பிறகு மீண்டும் தந்தையைச் சந்திப்பதற்காக அனைத்து குழந்தைகளும் தங்களது சாகார இனிய வீடாகிய மதுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். சாகார வதனத்தின் இனிய வீடு மதுவனமாகும். இங்குத் தான் தந்தை மற்றும் குழந்தைகளின் ஆன்மீக சந்திப்பு நிகழ்கிறது. சந்திப்பு விழா நடைபெறுகிறது. ஆக அனைத்துக் குழந்தைகளும் சந்திப்பு விழாவிற்கு வந்திருக் கிறீர்கள். தந்தை மற்றும் குழந்தைகளின் இந்தச் சந்திப்பு விழாவானது இந்தச் சங்கமயுகத்தில் மற்றும் மதுவனத்தில் மட்டுமே நிகழ்கிறது. ஆகையால் அனைவரும் ஓடி ஓடி மதுவனம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். மதுவனத்தில் பாப்தாதா சாகாரத்திலும் சந்திப்புச் செய்விக்கின்றார், கூடவே சகஜ நினைவின் மூலம் அவ்யக்த சந்திப்பும் செய்விக்கின்றார். ஏனெனில் மதுவன பூமிக்கு ஆன்மீக சந்திப்பு, சாகார ரூபத்தில் சந்திப்பின் அனுபவத்திற்கான வரதானம் கிடைத்திருக்கிறது. வரதானி பூமியாக இருக்கின்ற காரணத்தினால் சந்திப்பின் அனுபவம் எளிதாகச் செய்கிறீர்கள். வேறு எந்த இடத்திலும் ஞானக் கடல் மற்றும் ஞான நதிகளின் சந்திப்பு விழா நடைபெறுவது கிடையாது. கடல் மற்றும் நதிகளின் சந்திப்பு நடைபெறுவது இந்த ஒரே ஒரு இடத்தில் தான். இப்படிப்பட்ட மகான் வரதானி பூமிக்கு வந்திருக்கிறீர்கள் - இவ்வாறு புரிந்திருக்கிறீர்களா?

தபஸ்யா ஆண்டில் விசேஷமாக இந்தக் கல்பத்தில் முதல் முறையாகச் சந்திப்பதற்கு வந்திருக்கும் குழந்தைகளுக்குத் பொன்னான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. எவ்வளவு அதிர்ஷ்ட சாலிகள்! தபஸ்யாவின் ஆரம்பத்திலேயே புதுக் குழந்தைகளுக்கு அதிகப்படியான பலம் கிடைத்திருக்கிறது. ஆக எதிர்காலத்திற்காக மற்றும் முன்னேறுவதற்காக இந்த அதிகப்படியான பலம் சகயோகம் செய்யும். ஆகையால் நாடகம் புதுக் குழந்தைகள் முன்னேறுவதற்கான சகயோகம் செய்திருக்கிறது. ஆகையால் நாம் தாமதமாக வந்திருக்கின்றோம் என்ற புகார் கொடுக்க முடியாது. தபஸ்யா ஆண்டிற்கும் வரதானம் கிடைத்திருக்கிறது. தபஸ்யா ஆண்டில் வரதான பூமிக்கு வருவதற்கான அதிகாரம் கிடைத்திருக்கிறது, வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த அதிகப் படியான பாக்கியம் குறைந்தது கிடையாது. இந்த ஆண்டு, மதுவன பூமி மற்றும் தனது முயற்சி - இந்த மூன்று வரதானம் விசேஷமாகப் புதுக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆக எவ்வளவு அதிர்ஷ்டசாலிகளாக ஆகிவிட்டீர்கள்! இவ்வளவு அழிவற்ற பாக்கியத்தின் போதை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இருக்கும் வரை மட்டுமே போதை இருக்கக் கூடாது, அழிவற்ற தந்தை, அழிவற்ற சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் எனில் பாக்கியமும் அழிவற்றதாக இருக்கிறது. அழிவற்ற பாக்கியத்தை அழிவற்று வைத்துக் கொள்ள வேண்டும். இது எளிதாகக் கவனம் செலுத்த வேண்டிய விசயமாகும். டென்சன் ஏற்படுத்தும் அடேன்சன் (கவனம்) கிடையாது. சகஜமாகக் கவனம் செலுத்த வேண்டும். கடின உழைப்பிற்கான விசயம் என்ன இருக்கிறது? என்னுடைய தந்தையை அறிந்து கொண்டேன், ஏற்றுக் கொண்டேன். ஆக எதை அறிந்து கொண்டோம், ஏற்றுக் கொண்டோம், அனுபவம் செய்து விட்டோம், அதிகாரம் பிராப்தியாகக் கிடைத்து விட்டது எனில் பிறகு கடினம் எதில் இருக்கிறது? ஒரு பாபா மட்டுமே என்னுடையவர் என்ற அனுபவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே முழு ஞானமாகும்.

ஒரு பாபா என்ற வார்த்தையில் முதல், இடை, கடையின் முழு ஞானமும் கலந்திருக்கிறது. ஏனெனில் விதை அல்லவா! விதையில் முழு மரமும் அடங்கியிருக்கும் அல்லவா! விஸ்தாரத்தை மறந்து விடலாம், ஆனால் சாரமாகிய ஒரு பாபா என்ற சப்தம் நினைவில் வைத்துக் கொள்வது கடினம் அல்ல. சதா எளிதாக இருக்கிறது அல்லவா! சில நேரம் எளிது, சில நேரம் கடினம் கிடையாது. சதா பாபா என்னுடையவராக இருக்கின்றாரா? அல்லது அவ்வப் பொழுது என்னுடையவராக இருக்கின்றாரா? சதா பாபா என்னுடையவர் எனும் போது நினைவும் சதா எளிதாக இருக்கும். கடின விசயம் எதுவும் கிடையாது. நீங்கள் என்னுடையவர் கள் என்று பகவான் கூறுகின்றார். நீங்கள் என்னுடையவர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பிறகு என்ன கடினம் இருக்கிறது? ஆகையால் விசேஷமாகப் புதுக் குழந்தைகள் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். இப்பொழுதும் முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்பொழுது கடைசிச் சமாப்திக்கான விசில் ஊதப்படவில்லை. ஆகையால் பறங்கள் மற்றும் பிறரையும் பறக்க வைத்துக் கொண்டே செல்லுங்கள். இதற்கான விதி - வீணானவை களிலிருந்து விடுவியுங்கள். பட்ஜெட், சேமிப்புக் கணக்கை அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஏனெனில் 63 பிறவிகள் சேமிப்பு செய்யவில்லை, மாறாக இழந்தீர்கள். அனைத்து சேமிப்பு களையும் வீணாக இழந்து அழித்து விட்டீர்கள். சுவாசத்தின் பொக்கிஷத்தையும் இழந்தீர்கள், சங்கல்பத்தின் பொக்கிஷத்தையும் இழந்தீர்கள், நேரத்தின் பொக்கிஷத்தையும் இழந்தீர்கள், குணங்களின் பொக்கிஷத்தையும் இழந்தீர்கள், சக்திகளின் பொக்கிஷத்தையும் இழந்தீர்கள், ஞானப் பொக்கிஷத்தையும் இழந்தீர்கள். எவ்வளவு பொக்கிஷங்கள் காலியாகி விட்டன! இப்பொழுது இந்த அனைத்துப் பொக்கிஷங்களையும் சேமிக்க வேண்டும். சேமிக்கக் கூடிய நேரமும் இது தான், மேலும் சேமிப்பதற்கான விதியும் தந்தையின் மூலம் எளிதாகக் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. அழியக் கூடிய பொக்கிஷங்களைச் செலவு செய்தால் குறைந்து விடும். ஆனால் இந்த அனைத்துப் பொக்கிஷங் களையும் எந்த அளவிற்குத் தனக்காக, மற்றவர் களுக்காகச் சுப விருத்தியும் காரியத்தில் பயன்படுத்துவீர்களோ, அந்த அளவிற்குச் சேமிப்பு ஆகிக் கொண்டே செல்லும், அதிகரித்துக் கொண்டே செல்லும். இங்குப் பொக்கிஷங்களைக் காரியத்தில் பயன்படுத்த வேண்டும், இது சேமிப்பதற்கான விதியாகும். அங்கு வைத்திருப்பது சேமிப்பதற்கான விதியாகும், இங்கு ஈடுபடுத்துவது சேமிப்பதற்கான விதியாகும். வித்தியாசம் இருக்கிறது. நேரத்தை தனக்காக மற்றும் மற்றவர்களுக்கான சுப காரியத்தில் ஈடுபடுத்துங்கள், சேமிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஞானத்தைக் காரியத்தில் பயன்படுத்துங்கள். அதே போன்று குணங்களை, சக்திகளை எந்த அளவிற்குப் பயன் படுத்துவீர்களோ, அந்த அளவிற்கு அதிகரிக்கும். உலகத்தினர் லாக்கரில் (இரும்புப் பெட்டகம்) வைத்து விட்டு அதிகச் சேமிப்பு இருப்பதாக நினைக்கின்றனர். அதே போன்று நீங்களும் எனது புத்தியில் அதிக ஞானம் இருக்கிறது, குணமும் என்னிடத்தில் அதிகம் இருக்கிறது, சக்திகளும் அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். லாக்கரில் வைக்காதீர்கள், பயன்படுத்துங்கள். புரிந்ததா! சேமிப்பதற்கான விதி என்ன? காரியத்தில் பயன்படுத்த வேண்டும். தனக்காகவும் பயன்படுத்துங்கள், இல்லையெனில் தளர்ந்து (லூஸ்) ஆகிவிடும். அனைத்துப் பொக்கிஷங் களும் என்னிடத்தில் நிறைந்திருக்கிறது என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். ஆனால் நிறைந்திருப்பதன் அடையாளம் என்ன? நிறைந் திருக்கிறது என்றால் சேமிப்பாகி இருக்கிறது. அதன் அடையாளம் - தனக்காகவும் அல்லது மற்றவர்களுக்காகவும் சரியான நேரத்தில் காரியத்தில் பயன்பட வேண்டும். காரியத்தில் பயன்படவே யில்லை, ஆனால் என்னிடத்தில் அதிகம் சேமிப்பு இருக்கிறது என்று கூறுகிறீர்கள். இதை யதார்த்த சேமிப்பு விதி என்று கூற முடியாது. ஆகையால் யதார்த்த விதி இல்லை யெனில் சரியான நேரத்தில் சம்பூர்ணம் என்ற வெற்றி கிடைக்காது. ஏமாற்றம் அடைந்து விடுவீர்கள். வெற்றி கிடைக்காது.

குணங்களை, சக்திகளைக் காரியத்தில் பயன்படுத்துங்கள், அப்பொழுது அதிகரித்துக் கொண்டே செல்லும். எனவே பட்ஜெட்டுக்கான விதி, சேமிப்பிற்கான விதி கடைபிடியுங்கள். பிறகு வீணானவைகளின் கணக்கு தானாகவே மாறி வெற்றியுடையதாக ஆகிவிடும். பக்தியில் நியமம் - உங்களிடத்தில் எவ்வளவு தான் ஸ்தூல செல்வம் இருந்தாலும் தானம் செய்யுங்கள், வெற்றி ஆக்குங்கள் - அது அதிகரிக்கும் என்று கூறுவார்கள். பக்தியிலும் வெற்றி ஆக்குவதற்கு எவ்வளவு ஆர்வம்-உற்சாகத்தை அதிகப்படுத்துகின்றனர்! ஆக நீங்களும் தபஸ்யா ஆண்டில் எவ்வளவு வீண் ஆக்கினேன்? என்று மட்டுமே சோதிக்காதீர்கள். வீண் ஆக்குவது என்பது தனி விசயம். ஆனால் எவ்வளவு வெற்றியாக்கினேன்? என்பதைச் சோதியுங்கள். மேற் கூறிய அனைத்து பொக்கிஷங்களையும்! குணங்களும் தந்தை கொடுத்ததாகும். இது என்னுடைய குணம், என்னுடைய சக்தி - இந்தத் தவறு கனவிலும் செய்யாதீர்கள். இது தந்தை கொடுத்தத் தாகும் அதாவது பிரபு கொடுத்ததாகும். பரமாத்மா கொடுத்ததை என்னுடையது என்று நினைப்பது மகா பாவமாகும். சாதாரண முறையில் சில குழந்தைகள் எனது இந்தக் குணத்தைப் பயன்படுத்துவது கிடையாது, என்னிடம் இந்தச் சக்தி இருக்கிறது, என்னுடைய புத்தி நன்றாக இருக்கிறது - இதைப் பயன்படுத்துவது கிடையாது என்று நினைக்கவும் செய்கின்றனர், பேசவும் செய்கின்றனர். எனது என்பது எங்கிருந்து வந்தது? எனது என்று கூறுகிறீர்கள் எனில் அசுத்தம் ஆகிவிட்டீர்கள். 63 பிறவிகளில் பக்தியிலும் எனது என்று நினைக்காதீர்கள், உனது என்று நினையுங்கள் என்று அறிவுரை கூறுவர். ஆனாலும் நினைக்கவில்லை. ஞான மார்க்கத்திலும் உனது என்று கூறிவிட்டு எனது என்று நினைப்பது - இந்த ஏமாற்றுவது இங்குச் செல்லுபடி ஆகாது. ஆகையால் பிரபுவின் பிரசாதத்தைத் தனது என்று நினைப்பது - இது அபிமானம் மற்றும் அவமானம் செய்வதாகும். பாபா-பாபா என்ற வார்த்தையை ஒருபோதும் மறக்காதீர்கள். பாபா சக்தி கொடுத்திருக்கின்றார், புத்தி கொடுத்திருக்கின்றார், பாபாவின் காரியமாகும், பாபாவின் சென்டர், அனைத்துப் பொருட்களும் பாபாவினுடையது. என்னுடைய சென்டர், நான் உருவாக்கியிருக்கின்றேன், எனக்கு உரிமை இருக்கிறது என்று நினைக்காதீர்கள். என்னுடையது என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? உங்களுடையதா என்ன? மூட்டையைப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா என்ன? நான் சென்டர் உருவாக்கி யிருக்கின்றேன், ஆகையால் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று சில குழந்தைகள் போதையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் யாருடைய சென்டரை உருவாக்கியிருக்கிறீர்கள்? பாபாவின் சென்டர் அல்லவா! எப்போது பாபாவிற்கு அர்பணித்து விட்டீர்களோ, பிறகு என்னுடையது எங்கிருந்து வந்தது? புத்தி மாறும் போது தான் என்னுடையது என்று கூறுகிறீர்கள். என்னுடையது-என்னுடையது என்பது தான் அசுத்தம் ஆக்குகிறது. புதியவர்களும் இப்பொழுது பழையவர்களாக ஆகி வந்திருக்கிறீர்கள் அல்லவா! நிச்சய புத்திக்கான படிவம் நிரப்பி வந்திருக்கிறீர்கள் தானே? ஆக அனைவரின் முதல் உறுதிமொழி - உடல், மனம், பொருள் மற்றும் புத்தி அனைத்தும் உன்னுடையது. இந்த உறுதிமொழி அனைவரும் செய்திருக்கிறீர்களா?

இப்பொழுது உறுதிமொழி செய்பவர்கள் எனில் கை உயர்த்துங்கள். திடீர் தேவைக்குச் சிறிது வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, அனைத்தையும் தந்தையிடம் எப்படிக் கொடுக்க முடியும்? சிறிது தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா! இது புத்திசாலியின் காரியம் என்று நினைப்பவர் கை உயர்த்துங்கள். சிறிது தனியாக ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா? என்னை யார் பார்க்கிறார்கள்? என்று பிறகு கூறக் கூடாது. இவ்வளவு கூட்டத்தில் என்னை யார் கவனிக்கப் போகிறார்கள்? தந்தையிடம் மிகத் தெளிவான டி.வி இருக்கிறது. அதில் மறைக்க முடியாது. ஆகையால் யோசித்து, புரிந்து கொண்டு சிறிது வைத்துக் கொள்ள வேண்டுமா, பரவாயில்லை வைத்துக் கொள்ளுங்கள். பாண்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? சிறிது வைத்துக் கொள்ள வேண்டுமா? நன்றாக யோசியுங்கள். யார் வைத்துக் கொள்ள வேண்டுமோ அவர்கள் இப்பொழுது கை உயர்த்துங்கள், தப்பித்துக் கொள்வீர்கள். இல்லையெனில் இந்த நேரம், இந்தச் சபை, நீங்கள் தலை அசைப்பது போன்ற அனைத்தும் காண்பிக்கப்படும். ஒருபோதும் என்னுடையது என்று வைத்துக் கொள்ளாதீர்கள். பாபா என்று கூறினீர்களா, பாவம் போய் விடும். பாபா என்று கூறவில்லையெனில் பாவம் ஏற்பட்டு விடும். பாவத்திற்கு வசமாகின்ற போது புத்தி வேலை செய்வது கிடையாது. எவ்வளவு வேண்டுமென்றாலும் புரிய வையுங்கள், இல்லை இது தான் சரியானது, இவ்வாறு நடந்தே ஆக வேண்டும், இவ்வாறு செய்தே ஆக வேண்டும் என்று கூறுவர். தந்தைக்கும் கருணை ஏற்படுகிறது. ஏனெனில் அந்த நேரத்தில் பாவத்திற்கு வசமாகி இருக்கின்றனர். தந்தையை மறக்கின்ற போது பாவம் வந்து விடுகிறது. மேலும் பாவத்திற்கு வசமாகி இருக்கின்ற காரணத் தினால் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்பதைச் சுயம் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் மயக்கத்தில் இருக்கின்றனர். எனவே சதா ஞானத்தின் விழிப்புணர்வில் இருங்கள். பாவத்தின் ஆவேசத்தில் வராதீர்கள். இடையிடை யில் மாயாவின் அலை வருகிறது. புதியவர்கள் நீங்கள் இந்த விசயங்களி-ருந்து தப்பித்து இருங்கள். எனது எனது என்பதில் செல்லாதீர்கள். சிறிது பழையவர் களாக ஆகிவிட்டால் பிறகு எனது எனது என்ற மாயை அதிகம் வருகிறது. எனது சிந்தனை, புத்தியே என்னுடையது இல்லை எனும் போது எனது சிந்தனை எங்கிருந்து வந்தது? ஆகச் சேமிப்பு செய்வதற்கான விதி என்ன என்பதைப் புரிந்து கொண்டீர்களா? காரியத்தில் பயன்படுத்த வேண்டும். வெற்றி ஆக்குங்கள், தனது ஈஸ்வரிய சன்ஸ்காரங்களையும் வெற்றி ஆக்குங்கள், அப்பொழுது வீண் சன்ஸ்காரம் தானாகவே நீங்கி விடும். ஈஸ்வரிய சன்ஸ்காரங்களைக் காரியத்தில் பயன்படுத்துவது கிடையாது. ஆகையால் அது பெட்டகத்தில் (லாக்கர்) இருக்கிறது, பழையது காரியம் செய்து கொண்டிருக்கிறது. சிலருக்கு வங்கியில் அல்லது அலமாரியில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. மிக நல்ல ஆடை இருக்கும், செல்வம் இருக்கும், பொருட்கள் இருக்கும். இருப்பினும் பழைய வைகளையே பயன்படுத்துவர். பழைய பொருட்களின் மீது அவர்களுக்கு அன்பு இருக்கும். அலமாரியில் வைத்த பொருள் அலமாரியிலேயே இருந்து விடும். மேலும் அவர்கள் பழையதிலேயே சென்று விடுவார்கள். எனவே பழைய சன்ஸ்காரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது மற்றும் ஈஸ்வரிய சன்ஸ்காரம், புத்தியை பெட்டகத்தில் வைப்பது - இவ்வாறு செய்யாதீர்கள். காரியத்தில் பயன்படுத்துங்கள், வெற்றி ஆக்குங்கள். ஆக எவ்வளவு வெற்றி ஆக்கியிருகின்றேன்? என்று சார்ட் வையுங்கள். வெற்றி ஆக்குவது என்றால் பாதுகாப்பது அல்லது அதிகரிப்பதாகும். மனதின் மூலம் வெற்றி ஆக்குங்கள், வார்த்தைகளின் மூலம் வெற்றி ஆக்குங்கள். சம்பந்தம்-தொடர்பு, காரியம், தனது சிரேஷ்ட சகவாசம், தனது சக்திசாலியான விருத்தி மூலம் வெற்றி ஆக்குங்கள். எனது விருத்தி நன்றாகத் தான் இருக்கிறது என்று இருந்து விடாதீர்கள். ஆனால் எவ்வளவு வெற்றி ஆக்கியிருக் கின்றோம்? எனது சன்ஸ்காரம் சாந்தியாகத் தான் இருக்கிறது. ஆனால் எவ்வளவு வெற்றி ஆக்கியிருக்கின்றேன்? காரியத்தில் பயன்படுத்தி இருக்கின்றேன்? இந்த விதியை கடைபிடிக்கும் போது சம்பூர்ன நிலைக்கான பலன் எளிதாக அனுபவம் செய்வீர்கள். வெற்றி ஆக்குவது தான் வெற்றிக்கான சாவியாகும். புரிந்ததா? இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நான் மிக நல்ல குணங்கள் உடையவனாக இருக்கின்றேன், என்னால் நன்றாகச் சொற்பொழிவு செய்ய முடியும், நான் மிக நல்ல ஞானியாக இருக்கின்றேன், எனது யோகாவும் மிக நன்றாக இருக்கிறது என்று தன்னை மட்டுமே குஷிப்படுத்திக் கொள்ளக் கூடாது. நன்றாக இருக்கிறது எனில் பயன்படுத்த வேண்டும் அல்லவா! வெற்றி ஆக்குங்கள். எளிய விதி - காரியத்தில் பயன்படுத்துங்கள் மற்றும் அதிகப் படுத்துங்கள். உழைப்பின்றி அதிகமாகிக் கொண்டே செல்லும், 21 பிறவிகளுக்கு ஓய்வாகச் சாப்பிடுவீர்கள். அங்கு உழைக்க வேண்டியிருக்காது.

விசாலமான கூட்டம் (ஓம்சாந்தி பவன் ஹால் நிறைந்து விட்டது. எனவே சிலர் கீழே மெடிடேசன் ஹால், சோட்டே ஹாலில் (ஹிஸ்டிரி ஹால்) அமர வேண்டியிருக்கிறது. ஹால் சிறியதாக ஆகிவிட்டது.) உங்களது இந்த நினைவார்த்தம் சாஸ்திரங்களில் பாடப்பட்டிருக்கிறது - முதலில் கிளாசில் தண்ணீர் நிரப்பினார்கள், பிறகு பாத்திரத்தில் நிரப்பினார்கள், பிறகு குளத்தில் நிரப்பினார்கள், குளத்திலிருந்து நதியில் நிரப்பினார்கள். இறுதியில் எங்குச் சென்றது? கடலில். இந்தக் கூட்டம் முதலில் ஹிஸ்டிரி ஹாலில் நடைபெற்றது, பிறகு மெடிடேசன் ஹாலில் நடைபெற்றது, இப்பொழுது ஓம்சாந்தி பவனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் எங்கு நடைபெறும்? ஆனால் சாகார சந்திப்பு இல்லாமல் அவ்யக்த சந்திப்பு ஏற்படாது என்பது இதன் பொருள் அல்ல. அவ்யக்த சந்திப்பிற்கான பயிற்சி நேரத்திற்குத் தகுந்தாற் போன்று அதிகரித்தே ஆக வேண்டும், அதிகரிக்கவே செய்யும். தாதிகள் கருணை உள்ளத் துடன் இருந்து உங்கள் அனைவரின் மீதும், புதியவர்கள் மீது விசேஷ கருணை காண்பித்திரு கிறார்கள். ஆனால் அவ்யக்த அனுபவத்தை அதிகரிக்க வேண்டும் - இதுவே சரியான நேரத்தில் காரியத்திற்கு உதவும். பாருங்கள், புதுப்புது குழந்தைகளுக்காகவே பாப்தாதா விசேஷமாக இந்தச் சாகார சந்திப்பிற்கான பாகம் இன்று வரை நடித்துக் கொண்டிருக்கின்றார். ஆனாலும் இது எது வரை?

அனைவரும் குஷியாக இருக்கிறீர்களா? திருப்தியாக இருக்கிறீர்களா? வெளியில் அமர்ந்திருந் தாலும் கூடத் திருப்தியாக இருக்கிறீர்களா? இதுவும் நாடகத்தில் பாகம் இருக்கிறது. முழு அபுவும் நம்முடையதாக ஆகிவிடும் என்று கூறுகிறீர்கள் எனில் அது எவ்வாறு நடக்கும்? முதலில் நீங்கள் அடி எடுத்து வையுங்கள். பிறகு இப்பொழுது தர்மசாலை என்ற பெயரில் இருப்பது நம்முடையதாக ஆகிவிடும். பாருங்கள், அயல் நாட்டிலும் இப்பொழுது இவ்வாறு நடைபெற ஆரம்பித்து விட்டது. தேவாலயம் (சர்ச்) அந்த அளவிற்கு நடத்த முடியவில்லை யெனில் பி.கு விடம் கொடுத்து விட்டனர். இவ்வாறு பெரிய பெரிய இடங்கள் நடத்த முடிய வில்லையெனில் தானாகவே வந்து கொடுப்பார்கள் அல்லவா! ஆகப் பிராமணர்கள் பாதங்கள் ஒவ்வொரு இடத்திலும் சென்று கொண்டிருக்கிறது, இதிலும் இரகசியம் இருக்கிறது. பிராமணர்கள் இருப்பதற்கு நாடகத்தில் பாகம் கிடைத்திருக்கிறது. முழுவதும் நம்முடையதாக ஆகிவிடும் போது பிறகு என்ன செய்வீர்கள்? நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள் என்று தானாகவே கொடுப்பார்கள். எங்களையும் கவனியுங்கள், ஆசிரமத்தையும் கவனியுங்கள். எந்த நேரத்தில் என்ன பாகம் கிடைக்கிறதோ, அதில் திருப்தி அடைந்து அந்த நடிப்பு நடியுங்கள். நல்லது.

நாலாபுறமும் சந்திப்புச் செய்யக் கூடிய, ஞான இரத்தினங்களைத் தாரணை செய்யக் கூடிய சாதகப் பறவை ஆத்மாக்களுக்கு, ஆகாரம் அல்லது சாகார ரூபத்தில் சந்திப்பு விழா கொண்டாடக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா அனைத்துப் பொக்கிஷங்களையும் வெற்றி ஆக்கி வெற்றி சொரூபம் ஆகக் கூடிய ஆத்மாக்களுக்கு, சதா என்னுடைய பாபா மற்றும் எந்த எல்லைக்குட்பட்ட எனது என்பதைத் துளியளவும் வைத்துக் கொள்ளாத எல்லை யற்ற வைராக்கியமுடைய ஆத்மாக்களுக்கு, சதா ஒவ்வொரு நேரத்திலும் விதியின் மூலம் சம்பூர்ன நிலை என்ற பலனை பிராப்தியாக அடையக் கூடிய குழந்தைகளுக்குப் பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாதிகளிடம்: சதா ஏதாவது புதிய காட்சி இருக்க வேண்டும் அல்லவா! இதுவும் நாடகத்தில் புதிய காட்சியாக இருந்தது, அது திரும்பவும் நடைபெற்றது. இந்த ஹாலும் சிறியதாக ஆகி விடும் என்று நினைத்தீர்களா? சதா ஒரே காட்சி நன்றாக இருக்காது. சில நேரத்திற்கான காட்சி நன்றாக இருக்கிறது. இதுவும் ஒரு ஆன்மீக காட்சி அல்லவா! இந்த அனைத்து ஆத்மாக்களின் சங்கல்பம் நிறைவேற வேண்டும் என்று இருந்தது. ஆகையால் இந்தக் காட்சி நடைபெற்றது. இங்கிருந்து அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது - பரவாயில்லை, வாருங்கள். ஆக என்ன செய்வீர்கள்? இப்பொழுது இன்னும் புதியவர்கள் அதிகமாவார்கள். பழையவர்கள் பழையவர் களாக ஆகிவிட்டனர். எவ்வாறு உற்சாகத்துடன் வந்திருக்கிறீர்களோ அவ்வாறு தன்னைச் செட் செய்து கொண்டீர்கள். மிக நன்றாகச் செய்தீர்கள். விசாலம் ஆகியே தீர வேண்டும். எண்ணிக்கை குறையவே குறையாது. விஷ்வ கல்யாணகாரி என்ற பட்டம் இருக்கிறது எனில் உலகிற்கு முன் இது ஒன்றுமே கிடையாது. அதிகரிக்கவும் செய்யும், மேலும் விதியும் புதியதாக உருவாக்கப்படும். ஏதாவது புதிய விதி உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது சக்திசாலியாக விருத்தி ஏற்படும். தபஸ்யாவின் மூலம் விருத்தி சக்திசாலியாக ஆகிவிடும் போது தானாகவே விருத்தியின் மூலம் ஆத்மாக்களின் விருத்தி மாறிவிடும். நல்லது. நீங்கள் அனைவரும் சேவை செய்து களைப்படையவில்லை தானே! மகிழ்ச்சியோடு வந்து கொண்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான். நல்லது.

வரதானம்:
சிரேஷ்ட காரியத்தின் மூலம் ஆசிர்வாதத்தின் இருப்பை (ஸ்டாக்) சேமிக்கக் கூடிய சைத்தன்ய தரிசனம் கொடுக்கும் மூர்த்தி ஆகுக.

எந்தக் காரியம் செய்தாலும் அதில் ஆசிர்வாதம் அடைய வேண்டும் மற்றும் கொடுக்க வேண்டும். சிரேஷ்ட காரியம் செய்வதன் மூலம் அனைவரின் ஆசிர்வாதம் தானாகவே கிடைக்கும். இவர் மிகவும் நன்றாக இருக்கின்றார் என்று அனைவரின் வாயிலும் வெளிப்படும். ஆஹா, இவரது காரியம் நினைவார்த்தமாக ஆகிவிடுகிறது. எந்தக் காரியம் வேண்டு மென்றாலும் செய்யுங்கள், ஆனால் குஷி அடையுங்கள் மற்றும் குஷி கொடுங்கள், ஆசிர்வாதம் அடையுங்கள் மற்றும் ஆசிர்வாதம் கொடுங்கள். இப்பொழுது சங்கமத்தில் ஆசிர்வாதம் அடைந்து மற்றும் கொடுக்கும் போது தான் உங்களது ஜடச் சித்திரத்தின் மூலமும் ஆசிர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும். மேலும் நிகழ்காலத்திலும் சைத்தன்ய தரிசனம் கொடுக்கும் மூர்த்தியாக ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:
சதா ஆர்வம்-உற்சாகத்துடன் இருக்கும் போது சோம்பல் அழிந்து விடும்.