12.07.2020    ஓம் சாந்தி   அவ்யக்த பாப்தாதா ரிவைஸ்    22.02.1986    மதுபன்


 

ஆன்மீக சேவை - சுயநலமற்ற சேவை

 

இன்று அனைத்து ஆத்மாக்களின் உலகத்திற்கு நன்மை செய்யக்கூடிய தந்தை தனது சேவாதாரி, சேவைக்கு துணையாக இருக்கக்கூடிய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்து பாப்தாதாவின் கூடவே சேவாதாரி குழந்தைகள் துணையாக இருக்கிறார்கள் மற்றும் கடைசி வரை பாப்தாதாவும் குப்தமான ரூபத்தில் மற்றும் வெளிப்படையான ரூபத்தில் குழந்தைகளுக்கு உலக சேவைக்கான சேவையில் நிமித்தமாக மாற்றியிருக்கிறார். ஆரம்பத்தில் பிரம்மா பாபா மற்றும் பிராமண குழந்தைகள் குப்தமான ரூபத்தில் சேவையில் நிமித்தமாக இருக்கிறார்கள். இப்பொழுது சேவாதாரி குழந்தைகள் சக்தி சேனையாகவும் பாண்டவ சேனையாகவும் உலகத்திற்கு முன்னால் வெளிப்படையான ரூபத்தில் காரியம் செய்து கொண்டிருக்கிறார்கள். சேவைக்கான ஊக்க-உற்சாகம் அதிகமாக குழந்தைகளிடத்தில் நன்றாகவே தென்படுகிறது. சேவைக்கான ஈடுபாடு ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது, மேலும் இறுதி வரையும் இருக்கும். பிராமண வாழ்க்கையே சேவைக்கான வாழ்க்கை தான். பிராமண ஆத்மாக்கள் சேவையில்லாமல் வாழவே முடியாது. மாயாவிடமிருந்து உயிர் பிழைத்திருப்பதற்கான சிரேஷ்ட சாதனம் - சேவை மட்டும் தான். சேவை யோகம் நிறைந்தவராகக் கூட மாற்றுகிறது. ஆனால் எப்படிப்பட்ட சேவை? முதலாவதாக வார்த்தைகளின் சேவை, கேட்டவற்றை சொல்லக்கூடிய சேவை. இரண்டாவது மனதின் மூலம் வார்த்தைகளின் சேவை. கேட்கப்பட்ட இனிமையான வார்த்தைகளின் சொரூபம் ஆகி, சொரூபத்தின் மூலம் சேவை - சுயநலமற்ற சேவை. தியாகம், தபஸ்யா சொரூபத்தின் மூலம் சேவை. எல்லைக்குட் பட்ட விருப்பத்திலிருந்து விடுபட்டு சுயநலமற்ற சேவை. இதைத் தான் ஈஸ்வரிய சேவை, ஆன்மீக சேவை என்று சொல்லப்படுகிறது. யார் வாயின் மூலம் மட்டும் சேவை செய்கிறார்களோ, அதை தன்னை மகிழ்விப்பதற்கான சேவை என்று மட்டும் தான் சொல்லப்படுகிறது. அனைவரையும் மகிழ்விப்பதற்கான சேவை, மனம் மற்றும் வார்த்தைகளின் கூடவே நடைபெறுகிறது. மனதின் மூலம் என்றாலே மன்மனா பவ என்ற மனநிலையில் வார்த்தைகளின் சேவை.

 

பாப்தாதா இன்று தன்னுடைய வலது கரமான சேவாதாரி மற்றும் இடது கரமான சேவாதாரிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இருவருமே சேவாதாரிகள் தான், ஆனால் வலது கரம் மற்றும் இடது கரம் இரண்டிலும் வித்தியாசம் இருக்குமல்லவா! வலது கரம் எப்பொழுதுமே சுய நலமற்ற சேவாதாரிகளாக இருக்கிறார்கள். இடது கரம் ஏதாவதொரு எல்லைக்குட்பட்ட இந்த ஜென்மத்திற்காக சேவைக்கான பலனை பெறுவதற்கான ஆசையின் மூலம் சேவைக்கு நிமித்தம் ஆவது. அவர்கள் (வலதுகரம்) குப்த சேவாதாரி மற்றும் இவர்கள் (இடது கரம்) பெயருக்கான சேவாதாரி. அவ்வப்பொழுது சேவை செய்வது அப்பொழுதே பெயர் கிடைக்கிறது - மிகவும் நல்லது, மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதே செய்தோம், இப்பொழுதே அடைந்து விட்டோம். சேமிப்பு கணக்கு உருவாகவில்லை. குப்த சேவாதாரி என்றாலே பலனை எதிர்பார்க்காத சேவாதாரி. ஆகையால் குப்த சேவாதாரி வெற்றியின் குஷியில் சதா நிரம்பியிருப்பார்கள். பல குழந்தைகளுக்கு நாங்கள் செய்கிறோம், ஆனால் பெயர் வருவதில்லை என்ற எண்ணம் வருகிறது. மேலும் யார் வெளிதோற்றத்தில் பெயருக்காக சேவை செய்து காட்டுகிறார்கள், அவர்களுக்கு பெயர் அதிகமாக கிடைக்கிறது தான், ஆனால் அவ்வாறில்லை. யார் பலனை எதிர்பார்க்காமல் அழிவற்ற பெயரை சேமிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய மனதின் ஒலி (வார்த்தை), மனதை சென்று அடைகிறது. மறைந்திருக்க முடியாது. அவர்களுடைய முகத்தில், மனதில் உண்மையான சேவாதாரியின் ஜொலிப்பு அவசியம் தென்படுகிறது. ஒருவேளை யாராவது பெயருக்கு சேவை செய்பவர்கள், இங்கேயே பெயர் சேமிக்கிறார்கள் என்றால், மேலும் செய்கிறார்கள், அடைகிறார்கள், முடித்து விட்டார்கள், எதிர்காலம் சிரேஷ்டமாகவும் இராது, நிலையானதாகவும் இராது ஆகையால் பாப்தாதாவிடம் அனைத்து சேவாதாரிகளின் பதிவேடு இருக்கிறது. சேவை செய்து கொண்டே செல்லுங்கள், பெயர் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தை எண்ணாதீர்கள். சேமிப்பு ஆகிறதா என்பதை யோசியுங்கள். அழிவற்ற பலனின் அதிகாரி ஆகுங்கள். அழிவற்ற ஆஸ்திக்காக வந்திருக்கிறேன். சேவையினுடைய பலனை அல்பகாலத்திற்காக அடைகிறோம் என்றால், அழிவற்ற ஆஸ்தியின் அதிகாரம் குறைந்துவிடும். ஆகையால் சதா அழியக்கூடிய விருப்பங்களிலிருந்து விடுபட்டு, பலனை எதிர்பார்க்காத சேவாதாரி, வலது கரமாகி சேவையில் முன்னேறிக்கொண்டே செல்லுங்கள். குப்த சேவைக்கு மகத்துவம் அதிகமாகும். அப்படிப்பட்ட ஆத்மா எப்பொழுதுமே தமக்குள் நிரம்பியிருப்பார்கள். கவலையற்ற இராஜாவாக இருப்பார்கள். பெயர்-புகழைப் பொருட் படுத்துவதில்லை. இதில் தான் கவலையற்ற இராஜாவாக ஆக முடியும். அதாவது சதா சுயமரியாதையின் அதிகாரியாக இருப்பார்கள். எல்லைக்குட்பட்ட மதிப்பின் சிம்மாசத்தில் அல்ல. சுயமரியாதையின் சிம்மாசனம், அழிவற்ற சிம்மாசனம். நிலையான, நெடுங்கால பிராப்தியின் சிம்மாசனமாகும். இதைத் தான் விஷ்வ கல்யாணக்காரி சேவாதாரி என்று சொல்லப்படுகிறது. ஒருபொழுதும் சாதாரண எண்ணங்களின் காரணத்தினால் உலக சேவைக்கான காரியத்தில் வெற்றியை அடைவதற்குப் பின்னால் செல்ல வேண்டாம். தியாகம் மற்றும் தபஸ்யாவின் மூலம் சதா வெற்றியை அடைந்து முன்னேறிக்கொண்டேயிருக்க வேண்டும். புரிந்ததா?

 

சேவாதாரி என்று யாரைச் சொல்லப்படுகிறது? அனைவரும் சேவாதாரிகள் தானே? சேவை மனநிலையைநிலைகுலையச் செய்ய வைக்கிறது என்றால், அது சேவை அல்ல. சேவையில் ஏற்ற தாழ்வுகள் நிறையவே வருகிறது, தடைகள் கூட சேவையில் தான் வருகிறது, மேலும் தடைகளற்றவர்களாகவும் கூட சேவைதான் மாற்றுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். எந்த சேவை தடை ரூபம் ஆகிறதோ, அது சேவையல்ல. அதை உண்மையான என்று சொல்ல முடியாது, பெயர் அடைக்கூடிய சேவாதாரி என்று தான் சொல்ல முடியும். உண்மையான சேவை என்பது உண்மையான வைரமாகும். எப்படி உண்மையான வைரம் ஒருபொழுதும் ஜொலிப்பதிலிருந்து மறைக்க முடியாது. அப்படி உண்மையான சேவாதாரி உண்மையான வைரமாக இருப்பார்கள். போலியான வைரத்தில் எவ்வளவு தான் ஜொலிப்பு நன்றாக இருந்தாலும், ஆனால் மகத்துவம் எதற்கு? உண்மையானதுக்குத்தான் மகத்துவம் இருக்கிறதல்லவா! போலியானதற்கு இல்லை அல்லவா! விலைமதிப்பிட முடியாத இரத்தினம் உண்மையான சேவாதாரி ஆவார்கள். பல ஜென்மங்களின் மகத்துவம் உண்மையான சேவாதாரிகளினுடையதாக இருக்கிறது. பெயருக்காக செய்யும் சேவை அல்பகாலத்தின் ஜொலிப்பாக இருக்கும். ஆகையால் சதா சேவாதாரி ஆகி, சேவையின் மூலம் உலகத்திற்கு நன்மை செய்துக் கொண்டே செல்லுங்கள். சேவையின் மகத்துவம் என்னவென்று! புரிந்தா! யாரும் குறைந்தவர் அல்ல, ஒவ்வொரு சேவாதாரியும் அவரவது விசேஷத்தன்மையின் மூலம் விசேஷ சேவாதாரி ஆவார்கள். தன்னை குறைந்தவர்களாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள், மேலும் செய்வதினால் பெயர் புகழுக்கான ஆசையையும் வைக்காதீர்கள். சேவையை உலக நன்மைக்காக அர்ப்பணம் செய்யுங்கள். அவ்வாறே பக்தியில் கூட யார் குப்தமாக (ரகசியமாக) தானம்- புண்ணியம் செய்கிறார்களோ, அவர்களின் எண்ணம் கூட அனைவருக்கும் நன்மை ஏற்படவேண்டுமென்று தான் இருக்கிறது. எனக்கு பலன் கிடைக்கிறதோ, இல்லையோ, அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும், அனைவரின் சேவையில் அர்ப்பணம் ஆக வேண்டுமென்ற விருப்பம் தான் இருக்கிறது. ஒருபொழுதும் தனக்காக என்ற விருப்பம் வைக்காதீர்கள். அவ்வாறே அனைவருக்காகவும் சேவை செய்யுங்கள். அனைவரின் நன்மைக்கான வங்கியில் சேமிப்பு செய்துக் கொண்டே செல்லுங்கள். ஆகையால் அனைவரும் என்ன ஆக வேண்டும் - பலனை எதிர்பார்க்காத சேவாதாரி. இப்பொழுது யாரும் உங்களை கேட்கவில்லையென்றால் 2500 ஆண்டுகள் உங்களை கேட்பார்கள். ஒரு ஜென்மத்திற்கு யாராவது கேட்க வேண்டுமா? அல்லது 2500 ஆண்டுகள் யாராவது கேட்க வேண்டுமா, எது அதிகப்படியானது. அது அதிகமானது இல்லையா! எல்லைக்குட்பட்ட எண்ணங்களிலிருந்து விடுபட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட சேவாதாரி ஆகி பாபாவின் இதய சிம்மாசனதாரி, கவலையற்ற இராஜா ஆகி, சங்கமயுகத்தின் குஷியை, மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டேயிருங்கள். குழப்பத்தில் சலசலப்பில் வந்துவிடுகிறீர்கள் என்றால் அது சேவை அல்ல. சேவை என்றாலே பறக்க (முன்னேற) வைக்கக் கூடியது. சேவை என்றாலே கவலையற்ற இராஜாவாக ஆக்கக் கூடியது. அப்படிப்பட்ட சேவாதாரிகள் அல்லவா? கவலையற்ற மகாராஜா, கவலையற்ற உலகத்தின் மகாராஜா. இவர்களுக்குப் பின்னால் வெற்றி தானாகவே வருகிறது. வெற்றிக்குப் பின்னால் அவர்கள் செல்வதில்லை. நல்லது - எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையின் திட்டத்தை உருவாக்குகிறீர்கள் அல்லவா! எல்லைக்கு அப்பாற்பட்ட மனநிலையின் மூலம் எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையின் திட்டம் எளிதாகவே வெற்றி அடைந்தே விடுகிறது. (இரட்டை அயல்நாட்டின் சகோதர, சகோதரிகள் கூட ஒரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள், இதற்கு அனைத்து ஆத்மாக்களிடமிருந்து ஒரு நிமிடம் தியானம் செய்வித்து அமைதியின் தானம் பெற வேண்டும்)

 

இது கூட உலகத்தை மகாதானியாக மாற்றுவதற்கான நல்ல திட்டம் உருவாக்கியிருக்கிறார்கள் அல்லவா! சிறிது நேரமாவது வலுகட்டாயமாகவோ, அன்பாகவோ அமைதியின் சன்ஸ்காரத்தை வெளிப்படுத்துவார்கள் அல்லவா! எப்பொழுது ஆத்மாவில் அமைதியின் சன்ஸ்காரம் வெளிப்படுகிறது என்றால், நிகழ்ச்சியின் படிதான் என்றாலும் அமைதி என்பது சுயதர்மம் அல்லவா அமைதி கடலின் குழந்தைகளாகவோ இருக்கிறோம். சாந்தி தாமத்தில் வசிக்கக்கூடியவர்களாகாகவும் இருக்கிறோம். ஆகையால் நிகழ்ச்சிப்படி கூட அது (அமைதியை) வெளிப்படுத்துவதின் மூலம் அந்த அமைதியின் சக்தி அவர்களை ஈர்த்துக்கொண்டேயிருக்கும். யார் ஒருமுறை இனிப்பை சுவைக்கிறார்கள் என்றால், அடுத்த முறை அது கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் அந்த சுவையின் சுவையானது அவரை அடிக்கடி கவர்ந்திழுக்கிறது என்று சொல்லப்படுகிறது அல்லவா! ஆகவே இது கூட அமைதியின் சுவையாகும். ஆகையால் இந்த அமைதியின் சன்ஸ்காரம் தானாகவே நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். ஆகையால் மெது மெதுவாக ஆத்மாக்களிடத்தில் அமைதியின் விழிப்புணர்வு வந்துக் கொண்டேயிருப்பது கூட நீங்கள் அனைவரும் அமைதியின் தானம் கொடுப்பது, அவர்களையும் கூட தானம் செய்பவராக மாற்றுகிறீர்கள். ஏதாவதொரு முறையில் அனைத்து ஆத்மாக்களும் அமைதியின் அனுபவத்தை செய்யவேண்டும் என்ற உங்கள் அனைவரின் நல்ல எண்ணமாக இருக்கிறது. உலக அமைதி கூட ஆத்மீக அமைதியின் ஆதாரத்தில் மீது தான் இருக்கும் அல்லவா! இயற்கை கூட ஆத்மாவின் ஆதாரத்தின் மூலம் நடக்கிறது. ஆத்மாக்களிடத்தில் அமைதியின் நினைவு வரும்பொழுது தான் இந்த இயற்கையும் கூட அமைதி பெறும். ஏதாவதொரு முறையில் அசாந்தியிலிருந்து விடுப்பட்டு விடவேண்டுமல்லவா! மேலும் ஒரு நிமிடத்தின் அமைதி கூட அவர்களை பல காலத்திற்கு கவர்ந்திழுத்துக் கொண்டேயிருக்கும். அதனால் நல்ல திட்டத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். இது கூட யாருக்காவது கொஞ்சம் ஆக்ஸிஜன் கொடுத்து அமைதியான சுவாசத்தைசெலுத்துவதற்கான சாதனமாகும். உண்மையின் மனித வாழ்க்கை அமைதியின் சுவாசத்தினால் தான் இருக்கிறது, அதைக் காட்டிலும் மயக்கத்தில் இருக்கிறார்கள் அல்லவா! அசாந்தியில் மயங்கியிருக்கிறார்கள். ஆகையால் இது ஆக்ஸிஜனை போன்ற சாதனமாகும். அதன் மூலம் கொஞ்சம் சுவாசிப்பது ஆரம்பமாகும். பலரின் சுவாசம் ஆக்ஸிஜன் மூலம் தான் செல்லவும் செய்கிறது. ஆகையால் அனைவரும் ஊக்கம் உற்சாகத்தோடு முதலாவதாக, தானே முழு நேரமும் அமைதியின் இருப்பிடமாகி அமைதியாக உங்களின் அமைதியான எண்ணத்தின் மூலம் அவர்களுக்குக் கூட எண்ணங்கள் உதிக்கும், மேலும் எப்படியாவது செய்வார்கள், ஆனால் உங்களின் அமைதியின் வைப்ரேஷன் அவர்களை உன்மையான வழியில் இழுத்து கொண்டு வந்துவிடும். இது கூட நம்பிக்கை யற்றவர்களையும் கூட நம்பிக்கை கொண்டு வருவதற்கான சாதனமாகும். நம்பிக்கையில்லாதவர்களிடத்தில் நம்பிக்கை உருவாக்குவதற்கான சாதனமாகும். யாரெல்லாம் தொடர்பில் வருகிறார்களோ, சம்மந்தத்தில் வருகிறார்களோ, அவர்களுக்கு இரண்டு வார்த்தைகளாவது ஆத்மீக அமைதி, மனதின் அமைதி அறிமுகத்தைக் கொடுப்பதற்காக எவ்வளவு முடியுமோ, எந்தளவு முடியுமோ முயற்சி அவசியம் செய்ய வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் அவரவர்களின் பெயர் சேர்த்தே ஆக வேண்டும். எப்படியாவது கடிதத் தொடர்பின் மூலமாவது கூட தொடர்பில் வந்து விடுவார்கள். லிஸ்ட்டில் (பட்டியல்) வந்துவிடுவாகள் அல்லவா! ஆகையால் எவ்வளவு முடியுமோ அமைதி என்றால் என்ன அதை இரண்டு வார்த்தையாவது தெளிவுப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு நிமிடத்தில் கூட ஆத்மாவில் விழிப்புணர்வு வந்து விடும். புரிந்ததா! இந்த திட்டம் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது அல்லவா! மற்றவர்களோ காரியத்தை விட்டுவிடுகிறார்கள், நீங்கள் செய்கிறீர்கள். அமைதியின் தூதுவர்களாக இருப்பதாலேயே நாலா பக்கமும் அமைதி தூதுவர்களின் இந்த ஒலி எதிரொலிக்கும் மேலும் அமைதியின் ஃபரிஸ்தாக்கள் வெளிப்படுவார்கள். அமைதிக்கு முன்னால் உலகில் வேறு ஏதாவது கொஞ்சம் தனித்துவ வார்த்தைகள் உள்ளதா என்று தங்களுக்குள் மட்டும் ஆலோசனை செய்ய வேண்டும். அமைதி ஊர்வலம் மற்றும் அமைதி இந்த வார்த்தைகளை உலகத்தில் கூட பயன்படுத்துகிறார்கள். ஆகையால் அமைதி என்ற வார்த்தையின் கூடவே ஏதாவது விசேஷமான வார்த்தையாகவும் இருக்க வேண்டும், அது தனித்துவமாகவும் கேட்டவுடனேயே இது மிகவும் மாறுபட்டதாகவும் தோன்ற வேண்டும். ஆகையால் கண்டுபிடிக்க வேண்டும். மற்றபடி நல்ல விஷயம் தான். குறைந்ததிலும் குறைந்தது இந்த நிகழ்ச்சி நிரல் எவ்வளவு காலம் நடைபெறுமோ, அந்தளவு தானும் அசாந்தியில் இருக்க கூடாது, அசாந்தியைப் பரப்பக் கூடாது. அமைதியை விட்டு விட வேன்டாம். பிராமணர்களாகிய நீங்கள் முதலில் இந்த காப்பு (உறுதியை) கட்டிக்கொள்வீர்கள் அல்லவா! மற்றவர்களுக்கு கூட இந்த காப்பை அணிவிக்கிறீர்கள் என்றால், முதலில் பிராமணர்களாகிய நீங்கள் தனக்கு காப்பு அணிவித்துக்கொள்ளும் பொழுது தான் மற்றவர்களுக்கும் கூட காப்பு அணிவிக்க முடியும். கோல்டன் ஜுப்லியில் அனைவரும் என்ன உறுதி எடுத்தீர்கள்? நாங்கள் பிரச்சனை சொரூபம் ஆக மாட்டோம், இந்த உறுதியை செய்தீர்கள் இல்லையா! இதை அடிக்கடி அண்டர்லயின் (அடிக்கோடிட்டு) கொள்ள வேண்டும். பிரச்சனை சொரூபம் ஆகிக் கொண்டு, பிறரை பிரச்சனை சொரூபம் ஆகாதீர்கள் என்று சொல்வது அப்படி அல்ல. ஆகையால் இந்த காப்பை அணிந்துக்கொள்வதற்கு பிடித்திருக்கிறதல்லவா! முதலில் நான், பிறகு தான் உலகம். சுயத்தின் தாக்கம் உலகத்தின் மீதும் ஏற்படும்.! நல்லது.

 

இன்று ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களின் டர்ன் (வாய்ப்பு). ஐரோப்பா கூட மிகப் பெரியதாக தான் இருக்கிறதல்லவா! எந்தளவு ஐரோப்பா பெரியதோ, அந்தளவு மிக பெரிய மனமுடையவர் அல்லவா! எப்படி யூரோப் பரந்து விரிந்து இருக்கிறது, எந்தளவு விரிந்துள்ளதோ, அந்தளவு சேவையில் சாராம்சம் இருக்கிறது. விநாசத்தின் தீப்பொரி எங்கிருந்து கிளம்பும்? ஐரோப்பாவிலிருந்து தான் அல்லவா! ஆகவே விநாசத்தின் சாதனம் எப்படி யூரோப்பிலிருந்து தோன்றியிருப்பதால், ஸ்தாபனையின் காரியத்தில் கூட விசேஷமாக ஐரோப்பாவிலிருந்து ஆத்மாக்களும் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். எப்படி முதலில் பாம்ஸ் (அனுகுண்டு) அண்டர்கிரவுண்டில் (மறைமுகமாக) இருந்தது, பிறகு தான் காரியத்தில் பயன்படுத்தினார்கள். அவ்வாறே ஆத்மாக்கள் கூட தயாராகி கொண்டேயிருக்கிறார்கள். இப்பொழுது குப்தமாக இருக்கிறார்கள், அண்டர்கிரவுண்டில் இருக்கிறார்கள், ஆனால் பிரபலம் கூட ஆகிக்கொண்டேயிருக்கிறார்கள், மேலும் ஆகிக் கொண்டேயிருப்பார்கள். எப்படி ஒவ்வொரு தேசத்திற்கும் தத்தமது விசேஷத்தன்மை இருக்கிறது அல்லவா, அதுபோன்று இங்கு கூட ஒவ்வொரு இடத்திற்கு தனிப்பட்ட விசேஷத்தன்மை இருக்கிறது. பெயர் பிரபலம் அடைவதற்காக ஐரோப்பாவின் சாதனம் காரியத்தில் பயன்படும். அமைதியின் சாதனம் காரியத்தில் வருவது போல, உரத்த குரல் ஒலிப்பதற்காகவும் ஐரோப்பாவிலிருந்து கருவிகள் தயாரிக்கப்படும். புது உலகம் உருவாக்குவதற்காக ஐரோப்பா தான் நமக்கு உதவியாளராக இருக்கும். ஐரோப்பாவின் பொருட்கள் எப்பொழுதுமே உறுதியானதாகவே இருக்கும். ஜெர்மனியின் பொருட்களை அனைத்திற்கும் மகத்துவம் தருகிறார்கள். அவ்வாறே சேவைக்கு நிமித்தமாக மகத்துவமான ஆத்மாக்களின் பிரத்யக்ஷம் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. புரிந்ததா! ஐரோப்பா கூட குறைந்தது அல்ல. இப்பொழுது பிரத்யக்ஷாத்தாவின் திரை திறந்து கொண்டேயிருக்கிறது. சமயத்தில் வெளிவந்து விடும். நல்லது, குறுகிய காலத்தில் நாலாபக்கமும் நன்றாக விரிவு படுத்தினீர்கள். நல்ல படைப்பை படைத்தீர்கள். இப்பொழுது இந்த படைப்பிற்கு பாலனை என்ற தண்ணீர் கொடுத்து உறுதி ஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஐரோப்பாவின் ஸ்தூலமான பொருட்கள் எப்படி உறுதியாக இருக்கிறதோ, விசேஷமாக ஆத்மாக்கள் கூட ஆடாத-அசையாத உறுதியாதியாக மாறும். உழைப்பை (முயற்சி) அன்பாக செய்துக் கொண்டிருக்கிறீர்கள், எனவே உழைப்பு என்பது உழைப்பே அல்ல, ஆனால் சேவையில் ஈடுபாடு (விடா முயற்சி) நன்றாக இருக்க வேண்டும். விடா முயற்சி இருக்குமிடத்தில் தடைகள் வருவது கூட நின்றுவிடும். வெற்றி கிடைத்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறே ஒருவேளை ஒட்டுமொத்த ஐரோப்பாவின் தரத்ப்த பார்த்தால், மிகவும் நன்றாக இருக்கிறது. பிராமணர்கள் கூட ஐ.பி. யாக இருக்கிறார்கள், இல்லையென்றாலும் ஐ.பி. யாகத் தான் இருக்கிறார்கள். ஆகையால் ஐரோப்பாவின் நிமித்த சேவாதாரிகளுக்கு மேலும் கூட அன்பு நிறைந்த உயர்ந்த பாலனை மூலம் உறுதிபடுத்தி விசேஷ சேவை என்ற மைதானத்தில் கொண்டு வாருங்கள். அவ்வாறே பூமியும் பலனைத் தரக்கூடியதாக இருக்கிறது. நல்லது யார் பாபாவினுடையவர்களாக ஆனதுமே, மற்றவர்களையும் கூட உருவாக்குவதில் ஈடுபட்டு விடுவார்கள். தைரியம் நன்றாக வைக்கிறீர்கள், மேலும் தைரியத்தின் காரணத்தினால் தான் சேவை நிலையம் வளர்ச்சியடைந்துக் கொண்டேயிருக்கும் என்ற வெகுமதி கிடைத்திருகிறது. தரத்தையும் அதிகரியுங்கள், மேலும் வளர்ச்சியையும் அதிகரியுங்கள். இரண்டிலும் சமநிலை வையுங்கள். தரத்தின் அழகு நம்முடையது தான், வளர்சியின் அழகும் கூட நம்முடையது தான். இரண்டுமே தேவை. தரமானதாக இருக்கிறது, ஆனால் வளர்ச்சி இல்லையென்றால் கூட சேவை செய்யக்கூடியவர்கள் கூட சோர்வடைந்து விடுவார்கள். ஆகவே இரண்டிலுமே அதனுடைய விசேஷத்தன்மை காரியத்தில் பயன்படுகிறது. இரண்டினுடைய சேவை அவசியமாகும். ஏனெனில் 9 இலட்சம் உருவாக்க வேண்டுமல்லவா! 9 இலட்சத்தில் அயல் நாட்டிலிருந்து எத்தனை பேர் உள்ளீர்கள்? (5 ஆயிரம்) நல்லது - ஒரு கல்பத்தின் சக்கரத்தை முழுமை செய்துவிட்டீர்கள். அயல் நாட்டினரைச் சேர்ந்தவருக்கு கடைசியில் வந்தாலும் கூட வேகமாகச் செல்வதற்கான வரதானம் கிடைத்திருப்பதால், பாரதத்தை விட வேகமாகச் செல்ல வேண்டும். ஏனெனில் பாரதவாசிகளுக்கு பூமியை உருவாக்குவதில் உழைக்க வேண்டியிருக்கிறது. அயல் நாட்டில் விளைச்சல் இல்லாத நிலம் என்பது இல்லை. இங்கோ முதலில் தீயவர்களை நல்லவர்களாக மாற்ற வேண்டியிருக்கிறது. அங்கோ தீயவர்கள் என்பதே அல்ல, தீய விஷயம், தலைகீழான விஷயங்களைப் கேட்டதே இல்லை, ஆகையால் தெளிவாக இருக்கிறார்கள். பாரதவாசிகளின் புத்தி என்ற பலகையை சுத்தமாக்க வேண்டியிருக்கிறது, பிறகு தான் எழுத வேண்டியிருக்கிறது. அயல் நாட்டினருக்கு சமயத்திற்கு தகுந்தாற் போல் கடைசியில் வந்தாலும் வேகமாக செல்வதற்கான வரதானம் கிடைத்திருக்கிறது. எனவே ஐரோப்பியர்கள் எத்தனை இலட்சம் தயார் செய்வீர்கள்? எப்படி இந்த மில்லியன் மினிட் (நிமிடம்) என்ற நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறீர்கள், அப்படியே பிரஜைகளையும் உருவாக்குங்கள். பிரஜைகளையாவது உருவாக்க இயலும் அல்லவா! மில்லியன் மினிட் என்ற நிகழ்ச்சியை உருவாக்க முடியும் என்றால் மில்லியன் பிரஜைகளை உருவாக்க முடியாதா என்ன? மேலும் ஒரு இலட்சம் என்பது குறைந்தது தான், 9 இலட்சம் தான் சொல்கிறார்கள். புரிந்ததா -ஐரோப்பியர்கள் என்ன செய்ய வேண்டும் ! வேக வேகமாக தயார் செய்யுங்கள். நல்லது - இரட்டை அயல்நாட்டினருக்கு இரட்டை அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. அனைவருக்கும் முரளி கேட்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ஆனால் உங்களுக்கோ இரட்டிப்பாக கிடைக்கிறது. கான்ப்ரன்ஸ் (மாநாடு) பார்த்தீர்கள், கோல்டன் ஜீப்லியையும் பார்த்தீர்கள். பெரிய பெரிய தாதிகளையும் பார்த்தீர்கள். கங்மை, யமுனை, கோதாவரி, பிரம்மபுத்திரா அனைவரையும் பார்த்தீர்கள். அனைவரும் பெரிய பெரிய தாதிகளையும் பார்த்தீர்கள் அல்லவா! ஒவ்வொரு தாதியின் ஒவ்வொரு விசேஷத்தன்மையை வெகுமதியாக எடுத்துச் சென்றீர்கள் என்றால், அனைவருடைய விசேஷத்தன்மையும் காரியத்தில் பயன்படும். விசேஷத்தன்மை என்ற பையை (புத்தியை) நிரப்பிக் கொண்டு செல்ல வேண்டும். இதில் கஷ்டம்ஸ் (சுங்க வரி) அதிகாரி தடுக்க மாட்டார்கள். நல்லது

 

சதா விஷ்வ கல்யாணகாரியாகி, உலக சேவைக்கு நிமித்தமான, உணமையான சேவாதாரி, சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு சதா வெற்றி எனது பிறப்புரிமை என்ற அதிகாரத்தை அடையக்கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா சுயத்தின் சொரூபத்தின் மூலம் அனைவருக்கும் சொரூபத்தின் நினைவூட்டக்கூடிய அருகில் இருக்கும் ஆத்மாக்களுக்கு, சதா எல்லைக்கு அப்பாற்பட்ட பலனை எதிர்பார்க்காத சேவாதாரி ஆகி, பறக்கும் கலையில் பறக்கக்கூடிய, டபுல் லைட் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

வரதானம்:

தனது ஃபரிஸ்தா சொரூபத்தின் மூலம் கதி-சத்கதியின் (முக்தி-ஜீவன் முக்தி) பிரசாதத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய கதி-சத்கதியின் வள்ளல் ஆகுக.

 

தற்சமயத்தில் உலகத்தின் அநேக ஆத்மாக்கள் பிரச்சனைகளில் அடிப்பட்டு அலறிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் பற்றாகுறையினால், சிலர் பசியினால், சிலர் உடலின் வியாதியினால், சிலர் மனதின் அசாந்தியினால் . அனைவரின் பார்வை அமைதியின் கலங்கரை விளக்கின் பக்கம் சென்று கொண்டிருக்கிறது. ஐயோ ஐயோ என்ற கூக்குரலுக்குப் பிறகு வெற்றியின் முழக்கம் ஏற்படும் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இப்பொழுது தனது சாகார ஃபரிஸ்தா சொரூபத்தின் மூலம் உலகத்தின் துக்கத்தை நீக்குங்கள். மாஸ்டர் கதி-சதிகதி அளிக்கும் வள்ளலாகி கதி மற்றும் சதிகதியின் பிரசாதத்தைப் பகிர்ந்தளியுங்கள்.

 

சுலோகன்:

பாப்தாதாவின் ஒவ்வொரு கட்டளையையும் நடைமுறையில் கொண்டுவரக்கூடியவர்களே திகுதியானவர்களாக ஆகிறார்கள்

 

ஓம்சாந்தி